எம்.பியாக இருக்க சல்மான் அருவருப்புப்பட வேண்டும்
அமைச்சர் ஹக்கீம் தனது நெருங்கிய சகாவான சல்மானிற்கு தற்காலிகமாகவே தேசியப்பட்டியலை வழங்கியிருந்தார்.அத் தேசியப்பட்டியலானது யாருக்கு சொந்தமானது என்பதில் பிரச்சினை இருந்தாலும் அதற்கு சல்மான் பொருத்தமற்றவர் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம்.
இது என்னுடையை தேசியப்பட்டியலென பலரும் உரிமையோடு அத் தேசியப்பட்டியலை அமைச்சர் ஹக்கீமிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.இவ்வாறான நிலையில் சல்மான் எம்.பியாக இருக்க அருவருப்புப்பட வேண்டும்.இன்னுமொருவரிற்கு சொந்தமானதை சல்மான் எவ்வாறு வைத்திருக்க முடியும்?
அண்மைக் காலாமாக தற்காலிக பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன.இதையெல்லாம் பார்த்த அவருக்கு அப் பதவியில் நீடிக்க அருவருப்பாக தெரியவில்லையா?
அது மாத்திரமல்ல இவர் ஒரு இடத்தில் கூட தான் பாராளுமன்ற உறுப்பினர் எனக் கூறி தலை நிமிர்ந்து செயற்பட முடியாத நிலை உள்ளது.அவர் யாரிடமாவது அவ்வாறு கூறுவாராக இருந்தால், “நீ டம்மி,பேசாமல் அங்கிட்டு போய் விளையாடென” சிறு பிள்ளையும் கூறும்.இப்படியான பதவியில் அவர் நீடிக்க அவருக்கு அருவருப்பாக தெரியவில்லையா?
இத் தேசியப்பட்டியலை வைத்துக் கொண்டு அமைச்சர் ஹக்கீம் மக்களை ஏமாற்றி திரிகிறார்.அதனை சல்மான் இராஜினாமா செய்து கொடுத்தால் அமைச்சர் ஹக்கீம் உரிய நபருக்கு கொடுக்க நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவார்.இந் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாது,இது தான் சாட்டென அதில் குந்தியிருக்க சல்மானுக்கு அருவருப்பாக தெரியவில்லையா?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
.

Monday, January 23, 2017
Home »
srilankan news
»
Related Posts:
சமுதாயத்துக்காக துணிந்து அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,,.... அன்று முஸ்லிம் சமுதாயம் அரசியல் அனாதைகளாக இருந்ததை உணர்ந்த மறைந்த தலைவர் அஸ்ரப் தனது சமுகத்தின் விடிவுக்காக முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியை ஆரம்ப… Read More
கண்டியாப்பால் கதிகலங்கி நிற்கும் றவூப் **************** ##ஹக்கீம் ************** கண்டியில் நடைபெற்ற பேராளர் மாகாநாட்டில் பெளத்து வரை கட்சியின் தலைவனாக இருக்க வேண்டும் என்று யாப்பில் செய்த மாற்றம் இன்று கட்சியை அழிவுப… Read More
மு.காவின் நாற்றம் முஸ்லிம்களுக்கு கேடு இன்று மு.கா பணம் வாங்கிக்கொண்டு இவ் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கிய நாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வரை சென்றடைந்துள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளே இவ் நாற்றம… Read More
குவைதிர்கானின் மன்னார் பெரியகடை முஹையதீன் ஜும்மா பள்ளிவாயல் தொடர்பான குற்றச் சாட்ட்டின் உண்மை முகம் அமைச்சர் றிஷாதை ஏசுவதற்காகவே மு.காவினால் நிரந்தர கொந்தராத்து வழங்கப்பட்டிருக்கும் குவைதிர்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள … Read More
மாணிக்கமடு சர்ச்சையை தீர்க்கவேண்டிய முழுப்பொறுப்பும் அம்பாறை அரசியல் அதிகாரமுள்ள மு.காவுக்கே உள்ளது.. அம்பாறை மாவட்டத்தில் மு.கா பலத்த அரசியல் அதிகாரங்களுடன் உள்ளது.அங்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.அதில் இருவர் … Read More
0 comments:
Post a Comment