Pages

.

.

Saturday, January 28, 2017

பிரதி அமைச்சர் தனது கட்சி பிரதி அமைச்சரை இழிவு படுத்தினாரா?

இன்று நிந்தவூரில் மு.காவின் ஏற்பாட்டில் மிகப் பிரமாண்டமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந் நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் செல்லவில்லை.இது தொடர்பில் ஆராய்ந்த போது

“இந் நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் தகுந்த விதத்தில் அழைக்கப்படவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.அது மாத்திரமல்ல மாகாண சுகாதார அமைச்சர் நஸீரின் பெயரிற்கு அடுத்தே பிரதி அமைச்சர் ஹரீசின் பெயர் அழைப்பிதழில் போடப்பட்டுள்ளது.”

இதன் காரணமாகவே அவர் செல்லவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.protocol இன்  படி மாகாண அமைச்சு பிரதி அமைச்சுக்கு கீழே உள்ளது.மேலும்,ஹரீஸ் கட்சியின் பிரதித் தலைவர்களிலும் ஒருவர்.அவரை அழைப்பதானால் அதற்கு தகுந்த விதத்தில் அழைத்திருக்க வேண்டும்.

குறித்த அழைப்பிதழில் ஹரீசின் பெயரை போடுவதற்கு அவரிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை.அனுமதி தேவையில்லை என்று உரிமை எடுத்து செயற்படுவதாக இருந்தால் அவரின் பெயரிற்கு தகுந்த மரியாதை வழங்கப்பட வேண்டுமல்லவா?

இன்று பிரதி அமைச்சர் ஹரீஸ் மீனவர்களுக்கு கடற்தொழில் உபகரணங்களை வழங்கி வைத்திருந்தார்.அந் நிகழ்விற்கு மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் நினைத்திருந்தால் நேரமொதிக்கி சமூகமளித்திருக்க முடியும்.இன்று அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்ட நிகழ்வுகளை விட இது முக்கியமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

மு.காவினுள் பிளவுகள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான பிளவுகளும் தேவை தானா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.



Related Posts:

  • கோமாவிலுள்ள அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் ......................................................... ஜெம்சித் (ஏ) றகுமான் ஆட்சியின் பங்காளர்கள் நாம் என மார்புதட்டி கொள்வதில் இனியும் எந்த பயனுமில்லை. தாக்குதல்கள் இரண… Read More
  • விளக்கமில்லாமல் அறிக்கை விட்ட வை.எல்.எஸ் ஹமீத் (இப்றாஹீம் மன்சூர்) “வேண்டாத பொண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” என்ற பழ மொழியை நினைவு படுத்தியவனாக இக் கட்டுரையை வரையலாம் என நினைக்கின்றேன்.வை.எல்.எஸ் … Read More
  • Indian embezzlement suspect planned a bank in SriLanka, met President  The investigation carried out by the special operation group (SOG) of Rajasthan police, which revealed that INR 160 million was embezzled at Alwar… Read More
  • Sri Pada season begins today The annual Sri Pada (Adam’s Peak) pilgrim season begins today. The pilgrimage season runs from Unduwap poya (December) to Wesak poya Festival (May), reaching its peak mid-season at Medin poya.&… Read More
  • அமைச்சர் ஹக்கீமின் வாசித் மீதான குற்றச் சாட்டும் பின்னணியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீமிடம் ஊடகவியலாளர் பொத்துவில் அபிவிருத்தி தொடர்பில் எழுப்பிய வினாவிற்கு பதில் அள… Read More

0 comments:

Post a Comment