Pages

.

.

Sunday, January 29, 2017

ஹக்கீமிற்கு  பஷீர் மோனியா

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் ஹக்கீம் ஒரு சிறு நேரம் மாத்திரமே மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் தவிர்ந்து வேறு விடயங்கள் பற்றி  பேசியிருப்பார்.முதலமைச்சர் நஸீர் ஹாபிசும் தனதுரையின் பெரும் பகுதியை பஷீர் தொடர்பில் கதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இவர்கள் இப்படி பஷீர் மோனியா நோய் பிடித்து அலைவதன் காரணமென்ன?

அவர் வெளியிடட்டதாக கருதப்படும் தாருஸ்ஸலாம் மறைக்கக்கப்ட்ட மர்மங்கள் எனும் புத்தகத்தை மையப்படுத்தியே இவர்கள் பஷீரை ஏசி பேசிக்கொண்டனர்.இந்த விடயத்திற்கே இவர்கள் இப்படி ஆடிப் போனால் அவர் இன்னும் ஏதாவது சொன்னால்?

அக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் பற்றிய புத்தகமான பிழையான தரவுகளை உள்ளடக்கியது என நிறுவ அமைச்சர் ஹக்கீம் தாருஸ்ஸலாம் பற்றி மு.காவின் உயர்பீடத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அதன் போது பஷீர் ஒன்றும் பேச முடியாத நிலைக்கு வந்து அவரைக் காப்பாற்ற உயர்பீடத்தை நிறுத்தியதாகவும் கூறியிருந்தார்.இது நடந்ததை முற்றாக மாற்றி அமைச்சர் ஹக்கீம் கூறிய கதையாகும்.

அவ் உயர் பீடக் கூட்டத்தில் நடந்தது என்ன?

பஷீர் சேகுதாவூத் அமைச்சர் ஹக்கீமிற்கு தாருஸ்ஸலாம் பற்றி கடிதம் எழுதியிருந்தார்.இவரது வினாவை மையமாக கொண்டு அமைச்சர் ஹக்கீம் அதற்கு 2016.08.23ம் திகதி இடம்பெற்ற உயர் பீட கூட்டத்தில் பதில் அளித்தார்.இதன் போது பஷீர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய போது சிலர் அவரை கேள்வி கேட்க முடியாதவாறு வேறு விடயங்களை கூறி தடுத்தனர்.இதன் போது பஷீர் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் அவரை பேச விடுங்கள் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பில் பஷீரை தடுத்தமை பிழையென்ற வகையில் உயர்பீட உறுப்பினர் றியால் அறிக்கையொன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தான் நடந்தது.இதில் பஷீர்,தாருஸ்ஸலாம் பற்றிய ஹக்கீமின் விடையால் வாயடைத்துப் போகவில்லை என்பதை மக்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.உயர்பீடக் கூட்டத்தை தனது ஏற்ற வகையில் கையாள்வதில் சாணக்கியத் தலைவர் மிகவும்  தேர்ச்சிமிக்கவர்.ஹக்கீம் நடந்ததை மாற்றி வேறு வியாக்கியானம் கற்பிக்கின்றார்.இதுவே இவ்விடயத்தில் அவரது இயலாமையை கூறுகிறது.


Related Posts:

  • Woman’s body found in Bolgoda River The body of a 35-year-old woman was found in the Bolgoda River near the Panadura Railway Station today, Police said. The cause of the victim’s death and her identity had not been ascerta… Read More
  • தனது மௌனத்திற்கான காரணத்தை தோப்பூரில் வலுப்படுத்திய ஹக்கீம் (இப்றாஹிம் மன்சூர்) இலங்கையில் இனவாதம் மிக உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.தற்போது இவ்வரசின் மீது பலத்த விமர்சனங்கள் முஸ்லிம் தரப்புக்களிடமிருந்து வெளிவந்துகொண்டிருக்கி… Read More
  • இவ்வாட்சிக்கு சோரம் போன மு.கா பிரதிநிதிகள் (அபு றஷாத்) இவ்வாட்சியை கொண்டு வருவதில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு அபரிதமானதென்பதை யாராலும் மறுத்துரைக்க முடியாது.இலங்கை முஸ்லிம்கள் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புக்களிடமிருந்த… Read More
  • வடக்கு மக்களுக்காக இனவாதிகளுடன்  தனித்து போராடும் றிஷாத் (இப்றாஹிம் மன்சூர்) அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள் அனைத்திற்கும் எதிராக இனவாதிகளுடன் எவ்வித அச்சமுமின்றி போராடி வருகிறார்.அமைச்சர் … Read More
  • Antonio Guterres sworn in as new UN secretary-general Former Portuguese Prime Minister Antonio Guterres was sworn in Monday as Secretary-General of the United Nations, becoming the ninth U.N. chief in the body’s 71-year hi… Read More

0 comments:

Post a Comment