இவ்வாட்சிக்கு சோரம் போன மு.கா பிரதிநிதிகள்
(அபு றஷாத்)
இவ்வாட்சியை கொண்டு வருவதில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு அபரிதமானதென்பதை யாராலும் மறுத்துரைக்க முடியாது.இலங்கை முஸ்லிம்கள் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புக்களிடமிருந்து விடிவு கிடைக்கும் என்ற நோக்கிலேயே இவ்வாட்சியை கொண்டு வந்தார்கள்.தற்போது மஹிந்த காலத்து ஆட்சியை விட மிக மோசமான இனவாத ஆட்சியை அவதானிக்க முடிகிறது.
வடக்கிலே எமது சகோதர முஸ்லிம்களின் இருப்புக்கள் ஜனாதிபதியின் ஆலோசனையினால் கேள்விக்குறியாகியுள்ளது.திரும்பும் திசையெல்லாம் இனவாத செயற்பாடுகளை அவதானிக்க முடிகிறது.முஸ்லிம்களின் இதயமான அம்பாறையில் சிலையை வைத்து இதயத்தை கிழித்து பார்த்துள்ளனர்.இன்னும் என்ன வேண்டும்? நிலை இவ்வாறிருக்கும் போது மு.கா பிரதிநிதிகள் இவ்வாட்சியை கொண்டு வந்த நாளான ஜனவரி எட்டாம் திகதியை தியாக நாள் போன்று நினைவு கூர்ந்துள்ளனர்.இதனை ஏனையவர்களை விட மு.கா பிரதிநிதிகளே அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
கிழக்கு முதலமைச்சர் நஸீர்,பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர்,கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர்,மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் இந் நாளை பாரிய தியாக தினமாக கருதி வெவ்வேறான நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.துஆ பிராத்தனையும் செய்துள்ளனர்.இவர்களுக்கு தற்போதைய நாட்டு நடப்பு தெரியாதா?
இவர்களது இச் செயற்பாடுகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.இவர்கள் இவ் அரசுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டாமல் இப்படி சோரம் போய் கூஜா தூக்கினால் தற்போது இடம்பெறும் இனவாத செயற்பாடுகள் மாத்திரமல்ல இன்னும் இன்னும் இடம்பெறும்.இவ்வாட்சியை பாராட்டும் செயற்பாடானது குட்டக் குட்ட சிரித்துக்கொண்டிருப்பது போன்றாகும்.
இவைகளை வைத்து பார்க்கும் போது இலங்கை முஸ்லிம்களுக்கு இவ்வாட்சி சாபமாக விளங்கினாலும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு வரமாக அமைந்துள்ளதை விளங்கிக்கொள்ளலாம்.அதன் காரணமாகத் தான் என்னவோ இனவாதம் திரும்பிய திசை எல்லாம் தாண்டவம் ஆடுகின்ற போதும் மு.கா பிரதிநிதிகள் மௌனம் காப்பதோடு அவர்களுக்கு இவ்வாறான கூஜா தூக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இப் பதிவில் நான் இணைத்துள்ள புகைப்படங்கள் அவர்கள் குறித்த தினத்தை சிறப்பித்த படங்களாகும்.
.

Monday, January 9, 2017
Home »
srilankan news
»
Related Posts:
Lieutenant drowns in Kala Oya A 42-year-old Lieutenant attached to the Mullikulam navy camp has drowned while bathing in Kala Oya, Ada Derana reporter said. The Lieutenant and a group of sailors had attended a party held … Read More
தாருஸ்ஸலாம் வெளியே வந்தது, அடுத்த மர்ம முடிச்சு "தலைவரின் படு கொலை" பசீர் சேகு தாவூத் தயாரா? அஸ்மி ஏ கபூர் தாருஸ்ஸலாம் என்கின்ற கட்சியினர் தலைமையகம் எவ்வாறு இன்று பல தரப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்குட்பட்டு இன்று தனது சொந்த வீ… Read More
Parliament to debate on new Constitution Sri Lankan parliament will have a three-day debate in January on the proposals for a new Constitution, Leader of the House Lakshman Kiriella said. Sri Lanka sponsored the resolutio… Read More
ஞானசேர தேருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீன் பொலீஸ் தலைமையத்தில் முறைப்பாடு. . இன்று 03.12.2016 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுத… Read More
தெரண 360 ########## வில்பத்துவின் உண்மையை சகோதர சிங்கள இனத்திற்கும் புரியவைக்கும் #தெரண TV யின் #நிகழ்தி "360" #நாளை (2017.01.09) #இரவு 10.30 மணிக்கு கானத்தவராதீர்கள்... … Read More
0 comments:
Post a Comment