Pages

.

.

Friday, January 27, 2017

அட்டாளைச்சேனை மக்களுக்கு ஹசனலி தான் பிரச்சினையா?

(abu rashath)

அட்டாளைச்சேனை மக்கள் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படப் போகிறதென அறிந்தால் மாத்திரமே சாரணை வரிந்து கட்டுகிறார்கள்.தேசியப்பட்டியலானது சல்மானிடமுள்ள ஒவ்வொரு  நாளும் அட்டாளைச்சேனைக்கு உரித்தான தேசியப்பட்டியலின் வாழ்  நாள் குறைந்து கொண்டே வருகிறது.

ஏன் இதனை அட்டாளைச்சேனை மக்கள் அறிந்து கொள்ளாமல் உள்ளனர்.தமிழக ஜல்லிக்கட்டுப் புரட்சிக்கு தமிழகமே ஆடிப்போனது போல மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்து அட்டாளைச்சேனை பள்ளிவாயல் களத்திற்கு வந்தால் ஹக்கீம் ஆடிப் போய் விடுவார்.

இப்போது ஹசனலி மீது கொண்ட அச்சமும் பறந்துவிட்டது.இன்னுமேன் கால தாமதம்.குட்டக் குட்ட குனிபவன் முட்டாள் என்பதை அட்டாளைச்சேனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.உணர்ந்து கொள்வதோடு அதனை உணர்த்தவும் வேண்டும்.

இங்கு ஆணித்தரமான உண்மையை கூறிட விரும்புகிறேன்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை பலமாக ஆதரித்த ஊர் அட்டாளைச்சேனையாகும்.அங்கு எந்த வேட்பாளரும் இல்லாத நிலையில் அவர்கள் ஆதரித்திருந்தார்கள்.அவர்களின் வாக்கு இல்லையென்றால் மு.கா அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை ஒரு போதும் பெற்றிருக்காது.

அவர்களது ஊரில் போடப்பட்ட மயில் வேட்பாளரை அவர்கள் சிறிது ஆதரித்திருந்தாலும் மயில் அம்பாறையில் தோகை விரித்தாடிருக்கும்.மு.காவின் இராச்சியமே சரிந்திருக்கும்.மு.காவை பலப்படுத்திய அட்டாளைச்சேனைக்கு ஹக்கீமின் கைம்மாறு இது தானா?


Related Posts:

  • ஹக்கீம் மிகவும் இழி நிலைக்கு சென்றுவிட்டார் (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) மு.காவின் ஏற்பாட்டில் வன்னியில் இடம்பெற்ற வன்னியின் ஒளி நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் கடந்த பாராளுமன்றத் தேர்த… Read More
  • வன்னி மக்களை மடையர்களாக்க நினைத்த சாணக்கியமும் அதன் தும்பு தூக்கிகளும். இன்று 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை  சிலாவத்துறை முச்சந்தியில் முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஹீனைஸ் பாறுக் தலைமையில் கட்சியின் பொதுக் க… Read More
  • அரசன் ஆண்டு அறுப்பான் தெய்வம் நின்று  அறுக்கும்  இன்று இலங்கையில் அனைவராலும் பேசப்படும் விடயம் தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கிம் அவர்கள்  பற்றிய விடயம் கடந்த 17 வரூடமாக அம்பாறை மாவட்ட மக்… Read More
  • கல்முனை ஸாஹிரா கல்லூரி விவகாரம் -------------------------------------------------------------- லங்கா அசோக் லேலண்ட் கம்பனியின் தலைவர் டாக்டர் சிராஸ் மீராசாஹிபினால் கல்முனை ஸாஹிறா கல்லூரிக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த பஸ் வண்டிய… Read More
  • உண்மைகள் வெல்வதுமில்லை தோற்பதுமில்லை அவை நிரூபிக்கப்படுகின்றன ------------------------------------ அஸ்ஸலாமு அலைக்கும்! கடந்த ஞாயிறு அன்று நான் கலந்து கொண்ட "அதிர்வு " நிகழ்ச்சியில் என்னால் கூறப்பட்ட ஒரு துளி உண்மையின் வரலாற… Read More

0 comments:

Post a Comment