Pages

.

.
Showing posts with label cnema news. Show all posts
Showing posts with label cnema news. Show all posts

Wednesday, December 21, 2016

திரிஷாவுடன் மீண்டும் காதல்



திரிஷா 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். கொடி படத்தில் தனுசை குத்தி கொலை செய்யும் வில்லி வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மோகினி என்ற திகில் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக 2 வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். கடந்த வருடம் திரிஷாவுக்கு பட அதிபருடன் திருமணம் நிச்சயமாகி திடீரென்று ரத்தானது.
இந்த நிலையில் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் பேசப்படுகிறது. வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் இருவரும் ஜோடியாகவே சென்று வந்தார்கள்.
இந்த காதல் கிசுகிசுக்களுக்கு இதுவரை பதில் சொல்லாமல் இருந்த ராணா இப்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“திரிஷாவையும் என்னையும் இணைத்து செய்திகள் வருகின்றன. நாங்கள் காதலிப்பதாக பேசுகிறார்கள். நான் திரிஷாவை காதலிக்கவில்லை. வேறு யாருடனும் எனக்கு காதல் இல்லை. நான் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே தீவிர கவனமாக இருக்கிறேன். வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை.
தற்போதைய சூழ்நிலையில் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் மற்றவர்கள் போல் இல்லை. எனது வாழ்க்கை முறை அசாதாரணமானது. நான் இந்தி படங்களில் நடிக்கும்போது 6 மாதங்கள் மும்பையிலேயே தங்கி இருக்க வேண்டி வருகிறது. அப்போதெல்லாம் பல மாதங்கள் ஐதராபாத்தில் இருக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது.
அடுத்த வருடம் டி.வி. நிகழ்ச்சிக்காக 3 மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டி இருக்கிறது. நான் திருமணம் செய்து கொண்டால் இப்படி பல மாதங்கள் வெளியூர்களில் தங்கி இருக்க முடியாது. எனக்கு மனைவியாக வரும் பெண் முதலில் இப்படிப்பட்ட எனது வாழ்க்கை முறைகளை அனுசரித்து செல்ல தயாராக இருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் எனக்கு திருமணம் இல்லை. எப்போதுமே திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பேன் என்று சொல்லவில்லை. ஒரு நிலையான இடத்துக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்வேன்.” இவ்வாறு ராணா கூறினார்.

Sunday, November 27, 2016

அண்ணனைத் தொடர்ந்து தம்பிக்கும் ஜோடி! - வயசும் ஆகிவிட்டது (நயன்தாரா வெறியர்கள்... ஸாரி, அன்பர்கள் மன்னிக்க)


தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்து சூர்யாவின் தம்பி கார்த்திக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக செய்தி வருகிறது.
இப்போது தமிழின் நம்பர் ஒன் நாயகியாக நயன்தாராவைச் சொன்னாலும் அவர் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதை விட ஸோலோ ஹீரோயினாகவும், இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறார்.
வயசும் ஆகிவிட்டது (நயன்தாரா வெறியர்கள்... ஸாரி, அன்பர்கள் மன்னிக்க)
எனவே கீர்த்தி சுரேஷுக்குதான் பெரிய ஹீரோக்களுடனான வாய்ப்புகள் வருகின்றன.
இப்போது விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷை கார்த்திக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் கேட்டிருக்கிறார்களாம்.
அது சதுரங்க வேட்டை வினோத் இயக்கும் படமாக இருக்கலாம்.

Tuesday, November 22, 2016

hai