ஹக்கீமை விமர்சித்த பஷீருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை,மது அருந்தும் சபீக் ராஜாப்தீனுக்கு..??
(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)
அமைச்சர் ஹக்கீமை விமர்சித்தததன் அடிப்படையில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பசீர் சேதாவூத்திற்கு மு.காவினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே.இதன் போது அவர் முன் வைத்த குற்றச் சாட்டுக்கள் எதுவும் விசாரிக்கப்படவில்லை.அவர் தனது குற்றம் சாட்டை விசாரிக்குமாறு அறிக்கையும் விட்டுக்கொண்டிருக்கின்றார்.அவரை விசாரித்தால் புதருக்குள் ஒளிந்து கிடந்த நச்சுப் பாம்புகள் வெளியேறி மு.காவில் உள்ள பலரை தீண்டி விடலாம் என்பதால் இதன் மீது விசாரணை செய்ய மு.கா முன் வரவில்லை என்பதை அவர்கள் விசாரணைக்கு அஞ்சுகின்றமை தெரிவிக்கின்றது.
கடந்த சில நாட்களாக மு.காவின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் மது அருந்தும் தோரணையுடனான புகைப்படமொன்று உலா வருகிறது.இந்த புகைப்படத்தில் மதுபான போத்தல் இருந்தாலும் அவர் அருந்துவது குளிர் பானமே என்ற வாதம் சிலரிடமிருந்து முன் வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.இது எந்தளவு உண்மையானதென அவரை விசாரணைக்குட்படுத்தும் வரை யாருமே கூற முடியாது.குர்ஆன் ஹதீதை யாப்பாக கொண்ட கட்சியின் தேசிய அமைப்பாளர் குடிகாரர்களுடன் உலா வருவதொன்றும் பெருமையான விடயமல்ல.அது மு.காவின் போராளிகளுக்கு பெரியதொரு குற்றமாக தெரியவில்லை.அவர் அருந்துவது மதுவல்லாமல் இருந்தாலும் அது குற்றமே.இது அவர் தனது முகநூலில் பதிவிட்ட ஒரு புகைப்படம்.அவருக்கு மது அருந்துபவர்களுடன் கூடித் திரிவது ஒரு இழிவான செயலாக விளங்கவே இல்லை என்பது கவனத்திற் கொள்ளத்தக்க முக்கிய விடயமாகும்.
இது தொடர்பில் பரவலாக பேசப்படுகின்ற போதும் மு.காவின் உயர் மட்டம் இதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.அமைச்சர் ஹக்கீம் பற்றி ஏதாவது கதைத்திருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள்.அவர்களுக்கு இஸ்லாத்தை விட ஹக்கீம் என்பது பெரிதாக தெரிவதே மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.தயவு செய்து மு.காவினர் தங்களை ஒரு தரம் சுய விசாரணை செய்து கொள்ளுங்கள்.
இது தொடர்பில் ஒரு போதும் மு.காவின் உயர்பீடத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது.மது அருந்துவதற்கெல்லாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போனால் கட்சியின் தலைமைத்துவம் கூட எஞ்சுமா என்பது கேள்விக்குறியே.இதனை விட பாரிய குற்றச் செயல்களை மு.காவின் தற்போதைய தலைவர் செய்துவிட்டு அதனை உயர்பீடக் கூட்டத்தில் வைத்து ஏற்றுக்கொண்டு அப்பாவி போன்று உலா வருகிறார்.குர்ஆன் ஹதீதை யாப்பாக கொண்ட கட்சியின் தலைவர் இவ்வாறு இருக்கும் போது அதன் தேசிய அமைப்பாளரை பள்ளிக்கு கல் வைப்பவராக எதிர்பார்க்க முடியாது.இதனையும் நியாயப்படுத்துபவர்கள் முஸ்லிம்களாக இருப்பார்களா என்பதுவே சந்தேகமாக இருக்கின்றது.
இவர்கள் என்னவாவது செய்து கொள்ளட்டும் புனிதமான குர்ஆன் ஹதீதை வைத்து ஏமாற்றுவதை முஸ்லிம்கள் கண்டிக்க வேண்டும்.இது இப்படி இருக்க அம்பாறை ஜம்மியத்துல் உலமா தலாக் சொன்ன ஹக்கீமையும் ஹசனலியையும் ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறார்களாம்.இது தொடர்பில் தனிக் கட்டுரை ஒன்றில் பார்ப்போம்.
.

Thursday, March 23, 2017
Home »
srilankan news
»
Related Posts:
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு.. மக்கள் உங்களைப்பற்றிப் புரிந்து விட்டார்கள். ஆனால், நீங்கள்தான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் இருக்கும் போது உல்லாசமாக வாழ்ந்து அனுபவித்த பரிதாபத்திற்குரிய… Read More
அமைச்சர் ஹக்கீம் நல்லாட்சியிடம் நீதியை எதிர்பார்க்குமளவு, நல்லாட்சி என்ன செய்துள்ளது? அமைச்சர் ஹக்கீம் பெருநாள் வாழ்த்து செய்தியிலும் தற்போதைய அரசை புகழ்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இகழ்ந்தும் அரசியல் செய்ய வேண்… Read More
அமைச்சர் ஹக்கீமுக்கு நல்லாட்சியில் நீதி நிலை நாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். எனக்கில்லை.. உங்களுக்கு உள்ளதா? அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் இவ்வரசாங்கத்தின் நீதியின் மீது அவருக்கு நம்பிக்… Read More
வை.எல்.எஸ் ஹமீதின் பதிலாக்கம் – 02 யின் மீதான பார்வை வை.எல்.எஸ் ஹமீதின் பதிவுகளை நோக்கும் போது கண் பொஞ்சாதி ஒன்றுக்கும் இயலாமல் கிடக்கும் நிலையில் அனைவரையும் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. தனது இந்… Read More
வை.எல்.எஸ் ஹமீதின் பதில் கட்டுரை – 01 மீதான விமர்சனம் குற்றச் சாட்டு – 01 எல்லா அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ ஒரு ஊடக குழு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக பெருந்தொகையான இலட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து … Read More
0 comments:
Post a Comment