Pages

.

.

Sunday, March 26, 2017

நள்ளிரவு 12 மணிவரை தாருஸ்ஸலாமில் நடந்தது என்ன?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கிழக்கான் அஹமட் மன்சில்

கடந்த புதன்கிழமை(2017.03.22)தாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்ரஸின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டு என்ன விடயம் சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது என அரசியல் அரங்குகளில் கேள்விக் குறியாகவே இருந்து.ஆனாலும் அதற்கான விடை கிடைக்கப் பெற்றுள்ளது.ஏன் கூட்டம் கூட்டப்பட்டது?எதற்காக கூட்டப்பட்டது?என்ன பேசப்பட்டது? போன்ற விடயங்களை இந்த கட்டுரையை முழுமையாக வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வழமை போன்று தாருஸ்ஸலாமில் அவசர கூட்டம் இடம்பெற இருப்பதாகவும் சில தீர்மானங்கள் மேற் கொள்ள இருப்பதாகவும் பாராளுமன்ற,மாகாணசபை மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் ஒன்று கூட வேண்டும் என்ற அலைபேசி அழைப்பிற்கமைய கொழும்பு வொக்ஸல் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கட்டிடத்தில் கடந்த புதன்கிழமை பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்று கூடி இருந்தனர்.பாராளுமன்ற,மாகாணசபை உறுப்பினர்களோடு வழமைக்கு மாறாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் பங்குபற்றி இருந்தார்.

அன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு அண்மைக்காலங்களாக மு.கா தலைவருக்கு எதிராக எழுந்திருக்கும் மது,மாது,பணப்பரிமாற்றல் சம்பந்தமாக ஊடகங்களுக்கு தலைவரை பற்றி எதிராக வரும் செய்திகளுக்கு மாற்றாக சாதகமான அறிக்கைகள் இட வேண்டும் என்பதாகும்.தலைவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் சம்பந்தமாக ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களையும்,அபிப்ராயங்களையும் முன்வைத்தார்கள்.

தலைவருக்கு எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அறிக்கை இட வேண்டும் என கூறப்பட்டதும் ஒரு சில மாகாணசபை மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் குற்றம் சுமத்தப்படுகின்ற விடயங்கள் உண்மையாக இருக்கும் போது மனச்சாட்சிக்கு எதிராக எவ்வாறு எதிர்ப்பு அறிக்கை இட முடியும் என தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர் அறிக்கை இட வேண்டும் என கூறியவரை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

அங்கு விஷேட உரையாற்றிய கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்,தலைவருக்கு எதிராக ஊடகங்களில் வரும் செய்திகள் சம்பந்தமாக  அனைத்து உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும்.தலைவரை பிழையாக சித்தரிக்கும் செய்திகளுக்கு சாதகமான கருத்தறிக்கையை ஒவ்வொரு உறுப்பினரும் தெரிவிக்க வேண்டும்.தலைவருக்கு எதிராக வரும் செய்திகளுக்கு எதிர்ப்பு அறிக்கை விடாத பட்சத்தில் பாராளுமன்ற,மாகாணசபை உறுப்பினர்களுக்கான மக்கள் அங்கீகாரம் எதிர்காலத்தில் கிடைக்காமல் போய்விடும்.எனவே அனைவரும் துரிதமாக,
 செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் உரையை கேட்ட சில முக்கியமான உறுப்பினர்கள் நீங்கள் முதலில் தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைக்கு எதிராக கருத்து தெரிவியுங்கள்,தலைவருக்கு எதிராக வரும் செய்திகளுக்கு எதிர்ப்பு எழுதுங்கள்.நீங்களே வாய்மூடி மெளனியாக இருக்கின்றீர்.தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டு உண்மை என்பதனாலா நீங்கள் மெளனியாகி விட்டீர் என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அன்றைய தினம் இவற்றிக்கு மேலதிகமாக முன்னாள் செயலாளர் ஹசனலி மற்றும் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் மு.காவிற்கு எதிராக செயற்படும் விடயமும் எடுத்து ஆராயப்பட்டிருந்தது.இந்த விடயம் சம்பந்தமாக கருத்து தெரிவித்த மு.கா உறுப்பினர்கள் முன்னாள் தவிசாளரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனவும்,முன்னாள் செயலாளர் ஹசனலி உண்மையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கான நிவாரணத்தை விரைவில் வழங்க வேண்டும் எனவும் சபைக்கு ஒப்புவித்தனர்.ஹசனலிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறிய கருத்திற்கு ஒரு மாகாணசபை உறுப்பினர் மனம் நொந்ததாகவும்,ஹசனலி நிவாரணம் பெறும் அளவிற்கு சென்றுவிட்டாரா?இது அவருடைய கட்சி.இவர்கள் ஹசனலிக்கு நிவாரணம் வழங்கும் அளவு ஹசனலி ஒன்றும் குறைந்தவர் அல்ல என பக்கத்தில் இருந்த உயர்பீட உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

குறித்த கூட்டத்திற்கு சென்றிருந்த உயர்பீட உறுப்பினர் இது சம்பந்தமாக பேசும் போது பாராளுமன்ற,மாகாணசபை மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் பேச்சு வராத ஊமைகள் போல் இருந்து விட்டு வந்ததாகவும்,உண்மையாக இருக்கும் விடயங்களுக்கு எதிர்ப்பு எழுதுவது சிரமம் எனவும்,நள்ளிரவு 12 மணிவரை வைத்திருந்த இதற்குத்தானா?போன்ற வினாக்களை கேட்டுக் கொண்டு,எதிர்காலத்தில் இது சம்பந்தமாக யோசிப்போம் என கூறி விட்டு கலைந்து சென்றார்களாம்.


Related Posts:

  • மீனவர் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் தலையிட கோரிக்கை இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேர் மற்றும் 114 படகுகளை விடுவிக்க, இந்தியப் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்… Read More
  • Fatal fire: Sri Lankan refugee advocate loses son, wife and mother-in-law in blaze Three generations of the family of a prominent New Zealand refugee advocate have died in fatal house fire in South Auckland earlier today,… Read More
  • மயிலின் வளர்ச்சியால்  கருகி சாகும் மரங்கள்  மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள்  முஸ்லிம் சமுதாயத்துக்காக அம்பாறை மாவட்ட மக்களின் முழு ஆதரவுடன் பல போராட்டத்துக்கு மத்தியில் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் … Read More
  • அமைச்சர் றிஷாதின் பித்தளை தொடர்பான அமைச்சர் ஹக்கீமின் குற்றச் சாட்டும் அமைச்சரவை பத்திரமும் அமைச்சர் றிஷாத் மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன.இதன் பின்னணியில் மு.காவைச் சேர்ந்த சிலரும் மு.… Read More
  • Two Sri Lankan women to be deported from Kuwait Farwaniya police recently arrested eight women, including two Sri Lankans, reported absconding by their employers, according to the Kuwait Times.  The eight also includ… Read More

0 comments:

Post a Comment