Pages

.

.

Sunday, January 22, 2017

ஹக்கீம் சல்மானை இராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும்

(இப்றாஹீம் மன்சூர்)

அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியல் ஒன்றை வைத்துக் கொண்டு பலருக்கும் எத்தம் காட்டி வருகிறார்.அட்டாளைச்சேனை மக்கள் திருகோணமலைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்ட போது அதனை பார்த்துக்கொண்டிருந்தனர்.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் கிடைக்கப்போகிறதென்றால் மாத்திரம் கொதித்தெழுகின்றனர்.இது எந்த வகையிலும் நியாயமானதல்ல.

ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டாலும் சரி அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட்டாலும் சரி அவர்கள் அதன் மீது ஏதோ ஒரு வகையில் உருத்துடையவர்கள்.இப் பதவியினை வகிக்க பாராளுமன்ற உறுப்பினர் சல்மானுக்கு தற்காலிகமாக வழங்கியிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அவர் தேசியப்பட்டியல் பகிர்வில் சிந்திக்கப்படும் நபர்களில் ஒரு மூலையில் கூட இல்லை.வருவோர் போவோர் எல்லோருக்கும் தேசியப்பட்டியலை  வழங்க அமைச்சர் ஹக்கீமிடம் தேசியப்பட்டியல் எஞ்சி கிடக்கின்றதா?

தற்போதைய நிலைகளை வைத்து பார்க்கும் போது ஹசனலியின் பக்கமும் ஏதோ ஒரு வகையில் சரி செய்யப்பட்டுவிட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.அது தேசியப்பட்டியல் சமரசம் என்றால் அமைச்சர் ஹக்கீம்  காலம் தாழ்த்தாது அவருக்காவது தேசியப்பட்டியலை வழங்க வேண்டும்.இல்லையென்றால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலை வழங்க வேண்டும்.அதற்கும் விருப்பம் இல்லையென்றால் தேசியப்பட்டியல் வழங்க சிந்திக்கும் வேறு யாருக்காவது தேசியப்பட்டியலை வழங்க வேண்டும்.அதற்கும் இல்லையென்றால் நிரந்தரமாக சல்மானுக்கு வழங்கி மக்களுக்கு எத்தம் காட்டாது இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இனியும் காலம் தாழ்த்தாது அமைச்சர் ஹக்கீம் உடனடியாக சல்மானின் தேசியப்பட்டியலை இராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும்.சல்மான் தாருஸ்ஸலாமின் மர்ம கதைகளை நன்கு அறிந்தவர் என்பதால் இந் நிலையில் அமைச்சர் ஹக்கீம் அதிகாரத் தொனியில் அவரிடம் எதனையும் கூற முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு அஞ்சியே அவரிடம் அமைச்சர் ஹக்கீம் இராஜினாமா செய்ய உத்தரவிடாமல் இருக்கலாம்.


Related Posts:

  • ஹக்கீமை இகழும் தவம் (இப்றாஹீம் மன்சூர்: கிண்ணியா) நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் நாம் செய்கின்ற சில விடயங்கள் எமது மனங்களில் புதைந்து கிடக்கின்ற உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திவிடும்.அந்த வகையில் மாகாண சபை உறுப்பினர… Read More
  • மரணித்தவருக்கு துரோகம் செய்வதை பார்த்துக்கொண்டிருக்கலாமா? (அபு ரஷாத்) இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு நேரிய வழியை தனதுயிரை இழந்து காட்டிய மர்ஹூம் அஷ்ரபை இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிடுவார்களாக இருந்தால் அவர்களைப் போன்ற துரோகிகள் … Read More
  • எம்.பியாக இருக்க சல்மான் அருவருப்புப்பட வேண்டும் அமைச்சர் ஹக்கீம் தனது நெருங்கிய சகாவான சல்மானிற்கு தற்காலிகமாகவே தேசியப்பட்டியலை வழங்கியிருந்தார்.அத் தேசியப்பட்டியலானது யாருக்கு சொந்தமானது என்பதில் பிரச்சினை இருந்தாலும் அதற… Read More
  • உண்மைகள் வெல்வதுமில்லை தோற்பதுமில்லை அவை நிரூபிக்கப்படுகின்றன ------------------------------------ அஸ்ஸலாமு அலைக்கும்! கடந்த ஞாயிறு அன்று நான் கலந்து கொண்ட "அதிர்வு " நிகழ்ச்சியில் என்னால் கூறப்பட்ட ஒரு துளி உண்மையின் வரலாற… Read More
  • பிரதி அமைச்சர் தனது கட்சி பிரதி அமைச்சரை இழிவு படுத்தினாரா? இன்று நிந்தவூரில் மு.காவின் ஏற்பாட்டில் மிகப் பிரமாண்டமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந் நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் செல்லவில்லை.இது தொடர்பில் ஆராய்ந்த … Read More

0 comments:

Post a Comment