Pages

.

.

Sunday, April 30, 2017

இறக்காமத்திலும் ஹக்கீமை நோக்கி கேள்வி கணைகள் தொடுத்த மக்கள்

அமைச்சர் ஹக்கீம் செல்லுமிடமெல்லாம்,மக்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் நேற்று இறக்காமம் சென்ற அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.இன்று இறக்காமத்திற்கு அமைச்சர் ஹக்கீம் வருகிறார் என்றவுடன் கட்சி பேதமின்றி இறக்காமத்து மக்கள் அனைவரும் மிகவும் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் வந்தனர்.

அமைச்சர் ஹக்கீமின் பேச்சில் அவர்கள் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தகர்ந்தன.எந்தவிதமான உறுதி மொழிகளையும் அவரால் வழங்க முடியவில்லை.எப்படி உறுதி மொழி வழங்குவார்? ஏற்கனவே பிரதமர் ரணிலுடன் பேசி அங்கு வைக்கப்பட்ட சிலை ஒரு வார காலத்தில் அகற்றப்படுமென கூறியிருந்தார்.இன்று வரை அதனை அகற்ற முடியவில்லை.இப்போது மீண்டும் பிரதமர் பெயரை பாவிக்காமல் ஜனாதிபதியின் நாமம் பாவிக்கப்படுகிறது.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னுமொரு விடயம் என்னவென்றால் இவ்விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனையும் சம்மதப்படுத்தி மு.காவினர் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.சம்பந்தனோ இதற்கும்  தனக்கும் சம்பந்தம் இருப்பதாக எங்கும் பகிரங்கமாக கூறவுமில்லை குரல் கொடுக்கவுமில்லை.இதனை வைத்து சிந்திக்கும் போது  சம்பந்தனின் பெயரும் ஹக்கீமால் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.இதனை சம்பந்தன் பெரிய விடயமாக தூக்கி பிடித்திருந்தால் ஊடகவியலாளர் மாநாடுகளில் இவ்வரசை கிழித்து தள்ளி இருப்பார்.

குறிப்பாக அமைச்சர் ஹக்கீம் ஜனாதியுடனான பேச்சில் தனக்கு நம்பிக்கையுள்ளது போன்று குறிப்பிடுகிறார்.அதாவது இப் பிரச்சினை இத்தோடு தீர்ந்துவிடுமென உறுதியாக அவரால் கூற முடியவில்லை.ஒருவர் பொது பல சேனா முதலாம் அல்லது இரண்டாம் திகதி வரப்போவதாக கூறியுள்ளது.மக்கள் கொதித்து நிற்கின்றனர்.அவர்கள் வந்தால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும் என கூறுகிறார்.ஹக்கீமோ *“அங்க ஒண்டும் கொதிப்படைய மாட்டார்கள்”* என்ற அலட்சியப் பாணியில் பதில் வழங்குகிறார்.இங்கு அமைச்சர் ஹக்கீம் பொது பல சேனாவை வர விட மாட்டோம்,தடுப்போம் என்றல்லவா பதில் வழங்கியிருக்க வேண்டும்.இக் கூற்றானது அவர் இறக்காம மக்களை எவ்வாறு கணக்கு போட்டு வைத்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

அமைச்சர் ஹக்கீமிடம் சிலை வைக்க பணம் வாங்கியதான கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.காலா காலாமாக மு.காவை ஆதரித்து வந்த இறக்காமத்து மக்களும் ஹக்கீம் கூறுவதை கேட்டுக்கொண்டிருக்காது கேள்வி எழுப்பும் மனோ நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையானது அமைச்சர் ஹக்கீமின் அழிவிற்கான நாள் நெருங்கிவிட்டதை கூறிச் செல்கிறது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.




Thursday, April 27, 2017

பட்டதாரிகளின் பதறல்


இன்று உலகில் சிறந்த வியாபாரம் செய்யும் நிறுவனங்களாக கல்வி நிறுவனங்களும் சுகாதார நிறுவனங்களும் காணப்படுகின்றன.இவை இரண்டும் உலகில் உள்ள அனைவருக்கும் நாளாந்தம் மிகவும் அவசியமானதென்பதால் இவற்றிற்கான கேள்விகளும் அதிகமாகும்.இலங்கை நாட்டை பல விடயங்களில் குறை கூறினாலும் கல்வி,சுகாதாரம் ஆகியவற்றில் இலங்கை நாட்டில் வழங்கப்படுகின்ற சலுகை போற்றத்தக்கது.இருப்பினும் இலங்கையின் கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.இதற்கு இலங்கையில் நடைமுறையில் உள்ள இலவச கல்வி மற்றும் சுகாதார முறைமை பிரதான காரணமாகும்.இலங்கை மக்கள் எழுத்தறிவில் மேன்பட்டவர்களாவர்.ஆண்டு ஒன்று முதல் பல்கலைக்கழகம் வரை இலங்கையில் இலவச கல்வி போதிக்கப்படுகிறது.கல்வி கற்க தேவையான பாடப்புத்தகம்,சீருடை ஆகியன கூட இலவசமாக வழங்கப்படுகின்றன.இது இலங்கை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.உலகில் விரல் நீட்டி சொல்லக் கூடிய முக்கியமான நாடுகளில் கூட கல்விக்கு இத்தனை சலுகைகள் இல்லை.எமக்கு அண்மையில் உள்ள இந்திய நாட்டில் இலவச கல்வி முறைமை காணப்படுகின்ற போதும் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.இலங்கை நாட்டில் அரச கல்வி நிறுவனங்களே முதன்மை ஸ்தானத்தில் உள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது.இலங்கையில் எப்படி வசதி படைத்தவனும் தனது பிள்ளையை ஏ.எல் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறச் செய்து பல்கலைக்கழகம் புகுவதையே பெருமையாக கருதுவான்.இலங்கை நாடு அரச கல்வியை இந்த ஸ்தானத்தில் வைத்திருப்பதற்கு இலங்கை மக்கள் அனைவரும் இலங்கை நாட்டிற்கு நன்றி செலுத்த கடமைப் பட்டவர்கள்.இலங்கை அரசு அரச கல்வியை இந்த ஸ்தானத்தில் வைத்து பேணுவதாலேயே பல ஏழை மாணவர்கள் வசதி படைத்தோருக்கு சரி நிகராக கல்வி பயில்கின்றனர்.

இலங்கை நாட்டில் கல்வி பயிலும் ஒரு மாணவன் எப்போதும் ஏ.எல் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் செல்வதையே முதன்மை இலக்காக கொள்வான்.இதற்கு அடுத்த நிலை படிப்புக்களுக்கு இதன் பின்னரே வழி திறக்கப்படும்.ஒரு மாணவன் பட்டப்படிப்பை நிறைவு செய்வானாக இருந்தால் அதன் பின்னருள்ள மேற் படிப்புக்களை தான் வேலை செய்யும் நிறுவனத்தின் சலுகைகளினூடாக,தனது தொழிலின் மூலம் வரும் வருமானத்தின் ஊடாக,புலமை பரிசில்கள் மூலமாக அடைந்து கொள்ளலாம்.அதாவது ஒரு திறமைமிக்க ஏழை மாணவன் படிப்பின் உச்சத்தை அடைவதற்கு இலங்கை அரசின் கல்விச் சலுகைகள் வழி சமைத்துக் கொடுக்கின்றன.இலங்கையை பொறுத்தமட்டில் மிகப் பெரும் போட்டிக்கு மத்தியில் இலங்கை மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படுகிறார்கள்.இவ்வாறு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு இலங்கை அரசு இலவசமாக கல்வியை வழங்குகிறது.இதனை பூர்த்தி செய்த மாணவர்கள் இன்று தொழில் இல்லாமல் வீதியில் கறுப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இலங்கையில் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை தொழில் பிரச்சினை நிலவியே வருகிறது.எது எவ்வாறு இருப்பினும் கல்வித் துறையில் ஒரு வசதி படைத்தவனுக்கு நிகராக மிளிர வாய்ப்பளித்த இலங்கை நாட்டிற்கு குறித்த பட்டதாரிகள் எப்போதும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை எப்போதும் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.தற்போது ஆர்ப்பாட்டம் செய்யும் ஒரு சில பட்டதாரி மாணவர்களிடையே நன்றி மறந்து செயற்படுகின்ற ஒரு தோற்றத்தை அவதானிக்க முடிகிறது.பட்டதாரிகள் ஒரு குறித்த துறையில் நன்கு பயிற்றப்பட்டவர்கள் என்பதால் இலங்கை நாட்டின் மிக முக்கிய இடத்தில் வைத்து போற்றத்தக்கவர்கள்.இவ்வாறானவர்கள் தான் இலங்கை நாட்டை அபிவிருத்தி பாதையில் பயணிக்கச் செய்ய முடியும்.இவர்கள் வீதியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம் அழகல்ல.இதனை சாதாரணமாக புறக்கணித்தும் செல்ல முடியாது.இவர்களின் ஆர்ப்பாட்டத்தை பல்வேறு கோணங்களில் நோக்க வேண்டிய தேவை உள்ளது.

தற்போது  ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்ற  பட்டதாரிகளை இவ்வரசு பெரிதாக கணக்கில் கொண்டதாக தெரியவில்லை.வீதியில் செல்லும் அரசியல் வாதிகள் இவர்களை கண்டால் இறங்கி குசலம் விசாரித்து செல்வது போன்றே இவர்களின் ஆர்ப்பாட்ட நிலை உள்ளது.இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.இவர்களின் ஆர்ப்பாட்டம் எதனையும்,யாரையும் பாதிக்கவில்லை.மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் யாராவது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள்.கல்வித் துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.அச் செயல் அரசுக்கு சவாலாக அமையும்.இது ஒரு வகையான சவால்.இதே போன்று வீதியில் செல்லும் பஸ்களை உடைத்து ரௌடிகள் போன்று செயற்பட்டால் அதுவும் அரசுக்கு நேரடியான அழுத்தத்தை வழங்கும்.இவ்வார்ப்பாட்டக் காரர்கள் அந்த பாணிக்கு செல்லாமல் ஒரு அழகிய முறையில் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்வதால் அது அரசுக்கு தலைவலியாக அமையவில்லை.யாவரினதும் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அரசு உணர்ந்து கொள்வது சிறந்தது.இன்று இலங்கை அரசு மஹிந்த ராஜபக்ஸவின் மூலமாக,சர்வதேசங்களின் மூலமாக,நாள் தோறும் இடம்பெறும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களினூடாகவென பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.இலங்கை அரச பல்கலைக்கழக  மருத்துவ மாணவர்களின் எதிர்ப்புக்கள்  வருடம் தாண்டியும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.தற்போது இலங்கை அரசு எதிர்கொண்டுள்ள சவால்களுடன் ஒப்பிடும் போது இது ஒரு சவாலே அல்ல.இவ் ஆர்ப்பாட்டத்தில் எதுவித வித்தியாசங்களையும் காண முடியவில்லை.பட்டதாரிகள் வீதியில் கொட்டில் அடித்து எதிர்ப்பை காட்டுவதால் என்ன நடந்துவிடப் போகிறது? இன்று புதுமையான ஆர்ப்பாட்டம் செய்வதில் தமிழ் நாட்டு விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் முறைமை முன்னுதாரணமானது.ஒரு நாளைக்கு எலியை உண்டும் மறு நாள் சாரி உடுத்தும் புல்லை உண்டுமென நாளுக்கு நாள் வித்தியாசமான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றனர்.இந்த வித்தியாசத்திற்காகவே இதனை ஊடகங்கள் நாளாந்தம் வெளிக்கொண்டு வரும்.ஏதோ ஒரு வகையில் இது தொடர்பான செய்திகள் வெளி வந்த வண்ணமிருக்கும்.இது அரசுக்கு தொடர்ச்சியான நச்சரிப்பை வழங்கிக்கொண்டே இருக்கும்.இதனை அடிக்கடி பார்க்கும் போது இதனை தீர்க்க வேண்டுமென்ற சிந்தனை எழும்.இப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தை சிங்கள மொழி ஊடகங்கள் பெரிதும் கணக்கில் கொள்ளவில்லை.இது வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த  பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் என்பதால் இதில் தமிழ் மொழியின் செல்வாக்கே அதிகம் காணப்படும்.இதனை சிங்கள மொழி ஊடகங்கள் கணக்கில் கொள்ளாமைக்கு இது ஒரு காரணமாக அமையலாம் பொதுவாக இன்றைய ஆட்சியாளர்கள் சிங்கள மொழி மூலமான ஊடகங்களையே அதிகம் பார்ப்பவர்கள்.இவ்விடத்தில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளின் தீர்விற்கு சிங்கள மொழி மூலமான ஊடகத்தின் தேவை உணரப்படுகிறது.

இன்று இலங்கை நாட்டில் பட்டதாரிகள் மாத்திரம் தொழில் இன்றி அலையவில்லை.பல்வேறு மட்டத்திலும் தொழில் அற்றோர்  உள்ளனர்.இதற்கு இலங்கையில் புதிதாக தொழில் வழங்கக் கூடிய நிறுவனங்கள் உருவாக்கப்படாமை பிரதான காரணமாகும்.ஒரு பட்டதாரிக்கு தொழில் வழங்க வேண்டுமாக இருந்தால் அதன் கீழ் நிலை கல்வித் தரமுடைய பலருக்கு தொழில் வழங்க வேண்டும்.அவர்களின் செயற்பாடுகளை கவனிப்பவர்களாக அல்லது அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பவர்களாகவே பட்டதாரிகள் அமைவார்கள்.அதாவது இங்கு நான் குறிப்பிட வருகின்ற விடயம் ஒரு பட்டதாரிக்கு தொழில் வழங்கும் போது அது பலருக்கு தொழில் வழங்க வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்வதால்  பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது சாதாரண விடயமல்ல என்பதாகும்.தற்போதைய இலங்கை அரசின் பொருளாதார நிலமை மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது.இந் நிலையில் இப் பட்டதாரிகளுக்கு ஏதோ ஒரு வகையில் இப் பிரச்சினையை தீர்க்க தொழில் வழங்கி சமாளிக்கும் நிலையில் இலங்கை அரசில்லை.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முதல் ஆட்சிக் காலத்தின் இறுதிக் காலப்பகுதியில்  கிழக்கு மாகாணத்தில் ஒரு புறக்கணிக்கத்தக்களவான எண்ணிக்கையானோரை தவிர மற்ற அனைவருக்கும் தொழில் வழங்கப்பட்டிருந்தது.அதனை அவர் திறம்பட சமாளித்திருந்தமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.இவ்வரசு தோன்றிய போது தொழில் ரீதியான பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதும் அதனை நோக்கிய காய் நகர்த்தல்களை அவதானிக்க முடியவில்லை.

இன்று இலங்கை நாட்டில் சில அரச நிருவாக ரீதியாக தொழில் வாய்ப்புக்களே உள்ளன.இவைகள் மட்டுப் படுத்தப்பட்ட வேலை வாய்ப்பையே கொண்டுள்ளன.இச் சேவையில் இருந்து வருடமொன்றிற்கு வயது காரணமாக வெளியேறுபவர்களை தவிர அதிக எண்ணிக்கையான பல்கலைக்கழக பட்டதாரிகள்கள் உருவாக்கப்படுகிறார்கள்.இங்கு படித்தவர்கள் வேலையின்றி எஞ்சவே செய்வார்கள்.அரச தொழில் நிறுவனங்கள் மக்களுக்கு சேவை வழங்குவதை அடிப்படையாக கொண்டவை.இவைகள் இலாபத்தை அடிப்படையாக கொண்டதல்ல.இங்கு அதிகமான தொழில் வாய்ப்புக்கள் உருவாவதை எதிர்பார்க்க முடியாது.ஒரு நாட்டில் உற்பத்தி ரீதியான நிறுவனங்கள் உருவாகும் போது நாளுக்கு நாள் தனது நிறுவனத்தை முன்னேற்ற அந் நிறுவனம் சிந்திக்கும்.இதன் காரணமாக பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் உருவாகும்.இலங்கையில் கண்ணில் தென்படுகின்ற சிறிய பொருட்கள் உட்பட பெரும்பாலானவை வெளிநாட்டு உற்பத்தி பொருட்களே.இவைகளை இலங்கையில் உற்பத்தி செய்தாலே இலங்கையின் தொழில் தேவையை நிவர்த்திக்கலாம்.இலங்கை அரசு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் அனைவருக்கும் தொழில் வழங்க வேண்டுமாக இருந்தால்  வயது காரணமாக வருடமொன்றிற்கு வெளியேறுபவர்களையும் புதிதாக உருவாக்க வேண்டிய தொழில் வாய்ப்புக்களையும்  கணக்கிட்டு அவ் எண்ணிக்கையானவர்களுக்கு மாத்திரமே பல்கலைக்கழகம் சென்று கற்க வாய்ப்பளிக்க வேண்டும்.இவ்வாறு இலங்கை அரசு செய்திருந்தால் இன்று கறுப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் பலர் பல்கலைக்கழகத்தின் வாடையை கூட நுகர்ந்திருக்க மாட்டார்கள்.இலங்கை அரசினால் வருடமொன்றிற்கு எத்தனை மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்வியை போதிக்க இயலுமோ அத்தனை மாணவர்களே பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார்கள்.இலங்கை அரசியலமைப்பின் 27 (2)(ஏ) சமத்துவமான கல்வி வாய்ப்புக்கான உரிமையை எல்லா பிரசைகளுக்கும் உறுதி செய்வதாக கூறுகிறது.இலங்கை அரச பல்கலைக்கழகங்ளுக்கு இலங்கை அரசால் கல்வி போதிக்க இயலுமானவர்கள் தெரிவு செய்யப்படுவதனூடாக  சமத்துவமான கல்வி வாய்ப்பு என்ற இலங்கை அரசியலமைப்பின் இப் பகுதி மீறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசானது ஓ.எல் பரீட்சையில் ஒரு குறித்த பெறு பேறுகளை பெறுபவர்களுக்கே ஏ.எல் கற்க வாய்ப்பளிக்கின்றது.இதன் மூலம் குறித்த அடைவு மட்டத்தை பெறுபவர்களே ஏ.எல் கற்க தகுதியானவர்களாக கணக்கிடுகிறது.இங்கு மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படவில்லை.பல்கலைக்கழக மாணவர்கள் ஏ.எல் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுகிறார்கள்.பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உயர் தரப்பரீட்சையில் முதற் பெறுபேறுகளை பெறுபவர்கள்.இங்கு மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுகிறது.இலங்கை நாடு தனது கல்வித் துறைக்கு அதிகமான நிதியை ஒதுக்கும் போது பல்கலைக்கழகத்தினூடாக இன்னும் அதிகமான  பட்டதாரிகளை உருவாக்க முடியும்.இது கல்விப் புரட்சிக்கு வித்திடும்.இது போன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் போது இலங்கை அரசு அதிகமான பட்டதாரிகளை உருவாக்க பின் வாங்கும்.இது இலங்கை நாட்டின் கல்விப் புரட்சிக்கு சிறந்ததல்ல.இவர்களின் ஆர்பாட்ட கோணம் பட்டதாரிகளின் தொழில்களை உறுதி செய்யுங்கள் என்றில்லாமல் இலங்கை அரசு இலங்கை மக்களின் தொழில் வாய்ப்பை உறுதி செய்யுங்கள் என்ற வகையில் அமைவது பொருத்தமானது.இன்று தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான தொழில் வாய்ப்பை தாங்களே தேடிக்கொள்வதை அவதானிக்க முடிகிறது.தனியார் கல்வி துறை நோக்கி பயணிப்பவர்கள் நாட்டின் கேள்வியில் உள்ள அல்லது தங்களுக்கு விருப்பமான தொழிலை நோக்கிய கற்கை நெறிகளை பயில்வார்கள்.இதன் காரணமாக மிக இலகுவாக தொழிலையும் பெற்றுக்கொள்வார்கள்.இவர்கள் அரசு தொழில் தர வேண்டுமென பெரிதும் எதிர்பார்ப்பதில்லை.இலங்கையில் கல்வி தனியார் மயமாவதன் சிந்தனைகள் இக் கருத்தினூடாக நான் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்பவர்கள் அனைவரும் சிறந்த தொழில் வாய்ப்பை பெற்றுள்ளார்கள் என கூற வரவில்லை.அரச பல்கலைக்கழகங்களில் ஏ.எல் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலேயே (z.score) அவர்களுக்குரிய துறை கிடைக்கும்.சில வேளை குறித்த துறை தங்களுக்கு பிடிக்காத மற்றும் தொழில் கேள்விகள் குறைந்த துறை என்றாலும் அரச பல்கலைக்கழகத்தில் கல்வி பயில வேண்டும் என்பதற்காக பல்கலைக்ககழகங்களில் இணைந்து கொள்வார்கள்.ஒரு துறையில் மிளிர அத் துறை மீது இயல்பாகவே ஆர்வம் இருக்கக் வேண்டும்.ஒரு குறித்த துறையில் உச்சத்தில் நின்று மிளிர்த்தல் அத் துறையில் ஏதோ ஒரு வகையில் தொழிலொன்றை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.தொழில் கேள்விகள் குறைந்த துறையை கற்றால் தொழில் கிடைப்பது கடினம் தான்.இன்று பத்திரிகைகளிலே நாளாந்தம் ஏதாவது தொழிலுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும்.சண்டே ஒப்சேவரில் பல பக்கங்களில் தொழில் அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருக்கும்.திறமையுள்ளவர்கள் முதன்மை இடத்தை அடைவதன் மூலம் தொழிலை பெற்றுக்கொள்ளலாம்.இங்கு தொழில் கிடைக்காமல் இருப்பவர்கள் தொழில் கேள்விக் குரிய கற்கை நெறிகளை கற்காதவர்களும் குறித்த துறையில் உச்சத்தில் மிளிராதவர்களுமாவர்.இன்று ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் போட்டிப் பரீட்ச அற்ற தொழில் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.பரீட்சையை எதிர்கொள்ள ஏன் அச்சம்? ஒருவர் ஏ.எல் பரீட்சையில் முதன்மை பெறுபேறுகளை பெற்றாலே பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படுவார்.இல்லை சித்தி பெற்ற அனைவரையும் தெரிவு செய்யுங்கள் என்றால் அது சாத்தியமல்ல.அது போன்ற நிலை தான் போட்டிப் பரீட்சை இன்றி பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்பட வேண்டுமென்ற பட்டதாரிகளின் கோரிக்கையாகும்.

இன்று வடக்கு,கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பட்டதாரிகளே இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.ஏனைய மாகாணங்களில் உள்ள பட்டதாரிகள் மௌனமாக இருப்பதற்கான காரணம் என்ன? வடக்கு,கிழக்கு மக்களின் மனோ நிலையானது அரச தொழில் துறையை நோக்கியதாகவே உள்ளது.அதே நேரம் ஏனைய மாகாணங்களை சேர்ந்த மக்கள் தனியார் துறையை நோக்கியும் பழக்கப்பட்டு வருகிறார்கள்.அது போன்று பெரும் பான்மையின மக்களின் வாழ்க்கை முறையை  எடுத்து நோக்கினால் படித்தவன் என தம்பட்டம் அடிக்காது சாரனை மடித்து கட்டிக் கொண்டு வயலில் வேளாண்மை செய்வார்கள்.இதன் காரணமாக அவர்களுக்கு ஒரு சிறு தொழில் கிடைத்தாலும் அவர்களுக்கு துணையாக இன்னுமொரு தொழில் இருப்பதால் தங்களது தேவைகளை சமாளித்துக் கொள்வார்கள்.தங்களது வீடுகளில் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான மரக்கறி வகைகளை நட்டிருப்பார்கள்.அவர்களின் வாழ்க்கை செலவு மிகக் குறைவாகவே காணப்படும்.இதன் காரணமாக அவர்களுக்கு சிறிய தொழில் கிடைத்தாலும் அதனை வைத்து சமாளித்துக் கொள்வார்கள்.பெரிதும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.தங்களது படிப்புக்கேற்ற தொழில் கிடைக்கும் வரை எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்.வடக்கு,கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஓரளவு படித்தவர்கள் கூட தாங்கள் படித்த படிப்பை நோக்கிய தொழில்களையே பெரிதும் எதிர்பார்த்திருப்பார்கள்.ஊதியம் அதிகம் வழங்கினால் மாத்திரமே செல்வார்கள்.இங்கு வாழ்க்கை செலவும் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாழ்க்கை செலவு மிகவும் அதிகமாகும்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பாரிய கைத் தொழில் பேட்டைகளோ அல்லது பாரிய தனியார் மற்றும் அரச நிறுவனங்களோ இல்லை.படித்த பட்டதாரிகள் தனியார் துறையுடன் ஒன்றிணையும் வசதியுமில்லை.இதற்கு வடக்கு,கிழக்கு மாகாண அரசியல் வாதிகளே வகை கூற வேண்டும்.வடக்கு,கிழக்கு மாகாணத்தில் மிக நீண்ட காலமான யுத்தம் நிலவியதன் காரணமாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பாரிய நிறுவனங்கள் நிறுவப்படாமைக்கு தமிழ் அரசியல் வாதிகளை பொறுப்புக் கூற முடியாது.முஸ்லிம் அரசியல் வாதிகளை பொறுத்தமட்டில் அவர்கள் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களுடனேயே இருந்தார்கள்.இருக்கின்றார்கள்.இவர்கள் இவ்வாறான தொழில் வழங்கங்களை சிந்தித்து தனியார் நிறுவனங்களை நிறுவ முயற்சித்திருக்க வேண்டும்.முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களது பொக்கட்டுகளை நிரப்புவதிலேயே அதிக அக்கறை கொண்டவர்கள்.கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் இலங்கையில் நெல் உற்பத்தி செய்வதில் முதன்மையான மாவட்டங்களில் ஒன்று.இங்கு நவீன வசதிகளுடன் கூடிய நெல் குற்றும் ஆலைகள் இல்லை.அங்கு உற்பத்தியாக்கப்படும் பெருமளவான நெல்கள் அனுராதபுரம்,பொலநறுவை ஆகிய இடங்களுக்கே ஏற்றப்படும்.கிழக்கு மாகாணத்தில் மீன் வளமிக்க கடல் காணப்படுவதால் இதனை மையமாக கொண்ட பல்வேறு நிறுவனங்களை நிறுவலாம்.அதாவது இம் மாகாணங்களில் உள்ள வளங்களை பயன்படுத்தி அமைக்க முடியுமான நிறுவனங்கள் கூட இன்னும் அமைக்கப்படவில்லை.இப்படி இருந்தால் தொழில் தட்டுப்பாடு நிலவாமல் இருக்குமா? இது போன்று வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்ற மக்கள் சிங்கள மொழி புலமை குறைந்தவர்களாக இருப்பார்கள்.மொழி என்பது அறிவல்ல.இருப்பினும் தொடர்பாடலுக்கு அது முக்கியமானது.வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் எங்காவது தொழில் புரிய வேண்டுமாக இருந்தால் சிங்கள மொழி அவசியம்.அதிகமான தனியார் நிறுவனங்கள் சிங்கள மொழி புலமை உடையவர்களையே தொழிலுக்கு தெரிவு செய்வார்கள்.அப்போது தான் தனியார் நிறுவனங்களில் தொழிலை தேடி பெற்றுக்கொள்ள முடியும்.வடக்கு,கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற மக்களுக்கு  சிங்கள மொழி புலமை காணப்படுவதால் அவர்கள் மிக இலகுவாக ஏதாவதொரு தொழிலை பெற்றுக்கொள்வார்கள்.இலங்கையில் மிக அரிதாகவே ஆங்கில மொழிப் புலமை பயன்படும்.சிங்கள மொழியுடன் ஆங்கில அறிவும் இருந்தால் இன்றைய தொழில் சந்தையில் அவ்வாறானவர்களின் விலை அதிகமாகும்.

இன்று ஆர்ப்பாட்டம் செய்பவர்களில் அதிகமானவர்கள் கலைத்துறை பட்ட தாரிகளே.இவர்களின் ஆர்ப்பாட்டத்தில் வைத்திய பட்டதாரிகளோ அல்லது பொறியியல் பட்டதாரிகளோ ஒருவர் கூட இருக்க மாட்டார்கள் என்பதை உறுதி பட நம்பலாம்.இன்றைய தொழில் சந்தையில் இவர்களுக்கான கேள்விகள் அதிகம் இருப்பதால் அவர்களுக்கு இவ்வாறான ஆர்ப்பாட்டம் செய்யும் தேவை இல்லை.நாங்கள் பல்கலைக்கழகம் சென்று கற்றும் தொழில் இன்றி இருப்பதா என்ற கேள்விகளை குறித்த பட்டதாரிகளிடையே அவதானிக்க முடிகிறது.உடனடியாக தொழில் வேண்டுமென்றால் பொறியியல்,மருத்துவம் போன்ற தொழில் கேள்வி நிலவுகின்ற துறைகளை இவர்கள் தெர்தேடுத்திருந்தால் இந் நிலை வந்திருக்காது.இன்று தொழில் செய்கின்ற கலைத் துறையை சேர்ந்த பட்டதாரிகளில் அதிகமானவர்கள் தாங்கள் கற்ற கல்விக்கும் செய்யும் தொழிலுக்கு சிறிதும் சம்பந்தமற்ற தொழிலை செய்பவர்களே அதிகமாகும்.பல்கலைக்கழகம் என்பது கல்வியை போதிக்கும் இடமே தவிர அங்கு இணைபவர்களுக்கு தொழில் ரீதியான வழி காட்டும் இடமல்ல.உதாரணத்திற்கு மொழித் துறையை எடுத்து நோக்குவோம்.ஒரு மாணவன் மொழியில் பாண்டித்தியம் பெறுவதன் மூலம் என்ன தொழில் செய்ய முடியும்? அது அறிவே தவிர தொழில் வழி காட்டலல்ல.அதே நேரம் இலங்கையில் மொழி பெயர்ப்பு ரீதியான கற்கை நெறிகள் உள்ளன.இதனை கற்கும் ஒருவன் ஒரு மொழியை இன்னுமொரு மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்ய முடியும்.இதனை தொழில் ரீதியான கற்கை நெறியாக கொள்ளலாம்.ஒரு மனிதனுக்கு கல்வி போதிக்கப்படுவதனூடாக அம் மனிதன் குறித்த துறையில் முறையான அறிவை பெறுகிறான்.விவசாய பட்டதாரிகளை எடுத்துக் கொள்வோம்.அவர்கள் எங்காவது சென்று ஒரு பதவியை பெற்று உழைக்கவே விரும்புகின்றனர்.ஒரு விவசாய பட்டதாரி அவன் கற்றவைகளை கொண்டு சிறந்த முறையில் விவசாயத்தில் செய்து வாழ  சிந்திப்பதில்லை.அதாவது சுய தொழில் வழி காட்டல்கள் சிந்தனைகள் இலங்கை மாணவர்களிடையே விதைக்கப்பட வேண்டும்.இலங்கையின் பாட விதானங்கள் தொழில் துறையை மையமாக கொண்டு மாற்றப்படல் வேண்டும்.இவற்றை கருத்திற் கொண்டே 1972ம் ஆண்டு காலப்பகுதியில் தொழில் முன்னிலைப் பாடம் காட்டாயமாக்கப்பட்டிருந்தது.இலங்கையின் கல்வித் துறையினுள் விவசாயம்,மனையியல்,கைத்தொழில் போன்ற பாடங்கள் உட் புகுத்தப்பட்டன.இருந்தாலும் இவைகள் ஒரு மாணவனுக்கு தொழிலை நோக்கிய சிந்தனைகளில் வெற்றியளிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

போட்டிப் பரீட்சைகளில் அரசியல் தலையீடுகள் மலிந்து கிடக்கின்றன.இதன் விளைவால் இன்று அதிகமான இளைஞர்கள் அரசியல் வாதிகளின் பின்னால் அலைந்து வால் பிடித்து திரிகின்றனர்.எது எவ்வாறு இருப்பினும் இலங்கை அரசு ஏனைய அனைத்து விடயங்களையும் புறந்தள்ளி தொழில் புரட்சி நோக்கி சிந்திக்க வேண்டிய காலமிது.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 23-01-2017ம் திகதி செவ்வாய்  கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 80வது கட்டுரையாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Wednesday, April 26, 2017

துரிதமாக கையாளப்பட வேண்டிய விடயத்தை ஆற அமற கையாளும் மு.கா

அமைச்சர் ஹக்கீம் நாளை வில்பத்து செல்லப்போகும் விடயம் அவரது ஊடகப் பிரிவை சேர்ந்தோரால் சில நாட்கள் முன்பே வெளியிட்டு அதனை பேசு பொருளாக்கி அரசியல் வியாபாரம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.அரசியல் செய்வதானால் பிரபலமும் வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.

இருந்தாலும் சில விடயங்களை நாம் சிந்திக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.2017.03.24 ம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் வடக்கில் உள்ள சில பிரதேசங்களை வர்தமாணிப்படுத்தளுக்கான கையொப்பம் பெறப்பட்டிருந்தது.இதனை கேள்வியுற்ற நாள் தொடக்கம் அங்குள்ள முஸ்லிம்கள் தூக்கமின்றி தவித்தனர்.

மு.கா குழுவினர் 2017.04.03ம் திகதி அரசின் உயர்மட்டக் குழுவை சந்தித்திருந்தனர்.ஜனாதிபதியின் கொயொப்பம் பெறப்பட்டு பத்து நாட்களின் பின்னராகும்.குறித்த வார்த்தமானிக்கு ஜனாதிபதியின் கையொப்பம் கிடைத்ததால் அது எந் நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில் பத்து நாட்கள் என்பது மிக நீண்ட தூரமாகும்.இதற்கு முன்பு அமைச்சர் றிஷாத் குழுவினர் அரசின் உயர்மட்ட குழுவை சந்தித்து பேச்சு நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2017.04.03ம் திகதி 2017.04.27ம் திகதி வில்பத்து சென்று பேச்சு நடாத்துவதாக முடிவு செய்யப்பட்ட.வர்த்தமாணி கையொப்பமிடப்பட்ட விடயத்திற்கு ஒரு மாதமளவான அவகாசம் என்பது மிக மிக நீண்ட காலமாகும்.இதனை உடனடியாக சூட்டோடு சூட்டாக செய்து கொள்ள மு.கா முயற்சித்திருக்க வேண்டும்.இக் கால இடைவெளியினுள் எதுவும் நடக்காது என குறித்த அரசின் உயர் மட்டத்தினர் மு.காவிடம் வாக்குறுதி அளித்திருக்கலாம் என்ற நியாயமும் உள்ளது.இந் நியாயத்தை கூறுவோர் கல்முனை வேலை பணியாக இடமாற்றத்தின் போது அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியினது மற்றும் இறக்காமம் சிலையை ஒரு வார காலத்தில் அகற்றுவேன் போன்ற வாக்குறுதிகளை நினைவூட்டுவது பொருத்தமானது.

இவற்றினூடாக நான் கூற வருகின்ற விடயம் மு.கா வில்பத்து விடயம் மிகத் துரிதமாக செயற்பட்டு தீர்க்க வேண்டிய தேவை இருந்தும் மந்தகரமாக செயற்பட்டது என்பதாகும்.

தொடரும்....

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Tuesday, April 25, 2017

மு.காவினரின் அச்சத்தால் உச்சம் தொட்ட அமைச்சர் றிஷாத்

அமைச்சர் றிஷாத் துரித வளர்ச்சி கண்டமைக்கு பல காரணங்கள் இருப்பினும் மு.காவினர் அமைச்சர் தங்களுக்கு போட்டியாக வளர்ந்து விடுவாரோ என அஞ்சியமை அவரின் வளர்ச்சிக்கான பிரதான காரணமாகும்.

இன்று மு.காவின் போராளிகள் மாணிக்கமடு விடயத்தில் அமைச்சர் றிஷாத் தலையிட வேண்டுமென்பது போல கருத்து வெளியிட்டு வருகின்றனர்.இதனூடாக அமைச்சர் றிஷாத் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை எழும் போது அங்கு சென்று தீர்த்துவைக்க வேண்டும் என்ற மனோ நிலையை அவதானிக்க முடிகிறது.இம் மனோ நிலையானது அமைச்சர் றிஷாத் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டிய தலைவர் என்பதை எடுத்து காட்டுகிறது.

வில்பத்து பிரச்சினைகளின் போது வடக்கை பிறப்பிடமற்ற அமைச்சர் ஹக்கீம் தலையிட வேண்டுமென இலங்கை முஸ்லிம்கள் விரும்பியிருந்தனர்.ஆனால்,தே.கா என்ற கட்சியின் தலைவர் அமைச்சராக இருந்த போது அவரின் தலையீட்டை பெரிதும் எதிர்பார்க்கவில்லை.காரணம் தே.காவின் தலைவர் இலங்கை மக்களின் அங்கீகாரம்பெற்ற தலைவராக மக்கள் அங்கீகரிக்கப்பட வில்லை என்பதாகும்.

அது போன்றே இறக்காம சிலை வைப்பின் போது அமைச்சர் றிஷாத் தலையிட வேண்டுமென மு.காவின் போராளிகள் உட்பட அனைவரும் விரும்புகின்றனர்.இச் சேதியானது அமைச்சர் றிஷாத் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவராக மாறிவிட்டார் என்பதை பறைசாட்டி நிற்கின்றது.

இப் பிரச்சினையை மு.காவினாலேயே தீர்க்க முடியும்.அமைச்சர் றிஷாத்தால் தீர்க்க முடியாது.அவர் இதில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்ற வகையில் அவரை புறக்கணித்து சென்றிருந்தால் அவர் இந்தளவு உச்சத்தை தொட்டிருக்க மாட்டார்.அவர் வன்னிக்குள் செயற்பட்ட போதே அவர் மீது கொண்ட அச்சத்தால் மு.காவினர் அவரை விமர்சிக்க தொடங்கினர்.அவருக்கு இலவச விளம்பரம் வழங்கியிருந்தனர்.அவர் மக்களிடையே இலவசமாக சென்றடைந்தார்.

தொடரும்...

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.






Sunday, April 23, 2017

மாணிக்கமடு சர்ச்சையை தீர்க்கவேண்டிய முழுப்பொறுப்பும் அம்பாறை அரசியல் அதிகாரமுள்ள மு.காவுக்கே உள்ளது..

அம்பாறை மாவட்டத்தில் மு.கா பலத்த அரசியல் அதிகாரங்களுடன் உள்ளது.அங்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.அதில் இருவர் பிரதி அமைச்சர் ஒருவர் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்.அங்கு மாகாண அமைச்சர் உட்பட ஐந்து மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளனர்.

இப்படி மு.கா அம்பாறை மாவட்டத்தில் நிறைவான அரசியல் அதிகாரங்களை கொண்டுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சரும் மு.காவை சேர்ந்தவரே.அடிக்கடி அமைச்சர் ஹக்கீமும் மத்தியிலும்,மாகாணத்திலும் தாங்கள் பலமிக்கவர்களாக உள்ளதாக கூறுகிறார்.

இவைகளை வைத்து சிந்திக்கும் போது இதற்குள் அமைச்சர் றிஷாத் தலையிட வேண்டிய தேவை இல்லை.இப் பிரச்சினையை மு.கா தங்களுக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி எதிர்கொள்ள முடியும்.

அமைச்சர் றிஷாத் இவ் விடயத்தை கையில் எடுத்தாலும் அவருக்கு அங்கு அரசியல் அதிகாரங்கள் இல்லாமையால் பொருத்தமான இடங்களில் தங்களது பிரதிகளினூடாக பேச முடியாது (அபிவிருத்தி குழு கூட்டங்களில்).

ஒரு கோணத்தில் இவ் விடயத்தில் அமைச்சர் றிஷாத்துக்கு மூக்கை நுழைத்து அம்பாறை மாவட்டத்தில் அரசியல் அதிகாரங்கள் இல்லாமையின் காரணமாக பூரணமாக நுழைந்து செயலாற்ற முடியாத நிலை உள்ளது.மறுபுறத்தில் அமைச்சர் றிஷாத் இது போன்ற விடயங்களில் மூக்கை நுழைக்கும் போது மு.கா உளச் சுத்தியுடன் செய்யாது போனாலும் "றிஷாதும் முயற்சித்தார் தானே! அவராலும் முடியவில்லையே" எனக் கூறி மிக இலகுவாக நழுவி விடுவார்கள்.

அவர் இவ்விடயத்தில் தலையிடாது போனால் அவ்வாறான எதனையும் மு.காவினால் கூற முடியாத நிலை ஏற்படும்.

தொடரும்....

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Saturday, April 22, 2017

மு.காவின் நாற்றம் முஸ்லிம்களுக்கு கேடு

இன்று மு.கா பணம் வாங்கிக்கொண்டு இவ் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கிய நாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வரை சென்றடைந்துள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளே இவ் நாற்றம் வெளிவரக் காரணமாகும்.

பேரின மக்கள் முஸ்லிம்கள் இறைவனுக்கு அதிகம் அஞ்சுபவர்களாகவே கணக்கு போட்டு வைத்துள்ளனர்.இவ்வாறான நாற்றங்கள் வெளிவரும் போது பேரின மக்கள் பணத்திற்கு சாய்பவர்களாகவல்லவா முஸ்லிம்களை எடை போடப் போகிறார்கள்.

இவ்வாறான நாற்றங்களால் அரசியல் என்னவென்று தெரியாத முஸ்லிம் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.இவ்வாறான நாற்றங்கள் வெளியே வராத வகையில் முஸ்லிம் சமூகத்தினுள் முடிக்கப்படுவதே சிறப்பாகும்.அதற்கான நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகம் களமிறங்க வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Monday, April 10, 2017

குவைதிர்கானின் மன்னார் பெரியகடை முஹையதீன் ஜும்மா பள்ளிவாயல்  தொடர்பான குற்றச் சாட்ட்டின் உண்மை முகம்

அமைச்சர் றிஷாதை ஏசுவதற்காகவே மு.காவினால் நிரந்தர கொந்தராத்து வழங்கப்பட்டிருக்கும் குவைதிர்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கொந்தராத்துக்கமைய ஒவ்வொரு நாளும் சமூக வலைத் தளங்களில் அமைச்சர் றிஷாதிற்கு எதிரான குற்றச் சாட்டுக்களை முன் வைத்து வருகிறார்.அமைச்சர் றிஷாத் மன்னார் பெரியகடை முஹையதீன் ஜும்மா பள்ளிவாயலில் பாரிய நிதி ஒன்றை கையகப் படுத்தியது போன்று இன்று ஒரு பதிவை இட்டிருந்தார்.அதில் அவர் சொன்ன அனைத்தும் புளுகுகளாகும் (இது தொடர்பான புள்ளி விபரங்களுடனான ஆதாரங்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றேன்.விரைவில் வெளியிடுவேன்.) .

குறித்த பள்ளிவாயலானது பல வருடங்களாக (அண்ணளவாக 25 வருடங்கள்) கட்டுவதற்கு போதியளவு நிதியில்லாமல் இருந்தது.குறித்த பள்ளிவாயலுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு அமைச்சர் றிஷாத் தனது சொந்த பணத்தில் இருந்து 1000 சீமெந்து பேக்குகளை வழங்கி இருந்தார்.இந் நிலையில் அப் பள்ளிவாயல் அப்படியே இருந்தது.இதனை பல அரபிகள் கூட பார்வையிட்டிருந்தனர்.இருந்தும் பயனேதுமில்லை.

இப் பள்ளிவாயலை மீள கட்டுவதற்கு உத்தேசித்த அமைச்சர் றிஷாத் ஓ.எச்.ஆர்.டி அமைப்பின் மூலம் தனது முயற்சிகளை செய்தார்.இதன் போது ஒரு தொகைப் பணம் குறித்த பள்ளிவாயலை கட்டுவதற்காக வேறு வழிகளில் கிடைத்திருந்தது.இது குறித்த பள்ளிவாயலை கட்டுவதற்கு போதுமானதாக இருக்கவில்லை.அப் பள்ளியை முடிப்பதற்கு தேவையான மீதிப் பணத்தை ஓ.எச்.ஆர்.டி அமைப்பே செய்திருந்தது.இவ் அமைப்பிடம் நான்கு கடைகள் கட்டிக்கொடுக்க வேண்டிக்கொள்ளப் பட்ட போதும் இவ்வமைப்பானது ஆறு கடைகளை கட்டிக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது இடம்பெற்ற பணப்பரிமாற்றங்கள் எதுவும் அமைச்சர் றிஷாதின் கைகளை சென்றடைய வாய்ப்பில்லை.ஒரு அமைப்பென்றால் அதற்கென்று பணப் பரிமாற்றங்களை கையாளுவதற்கான வழி முறைகள் இருக்கும்.ஓடிட் மூலம் பரிசோதனை செய்யப்படும்.இப்படியான அனைத்து முறைகளும் ஒழுங்கான முறையில் பின்பற்றப்படும் அமைப்பே இவ்வமைப்பாகும்.இவ்வமைப்பில் உள்ளவர்கள் அனைவர்களும் நன்கு படித்தவர்களும் முக்கியமான பதவிகளில் உள்ளவர்க்களுமாகும்.இவர்கள் இப்படியான கையகப்படுத்தல்களை அனுமதிப்பவர்களல்ல.இவர் அமைச்சர் றிஷாதை குற்றம் சாட்டுவதன் மூலம் பல நல்லுள்ளங்கள் கூட மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான துர்ச் செயல்கள் மூலம் நல்ல வேலைகளை முன்னின்று செய்யக் கூட பலர் இதன் பிறகு முன் வர மாட்டார்கள்.

இருபத்தைந்து வருடங்களாக கட்டப்படாமல் கிடந்த பள்ளிவாயலை அமைச்சர் றிஷாத் தனது முயற்சியினால் கட்டிக்கொடுத்திருந்தார்.அதனை பாராட்டாமல் விட்டாலும் பறவாயில்லை அதனைக் கூறியே அவரை தூற்ற முயற்சிப்பதைப் போன்ற இழி செயல் எதுவுமல்ல.இன்று கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் இவ்வாறானவர்களின் செயலால் நல்லது செய்ய அவர் ஏச்சும் கேட்க வேண்டும்.இதற்கெல்லாம் மனம் சோர்ந்து போபவர் எங்கள் அமைச்சர் றிஷாதல்ல.

இவ்வாறான குற்றச் சாட்டுக்களை முன் வைக்கும் குவைதீர்கான் செய்யும் தொழில் என்ன என்று அவரிடம் கேட்டால் கூட இவரின் உண்மை (இழி) முகத்தை அறிந்து கொள்ளலாம்.இவர் சில காலங்கள் முன்பு அமைச்சர் றிஷாதின் மீது 13 குற்றச் சாட்டுக்களை முன்னிறுத்தி நீதி மன்றம் சென்றிருந்தார்.அவரின் குற்றச் சாட்டுக்களை நீதி மன்றமானது தனது சிறிய கவனத்திற்கும் கூட எடுத்துக்கொள்ள வில்லை.நீதி மன்றத்துடன் அமைச்சர் றிஷாத் மோத முடியாது.அதாவது இவரது இக் குற்றச் சாட்டில் எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இருக்கவில்லை என்பதே இது கூறும் செய்தியாகும்.

குவைதிர்கான்,தான் வாங்கும் பணத்திற்கு ஏதாவது கூற வேண்டும் என்பதற்காக ஏதாவதொன்றை ஒவ்வொரு நாளும் கூறி வருகிறார்.அது  உண்மையானதா? பொய்யானதா? என சிந்திப்பதற்கு அவருக்கு நேரமுமில்லை அவசியமுமில்லை.இவரிடம் இக் குற்றச் சாட்டு  தொடர்பான உண்மை ஆதாரங்கள் இருப்பின் மக்களை நாடாமல் நீதி மன்றம் சென்று நீதி தேடலாம்.நீதி தேடி நீதி மன்றம் சென்றால் அது எடுபடாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

அஹமட் சாஜித்
மாவடிப்பள்ளி

Monday, April 3, 2017

சேறு பூசலினால் துவண்டு போகும் கோழை நானல்ல

நான்,அமைச்சர் றிஷாதிடம் வேலை பெற்றுத் தருவதாக கூறி காரைதீவை சேர்ந்த பூர்ணிமா என அழைக்கப்படும் செந்தளிர் என்ற இளம்  பெண்ணிடம் பணம் பெற்றுக்கொண்டு அவளை படுக்கைக்கும் அழைத்ததாக சமூக வலைத் தளங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டுள்ளது.இச் செய்தியை ஒரு உண்மைத் தன்மையான செய்தி போன்று வடிவமைத்துள்ளார்கள்.அவர்களது செய்தியில் குறித்த பெண்ணின் தொலைபேசி (0777072354) இலக்கமும்,விலாசமும் (காரைதீவு கன்னையம்மன் தெரு 175 இலக்கம்) வழங்கப்பட்டிருந்தது.எம்மவர்கள் இவை இரண்டும் வழங்கப்படும் போது அதனை உறுதி செய்ய முயற்சிக்காது,ஆதாரங்களுடனான செய்தி போன்று கருதி நம்பிவிடுவார்கள்.அதில் வழங்கப்பட்ட விலாசத்தில் அப்படி ஒரு பெண் இல்லை என்பதோடு குறித்த தொலைபேசியானது அநுராதபுரத்தை சேர்ந்த ஹேரத் என்ற விவசாயினுடையது என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.தேவையானவர்கள் தேவையான வழிகளில் உறுதி செய்து கொள்ளலாம்.

நான் இவ்வாறு செய்திருந்தால் பொலிஸ் நிலையம்  சென்று முறையிடலாம்.இன்றைய நவீன உலகத்தில் எத்தனையோ வழிகள் மூலம் இதனை ஆதாரங்களோடு வெளிக்கொண்டு வரலாம்.இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுப்போரை சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இதனை யாராவது உரிய ஆதரங்களுடன் என்னிடம் காட்டினால் ஒரு கோடிப் பணத்தை தர தயாராகவுள்ளேன்.இது தொடர்பில் நான் நேற்று பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதோடு குறித்த தொலை பேசி இலக்கமுடைய நபரும் பொலிசில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பில் போலிஸ் விசாரணைகளை முன்னெடுத்த போது அப்படி ஒரு விலாசமே இல்லை என கூறியிருந்தார்க என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நான் ஒரு கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவன்.இச் செய்தியினால் நான் உட்பட எனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.நான் அ.இ.ம.காவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவன்.இதற்கு முன்பு அமைச்சர் ஹக்கீமுடன் சில காலம் பயணித்திருந்தேன்.தற்போதும் அரசியல் செய்திகள் குவியும் பிரதான இடங்களில் நான் உள்ளேன்.இதன் காரணமாக எனக்கு பல இரகசியமான உண்மைகள் தெரியும்.அவற்றை நான் எனது முக நூலில் பகிரங்கமாக போடுவேன்.இதனை தடுத்து நிறுத்துவதே இவர்களின் நோக்கமாகும்.இவ்வாறான சேறு பூசல்களினால் துவண்டு போகும் கோழை நானல்ல.இதன் பிறகு எனது செயற்பாடுகளில் வீரியம் அதிகரிக்குமே தவிர குறைந்து போகாது.

இச் செய்தியானது  விடியலைத் தேடி என்ற இணையத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.இவ் இணையத்தளமானது சபான் சிராஜ் என்ற நபரால் இயக்கப்படுகிறது.அண்மையில் சவூதி அரேபியா சென்ற அமைச்சர் ஹக்கீம் இவருக்கு முக்கியத்துவம் அளித்து சந்தித்திருந்தார்.இதன் பின்னரே இவ் இணையத்தின் வசை பாடல்கள் அதிகரித்துள்ளன.அப்படியானால் காதுக்குள் மந்திரம் ஓதப்பட்டிருக்க வேண்டும்.இவ் இணைய தளத்தில்அமைச்சர் றிஷாதை போலியாக  வசைபாடி இகழ்தலும் அமைச்சர் ஹக்கீமை போலியாக எதையாவது கூறி புகழ்தலும் இடம்பெறும்.சில காலங்கள் முன்பு அமைச்சர் ஹக்கீம் கட்டார் சென்ற போது சவூதியை தலைமையமாக கொண்டு இயங்கும் முஸ்லிம்களும் நாடுகளின் கூட்டமைப்பை சந்திக்க செல்கிறார் என்ற போலி போலி பிரச்சாரம் இவ் இணையத்தின் மூலமே முன்னெடுக்கப்பட்டிருந்தது.இச் செய்தி பலரது கண்டனைத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவரை அமைச்சர் ஹக்கீம் சந்திக்கின்றார் என்றால் இது போன்று இன்னும் செய்யுங்கள் என ஊக்கமளிக்கின்றார் அல்லவா?  இவ் இணையதளத்தை அமைச்சர் ஹக்கீமின் சகோதரர்களில் ஒருவரும் பின்னின்று செய்வதாக சிலர் கூறுகின்றனர்.

இப்படி மு.காவினர் போலி இணையங்களை வைத்துக் கொண்டு பகிரங்கமாக போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற போதும் பழி என்னவோ அமைச்சர் றிஷாதின் மீதுள்ளது.ஒரு வேசையும் பத்தினியும் சண்டைக்கு செல்லும் போது வேசை முந்திக் கொண்டு பத்தினியை பார்த்து “நீ வேசைடி என்பாளாம்”.இவளுடன் சண்டைக்கு போனால் நமது மானம் போய் விடும் என்பதால் பத்தினி சண்டை போடாமல் ஒதுங்கி கொள்வாள்.அதைத் தான் இன்று மு.காவினர் அ.இ.ம.காவை நோக்கி செய்து கொண்டிருக்கின்றார்கள்.செய்வதெல்லாம் அவர்கள்,பழியை அமைச்சர் றிஷாதின் மீது போட்டு தப்பித்துக்கொள்வது.இவ் இணையத்தின் பின்னால் முக நூல்  குழுவொன்று இயங்கிக்கொண்டிருக்கின்றது.அவர்களுக்கு அமைச்சர் றிஷாதை இகழ்வதே தொழில்.அவர்களுக்கு மு.காவின் தலைமையகத்தில் ஒரு குறித்த இடம் வழங்கப்பட்டுள்ளது.இதில் இருந்தவர்கள் மு.காவின் மீடியாவிலும் உள் வாங்கப்பட்டு மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது.இவ்வாறானவர்களுக்கு இவ்வாறான சேறு பூசல்களை மேற்கொள்ள தரமிக்க தொலை பேசிகளும் மடி கணணிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.அண்மையில் அமைச்சர் ஹக்கீம் இவர்களை நுவரெலியாவிற்கு சுற்றுலா அழைத்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

நான் இவ்வாறான சில்லறை சத்தங்களுக்கு அஞ்சப் போவதில்லை.எனது செயல் முன்பை விட வீரியமாக இருக்கும்.கருத்தை கருத்தால் வெல்ல முயற்சி செய்யுங்கள்.இவ்வாறான சேறு பூசல்களை உங்களை நோக்கி திரும்பி இன்னும் இன்னும் நாறப் போகிறீர்கள்.இன்று மு.காவினர் செய்த துரோகங்கள் தான் அவர்களை அழிவின் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது.குர்ஆன் ஹதீதை யாப்பாக கொண்ட மு.கா,தங்களது போராளிகளுக்கு அழகிய வழி முறைகளை கற்றுக்கொடுக்காது இவற்றிற்கு ஊக்கமளிப்பது மிகவும் கவலையான விடயமாகும்.

அல்-ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்
சாய்ந்தமருது.


ஹுனைசின் குற்றச்சாட்டு ஹக்கீமின் வில்பத்து பொடு போக்கை காட்டுகிறது



கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் முன் வைத்த குற்றச் சாட்டையும் பிரதி அமைச்சர் ஹரீசின் நக்கலையும் எடுத்து நோக்கினால் அமைச்சர் ஹக்கீம் இந்த விடயத்தில் எந்தளவு பொடு போக்காக செயற்படுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அக் கூட்டத்தில் ஹுனைஸ் பாறூக் கூறியது

///// “நேற்று எங்களுக்கு ஜம்மியத்துல் உலமா சபையிடம் இருந்து அழைப்பு வந்தது.மன்னார் வில்பத்து தொடர்பான அவசர கூட்டமுள்ளது வருமாறு கூறி.மு.கா சார்பாக நானும் கௌரவ பிரதி அமைச்சர் பைசால் காசிமும் அதற்கு சென்றிருந்தோம்.அந்த கூட்டத்தில் வன்னி அமைச்சர்,அசாத் சாலி,பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான்,அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் உட்பட உலமா சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.இன்று ஒன்னரை மணிக்கு ஜனாதியின் செயலாளரையும்,வனம் தொடர்பான உறுப்பினர்களையும்,ஜனாதிபதியையும் சந்திப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது.இதில் கலந்து கொண்ட உலமா சபை உறுப்பினர்களும் மு.கா சார்பாக நானும் பிரதி அமைச்சர் பைசால் காசிமும்,வன்னி அமைச்சர் சார்பாக வந்தவர்களும் கலந்து கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது.அந்த கூட்டத்தில் அவர் வலிந்து சொன்ன விடயம் எப்படியாவது மு.காவின் கூட்டத்திற்கு வர வேண்டும்.இதன் போது நாங்கள் சொன்னோம்,கல்முனையில் இன்று பல அபிவிருத்தி கூட்டங்களை திறந்து வைக்கின்றார்.அவர் சார்பாக நாங்கள் வருகிறோம்.அமைச்சர் றிஷாதை  விட அந்த பிரதேசத்தின் பிரச்சினை எங்களுக்கு முக்கியமானது.அதன் போது அமைச்சர் றிஷாத் இல்லை.. இல்லை..வன்னி மக்கள் மு.காவுக்கு வாக்களித்துள்ளார்கள் அவர் வர வேண்டும்.இதன் போது எனக்கு பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னேன் நாளை கல்முனையில் இடம்பெறவுள்ள அபிவிருத்தியை குலைக்க வேண்டும்.நாளை ஜும்மாவின் பிறகு எனது துவா பிராத்தனையை தடுக்க வேண்டும்” ///

வில்பத்து பிரச்சினை இலங்கையின் தேசிய பிரச்சினைகளில் ஒன்று.அது வர்த்தமானிப் படுத்த ஜனாதியின் கையொப்பமும் பெறப்பட்டுவிட்டது.இந் நேரத்தில் அனலில் பட்ட புழு போல் துடித்துக் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும்.எந்தளவு எமது பலம் பிரயோக்கிக்கப்பட வேண்டுமோ அத்தனை அழுத்தங்களையும் இந் நேரத்தில் பிரயோக்கிக்க வேண்டும்.இதற்கு மு.காவை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ஹக்கீம்,தான் சென்றிருக்க வேண்டும்.அவருடன் வடக்கை சேர்ந்த சிலரும் செல்வதே பொருத்தம்.இக் கூட்டத்திற்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி சாதிக்குமளவு இது சிறிய விடயமல்ல.இக் கூட்டத்திற்கு மு.கா சார்பாக ஹுனைஸ் பாறூக்கும்,பிரதி அமைச்சர் பைசால் காசிமும் சென்றார்களாம்.பிரதி அமைச்சர் பைசால் காசிம் பேச்சு திறமையற்றவர் என்பது யாவருக்கும் தெரியும்.இவ்வாறான கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளும் போது அதில் திறம்பட செயற்பட மாட்டார்இவைகளை நன்கு கூர்ந்து அவதானித்தால் மு.கவினர் எந்தளவு பொடு போக்காக செயற்படுகிறார் என்பதையும் எடுத்து காட்டுகிறது.

இக் கூட்டமானது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.இன்று இலங்கை முஸ்லிம்களின் அதிக ஆதரவை கொண்ட இவ்வமைப்பு அழைக்கும் போது இதற்கு மு.காவினர் மதிப்பளிப்பதானால் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்டிருக்க வேண்டும்.இதில் அவர் கலந்து கொள்ளாமையானது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவையும் புறக்கணிக்கும் செயலாகும்.

குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உட்பட வனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில் தற்போது அரசியல் ரீதியாக எந்த பதவிகளும் அற்ற ஹுனைஸ் பாறூக் ஜனாதிபதியிடமும் ஏனையவர்களிடமும் குறித்த விடயங்களை எடுத்துரைக்கும் போது முன் வைக்கும் முறைமைக்கும் மு.காவின் தலைவரும் பலமிக்க அமைச்சு பதவியை சுமந்துள்ளவருமான ஹக்கீம் முன் வைக்கும் முறைமைக்கும் இடையே மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ள வேறு பாடு காணப்படும்.ஒரு விடயத்தை முன் வைக்கும் நபர்களும் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இந்த கூட்டத்தில் வில்பத்து மக்கள் மீது அமைச்சர் ஹக்கீம்  உண்மையான அக்கறை கொண்டிருந்தால் கலந்து கொண்டிருப்பார்.கவனத்தை திருப்ப அவசியமானவர்கள்.

இக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத்,அமைச்சர் ஹக்கீம் கலந்து கொள்ள வேண்டுமென வலிந்து கூறியுள்ளார்.இதன் போது ஹுனைஸ் பாறூக் முன் வைத்த பிரதான  குற்றச்சாட்டு,தானே எல்லாம் செய்ய வேண்டும் என அமைச்சர் றிஷாத் நினைக்கின்றார் என்பதாகும்.அப்படியானால் இக் கூட்டத்திற்கு  அமைச்சர் றிஷாத் ஏன் அமைச்சர் ஹக்கீமை அழைக்க வேண்டும்.இக் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொள்ளும் போது இதில் கிடைக்கக் கூடிய அரசியல் ஆதாயங்களில் அமைச்சர் ஹக்கீமும் பங்கு கொள்வார்.அமைச்சர் றிஷாத் சுயநல வாதியாக இருந்தால் இவரை அழைக்காமல் இருந்திருப்பார் என்பதே உண்மை.அமைச்சர் றிஷாத்,அமைச்சர் ஹக்கீமை அழைத்தமையானது அவரின் நிலையில் இருந்து கீழ் இறக்கிய செயற்பாடாகவும் நோக்கலாம்.

அமைச்சர் ஹக்கீம் கலந்து கொள்ளாமைக்கு ஹுனைஸ் பாறூக் முன் வைத்த காரணம் கல்முனையில் அபிவிருத்தி நிகழ்வு இருப்பதாகும்.குறித்த கல்முனை நிகழ்வை அமைச்சர் ஹக்கீம் சென்றுதான் நடத்த வேண்டும் என்ற நிலை இல்லை.அவர் கலந்து கொள்ளத் தான் வேண்டும் என்றால் பிறிதொரு நாளுக்கும் மாற்றி இருக்கலாம்.அதாவது இங்கு இன்னுமொரு விடயத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.வில்பத்து மக்களின் இருப்பிடப் பிரச்சனையை விட கல்முனை அபிவிருத்தி நிகழ்வு மு.காவினருக்கு முக்கியமானது என்பதாகும்.எது முக்கியமானது என்பதை வாசிப்பவர்கள் தீர்மானித்து கொள்ளுங்கள்.இந் நிகழ்வை குறித்த தினம் ஏற்பாடு செய்து ஹுனைஸ் பாறூக் கலந்து கொள்ளவிருந்த துவா பிராத்தனையை தடுப்பதும் அமைச்சர் றிஷாதின் திட்டமாகும் என கூறுகிறார்.குறித்த நிகழ்வானது அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால் நடாத்தப்பட்டது.இதில் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.இவர்கள் அனைவரும் சேர்ந்தே சந்திக்கும் நாள் உட்பட அனைத்தையும் தீர்மானித்தார்கள்.அப்படி இருக்கும் போது இவ்விடாயத்தில் இவர் அமைச்சர் றிஷாதை குற்றம் சாட்டுவது வேண்டாத பொண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் போன்ற கதையாகவுள்ளது.

கல்முனை கூட்டத்தில் ஹுனைஸ் பாறூக் முன் வைத்த குற்றச் சாட்டுக்களானது அமைச்சர் ஹக்கீமின் வில்பத்து பொடு போக்கை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Sunday, April 2, 2017

அ.இ.ம‌. காங்கிர‌சின் உறுப்பின‌ரான‌ அஸாம் ஹாபிஸ் அவ‌ர்க‌ளைப்ப‌ற்றிய‌ பொய்யான‌ வ‌த‌ந்தி ஒன்றை அர‌சிய‌ல் காழ்ப்புண‌ர்வு கார‌ண‌மாக‌ சில‌ர் ச‌மூக‌ வ‌லைய‌த்த‌ள‌ங்க‌ளில் வெளியிட்டுள்ள‌மை க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும்.

அஸாம் ஹாஃபிஸ் அவ‌ர்க‌ள் காரைதீவு த‌மிழ் பெண் ஒருவ‌ரிட‌ம் தொழில் பெற்றுத்த‌ருவதாக‌ கூறி ப‌ண‌ம் வாங்கிய‌தாக‌வும் த‌ப்பாக‌ பேசிய‌தாக‌வும் உண்மைக்கு புற‌ம்பாக‌ வ‌த‌ந்திக‌ள் வெளியாகியுள்ள‌ன‌.
ச‌மூக‌த்தில் அர‌சிய‌ல் போட்டி இருக்க‌லாம். அத‌ற்காக‌ ஒருவ‌ர் ப‌ற்றி இட்டுக்க‌ட்ட‌ கூடாது. அஸாம் அவ‌ர்க‌ள் ப‌ல‌ கால‌ம் முஸ்லிம் காங்கிர‌சின் வ‌ள‌ர்ச்சிக்காக‌ பாடுபட்ட‌வ‌ர். அக்க‌ட்சியின் போக்கு பிடிக்காம‌ல் வெளியேறிய‌வ‌ர். அது அவ‌ர‌து ஜ‌ன‌நாய‌க‌ உரிமை. த‌ற்போது அவ‌ர் அ.இ. ம‌க்க‌ள் காங்கிரஸ் க‌ட்சியின் முக்கிய‌மான‌வ‌ராக‌ இருப்ப‌த‌ற்காக‌ அவ‌ரை இல‌க்கு வைத்து இவ்வாறு பொய் ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்டுள்ள‌து.
அந்த‌ப்பெண்ணின் தொலைபேசி இல‌க்க‌ம் என‌ போலியான‌ இல‌க்க‌ம் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.
இச்ச‌ம்ப‌வ‌ம் உண்மை என்றால் ந‌வீன‌ ச‌மூக‌ வ‌லைய‌த்த‌ள‌ம் இருக்கும் இக்கால‌த்தில் அப்பெண்ணிட‌மிருந்து நேர‌டி குற்ற‌ச்சாட்டை வீடியோ மூல‌ம் பெற்றிருக்க‌ முடியும். அவ்வாறு செய்யாம‌ல் ஒரு முஸ்லிம் ப‌ற்றி பொய்யாக‌ சொல்வ‌து க‌ண்டிப்புக்குரிய‌தாகும்.

அர‌சிய‌ல்ரீதியாக‌ யாரும் யாரையும் விம‌ர்சிக்க‌லாம். ஆனால் அதில் உண்மைத்த‌ன்மை இருக்க‌ வேண்டும். இவ்வாறான‌ அபாண்ட‌ங்க‌ளை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம்.
-மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்