Pages

.

.

Monday, January 30, 2017

பஷீரின் அதிர்வு

நேற்று 2017-01-29ம் திகதி வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு  தாவூத் கலந்து கொண்டிருந்தார்.இந் நிகழ்வில் அவர் மு.காவின் இரகசியங்கள் பலவற்றை கூறிச் சென்றிருந்தார்.அவைகள் பற்றி கதைப்பது இக் கட்டுரையின் நோக்கமல்ல.

அண்மைக் காலமாக அமைச்சர் ஹக்கீம் ஹசனலி,பஷீர் சேகுதாவூத் ஆகிய இருவர் மூலம் பலத்த சவாலை எதிர்கொண்டுள்ளார்.இவர்களின் சவாலை எதிர்கொள்ள அமைச்சர் ஹக்கீமிற்குள்ள மிக இலகுவான வழி இவர்கள் இருவரையும் கட்சியை விட்டும் நீக்குவதாகும்.

இதற்கு அமைச்சர் ஹக்கீமிற்கு தகுந்த காரணமொன்று வேண்டும்.ஹசனலியை பொறுத்தமட்டில் அப்படியான பிடியை கொடுக்காமல் செயற்பட்டு வருகிறார்.பஷீர் செகுதாவூதை பொறுத்தமட்டில் அவர் அப்படியான பிடியை கொடுத்துவிடுவாரா என்ற அச்சம் எழுகிறது.

எதிர்வரும் பேராளர் மாநாட்டில் அமைச்சர் ஹக்கீமிற்கு சவாலை ஏற்படுத்தும் முகமான சில ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.இவைகளை தலைமை தாங்கி நடாத்த பஷீர் சேகுதாவூத் அக் கட்சியில் இருக்க வேண்டும்.அல்லாது போனால் ஹக்கீமிற்கு எதிரான செயற்பாடுகள் மிக இலகுவாகவே பிசி பிசித்துவிடும்.

இதற்கு முன்பு மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அமைச்சர் ஹக்கீமை நோக்கி பல வினாக்களை விடுத்திருந்தாலும் நேற்றைய நிகழ்வில் கதைத்தது போன்று கடுமையான கதைத்திருக்கவில்லை.இது அமைச்சர் ஹக்கீம் போன்றவர்கள் நிந்தவூரில் வைத்து அவரை மிகக் கடுமையாக பேசியது காரணமாக இருக்கலாம்.இவர்கள் கடுமையாக கதைத்ததற்கு தாருஸ்ஸலாம் மறக்கப்பட்ட மர்மமே பிரதான காரணமாகும்.

கடந்த நிகழ்விலே பஷீர் சேகுதாவூத் ஒரு கவர்ச்சி வழிமுறையை கையாண்டிருந்தார்.அரசியலில் ஒருவர் இன்னுமொருவர் மீது குற்றச் சாட்டை முன் வைக்கும் போது தான் தூய்மையானவர் போன்று காட்டிக்கொள்வது இயல்பு.ஆனால்,பஷீர் எனக்கும் ஒரு கோடி தந்தார்கள் என்று பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டமை “நானும் அப்படித் தான் அவர்களும் அப்படித் தான்”என்பதை துல்லியமாக்குகிறது.பஷீர் பிரதிநிதித்துவ அரசியலை தலாக் சொல்லிவிட்டதால் இதன் பாதிப்பு அமைச்சர் ஹக்கீமிற்கே!

மு.கா ஜனாதிபதி தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய மற்றும் இதர பல காரணங்களுக்காக தேசிய கட்சிகளிடமிருந்து பணம் வாங்குவதில்  தவறில்லை.இறுதிவரை மஹிந்தவை பற்றிப்பிடித்திருந்த மு.காவின் தவிசாளருக்கு ஏன் வழங்கப்பட்டது என்று சிந்தித்தாலே அப் பணமானது அவர்கள் வயிற்றை நிரப்ப வழங்கப்பட்டது என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.குறைந்தது கட்சியை வளர்க்க அப் பணத்தை பயன்படுத்தியிருக்கலாம்.இப்படி பணத்திற்கு ஆதரவளிப்போரை யாராவது பிற்பட்ட காலப்பகுதியில் மதிப்பார்களா? இவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு சமூகம் சார்ந்த விடயங்கள் பற்றி அரசின் உயர்மட்டத்தவர்களிடம் செல்வார்கள்?

எது என்ன தான் இருந்தாலும் குர்ஆன் ஹதீதை யாப்பாக கொண்டதொரு கட்சி இந்த நிலைமைக்கு சென்றிருப்பது முழு முஸ்லிம்களுக்கும் கேவலமாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.



0 comments:

Post a Comment