Pages

.

.

Sunday, January 8, 2017

முதல் இடத்தை பிடித்த பிரதி அமைச்சர் ஹரீசின் ஊடக விளம்பரம்
...................................................
(நியாஸ் கலந்தர்)

அண்மையில் காணமல் போன மீனவர்கள் சம்பந்தமாக பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு கல்முனை மீனவர் சங்கம் கண்டனத்தை தெரிவிக்கின்றது என ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.கல்முனை ஆழ்கடல் மீனவ சங்கத் தலைவர் நஸீர் இதுபற்றி குறிப்பிடுகையில்,
"பிரதி அமைச்சர் அமீர் அலியை அகில இலங்கை மக்கள் காங்ரசின் கல்முனை அமைப்பாளர் ஜிப்ரி அவர்களுடன் கடந்த 2017.01.05 ம் திகதி பிரதி அமைச்சரின் காரியாலத்திலே சந்தித்திருந்தோம்.காணாமல் போன 06 மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகளை பற்றி தெரியப்படுத்தினோம்.அதன் பின்னர் பிரதி அமைச்சர் அமீர் அலி படகு எந்த பகுதியை நோக்கி சென்றிருக்கும் என எமது அனுமான பதிலை கேட்டறிந்தார். எமது கடற் தொழில் அனுபவம் ஆழ் கடல் காற்று திசைகளை கருத்திற் கொண்டு மாலைதீவை நோக்கி சென்றிருக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறினோம்.பிரதி அமைச்சர் அமீர் அலி எமது அனுமானத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் மாலைதீவு தூதுவராலயத்தோடு தொடர்பினை ஏற்படுத்தி எமது பிரச்சினை சம்பந்தமாக கேட்ட போது தூதுவராலயத்தில் அழைப்பினை எடுத்திருந்தவர் ஆறு மீனவர்களும் இரண்டு படகுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பாதாக உறுதிப்படுத்தினார்.இந்த சம்பவங்கள் அனைத்தும் நாங்கள் பிரதி அமைச்சருடன் பேசிக் கொண்டிருக்கும் போது நடைபெற்றது.நாங்கள் அவர் செய்த நன்றியை மறந்து கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு மனத்தன்மை வாய்ந்தவர்களல்ல எனவே பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் எமது மீனவ சங்கத்திற்கும் இருக்கும் நல்லுறறைவை கெடுக்க வேண்டாம் என குறிப்பிட்ட தரப்பினரையும் ஊடகங்களையும் பணிவண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

என மீனவ சங்கத் தலைவர் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இவை இவ்வாறு இருக்க ஊடகங்களில் வெளியான மீனவர் சங்கத்தின் கண்டன செய்தியை விரிவாக பார்த்தால்.

1.எந்த மீனவர் சங்கம் இந்த கண்டனத்தை தெரிவித்தது என்பதை குறித்த செய்தியை எழுதிய பிரதி அமைச்சரின் அல்லக்கை குறிப்பிடவில்லை.கண்டனத்தை தெரிவிக்கும் போது எந்த மீனவர் சங்கம் என பெயர் குறிப்பிட்டு வெளியிடப்பட்டிருத்தல் வேண்டும்.

2.பிரதி அமைச்சர் ஹரீஸ் 2 மீனவர்கள் உயிருடன் இருப்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தால் மீனவ சங்கத்தினர் பிரதி அமைச்சர் அமீர் அலியை சந்தித்திருக்க வேண்டிய அவசியமும் முறையீடு செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது.

3.மாலைதீவு வரை ஹரீஸ் சென்றிருக்கிறார் என்றால் அது பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு போட்டியாக செயற்படவேண்டும் என்பதற்கான முடிவாகும்.மீனவ சங்கத்தினர் முதலில் பிரதி அமைச்சர் ஹரீசை தொடர்பு கொண்டிருந்த போதும் அந்த விடயத்தில் அவர் அசமந்த போக்கை கடைப்பிடித்ததுமே மீனவ சங்கத்தினரை கொழும்பு வரை செல்ல வைத்தது.

4.மீனவ சங்கத்தினர் காணமற் போன படகையும்,மீனவர்களையும் தேடுவதற்கான எரிபொருள் உதவியை செய்து தருமாறு கோரிக்கை விடுத்தும் அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கவில்லை.அவர்கள் நாடிய சமயம் அவர்களுக்கான உதவிகள் செய்யப்பட்டிருந்தால் மீனவர்கள் சம்பவம் இடம்பெற்று ஓரிரு நாட்களில் கண்டுபிடிக்கப் பட்டிருப்பார்கள்.

5.மீனவ சங்கத்தினர் பிரதி அமைச்சர் அமீர் அலியை சந்தித்த செய்தி கிடைத்ததும் அவர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவே அவரை அவமதிக்கின்ற செய்தியை ஊடகங்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் வெளியிட்டார்.

6..G.p.s தொழிநுட்பத்தை பெற்று தருமாறு பல வருடங்களாக பிரதி அமைச்சர் ஹரீஸிடம் மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்தும் இன்று வரை பசப்பு வார்த்தைகள் கூறி ஏமாற்றி இருக்கிறார்.

7.மீனவ சங்கத்தினர் 2017.01.05 ம் திகதி கடற் தொழில் நீரியல் அமைச்சிடம் சென்று காணமற் போனோரை தேடுவதற்காக எரிவாயு உதவி செய்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும் கடற் தொழில் அமைச்சு அதை ஏற்க மறுத்ததும் அவர்கள் மனம் உடைந்து போய் பிரதி அமைச்சருக்கு ஹரீஸிற்கு தகவல் சொன்னதும் மீனவ சங்கத்தினருக்கு அவர் கடும் தொனியில் பதிலளித்திருந்தமை.

8.மீனவர்களையும் படகையும் நாட்டிற்குகொண்டு வர போன பிரதியமைச்சர் ஹரீஸ் முதலாவது செய்த காரியம் இரண்டு மீனவர்களுடனும் புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு செய்தியாக்கியமை.

9.மீனவ சங்கத்துடன் பரஸ்பர உறவை பேணி இருந்தால் அவர்கள் பிரதியமைச்சர் ஹரீசை விட்டு விட்டு பிரதி அமைச்சர் அமீர் அலியிடம் சென்றிருக்கமாட்டார்கள்.
10.அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளமையே மீனவ சங்கத்தினர் பிரதி அமைச்சர் அமீர் அலியை நாட காரணமாக அமைந்தது.

மேற் குறிப்பிட்ட விடயங்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் சரியாக செய்ய முடியமல் இன்று ஊடகங்களில் பிரதி அமைச்சர் அமீர் அலியை விமர்சிப்பதன் மூலம் இவற்றை மறைத்து விடலாம் என தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்.மற்றவனை குறை காணுவதன் மூலம் தன் குறையை மறைக்கலாம் என்ற தந்திரோபாயத்தை கையாண்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment