ஏன் ஹரீஸ் புறக்கணிக்கப்பட்டார்?
(இப்றாஹீம் மன்சூர்)
இன்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீசுக்கு முறையான அழைப்பிதல் வழங்கப்படவில்லை.அது போன்று அவர் இன்று நடாத்திய நிகழ்விற்கு மு.காவின் முக்கிய பிரமுகர்கள் செல்லவில்லை.இந்த நிகழ்வின் மீதான புறக்கணிப்பு எதற்கு?
என்ன தான் குறை கூறினாலும் கல்முனையை சேர்ந்த காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிப்பதில் அவர் காட்டிய அக்கறையும் அண்மைக் காலமாக சமூக விடயங்களில் அவர் காட்டிக்கொண்டிருக்கும் அக்கறையும் ஹரீசை ஹீரோவாக மாற்றிக்கொண்டிருக்கின்றது.சிலரது வாய்களில் மு.காவின் அடுத்த தலைவர் இவர் தான் என்ற பேச்சுக்களும் வருவதை அவதானிக்க முடிகிறது.கிழக்கு மாகாணத்தில் சிறந்த தலைமைத்துவம்மிக்கவர் யார் உள்ளார் என்ற வினாவிற்கு இவரது செயற்பாடுகள் பதில் வழங்குகின்றன.இப்படியான நிலையில் இவரை இன்னும் இன்னும் ஹீரோவாக மாற்றுவது நல்லதல்ல.
இந் நிகழ்விற்கு அமைச்சர் ஹக்கீம் சென்றிருந்தால் அந் நிகழ்வு பாரிய பேசு பொருளான நிகழ்வாக மாறியிருக்கும்.இது ஹரீஸ் மீதான மதிப்பெண்ணை இன்னும் அதிகரித்திருக்கும்.அது மாத்திரமல்ல மீனவர்கள் தான் மு.காவிற்கு கண் மூடித் தனமாக ஆதரவளிப்பவர்கள்.இவர்கள் மு.காவின் ஆதரவாளர்களாக இருக்காது ஹரீசின் தனிப்பட்ட ஆதரவாளர்களாக மாறுவது எதிர்காலத்தில் அமைச்சர் ஹக்கீமால் பிரதி அமைச்சர் ஹரீஸை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.அவரது புறக்கணிப்பு இதற்காகவே எப்பதே பலரது ஊகமாகும்.
.

Saturday, January 28, 2017
Home »
srilankan news
»
Related Posts:
றோகிங்ய முஸ்லிம்கள் மீதான ஹக்கீமின் நீலிக் கண்ணீர் அண்மையில் சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ஹக்கீம் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து ரோகிங்ய முஸ்லிம்கள் தொடர்பில் பேசியதாக இன்று முஸ்… Read More
அமைச்சர் ஹக்கீம் சுவிஸ் லொக்கறை திறந்து காட்டுமாறு சவால் விடுவாரா? ( ஹபீல் எம்.சுஹைர் ) அமைச்சர் ஹக்கீம் பற்றிய சில முக்கிய இரகசிய ஆவணங்கள் மு.காவின் முன்னாள் தவிசாளரிடமிருப்பதான கதைகள் பல காலம் தொட்டு சென்றிகொண்டிருக்கின்ற… Read More
நல்லாட்சியின் எனும் பேயாட்சி எமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளினூடாகவும் பலவிதமான படிப்பினைகளை பெற்றுக்கொள்ளலாம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆட்சி பீடத்திலிருந்து விரட்டி கொண்டு வந்த ஆட்சிக்கு நல்… Read More
சீனாவில் காரியத்தில் கண்ணாக இருக்கும் ரணில்;ஹக்கீம்? இலங்கைக்கு உதவும் நாடுகள் வரிசையில் முஸ்லிம் நாடுகளின் வகிபாகம் மிக முக்கியமானது.இவ்வாறான உதவிகளை முஸ்லிம் நாடுகளிடமிருந்து இலங்கை நாடு தொடர்ச்சியாக பெற வேண்டுமாக இருந… Read More
இனவாதிகள் விடயத்தில் அரசை காப்பாற்ற முன்பு கூறிய உண்மையை மறுக்கும் ஹக்கீம் 21-05-2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஹக்கீம் காத்தான்குடி நூரானியா மையவாடி சுற்று மதிளினை கையளிக்கும் நிகழ்வில் இனவாதிகளின் இன்றைய செயற்பாடுகள… Read More
0 comments:
Post a Comment