வை.எல்.எஸ் ஹமீதுடன் ஒரு சில நிமிடங்கள் கதைக்க விரும்புகிறேன்
(இப்றாஹிம் மன்சூர்)
நான் நீங்கள் அமைச்சர் றிஷாத் பற்றி எழுதிய,கூறிய ஒவ்வொரு விடயத்திற்குமே பதில் அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன்.தேவையில்லாமல் உங்களை இழுத்து விமர்சனம் செய்யவில்லை.அதே நேரம் அமைச்சர் றிஷாத் பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட போதும் உங்களைப் பற்றி அவர் எதுவுமே அவமானப்படுத்தும் வகையில் இதுவரை கதைக்கவில்லை (முடிந்தால் ஒரு சிறு ஆதாரமாவது காட்டுங்கள்).அது அவர் பயின்ற நாகரீகம் .
ஆனால்,நீங்களோ செல்லுமிடமெல்லாம் அவரைப் பற்றி பேசுவதையே தொழிலாக கொண்டுள்ளீர்கள்.இது உங்கள் நாகரீகத் தன்மையை கேவலப்படுத்துகிறது.இதனை நான் கூறவில்லை நடுநிலையாளர்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள் அவர்களே கூறுவார்கள்.அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் தொடர்பில் மாத்திரம் உங்கள் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கதாக அமைந்துள்ளன.இன்று ஊடகங்கள் உங்களை அமைச்சர் றிஷாதை அழிக்கும் ஒரு சிறு கருவியாக மாத்திரமே பயன்படுத்த முனைகின்றன.சில காலங்கள் முன் உங்களை ஊடகங்கள் வேறு விடயங்களுக்கு (அறிவு சார்) பயன்படுத்தியதை நீங்கள் சிந்தித்தால் உணர்ந்து கொள்வீர்கள்.
நீங்கள் ஆரம்பத்தில் எழுதியது போன்று இவ்வரசியலமைப்பில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து மீண்டும் எழுத ஆரம்பியுங்கள்.உங்கள் பதிவுகளை பலரும் தொடராக படித்தார்கள்.இப்போது அதனையெல்லாம் படித்த நாகரீகவான்கள் உங்கள் மீது கொண்ட மதிப்பை அண்மைக் கால உங்கள் செயற்பாடுகளை அழித்துவிட்டன.அதனை இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களில் தெளிவான விடயங்களை முன் வைக்கக்கூடியவர்.அதனை சமூகத்திடையே வெளிக்காட்டி உங்கள் இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.நீங்கள் அமைச்சர் றிஷாத் தலைமை வகித்த கட்சியின் செயலாளராக பல வருடங்கள் இருந்ததன் காரணமாக அவரை விமர்சிப்பது உங்களை நீங்களே விமர்சிப்பதற்கு ஈடாகும் என்பதை முதலில் விளங்கிக்கொள்ளுங்கள்.
இதனை உங்கள் பேச்சுக்கு அஞ்சி சொல்லவில்லை.நீங்கள் புதிதாக ஒன்றையும் கூறப்போவதில்லை.அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பீர்கள்.நாளை ரங்கா அமைச்சர் றிஷாதிடம் அடி வாங்கியதை பழி தீர்க்க இயன்றவரை முனைவான்.நீங்கள் அவன் திருவிளையாடலில் சிக்கி அமைச்சர் றிஷாதை இகழ நினைத்தால் அதன் பிறகு உங்கள் மீதான எனது கடும் போக்கு எழுத்தை பிரயோகிக்க வேண்டியிருக்கும். உங்களை பற்றி சில விடயங்களை மிகக் நீண்ட காலம் செலவு செய்து தொகுத்து வைத்துள்ளேன்.அதனை வெளியிடுவதா? இல்லையா? என்பது உங்கள் கையிலேயே உள்ளது.எங்களிடம் நிறையை புதுப் புது விடயங்கள் உள்ளன.இது எச்சரிக்கையல்ல அன்புக் கட்டளை.
.

Saturday, January 14, 2017
Home »
srilankan news
»
Related Posts:
12 மரணங்களின் பின் தான் ஹக்கீமிற்கு ஞானம் பிறந்ததா? (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) கிண்ணியாவை உலுக்கி பார்க்கும் விடயமாக டெங்கு நோயானது மாறியுள்ளது.கள்ளன் சென்ற பின் நாய் குரைத்த கதையாக இப் பிரச்சினை இரு வாரங்களுக்கும் மே… Read More
ஹக்கீம் காங்கிரஸ் சரிகிறது (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் எனும் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டிருந்தது.இப் புத்தக வெளியீட்டில் மு.காவின் பிரத… Read More
ஜப்பார் அலி மீது ஹக்கீமிற்கு திடீரென வந்தது பாசமா? வேசமா? அமைச்சர் ஹக்கீம் நிந்தவூரிலே ஹசனலியினால் தனக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்பை சமாளிக்க ஹசனலியின் சகோதரரான ஜப்பார் அலியை தனது ஆயுதமாக பயன்படுத்துவதை அவர் அறிகிறாரோ… Read More
வடபுல முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் விளையாடும் மாற்றுக்கட்சி பிரதிநிதிகள்; இனியாவது சிந்திப்பார்களா? ஒலுவில் அஸ்ஹர். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் சுயலாபங்களை மட்டுமே தங்கள் குறிக்கோள்களாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக… Read More
வாழிடம் பறி போகும் நிலையில் மு.காவின் கூத்து (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் செயலால் வடக்கில் வாழ்கின்ற மக்கள் நிம்மதியை தொலைத்து கண்ணீரோடு இருக்கின்றனர்.இச் செயல் வடக்கை மாத்திரம் அத… Read More
0 comments:
Post a Comment