Pages

.

.

Friday, December 30, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் கூற்றானது அவரை ஜனாதிபதியாக்க உதவிய முஸ்லீம் சமூகத்திற்கு  செய்யும் துரோகமாக மாறியுள்ளது.......

இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போது வில்பத்து சரணாலய பிரதேசத்தை மேலும் விரிவாக்கி,வனவிலங்குகள் வலயமாக அறிவித்து வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இவ் அறிவிப்பானது மிகவும் ஆபத்தானது என்பதை முஸ்லிம் சமூகம் அறியாமல் உள்ளார்கள்.

மரிச்சிக்கட்டி,கரடிக்குழி,காயாக்குழி,பாலக்குழி,முசலி,கொண்டச்சி மற்றும் வேப்பங் குளம் ஆகிய பிரதேசங்கள் வில்பத்து வனத்திற்கு அப்பால் இருந்த  போதும் 2012ம் ஆண்டளவில் இரவோடு இரவாக வில்பத்து வன பரிபாலன சபையின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.இன்றும் குறித்த பிரதேசங்களில் அந்த மக்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று தடயங்கள் பலவுள்ளன. இந்த தடயங்கள் மூலம் மக்கள் வாழ்ந்தது 100 க்கு 60 வீதம் உறுதியாகியது.

இதற்கெல்லாம் இவ்வாட்சியில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களித்தனர்.தற்போது இப் பிரச்சினை முன்னர் இருந்ததை விடவும் சிக்கலான நிலைமைக்கு  சென்றுகொண்டிருக்கின்றது.கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை முஸ்லிம்கள் இஞ்சியை கொடுத்து மிளகாய் வாங்கியதை  உணர்ந்து கொள்ள பல நாட்கள் எடுக்கவில்லை.

இந் நிலையில் ஜனாதிபதி மைத்திரி இவ் அறிவிப்பை விடுத்திருப்பதானது இனவாதிகளின் பிடிக்குள் அவர் அகப்பட்டிருப்பதை தெளிவாக அறிந்து கொள்ளச் செய்கிறது.அவர் இனவாதிகளுடன் உரையாடிய சில நாட்களில் இந்த அறிவிப்பை விடுத்திருப்பதானது இனவாதிகளின் கூற்றை ஏற்று செவிசாய்த்ததானது அவர்களுக்கு  வாழாட்டுவதற்கு தயார் என்பதை விளக்குகிறது.  இந் நிலை தொடர்வது மிகவும் ஆபத்தானது. இவ்விடயத்தை சிங்கள பத்திரிகைகள் தூக்கிப் பிடித்த இன்றைய தினமே ஜனாதிபதியும் தூக்கிப் பிடித்துள்ளமை பலமான நிகழ்ச்சி நிரல் ஒன்றில் கீழ் இவைகள் பேசப்படுவதை அறிந்து கொள்ளச் செய்கிறது. இதற்கு முன்பு வில்பத்துவில் காடு அழிக்கப்பட்டுள்ளமை உண்மை தான் என ஜனாதிபதி கூறி இனவாதிகளின் வாயில் சக்கரை ஊட்டி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளதை காட்டுகிறது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு கீடைக்க வேண்டும் அத்தோடு முஸ்லிம்கள் வாழ்ந்த இடங்களுக்கு அவர்கள் மீள் குடியேற வேண்டும் என்பதற்காகவும் முஸ்லிம் சமூகம் இனவாதிகளால் துன்புறுத்தப்பட்டும்  மதஸ்தளங்கள் தாக்கப்பட்டும் மத சம்பிரதாயங்களை கேழிக்கைக்கு உட்படுத்தியதையும் தாங்காத முஸ்லிம் சமூகம் நல்லாட்சி எனும் அரசாங்கத்தை உறுவாக்கி முன்னாள் ஜனாதிபதியை தோற்கடித்து நல்லாட்சியின் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களை உறுவாக்கியதன் நோக்கத்தை அறிந்தும்  ஜனாதிபதி தற்போது இனவாதிகளின் கருத்துக்கு சோரம்போனமையானது மிகவேதனையான விடயமாகும்,,,, எனவே உடனடியாக இப்பிரச்சினைகளுக்கும் முஸ்லீம் சமூகத்துக்கும்  உரிய தீர்வை வழங்குமாறும் அவ்வாறு இல்லாமல் இனவாதிகளின் ஆலோசனைப்படி நடந்தால் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் வரும் என்பது இன்ஷா அல்லாஹ் உருதியாகிவிடும்.... எனவே அனைத்து முஸ்லிம்களும் இவ்விடயத்தில் விளகி நிட்காமல் ஒருமித்து நமது சமூகத்துக்காய் போராடுவோம் வாரீர்.....

அஹமட் சாஜித்
மாவடிப்பள்ளி
இனவாதிகளின் கூற்று மைத்திரியின் ஆலோசனையானது

இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போது வில்பத்து சரணாலய பிரதேசத்தை மேலும் விரிவாக்கி,வனவிலங்குகள் வலயமாக அறிவித்து வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.இது மிகவும் ஆபத்தான அறிவிப்பு என்பதை எமது முஸ்லிம்கள் அறியாமல் உள்ளமை தான் மிகவும் கவலையான விடயம்.

மரிச்சிக்கட்டி,கரடிக்குழி,காயாக்குழி,பாலக்குழி,முசலி,கொண்டச்சி மற்றும் வேப்பங் குளம் ஆகிய பிரதேசங்கள் வில்பத்து வனத்திற்கு அப்பால் இருந்த  போதும் 2012ம் ஆண்டளவில் இரவோடு இரவாக வில்பத்து வன பரிபாலன சபையின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.இன்றும் குறித்த பிரதேசங்களில் அந்த மக்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று தடயங்கள் பலவுள்ளன.

இதற்கெல்லாம் இவ்வாட்சியில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களித்தனர்.தற்போது இப் பிரச்சினை முன்னர் இருந்ததை விடவும் சிக்கலான நிலைமைக்கு  சென்றுகொண்டிருக்கின்றது.கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை முஸ்லிம்கள் இஞ்சியை கொடுத்து மிளகாய் வாங்கியதை  உணர்ந்து கொள்ள பல நாட்கள் எடுக்கவில்லை.

இலங்கையில் யுத்தம் முடிந்த பிறகு வர்த்தமானி மூலம் வன பரிபாலன சபையின் கீழ் உள் வாங்கப்பட்ட பிரதேச மக்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு மீள் குடியேறச் சென்ற போது அவர்கள் அங்கு குடியேறுவதில் சட்ட ரீதியாக சவாலுக்குட்பட்டனர்.அப்போது மஹிந்த ராஜ பக்ஸ காலத்தில் அம் மக்களுக்கு காணிக் கச்சேரிகள் வைக்கப்பட்டு சட்ட ரீதியாக அரை ஏக்கர் காணி குடியிருப்பிற்கும் ஒரு ஏக்கர் காணி விவசாயத்திற்கும் வழங்கப்பட்டது.இருப்பினும்,இது வரையும் விவசாய நிலங்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.ஜனாதியின் இவ்வாலோசனை செயற்படுத்தப்படுமாக இருந்தால் குறித்த மீள் குடியேறிய மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறி மீண்டும் அகதி வாழ்க்கைக்கு திரும்பும் நிலை ஏற்படும்.மீண்டும் அகதி வாழ்விற்கு திரும்பும் நிலை எமது சமூகத்திற்கு ஒரு போதும் வந்து விடக் கூடாது.

இது தொடர்பில் பல குழுக்களிடமிருந்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.இந் நிலையில் ஜனாதிபதி மைத்திரி இவ் அறிவிப்பை விடுத்திருப்பதானது இனவாதிகளின் பிடிக்குள் அவர் அகப்பட்டிருப்பதை தெளிவாக அறிந்து கொள்ளச் செய்கிறது.அவர் இனவாதிகளுடன் உரையாடிய சில நாட்களில் இந்த அறிவிப்பை விடுத்திருப்பதானது இனவாதிகளின் மகுடி வாசிப்பிற்கு இவர் படம் எடுத்தாடுவதை மேலும் துல்லியமாக்குகின்றது.இந் நிலை தொடர்வது மிகவும் ஆபத்தானது.இவ்விடயத்தை சிங்கள பத்திரிகைகள் தூக்கிப் பிடித்த இன்றைய தினமே ஜனாதிபதியும் தூக்கிப் பிடித்துள்ளமை பலமான நிகழ்ச்சி நிரல் ஒன்றில் கீழ் இவைகள் பேசப்படுவதை அறிந்து கொள்ளச் செய்கிறது.இதற்கு முன்பு வில்பத்துவில் காடு அழிக்கப்பட்டுள்ளமை உண்மை தான் என ஜனாதிபதி கூறி இனவாதிகளுக்கு தீனி போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது சிங்கள ஊடகங்கள் விமானத்திலிருந்து  புகைப்படமெடுத்து முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகளை காடுகள் போன்று காட்ட முனைகின்றனர்.சாதாரணமாக உயரமான கட்டடங்களில் இருந்து மிகவும் உயரமான கட்டடங்கள் அற்ற பிரதேசத்தை அவதானித்தால் கூட கட்டடங்கள் மறைக்கப்பட்டு மரங்கள் மாத்திரம் காணக்கூடியதாக இருக்கும்.26வருடங்களுக்கும் மேலாக எதுவித பாவனையுமற்று கிடக்கும் இடத்தை விமானத்திலிருந்து அவதானித்தால் அது காடு போன்று காட்சியளிப்பதொன்றும் புதினமல்ல.

எனவே,ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன உடனடியாக தனது இவ் ஆலோசனையை மீளப் பெற வேண்டும்.அல்லாது போனால் எவ்வாறு மஹிந்த ராஜ பக்ஸ வீடு சென்றாரோ அந்த நிலை மைத்திரிக்கும் ஏற்பட மிக நீண்ட காலமாகாது.இதில் இலங்கை முஸ்லிம்கள் அரசியல் இலாபம் தேடுவதை விடுத்து சமூக சிந்தனையோடும் உணர்வோடும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள முயற்சிப்பதே பொருத்தமானதாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Tuesday, December 27, 2016

விற்றுப் பிழைப்பவர்கள்

 முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், முன்னொரு காலத்தில் கட்சிக்குள் உணர்வுபூர்வமாக நேசிக்கப்பட்டார். இப்போதும், போராளிகள் என்று கட்சிக்குள் அழைக்கப்படும் அடிமட்ட ஆதரவாளர்கள், அஷ்ரப்பை நெஞ்சுக்குள் வைத்து நேசிக்கின்றார்கள்.

ஆனால், முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், அவரைச் சுற்றியுள்ள கூட்டத்துக்கும், அஷ்ரப் என்கிற பெயர் – ஒரு வியாபாரப் பண்டமாகத்தான் உள்ளது. அஷ்ரப் என்கிற பெயரை விற்று எப்படியெல்லாம் பிழைக்கவும் – உழைக்கவும் முடியுமோ, அவை அனைத்தையும் மு.கா. தலைவரும் அவரின் கூட்டத்தாரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மு.காங்கிரசின் தலைவர் அஷ்ரப் உயிரோடு இருந்த போது அவரின் ஏராளமான நிகழ்வுகள் வீடியோக்களாக பதியப்பட்டிருந்தன. அவை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸமாமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அவற்றில் ஏராளமானவை தற்போதை தலைவர் ஹக்கீமுக்கு நெருக்கமானவர்களால் அழிக்கப்பட்டு விட்டன என்பது கசப்பான உண்மைகளாகும். அஷ்ரப்பின் தடயங்கள் இருக்கும் வரை, ஹக்கீம் என்கிற நபர் கட்சிக்குள் இரண்டாம் தலைமையாகவே பார்க்கப் படுகிறார் என்கிற மனக்கிலேசத்தினால்தான், அஷ்ரப் பற்றிய மிக முக்கிய தடயங்களெல்லாம் ஹக்கீமுடைய ஆதரவோடு அழிக்கப்பட்டன. இவை – உள் விவகாரங்களாகும்.

ஆனால், வெளியில் அஷ்ரப் என்கிற தலைவனின் பெயரைக் கேட்டாலே கவலையுடன் கண்ணீர் சிந்தும் ஒருவராகத்தான் ஹக்கீம் தன்னைக் காட்டிக் கொள்கின்றார். அப்படிக் காட்டிக்கொண்டால்தான் கட்சிப் போராளிகளின் அன்புக்குப் பாத்திரமாகலாம் என்பது ஹக்கீமுக்குத் தெரியும்.

அதனால், இடைக்கிடையே அஷ்ரப்பின் பெயரைத் தூக்கிப் பிடிப்பது போல் ஹக்கீம் சில நாடகங்களை அரங்கேற்றி வருகின்றமையினைக் காணக்கிடைக்கிறது. அவ்வாறான நாடகங்களில் ஒன்றுதான் ‘நான் எனும் நீ’ என்கிற அஷ்ரப்பின் கவிதை நூல் – மீள் வெளியீடாகும். அண்மையில் மருதமுனையில் முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய ‘இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா’ எனும் நிகழ்வில் வைத்து, ‘நான் எனும் நீ’ என்கிற அஷ்ரப்பின் கவிதை நூல் – மீள் வெளியீடு செய்யப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனையில் நடத்திய ‘இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா’ என்பதே – ஒரு கோமாளிக் கூத்தாகும். ‘இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு’ எனும் தலைப்பில் கொழும்பில் ஒரு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் இலங்கை, இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 2002ஆம் ஆண்டு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய தலைமையில் ‘இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு’ கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்தது. இம்முறை அமைச்சர் றிசாட் பதியுத்தீனின் தலைமையில் நடைபெறவுள்ளது.

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு வந்த கடுப்பு இதுதான். இம்முறை ‘இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு’ அமைச்சர் றிசாட்டின் தலைமையில் நடைபெறவுள்ளதை, ஹக்கீமால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே, அந்த விழாவுக்கு முன்னதாக, அதே பெயரில் – தான் ஒரு விழா நடத்த வேண்டும் என்று நினைத்து, மருதமுனையில் நடத்தியதுதான் ‘இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா’ என்கிற கோமாளிக் கூத்தாகும். ஹக்கீமுடைய தலைமையில் – முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய இந்த நிகழ்வு, இரண்டு நாட்கள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் சில அரங்குகள் இடம்பெற்றன. ஒவ்வொரு அரங்கிலும் ஆகவும் மிஞ்சிப் போனால், 30 அல்லது 40 பேர் வரையில்தான் பார்வையாளராக வந்திருந்தனர். அவர்களில் முக்கால்வாசிப்பேர் ஹக்கீமும், அம்பாறை மாவட்ட மு.கா. பிரதிநிதிகளும்தான். நம்மூரில் பெண்கள் நடத்தும் சங்கத்துக் கூட்டம், இதை விடவும் அதிக சனத்துடன் நடக்கும் என்றார் – அந்த நிகழ்வுக்கு சென்று வந்து நண்பர் ஒருவர்.

அது ஒருபக்கம் கிடக்கட்டும். இன்னொரு கட்டுரையில் அந்தக் கோமாளி விழா பற்றி, விலாவாரியாக எழுதுகிறேன்.

அந்த நிகழ்வில் மீளவும் வெளியிடப்பட்ட  ‘நான் எனும் நீ’ என்கிற அஷ்ரப்பின் கவிதை நூல் பற்றித்தான் இந்தக் கட்டுரை பேசப் போகிறது.

அஷ்ரப் உயிரோடு இருக்கும் போது, 1999 ஆம் ஆண்டு  ‘நான் எனும் நீ’ என்கிற அவரின் கவிதை நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலின் காப்புரிமை அஷ்ரப்பின் பெயரில் உள்ளது. அதை அந்தப் புத்தகத்தில் காண முடியும்.

அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர் – அவருடைய கொள்கைகளையும், அவரின் கட்சியையும், அவருடைய கட்சியின் தலைமையகத்தினையும் விற்றும், கையகப்படுத்தியும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இப்போது அவரின் புலமைச் சொத்துகள் மீதும் – மு.கா.வின் தற்போதைய தலைவர் ஹக்கீமும் அவரின் கூட்டத்தாரும் கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

‘நான் எனும் நீ’ அஷ்ரப்பின் புலமைச் சொத்தாகும். ‘நான் எனும் நீ’  எனும் கவிதை நூலின் காப்புரிமை அஷ்ரப்புக்கு உரித்தானதாகும். ஆனால், அஷ்ரப் மரணித்து விட்டார். இப்போது ‘நான் எனும் நீ’ நூலின் காப்புரிமை யாருக்கு உரியது?

இந்தக் கேள்விக்கான விடையினை அறிந்து கொள்ளும் பொருட்டு, இலங்கையின் தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தினைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர்கள் தெளிவாக பதில் வழங்கினார்கள். “ஒரு நூலின் ஆசிரியர் அந்த நூலின் காப்புரிமையைக் கொண்டிருக்கும் நிலையில் மரணித்து விட்டால், அவரின் பிள்ளைகளுக்கே அதன் காப்புரிமை சேரும்” என்று, இலங்கையின் தேசிய புலமைச் சொத்து அலுவலக அதிகாரியொருவர் பதிலளித்தார். மேலும் “குறித்த நூலாசிரியரின் பரம்பரையினருக்கு 70 வருடங்கள் இந்தக் காப்புரிமை செல்லுபடியாகும்” எனவும் அவர் கூறினார். அவ்வாறாயின், அஷ்ரப்பின் ‘நான் எனும் நீ’ எனும் நூலின் காப்புரிமை, அவரின் ஏக புதல்வரான அமான் அஷ்ரப்புக்கே உரியதாகும். அமானின் அனுமதியின்றி ‘நான் எனும் நீ’ நூலை மீள் பிரசுரம் செய்வது சட்ட ரீதியாக குற்றமாகும்.

அப்படியென்றால், ‘நான் எனும் நீ’ நூலை மீள் பிரசுரம் செய்வதற்காக, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர், அமான் அஷ்ரப்பின் அனுமதியைப் பெற்றார்களாக என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, அமானைத் தொடர்பு கொண்டு பேசினோம். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அமான் அஷ்ரப்பை நாம் தொடர்பு கொண்டு, இவ்விடயம் குறித்து பேசும் வரை, தன்னுடைய தந்தையின் நூல், மறு பிரசுரம் செய்யப்பட்ட செய்தியை அவர் அறிந்திருக்கவேயில்லை.

“எனது தந்தையின் மரணத்துடன் எங்கள் குடும்பத்தை மு.காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் ஓரங்கட்டி விட்டன. ஆகக் குறைந்தது எங்கள் தந்தை தொடர்பான விடயங்களை மேற்கொள்ளும் போது கூட, அவர்கள் எங்களுடன் கலந்தாலோசிப்பதில்லை. எனது தந்தையின் ‘நான் எனும் நீ’ நூல், மீள் பிரசுரம் செய்யப்பட்டமை குறித்து, நீங்கள் கூறியே நான் அறிகிறேன். ஒரு சம்பிரதாயத்துக்காகவாவது எனது தந்தையின் புத்தகத்தை மீள் பிரசுரம் செய்வது குறித்து – அவர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்” என்றார்.

ஆக, ‘நான் எனும் நீ’ என்கிற – அஷ்ரப்பின் கவிதை நூலினை மீள் பிரசுரம் செய்வது குறித்து, அமான் அஷ்ரப்பின் முன்கூட்டிய அனுமதியினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கவில்லை என்பதை அறிந்து கொண்டோம். அப்படியென்றால், மு.காங்கிரஸ் செய்தது சட்ட ரீதியானதொரு குற்றமாகும்.

சிலவேளை, அஷ்ரப்பின் பாரியார் பேரியல் அஷ்ரப்பிடம் ‘நான் எனும் நீ’ நூலை மீள்பிரசுரம் செய்வதற்கான அனுமதியினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கலாமல்லவா? எதற்கும், பேரியல் அஷ்ரப்புடனும் ஒரு தடவை – இது குறித்து விசாரித்து விடுவோம் என நினைத்து, அவரின் தொலைபேசியை அழைத்தோம். தனது கணவரின் நூல் – மறு வெளியீடு செய்யப்பட்ட செய்தி அவருக்கும் புதிய செய்தியாகவே இருந்தது. எப்போது இது நடந்தது என்று கேட்டார். விபரம் கூறினோம். தன்னிடம் தெரிவிக்காமல் அவர்கள் அப்படிச் செய்தமை தவறு என்றார்.

இப்போது, உறுதியாயிற்று. புலமைச் சொத்துரிமைச் சட்டத்தை மீறி, அஷ்ரப்பின் ‘நான் எனும் நீ’ நூலினை மு.காங்கிரஸ் மீள் பிரசுரம் செய்திருக்கிறது. இது சட்டப்படி குற்றமாகும். இப்படியான பிழைகளை மு.கா. செய்கின்றமை – இது முதல் தடவையல்ல. இதற்கு எதிராக அமான் அஷ்ரப் நீதிமன்றம் செல்ல முடியும். அமான் அஷ்ரப் சார்பாக வேறொருவர் கூட, இந்தப் புலமைத் திருட்டுக்கு எதிராய் வழக்கொன்றினைத் தாக்கல் செய்யலாம்.

முஸ்லிம் காங்கிரஸ் மீள் பிரசுரம் செய்த, அஷ்ரப்பின் ‘நான் எனும் நீ’ என்கிற கவிதை நூல், காசுக்கு மட்டுமே விற்கப்படுகிறது. மருதமுனையில் மு.காங்கிரஸ் நடத்திய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழாவில் – பேராளர்களாகக் கலந்து கொண்டவர்களுக்கும் இந்த நூலின் இலவசப் பிரதிகள் வழங்கப்படவில்லை என்று, பல பேராளர்கள் ஆத்திரத்துடன் அந்த நிகழ்விலிருந்து திரும்பியிருந்தனர்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா என்கிற கோமாளிக் கூத்தும், அதில் அரங்கேற்றப்பட்ட அஷ்ரப்பின் ‘நான் எனும் நீ’ நூலின் மீள் வெளியீடும், மொத்தத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே லாபமாக அமைந்தது. அவர்களின் சட்டைப் பைகள் மட்டுமே நிரப்பின.

மு.கா. போராளிகளே, நீங்கள் நேசிக்கும் அஷ்ரப் என்கிற உங்கள் தலைவனை எப்படியெல்லாம் விற்றுப் பிழைக்கிறார்கள் என்பதை – நீங்கள் முழுவதுமாக அறியும் போது, பலர் நடுத் தெருவில் நிற்க நேரிடும்.

அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
மயிலின் வளர்ச்சியால்  கருகி சாகும் மரங்கள் 

மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள்  முஸ்லிம் சமுதாயத்துக்காக அம்பாறை மாவட்ட மக்களின் முழு ஆதரவுடன் பல போராட்டத்துக்கு மத்தியில் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சி அதன் குறுகிய கால வாழ்வில் முஸ்லிம் சமுதாயத்தை கௌரவப்படுத்தியது என்பதை  யாரும் மறக்க  முடியாது

 தலைவர் அஸ்ரப் அவர்கள் தனது அரசியல் வாழ்க்கையில் முஸ்லிம் சமுதாயத்தின்  நிலதொடர்பான இருப்பிட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்  ஆனால் அவரின் இலட்சியம்  நிறைவேறுவதற்கு முதல் விமான விபத்தில் உயிர் இழந்தார் (இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜஹுன் )அன்னாரின் இழப்பை சிலர்  சந்தோஷத்துடன்  வரவேற்று இன்று சொகுசா வாழ்ந்து கொண்டு அரசியல் செய்கின்றனர் என்பது மக்கள் அறிந்த உண்மை அதனால் பல உண்மைகள்  மூடி மறைக்கப்பட்டுள்ளது அந்த  சரித்திரத்தில் அஸ்ரப் அவர்களின் மரணத்தின் மர்மம் கூட மறைந்து கிடக்கிறது  என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்

அஸ்ரப் அவர்கள் மறைவுக்கு பின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பும் செய்யாத சட்டத்தரனி  றவூப் ஹக்கிம் தலைமை பதவியை ஏற்றுக் கொண்ட நாள்  முதல் முஸ்லிம் காங்கிரஸ் அஸ்ரப் அவர்களின் கொள்கையை மறந்து #ஹக்கிம் #காங்கிரஸ்  என்ற கட்சியாக மாறிவிட்டது அதனால் ஹக்கிம் நினைத்தபடி கட்சி இஸ்லாத்துக்கு மாறாக பயனிக்கிறது இதனால்  மறைந்த தலைவரின் மரணத்தின் காரணத்தை கூட அறிந்திட  விரும்பாத தலைவனின் கையில் முஸ்லிம் காங்கிரஸ் சிக்கியுள்ளது அதனால் ஹக்கிம் தலைமை பதவியில் இருக்கும் வரை அஸ்ரப் அவர்களின் மரணம் பற்றி விசாரணை செய்ய அரசை யாரும் கோர முடியாத நிலையே காணப்படுகின்றன

எனவே மறைந்த தாலைவரின் கொள்கையை நிலை நாட்டி அவரின் மரணத்தின் காரணத்தை மக்கள் அறிவது என்றால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ஹக்கிமை நீக்க வேண்டும் ஆனால் அது கொஞ்சம் கஸ்டமான காரியம் இருந்தும் அம்பாறை மக்கள் போராடினால்  வெற்றியடையலாம் அந்த  போராட்டம் மிக விரைவில் நடைபெறும் சூழ் நிலை அம்பாறை மாவட்டத்தில் நிலவுகிறது

மறைந்த தலைவரின் காலத்தில் அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் ஒற்றுமையாக அரசியல் செய்தனர் சமுதாயத்தின் நலனில் அக்கரை செலுத்தினார்கள் மக்களால் முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்மப்பட்டது ஆனால் அந்த நிலை இன்று தலை கீழாக மாறியுள்ளது

கடந்த 16 வருடமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நம்பிய சமுதாயம்  ஏமாற்றம் அடைந்து நிற்கிறது அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை குறிப்பிடலாம் இந்த மாவட்டத்தில் உள்ள  முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகளான காணி நீர்ப்பாசனம் இருப்பிடம் தொழில் வீதி  என்று இருக்கும் போது மக்களுக்கு பிரயோசனம் இல்லாத அடிக்கல் கலை விழா என்பன நடாத்தி மக்களை ஏமாற்றும் அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் செய்து வருவதால் அரசியல்வாதிகளே பிரயோசனம் அடைகின்றனர்

இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு இனவாதிகளால் பால அச்சுருத்தல் ஏற்படுகின்றன அதனால்  எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாண்மையாக வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையராக வாழும் நிலை வரலாம் அதற்கான அத்திவாரம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மானிக்கமடுவில் இடபட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்

மானிக்கமடு சிலை விடயத்துக்கு ஒரு வாரத்தால் முடிவு என்று அறிக்கை விட்ட ஹக்கிம் இன்று பல மாதமாகியும் தீர்வு பெற்றுத்தரவில்லை இதனால் அம்பாறை மக்களை அழிக்க வேண்டும் என்று இனவாளதிகளோடு மறைமுகமாக இனைந்து ஹக்கிம் செயல்படுகிறாரா?? ?என மக்கள் சந்தேகம் கொள்கின்றனர் அப்படி நினைத்தாலும் தப்பு இல்லை என்று தான் கூற வேண்டும்

இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அரசியல் என்பது முஸ்லிம் சமுதாயத்துக்கு  ஒரு சாபக்கேடாக மாறியுள்ளது என்பதை மக்கள் 16 வருடத்துக்கு பிறகு உணர்ந்துள்ளனர் அதனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய மண்ணில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மக்கள் அழிக்க தீர்மானம் எடுத்து விட்டனர் அதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அதை பலப்படுத்த மக்கள் அனிதிறண்டுள்ளனர்

அதிலும் குறிப்பாக பல சகாப்தங்களாக ஹக்கிமால் தேசியப்பட்டியல் என்ற போர்வையில் ஏமாற்றபட்டு வரும் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள்  இனியும் ஹக்கிமின் பொய் வாக்குறுதியை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என்பது உறுதியாகி விட்டது  அதனால் எதிர்வரும் காலங்களில் அட்டாளைச்சேனை பிரதேசம் மக்கள் காங்கிரஸின் மயில் சோலையாக கட்சி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை இதனால் எதிர்வரும் உள்ளுராச்சி தேர்தலில் மக்கள் காங்கிரஸின் மயில் அம்பாறை மாவட்டத்தில் அதிக பிரதேச சபைகளின் ஆட்சியை கைப்பற்றும் என்பது உறுதியாகி விட்டது இது சானக்கியத்துக்கும் நன்கு தெரியும் இதனால் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக பல பொய் குற்றச்சாட்டுக்களை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து வருகிறார் அது ஒன்றும் மக்களிடையே  எடுபடவில்லை அதனால் இப்போது வீட்டிலிருந்து வடிவேலின் ஜோக்கை  பார்த்து இரசித்து வாழ்கிறார் அதனால் விரைவில் இலங்கை வடிவேல் என மக்கள் பட்டம் சூட்டவுள்ளனர் இதனால் தலைவன் என்ற நாமம் மிக விரைவில் மறைந்து விடும்

அம்பாறை மாவட்ட மரங்கள்  மயிலின் இறகுகளால் புடைசூழப்பட்டுள்ளது என்பதை அறிந்த முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய அரசியல்வாதிகள் மக்கள் காங்கிரஸில் இனைய ஆர்வம் கொண்டு வருகின்றனர் அவர்களின் முயற்சியால் எதிர்வரும் மாதம் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மக்கள் விரும்பும் மக்கள் காங்கிரஸ் கட்சியின்  மாபெரும் பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது அதில் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய போராளிகள் இனையவுள்ளனர்

எனவே இன்று முஸ்லிம் சமுதாயத்துக்கு வீரமுள்ள சத்திய தேசிய தலைவராக அமைச்சர் றிசாத் அவர்களை சமுதாயம்  அடையாளம் கண்டுள்ளது அதனால் அமைச்சர் றிசாத் அவர்களின் கரத்தை பலப்படுத்த  முஸ்லிம் சமுதாயம்  முன் வந்து இருப்பதை பாரட்ட வேண்டும்

மறைந்த மாமனிதர் அஸ்ரப் அவர்களின் பொண் முகத்தோடு புன்னகை சிரிப்புடன்  துணிந்து பேசும் சத்திய தேசிய தலைவனின் வருகையை அம்பாறை மாவட்ட மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்

ஜெமீல் அகமட்
அ.இ.ம.கா .பொத்துவில் தொகுதி
 கொள்கை பரப்பு செயலாளர்

Monday, December 26, 2016

ஹசனலி பதுங்குகிறாரா? பணிந்தாரா?

அரசியலில் இன்று என்ன நடக்கும் நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.அரசியல் வாதிகள் இன்று அடித்துக் கொள்வார்கள் நாளை அணைத்துக் கொள்வார்கள்.இவர்களை நம்பி பின்னால் சென்றவர்கள் தான் மடையர்களாக திரும்புவார்கள்.மிக நீண்ட காலமாக அமைச்சர் ஹக்கீமிற்கும் மு.காவின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கும் இடையில் ஒரு முரண்பாடு தோன்றியிருந்தது.இந்த முரண்பாடு கடந்த மு.காவின் பேராளர் மாநாட்டில் ஹசனலியின் செயலாளர்  பதவியின் அதிகாரங்களை குறைத்தமையை நேரடியாக கொண்டிருந்தாலும் மறைமுகமாக தேசியப்பட்டியல் பகிர்வும் அதில் தாக்கம் செலுத்தியிருந்தது.இந்த முரண்பாட்டை தொடர்ந்து ஹசனலியும் ஹக்கீமிற்கு எதிராக போர் முரசை கொட்டி யுத்தத்தை ஆரம்பித்திருந்தாலும் தற்போது தான் முன் வைத்த குற்றச் சாட்டுக்கள் பிழை என்ற பாங்கில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.

#தீர்வை எட்ட கூடிய மு.காவின் உயர் பீடம்

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய 2016-12-15ம் திகதிக்குள் யார் மு.காவின் செயலாளர் என்பதை அறிவிக்குமாறு கூறியிருந்தார்.இதற்கு ஹசனலி தானே மு.காவின் அதிகாரமிக்க செயலாளர் என தேர்தல் ஆணையாளருக்கு கூறியிருந்தமையே பிரதான காரணமாகும்.இப்படி இருக்கையில் மு.காவின் உயர்பீடம் கடந்த 2016-12-14ம் திகதி பலத்த  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூடியிருந்தது.அது முடிந்த பிறகு மக்கள் எதிர்பார்த்தளவு சுவாரசியங்கள் எதுவும் அதில் காணப்படவில்லை.ஹசனலி முன் வைத்த குற்றச் சாட்டில் முதன்மையானது கடந்த பேராளர் மாநாட்டில் உயர் பீட செயலாளராக  நியமித்தவரை அமைச்சர் ஹக்கீம் கட்சியின் செயலாளராக தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருந்தார் என்பதாகும்.கடந்த 2016-12-14ம் திகதி இடம்பெற்ற உயர்பீடக் கூட்டத்தில் செயலாளர் நாயகமாக ஹசனலியையே நியமிக்க வேண்டுமென விவாதிக்கப்பட்டதாகவே அறிய முடிகிறது.உண்மையில் அங்கு விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய முக்கிய விடயம் கடந்த பேராளர் மாநாட்டில் உயர்பீட உறுப்பினராக நியமிக்கப்பட்டவரை கட்சியின் செயலாளராக அமைச்சர் ஹக்கீம் நியமித்தாரா? இல்லையா? என்பதாகும்.அப்படியான விடயங்கள் அங்கு பேசப்படாமையிலிருந்து ஏதோ ஒரு மறைமுக நோக்கத்தை அடிப்படையாக கொண்டு  அமைச்சர் ஹக்கீம் குறித்த உயர் பீட கூட்டத்தை  கூட்டி கலைத்தார் என்பதாகும்.

குறித்த உயர்பீட கூட்டம் நடந்த மறு  தினம் ஹசனலி ஒரு உடன்பாட்டிற்கு வராது போய் இருந்தால் குறித்த உயர் பீட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை காட்டி அனைவரும் அமைச்சர் ஹக்கீம் கூறுவதை ஏற்றுக்கொள்கிறார்கள்.இதுவே கடந்த யாப்பு மாற்றம் தொடர்பான உயர் பீடக்கூட்டத்தில் நடந்ததென அமைச்சர் ஹக்கீம் தேர்தல் ஆணையாளரிடம் நிரூபிக்க முனைந்திருக்கலாம்.இதனை கூட்டறிக்கையில் ஒரு சில விடயங்களை மறைமுகமாக உட்புகுத்துவதன் மூலம் இலகுவாக சாதித்திருக்க முடியும்.கடந்த மு.காவின் யாப்பு மாற்றத்தின் போது குறித்த உயர்பீட கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தாலும் ஹசனலி சார்பு அணியினர் தங்களது வாய்களுக்கு ஓய்வு கொடுத்திருந்தனர்.அதிலும் குறிப்பாக மு.காவின் தவிசாளரின் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.இவர் கடந்த காலங்களில் ஹசனலியின் பதவி குறைப்பு விடயத்தில் அமைச்சர் ஹக்கீமின் திருவிளையாடல் இடம்பெற்றதாக பகிரங்கமாக கூறியவர்.இந்த நிலை ஹசனலி தோல்வியை நோக்கி நெருங்குவதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

அன்று யாராவது ஒருவர் கடந்த யாப்பு மாற்றம் தொடர்பான கூட்டத்தில் ஹசனலியே கட்சியின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்ற விடயத்தை தூக்கி போட்டிருந்தால் அமைச்சர் ஹக்கீம் மாட்டிக்கொண்டிருப்பார் அல்லது சிலரது பொய் முகங்கள் வெளிப்பட்டிருக்கும்.அப்படி ஒரு விடயம் நடந்திருந்தால் குறித்த உயர்பீட கூட்டம் ஒரு முடிவின்றி நிறைவடைந்திருக்கும்.அமைச்சர் ஹக்கீம் சட்டரீதியாக  தேர்தல் ஆணையாளரிடம் ஒரு தீர்க்கமான முடிவு கூற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்.அக் கூட்டத்தின் கூட்டறிக்கை ஹசனலியின் வாதத்திற்கான வலுவான ஆதாரமாக அமைந்திருக்கும்.கட்சியின் பொதுச் செயலாளர் பதவி சில காலங்கள் வறிதாக்கப்பட்டிருக்கும் அல்லது ஹசனலியிடம் ஹக்கீம் மண்டியிட்டிருப்பார்.அக் கூட்டம் ஒரு சுமுகமான முறையில் நிறைவடைந்தமை ஹசனலி அணியை பலவீனமாக்கியதில் முதன்மை காரணியாகும்.இக் கூட்டத்தின் மூலம் அமைச்சர் ஹக்கீம் மு.காவின் உயர் பீடத்தில் தனக்குள்ள ஆதரவை வெளிப்படுத்தி உன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற செய்தியை வழங்குமுகமாகவும் ஏற்பாடு செய்திருக்கலாம்.அவ் உயர் பீட கூட்டம் நடைபெறுவதற்கு  சில நாட்கள் முன்பு ஹசனலி தனதில்லத்தில் ஒரு மக்கள் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.அதில் அவர் பலரது அனுதாபப் பார்வைகளை தன் பக்கம் திருப்பும் வகையில் தனது செயற்பாடுகளை அமைத்திருந்தார்.அக் கலந்துரையாடல் அவருக்கு வெற்றியையும் கொடுத்திருந்தது.இது ஹசனலி குறித்த உயர் பீட கூட்டத்தில் தனது பக்கம் வெற்றியை திருப்பச் செய்த ஒன்றாகவும் பார்க்கலாம்.

கட்சியின் செயலாளர் மாற்ற பிரச்சினையை அடிப்படையாக கொண்டு கூட்டப்பட்ட அக் கூட்டத்தில் அது பற்றி யாருமே கதைக்காமை அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக ஹசனலி,பஷீர் சேகுதாவூத் ஆகியோர் போலியான குற்றச் சாட்டுக்களை முன் வைத்தார்களா என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது.இது தொடர்பில் இதற்கு முன்பு இக் குற்றச் சாட்டை அறிக்கையில் முன் வைத்த பஷீர் சேகுதாவூத் அச் சந்தர்ப்பத்தில் முன் வைக்காமை அவர் பக்க நியாயம் மிகவும் பலவீனமானதாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.குறித்த பிரச்சினை தொடர்பில் விவாதிக்க மு.காவின் தவிசாளர் பஷீர் செகுதாவூதிற்கு மு.காவின் உயர்பீடக் கூட்டத்தில் ஒரு சந்தர்ப்பம் கிடைத்து அதனை பயன்படுத்த தவறியமையால் இதற்கு பிறகு அவர் இது தொடர்பில் கதைக்கும் தகுதியை இழந்துவிட்டார்.குறித்த பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கைகளில் சுட்டிக் காட்டாது அதற்கு தகுந்த இடங்களில் கதைக்க வேண்டுமென அமைச்சர் ஹக்கீம் பஷீர் சேகுதாவூத் போன்றோர் மீது முன் வைக்கும் குற்றச் சாட்டை இதன் மூலம் நியாயப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான உயர்பீடக் கூட்டம் நடைபெற்று முடிந்தவுடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹக்கீம்  ஒரு யாப்பு மாற்றம் என்பது அடுத்த பேராளர் மாநாட்டில் தான் இடம்பெற வேண்டுமென்பதை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கவுள்ளதாக கூறுகிறார்.இது தேர்தல் ஆணையாளருக்கு தேவையற்ற விடயம்.அமைச்சர் ஹக்கீம் கடந்த வருடம் மாற்றம் பெற்ற மு.காவின் யாப்பின் பிரகாரம்  இவர் தான் கட்சியின் செயலாளர் என்று அறிவிப்பதையே தேர்தல் ஆணையாளர் எதிர்பார்த்திருந்தார்.இது அமைச்சர் ஹக்கீம் அந் நேரத்தில் மிகவும் தடுமாற்றமான நிலையில் இருந்துள்ளதை  அறிந்து கொள்ளச் செய்கிறது.மேலும்,அவர் கருத்து தெரிவிக்கையில் நாளை தலைவர் ஹசனலியுடன் தனிப்பட்ட முறையில் கதைப்பதற்கு தயாராகவுள்ளதாக எத்திவைக்கப்படவுள்ளதாக கூறி இருந்தார்.

தேர்தல் ஆணையாளர் கட்சியின் செயலாளர் நாயகம் யார் என்றே கேட்டுள்ளார்.இந் நிலையில் கட்சியின் உயர்பீடத்தை கூட்டும் அதிகாரம் செயலாளருக்கு இருப்பதால் இக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எதுவும் சட்ட ரீதியானதல்ல.அக் கூட்டத்தின் முடிவுகளை அமைச்சர் ஹக்கீம் தனது வாதத்தை நியாயப்படுத்தும் ஒரு சிறு விடயமாக பயன்படுத்தலாமே தவிர பலத்த ஆதாரமாக கொள்ள முடியாது.

#ஹசனலி கலந்துகொள்ளாமையின் இரகசியம்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூட்டப்பட்ட உயர்பீடக் கூட்டத்திற்கு ஹசனலி சென்றிருந்தால் அக் கூட்டம் ஒரு முடிவின்றி நிறைவடைந்திருக்கும் அல்லது தெளிவான முடிவொன்று எடுக்கப்பட்டிருக்கும்.அக் கூட்டத்தில்  ஹசனலிக்கு என்ன தேவை என்ற வினாவே முதல் எழுந்திருக்கும்.இங்கு ஹசனலிக்கு முழு அதிகாரமுள்ள செயலாளர் பதவி தான் தனது கோரிக்கை என்பதை தவிர வேறு எதனையும் கூற முடியாது.அப்படி அவர் கூறியிருந்தால் இல்லை இல்லை உங்களுக்கு அதனை தர முடியாதென அவர் முன்பு கூற யாருக்கும் தகுதியில்லை.தற்போது இப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவோம்.இன்னும் சில நாட்களில் பேராளர் மாநாட்டை கூட்டி உங்களுக்கு முழு அதிகாரமுள்ள செயலாளர் பதவியை தருகிறோம் என்ற உறுதி மொழியை மு.காவின் உயர்பீடம் ஹசனலிக்கு வழங்கினால் ஹசனலி வேறு எதுவும் பேச முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்.இதனையும் எதிர்த்து கதைத்தால் அது மு.காவை எதிர்த்து பயணிக்க ஹசனலி முனைகிறார் என்ற தோற்றப்பாடு எழுந்து மு.காவி  உயர்பீடம் ஹசனலிக்கு எதிராக மாறியிருக்கும்.அங்கு சத்தம் போட்டு சண்டை பிடித்து தனது வாதத்தை முன் வைக்கும் பண்புடையவர் ஹசனலியல்ல.தனக்கு பதவி வேண்டுமென தான் கேட்பதா என்ற கூச்சத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருப்பார்.

ஹசனலி தேசியப்பட்டியலையும் குறி வைத்ததாக தனது காயை நகர்த்துவதால் தனது அக் கோரிக்கையை உயர்பீடத்தில் முன் வைப்பது மிகவும் ஆபத்தானது.இதற்கு தனிப்பட்ட இரகசிய சந்திப்புக்கள் தான் மிகவும் பொருத்தமானவை.கடந்த யாப்பு மாற்றத்தின் போது கட்சியின் செயலாளராக தானே தெரிவு செய்யப்பட்டேன் என்பதே ஹசனலியின் வாதம்.ஒரு உயர்பீடத்தை கூட்டும் அதிகாரம் கட்சியின் செயலாளருக்கே உண்டு.இக் கூட்டத்திற்கு  ஹசனலி செல்லுவதானது அவரே மன்சூர் ஏ காதர் கட்சியின் செயலாளராக ஏற்றுக்கொண்டதாக பொருள் கொடுக்கும்.இது ஹசனலியின் வாதத்தை நலினப்படுத்தும் விடயங்களாகும்.எனினும்,இதற்கு முன்பு கூட்டப்பட்ட உயர்பீடக் கூட்டங்களுக்கு  அவர் சென்றமை,அவர் மன்சூர் ஏ.காதரை அதிக்காரமிக்க செயலாளாராக ஏற்றுக்கொண்டமைக்கான ஆதாரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் ஹசனலிக்கு பாதகமான முடிவுகள் எடுக்கப்படும் போது உயர் பீடத்தை கூட்டும் அதிகாரம் தனக்கே உண்டு.இது அங்கீகாரமற்ற உயர்பீடமென மிக இலகுவாக இதன் தீர்மானங்களை செல்லுபடியற்றதாக மாற்றியிருக்கலாம்.இவ்வாறான பலவற்றின் சிந்தனைகளால் ஹசனலி குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்திருக்கலாம்.

#ஹக்கீம்-ஹசனலி சந்திப்பு

இவ்விடயம் மிக இலகுவாக தீர்க்கப்பட அமைச்சர் ஹக்கீம் ஹசனலியுடன் பேசுவதை தவிர வேறு வழி இல்லை.இதன் காரணமாகத் தான் ஹக்கீமும் ஹசனலியுடன் தான் பேசத் தயார் என அறிவித்தார்.அமைச்சர் ஹக்கீம் தேர்தல் ஆணையாளர் காலக்கெடு விதித்த குறித்த நாளிற்கு முதல் நாள் உயர் பீடக் கூட்டத்தை கூட்டியதில் சில தந்திரோபாயங்கள் இருக்கலாம்.ஹசனலி தன்னுடன் ஒரு உடன்பாட்டிற்கு வராத போது அவர் தொடர்பில் ஒரு இறுதி முடிவை எடுப்பதே அதன் நோக்கமாகும் என்பதே பலரது ஊகமாக  இருந்தது.அல்லாது போனால் அதனை காலக்கெடு நெருங்கிய காலப்பகுதியில் வைக்க வேண்டிய அவசியமில்லை.அமைச்சர் ஹக்கீம் உயர்பீட கூட்டங்களில் கையாளும் ஒரு இராஜ தந்திரமாக பலரும் சுட்டிக்காட்டும் ஒரு விடயம் குறித்த நிகழ்விற்கு செல்வதற்கு முன்பு தனது ஆதரவாளர்கள் சிலரை நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டு செயற்படுவதாகும்.குறித்த உயர்பீடக் கூட்டத்தில் ஹசனலியை எதிர்த்து பேசும் நிலை இருக்கவில்லை.அது மாத்திரமல்ல குறித்த தினம் ஹசனலி அணியினரும் அமைதியை கடைப்பிடித்தனர்.இங்கு அமைச்சர் ஹக்கீம் ஹசனலி அணியினர் அவர்கள் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கு முன்பே  ஒரு சமரசத்திற்கு வந்துவிட்டதை அறிந்துகொள்ளச் செய்கிறது.

குறித்த பேச்சு வார்த்தையின் போது ஹசனலியிலிற்கு ஹக்கீம் தேசியப்பட்டியல் வழங்க இணங்கியுள்ளார்.அதனை உறுதி செய்யும் வகையிலான ஆதராங்களும் ஹசனலிக்கு காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.அதன் பிரகாரம் எதிர்வரும் 9ம் திகதி ஹசனலி பாராளுமன்றம் செல்லவுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.மிக விரைவில் மு.காவின் பேராளர் மாநாட்டை நடாத்தி அதில் ஹசனலிக்கு பூரண அதிகாரமிக்க செயலாளர் பதவியை வழங்க அமைச்சர் ஹக்கீம் இணங்கியுள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.அநேகமான எதிர்வரும் பத்தாம் திகதி பேராளர் மாநாடு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#சமரசத்திற்கான கோரிக்கைகளின் பின் விளைவு

இதன் பிறகு அமைச்சர் ஹக்கீமுடன் ஹசனலி சமரசத்திற்கு வந்து தேர்தல் ஆணையாளரை சந்தித்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.அமைச்சர் ஹக்கீமை பொறுத்தமட்டில் இவரை சமரசத்திற்கு கொண்டு வர தேசியப்பட்டியலை வழங்குவது தற்போதைய நிலையில் மிகவும் சுலபமான தீர்வு.இன்று அட்டாளைச்சேனை,வன்னி,கல்குடா,குருநாகல் போன்ற இடங்களில் தேசியப்பட்டியல் எதிர்பார்ப்புக்கள் மிகவும் பலமாகவுள்ளது.குறித்த இடங்களில் ஏதாவதொன்றிற்கு தேசியப்பட்டியல் வழங்கும் போது மற்றைய இடங்களிலிருந்து நிச்சயம் பாரிய எதிர்ப்புக்கள் கிளம்பும்.ஹசனலிக்கு குறித்த தேசியப்பட்டியலை வழங்கும் போது தலைவர் நிர்ப்பந்தத்தினால் தான் தேசியப்பட்டியலை வழங்கியுள்ளாரென அவர்கள் தங்களை ஆறுதல் படுத்திக்கொள்வார்கள்.இருந்தாலும் இதனை அட்டளைச்சேனை மக்கள்  அவ்வளவு இலகுவில் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.அமைச்சர் ஹக்கீம் ஹசனலிக்கு தேசியப்பட்டியலை வழங்கினால் அவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடலாம்.

அதே நேரம் அவர்களின் எதிர்ப்புக்கள் ஹசனலியையும் தாக்கும்.ஹசனலி ஒரு பதவி பித்தன் போன்ற தோற்றப்பாடு மக்களிடையே எழும்.எதிர்காலத்தில் இவர் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக செயற்பட  சிந்தித்தாலோ அல்லது சமூகம் சார்ந்த ஏதாவது கருத்துக்களை முன் வைத்தாலோ  அது மக்களிடம் தாக்கம் செலுத்தாது.தற்போது ஹசனலிக்கு சார்பாக கதைத்த பலர் இவர் தேசியப்பட்டியலை ஏற்கப்போகிறார் என்றவுடன் அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.ஹசனலியும் கிழக்கின் எழுச்சியின் தலைவர் வபா  பாறூக்கும் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் சந்தித்த பின்பே கிழக்கின் எழுச்சி உதயமாகி இருந்தது.அந்த கிழக்கின் எழுச்சியினரே அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டுமென அறிவித்துள்ளனர்.இதில் ஹசனலியின் மகன் முக்கிய காதாபாத்திரம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் ஹசனலி தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த பலரது ஆதரவை இழப்பார் என்பது வெள்ளிமடையான விடயம்.

#சமரசத்திற்கான கோரிக்கைகளின் மீதான பார்வை

அமைச்சர் ஹக்கீமிடம் ஹசனலியின் முதன்மை கோரிக்கையாக முழு அதிகாரமிக்க செயலாளர் பதவியே இருந்தது.பல வருடங்களாக அவர் வகித்த அப் பதவியை அவர் கட்சிக்கு எதிராக சிறிதும் செயற்படாத நிலையில் குறைத்தமை அவரை கேவலப்படுத்தியது போன்றாகும்.இதன் காரணமாக  அவர் தனக்கு பூரண அதிகாரமிக்க செயலாளர் பதவியை மீள கோருவது நியாயமானது.இது வழங்கப்படும் என்ற வாக்குறுதி அமைச்சர் ஹக்கீமிடம் இருந்து வழங்கப்பட்டாலும் இது வழங்கப்படுமா என்பது சந்தேகமே.அமைச்சர் ஹக்கீம் கட்சியின் யாப்பை மாற்றினாலும் கட்சியின் செயலாளரை தெரிவு செய்வது உயர்பீடத்தில் தங்கியுள்ள ஒரு விடயமாகும்.உயர் பீடத்தில் தனக்கு சார்பானவர்களை கிண்டி விட்டு அப் பதவியை ஹசனலி பெறாமல் செய்யலாம்.மேலும்,தற்போது ஹசனலி இவ்விடயத்தில் சமரசத்திற்கு வந்திருந்தாலும் ஹக்கீம் ஹசனலி மீது பூரண நம்பிக்கை கொள்ளவில்லை.பூரண நம்பிக்கையில்லாத நிலையில் பூரண அதிகாரமிக்க செயலாளர் பதவியை ஹசனலியிடம் ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது.

ஹசனலி தனது அறிக்கைகளில் அட்டாளைச்னைக்கே தேசியப்பட்டியலை வழங்குவது பொருத்தமானது எனக் கூறி,தான் தேசியப்பட்டியலுக்கு அலைபவனல்ல என்பதை நிரூபிக்க முனைந்திருந்தார்.தற்போது அவரே அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்க விடாமல் தன் வசப்படுத்துவாராக இருந்தால் அது சுயநலத்தின் உச்ச கட்டமாகும்.அது அட்டாளைச்சேனை மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று துரோகமாகவும் பதிவாகும்.பூரண அதிகாரமிக்க செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படாமல் அவர் தேசியப்பட்டியலை ஏற்பாராக இருந்தால் அவரது இத்தனை நாள் போராட்டமும் தேசியப்பட்டியலை அடைவதற்கே என்பது துல்லியமாகும்.அமைச்சர் ஹக்கீமிற்கு எதிரான ஹசனலியின் போராட்டத்தில் அவரின் பின்னால் பலர் வராமைக்கான பிரதான காரணம் அதிகாரங்கள் அவரிடமில்லாமையாகும்.அமைச்சர் ஹக்கீம் ஹசனலிக்கு தேசியப்பட்டியலை வழங்கும் போது அரசின் உயர் மட்டத்திலிருந்து அமைச்சு போன்ற அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.இதன் பிறகு அவர் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக செயற்படும் போது அவருக்கு பின்னல் சிலர் தைரியமாக வருவார்கள் எனவும் ஹசனலி கணக்கு போட்டிருக்கலாம்.

#பிரச்சினை முடிந்ததா?

இதன் பிறகு ஹக்கீம்-ஹசனலி பிரச்சினை நிறைவுற்றதென கூற முடியாது.அமைச்சர் ஹக்கீம் ஹசனலியை வலிந்து  தேடிச் சென்று பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முனைகிறார்.அமைச்சர் ஹக்கீம் எங்குமே இந்தளவு கீழ் இறங்கவில்லை.இதுவே அமைச்சர் ஹக்கீமின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.நிச்சயாக அமைச்சர் ஹக்கீம் தனது தோல்வியை மறைக்க மிகவும் சாதூரியமான முறையில் ஹசனலியை வீழ்த்த முனைவார்.அது மாத்திரமல்ல ஹசனலி கோரிக்கைக்கு ஹக்கீம் அடிபணிந்தே ஹக்கீம்-ஹசனலி பிரச்சினை நிறைவுக்கு வந்துள்ளது.இது அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவ பதவிக்கு மிகவும் ஆபத்தானது.இதனை ஹசனலி அறியாமலுமில்லை.இருந்தாலும் மு.காவை விட்டு வெளியேறினால் அமைச்சர் ஹக்கீம் மிக இலகுவாக வென்று விடுவார்.இதன் காரணமாக மு.காவிவுள் இருந்து கொண்டே அமைச்சர் ஹக்கீமை வீழ்த்தும் போராட்டத்தை முன்னெடுப்பார் என்றே  நம்பப்படுகிறது.இருந்தாலும் அவர் தேசியப்பட்டியலை ஏற்காது மு.காவில் இருந்து கொண்டு போராட்டங்களை முன்னெடுப்பாராக இருந்தால் அது மக்களிடையே அதிக தாக்கத்தை செலுத்தும்.ஹசனலியின் போராட்டம் முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை நோக்கி அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.ஹசனலி மு.காவில் இருந்து கொண்டு இவ்வாறான விடயங்களை செய்யும் போது அமைச்சர் ஹக்கீம் பலத்த சவாலுக்குட்படுவார்.ஹசனலி பணியவில்லை பாய்வதற்கு பதுங்குகிறார் என்பது தான் ஆழமான உண்மை.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 26-12-2016ம் திகதி திங்கள்  கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 75வது கட்டுரையாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Saturday, December 24, 2016

மஹிந்த செய்த தவறை முஸ்லிம்கள் விடயத்தில், இந்த அரசும் செய்யக்கூடாது - றிசாத்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் தொடர்பாக விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் தாருல் உலூம் அல் அஸ்ரபியா மத்ரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.  அமைச்சர் மேலும் கூறியதாவது,

கடந்த வாரம் பிரதமர், முக்கிய அமைச்சர்கள் மற்றும்  அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட அரசியலமைப்புச் சபைக் கூட்டத்தில் முஸ்லிம்கள் மீது மீண்டும் அராஜகங்கள் இடம்பொருவதை தெளிவாகவும் துணிவாகவும் சுட்டிக்காட்டினேன். அடாவடித்தனங்களை கடந்த அரசு அடக்கியிருந்தால் மஹிந்தவுக்கெதிராக நாங்கள் கிளர்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்க மாட்டாதெனவும், சொல்ல வேண்டிய பாணியில், உரிய தொனியில் உணர்தினோம்.

இன்று உலகில் எந்த மூலையில் குண்டுவெடிப்புகளோ, கொலைகளோ இடம்பெற்றாலும் அதற்கு முஸ்லிம்களே சூத்திரதாரிகளென மேற்குலகமும் ஊடக மாபியாக்களும் விஷக்கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இரத்தக் களரிகளையும், படுகொலைகளையும் கண்டு முஸ்லிம்களாகிய நாமும் வேதனைப்படுகிறோம், வெதும்புகின்றோம். நமது இரத்தம் கொதிக்கின்றது. ஆனால் அவர்கள் எம்மை நோக்கியே தங்கள் சுட்டுவிரலை நீட்டிக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாமியர்களை வேண்டுமென்றே தமது நிகழ்ச்சி நிரலுக்குள் வலிந்து வம்புக்கிழுத்து எங்களை படுபாதகர்களென பரப்புரை செய்கின்ற துர்பாக்கியத்தை நாம் காண்கிறோம். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவர்களின் பண்புகளையும் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தும் செயற்பாடுகளே அரங்கேற்றப்படுகின்றன.

முஸ்லிம் நாடுகள் பெற்றோலிய, கனிய வளங்களையும், பெரும் செல்வத்தையும் கொண்டிருந்த போதும் அவை அமைதியிழந்து தவிக்கின்றன.
அதே போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் அந்தச் சமூகத்தின் நிம்மதி கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

சுதந்திரத்திற்குப் பின்னர் நமது நாட்டில் முஸ்லிம்கள், சிங்கள மக்களுடன் முரண்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. எந்த இடைவெளியும் அர்களுக்கிடையில் இருக்கவுமில்லை. ஆனால் அண்மைக் காலமாக சிங்கள மக்களுடன் முஸ்லிம்களை மோத வைத்து இரத்தக் களரியை உருவாக்க ஒரு சதிகாரக் கூட்டம் அலைந்து திரிகின்றது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டிலே அமைதியையும், நிம்மதியையும் ஏற்படுத்தித்தந்த மஹிந்தவின் இறுதி ஆட்சிக் காலம் முஸ்லிம்கள் மத்தியில் வேதனையையும், பீதியையும் ஏற்படுத்தியது. வடபுல முஸ்லிம் அகதிகள் தமது தாயகத்திற்கு செல்ல முடியாது என்றிருந்த ஒரு நிலையை மாற்றி மீள் குடியேற்றத்திற்கு சாதகமான ஒரு நிலையை யுத்த வெற்றி ஏற்படுத்தியது. இவ்வாறு நல்லவைகள் செய்த மஹிந்த அரசை நாங்கள் வீழ்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். நன்மைகளை எல்லாம் ஒரு புறம் வைத்துவிட்டு அவரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டிய சூழ்நிலை எமது சமூகத்திற்கு ஏற்பட்டது.

நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் குர்ஆனையும், எமது இறுதித் தூதர் பெருமானாரையும், எம்மைப்படைத்த இறைவனையும் கேவலப்படுத்தும் ஒரு கூட்டத்திற்கெதிராக அந்த அரசு எந்த நடவடிக்கைiயும் எடுக்காமல் கைகட்டி, வாய் பொத்தி இருந்ததனாலேயே அந்த அரசை வீட்டுக்கு அனுப்பினோம். 10 சதவீதமான வாக்குகளை மாத்திரம் தம்வசம் வைத்திருந்த முஸ்லிம் சமூகம் தமது வளங்கள், சக்தி ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக பிரயோகித்து மஹிந்தவுக்கெதிரான வாக்குகளை இன்னும் பத்து சதவீதமாக தேடிக் கொடுத்ததே சரித்திரம்.

அரசியலமைப்பில் எமக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்த மத உரிமைக்கு சதிகாரர்கள் வேட்டு வைப்பார்களென்ற அச்சத்தில் வாக்குரிமையை ஜனநாயக வழியில் மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தி சாதித்துக் காட்டினோம். அரசியல்வாதிகளான நாங்கள் அதிகாரம், பதவி, பட்டங்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. சமுதாயத்திற்கு ஆபத்தென்றால் அவற்றைத் தூக்கியெறிவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். அதே போன்று முஸ்லிம்களை சரியாக வழிநடத்தும் பொறுப்பையும், வல்லமையையும், சந்தர்ப்பத்தையும் உலமாக்களாகிய உங்களுக்கு இறைவன் தந்திருக்கின்றான். நீங்கள் மிம்பரில் பிரச்சாரங்கள் செய்யும் போது எவருமே உங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. அவ்வாறான பக்குவத்தை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. எனவே உலமாக்கள் இந்த சமூகத்தை சரியாக வழிநடாத்த வேண்டிய தேவை இருக்கின்றதென்று அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் மௌலவி அஷ்ரப் முபாரக், பெரிய பள்ளிவாசல் தலைவர் ஜனாப் ஹாஜியார், நவவி எம் பி, தொழில் அதிபர் ஜிப்ரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யஹ்யா, சமூக சேவையாளரும்.முன்னாள்  நகர சபை உறுப்பினருமான  முஹ்ஷி ரஹ்மதுள்ளாஹ், கல்விமான் இல்ஹாம் மரைக்கார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Wednesday, December 21, 2016

திரிஷாவுடன் மீண்டும் காதல்



திரிஷா 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். கொடி படத்தில் தனுசை குத்தி கொலை செய்யும் வில்லி வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மோகினி என்ற திகில் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக 2 வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். கடந்த வருடம் திரிஷாவுக்கு பட அதிபருடன் திருமணம் நிச்சயமாகி திடீரென்று ரத்தானது.
இந்த நிலையில் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் பேசப்படுகிறது. வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் இருவரும் ஜோடியாகவே சென்று வந்தார்கள்.
இந்த காதல் கிசுகிசுக்களுக்கு இதுவரை பதில் சொல்லாமல் இருந்த ராணா இப்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“திரிஷாவையும் என்னையும் இணைத்து செய்திகள் வருகின்றன. நாங்கள் காதலிப்பதாக பேசுகிறார்கள். நான் திரிஷாவை காதலிக்கவில்லை. வேறு யாருடனும் எனக்கு காதல் இல்லை. நான் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே தீவிர கவனமாக இருக்கிறேன். வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை.
தற்போதைய சூழ்நிலையில் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் மற்றவர்கள் போல் இல்லை. எனது வாழ்க்கை முறை அசாதாரணமானது. நான் இந்தி படங்களில் நடிக்கும்போது 6 மாதங்கள் மும்பையிலேயே தங்கி இருக்க வேண்டி வருகிறது. அப்போதெல்லாம் பல மாதங்கள் ஐதராபாத்தில் இருக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது.
அடுத்த வருடம் டி.வி. நிகழ்ச்சிக்காக 3 மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டி இருக்கிறது. நான் திருமணம் செய்து கொண்டால் இப்படி பல மாதங்கள் வெளியூர்களில் தங்கி இருக்க முடியாது. எனக்கு மனைவியாக வரும் பெண் முதலில் இப்படிப்பட்ட எனது வாழ்க்கை முறைகளை அனுசரித்து செல்ல தயாராக இருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் எனக்கு திருமணம் இல்லை. எப்போதுமே திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பேன் என்று சொல்லவில்லை. ஒரு நிலையான இடத்துக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்வேன்.” இவ்வாறு ராணா கூறினார்.

லசந்தவுடனான சர்ச்சைக்குரிய உரையாடல் குறித்து பதிலளித்த மஹிந்த



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்றை, அண்மையில் பிரபல ஊடகம் ஒன்று வௌியிட்டது. 

இந்தநிலையில் நேற்றையதினம் இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, 

"அது இன்றைய ஒன்றல்லவே, நான் அவருடன் பேசுவதுதானே, அதை நான் பேசினேனா இல்லையா என்பது நினைவில் இல்லை. ஆனால் அவருடன் (லசந்த) எப்போதும் பேசுவேன். 

அவருக்கு பேசுவதை எல்லாம் பதிவு செய்யும் பழக்கம் உள்ளது என அணைவருக்கும் தெரியும். அவர் ஊடகவியளாளர் தானே.."
 எனக் குறிப்பிட்டார். 

மீனவர் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் தலையிட கோரிக்கை


இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேர் மற்றும் 114 படகுகளை விடுவிக்க, இந்தியப் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி தளத்தில் இருந்து இயந்திரப்படகில் 5 மீனவர்களும் நாட்டுப்படகில் 7 மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை 21-ம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

அதேபோல, இராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து 2 இயந்திர படகுகளில் 12 மீனவர்கள், புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தில் இருந்து ஒரு படகில் சென்ற 5 மீனவர்களும் 21-ம் திகதி மாலை கைது செய்யப்பட்டர். 

மீனவர்களையும் படகுகளையும் இலங்கையின் மன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளனர். மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

பாக்கு நீரிணையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மீனவர்களை அமைதி யான முறையில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். 

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், இந்திய - இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லையை முடிந்து விட்ட ஒன்றாக கருதக்கூடாது என்பதுதான் தமிழகத்தின் நிலைப்பாடு. 

ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதார விஷயத்தில் தாங்கள் நேரடியாக தலையிட வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது அதிகரித்துள்ளதால் தமிழக அரசு மிகுந்த கவலை கொண்டுள்ளது. 

எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு உயர்மட்ட அளவில் பேசி நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு முக்கியத்துவம் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது இலங்கை வசம் உள்ள 51 மீனவர்கள் மற்றும் 114 மீன்பிடி படகுகளை காலதாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மட்டு மங்கலாராம விஹாராதிபதியை மாற்ற வேண்டும்!


மட்டக்களப்பில் இனங்களிடையே முறுகல் நிலை தோன்றக் காரணமாகவுள்ள மங்கலாராம விஹாராதிபதியை மாற்றி, வேறு ஒருவரை குறித்த விஹாரைக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதியமைச்சரிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் அம் மாவட்ட செயலகத்தில் புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 

மாவட்ட அரசாங்க அதிபர், பட்டிப்பளை பிரதேச செயலாளர், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், அலிசாகிர் மௌலானா ஆகியோரின் பங்களிப்புடன் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. 

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போது, 

அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டிருந்தது. சிறிய விடயம் பாரிய பிரச்சினையாக காட்டப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட முறுகல் நிலையினை போக்கும் வகையில் இந்த கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. 

இனிவரும் காலங்களில் சிறிய பிரச்சினைகளை அந்தவேளையில் தீர்த்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. 

ஒரு பல்லின கலாசாரம் உள்ள நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து சந்தோசமான வாழக்கூடிய நிலைமையில் சிறிய பிரச்சினைகள் கையாளப்படவேண்டும் என்றும் மக்கள் மத்தியில் பிளவுகள் பிரிவினைகளை ஏற்படுத்தாத வகையில் கருத்துகள் பரிமாறப்பட வேண்டும் என அமைச்சர் எங்களிடம் சினேகபூர்வமாக தெரிவித்தார். 

இதன்போது பிரதேச செயலாளரும் தான்சார்ந்த கருத்துகளை கூறியிருந்தார். இதன்போது தவறான கருத்தும் கூறப்பட்டிருந்தது. இங்குள்ள கால்நடைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்பட்டிருந்தது. 

எந்த கால்நடைகளும் எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் இல்லையென்பதை இங்கு நான் மறுதலித்துக்கூறுகின்றேன், எனத் தெரிவித்தார். 

Karunaratne, Silva pile up runs for Sri Lanka


Dimuth Karunaratne and Kaushal Silva put on 159 for the first wicket as the touring Sri Lankans got off to a strong start on the first day of a three-day match against a South African Invitation XI at Senwes Park on Sunday. Karunaratne hit 71 and Silva made 80 before both batsmen retired at the end of the 45th over of the touring teams only warm-up match before the first of three Tests against South Africa, starting in Port Elizabeth on December 26. The Sri Lankans finished the day on 328 for six after winning the toss and batting on a batsman-friendly pitch. Kusal Mendis and Dhananjaya de Silva also hit half-centuries against a youthful Invitation XI bowling attack. De Silva provided the days most attractive batting, reaching a half-century off 43 balls with four fours and two sixes.
Ronaldo’s perfect year capped by FIFA Club World Cup win 


Cristiano Ronaldo signed off his stellar 2016 in style on Sunday, scoring a hat-trick to lift Real Madrid to Club World Cup glory and underline his status as the world’s best player. Ronaldo, crowned the Ballon d’Or winner for a fourth time last week, helped Real win the Champions League before leading Portugal to European Championship triumph. “The statistics don’t lie,” Ronaldo told Real’s website. “I’ve had a great season personally and as part of a team. It was a perfect year. “I have kept my level of performance as high as possible over the last 10 years. I want to keep working and enjoy my football, that is what I love the most.” The Portuguese forward is savouring everything that has happened since he converted the winning spot-kick in a penalty shootout against Atletico Madrid in the Champions League final in May. Ronaldo did endure a run of four matches without a goal in La Liga in October – his joint-worst run since he joined Real in 2009 from Manchester United – but normal service was quickly resumed. “People often talk too much, but I’m used to that,” the 31-year-old said. “Everyone always expects more from Cristiano. “I always give my best and if I can’t do it, it’s because I’m unable.” Ronaldo recently signed a lucrative new contract until 2021 and scored three more goals to fire Real to a 4-2 extra-time triumph over Kashima Antlers in the Club World Cup final. He is hoping to lead his team to their first La Liga title since 2012 next year and to a successful defence of the Champions League. “I’d like to thank my team mates yet again because Cristiano cannot win individual trophies without them,” he said.
Two Sri Lankan women to be deported from Kuwait

Farwaniya police recently arrested eight women, including two Sri Lankans, reported absconding by their employers, according to the Kuwait Times.  The eight also include two Filipina and four Ethiopian nationals.  They were sent to the relevant authorities and are being held pending deportation from Kuwait.
Fatal fire: Sri Lankan refugee advocate loses son, wife and mother-in-law in blaze

Three generations of the family of a prominent New Zealand refugee advocate have died in fatal house fire in South Auckland earlier today, the NZ Herald reports. Friends are rallying at Middlemore Hospital to support Kailesh Thanabalasingham as he fights for his life following a tragic fire that claimed the life of his five-year-old son, his wife and mother-in-law. Family friend Sivaram Anandasivam said the fire had devastated three generations of the Thanabalasingham family. He said Kailesh Thanabalasingham, who was being treated for severe burns in Middlemore Hospital, was a pillar of the Sri Lankan and wider ethnic communities and the news of the tragedy had left everyone stunned. Thanabalasingham is currently an executive officer of the Refugee Council of New Zealand and has dedicated his life in this country helping the most vulnerable new citizens. Police this afternoon said the young schoolboy and two women aged 39 and 66 died in the fire at the Plantation Ave property in Flat Bush. The boy’s 11-year-old sister, and 69-year-old grandfather remain in Middlemore Hospital in a stable condition. His 47-year-old father is still in a critical condition. Friends from the Sri Lankan groups and neighbours were now at the South Auckland hospital awaiting word on their friend who had spent the morning in surgery. 
Indian embezzlement suspect planned a bank in SriLanka, met President 

The investigation carried out by the special operation group (SOG) of Rajasthan police, which revealed that INR 160 million was embezzled at Alwar Urban Cooperative Bank, brought to light plans hatched by the accused, which included starting a bank in Sri Lanka. The 37-year-old BBA graduate and mastermind in the case, Abhishek Joshi, had not only allegedly met the president of Sri Lanka in Goa, he was also in touch with top administrative officers of the island nation to start financial institutions. During the investigation, the SOG team also found that he was planning similar frauds in the neighbouring country after starting the bank. On Wednesday, the SOG unearthed the embezzlement of nearly INR 160 million and illegal money exchange of INR 13.8 million by cooperative bank officials, and arrested five, persons including the CEO, former chairman, present chairman and the mastermind of the fraud. Abhishek is seen as the kingpin in planning and executing the whole embezzlement. Joshi is a BBA graduate and fluent in English. While investigating the case, the sleuths of SOG were stunned when they recovered a photograph of Abhishek with Maithripala Sirisena, the Sri Lankan president. “We found that the accused Abhishek had visited Sri Lanka and had explored possibilities to start a bank in any of the states in the island nation. We have also recovered a photograph of the accused with the Sri Lankan president. He was in touch with some top-ranked administrative officers of a few states in the neighbouring country,” said a senior officer of the SOG on Wednesday on condition of anonymity. Asked about the interest of the accused in Sri Lanka, Dinesh M N, inspector general of police, said, “All I can say is that we are investigating and looking into every angle in this case. Various things that we have recovered need to be verified.” Source: Times of India 

Tuesday, December 20, 2016

அமைச்சர் ஹக்கீமின் வாசித் மீதான குற்றச் சாட்டும் பின்னணியும்


கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீமிடம் ஊடகவியலாளர் பொத்துவில் அபிவிருத்தி தொடர்பில் எழுப்பிய வினாவிற்கு பதில் அளித்த அமைச்ச ஹக்கீம் பொத்துவில் அமைப்பாளர் சற்று சுறு சுறுப்பு குறைவாக இருந்ததாலேயே பொத்துவிலிற்கு தனது நிதியை ஒதுக்க முடியாமல் போனதேன பகிரங்கமாகவே குற்றம் சுமத்தி இருந்தார்.மு.காவின் வளர்ச்சிப் படியில் பொத்துவிலின் பங்களிப்பு அபரிதமானது.அமைச்சர் ஹக்கீம் ஒரு அமைச்சராக இருக்கின்றாறென்றால் அதற்கு பொத்துவில் மக்களின் ஆதரவும் ஒரு காரணம்.பொத்துவில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதால் அமைச்சர் ஹக்கீம் தனது நிதியில் பொத்துவில் போன்ற பிரதேசங்களை கவனத்திற் கொள்வது அவரது தலையாய கடமையாகும்.

*பொத்துவில் பிரதேச அபிவிருத்திக்கு அவ் ஊர் அமைப்பாளரின் சுறு சுருப்பின்மை தடையாக இருக்குமாக இருந்தால் அவரை நீக்கி வேறு ஒரு சுறு சுறுப்பானவரை  நியமித்து அவ் ஊரை அபிவிருத்தி செய்வதே ஏற்றுக்கொள்ளத் தக்க விடயம்*.அவ்வாறில்லாமல் அவரையே வைத்துக் கொண்டு சுறு சுறுப்பில்லாமல் இருப்பதால் தான் என்னால் நிதியை ஒதுக்க முடியாமல் போனதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.அமைச்சர் ஹக்கீம் கூறும் கதை வேலை காரிக்கு பிள்ளைச் சாட்டு போன்றுள்ளது.2016-12-08ம் திகதியுடன் பொத்துவில் மு.கா அமைப்பாளராகவிருந்த கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் பாசிதின் அமைப்பாளர் பதவி நிறைவடைந்துவிட்டது.தற்போது பொத்துவிலிற்கு மு.கா அமைப்பாளர்கள் யாருமில்லை.இப்படி இருக்கையில் *அமைச்சர் ஹக்கீம் மு.கா அமைப்பாளராக குற்றம் சுமத்தியவர் யார்?*

இருந்தாலும் அமைச்சர் ஹக்கீம்  குறித்த நிகழ்ச்சியில் கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாசிதை கூறியதாகவே பலரும் கருதுகின்றனர்.அவர் சேவை செய்யும் மனப்பாங்கு கொண்டவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.அவர் பதவி வகித்த காலப்பகுதியில் பொத்துவிலில் வைக்கப்பட்ட சிலையை அகற்றுவதில் அரும்பாடு பட்டிருந்ததோடு அதில் வெற்றியும் கண்டார்.இன்று இறக்காமத்தில் வைக்கப்பட்ட சிலையை மு.காவினர் அகற்ற முடியாமல் தவிப்பது அவரது ஆற்றலை நிறுவிச் செல்கிறது.அது மாத்திரமல்ல பொத்துவிலின் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய போது தனது சொந்தப் பணத்தில் ஆசிரியர்களை நியமித்து பல மாதங்கள்  பாடம் போதிக்கச் செய்தவர்.பொத்துவில் சந்தைக் கட்டடத்திற்கு ஆறு கோடி ரூபாய்களை அமைச்சர் ஹக்கீமிடமிருந்து ஒதுக்கச் செய்தவர்.இதற்கான வரைவுகளையும் தனது சொந்தப்பணத்தில் செலவு மேட்கொண்டிருந்தார் (சரியான முன் மொழிவில்லாததல் இதனை அவரால் செய்ய முடியாமல்  போய் இருந்தது).இப்படியான ஒருவரை அமைச்சர் ஹக்கீம் உற்சாகம் குறைந்தவராக  குறை  கூறியதன் காரணமென்ன?

இன்னும் ஒரு சில மாதங்களில் (அனேகமாக எதிர்வரும் மார்ச் மாதம்) உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இத் தேர்தலில் பொத்துவிலின் பிரதான கதாநாயகனாக அப்துல் வாசித் அவர்களே முன்னாள் தவிசாளர் என்ற வகையில் இருப்பார்.இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் அவரை சமூக சேவையில் உற்சாகம் குறைந்தவராக பகிரங்க நிகழ்வில் குறிப்பிடுவது அவரது அரசியல் வாழ்வை உருக்குலைத்து விடும்.அப்துல் வாசித்  அமைச்சர் ஹக்கீம் கூறிய பிரகாரம் இருந்தாலும் அதனை அமைச்சர் ஹக்கீம் அவரிடம் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டியிருக்கலாம்.அதனை சுட்டிக் காட்ட ஒரு பகிரங்க நிகழ்வு பொருத்தமான இடமுமல்ல.இது அவர் கதாநாயகனாக மாறக் கூடிய தேர்தல் நெருங்கிய காலம் என்பதால் பொருத்தமான நேரமுமல்ல.இதனை அரசியலை கரைத்து குடித்த அமைச்சர் ஹக்கீம் அறியாதவருமல்ல.இது தொடர்பில் கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாசிதின் மிகவும் கவலை கொண்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.ஒரு குழுவினர் அப்துல் வாசிதை அரசியலில் இருந்து தூரமாக்க பகிரங்க முயற்சி செய்து வருகிறது.இக் குழுவிற்கு அமைச்சர் ஹக்கீம் பச்சை சைகையை குறித்த நிகழ்வினூடாக காட்டியுள்ளார்.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அப்துல் வாசிதிற்கு ஆப்பா?

அமைச்சர் ஹக்கீமிடம்  ஒரு வேலை ஆக வேண்டுமாக இருந்தால் அவருக்கு பின்னால் நின்று ஒவ்வொரு படியையும் செய்விக்க வேண்டும்.ஒரு நாள் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் மறு நாள் வந்து அவரை சந்தித்து அந்த வேலையை முடிக்க வேண்டுமென அமைச்சர் ஹக்கீமே அந் நிகழ்வில் குறிப்பிடுகிறார்.ஒரு ஊரில் அரசியல் வாதிகள் செய்து கொடுக்க வேண்டிய ஆயிரம் தேவைகள் இருக்கும்.அவை அனைத்தையும் அமைச்சர் ஹக்கீமின் பின்னால் அலைந்து தான் சாதிக்க வேண்டுமாக இருந்தால் குறித்த அலையும் நபருக்கு  அது தான் தொழிலாக இருக்க வேண்டும்.அமைச்சர் ஹக்கீம் தன்னிடம் வந்து சாதித்ததாக குறிப்பிட்ட தௌபீக்,ரிஸ்வி ஜவஹர்சா ஆகியோர் அரசியல் அதிகாரங்களை தங்களிடம் வைத்திருப்பவர்கள்.அவர்களுக்கு அதனூடாக பல படிகளை இலகுவாக செய்து கொள்ளவும் முடியும்.

அப்படியான நிலையில் கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் பாசிதில்லை. கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் பாசிதை பொறுத்தமட்டில் அவர் கொழும்பு சென்று அங்கு பல நாட்கள் தங்கி அமைச்சர் ஹக்கீமை நினைத்த இடத்தில் சென்று சந்தித்து வர அவருக்கு கொழும்பில் தங்குமிட வசதியோ வாகன வசதியோ அவரிடமில்லை.சில படிகளை இலகுவாக செய்து கொடுக்க அரசியல் அதிகாரப்பலமுமில்லை.இங்கு ஒரு விடயம் தெளிவாகிறது.*ஒவ்வொரு ஊரிற்கும் அரசியல் அதிகாரப்பலம்  இருக்க வேண்டுமென்ற பிழையான *பிரதேச வாதம் இவ்விடத்தில் அமைச்சர் ஹக்கீமின் கூற்றால் நியாயப்படுத்தப்படுகிறது*.

இன்று மு.காவை ஆதரிக்கக் கூடிய மக்கள் கிழக்கு மாகாணத்திலேயே அதிகம் உள்ளனர்.அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய அமைச்சர் ஹக்கீம் என்ற ஒரு நபரை தேடி பலர் கொழும்பு,கண்டி செல்ல வேண்டுமென்றதை விட அமைச்சர் ஹக்கீம் கிழக்கு வந்து அந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்வது தான் மிகவும் பொருத்தமானது.அதனை விட கிழக்கை சேர்ந்த ஒருவர் அமைச்சராக இருந்தால் அது இன்னும் சிறப்பானது. நான் கிழக்கு வாதத்திற்கு எதிரானவன்.குறித்த நிகழ்வில் *அமைச்சர் ஹக்கீம் கூறிய கூற்றின் பிரகாரம் கிழக்கு வாதமும் நியாயமாகிறது*.

இல்லை இல்லை எங்கள் தலைவர் சொன்னது சரியென அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்குவார்களாக இருந்தால் அவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Sunday, December 18, 2016

3 Simple Life Hacks


3 Simple Life Hacks
அமைச்சர் றிஷாதின் பித்தளை தொடர்பான அமைச்சர் ஹக்கீமின் குற்றச் சாட்டும் அமைச்சரவை பத்திரமும்

அமைச்சர் றிஷாத் மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன.இதன் பின்னணியில் மு.காவைச் சேர்ந்த சிலரும் மு.கா சார்பு ஊடகங்கள் சிலவை இருப்பதும் கண்கூடு.11-11-2016ம் திகதி புத்தளத்தில் பாயிசை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம் சற்று உணர்ச்சிவசப்பட்டு (தான் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்ததை  சாய்ந்தமருதில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்) அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

11-12-2016ம் திகதி அதிர்வு நிகழ்ச்சியில்  கலந்து கொண்டிருந்த அமைச்சர் றிஷாதிடம் ,அமைச்சர் ஹக்கீம் முன் வைத்த ஊழல்  குற்றச் சாட்டுக்கள் அடங்கிய காணொலி காண்பிக்கப்பட்டது.இதன் போது அமைச்சர் றிஷாத் அமைச்சர் ஹக்கீம் ஒரு உண்மையான முஸ்லிமாக இருந்தால் அதனை நிரூபிக்குமாறு கூறியிருந்தார்.அதனை பகிரங்கமாக நிரூபிக்கும் நேரம் அமைச்சர் ஹக்கீமிற்கு நேற்று 18-12--2016ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் கிடைத்திருந்தது.

குறித்த நாள் அமைச்சர் ஹக்கீம் புத்தளத்தில் வைத்து அமைச்சர் றிஷாத் பித்தளை மற்றும் குளம் அமைப்பு போன்றவற்றில் ஊழல் செய்திருந்ததாக கூறியிருந்தார்.இதில் வடக்கில் குளத்தை காணவில்லை என்ற குற்றச் சாட்டை அமைச்சர் ஹக்கீம் நிரூபிப்பது மிகவும் இலகுவானது.இந்த இடத்தில் இந்த காலத்தில் குளம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால்,தற்போது அப்படி ஒரு குளம் அங்கில்லை என்றால் அமைச்சர் றிஷாத் மிக இலகுவாக மாட்டிக்கொள்வார்.அமைச்சர் றிஷாத் அமைச்சர் ஹக்கீமிற்கு சவால் விட்ட குறித்த நிகழ்ச்சியில்  குறித்த ஏதாவது ஒரு இடத்தில் குளத்தை காணவில்லை என அமைச்சர் ஹக்கீம் கூறட்டும் பார்க்கலாம் என சவால்விட்டிருந்தும் குளத்தை காணவில்லை என்ற குற்றச் சாட்டின் பக்கம் அமைச்சர் ஹக்கீமின் வாய் சிறிதும் செல்லாமை அப்படி ஒன்று நிகழவில்லை என்பதை தெளிவாக்குகிறது.

இருந்தாலும் பித்தளை விடயத்தில் அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததாக நிரூபிக்க அமைச்சர் ஹக்கீம் சற்று முயற்சித்தாலும் மூக்குடைந்து போனார் என்பதே உண்மை.அண்மையில் ஒரு சகாய விலையில் பித்தளை மூலப் பொருட்களை கொள்வனவு செய்ய அமைச்சர் றிஷாத் அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்துள்ளார்.இதனை தான் எதிர்த்து தடுத்ததாக அமைச்சர் ஹக்கீம் கூறியிருந்தார்.இவ் அமைச்சரவை பத்திரத்தின் மூலம் அமைச்சர் றிஷாத் பாரிய ஊழல் செய்ய எத்தனித்தது போன்று கூறியுள்ளார்.

அமைச்சர் றிஷாத் பித்தளை தொடர்பாக சமர்பித்த அமைச்சரவை பத்திரம் என்ன?

கைத்தொழில் அதிகார சபையில் (IDB) 300 பேர் அளவிலான பித்தளை,செம்பு,இரும்பு போன்றவற்றுடன் தொடர்புடைய சிறு கைத்தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.இவர்கள் பித்தளை,செம்பு,இரும்பு போன்ற தங்களுக்கு  தேவையானனளவு மூலப்பொருட்களை கைத்தொழில் அதிகார சபையிடம் கோரிக்கை விடுப்பார்கள்.இலங்கையில் உள்ளஅமைச்சுக்களிடம் பித்தளை,செம்பு,இரும்பு போன்ற பொருட்கள் இருப்பின்  அவற்றை விற்க முன்பு கைத்தொழில் அதிகார சபையிடம் (IDB) இவைகளுக்கு உங்களிடம் தேவைகள் உள்ளதா என கேட்க வேண்டும்.குறித்த அதிகார சபை தேவையுள்ளது என பதில் அளிப்பின் குறித்த அமைச்சு கைத்தொழில் அதிகார சபையிடம் (IDB) அவைகள் வழங்கப்படல் வேண்டும்.அவ்வாறு வழங்கப்படும் பித்தளை,செம்பு,இரும்பு போன்றவைகள் வேறு நபர்களுக்கு வழங்கப்படாது குறித்த சிறு கைத்தொழிலாளர்களுக்கு மாத்திரமே விற்கப்பட வேண்டும்.இதுவே கைத்தொழில் அதிகார சபைச்  (IDB) சட்டமாகும்.

எனினும் இந்த சட்டத்திற்கு மாறாக சில அமைச்சுக்கள் தங்களிடமுள்ள இவ்வாறான பொருட்களை தனித்தனியாக விற்கும் நடவடிக்கைகளை செய்துவருகின்றன.இதன் காரணமாக சிறு கைத்தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.இது தொடர்பில் அவர்கள் கைத்தொழில் அதிகார சபைக்கு  (IDB) அமைச்சர் றிஷாத் பொறுப்பான அமைச்சர்  என்ற வகையில் அவரை அணுகி முறையீடும் செய்துள்ளனர்.

அமைச்சர் றிஸாத் குறித்த அமைச்சரவை பத்திரத்தை சமர்பிப்பதற்கு முன்பு அமைச்சின் செயலாளர்களை அழைத்து இது தொடர்பில் ஆலோசனை நடத்தியுள்ளார்.இதன் போது அமைச்சுக்கள் கைத்தொழில் அதிகார சபையிடம் (IDB) குறித்த பித்தளை,செம்பு,இரும்பு போன்ற பொருட்களை வழங்குவதன் மூலம் சிறு கைத்தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்வதுடன் அவர்களை  இன்னும் ஊக்குவிக்கலாம் என தெளிவுபடுத்தியுள்ளார்.இதுவே அமைச்சரவை பத்திரத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அறியாமலேயே அமைச்சர் ஹக்கீம் இதனை எதிர்த்து பேசியுள்ளார்.இதன் போது அமைச்சர் ஹக்கீமின் கோரிக்கைக்கு இணங்க ஆறு பேர் அடங்கலான குழு நியமிக்கப்பட்டிருந்தது.இதன் தலைவராக அமைச்சர் றிஷாத் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதில் அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியல்ல,ரவூப் ஹக்கீம்,சரத் அமுனுகம,ரவி கருணாநாயக்க,எஸ்.பி திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.இக் குழு சில தடவைகள் கூடி ஆலோசனை நடாத்தியிருந்தது.இதன் போது பித்தளை செம்பு,இரும்பு ஆகியவற்றுடன்  தொடர்புடைய சிறு கைதொழிலாளர்கள் பாராளுமன்றம் அழைத்து வரப்பட்டு அவர்களிடமும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.இதன் போது அவர்களும் அமைச்சர் றிஷாத் முன் வைத்த அதே விடயங்களை கூறியுள்ளனர்.இதனை ஏற்றுக்கொண்ட குறித்த குழுவினரில் அமைச்சர் ஹக்கீமை தவிர மற்ற  அனைவரும் அமைச்சர் றிஷாதினால் முன் வைக்கப்பட்ட அவ் அமைச்சரவை பத்திரத்தில் ஒப்பமிட்டுள்ளனர் (இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளன).

அவ் அமைச்சரவை பத்திரம் மீண்டும் அமைச்சரவைக்கு சென்றுள்ளது.இதனை அமைச்சர் ஹக்கீம்  மீண்டும் எதிர்த்துள்ளார்.இதன் போது தலையிட்ட ஜனாதிபதி இதற்கு தனது தலைமையில் கூடி முடிவேடுப்போமென தீர்மானித்துள்ளார்.இப்படி இருக்கையில் இதனை அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததற்கான ஆதாரமாக கூற முற்படுவது ஏற்க முடியாத விடயமாகும்.அமைச்சரவையில் ஒரு அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கட்டு அது ஒரு அமைச்சரால் எதிர்பிற்கு உள்ளானாலும் சில காலம் கால தாமதமாவது வழமை.இதில் ஊழல் செய்ய என்னவுள்ளது?

அமைச்சரவை பத்திரத்தால் பாதிக்கப்படுவது யார் ?

இவ் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்ப்படுமாக இருந்தால் அமைச்சுக்கள் தங்களிடமுள்ள குறித்த செம்பு,பித்தளை போன்றவற்றை விற்க முடியாத நிலை ஏற்படும்.இதன் மூலம் அமைச்சர்கள் இலாபமீட்டக்கூடிய சில வழிகள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த குழுவில் உள்ள அனைவரும் அமைச்சர் றிஷாதின் அமைச்சரவை பத்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ள போதும் அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் எதிர்ப்பதற்கான காரணம் என்ன?

மேலும் சில விடயங்கள்

• அமைச்சுக்கள் தனித்தனியாக இரும்பு,செம்பு போன்றவற்றை விற்பனை செய்யும் போது அங்கு சிறு கைத்தொழிலாளர்கள் கொள்வனவு செய்ய முடியாது.பெரும் முதலீட்டார்களே கொள்வனவு செய்ய முடியும்.பெரும் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் அமைச்சர் ஹக்கீம் அவர்களை பாதுகாக்க முனைகிறாரா?
• சிறு கைத்தொழிலாளர்களுக்கு விற்கும் விலையில் அவர்கள் பாதிக்கப்படுவார்களாக இருந்தால் அதனை பேசி தீர்த்துக்கொள்ளலாம்.
• அமைச்சர் பழைய மின் கலத்தினுள் ஈயம் ஊற்றுவதாக கூறி அமைச்சர் றிஷாத் செய்த ஊழல் சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்.அப்படியானால் ஆதாரம் இருந்தும் ஏன் அமைச்சர் றிஷாத் இது தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை.
• அமைச்சர் எங்கும் தன்னிடம் ஆதாரமிருப்பதாக கூறவில்லை.அனைவரும் கூறுகிறார்கள் நானும் கூறுகிறேன் என்ற பாங்கிலேயே பதில் அளிக்கின்றார்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


அஷ்ஷஹீத் அஷ்ரப் தன்னை விளம்பரப்படுத்த சேவைகள் செய்தாரா?
"""""""""""""""""""""""""""""""""""
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மாமனிதர் அஷ்ஷஹீத் அஷ்ரப் அவர்கள் தான் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் நாடுபூராகவும் தனது ஆளுமையினால் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை இன மத வேறுபாடுகள் இன்றி செய்து காட்டினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகம், துறைமுகம், நெடுஞ்சாலைகள், பாடசாலைக்கட்டிடங்கள், வீதிகள், மின்சார வசதிகள், வைத்தியசாலைகள், குடிநீர் வசதிகள், சந்தைகள், மீள்  குடியேற்ற கிராமங்கள் என அடிக்கிக்கொண்டே போகலாம்.

பல்லாயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்களும் அவரினால் வழங்கப்பட்டுள்ளன.

அவரின் அபிவிருத்திப்பணிகள் நேற்றும் இன்றும் நாளையும் மறக்கமுடியாத சாதனைமிக்க அபிவிருத்திப்புரட்சியாகவே அமைந்துள்ளது எனலாம்.

ஆனால் இன்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருந்து கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம் அவர்கள் பதினேழு வருட காலமாக பல அமைச்சுக்களை வைத்துக்கொண்டு அபிவிருத்திப்பணிகள், வேலைவாய்ப்புக்கள் எதுவுமே செய்யாமல் தூங்கிக்கொண்டு இருந்துவிட்டு

வசந்தம் தொலைக்காட்சியின் "அதிர்வு"  நேரடி நிகழ்ச்சியிலே இன்று (2016.12.18) அஷ்ஷஹீத் அஷ்ரப் அவர்கள் அன்று தான் கட்டிய கட்டிடங்களுக்கு தனது பெயரைச்சூட்டி தன்னை விளம்பரப்படுத்தி அன்று அரசியல் செய்தார்.

இதன் மூலம் அவர் தவறு செய்தவர் என்றே தன்னால் கூற முடியும். என்று கூறியுள்ளார்.

தான் இப்படிச்செய்வதை விரும்பாதவன் என்றும் ஆணித்தரமாக தனது கருத்தை அடித்துக்கூறினார்.

இக்கருத்தின் மூலம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தான் ஒரு ஐக்கிய தேசிய கட்சியின் தொப்புள்கொடி உறவுக்காரன் என்பதை மீண்டும் நிரூபீத்துக்காட்டியுள்ளார்.

போராளிகளே சிந்தியுங்கள் அஷ்ஷஹீத் அஷ்ரப் அவர்களை இன்றைய தலைவர் குற்றம் சுமத்தியதை  உங்களால் ஜீரணிக்க முடியுமா?


சாணக்கியம் கூறிய பித்தளைப் பிரச்சினையானது முற்றிலும் பொய்யானது.அதன் உண்மைத் தன்மை என்னவென்றால்,,  கைத்தொழில் சபையானது ஒவ்வொரு பொருளையும்  தான்விரும்பும் விலைக்கு கன்ட கன்ட மாதிரி விற்பனை செய்வதன் மூலம் கள்ளன் என்று சொல்லுகிறார்கள்.  இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தேசியத் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபையூடாக அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து சிறு வியாபாரிகளுக்கு கொடுத்து அவர்களுடைய வியாபாரத்தை மேம்படுத்துவதற்காகவும் அமைச்சரவர்கள் அமைச்சரவை பத்திரம் ஒன்றைக் கொண்டுவந்தார்கள். அதுதவிர களவில் ஏற்றுவதை நிறுத்துவதற்கும் பித்தளையை இவ்வாறான முறையில் ஏற்றுமதி செய்யாமலும் ஏற்றுமதி செய்வதாயின் 35% உற்பத்திக்கு அதாவது இலங்கையிலுள்ள பொருட்களை சேர்த்து உற்பத்திப் பொருளாக ஏற்றுமதி செய்ய வேண்டுமென்று பத்திரத்தை சமர்ப்பித்தார் என்பதுதான் உண்மை. இதனை வேண்டுமென்றே பொய்யாக சோடித்து சாணக்கியம் அவர்கள் இன்றைய அதிர்வு நிகழ்வில் கூறினார். இப் பேச்சானது முற்றிலும் பொய்யானது.

Tuesday, December 13, 2016

Injuries not because of my bowling - Mathews

Angelo Mathews, who is returning from multiple injuries, hoped to "bowl quite a lot" and support Sri Lanka's frontline quicks in the three Tests against South Africa starting from December 26 in Port Elizabeth.
"I am 100 percent confident of my fitness," Mathews said. "I am hoping to bowl quite a lot in South Africa. If I can bowl a lot more, the way I did in the recent few years, I can offer a lot to my team. I've managed my workload especially in the subcontinent on slow wickets. My bowling is mostly suited when the ball is slightly swinging and seaming.
"In Asian conditions, I haven't bowled that much but if it is South Africa, Australia or England, where the ball is seaming and moving, I might have to bowl a bit more because getting wickets is also important for my team."
Earlier this June, Mathews had hobbled off the field with stiffness in his left hamstring after bowling six overs during Sri Lanka's tie with England in the first ODI in Trent Bridge. He went onto play the remaining four matches of the series, but bowled only five overs during those games.
Later in August, Mathews tore his calf while batting in the fourth ODI against Australia and missed the final one, along with the two T20Is that followed. He then pulled out of the Tests against Zimbabwe, and the one-day tri-series involving West Indies, in October and November.
Mathews insisted his injuries had nothing to do with his bowling and cited his heavy workload as a possible explanation. "If you look at my last four years I was actually told that I have played the most amount of cricket in the world," he said.
"Also if you look at my last four-five years I've been bowling quite a bit. It's just that this year I had a hamstring injury and a calf strain but apart from that I've managed to play all the games. Injuries can occur any time but I don't think it's because I bowl."
Mathews also said that niggles were inevitable for a seamer. "Injuries can occur from time to time. The fast bowlers or medium-pacers will always have niggles," he said.
"If you talk to the great Wasim Akram who recently had a workshop in Colombo, Chaminda Vaas or Champaka Ramanayake, our fast bowling coach, they will always say they had niggles. You can never wake up without one when you are playing. That is what all the fast bowlers have to put up with."

Langer to coach Australia against Sri Lanka

Cricket Australia (CA) on Friday said former opener Justin Langer will coach Australia for its three Twenty20 Internationals (T20Is) against Sri Lanka in February next year. The appointment was agreed upon during a meeting of CA’s Board of Directors here on Thursday, according to a CA release. Langer, who has twice coached the Perth Scorchers to Big Bash League success in 2014 and 2015, will step in for head coach Darren Lehmann, who will be on duty with the Test squad on their tour of India as it prepares for the opening match of a four-match series. Langer previously acted as an interim head coach in June, linking up with the One-Day International squad in the Caribbean when Lehmann took a break. He guided the team to success in a tri-series tournament against the West Indies and South Africa. The three T20Is Langer will oversee will be played at the Melbourne Cricket Ground (February 17), Kardinia Park in Geelong (February 19) and the Adelaide Oval (February 22). Commenting on Justin Langer’s appointment, Cricket Australia Executive General Manager (Team Performance) Pat Howard said: “We are delighted that Justin has agreed to undertake the role of acting Head Coach for the Twenty20 International series against Sri Lanka. We would also like to thank WACA for their support in releasing Justin. “He brings a wealth of experience as both a player and a coach and his record in helping the Perth Scorchers to a sustained level of success in the KFC Big Bash League means he fits the bill in all ways.” Langer said: “I thoroughly enjoyed the experience of working with the national side in the Caribbean earlier this year and so I am excited and very grateful to get this opportunity to do it again, this time with the Twenty20 International squad against Sri Lanka.”