Pages

.

.

Monday, January 23, 2017

எம்.பியாக இருக்க சல்மான் அருவருப்புப்பட வேண்டும்

அமைச்சர் ஹக்கீம் தனது நெருங்கிய சகாவான சல்மானிற்கு தற்காலிகமாகவே தேசியப்பட்டியலை வழங்கியிருந்தார்.அத் தேசியப்பட்டியலானது யாருக்கு சொந்தமானது என்பதில் பிரச்சினை இருந்தாலும் அதற்கு சல்மான் பொருத்தமற்றவர் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம்.

இது என்னுடையை தேசியப்பட்டியலென பலரும் உரிமையோடு அத் தேசியப்பட்டியலை அமைச்சர் ஹக்கீமிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.இவ்வாறான நிலையில் சல்மான் எம்.பியாக இருக்க அருவருப்புப்பட வேண்டும்.இன்னுமொருவரிற்கு சொந்தமானதை சல்மான் எவ்வாறு வைத்திருக்க முடியும்?

அண்மைக் காலாமாக தற்காலிக பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன.இதையெல்லாம் பார்த்த அவருக்கு அப் பதவியில் நீடிக்க அருவருப்பாக தெரியவில்லையா?

அது மாத்திரமல்ல இவர் ஒரு இடத்தில் கூட தான் பாராளுமன்ற உறுப்பினர் எனக் கூறி தலை நிமிர்ந்து செயற்பட முடியாத நிலை உள்ளது.அவர் யாரிடமாவது அவ்வாறு கூறுவாராக இருந்தால், “நீ டம்மி,பேசாமல் அங்கிட்டு போய் விளையாடென” சிறு பிள்ளையும் கூறும்.இப்படியான பதவியில் அவர் நீடிக்க அவருக்கு அருவருப்பாக தெரியவில்லையா?

இத் தேசியப்பட்டியலை வைத்துக் கொண்டு அமைச்சர் ஹக்கீம் மக்களை ஏமாற்றி திரிகிறார்.அதனை சல்மான் இராஜினாமா செய்து கொடுத்தால் அமைச்சர் ஹக்கீம் உரிய நபருக்கு கொடுக்க நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவார்.இந் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாது,இது தான் சாட்டென அதில் குந்தியிருக்க சல்மானுக்கு அருவருப்பாக தெரியவில்லையா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 comments:

Post a Comment