Pages

.

.

Monday, January 9, 2017

வில்பத்து விடயம் தொடர்பில் எவறும் விமர்சனம் செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களிடம் கண்டிப்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று முந்தினம் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலகம் விளைவித்ததாக 60 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் விரைவில் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலும் ஆராய கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர்களுடன் இன்று நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

அங்கு மேலும் இது விடயமாக கருத்து வெளியிட்ட அவர்..

வில்பத்து காட்டை முஸ்லீம்கள் அழிக்கவில்லை அதனை அண்டிய பிரதேசங்களில் அவர்களுடைய பூர்வீக நிலங்களில் அவர்கள் குடியேறி உள்ளனர்.

எமது ஆட்சி காலத்தில் தான் நாம் அவர்களுக்கு காட்டோடு காடாகிப்போன அவர்களது பூர்வீக நிலங்களை இனங்கண்டு அவற்றை விடுவித்து கொடுத்தோம்.எமது ஆட்சி காலத்திலே அவர்களுடைய மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன அவை அனைத்தும் ஆட்ட ரீதியாக செய்யப்பட்டுள்ளன.

ஆகவே அரசியல் லாபங்களுக்காக வில்பத்து விடயத்தை விமர்சிக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த வாரம் வில்பத்து விடயம் தொடர்பில் மோசமாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெருமவை கண்டித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..

0 comments:

Post a Comment