Pages

.

.

Thursday, January 19, 2017

பிரதி அமைச்சர் ஹரீஸ் எனது கருத்தை ஏற்றார்

(இப்றாஹீம் மன்சூர்)

சில நாட்கள் முன்பு நான் “பிரதி அமைச்சர் ஹரீஸ் மாலைதீவு சென்றிருக்க தேவையில்லை” என்ற கட்டுரையை எழுதியிருந்தேன்.அக் கட்டுரையில்  கல்முனை பிரதேசத்தை சேர்ந்த  காணாமல் போனா ஆறு மீனவர்களும் இத்தனை இடர்களை எதிர்கொள்ள அவர்களிடம் தொலைத் தொடர்பு சாதனமும் அதனை பயன்படுத்தக் கூடிய அறிவும் இல்லாமையே பிரதான காரணம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதனை எழுதியவுடன் என்னை நோக்கி சில நபர்களிடமிருந்து (மு.காவின் மடத்தனமான போராளிகளிடமிருந்து) பலமான எதிர்ப்புகளை அவதானிக்க முடிந்தது.இதற்கெல்லாம் மனம் சோர்ந்து போபவன் நான் அல்ல.யார்? என்ன? கூறினாலும் பிரதி அமைச்சர் ஹரீசே எனது கருத்தை பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்.அப்போது என்னை எதிர்த்தவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்?

பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது அறிக்கையில்

“பிரதி அமைச்சர் ஹரீஸ் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட மீனவர்களுடன் அவர்களது கசப்பான அனுபவங்கள் குறித்து கலந்துரையாடிய போது இம் மீனவர்கள் காணாமல் போனமைக்கு தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லாமையே பிரதான காரணம் என்பதை உணர்ந்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அல் ஹம்துலில்லாஹ்

இது தொடர்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து உரையாடியுள்ளார்.இதன் போது மீனவர்களுக்கு தொலைத் தொடர்பு சாதங்களை வழங்குமாறு வேண்டுகோலும் விடுத்துள்ளார்.பிரதி அமைச்சர் ஹரீசின் வேண்டுகோளை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை செய்ய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.அதாவது,இதனை ஏற்பாடு செய்து கொடுப்பது  ஒரு அரசியல் வாதியின் கடமை என்பதை இதனூடாக மிக இலகுவாக புரிந்து கொள்ளலாம்.இதனை தான்,நான் எனது கட்டுரையினூடாக குறிப்பிட்டிருந்தேன்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் இதற்கு முன்பு  ஒரு நாள் ஒரு மீனவரிடம் சென்று அவரின்  தேவைகள் குறித்து கேட்டறிந்து இதனை ஏற்பாடு செய்திருந்தால் அவர் மாலைதீவு சென்றிருக்க தேவையில்லை தானே? இப்போதாவது இதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

எனது கருத்தை ஏற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எனது நன்றிகள் கோடி உரித்தாகட்டும்.

Related Posts:

  • குவைதிர்கானின் மன்னார் பெரியகடை முஹையதீன் ஜும்மா பள்ளிவாயல்  தொடர்பான குற்றச் சாட்ட்டின் உண்மை முகம் அமைச்சர் றிஷாதை ஏசுவதற்காகவே மு.காவினால் நிரந்தர கொந்தராத்து வழங்கப்பட்டிருக்கும் குவைதிர்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள … Read More
  • மு.காவின் நாற்றம் முஸ்லிம்களுக்கு கேடு இன்று மு.கா பணம் வாங்கிக்கொண்டு இவ் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கிய நாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வரை சென்றடைந்துள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளே இவ் நாற்றம… Read More
  • சமுதாயத்துக்காக துணிந்து அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,,.... அன்று முஸ்லிம் சமுதாயம் அரசியல் அனாதைகளாக இருந்ததை உணர்ந்த மறைந்த தலைவர் அஸ்ரப் தனது சமுகத்தின் விடிவுக்காக முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியை ஆரம்ப… Read More
  • மாணிக்கமடு சர்ச்சையை தீர்க்கவேண்டிய முழுப்பொறுப்பும் அம்பாறை அரசியல் அதிகாரமுள்ள மு.காவுக்கே உள்ளது.. அம்பாறை மாவட்டத்தில் மு.கா பலத்த அரசியல் அதிகாரங்களுடன் உள்ளது.அங்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.அதில் இருவர் … Read More
  • மு.காவினரின் அச்சத்தால் உச்சம் தொட்ட அமைச்சர் றிஷாத் அமைச்சர் றிஷாத் துரித வளர்ச்சி கண்டமைக்கு பல காரணங்கள் இருப்பினும் மு.காவினர் அமைச்சர் தங்களுக்கு போட்டியாக வளர்ந்து விடுவாரோ என அஞ்சியமை அவரின் வளர்ச்சிக்கான பிரதான காரணம… Read More

0 comments:

Post a Comment