Pages

.

.

Tuesday, January 24, 2017

சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும்

(அபு ரஷாத்)

அமைச்சர் ஹக்கீம் தனது  தேசியப்பட்டியல் பொக்கிசத்தை சல்மானின் பெட்டகத்தில் வைத்து பாதுகாத்தார்.அது இன்னமும் உரியவரின் கைகளுக்கு சென்றடையவில்லை.அதனை இன்னும் தனது பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

சில நாட்களாக சல்மான் மீதும் வசை மாரிகள் பொழிந்த வண்ணமே உள்ளன.சல்மான் மீதான வசை மாரிக்கு மு.காவின் எதிரிகள் தான் காரணம் என பலரும் கருதலாம்.

இல்லை..இல்லை.. இது ஹக்கீமின் திருவிளையாடலாக ஏன் இருக்கக் கூடாது? ஊடகங்களை ஏற்றி விட்டு சிலதை சாதிப்பதும் சாணக்கிய (சாணக்கியத்தின்) விளையாட்டுத் தான்.

அமைச்சர் ஹக்கீமைப் பொறுத்தமட்டில் இக் காலத்தில் தேசியப்பட்டியலை  வழங்குவது ஆபத்தானது.அதனால் இதன் மீதான குற்றச் சாட்டை சல்மான் மீது போட்டுவிட்டால் ஹசனலி என்ன சொல்ல முடியும்? அட்டாளைச்சேனை மக்களால் தான் என்ன செய்ய முடியும்? ஒன்றும் சொல்ல முடியாதே!

சில வேளை அமைச்சர் ஹக்கீம்,தான் இவ்வாறு செய்யும் போது வேறு சவால்களும் வந்துவிடலாம் என்பதால் இதற்கான  எதிரொலிகள் எவ்வாறு அமையும் என்பதற்கான வெள்ளோட்டமாகவும் இதனை நோக்கலாம்.இவ்வாறான நகர்வுகளை பா.உ சல்மான் கவனத்திற் கொண்டு இது வரை தான் பாதுக்காத்து வந்த மரியாதையை பாதுகாத்துக்கொள்வது சிறந்தது.சல்மானின் பெயர் தாருஸ்ஸலாம் விவகாரத்தில் நாற்றம் எடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சல்மான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதை விட வேறு வழி இல்லை.

அட்டாளைச்சேனை மக்கள் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதை தடை செய்வதற்கு மாத்திரம்  துள்ளிக் குதிக்காமால் சல்மானிடமுள்ள தேசியப்பட்டியலை முதலில் எடுத்துக்கொள்ள போராட்டம் செய்ய வேண்டும்.


Related Posts:

  • அஷ்ஷஹீத் அஷ்ரப் தன்னை விளம்பரப்படுத்த சேவைகள் செய்தாரா? """"""""""""""""""""""""""""""""""" முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மாமனிதர் அஷ்ஷஹீத் அஷ்ரப் அவர்கள் தான் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் நாடுபூராகவும் தனது ஆளுமையி… Read More
  • மஹிந்த செய்த தவறை முஸ்லிம்கள் விடயத்தில், இந்த அரசும் செய்யக்கூடாது - றிசாத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் தொடர்பாக விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமா… Read More
  • மீனவர் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் தலையிட கோரிக்கை இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேர் மற்றும் 114 படகுகளை விடுவிக்க, இந்தியப் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்… Read More
  • அமைச்சர் றிஷாதின் பித்தளை தொடர்பான அமைச்சர் ஹக்கீமின் குற்றச் சாட்டும் அமைச்சரவை பத்திரமும் அமைச்சர் றிஷாத் மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன.இதன் பின்னணியில் மு.காவைச் சேர்ந்த சிலரும் மு.… Read More
  • Two Sri Lankan women to be deported from Kuwait Farwaniya police recently arrested eight women, including two Sri Lankans, reported absconding by their employers, according to the Kuwait Times.  The eight also includ… Read More

0 comments:

Post a Comment