அமைச்சர் றிஷாத் மாத்திரம் அமைதியாக இருந்திருந்தால் மீள் குடியேறிய மக்கள் தலையில் மிளகாய் அரைத்திருப்பார்கள்
(இப்றாஹீம் மன்சூர்)
வில்பத்து பிரச்சினை அவ்வப்போது எழுவது சாதாரணமாக இருந்தாலும் இம் முறை அதன் முடிவு ஓரளவு முஸ்லிம்களுக்கு சார்பாக நிறைவுற்றுள்ளதாகவே கூற வேண்டும்.2017-01-11ம் திகதி வில்பத்து தொடர்பான தகவல்களைச் சேர்த்து ஒரு அறிக்கையைத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
அவ் அறிக்கையில் வனப்பாதுக்கப்பு உத்தியோகத்தர்களால் முஸ்லிம்கள் மீள் குடியேறிய பிரதேசங்களை வில்பத்து வனமாக தவறாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வில்பத்துவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையானது முஸ்லிம்களுக்கு சார்பான திசை நோக்கி நகர்வதை இதனூடாக அறிந்து கொள்ளலாம்.
தற்போது பிரபல சிங்கள மொழி எழுத்தாளர்கள் கூட இது தொடர்பில் முஸ்லிம்களுக்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.வில்பத்து தொடர்பான பிரச்சினையில் அமைச்சர் றிஷாத் மாத்திரமே அன்று தொடக்கம் இன்று வரை இனவாதிகளுக்கு தாக்கு பிடித்து வருகிறார்.அவரும் இந்த இனவாதிகளின் செயல்களுக்கு அஞ்சி மௌனம் காத்திருந்தால் மீள் குடியேறிய முஸ்லிம் மக்கள் தலையில் இனவாதிகள் மிளகாய் அரைத்திருப்பார்கள்.தற்போது இனவாதிகள் தங்களது அறிக்கை பிழையென ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர்.இந் நிலைக்கு அவர்களை இறைவனின் உதவியுடன் அமைச்சர் றிஷாத் தான் கொண்டு வந்தார் என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது.
அமைச்சர் றிஷாத் இனவாதிகளுடன் முட்டி மோதி விவாதம் செய்து எதனை சாதிக்க வேண்டுமென கருதினாரோ அதனை அவர் நெருங்கிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.வில்பத்து தொடர்பான அறிக்கையில் பிழை இருப்பதாக கூறியுள்ளது சாதாரண விடயமல்ல.
2017-01-15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை புத்தளத்தில் வைத்து வில்பத்து பிரச்சினை தொடர்பாக உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் இதில் அப்பட்டமான இனவாத பின்னணி உள்ளதாக கூறியுள்ளார்.இது மிகவும் கவனம் செலுத்தி நோக்க வேண்டிய ஒரு விடயமாகும்.இன்று மு.காவின் ஆதரவாளர்கள் வில்பத்து பிரச்சினையை அமைச்சர் றிஷாத் தனது தனிப்பட்ட அரசியல் நலனுக்காக தேர்தல் வரும் காலப்பகுதியில் கிண்டி அரசியல் இலாபம் தேடுகிறார் என்ற குற்றச் சாட்டிற்கு அமைச்சர் ஹக்கீமே “இல்லையென”பதில் வழங்கியுள்ளார்.இதன் பிறகும் மு.காவின் ஆதரவாளர்கள் அமைச்சர் ஹக்கீம் மீது இக் குற்றச் சாட்டை முன் வைப்பார்களாக இருந்தால் அவர்கள் அமைச்சர் ஹக்கீமின் கருத்தை ஏற்க மறுக்கின்றார்கள் என்பதே பொருளாகும்.இதனை வை.எல்.எஸ் ஹமீத் போன்றவர்களும் அமைச்சர் றிஷாதின் தனிப்பட்ட பிரச்சினையாக காட்ட முற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனை அமைச்சர் ஹக்கீம் பிரச்சினை எல்லாம் முடிந்து அது இறுதிக் கட்டத்தில் இருக்கும் போது கூற வேண்டிய தேவையில்லை.வழமை போன்று தொடர்ந்தும் மௌனம் காத்திருக்கலாம்.இனவாதிகளுடன் அமைச்சர் றிஷாத் உயிரை பணயம் வைத்து போராடிக்கொண்ட போது,அவர் இதனை கூறியிருந்தால் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் அமைச்சர் றிஷாதின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருப்பார்கள்.இப்போது இதனை கூறுவதன் மூலம் அமைச்சர் ஹக்கீம் சாதிக்க முனைவதென்ன?
மேலும்,குறித்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் இதில் ஒருவர் வில்லனாக சித்தரிக்கப்பட்டாலும்,நாங்கள் சமூகத்தின் பக்கம் உள்ளோம் எனவும் கூறியிருந்தார்.இவரின் இக் கூற்றானது வடிவேலின் நகைச்சுவையான நானும் ரௌடி தான் என்ற திரைப்பட வசனத்தை நினைவு படுத்துகிறது.அமைச்சர் றிஷாத் வில்லனாக சித்தரிக்கப்படுகின்றார் என்றால் அவ் விடயத்தில் அந்தளவு கரிசனை கொண்டு செயற்படுவதனாலாகும்.
.

Tuesday, January 17, 2017
Home »
srilankan news
»
Related Posts:
ஹரீஸ் மக்களால் தலைவராக இனங்காட்டப்படுகிறார் (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) மு.காவின் அடுத்த தலைவர் யார் என்ற வினாவிற்கான விடையை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.அது ஹரீஸ் என்ற நாமம் தான்.தற்போது அமைச்சர் ஹக்கீமின் நாமம் ப… Read More
மு.கா புதிய நிர்வாகிகள் விபரம் ============================== 2017ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை (11) இரவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லி… Read More
அமைச்சர் ஹக்கீம் அல்லாஹ்வை முன்னிறுத்தி ஏமாற்றியது கண்டிக்கத்தக்கது தற்போது நான் அ.இ.ம.காவின் ஆதரவாளில் ஒருவன் தான்.இதற்கு முன்பு மு.காவுடனே எனது அரசியல் பயணத்தை செய்திருந்தேன்.அமைச்சர் ஹக்கீம் மீது கொண்ட அதிருப்தியினாலேயே அ… Read More
ஜவாத் மாகாணசபை உறுப்பினர் அன்சில் அட்டாளைச்சேனை தவிசாளர் தாஹிர் நிந்தவூர் தவிசாளர் =========================== கொழும்பு இலங்கை 12.02.2017 அன்புள்ள நண்பர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லீம் சமுகத்தின் அரசியல் அடையாளத்தை… Read More
றிஷாதின் சாபம் ஹக்கீமை சுற்றுகின்றதா? (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) அமைச்சர் ஹக்கீம் புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேரடியாகவே அமைச்சர் றிஷாதை மிகக் கேவலாமாக முறையில் எள்ளி நகையாடியிருந்தார்.அதனைத் தொடர்ந்து அவர் கலந்த… Read More
0 comments:
Post a Comment