Pages

.

.

Sunday, January 22, 2017

காக்கா பிடித்தல் 

சகோதரன் ரனூஸ் அவர்களுக்கு.......

அஸ்ஸலாமு அழைக்கும்
தாருஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகம் சம்பந்தமாக நீங்கள் தவிசாளருக்கு எழுதிய கடிதத்தை முகநூலில் வாசிக்க கிடைத்தது அது தொடர்பில் உங்களிடம் கலந்துரையாடும் நோக்கிலேயே இம்மடலை வரைகிறேன்.

தங்களுக்கு உறுதியான ஈமானும், யார் தவறு செய்தாலும் அதை சரிகாணாத பண்பும் கிடைக்க வேண்டும் என இறைவனைப பிரார்த்திக்கின்றேன்.

குறித்த புத்தகம் அனாமேதய பிரசுரம் என்பது பிழையான கூற்றாகும். அப்புத்தகத்தை வெளியிட்டது தாருஸலாம் மீட்பு முன்னணியாகும். ஆயினும் அதில் உள்ள விடயங்கள் ஐயம் தெளிவுற விளக்கப்பட்டிருப்பதால் அது தவிசாளர் பசீர் சேகு தாவூத்திடம் இருந்து வந்திருக்க வேண்டும் என நீங்கள் நினைப்பது தவறான ஊகம் அல்ல.

முடிவொன்றை எடுப்பதற்க்கான சரியான, பிழையான நேரம் எது என்பதை எவ்எடுகோள்களின் அடிப்படையில் தீர்மானிக்கிறீர்கள்? குறித்த புத்தகத்தை வெளியிட இதுவே சிறந்த சந்தர்ப்பம் என தாருஸ்ஸலாம் மீட்பு முண்ணணி கருதியமையாலயே இக்காலத்தில் அது வெளியிடப்பட்டுள்ளது. எச்சந்தர்ப்பத்தில் யாரால் கூறப்பட்டாலும் உண்மை உண்மைதான் பொய் பொய்தான். காலம் தாழ்த்தி கூறப்படுவதால் உண்மை பொய்யாகவோ பொய் உண்மையாகவோ மாறிவிட முடியாது. தனது வண்டவாளங்கள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்து, தலைமைத்துவப் பதவியும் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் போலிச் சாணக்கிய தலைவருக்கு வேண்டும் எனில் இது பிழையான நேரமாக இருக்கலாம் ஆனால் கட்சியின் போராளியான எமக்கு எல்லா நேரமும் சுபவேளையே.

"திருட்டில் பங்கு கிடைக்காத திருடனின் வாக்குமூலம்" என நீங்கள இப்புத்தகத்தை விபரிக்கிரீர்கள், உங்களது பாணிக்கே வருகிறேன்

1.திருட்டு ஓன்று நடந்திருக்கிறது என்று ஒத்துக்கொள்ளும் நீங்கள் அத்திருட்டின் ஏனயா திருடர்களை அறிவீர்களா..?

2.துணை போன ஒருவருக்கு பங்கு கிடைக்கவில்லை எனின் மொத்தத்தையும் கொள்ளையிட்ட அந்த மெகா திருடர்கள் யார்...??

3.கொலை பற்றி சாட்சியம் கூறுபவனை கொலையாளி என்றோ, கற்பழிப்பு பற்றி சாட்சியம் கூறுபவனை கற்பழித்தவன் என்றோ நீதிமன்றம் அடையாளப்படுத்துவதில்லை, பொது நீதி இவ்வாறு இருக்க திருட்டு பற்றி கூறிய, அத்திருட்டினை ஆதார பூர்வமாக நிருபித்துள்ள ஒருவரை நீங்கள் எப்படி திருடன் என அடியாளப்படுத்துவீர்கள்...? அவ்வாறு அடையாளப்படுத்திய உங்களைத் தூண்டியது எது..?

தூங்குபவனை எழுப்ப முடியும் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடிமா?? என்றொரு கூற்று  பேச்சு மொழிவழக்கில் உண்டு அது உங்களுக்கு சாலப் பொருத்தமானது. திருட்டு மிகத்தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டு திருடர்களும் ஆவண ரீதியில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதன் பின் "புத்தகத்தில் தரப்பட்டுள்ள தரவுகள் உண்மையாக இருக்குமோ என நினைத்து இப்போதும் என் மனது மிகுந்த வேதனைப்படுகிறது" எனக்கூறியுள்ளீர். ஏன் இந்த தெளிவற்ற நிலைப்பாடு?

கிழக்கு முதலமைச்சருக்கு இது சம்பந்தமாக கடிதம் ஒன்றை எழுதுவதற்கு அல்லது முகத்தில் கேட்பதற்கு தயாராக இருப்பதாக கூறும் நீர் உண்மையிலயே முதல் கடிதத்தை ஹாபிஸ் நசீருக்கும், ரவுப் ஹக்கீமுக்கும் அல்லவா வரைந்திருக்க வேண்டும்? அவ்வாறு இல்லாமல் சம்பவத்தின் சாட்சியாளனை திருடன் பட்டம் சூட்டியமை உமது நடுநிலமைத்தன்மை பற்றிய நியாயமான சந்தேகங்களை எழுப்புகிறது.

"கட்சியை தூய்மைப்படுத்தல்"சம்பந்தமாக எழுதி இருக்கின்றீர்கள். வாசிக்கும் போதே வாயும் மனதும் இனிக்கிறது, ஆயினும் தூய்மைப்படுத்தல் எப்புள்ளியில் இருந்து ஆராம்பிக்கப்பட வேண்டும் என்பதில்தான் உங்களுக்கு போதுமான தெளிவில்லை. சுத்தம் என்று வந்தால் முதலில் வீடிற்குள் இருக்கும் நாயைத்தானே  தூர விரட்ட வேண்டும்.

பிரித்தாளும் தந்திரத்தை கையாளும் ஒருவரால், இரண்டுபடுத்தி வேற்றுமையை ஏற்படுத்தும் ஒருவரால், அவரது பாசையிலேயே கூறினால் "ஆப்படிக்கும்" ஒருவரால், வாக்கு மாறுகின்ற ஒருவரால், தன்னுடைய நப்சு கேக்கிறது எனக்கூறி தலைமைத்துவத்தை பெற்ற ஒருவரால், மது மாது குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒருவரால், எவ்வாறு கட்சியைத் தூய்மைப்படுத்த முடியம் சகோதரரே....?

"சொல்வதெல்லாம் உண்மை என்றிருந்தால்" அல்ல சகோதரா கூறப்பட்டதெல்லாமே உண்மைதான், அதை சொல்வதற்க்கான காலம் இன்னும் கடந்து போகவில்லை.
உண்மையையை உரைப்பதற்க்கு எந்த தேவையும் இருக்க வேண்டியதில்லை எப்போது கூறப்பட்டாலும் உண்மை உண்மைதானே..?
 குற்றச்சாட்டு பற்றி யோசிக்காமல் குற்றம் சாட்டியவரின் தேவை பற்றி யோசிப்பது எவ்வகையில் நியாயம்? நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம், எமது போராட்ட இயக்கத்தின் சொத்துக்கள் சூறையாடப்பட்டிறுக்கின்றன  என அறிந்தும் கிஞ்சித்தும் கோபம் இன்றி, சூடு சொரணையற்று திருடர்களை காப்பாற்ற முனைவதின் மர்மம்தான் என்ன...? இப்புத்தக ஆசிரியருக்கும் கட்சியின் சொத்துக்களை களவாடியவர்களுக்குமான வித்தியாசம் அவர் இப்போதாவது கூறியதும், அவர்கள் எதுவுமே நடக்காததுபோல் இன்றும் நடித்து எமாற்றுவதுமேயாகும்.

சுயநலமும் அதிகார வெறியும் நம் கட்சியில் யாரிடமில்லை..?

அதிகார வெறி பிடித்து முயலில் தேர்தல் கேட்டு மூவாயிரம் வாக்குகளால் தோற்றவன் இன்று நம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், பணத்தாசை பிடித்து தாருஸ்ஸலாமை அடாவடியாக பிடித்து வைத்திருப்பவன், நாம் கட்சியின் சின்னத்தை நீதிமன்றில் நிறுத்தியவன் நாம் சார்ந்த இயக்கத்தின் முதலமைச்சர். அதிகாரமும் அடாவடியும் ஓன்று சேர நோன்புக் கஞ்சிக்குள் மண்ணை அள்ளிப்போட்டு, நாடு வீதியில் டயர் எரித்து, அக்கரைப்பற்றுக்குள் நுழைய விடாமல் தடுத்து, அட்டடளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்பாக வீதி ஓரத்தில் எம்மை எல்லாம் நோன்பு திறக்க வைத்தவர்களில் ஒருவன் நம் கட்சியின் மாகாண சபை உறுப்பினர். இப்போது கூறுங்கள் நம் இயக்கத்தில் எத்தனை பணத்தாசை பிடித்தவர்களும், அதிகார  வெறி பிடித்த மிருகங்களும், சுயநலமிகளும் உள்ளனர் ..?

உண்மையை பேசுவதற்க்கு  என்ன தகுதி வேண்டும் சகோதரனே...? உறக்கத்தில் இருந்த நத்தை 16 வருடங்களின் பின் கண்விழித்து நாம் முன்பொருபோதும் கேள்விப்பட்டிறாத, அறியாத உண்மைகளை கூறுவதற்காய் நாம் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். இவ்வுண்மைகள் தெரிந்திருக்கா விட்டால் இக்கயவர்கள் எல்லோரையும் உத்தமர்கள் என்றல்லவா நம்பித் தொலைத்திருப்போம்..?

ஹசனலியோடு சேர்த்து விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தானே நம் போராட்ட இயக்கத்தின் ஆரம்பகால அங்கத்தவர்கள். அனேகமானோர் பஞ்சம் பிழைக்கவந்தவர்கள்தானே? குத்தூஸ் ஹாஜியாரின் மருமகன் கூட வழக்குப் பேச வந்தவர்தான்.

தேசியல் பட்டியல் ஒன்றை இலஞ்சமாக வழங்கி தவிசாளரின் வாயை மூடவேண்டிய அளவுக்கு என்னதான் ரகசியம் அவரிடம் இருக்கிறதோ...? அப்படி என்றால் கட்சியின் வளர்ச்சி, மக்களின் தேவை என்பதெல்லாம் போலிக்கோசங்களே. தலைவருடைய  குறைகளை வெளியே கூறாது   இருக்க, தலைமைத்துவத்தைக் காப்பாற்ற அவர் யாருக்கு வேண்டும் ஏன்றாலும் கட்சியின் அமானிதமான தேசியப்பட்டியலை வழங்க முடிமா...?

"கூறப்பட்டது சத்தியமோ அசத்தியமோ நீங்கள் ஒரு சமூகத் துரோகியே" எனக் கூறியுள்ளீர்கள். சத்தியத்தை கூறுபவன் எவ்வாறு சமூகத் துரோகியாக முடியும்? என்ன ஒரு முரண் நகை? சமூக துரோகியை அடையாளம் காணும் சூஸ்திரங்களை  தெளிவாக பதிவிடுங்கள், எல்லோரும் சேர்ந்து அவர்களை அடையாளம் காண்போம்.

மீண்டும் கூறுகிறேன் குற்றம் சாட்டப்பட்டவர்களை விட்டுவிட்டு குற்றம் சாட்டியவரை கேள்வி கேட்பது எவ்வகையில் நியாயம்....? இவ்வளவு அயோக்கியத்தனத்தை எல்லாம் வைத்துக்கொண்டு சமூகம் என்று மேடை ஏறி கத்தியவர்களை விட   இவ்வளவு அயோக்கிய தனத்தையும் கொண்டவனை  நம் தலைவர் என நம்பி தலையில் தூக்கி வைத்து  கொண்டாடிணோமே அது உமக்கு வலிக்கவில்லையா..?

மஹிந்தையோடு ஒப்பந்தம் செய்ததும் கரையோர மாவட்டம் பற்றி பேசியது யார்?அதை மறந்தது யார்...?

சொல்பவனை கவனியாதே சொல்பவற்றைக் கவனி என்ற பழமொழியை நீர் அறிந்திருந்தால் இவ்விடயங்களை கூறுவதற்க்கு தவிசாளரிடம் இருக்க வேண்டிய தூய்மை பற்றி நீ கேள்வி எழுப்ப மாட்டாய்.

"ஒவ்வொரு தேர்தலிலும் தலைவரை பிழையாக வழி நடாத்தி இருக்கின்றீர்" என தவிசாளரை குற்றம் சாட்டுவதில் இருந்து விளங்கவில்லையா தற்போதைய தலைவர் தலைமைத்துவத்துக்கு பொருத்தமானவர் இல்லை என்பதும் அவரது சாணக்கியம் போலியானது என்பதும்.தனி நபர் ஒருவரினால் தலைவரை பிழையாக வழிநடத்த முடியும் என்றால் கட்சியின் சூரா சபையும, அரசியல் உச்சபீடமும் எதற்கு..? அவ்விரண்டும் டம்மியா..? இன்னொருவறால்  பிழையாக வழிநடத்தப்படும் அளவுக்கு சாணக்கியம் ஒரு பேய்க்குழந்தையா......?

மீண்டும் கூறுகிறேன் குற்றம் சாட்டப்பட்டவர்களை விட்டுவிட்டு குற்றம் சாட்டியவரை கேள்வி கேட்பது எவ்வகையில் நியாயம்....? இவ்வளவு அயோக்கியத்தனத்தை எல்லாம் வைத்துக்கொண்டு சமூகம் என்று மேடை ஏறி கத்தியவர்களை விட   இவ்வளவு அயோக்கிய தனத்தையும் கொண்டவனை   நம் தலைவர் என நம்பி தலையில் தூக்கி வைத்து  கொண்டாடிணோமே அது உமக்கு வலிக்கவில்லையா..?

மாமனிதரை அடக்கம் செய்யும் போதே அவரது கொள்கைகளையும் சேர்த்தே புதைத்துவிட்டனர் என்பதை நீர் அறியவில்லையா சகோதரா..?சமூகம் பற்றி அநேகமானோர் வடிப்பது நீலிக்கண்ணீர் என்பதும் தெரியாதா?

ஹாபிஸ் நஸீர் கட்சியின் சொத்துக்களை அவகரிக்கும் போது தற்போதைய தலைவர் என்ன மயக்கத்திலா இருந்தார்..? தவிசாளரின் பணயக்கைதியாகிப் போகும் அளவுக்கு ஹக்கீமின்   ஏதோ ஒரு அல்லது பல இரகசியங்கள் பசீரிடம் இருக்கிறது என்பது தெளிவு.

முஸ்லிம் சமூகத்தின் முன்னால் நிறுத்தி வைத்து கொள்ளப்பட வேண்டிய அளவுக்கு என்ன குற்றங்களை தவிசாளர் இழைத்துள்ளார் என்று குறிப்பிடுங்கள் பார்க்கலாம்.குற்றம் சாட்டியவன் கொள்ளப்பட வேண்டிய கலாசார குற்றவாளி, சமூகத்தின் சொத்துக்களை திருடியவர்கள் (கட்சி + அதன் சொத்துக்கள் ) மாலைபோட்டு பதவி கொடுத்து அழகுபாக்கப்பட வேண்டியவர்கள் என்பது தான் உமது நீதியோ...?

முஸ்லிம் தேசியத்தை சிதைத்ததே போலி சாணக்கியரே.பொருளாதார,சுயலாபங்களின் ஏற்ற்படக்கூடிய பாதிப்புகளே புறந்தள்ளி விட்டுத்தான் தவிசாளர் இந்தக்கதைகளை சமூகத்துக்கு கூற ஆரம்பித்துள்ளார். மடியில் கணம் இல்லா விட்டால் வழியில் பயம் இருக்க வேண்டியதில்லை. சரக்குகல் இருப்பதால்தான் இன்னும் பல புத்தகங்கள் அச்சுறுத்தலாய் வெளிவரப் போகிறது என எதிர்வு கூறியுள்ளீர் உங்களின் ஊகம் சரியானதுதான். மாமனிதரின் மரணம் குறித்தும், தற்போதைய தலைவரின் வாழ்வு குறித்தும் ஏகப்பட்ட மர்ம முடிச்சுக்கள் இருக்கின்றன, மகிந்தவோடு இணைந்தது கட்சியை பாதுகாக்கவா..? அல்லது தனி நபர் ஒருவரைப் பாதுகாக்கவா? என்பது மர்ம முடிச்சுக்கள்  அவிழ்த்து விடப்படும் போது வெளிச்சத்துக்கு வரும்.

உயர் பீடத்துக்கு தெரியாமல் அமைச்சுப்பதவி எடுத்திருந்தால் கட்சியில் இருந்து அபோதே நீக்கி இருக்கலாமே ஏன் நீக்கவில்லை...?ஆனால் உண்மை உயர்பீடத்தில் அது   பற்றிகூறி தற்போதய தலைவர் அதற்கு வாழ்த்தும் கூறினார்.

"உங்களது தலைமையில் எந்த தேர்தலிலாவது வென்றிற்றுக்கிரோமா..?" என்ற கேள்விக்கணை ஹக்கீமை நோக்கி எய்தப்பட வேண்டியது. கடந்த ஜனாதிபதி தேர்தல் தவிர்ந்த எல்லாத் தேர்தல்களிலும் தோல்வியடையும் பக்கமே ஆதராவளித்து கட்சியையும் சமூகத்தையும் பிழையாக வழிநடத்திய போலி சாணக்கியன் யார் என்பது தெளிவு. கடந்த தேர்தலில் யாருடைய அழுத்தத்தினால் ஹக்கீம்   மகிந்தவை தலாக் கூறினார் என்பதும் ஊர் அறிந்த உண்மை.

மகிந்தவுக்கு சாமரம் வீசியவர்கள் சோணகிரி என்றல் அந்தப்பட்டியலில் முதல் நபர் தற்போதய   தலைவரே...

மஹிந்த ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை சீன்டிப்பர்த்த போது உண்மையானா தலைவர் எதை செய்திருக்க வேண்டுமோ அதை இந்த போலி சாணக்கியர் செய்தாரா?

கட்சியை பாதுகாக்க   அரசாங்கத்தை விட்டு வெளியேற வில்லை என்பது எத்துனை கேவலமானது.சமூகத்துக்காக கட்சியா...?அல்லது கட்சிக்காக சமூகமா..?

"கட்சியைப் பாதுகாக்கவும் அதைத் தக்கவைத்துக்கொள்ளவும் இந்த தலைவர் வகுத்த வியூகங்களில் பிழை இருக்கின்றது" என்பது அரசியலில் கத்துக்குட்டியான உங்களுக்கே விளங்குகின்றது என்றால் இத் தலைவரை "போலி சாணக்கியன்" என அழைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே.

மிக்க நன்றி சகோதரனே தற்போதைய தலைவருக்கு பலகீனங்கள் இருக்கிறது என பகிரங்கமாக நீங்களே கூறியமைக்கும் ஒத்துக்கொண்டமைக்கும்.நம் போராளிகளில் பலர் அவர் பலகீனமோ,குறைபாடுகளோ அற்ற மனிதராகவும், தவறிழைக்காத மலக்காகவும் ஈமான் கொண்டிருக்கிறார்கள்.

வாப்பா எப்போது மவுத்தாகுவார் நம்ம எப்ப சொத்த பிரிக்கிற என்ற மனோ நிலையில் வாழும் பிள்ளைகளைப் போன்றவர்களைத்தானே மறைந்த தலைவர் பக்கத்தில் வைத்திருந்தார்.அப்படிப்பட்டவர்கள் மாமனிதரின் மறைவோடு ஒருவன் கட்சிக்கும் மற்றவன் கட்சியின் சொத்துக்களுக்கும் ஆட்டையை போட்டனர்.

தயவு செய்து நம் அரசியல் போராட்ட இயக்கமான முஸ்லிம் காங்கிரசில் இருந்து தானாகவே விளகிகொள்ளுங்கள் அதுவே நீங்கள் சமூகத்துக்கும் மறைந்த மாமனிதர் பெரும் தலைவர் அஷ் ஷஹீத் M.H.M அஷ்ரப்க்கும் செய்கின்ற பெரிய மரியாதையாகும் என்ற வேண்டுகோள் கட்சியையும் சொத்துக்கலையும் களவாடிய தற்போதைய  தலைவர்,கிழக்குமாகாண முயதலமைச்சர், தாருஸலாம் உறுதியை "டிபக்ஸ்" பண்ணி திருத்தி எழுதிய வழக்கறிஞ்சர்,இவ்வளவு உண்மைகளையும் இத்தனை வருட காலமாக சமூகத்தின் முன் கொண்டுவராமல் ஏதோ ஒரு காரணத்துக்காக மறைத்த தவிசாளர் ஆகியோரை நோக்கி முன்வையுங்கள்.

பிழைப்புத்தேடி நமது கட்சிக்குள் அரசியல் அகதியாய் புலம் பெயர்ந்த ஒருவரைப்போல் முழுக் களவயும் வெற்று வாய்ச்சடல்களினால் மறைத்து, போலி சாணக்கியனை காக்கா பிடிக்க முயன்று தோற்றுப் போனவரை போல் இல்லாமல் திருட்டை திருட்டு என ஒத்துகொண்ட உங்கள் வீரத்துக்கு பாராட்டுக்கள் .

நன்றி
அன்புடன்
முஸ்லிம் தேசியன்.

0 comments:

Post a Comment