Pages

.

.

Monday, January 16, 2017

வை.எல்.எஸ் ஹமீத் மின்னல் நிகழ்ச்சியால் சாதித்ததென்ன?

(அபு றஷாத்)

நேற்று 15-01-2016ம் திகதி ஞாயிற்றுக் கிழமை சக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற  மின்னல்  நிகழ்சியில் வை.எல்.எஸ் ஹமீத் கலந்து கொண்டிருந்தார்.இந் நிகழ்வு அமைச்சர் றிஷாதை இகழும் முகமாக ரங்காவினால் ஏற்பாடு செய்யப்பட்டதென பலரும் எதிர் பார்த்தது போன்றே இருந்தது.

குறித்த நிகழ்ச்சியில் ரங்கா வை.எல்.எஸ் ஹமீதை கிளறி கிளறி அமைச்சர் றிஷாதை பழி தீர்க்க முனைந்தார்.ரங்கா இழுத்த இழுப்பின் பின்னால் சிறு பிள்ளை போன்று சென்ற வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதை வந்த படியெல்லாம் இகழ்ந்தார்.வை.எல்.எஸ் ஹமீத் அவர்களே! நீங்கள் மின்னலுக்கு சென்றது அமைச்சர் றிஷாதை இகழத்தானா? இதைத் தான் நீங்கள் சமூகம் சார்ந்த பேச்சாக கருதுகிறீர்களா? அதில் நீங்கள் கண்ட பயன் என்ன? இனியாவது சிந்தித்து கொள்ளுங்கள்.

இலங்கை முஸ்லிம்கள் பற்றிப் பேச எத்தனையோ விடயங்கள் உள்ளன.அத்தனையையும் விட்டு விட்டு அமைச்சர் றிஷாதை மாத்திரமே இகழ்ந்தீர்கள்.யாரோ குழு குழு கார்களில் சென்ற போது வராத அக்கறை இப்போது பொடி நடையாக செல்லும் போது வந்ததென்ன என உங்களிடம் கேட்டதற்கு அமைச்சர் றிஷாதையும் அவரது சகோதரரையும் மிகவும் கீழ்த் தரமாக இகழ்ந்தீர்கள்.இது தான் நீங்கள் கற்றுக்கொண்ட நாகரீகமா? அவரது சகோதரர் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும் என ரங்கா கேட்ட போது “இப்படி என்னிடம் வந்து கூறுகிறார்கள்” என அது தனக்கு ஊர்ஜிதம் அற்ற வகையில்  நீங்கள் கூறியிருந்தீர்கள்.இது உங்களுக்கு தேவை தானா?

யார் கேள்வி கேட்கின்றாரோ அவருக்கு பதில் அளிப்பது தானே அறிவுடைமை.அவரை விட்டு விட்டு அமைச்சர் றிஷாதை நீங்கள் இகழ்ந்ததன் காரணம் என்ன? அதற்காவது நீங்கள் தெளிவாக பதில் அளித்தீர்களா?.அவர் கேட்ட வினா (குழு குழு கார்களில் சென்ற போது வராத அக்கறை இப்போது பொடி நடையாக செல்லும் போது வந்ததென்ன) “நீங்கள் அ.இ.ம.காவினூடன சுக போக பதவிகளை பதவிகளை வகித்த போது பேசாது இப்போது அதனை பிடுங்கி எடுத்த பின் சமூகம் பற்றி பேசுவதேன்?” என்பதாகும்.இதற்கு நான் அமைச்சர் றிஷாதை விட பணக்காரனாக இருந்தவன் என்பது எப்படி பதிலாகும்.நான் இப்போது மாத்திரம் பேசவில்லை.அப்போதும் பேசியுள்ளேன் என அடித்து கூறியிருக்க வேண்டும்.

மேலும்,குழு குழு கார்கள் அமைச்சர் றிஷாத் மூலம் கிடைத்ததாக யாருமே கூறவில்லை.அவர் கூறிய அரசின் சுக போக பதவிகள் (shopping list)மூலம் கிடைத்தவை என்பதே குறித்த சகோதரரது வினா.அதை விடுத்து ஏதோ பதில் அளித்திருந்தீர்கள்.இப்படி லொஜிக் இல்லாமல் கதைக்கும் இவர் ஒரு வழக்கறிஞ்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனியாவது  நீங்கள் சற்று நிதானித்து உங்கள் பேச்சை அமைத்துக்கொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment