மு.காவில் தலைமைத்துவ மாற்றம் வேண்டும்
எதிர்வரும் பேராளர் மாநாட்டில் மு.காவின் தலைமைத்துவத்தில் மாற்றம் வர வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.இதற்கு பலவாறான நியாயங்கள் (அமைச்சர் ஹக்கீம் காலத்து மு.கா தலைமைத்துவம் பற்றி பல முறை பலராலும் கதைக்கப்பட்டுள்ளதால் அது பற்றி இன்னும் கதைப்பது அவசியமற்றது என கருதி அது பற்றி எழுதுவதை தவிர்ந்து கொள்கிறேன்) முன் வைக்கப்படுகின்றன.
அவைகள் பிழைகள் தான் என்பதை ஏற்றுக்கொள்ளும் மு.காவினர் அதற்கு தலைவர் காரணமல்ல பஷீர் தான் காரணம் (இன்று நீர் வளங்கள் அதிகார சபையின் ஊடகப்பிரிவில் பணியாற்றும் சகோதரர் ஒருவர் நவமணியில் எழுதிய கட்டுரையிலும் இந்த நியாயத்தை பார்க்க முடிந்தது) என்ற நியாயத்தை எடுத்து போடுகின்றனர்.அப்படியானால் இவ்வளவு நாளும் ஒரு டம்மித் தலைமையாகத் தான் அமைச்சர் ஹக்கீம் இருந்தார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு தனிப்பட்ட நபரால் ஹக்கீமை தான் நினைத்த திசைக்கு மாற்ற முடியுமாக இருந்தால் நிச்சயமாக அந்த தலைமைத்துவத்திற்கு அமைச்சர் ஹக்கீம் தகுதியற்றவர்.ஒரு கட்சியின் தலைவர் காலத்தில் இடம்பெற்ற பிழைகளை அமைச்சர் ஹக்கீமே ஏற்க வேண்டும்.
இப்படிக்கு
அபு ரஷாத் (அக்கரைப்பற்று)
.

Friday, February 10, 2017
Home »
srilankan news
»
Related Posts:
அமைச்சர் ஹக்கீம் அல்லாஹ்வை முன்னிறுத்தி ஏமாற்றியது கண்டிக்கத்தக்கது தற்போது நான் அ.இ.ம.காவின் ஆதரவாளில் ஒருவன் தான்.இதற்கு முன்பு மு.காவுடனே எனது அரசியல் பயணத்தை செய்திருந்தேன்.அமைச்சர் ஹக்கீம் மீது கொண்ட அதிருப்தியினாலேயே அ… Read More
தான் கோடிக்கு விலை போனவனல்ல,யாரால் மறுக்க முடியும்? கடந்த அதிர்வு நிகழ்ச்சியில் மு.காவின் தவிசாளர் பஷீர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு கோடி வழங்கப்பட்டதாக பகிரங்கமாகவே கூறியிருந்தார்.மு… Read More
ஜவாத் மாகாணசபை உறுப்பினர் அன்சில் அட்டாளைச்சேனை தவிசாளர் தாஹிர் நிந்தவூர் தவிசாளர் =========================== கொழும்பு இலங்கை 12.02.2017 அன்புள்ள நண்பர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லீம் சமுகத்தின் அரசியல் அடையாளத்தை… Read More
மு.கா புதிய நிர்வாகிகள் விபரம் ============================== 2017ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை (11) இரவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லி… Read More
வன்னிக்கு தேசியப்பட்டியலா? கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிவித்தது தொடக்கம் தேசியப்பட்டியலை அவருக்கு தருகிறேன் இவருக்கு தருகிறேன் என அமைச்சர் ஹக்கீம் கூறியே வருகிறார்.வன்னியில் நடாந்த கூட்டத்தில் மீண்டும் தேசியப்பட்டியல் குற… Read More
0 comments:
Post a Comment