தாருஸ்ஸலாம் வெளியே வந்தது, அடுத்த மர்ம முடிச்சு "தலைவரின் படு கொலை"
பசீர் சேகு தாவூத் தயாரா?
அஸ்மி ஏ கபூர்
தாருஸ்ஸலாம் என்கின்ற கட்சியினர் தலைமையகம் எவ்வாறு இன்று பல தரப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்குட்பட்டு இன்று தனது சொந்த வீட்டின் பத்திரம் போல கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்து கொடுத்ததன் மூலம் ரவூப் ஹக்கீம் என்கின்ற மு.கா.தலைவர் பெற்றுக் கொண்டிருப்பதை விளக்கும் நூல் அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்புப் குழுவினரால் மக்கள் பார்வைக்கு விடப்பட்டது.
அது எவ்வாறான தாக்கத்தை கட்சிக்குள்,கடசிக்கு வெளியே ஏற்படுத்த போகிறது என்பதை மிக அவதானமாக எதிர்காலத்தில் நோக்க முடியும்.
கட்சி தவிசாளராக அதாஉல்லா அவர்கள் பிளவு பட்டு சென்ற போது கிழக்கிலுள்ள ஐ தேக பிரமுகர்களை முஸ்லீம் காங்கிரஸ் உள்வாங்கிய போது மக்கள் அலட்டிக் கொள்ள தகுமான காரணங்கள் இருந்தும் ஒரு தடவை நம்பினார்கள்.
ஆனால் இம்முறை தமது கட்சி சின்னத்தை பறித்து கட்சியை நடு வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியவர்களையும், மறைந்த தலைவரை மிக மோசமாக விமர்சித்தவர்களையும் பக்க துணைக்கு வைத்து கொண்டு வீணை வாசிப்பதை கட்சி போராளிகளை துரத்த நினைப்பதை எவனும் ஏற்றுக் கொள்வான் என நினைக்கிறீர்களா?
இரண்டாவது கட்டம் தலைவரின் படு கொலை பற்றியதாகும்.இந்த படு கொலை தொடர்பில் இவ்வளவும் காலமும் அரசில் இருந்த மு.கா.தலைவர் ஒரு வார்த்தை கூட பேச முடியாத அல்லது பேசாத மர்மம் என்ன?
நீதி அமைச்சராக இருந்தவரால் கூட இதன் பணிகளை முன்னெடுக்க முடியாமை
அந்த மனிதனின் பெயரை சொல்லி அவர் உருவப்படத்தை காட்சி பொருளாக மாற்றி வியாபாரம் செய்கின்ற ஏமாற்று அரசியல் தந்திரிகளால் ஏன் அஷ்ரப் எனும் மாமனிதர் படு கொலை செய்யப்பட்டது தொடர்பில் பேச இயலவில்லை
அண்மையில் மு காங்கிரஸின் வெளியீட்டு பணிப்பாளராகவும் தலைவரின் விசவாசத்துக்குரிய வலது கரமாகவும் இருந்த எழுத்தாளர் எம்.பெளசர் தலைவரின் மரணம் குறித்து எழுதுகின்ற போது
மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் படுகொலை மரணம் , 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட சிலியின் மக்கள் தலைவன் சில்வடோர் அலேண்டேயின் அரசியல் படுகொலையுடன் ஒப்பிடக் கூடியது.
அஷ்ரபின் மரணம் வெறுமனே ஒரு உள்ளூர் திட்டமிடல் அல்ல. அதன் பின்னால் சர்வதேச அரசியலின் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன்.
அதற்கு ஏவப்பட்ட ஒரு கருவியே விடுதலைப் புலிகள். ,
2002 இல் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடந்த அரசியல் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய காய் நகர்த்தலே மர்ஹும் அஷ்ரப் அவர்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலாகும்.
ஒரு நாட்டில் ஒரு விடயத்தினை செய்வதற்கு முன், தமது நிகழ்ச்சி நிரலை தங்கு தடையின்றி நிகழ்த்த வாய்ப்பான சூழலை , சர்வதேச ஆதிக்க அரசுகள் எப்படித் திட்டமிடும், அதற்கு என்ன என்ன செய்யும் என்பதை , சமகால சர்வதேச அரசியல் தொடர்பில் அறிவுள்ளவர்கள் ஒரளவேணும் புரிந்து கொள்ளலாம்.
முஸ்லிம்களின் அரசியல் தலைவர் அஷ்ரபை அழிக்க, பிரபாகரனையும், விடுதலைப் புலி இயக்கத்தினையும் பயன்படுத்திய சர்வதேசம், பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க , மகிந்த ராஜபச்சவை பயன்படுத்தியது. பின்னர் தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்காத மகிந்தவை அதிகாரத்தில் இருந்து இறக்க மைத்திரியையும் , ஐக்கிய தேசியக்கட்சியையும் அதன் தலைவர் ரணிலையும் பயன்படுத்தியது.
எனவே தலைவரின் மர்ம படுகொலையின் முடிச்சுக்களை அவிழ்த்து அவரின் கப்றை காணும் போதல்லாம் எம் தலைவனை கொன்று அந்த உடலின் பாகங்களின் மேல் ஆட்சி அதிகாரங்களை செலுத்துகின்ற கொடியவர்கள் அழிய வேண்டுமென்ற கடை நிலை போராளியின் தூய எண்ணத்தையாவது பசீர் தீர்த்து வைக்க வேண்டும்
ஒவ்வொரு கட்டம் கட்டமாக எந்த தலைவர்களை ஆதரிக்க நாம் கடமைப்பட்டோம் எதற்க்காக என்பதையும் பசீர் தெளிவுபடுத்த வேண்டும்
தாருஸ்ஸலாத்தை மீட்க புறப்படும் போராளிகள் ஒரு முறை ஜாவத்தை பள்ளி சென்று தலைவரின் கப்றடிக்கு செல்லுங்கள்.
.

Sunday, January 15, 2017
Home »
srilankan news
»
Related Posts:
18 arrested over Negombo protest At least 18 people were arrested and six three-wheelers and a private bus were taken into custody in connection with incident where a group of people staged a protest by obstructing the Col… Read More
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் விபுலாநந்தா அரங்கில் தற்போது இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசி… Read More
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் . நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் ...! ஏன் கட்சி மாறினேன்...! By : Ilham Marikar ***************************************************************************** நான் பல வருடங்களாக கல்வித்துறையில… Read More
We have to learn a lesson from Castro: D.E.W. Gunasekera The following views were expressed by the leader of the Communist Party in Sri Lanka, at the Fidel Castro memorial held on Sunday evening. General Secretary of the … Read More
புத்தளம் தொகுதியில் தான் தேர்தலில் குதிப்பதற்காகவே மக்கள் காங்கிரஸ் தேசிய பட்டியலை புத்தளத்தின் மைந்தன் நவவிக்கு வழங்கியதாக பரப்பப்பட்டுவரும் விஷமத்தனமான பிரசாரங்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் உயிருள்ளவரை புத்தளத்… Read More
0 comments:
Post a Comment