நிரந்தர பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தற்காலிகமானார்
எல்.எம் இர்பான் பொத்துவில் பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக கடந்த ஒரு வருடமாக கடமையாற்றியிருந்தார்.இங்கு கடமையாற்றிக்கொண்டு அவர் இரண்டு நாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தற்காலிக (acting) செயலாளராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.தற்போது அவர் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இறக்காமம் பிரதேச சபையின் நிரந்தர செயலாளராகவும் பொத்துவில் பிரதேச சபையின் இரண்டு நாள் தற்காலிக (acting) செயலாளராகவும் இடமாற்றப்பட்டுள்ளார்.
தற்போது பொத்துவிலுக்கு எந்தவிதமான அரசியல் அதிகாரங்களும் இல்லை.பொத்துவிலில் உள்ள ஒரே ஒரு சேவை வழங்கும் நிறுவனமாக பிரதேச சபையையே குறிப்பிடலாம்.அந்த பிரதேச சபையின் செயலாளரை தற்காலிகமாக்கியுள்ளமை அந்த மக்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடாகும்.இறக்காமம் பிரதேச சபை,பொத்துவில் பிரதேச சபை ஆகிய இரு பிரதேச சபைகளையும் ஒப்பிடும் போது இறக்காமத்தை விட பொத்துவில் மும்மடங்கால் அதிகரித்த சனத்தொகை கொண்ட பிரதேச சபை என்பதையும் கவனத்திற்கொள்க.
இது தொடர்பில் பொத்துவில் முக்கியஸ்தர்கள் பலரது கவனத்திற்கு கொண்டு சென்ற போது எந்த வித பலனும் கிட்டவில்லை என்பதை அறிய முடிகிறது.தற்போது பொத்துவில் மக்கள் காலா காலமாக ஆதரித்து வரும் மு.காவை சேர்ந்தவரே முதலமைச்சராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.பொத்துவில்,இறக்காமம் ஆகியவற்றிற்கு தனித் தனி பிரதேச செயலாளரை நியமித்தால் என்ன? அது என்ன ஐ.நா சபை சென்று சாதிக்கும் விடயமா?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
2017.03.08
.

Wednesday, March 8, 2017
Home »
srilankan news
»
Related Posts:
வை.எல்.எஸ் ஹமீத் மின்னல் நிகழ்ச்சியால் சாதித்ததென்ன? (அபு றஷாத்) நேற்று 15-01-2016ம் திகதி ஞாயிற்றுக் கிழமை சக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற மின்னல் நிகழ்சியில் வை.எல்.எஸ் ஹமீத் கலந்து கொண்டிருந்தார்.இந் நிகழ்வு… Read More
Police fire tear gas at JO protest Police fired teargas and water cannons to disperse a group of Joint opposition protestors who attempted to move towards Parliament from the Polduwa Junction. … Read More
கல்முனை சாஹிறாக் கல்லூரியின் க.பொ.தா.உயர்தர மாணவர்களின் வரலாற்றுச் சாதனைக்காக......, கல்லூரியின் அதிபர், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், பழய மாணவ சங்க கொழும்புக் கிளை தலைவர்/உறுப்பினர்கள், கல்முனை தாய் சங்க செயலளார்/ உறுப்பினர்க… Read More
பிரதி அமைச்சர் ஹரீஸின் மாலைதீவு பயணத்தையும் கொச்சைப்படுத்திய ஹக்கீம் (இப்றாஹிம் மன்சூர்) அண்மைக் காலமாக அமைச்சர் ஹக்கீம் பிரதி அமைச்சர் ஹரீஸை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்.அண்மையில் காணாமல் போ… Read More
அமைச்சர் றிஷாத் மாத்திரம் அமைதியாக இருந்திருந்தால் மீள் குடியேறிய மக்கள் தலையில் மிளகாய் அரைத்திருப்பார்கள் (இப்றாஹீம் மன்சூர்) வில்பத்து பிரச்சினை அவ்வப்போது எழுவது சாதாரணமாக இருந்தாலும் இம் முறை அதன் முடிவு ஓரளவு முஸ்லிம்… Read More
0 comments:
Post a Comment