சல்மான் தேசியப்பட்டியலுக்கு தகுதியானவரா?
பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் தேசியப்பட்டியலுக்கு பொருத்தமற்றவர் என்ற கருப்பொருளில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன்.அமைச்சர் ஹக்கீம் சல்மானை தற்காலிக பாராளுமன்ற உறுப்பினராகவே நியமித்தேன் எனக் கூறியமையே அதற்கான பிரதான காரணமாகும்.தற்காலிகமாக நியமிப்பவர் நம்பிக்கைக்குரியவரையே தவிர தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானவரல்ல.இதன் மூலம் அமைச்சர் ஹக்கீம் இம் முறை சல்மான் தேசியப்பட்டியல் வழங்க பொருத்தமற்றவர் என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.சல்மான் பொருத்தமானவராக இருந்தால் இந் நேரம் ஹக்கீமிற்கு மடி வெடித்திருக்கும்.
2016-12-18ம் திகதி அதிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஹக்கீமிடம் அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் வாக்குறுதி பற்றி கேட்கப்பட்ட போது அவர் சில மாவட்டங்கள் அரசியல் அதிகாரம் அற்று கிடப்பதால் அம் மாவட்டங்களுக்கே தேசியப்பட்டியல் வழங்குவது பொருத்தமானது என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.சல்மான் கண்டியை சேர்ந்தவர்.அங்கு தான் அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.அமைச்சர் ஹக்கீமின் கூற்றின் படி சல்மான் இம் முறை தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானவரா?
இன்று தேசியப்பட்டியல் வழங்கப்பட்டவராக இருந்தாலும் சரி,வழங்க சிந்திப்பவராக இருந்தாலும் சரி அவர்கள் கட்சியின் மூத்தவர் என்ற அடிப்படையில் சிந்திக்கப்படவில்லை.யாருக்கு தேசியப்பட்டியலை வழங்கினால் கட்சியை மீள கட்டியெழுப்பலாம் என்ற வகையிலேயே சிந்திக்கப்படுகிறது.இருந்தாலும் அமைச்சர் ஹக்கீம் வாக்குறுதியும் அதில் தாக்கம் செலுத்துவதை மறுக்க முடியாது.அமைச்சர் ஹக்கீம் சல்மானுக்கும் தேசியப்பட்டியல் வாக்குறுதி வழங்கியுள்ளதாக அவர் கூறினாலும் அவரை இம் முறை தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானவர் பட்டியலினுள் நோக்கலாம்.
இந்த வகையில் தான் அவரை பொருத்தமற்றவராக கூறியிருந்தேனே ஒழிய அவர் கட்சிக்கு செய்த தியாகங்களை அடிப்படையாக கொண்டல்ல.இதனை புரிந்து கொள்வதொன்றும் பெரிய விடயமல்ல.இருந்தாலும் எனது கட்டுரைக்கு சல்மான் செய்த தியாகங்களை கூறி அவர் தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானவர் தான் என்போரை நான் தவறாக கூற முடியாது.அது சல்மான் மீதான வினாவை விடுப்போருக்கு அடிக்க அமைச்சர் ஹக்கீம் கொடுத்த கம்பு.
அமைச்சர் ஹக்கீம் பகிரங்க நிகழ்வுகளில் இது பற்றிய கேள்விக்கு அவரை தேசியப்படியலுக்கு பொருத்தமற்றவராக கூற முடியாதென சல்மானின் புகழ் பாடித் திரிந்துள்ளார்.அவர் புகழ்பாடுவதை வைத்து நோக்கும் போது அவரிடமிருந்து அவ்வளவு இலகுவில் அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியலை கழற்றி எடுக்க மாட்டார் என்பது தான் தெளிவாகிறது.சல்மான் தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானரவாக இருந்தால் அவர் தற்காலிக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எனக் கூறி அமைச்சர் ஹக்கீம் வழங்க வேண்டிய அவசியமில்லை.நேரடியாக இவர் தான் பொருத்தமானவர் எனக் கூறி வழங்கலாமே! இதுவெல்லாம் அமைச்சர் ஹக்கீம் சாணக்கிய ஏமாற்றல்கள்.இதனையெல்லாம் புரிந்து கொள்ள முடியாமல் மக்கள் இருப்பது தான் கவலைக்குரிய விடயமாகும்.
சல்மான் செய்த தியாகங்களில் அமைச்சர் ஹக்கீம் பிரதானமாக கூறுவது அவர் வெளிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கு ஏற்பட்ட சவாலின் போது ஹக்கீமின் தலையை இவரே காப்பாற்றியிருந்தார் என்பதாகும்.இதன் போது பஷீர் சேகு தாவூத்,புத்தளம் பாயிஸ் போன்றோரின் பங்களிப்பும் அவ்வளவு இலகுவானதல்ல.இவ்வாறு பார்த்து தேசியப்பட்டியல் வழங்குவதானால் ஆயிரம் பேருக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும்.இது ஹக்கீமின் தனிப்பட்ட விடயம் என்பதால் அதற்கு தேசியப்பட்டியல் ஒரு போதும் ஈடாகாது.அதற்கு அவரூடான பதவிகளே பொருத்தமானதாகும்.
இது பற்றி நான் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்த ஒருவர் நான் மஞ்சள் கவர் வாங்கி எழுதியதாக கூறியுள்ளார்.அதனை எழுதியவர் அண்மைக் காலமாக அவர் கூறிய மஞ்சள் வர்ணத்தில் டீ.சேர்ட் போட்டு மு.காவின் சுற்றுலாக்களில் சுக போகம் அனுபவித்து வருகிறார்.அவர் போராளியாக மாறியதே கேவலமான வரலாறு.நாகரீகமான விமர்சனத்தை எதிர்பார்த்தவனாகவும் கீழ் தரமான விமர்சனத்திற்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் இத்தோடு இதனை நிறைவு செய்கிறேன்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
.

Tuesday, January 24, 2017
Home »
srilankan news
»
Related Posts:
சவூதி நிறுவனம் இலவசமாக வழங்கிய நீர் இணைப்புக்கு இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு பணம் பெற்றதா? இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய பிரதேச மக்களுக்கான முழுமையான இலவச குடி நீர் இ… Read More
பொய்யர் காங்கிரஸினால் நாளை நக்குன்னிகளுக்கா இப்தார் நிகழ்வு ...? அகிலம் எல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனுக்கு பயந்தவனாய் எனது உணர்வுகளை இறைவனுக்கு சாட்டி எனது பேனா முனையை நான்வைத்த நோ… Read More
அம்பாறையில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த அமைச்சர் றிஷாத் (ஹபீல் எம்.சுஹைர்) அம்பாறை மாவட்டத்துக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாத் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம் அலை கடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. இதற… Read More
அமைச்சர் றிஷாதின் உயிரை பணயம் வைக்கும் துணிவுமிக்க பாராளுமன்ற பேச்சுக்கள் அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் பேசுகின்ற பேச்சுக்களை அவதானிக்கும் போது அதில் எந்த விதமான ஒழிவு மறைவுகளுமின்றி அரசை நேரடியாக தாக… Read More
பதவிகளை கருத்தில் கொள்ளாது முஸ்லிம்களின் பிரச்சனைகளை சர்வதேசம் கொண்டு செல்லும் றிஷாத் (ஹபீல் எம்.சுஹைர்) இன்று அமைச்சர் றிஷாதின் உத்தியோக முக நூல் பக்கத்தில் ஒரு செய்தி பதிவிடப்பட்டிருந்தது “இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய ந… Read More
0 comments:
Post a Comment