Pages

.

.

Sunday, February 26, 2017

சாய்ந்தமருது மக்களின் கனவுடன் விளையாட வேண்டாம்

ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து வை.எல்.எஸ் ஹமீத் சாய்ந்தமருது மக்களின் பல நாள் கனவான சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் கை வைத்துள்ளார்.இவரின் அறிக்கை சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை தடுக்கும் சிந்தனையை விதைக்கும் வகையில் அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.சகோதரர் வை.எல்.எஸ் ஹமீத் அவர்கள் சாய்ந்தமருது மக்களுக்கு இந்த துரோகத்தை ஒரு போதும் செய்து விட வேண்டாம்.சாய்ந்தமருது மக்களுக்கு துரோகம் செய்வது இவருக்கொன்றும் புதிதல்ல.இவர் சாய்ந்தமருதின் எல்லையை மாற்றியதன் பிரதான சூத்திரதாரியாக கருதப்படுபவர்.இதனை ஏன் செய்தார் போன்ற விளக்கங்களை இன்னுமொரு கட்டுரையினூடாக தெளிவுபடுத்த எண்ணியுள்ளேன் (இன் சா அல்லாஹ்).

அண்மையில் அ.இ.ம.காவினுடையை தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன்,பிரதி அமைச்சர் அமீர் அலி,அரச வர்த்தக கூட்டு தாபனத்தின் தலைவர் ஜெமீல் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக சாய்ந்தமருது மக்கள் மிக விரைவில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக்கொள்வார்கள் என்பது உறுதியாகியுள்ளது.இது நடைபெற்றால் சாய்ந்தமருதை அமைச்சர் றிஷாத் மிக இலகுவாக கைப் பற்றுவார்.அமைச்சர் றிஷாத் சாய்ந்தமருதை கைப்பற்றினால் அம்பாறை மாவட்டத்தை வீழ்த்துவது அவருக்கு மிக இலகுவாகிவிடும்.இதனை தடுக்கும் நோக்கிலேயே வை.எல்.எஸ் ஹமீத் இவ்வாறான விடயங்களை கூறி தடுக்க முனைவதாக ஊகிக்க முடிகிறது.

இத்தனை காலமும் அமைதியாக இருந்த வை.எல்.எஸ் ஹமீத் தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இவர் இத்தனை காலமும் எங்கிருந்தார்? சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கை நியாயமானதா? என பல இடங்களில் விவாதிக்கப்பட்டு மக்களின் ஆணையை பெற்ற அனைத்து அரசியல் வாதிகளும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அப்போதெல்லாம் இவர் வாய் மூடி மௌனமாக இருந்துவிட்டு இப்போது கொதிப்பதன் மர்மம் என்ன? இவரின் பின்னணியில் அ.இ.ம.காவின் எதிரிக் கட்சியின் பின்புலம் உள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.எது எவ்வாறு இருந்தாலும் சாய்ந்தமருது மக்களுக்கு துரோகமிழைக்கும் இவ்வாறான பேச்சுக்களை வை.எல்.எஸ் ஹமீத் தவிர்க்க வேண்டும்.

அல்-ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ் (சாய்ந்தமருது)
அமைச்சர் றிஷாதின் சேவைகளை அம்பலத்திற்கு கொண்டு வரும் பணியில் முஸ்லிம் காங்கிரஸினர்

(இப்றாஹீம் மன்சூர்)

பாக்கிஸ்தான் பல்கலைக் கழகம் ஒன்றினால் அமைச்சர் றிஷாதின் வேண்டுகோளுக்கு ஏற்ப வழங்கப்பட்ட மருத்துவ படிப்பிற்கான புலமைப் பரிசில் அமைச்சர் றிஷாதின் மகளுக்கும் அமைச்சர் றிஷாதின் வட மாகாணத்திற்கான இணைப்புச் செயலாளருமான முனவ்வர் என்பவரது மகளுக்கும் வழங்கப்பட்ட விடயம் பலத்த பேசு பொருளாகவுள்ளது.இந்த புலமை பரிசில் இவ் வருடம் மாத்திரம் அமைச்சர் ரிஷாதினால் வழங்கப்படவில்லை.பல வருடங்களாக வழங்கப்பட்டே வருகிறது.இதனை யாருமே அறிந்திருக்கவில்லை.இம் முறை மு.காவினர் இதனை பெரிதாக தூக்கிப் பிடித்ததால் இவ் விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.சீரிய முறையில் சிந்திக்கும் ஒருவன் இதனை அமைச்சர் றிஷாத் தனது புகழ்ச்சிக்காக பயன்படுத்தாது சமூக உணர்வோடு செய்து வருகிறார் என்பதை அறிந்து கொள்வான்.இதனை புகழ்ச்சிக்காக பயன்படுத்த சிந்தித்திருந்தால் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருப்பாரல்லவா? ஒரு புலமை பரிசிலின் பெறுமதி ஒரு கோடி ரூபாய்.இது வரை அண்ணளவாக ஐம்பத்து ஐந்து புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அமைச்சர் றிஷாத் மறைத்ததில் ஒரு விடயமுள்ளது.இது பாகிஸ்தான் புலமை பரிசில் என்பதால் இது பகிரங்கமாகும் போது இனவாத அமைப்புக்களிடமிருந்து எதிர்ப்புக்கள் தோன்றலாம்.இதனை தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு படுத்தி பேச வாய்ப்புள்ளது.மு.காவினரின் இச் செயற்பாட்டினால் எதிர்காலத்தில் இவ்வாறு புலமை பரிசில் அனுப்புவதில் சிரமம் ஏற்படலாம்.பேரின மாணவர்களும் அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழலாம்.மு.காவினரின் இச் செயற்பாடு வைக்கோல் பட்டறையில் உள்ள நாயின் செயற்பாடு போன்று செய்வதுமில்லை செய்வோரை விடுவதுமில்லை என்ற வகையில் அமைந்துள்ளது.

இம் முறை அமைச்சர் றிஷாதின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த பல்கலைக் கழகத்திலிருந்து மொத்தமாக 21 புலமை பரிசில் கிடைத்துள்ளது.இப் பல்கலைக் கழகம் பெண்கள் மாத்திரம் கல்வி பயிலும் ஒரு பல்கலைக் கழகமாகும்.அமைச்சர் றிஷாத் தனது மகளை பெண்கள் மாத்திரம் கல்வி பயிலும் தரமிக்க பல்கலைக் கழகம் ஒன்றில் சேர்க்க விரும்பியதால் குறித்த தொகை மாணவர்களோடு மேலதிகமாக 22வதாக தனது மகளின் பெயரை இட்டு அமைச்சரின் மகள் என குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.குறித்த பல்கலை கழகம் 22 பேருக்கும் புலமை பரிசிலை வழங்கியுள்ளது.அமைச்சர் றிஷாத் தனது மகளின் பெயரை இணைக்காமல் விட்டிருந்தால் 21 பெயர் பட்டிலைத் தான் வழங்கியிருப்பார்.அமைச்சரின் மகள் என்பது மறைக்கப்பட்டு அப் பல்கலைக் கழகம் அமைச்சர் றிஷாதின் மகளுக்கு புலமை பரிசில் வழங்கவில்லை என்பதுவே இங்கு சிந்திக்கத்தக்கது.இதனை இன்னுமொரு வகையில் கூறப்போனால் அமைச்சர் றிஷாத் மீது கொண்ட நல்லெண்ணத்தால் அப் பல்கலைக் கழகம் அமைச்சர் றிஷாதின் மகளுக்கு வழங்கிய புலமைப் பரிசிலாகவும் இதனை கூறலாம்.இருந்த போதிலும் அவரது மகள் இறுதித் தருவாயில் தனது புலமை பரிசிலை ஒரு ஏழை மாணவிக்கு விட்டுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்ககது.இது இவ் விமர்சனங்கள் எழுவதற்கு முன்பே நடைபெற்ற விடயமாகும்.

அமைச்சர் றிஷாதின் வட மாகாண இணைப்பாளர் முனவ்வர் என்பவர் கோடீஸ்வரல்ல.அவர் ஒரு அரசாங்க ஊழியர்.அவருக்கு தனது மகளை பணம் செலுத்தி வைத்தியராக்குவது கடினமான ஒரு விடயம்.தாங்கள் பாடு பட்டு வளர்த்த ஒரு கட்சியினால் ஒரு நன்மை ஏற்படும் போது அதனை அவர் சுவைப்பதில் என்ன தவறுள்ளது.இவ்வாறான சந்தர்ப்பங்களில் தனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் றிஷாத் முன்னுருமை வழங்குவதில் தவறில்லை.மு.காவினருக்கு இப்படியான புலமை பரிசில் வேண்டுமென்றால் அமைச்சர் ஹக்கீமை பெற்று வர அழுத்தம் வழங்குங்கள்.அதை விட்டு விட்டு அமைச்சர் றிஷாதை இகழ் வேண்டாம்.இவரது மகளுக்கு வழங்கப்பட்டதன் மூலம் அமைச்சர் றிஷாத் தனக்கு கிடைத்த புலமை பரிசிலை ஏனைய சில அரசியல் வாதிகள் போன்று விற்பனை செய்யாது தனது ஆதரவாளர்களுக்கு வழங்கியுள்ளமையை அறிந்து கொள்ளலாம்.

இதன் பிறகு இன்னுமொரு பல்கலை கழகத்திடமிருந்து 5 அரை புலமை பரிசில் கிடைத்துள்ளது.அதில் உள்ள மாணவி ஒருவருக்கு அரசி வாசி பணம் செலுத்துமளவு பணம் இல்லாமையாலேயே தனது மகளை விட்டுக்கொடுக்கச் செய்து முழு புலமை பரிசிலுக்கு உள் வாங்கப்பட்டிருந்தார்.உதவி செய்யாது போனாலும் பரவாயில்லை.உபத்திரம் செய்ய வேண்டாம்.

எமது சமூகத்தில் கல்வி நிலையை உயர்த்த பாடு பட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாதை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.இத் தியாகத்தில் பங்கு கொண்ட அவரது குடும்பத்தையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ளட்டும்.


Saturday, February 25, 2017

அமைச்சர் றிஷாத் வில்பத்து பிரச்சினையை  தேர்தலுக்காக கிளறுகிறாரா?

(இப்றாஹீம் மன்சூர்)

அமைச்சர் றிஷாத் வில்பத்து பிரச்சினை தேர்தலுக்காக கிளறுகிறாரா என்ற சந்தேகம் மு.காவின் ஆதரவாளர்கள் சிலருக்கும் அண்மையில் எழுந்த தேசியப்பட்டியல் பிரச்சினையால் அமைச்சர் றிஷாதை விட்டும் பிரிந்து சென்ற அ.இ.ம.காவின் முன்னாள் செயலாளருக்கும் அடிக்கடி எழுகிறது.இது தவிர்ந்த மற்ற அனைவரும் அமைச்சர் றிஷாதை வில்பத்து பிரச்சினைக்காக போராடும் ஒரு போராட்ட நாயகனாகவே பார்க்கின்றனர்.

அமைச்சர் ஹக்கீம் 2017-01-15ம் திகதி ஞாயிற்று கிழமை புத்தளத்தில் வைத்து வில்பத்து பிரச்சினையில் இனவாத பின்னணி உள்ளதாக பகிரங்கமாகவே கூறியிருந்தார்.தலைவர் ஏற்றுக்கொண்டும் ஆதரவாளர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமையின் காரணம் என்ன? அதுவும் இதில் மாத்திரம்? இதனை விட்டால் அமைச்சர் றிஷாத் வளர்ந்துவிடுவார் என்ற அச்சம் தான் இதற்காக காரணமாக ஊகிக்க தோன்றுகிறது.அண்மையில் தோன்றிய வில்பத்து பிரச்சினையின் போது அமைச்சர் றிஷாத்துடன் அசாத் சாலி,ஹிஸ்புல்லாஹ்,முஜீபுர் ரஹ்மான் என பல கட்சிகளை சேர்ந்த அரசியல் வாதிகளும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உட்பட பல சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்திருந்தன.இதில் மு.காவின் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்சாத் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் றிஷாத் இதனை அரசியலுக்காக பயன்படுத்தினால் அதனை இன்றைய அரசின் உயர் மட்டத்து தொடர்புகளை கொண்டுள்ள இவர்கள் அறியாமல் இருப்பார்களா?

கடந்த சில நாட்கள் முன்பு சூழலியலாளர் அமைப்பு ஊடாக மாநாடு ஒன்றை நடாத்தி இருந்தது.அம் மாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலாளர்களுக்கு பென் டிரைகள் வழங்கப்பட்டிருந்தன.அவ்வாறு வழங்கப்பட்ட பென் டிரைவ்களில் அமைச்சர் றிஷாதின் அமைச்சின் கீழ் உள்ள நுகர்வோர் அதிகார சபையின் சின்னம் பொறிக்கப்பட்ட இலட்சனைகள் கண்டிபிடிக்கப்பட்டிருந்தன.இதனை வைத்தே அமைச்சர் றிஷாத் திட்டமிட்டே இவ்விடயத்தை தேர்தல் காலத்தில் கிளறுகிறார் என்ற குற்றச் சாட்டை முன் வைக்கின்றனர்.வில்பத்து பிரச்சினை எழும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அமைச்சர் றிஷாதின் உயிர் சென்று வரும் என்பதுவே உண்மை.அது மாத்திரமல்ல இதன் மூலம் அவர் பேரின சமூகத்தின் எதிரியாகவும் மாறுகிறார்.இது அவரின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது.நிலை இவ்வாறுள்ள போது வில்பத்து பிரச்சினையை அமைச்சர் றிஷாத் கிளருவாரா? சாமானிய மக்களே! சற்று சிந்தித்து பாருங்கள்.

ஒரு ஸ்டிக்கரை ஒட்டி இலட்சனையை மறைத்து பென் டிரைவ்களை வழங்குவது மிகவும் ஆபத்தானது.அந்த ஸ்டிக்கர்கள் மிகவும் இலகுவான முறையில் கழற்றக் கூடியதாகவும் இருந்துள்ளது.அமைச்சர் றிஷாத் அவ்வாறு செய்திருந்தாலும் இந்தளவு பொடு போக்காக இருந்திருப்பாரா? நுகர்வோர் அதிகார சபையின் பென் டிரைவ்களை அமைச்சர் றிஷாத் ஊடகவியாலர்களுக்கு வழங்க முடியாது.இது தெரிய வந்தால் சட்ட ரீதியான சிக்கலுக்கும் உட்படும்.இன்று இது தொடார்பில் விமர்சிப்பவர்கள் நுகர்வோர் அதிகார சபையின் பென் டிரைவ்களை எவ்வாறு அமைச்சர் றிஷாத் ஊடகவியலாளர்களுக்கு வழங்க முடியும் என சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும்.ஏன் அவ்வாறு இன்று விமர்சிப்பவர்கள் யாரும் செல்லவில்லை?

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.வை.எல்.எ ஹமீத் தனது பதிவில் முறைப்பாடு செய்து ஒரு வாரமாகியும் அதனை கண்டு பிடிக்காமையை வைத்து அமைச்சர் றிஷாத் மீது குற்றம் சாட்ட முற்படுகிறார்.வை.எல்.எஸ் ஹமீத் அவர்களே! பொலிஸில் முறைப்பாடு செய்து அவர்கள் குற்றவாளியை கண்டு பிடிக்கவில்லையென்றால் அதற்கு அமைச்சர் றிஷாத் எந்த வகையில் பொறுப்பாவார்? இன்று பொலிசால் கண்டுபிடிக்கப்படாத குற்றச் சாட்டுக்களுக்கு முறைப்பாடு செய்தவர் தான் காரணம் என்று வை.எல்.எஸ் ஹமீத் கூற வருகிறாரா? அமைச்சர் றிஷாதை குற்றம் சுமத்த முனைந்து உங்கள் அறிவை கொச்சை படுத்த வேண்டாம்.

அமைச்சர் றிஷாத் பென் டிரைவ் கொடுக்க வேண்டும் என சிந்தித்திருந்தால் அதனை தனது சொந்தப் பணத்தில் மூலமே வழங்க வேண்டும்.அதற்கு நுகர்வோர் அதிகார சபையின் இலட்சினை பொறிக்க வேண்டியதன் அவசியமென்ன?

வை.எல்.எஸ் ஹமீத் தனது பதிவின் ஓரிடத்தில் பொது பல சேனா மீது அமைச்சர் றிஷாத் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகிறார்.இதனை தனது மனதில் ஏற்படத் கீறலாகவும் குறிப்பிடுகிறார்.இன்றும் அமைச்சர் றிஷாத் ஞானசார தேரருக்கு எதிரான முறைப்பாட்டில் நீதி மன்றம் ஏறி இறங்கி திரிகிறார்.பல முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளார்.இப்படி இருக்கையில் அமைச்சர் றிஷாத் பொது பல சேனா மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எப்படி கூற முடியும்? இது தனது மனதில் ஏற்பட்ட கீறலாக கூறுவதன் மூலம் பொது பல சேனாவிற்கும் அமைச்சர் ரிஷாதிற்கும் தொடர்புள்ளதாக கூற முற்படுகிறார்.அப்படியானால்,எதற்கு அங்கு பணி புரியும் ஊழியரை கொண்டு வட்டரக்க விஜித தேரர் தொடர்பான விடயத்தை பொது பல சேனாவிற்கு அறிவிக்க வேண்டும்?

உண்மையில் நடந்தது என்ன?

அமைச்சர் றிஷாத் அமைச்சராவதற்கு முன்பு இருந்த அமைச்சரின் காலத்தில் ஒரு குறித்த நிறுவனத்திடமிருந்து நுகர்வோர் அதிகார சபையினூடாக சில பென் டிரைவ்கள் ஓடர் செய்யப்பட்டுள்ளன.அந்த பென் டிரைவ்கள் சில காரணங்களுக்காக நுகர்வோர் அதிகார சபை பொறுப்பெடுக்கவில்லை.அந்த பென் டிரைவ்கள் அப்படியே அந் நிறுவனத்திடம் இருந்துள்ளன.குற்றம் சாட்டப்படும் ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்கள் அந் நிறுவனத்திடம் சென்று பென் டிரைவ்களை வாங்கிய போது குறைந்த விலையில் நுகர்வோர் ஓடர் செய்து பொறுப்பெடுக்கப்படாத பென் டிரைவ்கள் விற்கப்பட்டுள்ளன.இதுவே நடைபெற்ற உண்மை சம்பவமாகும்.

அங்கு வழங்கப்பட்ட பென் டிரைவ்களில் நுகர்வோர் அதிகார சபையின் இலட்சனைகள் மாத்திரம் பொறிக்கப்பட்டிருக்கவில்லை.வேறு சில நிறுவனங்களின் பெயர்களும் பொறிக்கப்பட்ட பென் டிரைவ்களும் விநியோகிக்கப்பட்டிருந்தன.இதற்கான ஆதாரமும் எம்மிடம் உள்ளன.ஒரு அரச நிறுவனத்தின் பெயரை வைத்து அவ்வளவு இலகுவில் விளையாடி வெல்ல முடியாது.இதனை வைத்து சிந்தித்தால் இந்த விளையாட்டு இப்படித் தான் நடந்திருக்கும் என்பதை .எவ்வித சந்தேகமுமின்றி அறிந்து கொள்ளலாம்.

இதற்கு வை.எல்.எஸ் ஹமீத் எந்தெந்த விதத்தில் பதில் அளிப்பார் என்பது தெரியும்.அப்படி அவர் பதில் அளிப்பாராக இருந்தால் அதற்கு நாங்களும் பதில் அளிக்க தயாராகவே உள்ளோம்.


Thursday, February 16, 2017

அமைச்சர் ஹக்கீமின் இயலாமை விளையாட்டே செயலாளர் அதிகாரம் குறைப்பு

இன்றைய அரசியல் அரங்கில் ஹசனலி விவகாரமே சூடு பிடித்து காணப்படுகிறது.கடந்த பேராளர் மாநாட்டின் போது மு.காவின் செயலாளர் அரசியல் பதவி வகிக்க முடியாதவாறு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.இந் நிலையில் பலரது வாய்களில் “இது போன்று மர்ஹூம் அஷ்ரபிற்கு செய்ய தெரியாதா? இதனை அமைச்சர் ஹக்கீம் இப்போது ஏன் செய்கிறார்?” போன்ற வினாக்களை அவதானிக்க முடிகிறது.

மர்ஹூம் அஷ்ரப் தனது தலைமைத்துவ காலத்தில் யாராலும் அசைக்க முடியாதளவு மிகவும் உறுதியாக இருந்தார்.செயலாளர் பதவி அதிகாரமிக்கதாக இருந்தாலும் அவரின் தலைமைத்துவ உறுதியின் காரணமாக அதனைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை.அது போன்று அஷ்ரபின் காலத்தில் மஷூர அடிப்படையிலான தீர்மானங்களே அதிகம் எடுக்கப்பட்டது.எனவே,செயலாளர் கட்சித் தீர்மானங்களுக்கு உடன்பட்டே ஆக வேண்டும்.இங்கு பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை.

இது வரை காலமும் அமைச்சர் ஹக்கீமும் இவைகள் பற்றி சிந்திக்கவில்லை.அண்மைக் காலமாகவே இது பற்றிய நகர்வுகளை செய்து வருகிறார்.இவர் உறுதியான தலைவராகவும்,மஷூரா அடிப்படையில் தீர்மானங்களையும் எடுத்தால் இப் பதவிக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை.மஷூரா அடிப்படையில் அனைவரும் கலந்துரையாடி எடுக்கும் முடிவுடன் நியமிக்கப்படும் அதிகாரமிக்க செயலாளர் முரண்பட முடியுமா? அமைச்சர் ஹக்கீமின் தனிப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொண்டு ஒரு செயலாளர் செயற்பட வேண்டுமென யாரும் எதிர்பார்க்க முடியாது.அப்படி செயற்பட வேண்டுமாக இருந்தால் தலைமைத்துவம் மிகவும் உறுதியானதாக இருக்க வேண்டும்.தற்போதையை அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவம் உறுதியானதாக இல்லை.அதனாலேயே தன் தலைமைத்துவத்தை பாதுக்காக்க இப்படியான பாதுகாப்பு அரண்களை அமைத்து வருகிறது.

இன்றும் மு.கா மஷூரா அடிப்படையில் செயற்பட உத்தேசிக்குமாக இருந்தால் அதிகாரமிக்க செயலாளருக்கு தலைமைத்துவம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.மஷூரா அடிப்படையிலான தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியை கொண்டு செல்லும் போது அது வேறு திசையில் பயணிக்க தொடங்கும்.இதன் பிறகு மஷூறா அடிப்படையிலான தீர்மானங்களுக்கு கட்சியை கொண்டு செல்ல முடியாது.அப்படி கொண்டு சென்றால் கட்சியின் தலைமைத்துவம் பல சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும்.இதனை விளக்கமாக கூறி வம்பை வளர்க்காமல் விதைத்த வினை அறுவடை செய்யும் காலம் நெருங்கிவிட்டதால் பலமிக்க மு.கா என்ற கட்சியை தான் தனது கைக்குள் வைத்திருப்பதே தலைமைத்துவம் தன்னை பாதுகாத்து கொள்ள மிகவும் சிறந்த வழியாகும்.

இப்போதைய செயலாளரின் ஒரு உத்தியோக பூர்வ அறிக்கையையாவது யாராவது கண்டுள்ளீர்களா? அறிக்கை விட அனுமதி வேண்டும் என்ற நிலை ஒரு கட்சியின் அனைத்து விடயங்களிலும் தெளிவிருக்க வேண்டிய செயலாளருக்கு இருப்பது சிறந்ததல்ல.அமைச்சர் ஹக்கீம் தனது பலமிக்க எதிரிகளை கூட்டிக் கொண்டே வருகிறார்.இப்படித் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை அனைத்து எதிரிகளும் சேர்ந்து துரத்தி அடித்தனர்.இந் நிலை அமைச்சர் ஹக்கீமிற்கும் மிக விரைவில் வரலாம்.இந் நேரத்தில் அனைவரையும் அரவணைத்து செல்லும் போக்கே அமைச்சர் ஹக்கீமிற்கு பொருத்தமானது.குறைந்தது மிக விரைவில் வரவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வரையாவது இப் போக்கை தொடர வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


விளக்கமில்லாமல் அறிக்கை விட்ட வை.எல்.எஸ் ஹமீத்

(இப்றாஹீம் மன்சூர்)

“வேண்டாத பொண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” என்ற பழ மொழியை நினைவு படுத்தியவனாக இக் கட்டுரையை வரையலாம் என நினைக்கின்றேன்.வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் மீது கொண்ட கோபத்தை,அவரை எழுத்தின் மூலம் கரித்து கொட்டுவதிலிருந்து தீர்க்கலாம் என சிந்திக்கின்றார்.தற்போது வை.எல்.எஸ் ஹமீதிற்கு அரசியல் ரீதியான எந்த தளமுமில்லை.எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதற்கான சாதக நிலை உருவாகி வருகிறது.இந்த கூட்டமைப்பில் வை.எல்.எஸ் ஹமீதும் நுழைந்து கொண்டால் மிக இலகுவாக தனக்கான தளத்தை கட்டமைத்து கொள்ளலாம்.அதற்கு “நானும் ரௌடி தான்” என்ற வடிவேலின் நகைச்சுவை வரி போன்று “நானும் அரசியல் வாதி தான்” என மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.அதற்கு அவர் இப்படி ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.செய்து கொண்டே இருப்பார்.

அவர் தனது “கிழக்கு முதலமைச்சர் தனது கட்சிக்கு கிடைத்தால் கிழக்கு மாகாணத்தையே குடிசையின்றி ஆக்குவேன்” என்ற அமைச்சர் றிஷாதின் கூற்றிற்கு 12இற்கும் மேற்பட்ட வினாவை அடுக்கிய அவரது கட்டுரையை “மேற்படி செய்தியை சில அமைச்சர்கள் தெரிவிப்பதாக சமூக வலைத்தளங்கள் தெரிவிக்கின்றன” என்றே ஆரம்பிக்கின்றார்.இதிலிருந்து அமைச்சர் றிஷாத்தின் குறித்த பேச்சை இவர் முழுமையாக கேட்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம் (தேசியப்பட்டியல் விவகாரத்திலும் கேட்டிருந்தால் இவரே இன்று ராஜா என்பது வேறு விடயம்).ஒரு வரியை வைத்து ஒரு போதும் விமர்சிக்க முடியாது.முன்,பின் போன்ற பல விடயங்களை அவதானித்த பிறகே ஒன்றின் மீதான விமர்சனத்தை செய்ய வேண்டும்.இன்று பொது பல சேனா அமைப்பானது குர்ஆன் வசனங்களை முன்,பின் அவதானிக்காதே விமர்சனனம் செய்து கொண்டிருக்கின்றமையை இவ்விடத்தில் நினைவு படுத்துவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன்.இன்று சாதாரணமாக முக நூல் நேரடி ஒளிபரப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் உள்ளன.அதனை சென்று பார்க்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அவர் தனது அறிக்கையில் அமைச்சர் றிஷாத் என்ற வார்த்தையை எங்கும் பயன்படுத்தவில்லை (இது அவருக்குத் தான் எழுதப்பட்டதென்பதை சிறு பிள்ளையும் அறியும்).ஏன் பயன்படுத்தவில்லை? முழுமையாக நனைந்த பின் முக்காடு எதற்கு? அவர் தனது அறிக்கையில் “சில அமைச்சர்கள்” என்றே குறிப்பிடுகிறார்.இது பன்மை வசன அமைப்பாகும்.அவரது 11வது வினாவிலும் பன்மை வசன அமைப்பை அவதானிக்க முடிகிறது.இருப்பினும் அவரது 10வது வினா ஒருவர் கூறியதை அடிப்படையாக கொண்டுள்ளது.இன்னும் பல இடங்களில் ஒருமை வசன அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.அதாவது ஒருமை வசன அமைப்பு.வை.எல்.எஸ் ஹமீத் அறிக்கை எழுத முன்பு ஒருமை,பன்மை பற்றி அறிந்தெழுதுவது சிறப்பாக இருக்கும்.இதற்கு முன்பும் இவ்விடயத்தை எனது கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டிய நினைவுள்ளது.

இவரது கட்டுரையில் உள்ளடக்கிய வினாக்களை இரு பகுதிகளாக பிரித்து நோக்கலாம்.ஒன்று மாகாண சபையின் அதிகாரத்தை கொண்டு இதனை செய்வது சாத்தியமா? இரண்டாவது ஒரு பலமிக்க அமைச்சராக உள்ள நீங்கள் இதனை செய்ய முடியுமாக இருந்தால் ஏன் வடக்கு மீள் குடியேற்றத்தை செய்யவில்லை? இந்த இரண்டு வினாவிற்குமான பதிலை ஒரு விடயத்தை அறிந்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.2012ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வெறும் ஏழு ஆசனங்களை வைத்துக் கொண்டு முதலமைச்சை தீர்மானிக்கும் பேரம் பேசும் சக்தியை பெற்றுக்கொண்டது.இதன் போது அவர்கள் மஹிந்த அணியினருடன் கரையோர மாவட்டம் உட்பட பல ஒப்பந்தங்களை செய்தனர்.இன்று அதனைப் பற்றி பேச யாருமில்லை என்பது வேறு விடயம்.கரையோர மாவட்டம் இலங்கை அரசியலமைப்புடன் சம்பந்தப்பட்ட விடயம்.கிழக்கு முதலமைச்சு இலங்கையின் அரசியலமைப்பில் தாக்கம் செலுத்துமளவு சக்தி வாய்ந்ததென்பதை இதனூடாக அறிந்து கொள்ளலாம்.முதலமைச்சு பதவியை நேரடியாக நோக்குகின்ற சக்தி மிக்கதோ இல்லையோ மறைமுகமாக பல விடயங்களை அதனூடாக சாதிக்கலாம்.இந் நிலையில் முதலமைச்சுக்கும் கரையோர மாவட்டத்திற்கும் என்ன சம்பந்தமுள்ளதென வை.எல்.எஸ் ஹமீத் கேட்பாரா?

அமைச்சர் றிஷாத் திருகோணமலையில் சில விடயங்களை செய்ய நினைத்த போது தனது மாகாண சபை அதிகாரத்தை கொண்டு முதலமைச்சர் தடுத்தி நிறுத்தி இருந்தார்.இதனை அமைச்சர் றிஷாத் குறித்த தினம் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார்.இதனை தடுக்கும் அதிகாரம் முதலமைச்சுக்குள்ளதா என சிந்தித்தால் “ஆம்” என்றே கூறலாம்.ஒரு மாகாணத்தின் முக்கிய அரசியல் பதவி முதலமைச்சாகும்.எனவே,கிழக்கு மாகாணத்தில் ஒரு வேலை செய்ய வேண்டுமாக இருந்தால் கிழக்கு முதலமைச்சரின் ஆதரவு சில இடங்களில் நேரடியாகவும்,மறைமுகமாகவும் தேவைப்படும்.இலங்கை முஸ்லிம்களுக்கு உள்ள மிகப் பெரும் பேரம் பேசும் சக்தி கிழக்கு முதலமைச்சு மூலமே கிடைக்கும்.இதனை அமைச்சர் ஹக்கீம் தனது 27வது பேராளர் மாநாட்டு தலைவர் உரையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இப்படி பல விடயங்களை அடிப்படையாக கொண்டே அமைச்சர் றிஷாத் கிழக்கு முதலமைச்சர் தனது கட்சிக்கு கிடைத்தால் கிழக்கு மாகாணத்தையே குடிசையின்றி ஆக்குவேன் என்று கூறி இருந்தாரே ஒழிய வை.எல்.எஸ் ஹமீத் சிந்திப்பது போன்றல்ல.வை.எல்.எஸ் ஹமீத் ஒரு வசனத்தை வைத்து விமர்சிக்கும் கீழ் தரமான நிலைக்கு தள்ளப்பட்டமையே கவலைக்குரிய விடயமாகும்.உங்கள் ஆட்டங்கள் இங்கே செல்லாது.வேறு பக்கம் சென்று விளையாடுங்கள்.


Wednesday, February 15, 2017

அமைச்சர் ஹக்கீம் அல்லாஹ்வை முன்னிறுத்தி ஏமாற்றியது கண்டிக்கத்தக்கது

தற்போது நான் அ.இ.ம.காவின் ஆதரவாளில் ஒருவன் தான்.இதற்கு முன்பு மு.காவுடனே எனது அரசியல் பயணத்தை செய்திருந்தேன்.அமைச்சர் ஹக்கீம் மீது கொண்ட அதிருப்தியினாலேயே அதிலிருந்து வெளியேறி இன்று மக்களுக்காக உண்மையான அரசியல் செய்து கொண்டிருக்கும் அ.இ.ம.காவுடன் திருப்திகரமாக அரசியல் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன்.என்னைப் போன்றே இன்று மு.காவை எதிர்க்கின்ற பலர் அமைச்சர் ஹக்கீம் மீது கொண்ட அதிருப்தியினாலேயே எதிர்க்கின்றார்களே ஒழிய மு.கா என்ற அஷ்ரப் உருவாக்கிய கட்சி மீது யாருக்கும் வெறுப்பில்லை.இன்று கூட யாராவது மு.காவிற்கு ஏசினால் அக் கட்சி மீது கொண்ட பற்று என் உள்ளத்தை காயப்படுத்துகிறது என்ற விடயத்தை முதலில் கூறியவானாய் விடயத்திற்கும் நுழையலாம் என நினைக்கின்றேன்.

முன்னாள் மு.காவின் செயலாளர் நாயகம் ஹசனலி இன்று நேற்று அரசியல் வாழ்விற்கு வந்தவரல்ல.இன்று வரை மு.காவில் கொள்கை ரீதியான அரசியல் செய்து கொண்டிருப்பவராக அவரையே பலரும் கூறுகின்றனர்.இன்று அவரை அமைச்சர் ஹக்கீம் ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளார்.சில நாட்கள் முன்பு ஹசனலி சில சட்ட ரீதியான விடயங்களை வைத்து தேர்தல் ஆணையாளரினூடாக அமைச்சர் ஹக்கீமிற்கு எதிரான காயை நகர்த்திய போது அதில் அகப்பட்டுக் கொண்ட அமைச்சர் ஹக்கீம் ஹசனலியிடம் தேசியப்பட்டியல் மற்றும் பூரண அதிகாரமிக்க செயலாளர் பதவி ஆகிய இரண்டையும் தருவதாக வாக்குறுதியளித்து அப் பொறியில் இருந்து தப்பித்துக் கொண்டார்.

ஹக்கீம் சொல்லும் சொல்லை காப்பாற்றுபவர் அல்ல என்பது ஹசனலிக்கு மாத்திரமல்ல ஊரிற்கே தெரியும்.அவரே பல இடத்தில் ஹக்கீமின் ஏமாற்றுகைக்குள் அகப்பட்டுள்ளார்.இந் நிலையில் “நீங்கள் எப்படி அமைச்சர் ஹக்கீமின் வார்த்தைகளை நம்பினீர்கள்?” என பலரும் ஹசனலியிடம் கேட்டுள்ளனர்.இதற்கு ஹசனலி இரண்டு ரகஅத் சுன்னத் தொழுதுவிட்டு வந்தே என்னிடம் வாக்குறுதியளித்தார்.அதனாலேயே நம்பினேன் என்று பலரிடமும் கூறி வருகிறார்.ஒரு முஸ்லிம் இதனை நம்புவான் தானே? இதனை செய்துவிட்டு மாறு செய்கின்றவரை என்ன சொல்வது? இங்கு ஹசனலி நல்லவரா? கெட்டவரா? என்பதற்கெல்லாம் அப்பால் அல்லாஹ்வை முன்னிறுத்தி செய்த விடயத்தை அமைச்சர் சிறிதும் கணக்கெடுக்காது செயற்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கது.அமைச்சர் ஹக்கீம் செயலாளரை தானே முன்னின்று தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.இதற்கான கூலியை அவர் விரைவில் பெற்றுக்கொள்வார்.

இதற்கான கூலியை அல்லாஹ் வழங்குவான் என்று நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.குர்ஆன்,ஹதீதை யாப்பாக கொண்ட கட்சிக்கு அல்லாஹ்வை முன்னிறுத்தி ஏமாற்றுபவர் எவ்வாறு தலைமை வகிக்க தகுதியானவராக கூற முடியும்.இவ்விடயம் இன்று பலரது வாய்களிலும் உச்சரிக்கப்படுகின்ற போதும் சில மு.காவின் ஆதரவாளர்கள் அதனை பெரிதும் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை.இப்படியானவர்கள் அல்லாஹ்வை விட எங்களுக்கு அமைச்சர் ஹக்கீமே முதன்மையானவர் என்ற தங்களது எண்ணத்தை வெளிப்படுத்துகின்றனர் (அல்லாஹ் இப்படியான எண்ணங்களிலிருந்து எங்கள் அனைவரையும் பாதுகாப்பானாக).

மு.காவின் தீவிர ஆதரவாளர்களே!

நாம் எமது உயிரிலும் மேலாக அல்லாஹ்வை நேசிப்பவர்கள் அல்லவா?

நீங்கள் அடுத்தவர் விடயத்தில் தான் அமைச்சர் ஹக்கீமிடம் கேள்வி கேட்காது மௌனமாக இருக்கின்றீர்கள் அல்லாஹ்வின் விடயத்திலும் அப்படி இருந்தால் எப்படி? நாம் முஸ்லிம்களல்லவா?

வாக்குறுதியளித்து ஏமாற்றுவது அமைச்சர் ஹக்கீமிற்கொன்றும் புதிதல்ல.தேசியப்பட்டியல் வாக்குறுதிகளை எடுத்து பார்த்தாலே அதனை சாதாரணமாக விளங்கிக்கொள்ளலாம்.பேரியல் அஷ்ரப்,அமைச்சர் ஹக்கீம் ஆகியோர் இணைத் தலைமைத்துவமாக இருந்த போது அதனை விட்டுத் தாருங்கள் உங்களுக்கு செயலாளர் பதவியை தருகின்றேன் என்ற கனவான் வாக்குறுதியை அமைச்சர்  ஹக்கீம் அன்னை பேரியல் அஷ்ரபிற்கு வழங்கியிருந்தார்.பின்னர் அதனை மீறி இருந்தார்.அமைச்சர் ஹக்கீமிற்கு ஏமாற்றுவதொன்றும் புதிதல்ல.

அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ் (சாய்ந்தமருது)


கல்முனை ஸாஹிரா கல்லூரி விவகாரம்
--------------------------------------------------------------
லங்கா அசோக் லேலண்ட் கம்பனியின் தலைவர் டாக்டர் சிராஸ் மீராசாஹிபினால் கல்முனை ஸாஹிறா கல்லூரிக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த பஸ் வண்டியை பெற்றுக் கொள்வதில் கல்லூரி அதிபர், பழைய மாணவர் சங்கம் (கல்முனை), பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகிய மூன்று தரப்பினரும் இணக்கத்தை தெரிவிக்காமை அல்லது கால தாமதப்படுத்தப்பட்டமை (அக்கறை காட்டாமல்) காரணமாக அந்த பஸ்ஸை மல்ஹருஸம்ஸ் வித்தியாலயத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மேற்குறித்த மூன்று தரப்பினரையும் சந்தித்த சில நலன் விரும்பிகள், பாடசாலைக்கு பஸ் ஒன்றைப் பெற்றுத் தர தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்கான இணக்கக் கடிதங்களை வழங்குமாறும் கேடடுள்ளனர். இருப்பினும் கல்லூரி அதிபர், பழைய மாணவர் சங்கம் (கல்முனை), பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகிய மூன்று தரப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை காட்டாமை காரணமாக, அந்த பஸ்ஸை சாய்ந்தமருது மல்ஹருஸம்ஸ் வித்தியாலத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியதீன் கல்முனை ஸாஹிராவுக்கு 3 கோடி ரூபா செலவில் மாடிக் கட்டடத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கு முன்வந்திருந்த நிலையில் அதுவும்  நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன.

இந்த விவகாரங்களின் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் உள்ளனவா அல்லது வேறேதுமா என்று தெரியவில்லை.

-ஏ.எச்..சித்தீக் காரியப்பர்




கட்டாய உயர் பீடக் கூட்டத்தில் செயலாளர் மாற்றத்தின்  போது நடந்தது என்ன?

2017-02-11ம் திகதி மிகவும் பர பரப்பான சூழ் நிலைகளுக்கு மத்தியில் மு.காவின் கட்டாய உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.பலராரும் எதிர்பார்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய செயலாளர் தொடர்பான கதை வருகிறது.

*அமைச்சர் ஹக்கீம்:* செயலாளர் அரசியல் பதவிகள் வகிக்க முடியாது.எனக்கு விருப்பமானவர் செயலாளராக நியமிக்கப்பட வேண்டும்.அப்போது தான் எனக்கு வேலை செய்து கொள்வது இலகு.செயலாளரை தெரிவு செய்து கொள்ளும் அதிகாரத்தை என்னிடம் தாருங்கள்.அவர் மீது ஏதேனும் பிழைகள் இருப்பின் அவரை நீக்கும் அதிகாரம் உயர்பீடத்திற்கு உண்டு.

(தனக்கு விருப்பமானவர்,தனது வேலைகளை இலகுவாக்க நியமிப்பவர் செயலாளர் அல்ல.அவர் குறித்த நபரின்  பிரத்தியேக உதவியாளர்/செயலாளர் என்றே அழைக்கப்படுவார்.இந்த இடத்தில் ஹக்கீம் தலைவராக செயற்படுவது பொருத்தமற்றது.அவரைக் கூட தலைவராக உயர்பீடமே தெரிவு செய்ய வேண்டும்.இப்படி இருக்கையில் செயலாளர் பதவியை தான் நியமிப்பதாக அமைச்சர் ஹக்கீம் கையில் எடுக்க முடியுமா?)

*மா.ச.உ ஜவாத் :* அப்படியானால் செயலாளரையும் நீக்களே வைத்துக் கொள்ளுங்கள் (ஒரு கட்சியின் தலைவராகவும்,செயலாளராகவும் அமைச்சர் ஹக்கீம் இருப்பது பலத்த விமர்சனங்களை தோற்றுவித்து விடலாம்.) அல்லது செயலாளர் பதவி தான் அதிகாரமிகதென்றால் நீங்கள் செயலாளராக இரியுங்கள்.தலைமைத்துவத்தை இன்னுமொருவருக்கு வழங்குங்கள்.

*நிஸாம் காரியப்பர்:* மிகப் பெரும் கட்சியான ஐ.தே.கவில் அக் கட்சியின் தலைவரே தனது கட்சியின் செயலாளரை தெரிவு செய்துள்ளார்.இன்று கபீர் காசீம் ரணிலின் விருப்பத்திற்கு அமையவே செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த கட்சியால் செய்ய முடியுமென்றால் ஏன் எம்மால் முடியாது?

(மு.கா ஐ.தே.கவின் முன் மாதிரியை கொண்டு இயங்கும் கட்சியா அல்லது குர்ஆன் ஹதீதின் வழி காட்டலை முன் மாதிரியாக கொண்டு இயங்கும் கட்சியா?)

*பா.உ  மன்சூர்:* நாங்கள் எப்போதும் உங்களுக்கு கட்டுப்படுபவர்கள்.செயலாளரை தெரிவு செய்தல்,விலக்குதல் போன்ற அனைத்து அதிகாரங்களையும் நீங்களே வைத்து கொள்ளுங்கள்.

(அப்படியானால் உயர் பீடத்தின் செயற்பாடென்ன?)

*முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி:* நீங்கள் பேசுவதை வைத்து பார்க்கும் போது என்னை வெளியே போடுவதற்கான முயற்சியாக தோன்றுகிறது.பிரச்சினை இல்லை.என்னை வெளியே போட வேண்டும் என்றால் அனைவரும் சேர்ந்து மஷூரா செய்து வெளியே போடுங்கள்.சுத்தி வளைத்து வருவது சரியில்லை.இது கிழக்கை தளமாக கொண்ட ஒரு முஸ்லிம் கட்சி.இதன் தலைமைத்துவம் கிழக்கிற்கு வெளியே இருந்தால், கிழக்கில் உள்ள ஒருவர் செயலாளராக  இருக்க வேண்டும்.மேலும்,அவர் அரசியல் பதவி வகிக்க கூடியவராக இருக்க வேண்டும்.இக் கட்சிக்கு பலம் பொருந்திய அரசியல் அதிகாரங்கள் கிடைக்கும் போது அது அவருக்கு வழங்கக் கூடிய நிலை இருக்க வேண்டும் (மு.காவின் ஸ்தாபாகத் தலைவருக்கு அதிகாரமற்ற  ஒரு செயலாளர் பதவியை உருவாக்க தெரியாதா? செயலாளர் என்பது ஒரு கட்சியின் தலைவருக்கு அடுத்த அந்தஸ்தில் உள்ள பதவி என்பதால் அவர் மிகவும் பலமானவராக இருப்பார்.அவர் அரசியல் அதிகாரங்களை கொண்டிருக்காவிட்டால் எப்படி?).ஒரு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் அதிகாரமிக்கவை.

*அமைச்சர் ஹக்கீம்:* நீங்கள் இரண்டு அதிகார மையத்தை கிழக்கில் உருவாக்க சிந்திக்கின்றீர்கள்.கடந்த மாகாண சபை தேர்தலின் போது திடீரென ஒழித்துக் கொண்டீர்கள்

(கடந்த மாகாண சபைத் தேர்தலின்  போது வெற்றிலைச் சின்னத்தில் தேர்தல் கேட்கவே அமைச்சர் ஹக்கீம் விருப்பம் கொண்டிருந்தார்.அதற்கான  கையொப்பத்தை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்திலேயே ஹசனலி ஓடி ஒழித்ததாக அந் நேரத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டிருந்தது.இதன் பின்னர் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி பல்வேறான அழுத்தங்களை வழங்கியே தனித்து தேர்தல் கேட்கச் செய்தார்.அதனால் தான் இன்று மு.கா மிகப் பெரும் பேரம் பேசும் சக்தியை பெற்றுக் கொண்டதோடு நஸீர் ஹாபிஸ் முதலமைச்சராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.).

அமைச்சர் ஹக்கீம் தனது விருப்பத்திற்கமைய மன்சூர் ஏ.காதரை செயலாளராக தெரிவு செய்கிறார்.இறுதியில் தவிசாளர் பதவியை ஏற்குமாறு அவர் வற்புறுத்தப்படுகிறார்.ஹசனலி உயர்பீடத்திலிருந்து வெளியேறிச் செல்கிறார்.அவரோடு இன்னும் பலரும் வெளியேறிச் செல்கின்றனர்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Monday, February 13, 2017

*மு.காவின் யாப்பு மாற்றம் செல்லுமா?*

எந்த விடயமாக இருந்தாலும் ஒரு கட்சியினால்,அமைப்பினால் அதன் யாப்பிற்கு அமைவாகவே செயற்பட முடியும்,செயற்பட வேண்டும்.கடந்த பேராளார் மாநாட்டிலும் யாப்பு மாற்றம் உட்பட பல விடயங்கள் இடம்பெற்றிருந்தன.இது மு.காவின் யாப்பின் பிரகாரம் இடம்பெற்றதா என்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

மு.காவின் யாப்பின் அடிப்படையில் ஒரு யாப்பு மாற்றம் இடம்பெற வேண்டுமாக இருந்தால் அதற்கு மு.கா யாப்பு கூறும் சில வழி முறைகள் உள்ளன.

*7.1.e யாப்பு மாற்றங்கள் ஏதாவது புதிதாக வருடாந்த கட்டாய உயர்பீட கூட்டத்திலும் பின்னர் பேராளர் மாநாட்டிலும் அங்கீகாரத்துக்காக சமர்பிப்பதாக இருப்பின் அவை ஒரு மாத காலத்துக்கு முன்னர் நடைபெறும் சாதாரண உயர்பீட கூட்டத்தில் முன்கூட்டியே யாப்பு விவகார பணிப்பாளரிடம் சமர்பிக்கப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். யாப்பு விவகார பணிப்பாளர் பின்னர் முறையான கலந்துரையாடல்களின் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட மாற்றங்களை வருடாந்த கட்டாய உயர்பீட கூட்டத்திலும் பின்னர் பேராளர் மாநாட்டிலும் சமர்பிப்பார்.*

இதனை வாசிக்கும் ஒருவர் யாப்பு மாற்றம் நிகழ்வதானால் ஒரு மாதத்திற்கு முன்பு இடம்பெறும் உயர்பீடக் கூட்டத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டு முறையான கலந்துரையாடலுக்கு பின்னர் அது கட்டாய உயர்பீடக் கூட்டத்திலும் பேராளர் மாநாட்டிலும் சமர்பிக்கப்பட வேண்டும் என்பதை சாதாரணமாகவே அறிந்து கொள்ளலாம்.

 இதன் பிரகாரம் நோக்குகின்ற போது இவ்விதத்தில் தற்போதைய மு.காவின் யாப்பு மாற்றம் நிகழவில்லை.யாப்பு மாற்றம் என்பது மூடிய அறைக்குள் சிலர் இணைந்து முடிவெடுத்து செயற்படுத்தும் காரியமல்ல.இது கட்சியின் யாப்பு மாற்ற விடயம் என்பதால் இவ் இவ்விடயத்தில் தலைவர் தனது விசேட அதிகாரத்தை பிரயோகிக்க முடியாது (மு.கா யாப்பின் 3.3.bயின் படி தான் நினைத்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம்).இவ் யாப்பு மாற்றத்தை தலைவர் உட்பட ஒரு சிலர் இணைந்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் மாற்றப்பட்ட யாப்பு வாசிக்கப்பட்ட போதே  உயர்பீட உறுப்பினர்கள் மாற்றங்கள் தொடர்பில் அறிந்துள்ளார்கள்.

யாப்பு மாற்ற பரிந்துரை என்பது அக் கட்சியின் தலைவரால் மாத்திரம் மேற்கொள்ளக் கூடியதல்ல..அனைவரும் பரிந்துரை செய்யலாம்.அதனை முறையான கலந்துரையாடலில் பின்னர் அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.தற்போது யாப்பு மாற்றம் நடந்தது போன்று  தலைவர் அல்லாத ஒருவர் யாப்பை மாற்றியிருந்தால் இதனை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? இதனை வைத்து சிந்தித்தாலும் இது தவறான செயல் என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

அது மாத்திரமல்ல மு.காவின் எந்த செயற்பாடுகளும் மஷூரா அடிப்படையிலேயே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.பேராளர் மாநாட்டிற்கு முந்திய நாள் யாப்பு மாற்றத்தை சமர்ப்பித்து அது தொடர்பில் கலந்துரையாடி ஒரு தகுந்த முடிவிற்கு வர முடியுமா? நான்றாக சிந்தியுங்கள்.சில வேளை அதற்கு பல நாட்கள் எடுக்கலாம்.அதனை மையமாக கொண்டே மு.காவின் யாப்பில் ஒரு மாதத்திற்கு முன்னர் யாப்பு மாற்றம் நிகழ வேண்டுமாக இருந்தால் அது உயர்பீடத்தில் யாப்பு விவகாரப் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூறுகிறது.வாக்களித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் ( உதாரணமாக இலங்கை அரசியலமைப்பின் பெரும்பாலான பாகங்களை மாற்றுவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும் பான்மையை பெற வேண்டும் ) அதற்கு ஒரு நாள் போதும்.

இது தொடர்பில் ஒரு உயர்பீட உறுப்பினரை தொடர்பு கொண்டு கேட்டேன்

*“இதனை சீர் தூக்க உயர் பீடத்தில் உள்ளவர்கள் சட்ட ஞானிகளா”* என என்னிடம் நக்கலாக கேட்டார்.இது ஒவ்வொரு உயர்பீட உறுப்பினர்களின் அறிவையும் தட்டிப் பார்க்கும் செயலாகும்.நான் கூறுவது சரியாக இருப்பின் அதனை உயர்பீட உறுப்பினர்கள் சிறிதும் கவனத்திற் கொள்ளாமல் இருந்தால் அவர்களை போன்ற ஏமாளிகள் யாருமில்லை.எம்மை முட்டாள் என நினைத்து செய்வதை பார்த்து நாம் சிரித்தால்...?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
2017.02.13


பேராளர் மாநாட்டின் தீர்மானங்கள்

(இப்றாஹிம் மன்சூர்:கிண்ணியா)

மு.காவின் பேராளர் மாநாடுகளில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழமை.இம் முறையும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

மு.காவின் பேராளர் மாநாடு ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட வேண்டும் என்பதால்,குறித்த பேராளர் மாநாட்டில் அவ் வருடத்தில் மு.கா செய்த சாதனைகள்,அணுகுமுறைகளை தொடர்பில் ஆராய்வதற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

இம் முறை பேராளர் மாநாடு இடம்பெற்ற குறித்த தினம் மு.கா இவ்வருடம் செயற்படுத்திய திட்டங்கள்,நடாத்திய சேவைகள் தொடர்பில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.இது அவர்கள் இவ்வருடம் செய்தவைகள் பற்றியே கூறியிருந்தன.உண்மையில் இவ் ஆவணப்படத்தில் கடந்த பேராளர் மாநாட்டின் போது இடம்பெற்ற தீர்மானங்கள் தொடர்பில் கட்சி மேற்கொண்ட செயற்பாடுகளை ஆராய்வதே மிகவும் பொருத்தமானது.

குறைந்தது மு.காவின் தலைவராவது தனதுரையில் இது பற்றிய ஒப்பீடுகளை செய்திருக்க வேண்டும்.அவரது உரை பஷீர் சேகு தாவூதை இகழ்வதையே பிரதானமாக  கொண்டிருந்தது.பஷீர் சேகுதாவூதை தானே நீக்கி விட்டார்கள்.இன்னும் எதற்கு அவர் பற்றிய பேச்சு? ஒவ்வொரு வருடமும் தீர்மானம் நிறைவேற்றுவதில் பயனில்லை.அதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராய வேண்டுமல்லவா?

ஒவ்வொரு வருடமும் நிறைவேற்றி வந்த கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையை இம் முறை காண முடியவில்லை.இதனை பார்க்கும் போது மு.கா தனது மிகப் பெரும் கொள்கையில் இருந்து (அஷ்ரபின் கனவிலிருந்து) மாறிவிட்டதா என்ற சிந்தனை தோன்றுகின்றது.கடந்த முறை நிறைவேற்றிய ஓரிரு தீர்மானங்கள் இம் முறையும் நிறைவேற்றப்பட்டிருந்தன.அதனை மீள இணைக்க முடியுமாக இருந்தால் ஏன் இதனை மீள இணைக்க முடியாது?


Sunday, February 12, 2017

ஜவாத் மாகாணசபை உறுப்பினர் 

அன்சில் அட்டாளைச்சேனை தவிசாளர்

தாஹிர் நிந்தவூர் தவிசாளர்
===========================
கொழும்பு
இலங்கை
12.02.2017

அன்புள்ள நண்பர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்

முஸ்லீம் சமுகத்தின் அரசியல் அடையாளத்தை காத்து நிற்க இன்று வரை யோசிக்கின்றவர்கள் என்பதன் நிமித்தமாக உங்களுக்குக் கடிதம் எழுத இதில் நான் தெளிவு காணவும் மூவரையும் விழித்து என் மனம்  தொடர்ந்து
வற்புறுத்திக் கொண்டிருந்ததால் எழுதுகிறேன்.

ஆனால் என்னிடமிருந்து வரும் கடிதத்திற்கும் முக்கியத்துவம் இருக்காது என்ற உணர்வால் நான் எழுதாமல் விடுவோமா? என யோசித்தும் சத்தியமாகவே  ஒரு கனம் தூக்கத்திலிருந்து எழுந்து எழுத என் மனச்சாட்சியால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.

நான் இப்படியெல்லாம் கணக்குப் பார்க்க வேண்டியதில்லை என்றும், என் கடிதம் எந்த அளவுக்கு மதிக்கப்படும் என்று எண்ணிப் பார்க்காமல் நான் தங்களிடம் முறையீடு
செய்தே ஆக வேண்டும் என்றும் ஏதோ ஒன்று எனக்குள் சொல்கிறது.

எவவாறாகினும் இந்த வடக்கு கிழக்கு மாகாண முஸ்லீம்களின் அரசியல் விடுதலை அதன் அபிலாசைகள் எல்லாம் இன்று காலை பண்டாரநாயக்கவின் நினைவு மண்டபத்தில் வைத்து அடக்கம் செய்து விட்டாலும் உங்களிடம் அதற்க்கான புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்கிறேன்.

உங்கள் நோக்கம்
எவ்வளவு உன்னதமாக உங்களுக்குத் தோன்றினாலும், அதற்கு நீங்கள் இவ்வளவு பெரிய
விலை கொடுக்க வேண்டுமா?

மிகச்சிந்தித்து நிதானமாக,இந்த கட்சிக்கான இயங்குதளமாக அதன் அதிகார மையத்தில் ஒரு போதும் எண்ணம் கொள்ளாத நீங்கள் இந்த அநியாயம் நடக்கின்ற மேடையில் இவ்வாறு உட்கார முடிந்ததா?

ஹசனலி யார்?

தாறுஸ்ஸலாம் என்ன நடந்தது?

நம் விடுதலை இயக்கம் அதன் தலைமையையை பற்றி உங்கள் சகோதரிகளிடமும் தாய் மார்களிடமும் பேச முடியுமா?

இந்த கட்சியின் பேராளர்களில் நம் ஆரம்ப போராளிகள் எத்தனை பேர் வந்தார்கள்?

தலைவரின் கொலை?

தலைவரின் மரணித்தில் உளமாற பெருவகை அடைந்தவர்களோடு,

தலைவரின்,சமுகத்தின் சொத்துக்களை அபேஷ் செய்தவர்களோடு இவ்வாறு அளவளாவ முடிந்ததா?

நீங்களே பதில் சொல்ல வேண்டும்
மண்ணறை, சமுகப் பொறுப்பு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

எவ்வாறாகினும்,
உங்களுக்கு இக்கடிதம் எழுதி நான் தவறு இழைத்திருந்தால் அதற்காக உங்கள்
மன்னிப்பை வேண்டுகிறேன்

தங்கள் உண்மையுள்ள நண்பர்
அஸ்மி அப்துல் கபூர்




Saturday, February 11, 2017


 மு.கா புதிய நிர்வாகிகள் விபரம்

==============================

2017ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை (11) இரவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கொழும்பு – 07 இலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான கட்சியின் புதிய நிர்வாக சபையினை தெரிவுசெய்வதற்கான கட்டாய அதியுயர்பீட கூட்டம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்றிரவு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம்:

தலைவர் - ரவூப் ஹக்கீம்

தவிசாளர் –

சிரேஷ்ட பிரதித் தலைவர் - ஏ.எல்.ஏ.மஜீத்

பிரதித் தலைவர் 1 – ராவுத்தர் நெய்னா முஹம்மத்

பிரதித் தலைவர் 2 - ஹாபிஸ் நசீர் அஹமட்

பிரதித் தலைவர் 3 – யூ.டி.எம்.அன்வர்

பிரதித் தலைவர் 4 – எச்.எம்.எம்.ஹரீஸ்

பொதுச் செயலாளர் - மன்சூர் ஏ. காதர்

பொருளாளர் – எம்.எஸ்.எம்.அஸ்லம்

மஜ்லிஸுல் ஷரா தலைவர் – ஏ.எல்.எம்.கலீல் மௌலவி

தேசிய ஒருங்கிணைப்பாளர் – ஏ.எம்.மன்சூர்

கொள்கை பரப்புச் செயலாளர் – யூ.எல்.எம்.முபீன்

தேசிய அமைப்பாளர் – சபீக் ராஜாப்தீன்

சர்வதேச விவகார பணிப்பாளர் – ஏ.எம்.பாயிஸ்

யாப்பு விவகார பணிப்பாளர் – எம்.பி.பாரூக்

இணக்கப்பாட்டு வாரியம் - எம்.எஸ்.தௌபீக்

உலமா காங்கிரஸ் - எச்.எம்.எம். இஸ்யாஸ் மௌலவி

அரசியல் விவகார பணிப்பாளர் – எஸ்.எம்.ஏ.கபூர்

பிரதித் தவிசாளர் – எம்.நயிமுல்லாஹ்

பிரதிச் செயலாளர் – நிசாம் காரியப்பர்

பிரதிப் பொருளாளர் – கே.எம்.ஏ.ஜவாத்

மஜ்லிஸுல் ஷரா பிரதித் தலைவர் - சியாத் ஹமீட்

பிரதி தேசிய ஒருங்கிணைப்பாளர் – ரஹ்மத் மன்சூர்

பிரதி தேசிய அமைப்பாளர் – பைசால் காசீம்

மேலதிக கொள்கை பரப்புச் செயலாளர் – அலிசாஹிர் மௌலான

செயற்குழு செயலாளர் – றிஸ்வி ஜவகர்ஷா

போராளர் மாநாட்டு செயலாளர் – ஐ.எல்.எம்.மாஹீர்

மஜ்லிஸுல் ஷுரா செயலாளர் – யூ.எம்.வாஹீட்

பேராளர் மாநாடு தொடர்பான மேலதிக தகவல்களை பெற


முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ஹக்கீம்
ஹஸன் அலியின் கோரிக்கை நிராகரிப்பு!
---------------------------------------------------------------
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அவசர உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (11) நடைபெற்ற போது நாளைய (12) பேராளர் மகாநாட்டில் பரிந்துரை செய்து ஏற்றுக் கொள்வதற்கான புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.

இதன்போது, கட்சியின் தவிசாளர் பதவிக்கு எம்.ரி. ஹஸன் அலியின் பெயர் உயர்பீட உறுப்பினர்கள் பலரால் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஹஸன் அலி முற்றாக மறுத்து, நிராகரித்துள்ளார்.

இந்த நிலையில்,அதிகாரமிக்க செயலாளர் பொறுப்பை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்தும் மன்சூர் ஏ காதரே அதிகாரபூர்வ செயலாளராக செயற்படுவார் என தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, தான் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கப் போவதாகவும் தனக்கு எவ்வித பதவிகளும் இனித் தேவை இல்லை எனவும் தெரிவித்து இறுதிக் கட்டத்தில் ஹஸன் அலி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு பிரதிச் செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அலி ஸாஹிர் மௌலானா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமே தொடர்ந்தும் கட்சியின் தலைவராகச் செயற்பட வேண்டுமென உயர்பீட உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவித்ததனையடுத்து அல்லாஹு அக்பர் என கூறப்பட்டு அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


Friday, February 10, 2017

மு.காவில் தலைமைத்துவ மாற்றம் வேண்டும்

எதிர்வரும் பேராளர் மாநாட்டில் மு.காவின் தலைமைத்துவத்தில் மாற்றம் வர வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.இதற்கு பலவாறான நியாயங்கள் (அமைச்சர் ஹக்கீம் காலத்து மு.கா தலைமைத்துவம் பற்றி பல முறை பலராலும் கதைக்கப்பட்டுள்ளதால் அது பற்றி இன்னும் கதைப்பது அவசியமற்றது என கருதி அது பற்றி எழுதுவதை தவிர்ந்து கொள்கிறேன்) முன் வைக்கப்படுகின்றன.

அவைகள் பிழைகள்  தான் என்பதை ஏற்றுக்கொள்ளும் மு.காவினர் அதற்கு தலைவர் காரணமல்ல பஷீர் தான் காரணம் (இன்று நீர் வளங்கள் அதிகார சபையின் ஊடகப்பிரிவில் பணியாற்றும் சகோதரர் ஒருவர் நவமணியில் எழுதிய கட்டுரையிலும் இந்த நியாயத்தை பார்க்க முடிந்தது) என்ற நியாயத்தை எடுத்து போடுகின்றனர்.அப்படியானால் இவ்வளவு நாளும் ஒரு டம்மித் தலைமையாகத் தான் அமைச்சர் ஹக்கீம் இருந்தார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு தனிப்பட்ட நபரால் ஹக்கீமை தான் நினைத்த திசைக்கு மாற்ற முடியுமாக இருந்தால் நிச்சயமாக அந்த தலைமைத்துவத்திற்கு அமைச்சர் ஹக்கீம் தகுதியற்றவர்.ஒரு கட்சியின் தலைவர் காலத்தில் இடம்பெற்ற பிழைகளை அமைச்சர் ஹக்கீமே ஏற்க வேண்டும்.

இப்படிக்கு
அபு ரஷாத் (அக்கரைப்பற்று)


ஆடத் தெரியாதவன் அரங்கை கோணல் என்டானாம் என்ற கதை போன்றே மாகாண சபை உறுப்பினர் நஸீரின் பேச்சு அமைந்துள்ளது



வன்னியின் ஒளி நிகழ்ச்சியில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் நஸீர் அமைச்சர் றிஷாத் வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மு.காவிற்கு எதிராக சதி செய்வதாக கூறியுள்ளார்.மு.காவை வெளிநாடுகள் சதி செய்து அழிக்குமளவு எந்த தேவையுமில்லை என்பதை சிறு பிள்ளையும் அறியும்.கோடிகள் கொடுத்தால் அவர்களை விரும்பியவர்கள் விரும்பிய பாட்டுக்கு வலைத்துக்கொள்ளலாம்  என்பது வேறு விடயம்.இலங்கையின் தேசிய அரசியலில் வெளிநாட்டு பணங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற செய்தி அதிகம் பேசப்படுகிறது.இந்த பேச்சுக்களை மாகாண சபை உறுப்பினர் நஸீர் இங்கும் அடித்து விட்டுள்ளார்.

இன்று மு.காவில் நடைபெறும் வெட்டுக்குத்துக்கும் அமைச்சர் ரிஷாதுக்கும் என்ன சம்பந்தமுள்ளது? பஷீரின் பிரச்சினையாக இருந்தாலும் சரி ஹசனலியின் பிரச்சினையாக இருந்தாலும் சரி இன்று மு.காவில் இடம்பெறும் பிரச்சினைக்கு பிரதான காரணம் தேசியப்பட்டியலாகும்.இதனை யாவரும் ஏற்றுக்கொள்வார்கள்.இப்படி இருக்க இதனை முஸ்லிம்களின் கணிசமான ஆதரவைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாத்துடன் தொடர்பு படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.அவர் இந்த பிரச்சனைகளை தனது சிந்தனைக்கும் எடுக்காது செயற்பட்டு வருகிறார்.இதனை அவரது செயற்பாடுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.ஆடத் தெரியாதவன் அரங்கை கோணல் என்டானாம் என்ற கதை போன்றே மாகாண சபை உறுப்பினர் நஸீரின் பேச்சை நோக்கலாம்.

இதில் ஒரு மறைமுக உண்மையும் உள்ளது.முன்பெல்லாம் இலங்கை முஸ்லிம்களுக்கு மாற்று கட்சி பற்றிய சிந்தனைகள்  இல்லாததன் காரணமாக அடித்தாலும் பிடித்தாலும் மு.காவுடன் ஒட்டி உறவாடினார்கள்.தற்போது மயில் மரத்திற்கு நிகராக,இன்னும் சொல்லப் போனால் மரத்தையும் விட அதிக வளர்ச்சியில் உள்ளது.இது ஹக்கீமிற்கு பலத்த சவாலை ஏற்படுத்தியுள்ளது.முன்பு போன்று தான் நினைத்த பாங்கில் முடிவுகளை எடுக்க முடியாது.எனவே,அமைச்சர் றிஷாதினால் மு.கா அழிகிறது என மாகாண சபை உறுப்பினர் நஸீர் கூறியதில் உண்மையும் இல்லாமல் இல்லை.

இப்படிக்கு
அபு ரஷாத் (அக்கரைப்பற்று)

Wednesday, February 8, 2017

ஹக்கீம் மிகவும் இழி நிலைக்கு சென்றுவிட்டார்



(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

மு.காவின் ஏற்பாட்டில் வன்னியில் இடம்பெற்ற வன்னியின் ஒளி நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப்பகுதியில் தன்னை மு.காவுடன் இணைந்து தேர்தல் கேட்க அமைச்சர் ஹக்கீம் அழைத்ததாக கூறியிருந்தார்.

இது சிலருக்கு சாதாரணமாக தோன்றலாம்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அவ்வளவு பலம் பொருந்தியவரல்ல.அவரை அமைச்சர் ஹக்கீம் அழைப்பதென்பது அமைச்சர் ஹக்கீம் தன்னிடத்தில் இருந்து இறங்கிவிட்டதை அழகாக கூறுகிறது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக்கை அமைச்சர் ஹக்கீம் அழைத்திருந்தாலும் தலைமைத்துவத்தின் மானம் காக்க அதனை மறைத்து கதைக்க வேண்டியது அவரது கடமையாகும்.

அதில் உரையாற்றிய ஹுனைஸ் பாறூக் சில உண்மைகளை கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் தன்னுடன் இருந்தவர்களும் இப்போது அமைச்சர் றிஷாத்துடன் இருப்பவர்களுடனும் கேட்டால் தெரியும் எனக் கூறுகிறார்.அதாவது இவரோடு கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் இருந்தவர்கள் கூட இன்று அமைச்சர் றிஷாத்துடன் இணைந்துவிட்டார்கள்.அப்படியானால் இவர்களுடன் இருப்பவர்கள் யார்? யாருமில்லை.அது தான் அவர் மு.காவுடன் வந்து இணைந்துள்ளார்.
*பட்டிக்காட்டான்*

தனது பக்கத்து ஆசனத்திற்கு “யார் வரப்போறானோ?” என்ற சிந்தனையில் தனதூரிற்கு செல்ல இரவு எட்டு மணி பஸ்ஸில் ஏறிய அஜ்வத்தின் உள்ளம் மிகுந்த எதிர்பார்ப்போடிருந்தது.

“நானா..!! இந்த சீட்ட யாரு புக் பண்ணிருக்காங்க?”

“தெரியா தம்பி யாரோ முஸ்தபா மாமா புக் பண்ணினதா புக் பன்ற பொடியன் சொன்னான்,அந்த ஆள இன்னும் காணல்ல.காசி புள்ளா கட்டிருக்காரு.இனி வந்தாலும் ஒண்டுதான் வராட்டியும் ஒன்டு தான்.தம்பி..!! உங்கட பலன்ஸ் கொஞ்சம் கிடக்கு போல”

பெயரை கேட்டவுடனே சரியான வயதான ஒருவர் தான் என கற்பனையை ஓட விட்ட அஜ்வத்,தாடி தொப்பியோடு அவரை தனதுள்ளத்தில் அலங்கரித்தும் வைத்திருந்தான்.பஸ்ஸின் முன் கதவு வழியாக வாயினுள் வெற்றியலை குதப்பிக் கொண்டு அதன் பாட்டிற்கு சிலவை எழுந்தும் சிலவை படுத்துறங்கியுமான நரைத்த முடிகளுடன்  ஒரு கையில் பெரிய பையோடு ஒரு வயோதிபர் ஏறினார்.

“இந்த நாத்த ஊத்தம் வரப்படாதென்டு  லக்சரி பஸ் புக் பண்ணினா அதிலயும் இந்த தொல்ல இல்லாம இல்ல”

என சற்று ,முகச் சுளிப்போடு அஜ்வத் தனக்குள் கூறிக் கொண்டான்.அவ் வயோதிபரும் பின் வரிசை நோக்கி படிப்படியாக நகர்ந்தார்.தனக்கருகில் வருவதைப் பார்த்த அஜ்வத்திற்கு தனது பக்கத்து ஆசனத்தில் வந்தமர்ந்து விடுவாரோ என அருவருப்புடனான அச்சம் மேலிட்டது.

“தம்பி..!! அந்த சீட்டு புக் பன்ற பொடியன் இந்தப் பக்கம் தான் என்ட சீட்டாம் என்டு கையக்காட்டினான்.கொஞ்சம் இந்த துண்டைப் பார்த்து எங்க என்டு சொல்லும்பி” என்றார்  அஜ்வத்திடம் அந்த வயோதிபர்.

அஜ்வத் அதனைப் பார்த்தவுடன் தனது பக்கத்து சீட்டு என்பதை அறிந்து கொண்டான்.வேறு சீட்டை காட்டலாமா என சிறுது தயங்கிய போது “நீங்களா மாமா..!! இதான் உங்கட சீட்டு இரிங்க” என்றான் நடத்துனர்.

அஜ்வத்தைப் பார்த்து புண் முறுகல் பூர்த்த முஸ்தபா மாமா

“இன்டைக்கு தம்பியோடதான் நம்மட பிரயாணம் போல” என நிறைவான மனதோடு கள்ளம் கபடமற்ற சிரிப்பொன்றை அள்ளி வீசினார்.

அஜ்வத்தும் தலையினால் ஏனோ தானோவென பதிலளித்தான்.வேறு இடம் மாறலாமா என சிந்தித்து அங்கும் இங்கும் பார்த்தான்.பஸ்ஸின் அனைத்து சீட்டுக்களும் புக் செய்யப்பட்டிருந்தன.தான் இறங்கிச் செல்லுவோமா எனவும் சிந்தித்தான்.நாளை எப்படியாவது ஊரிற்கு சென்றாக வேண்டுமென்ற நிலை இருந்ததால்  இவ் வாகனத்தில் அஜ்வத் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம்.

மிகவும் சொகுசாக முஸ்தபா மாமா தனது சீட்டில் இருந்தார்.அவரின் சொகுசிருப்பு அஜ்வத்தின் சீட்டின் எல்லயை சற்றுக் கடந்தும் விட்டது.எனினும்,அதனை வெளிக்காட்ட முடியாமல் அஜ்வத் உள்ளுக்குள்  வெம்பிக்கொண்டிருந்தான்.

“தம்பி எங்க போக?” என கதையைத் தொடுத்தார் முஸ்தபா மாமா

“நான் கல்முனைக்கு போக மாமா”

அஜ்வதும் ஒரு சம்பிரதாயத்திற்கு

“நீங்க இங்க எதுக்கு மாமா வந்தியள்?”

என்றான்.இப்படியானவர் எதுக்கு வந்திருப்பார் என்ற சிந்தனையும் அஜ்வத்தின் உள்ளத்தை சற்று உலுக்கிக்கொண்டுமிருந்தது.அஜ்வத் ஆராய்ச்சியில் சற்று ஈடுபாடு கொண்டவனும் கூட.

“நம்மட புள்ளை இங்க தான் படிக்குது.என்ன செய்ற? பொம்புளைப் புள்ளைய இங்க விட்டிட்டு ஊட்ட  நிம்மதியா இருக்க பொண்டாட்டி விடுறாள்லில்ல.நாமளும் எப்படி தம்பி ஊட்ட நிம்மதியா இருக்குற? அதான் கெழமைக்கு ஒரு வாட்டி இங்க வந்து பாத்துட்டு போவன்.”

“உங்கட மகள் என்ன படிக்கா?” என அஜ்வத் மறு கேள்வியைத் தொடுத்தான்.

“இந்த வைத்தியப் படிப்பு படிக்கா.நீங்கள் ஏன்டா மகள் பத்தி கேள்வி பட்டிருப்பிங்க.நம்மட மாவட்டத்திலேயே என்ட புள்ளைதானாம் முதல் கெட்டி எண்டு கதைத்தாங்க”

இதனை அறிந்தவுடன்

“இவரின் மகள் இப்படியா?”

என ஆச்சரியத்துடன் அஜ்வத் இருந்தான்.இதன் பிறகு முஸ்தபா மாமாவின் முகச் சுழிப்புத் தோற்றங்கள் கூட அவனுக்கு சற்று செப்பமாய் தெரிந்தது.விஞ்ஞானத் துறையை தெரிவு செய்து,அத் துறையில் தன்னால் சிறப்பான அடைவுகளை அடைய முடியாமல் இருந்த அஜ்வத்திற்கு ஒரு வைத்திய மாணவின் தந்தை ஞானி போன்று காட்சியளிப்பதில் தவறில்லையே !

இப்படியே இருவருக்குமிடையிலான உரையாடல் தொடர்கையில் முஸ்தபா மாமா சற்று கண்ணயர்ந்தார்.சாப்பாடிற்காய் பஸ் நின்றது.

“மாமா..! சாப்பிட இறங்குறல்லியா..?? இந்த கடையில நல்ல சாப்பாடு”

“தம்பி அந்த பேக்க கொஞ்சம் கீழ ஏறக்கித் தா தம்பி!”

அஜ்வத் மேலிருந்த பேக்கை  இறக்கி கொடுத்துவிட்டு அவசரமாக சென்ற முஸ்தபா மாமா அஜ்வதை

 “கொஞ்சம் நில்லு தம்பி,எப்பயும் நான் வரும் போது மகள் சமைத்து கட்டித் தருவாள்.எனக்கி இந்த கடை சாப்பாடெல்லாம் ஒத்து வராது.அதுல உப்பும் இருக்காது உறைப்பும் இருக்காது.நான் எப்பயும் குறைஞ்சது ரெண்டு பேருக்கு சாப்பாடு எடுத்து வருவன்.”

அஜ்வத்திற்கு முஸ்தபா மாமா மீது மரியாதை வந்தாலும் அவரின் உணவை வாங்கி உண்ண உள்ளம் ஏற்றுக்கொள்ளவில்லை.

“பிரயாணத்துல நான் சாப்பிடுறல்ல மாமா,சும்மா டீ குடிக்கப் போறன்” என்று கூறிவிட்டு அஜ்வத் இறங்கினான்.

மீண்டும் அனைவரையும் ஏற்றிக்கொண்டுக் கொண்டு பஸ் கிளம்பியது.அனைவரும் தூக்கம் கலைந்த முகத்தோடு இருந்தனர்.

“என்ன வேலை மாமா செய்றிங்க?” என்றான் அஜ்வத்

“நமக்கென்ன வெள்ளாமை தான்.தம்பி நீங்க?”

“நான் சிவில் எஞ்சினியர்”

இன்று கணிதத் துறை பக்கம் தலை வைத்து படிக்காதவர்களும் தொழில் நுட்பக் கல்லூரிகளில் கல்வி பயின்ற சான்றிதழை (followed certificate) வைத்துக் கொண்டு தன்னை பொறியியலாளராக அழைத்துக் கொள்ளும் காலமல்லவா இது?

“”ஓ.. தம்பியும் பெரிய படிப்பு தான் படிச்சிருக்கிங்க போல”

“மாமா,வெள்ளாம செய்து கஸ்டப்படாம நான் வேல செய்ற எடத்த சும்மா சின்ன சின்ன வேல செய்ய ஆள் வேணும் வாறிங்களா?”

“தம்பி,உன்னோடு வந்தா பணம் கிடைக்கும் நிம்மதி இருக்காது.நான் வெள்ளாமை செய்கிறேன்.நான் தொழிலாளியான ஒரு முதலாளி.என்ன யாரும் அதிகாரம் பண்ண முடியாது.நான் யாருக்கும் துரோகம் செய்ய வேண்டிய அவசியம் வராது.இயற்கையுடன் இன்புறுவேன்”

இப்படி அடிக்கிக் கொண்டே சென்றார் முஸ்தபா மாமா.அப்போது தான் அஜ்வத் ஒரு விவசாயி கேவலமானவன் அல்ல.ஒரு மனிதனை அவனது முகத் தோற்றம் கொண்டோ அல்லது தொழில் கொண்டோ மட்டிடக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டான்.அப்படி கதைத்துக்கொண்டிருக்கும் போதே இருவரையும் தூக்கம் பிடித்துக்கொண்டது.அஜ்வத் முஸ்தபா மாமாவின் தோளில் சாய்ந்துறங்கிக் கொண்டே தனது பிரயாணத்தை சிந்தனையுடன் தொடர்ந்தான்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.



வன்னிக்கு தேசியப்பட்டியலா?



கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிவித்தது தொடக்கம் தேசியப்பட்டியலை அவருக்கு தருகிறேன் இவருக்கு தருகிறேன் என அமைச்சர் ஹக்கீம் கூறியே வருகிறார்.வன்னியில் நடாந்த கூட்டத்தில் மீண்டும் தேசியப்பட்டியல் குறித்து பேசியுள்ளார்.இது சாத்தியமானதா?

அமைச்சர் ஹக்கீமிடம் இருந்த இரண்டு தேசியப்பட்டியலில் ஒன்று திருகோணமலை தௌபீக்கிற்கு வழங்கப்பட்டு விட்டது.அவர் ஒரு பிரதி அமைச்சராக இருந்தவர்.அவர் இதன் பிறகு தேசியப்பட்டியலை இராஜினாமா செய்வது சாத்தியமற்றது.

இன்னுமொன்று சல்மானிடமுள்ளது.அவர் 17 மாதங்கள் தேசியப்பட்டியலில் நீடித்து வருகிறார்.இவரிடமுள்ள தேசியப்பட்டியலை இரண்டு வருடங்களுக்கு ஹக்கீம் வழங்கினால் அட்டாளைச்சேனைக்கு அட்டாளைச்சேனைக்கு ஒன்னரை வருடமளவே தேசியப்பட்டியலை வழங்கலாம்.அட்டாளைச்சேனையா? வன்னியா? என்றால் ஹக்கீம் அட்டாளைச்செனைக்கே முன்னுரிமை வழங்குவார்.

இரண்டு வருடம் வன்னிக்கு தேசியப்பட்டியப்பட்டியல் வழங்க வேண்டுமாக இருந்தால் திருகோணமலை தௌபீக் இராஜினாமா செய்ய வேண்டும்.அமைச்சர் ஹக்கீம் திருகோணமலை தௌபீக்கை புகழ்ந்து வருவதை பார்க்கின்ற போது அது சிறிதும் சாத்தியமல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.இவைகளை வைத்து சிந்திக்கும் போது வன்னி வாக்குறுதி சிறிதும் சாத்தியமற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இப்படிக்கு
அபு ரஷாத் (அக்கரைப்பற்று)
ஹரீஸ் மக்களால் தலைவராக இனங்காட்டப்படுகிறார்



(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

மு.காவின் அடுத்த தலைவர் யார் என்ற வினாவிற்கான விடையை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.அது ஹரீஸ் என்ற நாமம் தான்.தற்போது அமைச்சர் ஹக்கீமின் நாமம் பல இடங்களில் அசிங்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட மு.காவின் நலன் கருதி மு.காவின் அமைச்சர் ஹக்கீம் தலைமைத்துவத்திலிருந்து அமைச்சர் ஹக்கீம் விலக வேண்டும் என்பதுவே இலங்கை முஸ்லிம் மக்களின் கருத்தாகவுள்ளது.

இன்று மக்களின் வாய்களில் மு.காவின் தலைமைத்துவத்திற்கு தகுதியானவராக ஹரீஸ் இனங்காட்டப்படுகிறார்.மக்கள் இவரை தலைவராக்குங்கள் என கூறுவதால் இவருக்கு தலைமைப் பதவியை வழங்குவது பொருத்தமானது.தற்போது மு.காவின் தவிசாளர் பஷீர்  உயர்பீடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் குறைந்தது  இவருக்கு தவிசாளர் பதவியாவது இம் முறை வழங்கப்பட வேண்டும்.

மக்கள் சேவை,ஒழுக்க விழுமியம் நிறைந்தவராக காணப்படுகின்றமை,பாராளுமன்றத்தில் ஹரீசின் குரல் ஓங்கி ஒலிக்கின்றமையே ஆகியவையே அவரை மக்கள் தலைமைத்துவத்திற்கு தகுதியானவராக இனங்காட்டுவதற்கான காரணமாகும்.

Tuesday, February 7, 2017

அரசியலாகும் சைட்டமிற்கு எதிரான போராட்டங்கள்


சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.தனியார் கல்லூரி தரமிக்கதாக காணப்படாது என்ற எண்ணப்பாடு இலங்கை மக்களிடையே இருப்பது என்னவோ உண்மை தான்.இது பிழையானதாகும்.இன்று இலங்கையில் அரச பல்கலைக் கழகங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்குகின்றமை இதற்கான காரணமாக இருக்கலாம்.இன்று அதிகமான நாடுகளில் தரமிக்க தனியார் பல்கலைக் கழகங்கள் காணப்படுகின்றன.

இத் தனியார் கல்லூரியில் தரமற்ற பாடவிதானங்கள் உள்ளடக்கப்பட்டு தகுதியற்றவர்களுக்கு வைத்திய சான்றிதழ் வழங்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக போராடலாம்.தற்போது போராட்டம் செய்பவர்களிடம் அப்படியான பேச்சுக்களை காண முடியவில்லை.

இன்று சைட்டமிற்கு எதிராக போராட்டம் செய்பவர்கள்,ஏ.எல் படித்து பெறுபேறுகளின் அடிப்படையில் வைத்திய பீடத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் மாத்திரமே வைத்திய துறைக்கு தகுதியானவர்கள் போன்று கருதியே ஆர்ப்பாட்டம் செய்வதாக உணர முடிகிறது.இலங்கை அரசினால் ஒரு குறித்த தொகையினரையே பல்கலைக் கழகங்களுக்கு உள் வாங்கி பயிற்சி அளிக்க முடியும்.அவர்கள் தான் இவ்வாறு பயிற்சி அளிக்கப்படுபவர்களே தவிர ஏனையவர்கள் தகுதியற்றவர்களுமல்ல என்பதை குறித்த ஆர்ப்பாட்டக் காரர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இது பிழையாக இருக்குமாக இருந்தால் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் கற்பது பிழை தானே! அதற்கு எதிராக ஏன் இத்தனை காலமும் போராடவில்லை? அவ்வாறு வருபவர்கள் இலங்கை வந்து பரீட்சை ஒன்றிற்கு தோற்றி சித்தியடைய வேண்டும் என கூற வரலாம்.இலங்கை அரசு சைட்டம் தனியார் கல்லூரிக்கு அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளதால் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி ஒரு வைத்தியருக்கு போதுமானதாக உள்ளதாக கருதி அவ்வாறான பரீட்சைகள் அவசியமற்றதாக கருதியிருக்கலாம் என்ற நியாயமும் அதில் பொதிந்துள்ளது.

தனியார் மருத்துவ கல்லூரி இருப்பது பிழை என்றால் தனியார் ஏனைய துறைகள் சார் கல்லூரிகள் இருப்பதும் தவறு தானே? அதற்கு எதிராக ஏன் யாருமே போராடவில்லை.இன்று இலங்கையில் பொறியியல் கல்வி தனியார் கல்லூரிகளில் மலிவு விலையில் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இன்று பணம் இருந்தால் சகல அனுமதிகளுடனும் ஏ.எல்.தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பொறியியலாளராக வருவதற்கு முன்பு பொறியியலாளர் ஆவதற்குரிய வழிகள் காணப்படுகின்றன.இங்கு நான் கூற வரும் விடயம் தனியார் மருத்துவ கல்லூரி இருப்பது தவறென்றால் தனியார் ஏனைய துறைகள் சார் கல்லூரிகள் இருப்பதும் தவறாகும்.

அரச கல்லூரியை விட தனியார் கல்லூரிகள் மூலம் பல இலாபங்கள் உள்ளன.குறுகிய காலத்தினுள் தரமிக்க கல்வியை பெறலாம்.இலங்கையை சேர்ந்தவர்கள் வெளி நாடுகளுக்கு சென்று இலங்கை பணத்தை வழங்குவதை இலங்கைக்குள் முடக்கலாம்.ஏ.எல் பரீட்சையில் அரச பல்கலை கழகங்களுக்கு தெரிவு செய்யப்படாதவர்கள் வைத்தியராவதற்குரிய  தகுதியற்றவர்கள் என்ற நிலை மாற்றப்படும்.வைத்திய தேவை நிவர்த்திக்கப்படும்.அந்த நிறுத்தம் இந்த நிறுத்தம் போன்ற கதைகள் இல்லாமல் ஆக்கப்படும்.சுகாதாரத் துறை சாதாரண பிரஜைக்கும் இலகுவில் சாதாரண செலவில் சென்றடையும்.இப்படி அதன் நன்மைகளை அடிக்கிக் கொண்டே செல்லலாம்.இருந்தாலும் *தனியார் கல்லூரிகளில் உருவாக்கப்படும் வைத்தியர்களின் தரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.*

இவைகளை வைத்து நோக்கினால் சைட்டமிற்கு எதிரான இவர்கள் போராட்டம் தவறானது என்பதை விளங்கி கொள்ளலாம்.இதனை ஜே.வி.பி,மஹிந்த அணியனர் தனது அரசியலுக்கு நன்றாக பயன்படுத்த முனைவதை தற்போது அவதானிக்க முடிகிறது.பல்கலைக் கழக விடயம் ஒன்று என்றால் அங்கு ஜே.வி.பி தலையை கொடுப்பது புதிதல்ல.குறித்த பல்கலைக்கழகத்திற்கு மஹிந்த ராஜபச்கவின் காலத்திலேயே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.அப்படி இருக்கையில் அவர் மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பது அரசியல் இலாபம் கொண்டதென சாதாரணமாகவே கூறலாம்.

இவர்கள் ஆர்ப்பாட்டம் மிக நீண்ட காலமாக சிறிதும் சளைக்காமல் இடம்பெறுவதாலும் இதற்கு எதிரான எதுவும் செய்ய முடியாத திரிசங்கு நிலையில் அரசாங்கம் இருப்பதாலும் இதனை வைத்து அரசியல் இலாபம் தேடிக்கொள்ளலாம்.இப்படியான திருசங்கு நிலையைத் தான் மஹிந்த அணியினர் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.இந்த அரசு எத்தனை சவால்களைத் தான் எதிர்கொண்டுள்ளது?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Sunday, February 5, 2017

வன்னி மக்களை மடையர்களாக்க நினைத்த சாணக்கியமும் அதன் தும்பு தூக்கிகளும்.

இன்று 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை  சிலாவத்துறை முச்சந்தியில் முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஹீனைஸ் பாறுக் தலைமையில் கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததன் நோக்கம் வன்னி மக்களை மடையர்களாக்கவும், பொய் பூச்சான்டி காட்டவும், கிழக்கில் விரட்டப்பட்டுவிட்டோம் வட மாகாணத்தை ஏமாற்றுவோம் எனும் தொனிப் பொருளில் இக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர்.  தமக்கும் தமது கட்சிக்கும் ஆதரவாளர்கள் இல்லாத குறையை அறிந்த சாணக்கியமும் அதன் தும்பு தூக்கிகளும் புத்தளத்திற்கும், கிழக்கிற்கும்  ஏனைய சில ஊர்களுக்கும் 10ற்கு அதிகமான பேரூந்துகளை அனுப்பி சோற்றுப் பாரிசலும் ஆயிரம் ரூபா பணமும் கொடுத்து ஆதரவாளர்களை அதிகமாக்க எண்ணி மடப்பட்டம் கேட்டனர். அங்கு வந்தவர்கள் பணத்துக்காக வந்தவர்களே தவிர சிலாவத்துறையை சேர்ந்தவர்கள் அல்ல என உறுதியான தகவல் கிடைத்தது.

பொதுக் கூட்டமும் ஆரம்பமானது பணம் கொடுத்து வாடகைக்கு பெறப்பட்ட கூலியாட்களைத் தவிர ஆதரவாளர்கள் என்று சொல்லுவதற்கு யாருமில்லை. பொதுக் கூட்டம் ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம அதிதியாக சாணக்கியம் ரவூக் ஹக்கீம் கலந்து கொண்ட போதும் அவரின் முகத்தில் புன்முறுவலில்லை காரணம் பசீர் சேஹுதாவுத் எந்த நேரமும் CD யை வெளியிடலாம் என்ற அச்சம்.

நிகழ்வில் உறையாற்றிய பிரமுகர்கள் யாரும் ஹக்கீமுக்கு எதிராக பசீர்சேகுதாவுத் இனால் வெளியிடப்பட்ட உண்மைகளைப் பற்றிப் பேசவுமில்லை அதற்கான சரியான விளக்கங்களையும் அழிக்காமல் சலப்பிக் கொண்டிருந்ததை சாணக்கியத்தால் அவதானிக்க முடிந்தது.

இதன் போது பேசிய கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நஸீர் அவர்கள் தான் ஒரு ஹாபிஸா என்று வினவும் அளவில் பொய்யான பித்தலாட்ட பேச்சுக்களைப் பேசியது மாத்திரமன்றி வன்னிக்கு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பமாகும் என்றும் கட்சியின் அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் தேசியப்பட்டியல் வன்னி மாவட்டத்திற்கு அதாவது ஹூனைஸ் பாருக்கிற்கு வழங்கப்படுமென்றும் அப்பட்டமான பொய்யைக் கூறினார். கட்சியின் தேசியப்பட்டியல் ஆனது சல்மானுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டு 02 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அந்த இரண்டு வருடத்திற்குல் தலைவர் ரவூப் ஹக்கீமால் அட்டாளைச்சேனைக்கும், ஹஸனளிக்கும், குருனாகலுக்கும், புத்தளத்திற்கும், கட்டாருக்கும் என்று பொய்ப் பூச்சான்டி காட்டி தற்பொழுது வன்னிக்கு வழங்கப்படும் என்றும் பொய் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. வன்னி மக்களை மடையர்களாக்கவா இந்த பூச்சாண்டி காட்டப்பட்டது என்பது நகைச்சுவைக்குறிய விடயமாகும்.

அதுமாத்திரமின்றி இன்னும் பல அபிவிருத்திகள் செய்யப்படவுள்ளதாகவும் முதலமைச்சரின் வாயால் பம்மாத்தாக மொழியப்பட்டுள்ளது மாத்திரமின்றி மாமனிதர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களைப் பற்றியும் பேசினார்.  மாமனிதரைப் பற்றி பேசுவதற்கு முதல் முதலமைச்சர் அவர்களே நீங்களும் சேர்ந்துதான் தாறுஸ்ஸலாம் சொத்தை அபகரித்ததாக தாறுஸ்ஸலாம் மர்மங்கள் எனும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. கூறப்பட்டுள்ள உண்மைக்கு உங்களால் எதுவிதமான பதிலும் அளிக்காமல் கூறப்பட்ட விடயங்கள் உண்மைதான் என்று அமைதியாக வாய் மூடி மறைமுகமாக ஏற்றுக் கொண்ட உங்களுக்கு மாமனிதரைப் பற்றிப் பேச என்ன தகுதியுன்டு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

மேடைப் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவு தெரிப்பது போல் கூலிக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட கூட்டங்கள் உங்களைப்போன்றவர்களை ஏற்றுக் கொண்டதா என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது??? இந்த பேச்சை நீங்கள் தற்பொழுது கிழக்கில் வந்து ஆற்ற முடியுமா ??? கல்லறி நிச்சயம்??கட்சியின் தற்போதைய நிலமை அவலம் அதனை சரிபடுத்த முடியாமல் வாய் மூடியாக இருக்கும் நீங்கள் சமூகத்திற்கு ஏதும் பிரச்சினைகள் வரும் போது எப்படி வாய் திறந்து பேசுவீர்கள்??....

முதலமைச்சர் அவர்களே!! தவிசாளர் பசீர் சேகுதாவுத் கூறிய சில விடயங்களை ஞாபகமூட்டுகிறேன்... பாசிக்குடாவில் பெண்களுடன் கூத்தாடி  கொள்ளுப்பிட்டிய பொலிஸ் வரைக்கும் கொண்டு சென்றுள்ளாராம் உங்களுடைய சாணக்கியத் தலைவர் இதற்கான CD ஆதாரமும் உண்டாம் வீடியோ காட்சிகள் பல உள்ளதாம் இதனை வெளியிடுவேன் எனக்கூறியுள்ளார் உங்கள் கட்சியின் தவிசாளர் அவர்கள் அதற்கு நீங்களோ உங்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களோ அல்லது காமசூஸ்திரத் தலைவர் சாணக்கியமோ வாய் திறந்து ஏதாவது கூறினார்களா??? இது பொய் உண்ணால் முடிந்தால் ஆதாரங்கள் உள்ளது எனில் வெளியிடலாம் என்றாவது எதிர்பைக் காட்டமுடிந்ததா????  பதிளளிக்க முடியாமைக்கான காரணம் தவிசாளர் கூறியவைகள் உண்மை என்ற காரணத்தினாலா??? அல்லது நீங்கள் வாய்மூடி இருப்பது உங்களுக்கும் பங்குன்டா??? ....  இதற்கு பதிளளிக்காமல் பயத்தில் நடுங்கி தவிசாளரை நீக்கினார்களாம் சிரிப்பானவிடயம். இவ்வாறு உங்களுடைய கட்சியினதும் கட்சித் தலைவரினதும் மானம் கப்பல் ஏறிக் கொண்டிருக்கும் போது எங்கள் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் அதன் தேசியத் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீனையும் பற்றி பேச முதலமைச்சரே,  சாணக்கியமே!! உங்களுக்கு என்ன தகுதியுண்டு...???

முதலமைச்சரே! உங்கள் நடத்தையால் எங்களால் ஊகிக்க முடிந்தது கட்சியையும் தலைமையையும் நீங்கள் அபகரிப்பதற்கான நாடகம் போன்று தோன்றுகிறது... நீங்கள் சாய்ந்தமருது பொதுக்கூட்டத்தில் கூறினீர்கள் மாமனிதர் உருவாக்கிய கட்சி வளர்ச்சிப் பாதையில் பயனித்துக்கொண்டே இருக்கும் சேர்ந்து பயனிக்கவிரும்புவவர்கள் பயனிக்கலாம் முடியாதவர்கள் குழப்படி பண்ணாமல் தானாகவே விலகிச் செல்லலாம் இது அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும் குறிப்பாக தலைவருக்கும் தான் முடியவில்லை எனில் தானாக விலகிக் கொள்ளளாம் கட்சி பயனிக்கும் என்று கூரினீர்கள்..... ஞாபகமுள்ளதா அதன்பிறகு கட்சியின் உயர்பீடக் கூட்டத்திலோ பிரச்சாரக் கூட்டங்களிலோ எதுவித பேச்சையும் பேசாமல் கூலிக்கு ஆள் வைப்பது போல் தவம், ஆரிப்சம்சுடீன் போன்றவர்களைப் பேசவிட்டது மாத்திரமில்லாமல் தற்போது தலைவருக்கு எதிராக தவிசாளரால் சாட்டப்பட்ட குற்றங்களுக்கும் நீங்கள் வாய் திறந்து பதிளளிக்காமல் தவம் ஆரிப்சம்சுடீனை பேசவிட்டு நீங்கள் மெளனியாக இருந்து கட்சித் தலைமையையும் கட்சியையும் நீங்கள் பெறுவதற்கான நாடகமா????
இல்லை தவிசாளரால் சாட்டப்பட்ட குற்றத்தில் உங்களுக்கும் பங்குன்டா???

கட்சியின் தலைவர் சாணக்கியமவர்களால் சில நாட்களாக அவரின் முகத்தில் சந்தோசமில்லை புன்முறுவலில்லை பயம் பயம் அச்சத்தில் இருக்கின்றார் காரணம் தவிசாளர் எந்த சமயத்திலும் CD யை வெளியிட வாய்ப்புள்ளது. உங்களின் நிலையே கவலைக்கிடம் தவிசாளர் ஆதாரத்தை வெளியிட்டு உண்மையானால் உங்கள்  கட்சியின் நிலை குர்ஆன் ஹதீஸ் யாப்பில் உறுவாக்கப்பட்ட கட்சியின் நிலை இதுவா,,,,??

மக்களே விழித்தெழுங்கள் கிழக்கில் விரட்டப்படும் முஸ்லிம் காங்கிரஸினர் தற்போது வட மாகாண மக்களை ஏமாற்ற வந்து கொண்டிருக்கின்றனர் அவதானமாக இருங்கள் சோற்றுப் பாரிசலுக்கும் பணத்துக்கும் சோரம் போய் உங்களுடைய உரிமையை விட்டுவிடாதீர்கள்.....

வன்னி மக்களே பயப்பட வேண்டாம் உங்களுக்கு என்றும் பக்கபலமாக உங்கள் மண் பெற்றுத்தந்த எங்கள் தேசியத் தலைவர் றிஸாட் பதியுதீன் உள்ளார். அவரே உங்களுக்கு சேவை செய்ய முடியும் உங்களை பாதுகாக்க முடியும்.வன்னியின் ஒளி, விடியல் என்றும் இன்ஸா அல்லாஹ் எப்போதும் றிஸாட் பதியூதீனே...

அஹமட் ஸாஜித்



Saturday, February 4, 2017

ஹக்கீம் தன்னை குற்றமற்றவர் என நிரூபித்தாரா?

நேற்று கூடிய மு.காவின் உயர் பீடம் பஷீர் சேகு தாவூதை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருந்தது.இதனை வைத்து ஹக்கீம் தன்னை குற்றமற்றவராக நிரூபித்துள்ளார் என்ற வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பஷீர் மீது ஒழுக்காற்று நடவடிக்க எடுப்பதாக இருந்தால் அவரை மு.கா பகிரங்க விசாரணைக்கு அழைத்து அழகிய முறையில் செய்திருக்க முடியும்.அவ்வாறு செய்து அவரை நீக்கி இருந்தால் அமைச்சர் ஹக்கீம் தன்னை குற்றமற்றவராக நிரூபித்தவராக எந்தவித சந்தேகமுமில்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

பஷீர் சேகு தாவூதை  அவர் இல்லாத சந்தர்ப்பத்தில் ஒழித்து நீக்கி இருக்க வேண்டிய அவசியமில்லை.மடியில் கனமில்லையென்றால் இம் முறைக்கு ஏன் அச்சம்? பஷீரை நீக்கியமை அமைச்சர் ஹக்கீமின் தைரியத்தை எடுத்துக் காட்டினாலும் தன்னை தூய்மையானவராக நிரூபிக்க போதுமானதல்ல.

பகிரங்க விசாரணை செய்யாமல் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்க எடுத்திருப்பது அமைச்சர் ஹக்கீம் ஏதோ ஒரு விடயத்திற்கு அஞ்சுகிறார் என்பதாகவே பொருள் கொள்ளலாம்.விசாரணை செய்யும் போது அமைச்சர் மீதான ஏதேனும் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால்?

இப்படிக்கு
அபு ரஷாத் (அக்கரைப்பற்று)


வன்னி மக்கள் அரசனை நம்பி புரிசனை இழப்பார்களா?

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

நாளை அமைச்சர் ஹக்கீம் வன்னிக்கு விஜயம் செய்யவுள்ளார்.இவர் என்ன செய்துவிட்டு அங்கு செல்கிறார் என சிந்திக்க வேண்டியது அங்குள்ள ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.இதனை பெரும் தூரம் சென்று சிந்திக்காமல் மிக எளிமையாக சில விடயங்களைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்.

வன்னி மக்கள் சுத்தமான குடிநீரை பெறுவதற்கு மிகவும் கஸ்டப்படுவது யாவரும் அறிந்ததே.இதனை நிவர்த்திக்கும் அமைச்சு அமைச்சர் ஹக்கீமிடம் தான் உள்ளது.அவர் என்ன செய்துள்ளார்.அவரை விட இத் தேவையை நிவர்ப்பிப்பதில் அமைச்சர் றிஷாத் ஈடுபாடு காட்டி சாதித்திருப்பது யாருமே மறுக்க முடியாத உண்மை.

இன்று அமைச்சர் றிஷாதிற்கு எதிராக இனவாதிகளின் தாக்குதல் எதற்காக? சிந்தித்து பாருங்கள்.எத்தனை விவாதம்? எத்தனை ஏச்சு பேச்சு? அமைச்சர் ஹக்கீம் கூட வில்பத்து பிரச்சினை இனவாத பின்னணி என்பதை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இவ் விடயத்தில் மூக்கை நுழைத்ததற்காக தனது தனிப்பட்ட மற்றும் குடும்பத்தை இழுத்ததெல்லாம்  எத்தனை அவமானங்கள்? இதெல்லாம் எதற்காக? வன்னி மக்களின் விடிவிற்காக.அமைச்சர் ஹக்கீமைப் போன்று அமைச்சர் றிஷாதும் மௌனம் காத்தால் இன்று இனவாதிகள் வன்னியை சுருட்டி அந்த மக்களை வீதியில் விட்டிருப்பார்கள்.இதனை அந்த உணரத் தவறினால் அவர்களைப் போன்ற கை சேதவாளர்கள் யாருமே இல்லை.

இப்போது வன்னி ஒளியேற்ற வருகிறாராம் அமைச்சர் ஹக்கீம்.ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன்.வன்னிக்கு ஒளி அமைச்சர் றிஷாத் தான்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மக்கள் அமைச்சர் ஹக்கீமுக்கு தகுந்த பாடம் புகட்டி இருந்தார்கள்.நாளை இடம்பெறவுள்ள வன்னியின் ஒளிக்கும் பாடம் புகட்டுவார்கள் என நம்புகிறேன்.அல்லாது போனால் அவர்களை துரோகிகள் யாருமே உலகில் இருக்க மாட்டார்கள்.நாளை மு.காவிற்கு புகட்டப்படும் பாடம் அமைச்சர் றிஷாதின் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக அமைய வேண்டும்.


பஷீரின் நீக்கம் சரியானதா?



மு.காவின் தவிசாளராகவிருந்த பஷீர் சேகுதாவூத் நேற்று 04-02-2017ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற மு.காவின் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் நீக்கப்பட்டுள்ளார்.முதலில் பஷீர் ஏன் நீக்கப்பட்டார்? என்ற வினாவிற்கான விடையை பெறுதல் அவசியமாகிறது.அண்மைக் காலமாக பஷீர் சேகுதாவூத் கட்சிக்குள் இடம்பெற்ற சில தவறுகளை பகிரங்கமாக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.இதனடிப்படையிலேயே அவர் தவிசாளர் பதவியிலிருந்தும் உயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

பஷீர் சேகுதாவூத் கூறுவது உண்மையாக இருந்தால் அவர் கட்சியை அபகீர்த்திக்கு உட்படுத்தவில்லை.கட்சியை தூய்மைப்படுத்தும் போராட்டத்தில் உள்ளார் எனக் கூறலாம்.அதே நேரம் அவர் கூறும் விடயங்கள் பொய்யாக இருக்குமாக இருந்தால் அவர் பொய்யான வதந்தியை கூறி மு.காவை மக்களிடையே செல்லாக் காசாக மாற்ற முற்பட்டார் என்ற குற்றச் சாட்டை முன் வைக்கலாம்.இதற்கான சரியான தீர்மானத்தை யாராவது எடுக்க வேண்டுமாக இருந்தால் அது  பஷீரை வைத்து விசாரிக்கும் போதே பெற்றுக்கொள்ளலாம் என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

நேற்று இடம்பெற்ற மு.காவின்  உயர்பீடக் கூட்டத்திற்கு பஷீர் செல்லவில்லை.அப்படியானால் அவர் மீதான எந்த இறுதி முடிவிற்கும் மு.காவின் உயர்பீடம் வந்தது சரியான தீர்மானமாக ஒரு போதும் இருக்காது.ஏன் பஷீர் செல்லவில்லை? எனக் கேட்கலாம்.ஒரு உயர்பீடக் கூட்டத்திற்கு செல்லாமல் இருப்பது தவறல்ல.மேலும்,பஷீர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்கே இவ் உயர்பீடக் கூட்டம் கூட்டப்பட்டது என்பது தொடர்பில் யாரும் அறிந்திருக்காத போது பஷீர் குறித்த உயர்பீடக் கூட்டத்திற்கு செல்லாததை பெரிய விடயமாக தூக்கி பிடிக்க முடியாது.விசாரணை இன்றி எப்படி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்? இங்கு மு.காவின் உயர்பீடம் ஒரு தலைப்பட்சமாக நடந்ததை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

பஷீர் தனக்கெதிராக அமைச்சர் ஹக்கீமால் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற துணிவிலேயே அத்தனையையும் செய்தார்.தற்போது அவர் உயர்பீடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் பேராளர் மாநாட்டில் பஷீர் அணியினர் தலைவருக்கு ஒருவரை பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளதாக கருதப்படும் திட்டம் இலகுவில் பிசு பிசுத்துப் போகும்.இவரை கட்சியை விட்டும் நீக்குதல் அமைச்சர் ஹக்கீம் அவருக்குள்ள சவாலை எதிர்கொள்ள மிக இலகுவான வழியாகும்.இதனை நான் எனது முந்திய கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பஷீர் செகுதாவூதை பொறுத்தமட்டில் அவர் பல தடவைகள் கட்சித் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.இப்போது அமைச்சர் ஹக்கீம் பஷீருக்கு எதிராக மேடைகளில் முன் வைக்கும் குற்றச் சாட்டுகளை நன்கு அவதானியுங்கள்.அவைகள் எல்லாம் எப்போதே நடந்தேறியவைகள் தான்.அப்போதெல்லாம் பேசாமல் இருந்த மு.காவின் உயர்பீடம் அவர் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக போர் முரசைக் கொட்டியவுடன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது கட்சியை விட கட்சித் தலைமைக்கே முக்கியத்துவம் வழங்குவதை துல்லியமாக்குகின்றது.சுளகு தனக்கென்றால் படக்கு படக்கென அடிக்குமாம்.

எது எப்படி இருப்பினும் பஷீரின் மிகப் பெரும் எச்சரிக்கைக்கு மத்தியில் மு.காவின் உயர்பீடம் இந்த முடிவை எடுப்பதற்கு அலாதித் துணிவு வேண்டும்.இந்த முடிவு மு.காவினரின் மடியில் கனமில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.பஷீர் புஸ்வனாமாவாரா? பொங்குவாரா என்பதை காலம் தான் பதில் தரும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
மு.காவின் யாப்பின் அடிப்படையிலான பேராளர் மாநாடு

மு.காவின் 27வது பேராளர் மாநாடு எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந் நேரத்தில் இது பற்றி அலசுதல் பொருத்தமானதும் கூட.மு.வானது ஒவ்வொரு வருடமும் ஒரு பேராளர் மாநாட்டை நடாத்த வேண்டும்.இந்த பேராளர் மாநாட்டில் உள்ள முக்கியத்துவம் ஒரு பேராளர் மாநாட்டில் தான் மு.காவின் யாப்பை மாற்ற முடியும்.இங்கு தற்போதைய சூழ் நிலைகளில் மிக முக்கியமானதொரு வினா எழலாம்.மு.காவின் யாப்பின் அடிப்படையில் ஹசனலிக்கு செயலாளர் அதிகாரங்கள் வழங்க முடியுமா என்பதாகும்.தற்போது இருக்கின்ற யாப்பின் அடிப்படையில் எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ள பேராளர் மாநாட்டில் வைத்து யாப்பை மாற்ற முடியாது என்பதே தெளிவான உண்மை.

மு.கா யாப்பின் 7.1.e ஆனது *“யாப்பு மாற்றங்கள் ஏதாவது புதிதாக வருடாந்த கட்டாய உயர்பீட கூட்டத்திலும் பின்னர் பேராளர் மாநாட்டிலும் அங்கீகாரத்துக்காக சமர்பிப்பதாக இருப்பின் அவை ஒரு மாத காலத்துக்கு முன்னர் நடைபெறும் சாதாரண உயர்பீட கூட்டத்தில் முன்கூட்டியே யாப்பு விவகார பணிப்பாளரிடம் சமர்பிக்கப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். யாப்பு விவகார பணிப்பாளர் பின்னர் முறையான கலந்துரையாடல்களின் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட மாற்றங்களை வருடாந்த கட்டாய உயர்பீட கூட்டத்திலும் பின்னர் பேராளர் மாநாட்டிலும் சமர்பிப்பார்.”*  எனக் கூறுகிறது.
7.1.f வருடாந்த கட்டாய உயர்பீட கூட்டத்திலும் பின்னர் பேராளர் மாநாட்டிலும்  இடம்பெறவேண்டிய நிகழ்சிகள் பற்றிய அனைத்து விடயங்களும் ஒரு மாத காலத்துக்கு முன்னர் நடைபெறும் சாதாரண உயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு பின்னர் மஷூரா சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின்னர் நிகழ்ச்சி நிரல்களாக அழைப்பிதழ்கலில்  உள்ளடக்கப்பட்டு பங்குபற்றும் உறுப்பினர்களுக்கு  இரு வாரங்களுக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பப்படவேண்டும்.

இதில் குறிப்பிடப்படும் கட்டாய உயர்பீடக் கூட்டம் என்பது வருடாந்த பேராளர் மாநாட்டிற்கு முநந்திய உயர்பீடத்தின் இறுதிக் கூட்டமாகும்.அதாவது யாப்பு மாற்றம் நிகழ்வதானால் ஒரு மாதத்திற்கு முன்பு இடம்பெறும் உயர் பீடக் கூட்டத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.அதாவது 2017-01-02ம் திகதி இடம்பெற்ற உயர்பீடக் கூட்டத்தில் இவ் யாப்பு மாற்றம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலேயே எதிர்வரும் எதிர்வரும் 12ம் இடம்பெறும் பேராளர் மாநாட்டில் அது மாற்றத்திற்கு உட்படும்.இன்று மு.கா யாப்பின் பிரகாரம் செயல்படும் கட்சியல்ல.இந்த நடைமுறை கடந்த யாப்பு மாற்றத்தின் போது கடைப்படிக்கப்பட வில்லை.இருந்தாலும் இதனை ஒருவர் சட்ட ரீதியாக நீதிமன்றத்தை அணுகினால் இதனை மாற்ற முடியாது என்ற தீர்ப்பே கிடைக்கும்.ஹசனலிக்கு முன்னர் போன்ற பூரண அதிகாரமிக்க செயலாளர் பதவி கிடைப்பதற்கான சாத்தியக்கூறு மிக அரிதாகும்.அப்படி அவருக்கு கிடைக்க வேண்டுமாக இருந்தால் குறித்த பேராளர் மாநாடு காலம் தாழ்த்தப்பட்டு நடாத்தப்பட்டு இந் நடைமுறை பிட்பற்றப்படுவதட்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இதனை செய்வதற்கான கால ஏற்பாடுகள் மு.காவின் யாப்பிலும் உள்ளது.இரண்டு பேராளர் மாநாடுகளுக்கிடையிலான இடைவேளிக்காலம் 14 நாட்களுக்கு மேல் இருக்க கூடாதென மு.கா யாப்பின் 7.1.g குறிப்பிடுகிறது.கடந்த மு.காவின் பேராளர் மாநாடு 2015-11.07ம் திகதி இடம்பெற்றது.அப்படி பார்க்கப்போனால் 2016-01-07ம் திகதியுடன் இப் பாகம் செல்லுபடியற்றதாகிறது.7.1.k இன் பிரகாரம் தவிர்க்க முடியாத சூழ் நிலையில் இன்னும் ஆறு மாதங்கள் அதிகரிக்கலாம்.இதனை பிற்போடும் அதிகாரம் *7.1.k* இன் பிரகாரம் உயர்பீடத்திற்கே உள்ளது.தற்போது அவசரமாக உயர்பீடத்தை கூட்டி இதற்கான அனுமதி பெறப்பட வேண்டும்.அல்லது அமைச்சர் ஹக்கீம் மஷூரா சபையின் அனுமதியுடன் தனது விசேட அதிகாரத்தை பாவிக்க வேண்டும்.அதாவது இதனை நீடிக்க வேண்டுமாக இருந்தால் அதனை அமைச்சர் ஹக்கீமே செய்ய முடியும்.இவற்றையெல்லாம் வைத்து பார்க்கின்ற போது இம் முறை ஹசனலிக்கு பூரண அதிகாரமுடைய செயலாளர் பதவி வழங்கப்படாது என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

ஒரு மாதத்திற்கு முன்னர் யாப்பு மாற்றமானது உயர்பீடத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது நடைமுறையில் சிந்திக்கின்ற போதும் சிறந்த நடைமுறையாகும்.கட்டாய உயர்பீடக் கூட்டமானது பேராளர் மாநாடு நடாத்த தீர்மானித்த நாளிக்கு மிக நெருங்கிய காலப்பகுதியில் இடம்பெறுவதே வழமை.கடந்த கட்டாய உயர் பீடக் கூட்டமானது பேராளர் மாநாட்டிற்கு முந்திய நாள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.பேராளர் மாநாட்டிற்கு மிக நெருங்கிய காலப்பகுதியில் யாப்பு மாற்றப்பட்டு சமர்ப்பிக்கப்ப்படுமாக இருந்தால் அது பற்றி ஆரோக்கியமான விவாதம் செய்ய முடியாது.யாப்பு என்பது மூடிய அறைக்குள் முடிக்கும் விவகாரமுமல்ல.கடந்த முறை இந் நடை முறை பின்பற்றப்பட்டிருந்தால் செயலாளர் பதவி விவகாரத்தில் மு.கா இத்தனை சவால்களை எதிர்கொண்டிருக்காது.மு.காவின் யாப்பில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படாமையே இது போன்ற பிரச்சினைகள் தோன்ற காரணமாகும்.

 கட்சியின் செயலாளர்

இப் பாகமே கடந்த பேராளர் மாநாட்டை தொடர்ந்து  மிகவும் சர்ச்சைக்குரிய பாகமாக மாறி இருந்தது.உயர்பீட செயலாளராக நியமிக்கப்பட்டவர் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டதாக ஹசனலி அணியினர் கூறியிருந்தனர்.தற்போது ஹசனலி தேர்தல் ஆணையாளரிடம் சென்று தனது முறைப்பாட்டை மீளப் பெற்றுள்ளார்.இந்த பாகத்தை பொறுத்தமட்டில் ஹசனலியை குறி வைத்து ஹக்கீமால் இயற்றப்பட்ட பாகமாகும்.பெயர் ரீதியாக பார்க்கின்ற போது செயலாளர் நாயகம் என்ற பதவியே கௌரவத்திற்குரியது போன்று விளங்கும்.இருந்தாலும் இதன் அதிகாரங்கள் அனைத்தும் கட்சியின் செயலாளர் என்ற பகுதிக்குள் சென்றுவிட்டது.கட்சியின் செயலாளரும் உயர்பீட செயலாளரும் எனும் போது  அப் பெயரானது செயலாளர் நாயகம் என்ற பதவியை விட மதிப்பு குறைவானது போன்று இருந்தாலும் அதுவே பலமிக்கதாகும்.செயலாளர் என்பது  ஒரு கட்சியின் மிக முக்கிய பதவியாகும்.

8.9.c ஆனது *“கட்சியின் செயலாளர் நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து ஒரு வருட காலத்திற்கு செயற்படுவதற்காக தலைவரினால் நியமிக்கப்படுவார்”* என கூறுகிறது.கட்சி என்பது ஒரு இலட்சியத்தை அடைவதற்கு பலர் ஒன்றிணைந்து செய்கின்ற ஒன்றாகும்.மிக முக்கியமான பதவியான இப் பதவியை தலைவர் தெரிவு செய்வார் என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.இவரை நியமித்தல் நீக்குதல் அனைத்து அதிகாரங்களை தலைவர் தன்னகத்தே வைத்துள்ளார்.ஒரு கட்சியின் செயலாளர் தலைவரின் ஜால்ராவாக செயல்படுவது ஒரு கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல.இப் பதவியை பார்க்கின்ற போது இவர் கட்சித் தலைவரின் உதவியாளர் போன்றே செயற்படுவார் என்பதை அறிந்து கொள்ளலாம்.இம் முக்கிய பதவியை வகிப்பவருக்கு நேரடியாக மாதாந்த சம்பளம் வழங்கப்படுகின்றமை இப் பதவியை இழிவுபடுத்துவது போன்றாகும்.வேறு எந்த பதவிக்கும் சம்பளம் வழங்கும் நடைமுறையில்லை.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Friday, February 3, 2017

மனச்சாட்சி இட்ட கட்டளைகள்

(பசீர் சேஹூதாவுத்.-மு.கா.கட்சியின் தவிசாளர்)


1979 ஆம் ஆண்டு தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டத்தில் இணையுமாறும்,1994 இல் முஸ்லிம் காங்கிரசில் இணையுமாறும், 2000ஆம் ஆண்டு கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினையில் இன்னாரோடு அடையாளம் காட்டுமாறும், 2004 இல் இருந்து அப்பாவி முஸ்லிம்களின் முதுகில் சவாரி செய்யும் கனவான்களை அம்பலப்படுத்தும் ஆதாரங்களைச் சேகரிக்குமாறும், 2015 ஆம் வருடம் சமநிலை பேணுமாறும், 2016 இல் இருந்து என்னையும் எனது அரசியல் ஸ்தாபனத்தையும் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்குமாறும் எனது மனச்சாட்சி எனக்கு கட்டளையிட்டது. இக்கட்டளைகளை சிரமேற்கொண்டு செயல்படுத்தினேன். அல்ஹம்துலில்லாஹ் அனைத்திலும் ஹக்கன் அல்லாஹ் எனது முயற்சிகளுக்கு வெற்றிகளைத் தந்தான். 2017 இலும் வெற்றியை வழங்குவான் என நம்பி களமிங்கியுள்ளேன். இதனடிப்படையில்தான் முகப்புத்தகத்தில் கடந்த பதிவை இட்டேன்.

கடந்த எனது பதிவு பற்றி ஆதரவாகவும், எதிராகவும் பின்னூட்டம் இட்டவர்கள், எதிர் வினையாற்றி வெளியிலிருந்து எழுதியவர்கள், சந்தேகம் கொண்டு முகநூல் பக்கங்களில் பதிவுகளைச் செய்தவர்கள், மீண்டும் என்னைத் திட்டித் தீர்த்தவர்கள் ஆகிய அனைவரும், எனது அப்பதிவு 'பெரியவர்' தொடர்பானது என்பதை "ஐயந்திரிபுற" நம்பியிருக்கிறார்கள் என்பதை அவர்களின் கருத்துக்கள்  நிரூபித்து நிற்கின்றன. இது பெரியவர் எப்படிப்பட்டவர் என்பதை சமூகத்தில் உள்ள ஆண்கள் நூற்றுக்கு நூறு வீதம் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்ற திருப்தியை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களைச் சென்றடையச் செய்யும் வேலைத்திட்டம் கச்சிதமாக மேற்கொள்ளப்படும்.

அனைவரும் கருதியிருப்பது போல அறையில் ஆடிய ஆட்டங்களை அம்பலத்தில் ஏற்றுவது தொடர்பான எனது முந்தைய பதிவு பெரியவர் பற்றியது மட்டுமோ அல்லது ஒரேயொரு பெண் சம்மந்தமானது மட்டுமோ அல்ல, மேலும் பல பரிமாணங்களைக் கொண்ட விவகாரங்களை உள்ளடக்கியது என்பதைத் தெளிவு படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்ததன் அடிப்படையிலேயே இந்தப்பதிவைச் செய்துள்ளேன்.

பணப்பரிமாற்றம், மக்கள் பிரதிநிதிகள் பலரின் கூட்டுக் குடி, கூட்டுக் குடித்தனம், விடுதிகளில் கூத்திகளுடனான கொண்டாட்டம், அரசியல் முடிவுகளை மேற்கொள்ளும் அவசிய தருணங்களில் நமது "பண்டமாற்றுப் பதவிப் பணக்காரர்" பில் செலுத்த கூட்டமாக நம் பிராந்தியப் பிரதிநிதிகள் குடியும் கூத்தியுமாக குதூகலித்தமை, ஒரு பிராந்தியத் தலைவர் முன்னைய எண்ணெய் அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து அவர் வீட்டில் விஸ்கி அருந்தியது. முன்னணிப் போராளிக் குடும்பங்கள் சில பிரிவதற்கு காரணமாய் அமைந்த இச்சைக் காட்சிகள்,  (இது பெண்களை நூறு வீதம் புரிதலுக்கு உட்படுத்தும்)
உள்ளிட்டவை பல பரிமாணம் என்பதில் அடங்கும்.

கருணாநிதி கதை, வசனம் எழுதி சிவாஜிகணேசன் நடித்த அவரது முதல் திரைப் படமான பராசக்தியில் சிவாஜி நீதிமன்றத்தில் நின்று கொண்டு நிகழ்த்திய " கோயிலை இடித்தேன், கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக " என்ற சுய விளக்க உரை போல் நானும் மக்கள் நீதி மன்றத்தின் முன்னால் நின்று கொண்டு "மஸ்ஜித்திற்குள் கறையான்கள் கூடு கட்டியிருப்பதனால் மஸ்ஜித்தை இடிக்க முடியாது, கறையான்களின் கூடுகளை இடித்துக் கூட்டித் தள்ளி தூய்மைப் படுத்த இவ்வளவு காலமும் தவறிய   மஹல்லாவாசிகளாகிய நாம் உடனடியாக  கடமையைச் செய்யத் துணிய வேண்டும்" என்று அறை கூவல் விடுப்பேன்.
மாபெரும் வெற்றியைத் தந்த 'மக்கள் நீதி மன்றத்தின் முன் முஸ்லிம் காங்கிரஸ்' என்ற 2000 ஆம் ஆண்டைய எனது வேலைத்திட்டம் தந்த அனுபவம் துணை நிற்கும், இன்ஷா அல்லாஹ்.

கீழே காணப்படும் புகைப்படம் AVT 771,
4 chennel, வீடியோ எடுக்கும் ஹார்ட் டிஸ்க் பொருத்திய அன்றைய நவீன கருவி. இதனுடன் ஒரு சட்டை பொத்தான் அளவு கமாரா உண்டு. கமராவை தேவைப்படும் எவ்விடத்திலும் எவரது கண்ணுக்கும் புலப்படாமல் வைக்க முடியும். இந்த கருவியை ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எந்த இடத்திலும் வைத்து வீடியோ பதிவைச் செய்ய முடியும். இன்று இதை விட அதி நவீன கருவிகள் சந்தையில் கிடைக்கும், ஆயினும் இந்த கருவி ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பை என்னாலும் நண்பர்களாலும் என்றும் மறக்க முடியாது.

இக்கருவியை, 2004 ஆம் வருடம் சிங்கப்பூரில் இருந்து வாங்கி கஸ்டம்ஸ் சோதனைகளைத் தாண்டி எனக்கு  கொழும்பில் கொண்டு சேர்ப்பித்த வெள்ளவத்தை "வீடியோ ப்ளசம்" உரிமையாளர் சதா அண்ணனுக்கு எனது சமூகம் சார்பாக நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன்.

இன்று எமது தேசத்தின் சுதந்திர தினம்.அரசியல் வஞ்சனைக்குள் அகப்பட்டு அல்லலுற்று, இடுக்குக்குள் சிக்குப்பட்ட பலாப்பழம் போல வாழும் எனது  சிறுபான்மையிலும் சிறுபான்மையான முஸ்லிம் மக்களின் சுதந்திரத்துக்கான வாசல் இந்நாளில் திறக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.


றிஷாதின் சாபம் ஹக்கீமை சுற்றுகின்றதா?

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

அமைச்சர் ஹக்கீம் புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேரடியாகவே அமைச்சர் றிஷாதை மிகக் கேவலாமாக முறையில் எள்ளி நகையாடியிருந்தார்.அதனைத் தொடர்ந்து அவர் கலந்து கொண்ட அதிர்வு நிகழ்விலும் அமைச்சர் றிஷாதை கேவலப்படுத்தியிருந்தார் (அதிர்வு நிகழ்வில் அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததை அமைச்சர் ஹக்கீம் நிரூபிக்க முடியாமல் திணறியமை குறிப்பிடத்தக்கது).இதனைத் தொடர்ந்து மு.காவின் ஆதரவாளர்களும் இதனை வைத்து அமைச்சர் றிஷாதை கேவலப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தனர்.

தற்போது அமைச்சர் ஹக்கீமின் நாற்றங்கள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன.இதனை பார்க்கும் போது “வல்லவன் தண்டனை வழங்காவிட்டாலும் வாசப்படியாவது தண்டனை வழங்கும்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.அமைச்சர் ஹக்கீம் தனது பிழையை உணர்ந்து அமைச்சர் றிஷாதிடம் மன்னிப்பு கோர வேண்டும்.அவர்களது ஆதரவாளர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும்.இச் சந்தர்ப்பத்திலாவது இவைர்கள் தங்களது பிழைகளை உணர்ந்து கொள்ள முடியாது போனால் எப்போதும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.

தற்போது இடம்பெறும் நிகழ்வுகளை வைத்து அமைச்சர் ரிஷாதாலும் அமைச்சர் ஹக்கீமை அவமானப்படுத்த  முடியும்.அவரோ இப்படி ஒரு நிகழ்வு நடக்கின்றதா என்று தான் அறியாதவர் போல அதனை கணக்கெடுக்காமல் சென்று கொண்டிருக்கின்றார்.அது தான் அவரது பண்பு.தற்போது மு.காவின் முக்கியஸ்தர்கள் சிலர் அமைச்சர் ஹக்கீமை பஷீர் கேவலப்படுத்தியதை ஒருவரது மானத்தை விற்று அரசியல் பிழைப்பு நடாத்துவதாக கூறுகின்றனர்.இவர்கள் அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் றிஷாதின் மானத்தை (போலியான குற்றச் சாட்டுக்களை முன் வைத்து) விற்று அரசியல் பிழைப்பு நடாத்திய போது எங்கிருந்தார்கள்? மு.கா தவிசாளர் பஷீரின் செயற்பாடு அமைச்சர் ஹக்கீமின் அண்மைக் கால முன் மாதிரிகளில் ஒன்று தான்.உங்களுக்கு வந்தால் இரத்தம்,மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?