Pages

.

.

Sunday, April 23, 2017

மாணிக்கமடு சர்ச்சையை தீர்க்கவேண்டிய முழுப்பொறுப்பும் அம்பாறை அரசியல் அதிகாரமுள்ள மு.காவுக்கே உள்ளது..

அம்பாறை மாவட்டத்தில் மு.கா பலத்த அரசியல் அதிகாரங்களுடன் உள்ளது.அங்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.அதில் இருவர் பிரதி அமைச்சர் ஒருவர் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்.அங்கு மாகாண அமைச்சர் உட்பட ஐந்து மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளனர்.

இப்படி மு.கா அம்பாறை மாவட்டத்தில் நிறைவான அரசியல் அதிகாரங்களை கொண்டுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சரும் மு.காவை சேர்ந்தவரே.அடிக்கடி அமைச்சர் ஹக்கீமும் மத்தியிலும்,மாகாணத்திலும் தாங்கள் பலமிக்கவர்களாக உள்ளதாக கூறுகிறார்.

இவைகளை வைத்து சிந்திக்கும் போது இதற்குள் அமைச்சர் றிஷாத் தலையிட வேண்டிய தேவை இல்லை.இப் பிரச்சினையை மு.கா தங்களுக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி எதிர்கொள்ள முடியும்.

அமைச்சர் றிஷாத் இவ் விடயத்தை கையில் எடுத்தாலும் அவருக்கு அங்கு அரசியல் அதிகாரங்கள் இல்லாமையால் பொருத்தமான இடங்களில் தங்களது பிரதிகளினூடாக பேச முடியாது (அபிவிருத்தி குழு கூட்டங்களில்).

ஒரு கோணத்தில் இவ் விடயத்தில் அமைச்சர் றிஷாத்துக்கு மூக்கை நுழைத்து அம்பாறை மாவட்டத்தில் அரசியல் அதிகாரங்கள் இல்லாமையின் காரணமாக பூரணமாக நுழைந்து செயலாற்ற முடியாத நிலை உள்ளது.மறுபுறத்தில் அமைச்சர் றிஷாத் இது போன்ற விடயங்களில் மூக்கை நுழைக்கும் போது மு.கா உளச் சுத்தியுடன் செய்யாது போனாலும் "றிஷாதும் முயற்சித்தார் தானே! அவராலும் முடியவில்லையே" எனக் கூறி மிக இலகுவாக நழுவி விடுவார்கள்.

அவர் இவ்விடயத்தில் தலையிடாது போனால் அவ்வாறான எதனையும் மு.காவினால் கூற முடியாத நிலை ஏற்படும்.

தொடரும்....

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 comments:

Post a Comment