Pages

.

.

Tuesday, January 24, 2017

அட்டாளைச்சேனை ஹசனலி முரண்பாடே ஹக்கீமின் முதலீடு

(இப்றாஹீம் மன்சூர் : கிண்ணியா)

பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஹக்கீம் செய்விக்க வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகி வருகிறது.இங்கு அனைவரும் ஒரு விடயத்தை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியலை இத்தனை காலமும் வழங்காது இழுத்தடிப்புச் செய்ய அட்டாளைச்சேனை ஹசனலி முரண்பாடே பிரதான காரணமாக முன் வைக்கப்படுகிறது.இவர்கள் இருவரும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தால் அமைச்சர் ஹக்கீம் எதுவித சாட்டும் சொல்ல முடியாத நிலைக்கு வந்துவிடுவார்.இப் பிரச்சனைகளை இழுத்தடிப்புச் செய்வதற்கான அவருடைய முதலீடும் இது தான்.

இருவரில் யாருக்கு வழங்குவது என்பதில் பிரச்சினை இருந்தாலும் முதலில் இரு குழுவினரும் இணைந்து காலம் தாழ்த்தாது சல்மானின் தேசியப்பட்டியல் ஆளுகையை முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதானால் அது யாருக்கு வழங்குவது என்பதில் முரண்பாடு காணப்பட்டாலும் அட்டாளைச்சேனைக்கே தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பதில் அட்டாளைச்சேனை மக்கள் எப்படி ஒரு முடிவிற்கு வந்தார்களோ அதே நிலைப்பாட்டை சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற விடயத்திலும் எடுக்க வேண்டும்.

இதன் பிறகும் அவர் சாட்டுப் போக்கு சொல்லுவாராக இருந்தால்,தனது நெருங்கிய நண்பன் மீது கொண்ட பாசத்தினால் அவர் தேசியப்பட்டியல் வழங்கினாரா? அல்லது உண்மையில் நிர்ப்பந்தத்தினால் தான் தேசியப்பட்டியல் வழங்கினாரா? என்ற அவரது உண்மை முகத்தை அறிந்து கொள்ளலாம்.


Related Posts:

  • ஜப்பார் அலி மீது ஹக்கீமிற்கு திடீரென வந்தது பாசமா? வேசமா? அமைச்சர் ஹக்கீம் நிந்தவூரிலே ஹசனலியினால் தனக்கு கிளம்பியிருக்கும்  எதிர்ப்பை சமாளிக்க ஹசனலியின் சகோதரரான ஜப்பார் அலியை தனது ஆயுதமாக பயன்படுத்துவதை அவர் அறிகிறாரோ… Read More
  • அமைச்சர் றிஷாதின் சேவைகளை அம்பலத்திற்கு கொண்டு வரும் பணியில் முஸ்லிம் காங்கிரஸினர் (இப்றாஹீம் மன்சூர்) பாக்கிஸ்தான் பல்கலைக் கழகம் ஒன்றினால் அமைச்சர் றிஷாதின் வேண்டுகோளுக்கு ஏற்ப வழங்கப்பட்ட மருத்துவ படிப்பிற்கான புலமைப் பர… Read More
  • 12 மரணங்களின் பின் தான் ஹக்கீமிற்கு ஞானம் பிறந்ததா? (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) கிண்ணியாவை உலுக்கி பார்க்கும் விடயமாக டெங்கு நோயானது மாறியுள்ளது.கள்ளன் சென்ற பின் நாய் குரைத்த கதையாக இப் பிரச்சினை இரு வாரங்களுக்கும் மே… Read More
  • வாழிடம் பறி போகும் நிலையில் மு.காவின் கூத்து (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் செயலால் வடக்கில் வாழ்கின்ற மக்கள் நிம்மதியை தொலைத்து கண்ணீரோடு இருக்கின்றனர்.இச் செயல் வடக்கை மாத்திரம் அத… Read More
  • ஹக்கீம் காங்கிரஸ்  சரிகிறது (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் எனும் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டிருந்தது.இப் புத்தக வெளியீட்டில் மு.காவின் பிரத… Read More

0 comments:

Post a Comment