Pages

.

.

Saturday, January 28, 2017

இன்றைய நஸீர் ஹாபிசின் உரை எவ்வாறு அமைந்திருந்தது?

(அபு ரஷாத்)

இன்று நிந்தவூரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிசின் உரை வழமைக்கு மாற்றமாக மு.கா தலைமைக்கு அதிகம் மதிப்பளித்ததை அவதானிக்க முடிந்தது.எனது இந்த அவதான இடைவெளி மிக குறுகிய காலத்திற்குள்  என்பது தான் குறிப்பிடத்தக்கது.

சில மாதங்கள் முன்பு சாய்ந்தமருதில் இடம்பெற்ற கூட்டமொன்றில் (கூக்கிரல் இடப்பட்ட பிரச்சாரக் கூட்டம்) கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் பேசிய போது அவர் அமைச்சர் ஹக்கீமின் நாமத்திற்கு உயர்ந்த கௌரவம் கொடுத்து பேசியதாக  அவதானிக்க முடியவில்லை.அமைச்சர் ஹக்கீம் இல்லாவிட்டாலும் இந்த கட்சி இருக்கும் என அவர் அக் கூட்டத்தில் கூறியமை குறிப்பிடத்தக்கது.

இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் அமைச்சர் ஹக்கீமை புகழ்வதையே தனதுரையின் பிரதான பங்காக அமைத்திருந்தார்.இப்படி புகழ்ந்துவிட்டு பஷீர் சேகுதாவூதின் (இப் பெயரை நேரடியாக உச்சரிக்காமல் மறைமுகமாகவே கூறியிருந்தார்) மீது அமைச்சர் ஹக்கீம் எதிர்வரும் பேராளர் மாநாட்டில் கடும் எடுக்க வேண்டும் என்ற பாணியில் அமைத்திருந்தார்.பேராளர் மாநாட்டில் நிர்வாகிகளை தெரிவு செய்வதில் ஹக்கீம் நேரடியாக எதுவும் செய்ய முடியாது என்பது நஸீர் ஹாபிசிற்கு தெரியாதா? இவர் தனது குறித்த வேண்டுகோளை மு.காவின் உயர் பீட உறுப்பினர்களை நோக்கி விடுத்திருந்தால் அது பொருத்தமானதாக அமைந்திருக்கும்.

ஏன் இந்த மாற்றம்? இவ்வளவு நாளும் கொதிக்காத இவர் தற்போது ஏன் அதிகம் கொதிக்கின்றார்? இந்த வினாக்களுக்கான விடைகளை தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தக வெளியீட்டுடன் சம்பந்தப்படுத்திப் பார்த்தால் பெற்றுக்கொள்ளலாம்.


0 comments:

Post a Comment