வடக்கு மக்களுக்காக இனவாதிகளுடன் தனித்து போராடும் றிஷாத்
(இப்றாஹிம் மன்சூர்)
அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள் அனைத்திற்கும் எதிராக இனவாதிகளுடன் எவ்வித அச்சமுமின்றி போராடி வருகிறார்.அமைச்சர் றிஷாதிற்கு சிங்களத்தில் அவ்வளவு புலமையில்லை.இருந்தாலும் சிங்கள மக்கள் வில்பத்து விடயத்தில் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக சிங்கள நிகழ்ச்சிகளில் எவ்வித அச்சமுமின்றி கலந்து கொண்டுள்ளார்.முன்னர் ஹிரு தொலைக்காட்சியிலும் இன்று தெரண தொலைக்காட்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.இவர் குறித்த இரு நிகழச்சிகளிலும் மிகத் தெளிவாக தனது வாதங்களை எடுத்து வைத்திருந்தார்.குறித்த பிரச்சினை எழுந்த நாள் தொடக்கம் இன்று வரை அமைச்சர் றிஷாத் நிம்மதியாக உண்டு,உறங்கவில்லையென அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.இதுவே சமூக பற்றாளன் ஒருவரது பண்பும் கூட.
அமைச்சர் றிஷாதின் தலைமைத்துவ பண்பை அடையாளம் கண்டு கொள்ள இதனை விட என்ன ஆதாரம் வேண்டும்? இந்த துணிச்சல் யாருக்குத் தான் வரும்? அமைச்சர் ஹக்கீமோ ஹுனைஸ் பாறூக் கூட்டிச் சென்ற நபர்களுடன் பேசி புகைப்படமெடுத்து முக நூலில் பதிவிட்டதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக இருக்கின்றார்.இது தொடர்பில் அவரது தொடர் செயற்பாடுகளை யாராவது அறிந்தவர்கள் உள்ளீர்களா? மனதை தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.அமைச்சர் ஹக்கீமிற்கு சிங்கள மொழிப் புலமை உள்ளதால் இனவாதிகளின் சவால்களை மிக இலகுவாக எதிர்கொள்ள முடியும்.மொழிப் புலமை இருந்து என்ன பயன்,மக்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் வேண்டுமே?
இதனை வடக்கு மக்கள் நன்றாக அறிந்து கொண்டே கடந்த பாராளுமன்ற தேர்தலில் மு.காவிற்கு பாடம் புகட்டி இருந்தனர்.இதே வகையிலான பாடம் மு.காவினருக்கு மிக விரைவில் இடம்பெறுமென கருதப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும்,கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் நடக்கக் கூடய நிலை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஹக்கீம் வில்பத்து பிரச்சினையின் போது பாதிப்புக்குள்ளாகும் முஸ்லிம் விடயத்தில் மௌனம் சாதிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.அவர் அவர்களுக்கு குரல் கொடுக்கும் போது அமைச்சர் றிஷாதிற்கு வரும் விவாத அழைப்புக்கள் போன்று அவருக்கும் வரும்.அதனை சமாளிக்குமளவு வில்பத்து தொடர்பான அறிவு அவரிடமில்லை என்றே கூற வேண்டும்.இதனால் தான் என்னவோ இதனுள் அகப்பட்டு விடாது தப்பித்துக் கொள்ள அவர் மௌனமாக இருக்கலாம்.
அமைச்சர் றிஷாதின் செயற்பாடுகள் மு.காவினருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.குறித்த பிரச்சினையை அமைச்சர் றிஷாத் தேர்தலுக்காகவே தோண்டுகிறார் என்பவர்கள் இதனை அமைச்சர் றிஷாத் தோண்டினாரா இனவாதிகள் தோண்டினார்களா என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் சாதாரணமாக அறிந்து கொள்ளலாம்.அவ்வாறு அமைச்சர் றிஷாத் இதனை தோண்டியிருந்தால் அதற்கான சிறு ஆதாரத்தையாவது யாராலும் கொண்டு வர முடியுமா?
வடக்கில் அமைச்சர் றிஷாத் மாத்திரம் தான் அரசியல் வாதியா? அமைச்சர் றிஷாதிற்கு வாக்களிக்காது ஏனையவர்களுக்கு வாக்களித்த மக்களே..! உங்களுக்கு குரல் கொடுக்கும் உண்மை தலைவனை இப்போதாவது இனங்கண்டு கொள்ளுங்கள்.
.

Monday, January 9, 2017
Home »
srilankan news
»
Related Posts:
முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ஹக்கீம் ஹஸன் அலியின் கோரிக்கை நிராகரிப்பு! --------------------------------------------------------------- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அவசர உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (11) நடைபெற்ற போது நாளைய (12… Read More
சாய்ந்தமருது மக்களின் கனவுடன் விளையாட வேண்டாம் ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து வை.எல்.எஸ் ஹமீத் சாய்ந்தமருது மக்களின் பல நாள் கனவான சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் கை வைத்துள்ளார்.இவரின் அறிக்கை சாய்ந்தமருது உள்ளூராட… Read More
சேறு பூசலினால் துவண்டு போகும் கோழை நானல்ல நான்,அமைச்சர் றிஷாதிடம் வேலை பெற்றுத் தருவதாக கூறி காரைதீவை சேர்ந்த பூர்ணிமா என அழைக்கப்படும் செந்தளிர் என்ற இளம் பெண்ணிடம் பணம் பெற்றுக்கொண்டு அவளை படுக்கைக்கும் அழைத்ததாக சமூ… Read More
*மு.காவின் யாப்பு மாற்றம் செல்லுமா?* எந்த விடயமாக இருந்தாலும் ஒரு கட்சியினால்,அமைப்பினால் அதன் யாப்பிற்கு அமைவாகவே செயற்பட முடியும்,செயற்பட வேண்டும்.கடந்த பேராளார் மாநாட்டிலும் யாப்பு மாற்றம் உட்பட பல விடயங்கள் இடம்பெற்றிருந… Read More
கிண்ணியாவில் அமைச்சர் றிஷாதின் ஆளுமை (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) அமைச்சர் றிஷாத் வடக்கு மக்களின் மீள் குடியேற்ற விடயத்தில் கரிசனை கொண்டு அம் மக்களை மீள் குடியேற்றம் செய்து வருகிறார்.அம் மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி ச… Read More
0 comments:
Post a Comment