கோமாவிலுள்ள அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்
.........................................................
ஜெம்சித் (ஏ) றகுமான்
ஆட்சியின் பங்காளர்கள் நாம் என மார்புதட்டி கொள்வதில் இனியும் எந்த பயனுமில்லை.
தாக்குதல்கள் இரண்டு வகைப்படும் நேரடித் தாக்குதல்,பதுங்கித் தாக்குதல்.மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட இனரீதியான வன்முறைகள் நேரடித்தாக்குதல் இதற்கான காரணத்தை யூகித்து கொள்ள முடியும்.நல்லாட்சி எனும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்படும் இனரீதியான வன்முறைகள் பதுங்கித் தாக்குவதாகும் இதனை யூகித்து கொள்வது கடினமானது.
கடந்த ஆட்சிகாலத்திலே பள்ளிவாசல்கள் தாக்குவதற்கு அவர்கள் கூறிய காரணத்தை ஆராயும் போது கேலிக்கையாக இருந்தது.தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலே கூறுகின்ற காரணங்கள் சரியாக திட்டமிடப்பட்டு அறிவுசார்பானதாக இருக்கிறது.
நல்லாட்சியை உருவாக்கி அதன் பின்னராவது நிம்மதியாக தூங்கலாம் என கனவு கண்ட முஸ்லிம் சமூகத்தின் கனவுகள் தவிடுபொடியாக்க பட்டிருக்கிறது.பாதுகாப்புக்காக இடப்பட்ட வேலியே பயிரை மேய்வதை போல் ஆகிவிட்டது.
தற்போதைய நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திட்டங்கள் வரவேற்கத்தக்கது.அதற்கு முஸ்லிம் சமூகம் என்றுமே எதிர்க்காது.ஜீவராசி பாதுகாப்பு,தொல்பொருள் ஆராய்ச்சி பிரதேசம் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது எந்த இனத்தையும் பாதிப்படைய செய்யாதவாறு அமைய வேண்டும்.அதற்கு மாற்றமாக இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஒரு இனத்தின் அடிப்படை மத உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைவது நியாயமற்றதும் ஜீரணிக்க முடியாததுமாகும்.
வில்பத்துவை ஜீவராசி வாழ் பிரதேசமாக பிரகடனப்படுத்தி வடபுல அகதிகளின் கண்ணீருக்கு விடை சொல்ல முடியாமல் இருக்கும் இத் தருணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று எல்லையில் இருக்கும் பொத்தானை ஆராய்ச்சிபுடி பள்ளிவாசலை தொல் பொருள் ஆராய்ச்சி இடமாக இணங்கண்டு அங்கு இறைவழிபாடு நடாத்த முடியாமல் தடை விதிக்கபட்டிருக்கிறது.
தொல்பொருள் பிரதேசம் என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்தின் இறை இல்லங்கள்,காணிகள் பழிக்கேடாக்கப்படுகிறது.
250 வருடங்கள் வரலாற்றை கொண்ட பொத்தானை பள்ளிவாசல் இதுவரையில் இறைவணக்க வழிபாடு நடைபெற்ற இடமாகும்.தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி பிரதேசம் என அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு வேலி இடப்பட்டு தொழுகைக்கு தடைவிதிக்கபட்டிருக்கிறது.
முஸ்லிங்கள் உயிருக்கும் மேலாக இறை வணக்கத்தை நேசிப்பவர்கள்.ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டின் மூலம் இறை வணங்கும் அடிப்படை மத உரிமை மீறப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தின் அடிப்படை மத உரிமையை தடை செய்து தொல்பொருள் ஆராய்ச்சி இடமாக பிரகடனப்படுத்த நினைப்பது இனவாதத்தின் உச்ச கட்ட நிலையை எடுத்துக்காட்டுகிறது.
பொத்தானை பள்ளிவாசலுக்கு விதித்திருக்கும் இந்த தடை உத்தரவினை எதிர்த்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் பேசாத ஜடங்களாக நடமாடிக் கொண்டிருப்பதன் நோக்கம் என்ன?மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் செல்லும் அவர்கள் மக்களின் பிரச்சினைகள்,குறைபாடுகளை பேசுவதை விட்டு, கோமா நிலையில் இருப்பவர்களை போல் கண்விழித்து பார்த்தும்,காதுகளால் கேட்டு விட்டும் வருகிறார்கள்.
தேர்தல் மேடைகளில் முழங்கும் அவர்களின் வீரப்பேச்சுகள் பாராளுமன்ற கதிரையில் அமரும் போது பெட்டிப் பாம்பாக அடங்கி விடுகிறது.வாக்களித்த மக்களின் மத உரிமைகளில் கை வைக்கின்ற போது ஏன் மெளனம் சாதிக்கின்றார்கள் என ஆழ்ந்து சிந்திக்க வேண்டி உள்ளது.
முஸ்லிம்களின் தாய் கட்சி,நாங்கள் பேசினால் மட்டுமே அது முஸ்லிம் சமூகம் பேசுவதற்கு சமமாகும் என வீராப்பு கதை கூறும் முஸ்லிம் காங்ரஸ் தலைவரும்,அக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பிர்களும் இது பற்றி தகவல் அறியாதததை போல் நடிப்பதன் உள்நோக்கம் தான் என்ன?
அவர்கள் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களான பின் வேறு நாட்டிற்க்கு குடியேறி விட்டார்களா?போன்ற கேள்விகளை அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூகம் கேட்க ஆரம்பித்திருக்கிறது.எனவே நல்லாட்சியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடக்கும் பதுங்கி பாயும் நிலை தொடருமாயின் அதிகமான முஸ்லிம் பிரதேசங்களும்,பள்ளிவாசல்களும் தொல்பொருள் ஆராய்ச்சி நிலங்களாகவும்,ஜீவராசிகளின் பாதுகாப்புக்குரிய இடமாகவும் மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
.

Monday, January 2, 2017
Home »
srilankan news
»
Related Posts:
மு.கா யாப்பு மீதான பார்வை – பகுதி(01) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து ஒரு விடயத்தை செய்வதற்கு அவர்களுக்குள் எப்போதும் தாங்கள் இயங்குவதற்குரிய விதி முறைகள் காணப்பட வேண்டும்.அது வாய் மூல பேச்சாக அமைவதை விட ஒரு எழுத்து மூல … Read More
பஷீர் பாடும் பாட்டு கேட்கிறதா..? இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் மு.கா உறுதியான தடம் பதித்ததொரு கட்சியாகும்.தற்போது இக் கட்சியினுள் தோன்றியுள்ள உட்கட்சி பூசல்களின் காரணமாக இக் கட்சி பல கூறுகளாக பிளவுறும் நிலைக்கு சென்றுள்… Read More
பஷீரின் எச்சரிக்கை மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சிலரின் இரகசிய ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக கூறி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவ் எச்சரிக்கையை பலரும் பல விதத்தில் நோக்கினாலும் ஒரு மனிதனின் மானத்தில் விளையாடுவது ஏ… Read More
கதிகலங்கி தூக்கத்தைவிட்டு எழுந்து தாறுஸ்ஸலாமின் மர்மங்கள் உண்மையென ஏற்றுக்கொண்ட மஞ்சள் பை போராளிக்குஞ்சு!!!!!... (முஹம்மட் தமீம்) அனைவரும் அறிந்தவிடயம் சில நாட்களுக்கு முன்பு தாறுஸ்ஸலாம் மீட்பு பணிக்குழுவினரால் தாறுஸ்ஸலா… Read More
சல்மான் தேசியப்பட்டியலுக்கு தகுதியானவரா? பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் தேசியப்பட்டியலுக்கு பொருத்தமற்றவர் என்ற கருப்பொருளில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன்.அமைச்சர் ஹக்கீம் சல்மானை தற்காலிக பாராளுமன்ற உறுப்பினராகவே நியமித்தேன… Read More
0 comments:
Post a Comment