Pages

.

.

Sunday, July 2, 2017

அல்லக்கை நானா ? நீங்களா?
மனச்சாட்சியுடன் பேசுவோம்..

ஏ. எச்.எம். பூமுதீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வை. எல்.எஸ்.

2013 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன், உங்களின் பங்களாவுக்கு வந்து - அப்போது நான் கடமையாற்றிய சுடரொளி பத்திரிகைக்கு பேட்டி எடுத்து சென்றதை நானும் மறக்கவில்லை, நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

அதனால், உங்கள் பங்களாவையும் அங்குள்ள ஆடம்பர உபகாரணங்களையும் எனக்கு நன்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியும்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை - அவர் எம்பியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர்தான் அவரை உங்களுக்கு தெரியும்.

2000 ஆம் ஆண்டு நான் நவமணியில் அலுவலக செய்தியாளராக வேலை பார்க்கும்போது , ரிஷாத் பதியுதீன் அவர்கள்- மன்னார் மாவட்ட சுக அமைப்பாளர்.

அப்போது அவரிடம் காணப்பட்ட நட்பண்பு , மரியாதையான பேச்சு , அவரது மக்கள் மீது அவர் கொண்டிருந்த பாசம் என்பன என்னை அவர்பக்கம் ஈர்த்தெடுத்தது- இறைவனின் துணையுடன் அவர் , அடுத்து வந்த தேர்தலின் மூலம் எம்பியுமானார். அதட்கு அடுத்து வந்த தேர்தலிலும் மீண்டும் எம்பியானார்.

இதன்பின்னர்தான், 2004 ஆம்   ஆண்டுகளில் அவர் வன்னி புனர்வாழ்வு அமைச்சரானதன் பின்னர்தான் - நீங்கள் வேறு வழி இன்றி, முகா தலைவர் எதிர் தரப்பில் இருப்பதால் தனக்கு பிரயோசனம் இல்லை என்பதை உணர்ந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் ஒட்டிக்கொண்டீர்கள்.

இந்த விடயம் எனக்கு, உங்களுக்கு, இந்த காலப்பகுதியில் இருந்தோருக்கு நன்கு தெரிந்த விடயம். பின்னர், அமைச்சின் ஊடாக கொழுத்த வருமானத்தை பெட்டீர்கள். சொகுசு வாகனத்தில் வலம் வந்தீர்கள்.

ஆனால் நானோ, அதே நவமணியில்தான் 5000 ரூபா சம்பளத்தில் இருந்தேன். இப்போது கூறுங்கள் அல்லக்கை நானா? நீங்களா? .. அமைச்சர் ரிஷாதுக்கு துளியளவும் உதவி புரிந்திராத உங்களை, அந்த ரிஷாத் என்ற மனிதர் எந்தளவு தூரம் உங்களை கண்ணியப்படுத்தினார். அந்த கண்ணியப்படுத்தலால்தானே இந்த பங்களாவை நிர்மானித்தீர்கள்.

அமைச்சர் றிஷாத்தின் கீழ்வந்த நிறுவனங்களின் தலைவராக இருந்து அதன் மூலம் கிடைத்த பல லட்சங்களை ( கேள்வி பாத்திரம் உட்பட) கொண்டல்லவா அந்த பங்களாவை நிர்மானித்தீர்கள்.

கூலிக்கு எழுதுபவன், மஞ்சள் கவர் என்றெல்லாம் , அமைச்சர் ரிஷாதுக்கு சார்பாக எழுதும் எண்ணையும் ஏனையோரையும் கூறுகிண்றீர்கள். அவ்வாறு நாங்கள் ரிஷாதுக்கு சார்பாக எழுதியதனால்தானே - நிறுவன தலைவர் பதவிகளை , அமைச்சர் ஊடாக பெற்று அந்த பங்களாவை காட்டினீர்கள்.

அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடம் 2013 தொடக்கம் 2015 வரைக்கும்தான் - நான், அவரின் ஊடக பொறுப்பாளராக இருந்தேன். அதட்கு அவர் ஊதியம் தந்தது உண்மை. ஆனால், இதட்கு முன்பு- அதன் பின்பு இன்றுவரை அவரிடம் - அவருக்கு சார்பாக எழுத எங்கு, எப்போது, எவ்வளவு கூலி எடுத்தேன் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

2015 ஆம் ஆண்டின் பின்னர் 5 சர்வதேச இணையதளங்களின் கிழக்குக்கு பொறுப்பான பிரதான ஊடக செய்தி மேட்பார்வையாளர் பொறுப்பு எனக்கு கிட்டியது. அவர்களின் நிபந்தனைப்படி, " கட்சி அல்லது அரசியல்வாதி ஒருவரின் கீழ் முழுநேரமாக ஊடக பணி புரியக்கூடாது ". அந்தவகையில் அமைச்சர் றிஷாத்தின் ஊடக பொறுப்பாளர் என்பதில் இருந்து விலகி வந்துவிட்டேன்.

ஆனால், நான் இப்போது வரைக்கும் ரிஷாத் பதியுதீன் என்ற நபரின் ஆதரவாளனே.. இனியும் அப்படிதான். சர்வதேச இணையதளங்கள் தரமான கூலியை வழங்குகின்றன. நான் யாரிடமும் தங்கி வாழவேண்டிய அவசியம் இல்லை. மாறாக, உங்களுக்கு அந்த தங்கி வாழும் நிலை உள்ளது. அதட்கு நீங்கள் 10 வருடங்கள் அல்லது அதட்கு மேல் பழக்கப்பட்டு விடீர்கள். இப்போது அந்த தங்கி வாழும் நிலை இல்லாமல்போனதால், அமைச்சர் ரிஷாத்தை விமர்சிக்கிண்றீர்கள். அதைவிடுத்து, உங்களின் பழைய தொழிலான "டியூசன் மாஸ்டர் " என்ற இடத்துக்கு போவதுதான் பொருத்தமானது.

பல்கலை விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பொறியலாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்துறை சார்ந்தோர் - அமைச்சர் றிஷாத்தின் சமூகம் மீதான பற்றுதலை கண்டு பல்வேறு வகைகளில் அவருக்கு சார்பாக எழுதுகின்றனர். அப்படியானால், அவர்களும் கூலி அல்லது மஞ்சள் கவர் எழுத்தாளர்களா? மடத்தனமாக நீங்கள் புலம்புவது உங்களுக்கு விளங்கவில்லையா?

அப்துல் இபுன் மூஸா, ஷேக் அலி போன்ற உங்களின் போலி முகநூல் போன்ற ஒன்றிலா நாம் எழுதுகின்றோம்.? இல்லையே! சம்சுதீன் யூனுசுலெப்பை என்ற மானம்கெட்ட ஒருவனின் முகநூல் ஊடாக நீங்கள் எழுதுவது போல் நாம் எழுத்தினோமா? இல்லையே..!

இறுதியாக, உங்களின் பிரச்சினை தேசியப்பட்டியல் என்பது.
10 வருடங்கள் கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்தீர்கள். இந்த காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக என்ன கிழித்தீர்கள்.

உங்களின் சொந்த அம்பாறை மாவட்டத்தில் அல்லது கல்முனையில் எதனை பேரை கட்சிக்குள் உள்வாங்கினீர்கள். எதுவுமே இல்லை.

இன்று பாருங்கள்.. முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஜெமீல்,அப்துல் மஜீத், துல்ஷான்- முன்னாள் மேயர் சிராஸ் , முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ரஹ்மான், ரியாஸ்-முன்னாள் துணை வேந்தர் இஸ்மாயில் என்று மருதமுனை, பொதுவில், கல்முனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் செல்வாக்குள்ளவர்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனை உங்களால் இந்த 10 வருடங்களில் செய்ய முடியாது போனது.

கடந்த பொதுத் தேர்தலில், சொந்தமாக ஒரு கூட்டத்தையேனும் ஒழுங்கு செய்தீர்களா? இல்லையே..!
அப்படியிருக்கும்போது உங்களுக்கு எப்பிடி தேசியப்பட்டியலை தர முடியும்..?

பொறுமையாக இருங்கள்..நாகரீகமாக பேச, எழுத பழகுங்கள் இனியாவது. எனவே, மீண்டும் கேட்கிறேன்- அல்லக்கை நீங்களா? அல்லது நானா?..


Saturday, July 1, 2017

வை.எல்.எஸ் ஹமீதின் பதிலாக்கம் – 02 யின் மீதான பார்வை

வை.எல்.எஸ் ஹமீதின் பதிவுகளை நோக்கும் போது கண் பொஞ்சாதி ஒன்றுக்கும் இயலாமல் கிடக்கும் நிலையில் அனைவரையும் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. தனது இந்த நிலையை வை.எல்.எஸ் ஹமீத் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து கொள்கிறேன்.  ஒரு விடயத்துக்கு பதில் எழுதுவதானால் அவர் கேட்கும் அனைத்துக்கும் பதில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறல்லாமல் அவர் மீது ஆயிரமாயிரம் வினாக்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஒன்றை பிடித்துக்கொண்டு வை.எல்.எஸ் ஹமீத் பதில் எழுத முனைந்திருப்பதானது அவரது இயலாமையை சுட்டிக் காட்டுகிறது என்ற விடயத்தை தொட்டுக்காட்டியவனாய் அவரது பதில் கட்டுரைப்பகுதியினுள் நுழையலாம் என நினைக்கின்றேன்.

வினா – 01

முசலிப் பிரச்சினை தொடர்பாக இரண்டரை வருடங்களாக ஏன் ஜனாதிபதியுடன் பேசவில்லை என்ற வினாவை எழுப்பியதற்கு பகிரங்க விவாதங்களில் முழு நாடே அறியும் வண்ணம் பேசி ஜனாதியின் காதுகளை அடைந்திருக்கும் என பதில் அளிக்கின்றார்கள்? அப்படியானால் இவரை ஏன் மக்கள் பாராளுமன்றம் அனுப்பினார்கள்?

பதில்

முசலி பிரச்சினையெல்லாம் ஒரு பிரச்சினையல்ல. அமைச்சர் றிஷாத் தனது அரசியல் இலாபம் கருதியே அதனை பெரிதாக காட்டுகிறார் என்று கருத்து வெளியிட்டு வந்த வை.எல்.எஸ் ஹமீத், இது தொடர்பில் ஜனாதிபதியிடம் பேசுமாறு கூறியிருப்பதானது நகைப்பிற்குரியது. முசலிப் பிரச்சினை தொடர்பாக இரண்டரை வருடங்களாக ஏன் ஜனாதிபதியுடன் பேசவில்லை என்ற வினாவுக்கு அமைச்சர் றிஷாத் பகிரங்க விவாதங்களில் கலந்து கொண்டு ஜனாதிக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் இவ்விடயத்தை கொண்டு சேர்த்துவிட்டார் என்ற செய்தியையே கூற வந்தேன். இதற்கு அப்படியானால் எதற்கு பாராளுமன்றம் செல்ல வேண்டும்? என்று எனது கருத்தைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் வை.எல்.எஸ் ஹமீத் வினா எழுப்பியுள்ளார்.

அமைச்சர் றிஷாத் பகிரங்க விவாதங்களில் மாத்திரம் கலந்து கொண்டு விளங்கப்படுத்தினார் என நான் கூற வந்திருந்தால் வை.எல்.எஸ் ஹமீத்தின் வினா சரியாக அமைந்திருக்கும். எனக்கு அதிகமான வேலை இருந்ததன் காரணமாக எழுத்தை சுருக்கும் பொருட்டே அவ்வாறு கூறினேன். அமைச்சர் பாராளுமன்றங்களிலும் பேசியதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அதனை காட்டினால் வை.எல்.எஸ் ஹமீத்தால் என்ன செய்ய முடியும்? அப்படியானால், இவரை ஏன் மக்கள் பாராளுமன்றம் அனுப்பினார்கள்? என்ற வினாவின் மூலம் தற்போது அமைச்சராக உள்ள றிஷாத் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேச வேண்டும் என்ற விடயத்தை கூறுகிறார். இதற்கு முன்பு அவர் எழுதிய “ கபடத் தனத்துக்கும் எல்லை இருக்கின்றது ” என்ற கட்டுரையையில் அமைச்சராக இருந்து கொண்டு இவ்வரசை இகழ்வது பயனற்றது, எமாற்றுக்குரியது என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவர் அமைச்சர் றிஷாதை விமர்சிப்பதையே தனது கொள்கையாக கொண்டுள்ளாரே தவிர தன்னக்கென்று ஒரு நிலையான கொள்கை இல்லாததை அறிந்து கொள்ள முடிகிறது.

அமைச்சர் றிஷாத் முசலி மக்களின் காணிகள் தொடர்பில் பல தடவைகள் ஜனாதியிடம் பேசியுள்ளார். வை.எல்.எஸ் ஹமீத் தனது குறித்த பதிவில் ஜனாதிபதியை சந்திக்க சென்ற அமைச்சர் றிஷாத் ஜனாதியின் செயலாளரை சந்திக்க சென்றார் என்ற வினாவை எழுப்பியுள்ளார். இதன் மூலம் அமைச்சர் றிஷாத், ஜனாதிபதியை சந்திக்க முயற்சிப்பதை வை.எல்.எஸ் ஹமீத் தனது வாயாலேயே ஒப்புக்கொள்கிறார். முயற்சிகள் என்பது முதலில் பாராட்டத்தக்கதல்லவா?

வினா – 02

அமைச்சுப் பதவியுடன் இருந்து கொண்டு கதைத்தால் தான் எடுபடும் என்கிறார்களே! அப்படியானால் எதற்கு அமைச்சர் றிஷாத் பதவிகளை தூக்கிவீசுவேன் என்கிறார்?

பதில்

அமைச்சுப் பதவியை வைத்துக்கொண்டு விமர்சிப்பதற்கு அலாதித் துணிவு வேண்டும். தனது எதிரி மீது ஒருவர் குற்றம் சுமத்துவதற்கும் தனது பக்கத்தோடு உறவாடிக்கொண்டிருக்கும் ஒருவர்  குற்றம் சாட்டுவதற்கும் இடையில் பாரிய வேறுபாடுள்ளது. இவர்களில் யாருடைய குற்றச்சாட்டு எடுபடும் என்பதை தெளிவு செய்யுமளவு வை.எல்.எஸ் ஹமீத் முட்டாளல்ல என நினைக்கின்றேன். அப்படியானால், அமைச்சர் றிஷாத் தனது பதவியை தூக்கி வீச தான் தயார் என ஏன் கூற வேண்டும்? இங்கு தான் எமது சிந்தனைகளை ஆழமாக்க வேண்டும்.

குறித்த அமைச்சுப் பதவியை வைத்துக்கொண்டு அமைச்சர் றிஷாத் இவ்வாட்சியாளர்களை விமர்சிப்பதன் காரணமாக அவரது அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு மாத்திரமே அவரை இவ்வாட்சியாளர்கள் முடக்க முயற்சிக்கலாம். இவ்வாறான  நிலை வருகின்ற போது அமைச்சா/ சமூகமா என்ற நிலையில் அமைச்சர் றிஷாத்  தனது அமைச்சுப் பதவியை தூக்கி வீசுவார்  என்ற பொருளில் தான் குறித்த அமைச்சர் றிஷாதின் கூற்றை நோக்க வேண்டும். இன்று அமைச்சர் றிஷாத் இவ்வாட்சியலர்களை விமர்சிப்பதன் ஊடாக படிப்படியாக அமைச்சர் றிஷாத் தனது அமைச்சுப் பதவியை இழந்து கொண்டிருக்கின்றார் என்பதே உண்மையாகும். இதனை அண்மையில் அவருக்கு அதிகாரம் குறைந்த தபால் அமைச்சு வழங்கப்படும் என மு.காவைச் சேர்ந்தவர்கள் கூறித் திருந்தமையிலிருந்தே விளங்கிக்கொள்ளலாம். இவ்வாட்சியளர்கள் இவ்வரசிலிருந்து அமைச்சை ஒருவரை நீக்கும்/ புறக்கணிக்கும் போது அது கூட வேறு வடிவம் பெறும்.

வினா – 03

உங்கள் ஆதரவாளர்கள் நாகரீகமற்ற வார்த்தைகளை பிரயோகிக்கின்றார்களே! அவர்கள் கைகூலிகள் அல்ல ஆதரவாளர்கள் என்கின்றீர்கள். உங்கள் ஆதரவாளர்கள்  எல்லாம் மூன்றாம் தர மனிதர்களா?

பதில்

முதலில் உங்களிடம் நாகரீகமற்ற வார்த்தைகள் பிரயோகிப்போர் அமைச்சர் றிஷாதின் ஆதரவாளர்கள் என யார் ஏற்றுக்கொண்டார்? நீங்கள் தான் என்னை, அமைச்சர் றிஷாத் கூலிக்கு ஆள் வைத்து விமர்சிக்கின்றார் என கூறித் திரிகிறீர்கள். அவர்கள் கூலிகள் அல்ல. ஆதரவாளர்கள் என்றே பலரும் பதில் வழங்கினர்.இதனை வேறு எங்கோ? ஏதோ? முடிச்சி போட்டு பதில் தருகிறீர்கள். உங்கள் சிந்தனை குழம்பிப் போய்விட்டது.

நான் உங்களுக்கு பதில் கட்டுரையை நாகரீகமாகவே எழுதியிருந்தேன். எனக்கு முகநூல்  பேக் ஐடியில் இருந்து ஓரிருவர் மிகக் கேவலமாக எழுதியிருந்தனர். அதில் ஒன்று நீங்கள் பாவிக்கும்  போலி முகநூலாகத் தான் இருக்க வேண்டும். அதைப் பற்றி அதனை நீங்கள் தான் செய்கிறீர்கள் என குற்றம் சாட்டுமளவு நான் மூடனல்ல. நீங்கள் கேட்டிருப்பது போன்று அது உங்கள் பிறப்பு குறைபாடா? வளர்ப்பு குறைபாடா? இடையில் வந்த குறைபாடா என கேட்க எனக்கு அதிக நேரம் எடுக்காது. வளர்ப்பை கேள்விக்குட்படுத்தி பேசுமளவு நான் வக்கிர புத்தியுள்ளவனல்ல.

ஒரு அமைச்சருக்கு/ கட்சிக்கு தனிப்பட்ட ஊடக பிரிவு காணப்படும். இது அமைச்சர் றிஷாத் மாத்திரம் செய்வதல்ல. மு.காவுக்கும் உள்ளது. உத்தியோக ஊடக பிரிவினர் கடமைக்காக ஊடக பணி செய்பவர்கள். அதனைத் தான் கூறியிருந்தேன்.

வினா – 04

உங்கள் ஆதரவாளர்கள் கட்சிக்குள் இருந்த போது, நான் ஏன் இவற்றையெல்லாம் பற்றி பேசாமல் இருந்தேன் என கேட்கின்றனர். நான் இவற்றை பற்றியெல்லாம் பேசாமலா இருந்தேன்? எத்தனை தடவைகள் பேசியுள்ளேன்.

பதில்

நான் ஒருபோதும் வாய் மூடி இருக்கவில்லை. அமைச்சர் றிஷாத் பதுளை, கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் விடயத்தில் சமூக துரோகம் செய்ய இருந்ததை நீங்கள் தான் போராடி தடுத்ததாக கூறியிருந்தீர்கள். இவரின் கூற்றுப்படி அமைச்சர் றிஷாத் சமூகத்து துரோகம் செய்யும் மன நிலை உடையவர். இதனை அறிந்தவுடன் அமைச்சர் றிஷாத் பற்றிய  உண்மைகளை சமூகத்துக்கு கூறி அவரை விட்டு விலகியிருக்கலாமே! அப்போதெல்லாம்  மாறாமல் தேசியப்பட்டியல் கிடைக்காமல் அமைச்சர் றிஷாத்  உங்களை கட்சியை விட்டும் நீக்கிய பிறகே அவரைப் பற்றி சமூகத்துக்கு கூற வேண்டும் என்ற ஞானம் பிறந்ததன் மர்மம் என்ன? சிலருக்கு கஞ்சா அடித்தால் தான் ஞானம் வரும். உங்களுக்கு அதிகாரமும், பதவியும் பறி போன பிறகு தான் ஞானம் பிறக்குமோ?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Thursday, June 29, 2017

அமைச்சர் ஹக்கீம் நல்லாட்சியிடம் நீதியை எதிர்பார்க்குமளவு, நல்லாட்சி என்ன செய்துள்ளது?

அமைச்சர் ஹக்கீம் பெருநாள் வாழ்த்து செய்தியிலும் தற்போதைய அரசை புகழ்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இகழ்ந்தும் அரசியல் செய்ய வேண்டிய வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் சத்தார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

தற்போதைய அரசானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது பலவாறான குற்றச் சாட்டுக்களை முன் வைத்தே வந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தையும் தற்போதைய காலத்தையும் அவர்கள் குற்றம் சுமத்திய விடயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது குற்றச் சாட்டுக்கள் அதிகரித்துள்ளதே தவிர ஒன்றேனும் குறையவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தை விடவும் முஸ்லிம் சமூகம் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதுவரை எங்குமே நீதி நிலைநாட்டப்பட்டதாகவும் அறிய முடியவில்லை. நீதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் முஸ்லிம்கள் மீதான செயற்பாடுகளை மிகச் சிறிய சம்பவங்களாக கூறியுள்ளனர்.

நான்கு பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடிய ஞானசார தேரர் மிக இலகுவாக நீதி மன்றம் சென்று பிணை எடுத்து சென்றுள்ளார். இந்த பிணை எடுப்பதற்கு நீதித் தாயின் கண்கள் எவ்வாறெல்லாம் கட்டப்பட வேண்டுமோ அத்தனை வழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான அரசானது நீதியை நிலை நாட்டும் என எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ஹக்கீம் கூறியிருப்பதானது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றாகும்.

அமைச்சர் ஹக்கீமுக்கு இவ்வாட்சி நீதியை நிலை நாட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அந்த எதிர்பார்ப்பை வழங்கிய ஒரு விடயத்தையாவது அமைச்சர் ஹக்கீம் முன் வைப்பாரா? எங்களால்  இவ்வாட்சி நீதியை நிலை நாட்டாது என்பதற்கு பல ஆயிரம் ஆதாரங்களை எடுத்துரைக்க முடியும்.

அமைச்சர் ஹக்கீம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை இகழ்ந்தும் தற்போதைய அரசை புகழ்ந்திருப்பதானது, முஸ்லிம் மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தொடர்ந்தும் வில்லனாக காட்டி இவ்வரசை பாதுகாக்க முனைவதை எடுத்து காட்டுகிறது. இதனை பார்க்கின்ற போது தற்போதைய அரசை காப்பாற்ற அமைச்சர் ஹக்கீமுக்கு ஏதேனும் கொந்தராத்து வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமே எழுகிறது.


வை.எல்.எஸ் ஹமீதின் பதில் கட்டுரை – 01 மீதான விமர்சனம்

குற்றச் சாட்டு – 01

எல்லா அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ ஒரு ஊடக குழு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக பெருந்தொகையான இலட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

பதில்

ஒரு அமைச்சருக்கு அரசாங்கத்தால் ஒரு ஊடக குழு வழங்கப்படும். அவர்கள் நேரம், காலம் பார்த்தே வேலை செய்வார்கள். இன்னும் சொல்லப்போனால் வீடியோவும், புகைப்படம் எடுப்பதையுமே அவர்களது தொழிலாக கருதுவர். அவர்களை வைத்துக்கொண்டு ஒரு அமைச்சின் ஊடகப் பிரிவு செயலாற்ற முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை.  இது அமைச்சர் றிஷாத் மாத்திரம் செய்கின்ற வேலையுமல்ல. தற்போது அமைச்சர் றிஷாத் ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் அரசு வழங்கும் ஊடக செயற்பாட்டாளர்களுக்கு மேலதிகமான ஊடக செயற்பாட்டாளர்களின் தேவை உள்ளமை மறுதலிக்க முடியாத உண்மை. இச் சிறு விடயத்தை கூட புரிந்து கொள்ள முடியாமல் வை.எல்.எஸ் ஹமீத் விமர்சித்திருப்பதானது அவரது சிறு பிள்ளைத் தனமான பேச்சை காட்டுக்கிறது.

இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் றிஷாதுக்கு சார்பாக பேசுவோர் அனைவரையும் அவர் பணம் கொடுத்தே பேச வைக்கின்றார் என்ற விடயம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இன்று சமூக வலைத்தளங்களில் அமைச்சர் றிஷாதுக்கு சார்பாக பேசுவோருக்கு எல்லாம் பணம் வழங்குவதானால் மாதமொன்றுக்கு கோடிக்கணக்கில் பணம் தேவை. அது ஒரு அமைச்சருக்கு சாத்தியமற்ற விடயம். வை.எல்.எஸ் ஹமீத் தனது இக் கூற்றினூடாக தனக்கு மிகப் பெரும் எதிர்ப்புக்களை மக்கள் சமூக வலைத்தளங்களில் ஊடாக வழங்கியதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார். இதனை எதிர்ப்பாக வெளிக்காட்டினால் தனது மரியாதை போய் விடும் என்பதால் அவர்களை கூலியாட்களாக சித்தரித்து மக்களை வேறு பக்கம் திசை திருப்ப முயல்கிறார்.

அமைச்சர் றிஷாதுக்கென்று ஒரு கட்சி உள்ளது. அவரோடு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அமைச்சர் றிஷாத் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அமைச்சராக இருப்பதால் பலருக்கு சேவையாற்றி இருப்பார். இவைகளின்  காரணமாக அவரை யாராவது இகழ்ந்தால் அவரை நோக்கி சொல் அம்புகள் வருவது தவிர்க்க முடியாத விடயமாகும். அச் சொல் அம்புகளை எதிர்கொள்ளுமளவு வா.எல்.எஸ் ஹமீதுக்கு மக்கள் ஆதரவு இருந்தால் அவைகள் பெரிதாக தெரியாது. தற்போது வை.எல்.எஸ் ஹமீதை மக்கள் ஆதரிக்காததன் காரணமாக வை.எல்.எஸ் ஹமீதை நோக்கி வரும் அம்புகள் வை.எல்.எஸ் நேரடியாக தாக்குவதால் இவ்வாறான சிந்தனைகள் எழுவது தவிர்க்க முடியாததும் கூட. “அதனால் தான் இப்படியோ” என சிந்திப்பது  தான் மனித சிந்தனையும் கூட.

அமைச்சர் றிஷாத் சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்களுக்கு எல்லாம் பணம் வழங்குகின்றார் என்றால் அதனை வை.எல்.எஸ் ஹமீத் ஆதாரங்களோடு நிரூபிப்பாரா? பெருந்தொகை பணம் என்றால் அது எவ்வளவு? யாருக்கு? வை.எல்.எஸ் ஹமீதுக்கு தெரிந்தால் ஏன் இத்தனை தயக்கம்? இத்தனை காலமும் அமைச்சர் றிஷாதின் கோட்டைக்குள் உறங்கியவருக்கு இது ஒன்றும் பெரிய விடயமுமல்ல. அவ்வாறு எதனையும் நிரூபணம் செய்யாது தண்ணீரில் எழுதி விளையாடுவதன் மர்மம் என்ன?

குற்றச் சாட்டு – 02

அமைச்சர் றிஷாத் அணியினர் தான் தேசியப்பட்டியல் கிடைக்காமையால் தான் இவ்வாறு கூவித் திரிவதாக எவ்வாறு கூற முடியும்?

பதில்

வை.எல்.எஸ் ஹமீதுக்கும் அமைச்சர் றிஷாதுக்கும் இடையில் உள்ள பிரச்சினை தேசியப்பட்டியல் பிரச்சினை என்பதில் எவ்வித சிறு சந்தேகமுமில்லை. இதனை பல விடயங்களை கொண்டு நிறுவல்களை அமைக்கலாம். இன்று  வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதை விமர்சித்து கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும் இன்று நேற்று நடந்தவையல்ல. அவர் கட்சியில் இருக்கும் போது நடந்தவைகளே. அக் காலத்தில் இது தொடர்பில் அவர் எங்கும் பேசியதாக இல்லை. இன்னும் சொல்லப் போனால் இன்று ரங்காவுடன் இணைந்து அமைச்சர் றிஷாதை விமர்சித்து கொண்டிருக்கும் வை.எல்.எஸ் ஹமீத் அன்று ரங்கா ஏன் அமைச்சர் றிஷாதை விமர்சிக்கின்றார் என்பதற்கு நியாயம் கற்பித்தவர். இவ்வாறானவர் திடீர் என அமைச்சர் றிஷாதை விமர்சித்தால் அதன் நோக்கம் வேறு எதுவாக இருக்க முடியும்.

அமைச்சர் றிஷாத் வை.எல்.எஸ் ஹமீத் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மிக நிதானமான கருத்தையே கூறி வந்தார். இல்லை.. இல்லை..  அவர் என்னை இப்படியெல்லாம் கடுமையாக விமர்சித்தார் என வை.எல்.எஸ் ஹமீதால் ஒன்றையேனும் காட்ட முடியாது. வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் மீது முன் வைப்பதெல்லாம் போலி முகநூல்களில் வெளியாகிய செய்திகளைத் தான். போலி முகநூல் செய்திகள் ஆயிரம் வரும். அதற்கெல்லாம் அமைச்சர் றிஷாதை குற்றம் சுமத்த முடியுமா? வை.எல்.எஸ் குற்றம் சுமத்தும் குறித்த முக நூல் பதிவுகள் கூட இவர்கள் இருவருக்குமிடையில் பிரச்சினைகள் தோன்றிய ஆரம்ப காலத்தில் தான் பதவிடப்பட்டிருந்தன. அதன் பிறகு அமைச்சர் றிஷாத் அணியினர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதை இகழ்ந்த போதே தாக்க தொடங்கினர். இன்றைய பதிவில் வை.எல்.எஸ் ஹமீத் நாகரீகம் பற்றி பதிவிட்டிருந்தார். யாரோ விமர்சித்தமைக்காக அமைச்சர் றிஷாதின் தனிப்பட்ட விடயங்களை கூட விமர்சித்த வை.எல்.எஸ் ஹமீத் நாகரீகம் பற்றிப் பேச எந்த தகுதியுமற்றவர். எனவே, இன்று இவர்களுக்கு இடையிலான பிரச்சினையில் அநாகரிகமாக நடந்து கொண்டவர் வை.எல்.எஸ் ஹமீத் தான்.

குற்றச் சாட்டு - 03

முசலி மக்களின் காணி மீட்புக்கு அமைச்சர் றிஷாத் என்ன செய்தார்?

பதில்

இலங்கை நாடே உண்மைகளை அறியும் வண்ணம் பகிரங்க விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்டு விளங்கப்படுத்தினார். இது ஜனாதிபதியையும் சென்றடைந்திருக்கும் பிரதமரையும் சென்றடைந்திருக்கும்.இதுவே இதற்கு போதுமான பதிலாக கருதுகிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு..
மக்கள் உங்களைப்பற்றிப் புரிந்து விட்டார்கள். ஆனால், நீங்கள்தான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் இருக்கும் போது உல்லாசமாக வாழ்ந்து அனுபவித்த பரிதாபத்திற்குரிய சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு இன்று இருப்புக் கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதையே அவரின் கற்பனையான எழுத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றது.
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் தனது எழுத்தில் அரசியல் பற்றி பேசுகின்றார், மார்க்கம்பற்றி பேசுகின்றார். ஏன் நீதி, நியாயம் என்றெல்லாம் தற்போது பேசத் தொடங்கியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தல் நடந்து தேசியப்பட்டியல் நியமனம் வழங்கும் வரை சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் சரியாகவே இருந்தது.
தேசியப்பட்டியல் நியமனத்திற்குப் பிறகு அமைச்சரின் செயல்பாடுகளை வித்தியாசமாகப் சகோதரர் வை எல் எஸ் ஹமீட் பார்ப்பதை மனிதனாகப் படைக்கப்பட்ட ஆறு அறிவுடைய சகலருக்கும் புரியாமல் இருக்க முடியாது.
மர்ஹும் அஷ்ரப் காலத்தில் அன்னாருக்கு செயலாளராக இருந்து செயல்பட்ட போது இந்த  சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் ஒரு வித்தியாசமான மனிதராகத்தான் செயல்பட்டார் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த விடயம்.
இவர் சாய்ந்தமருதை சேர்ந்த ஒருவரை மனைவியாகக் கொண்டிருந்த போதும் பொதுவாகச் சிந்திக்காமல் சாய்ந்தமருது மக்களுக்கு விரோதமாக சாய்ந்தமருதின் எல்லையை மாற்றி அமைப்பதற்கு பாடுபட்டு துரோகம் செய்ததை சாய்ந்தமருது மக்கள் எளிதில் மறந்துவிடப்போவதில்லை.
இப்படிப்பட்டவர் தேசியப்பட்டியலில் எம்.பியாக நியமனம் செய்யப்பட்டிருப்பின் என்ன நடந்திருக்கும் என்பதை சாய்ந்தமருது மக்கள் சிந்தித்துப் பார்க்கிறார்கள். உண்மையில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நல்ல ஒரு முடிவுதான் தேசியப் பட்டியல் இவருக்கு வழங்கப்படாமையாகும் என அச்சந்தர்ப்பத்தில் மக்கள் பேசிக்கொண்டதை மறக்கமுடியாது.
பதவிகள் இருக்கும்போது ஒரு நிலை பதவிகள் இல்லாத போது வேறு ஒரு நிலை என்ற நிலையில் வாழ்ந்து செயலாற்றும் ஒரு வித்தியாசமான மனிதராகத்தான். சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் செயல்பட்டவர்.
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் கூறுவது போல் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு ஆதரவாக முகநூலில் எழுதுபவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் என நினைப்பது எவ்வளவு கீழ்த்தரமான நினைப்பாகும்.
இன்று இளைஞர்கள் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இவர்களில் மக்களுக்காக கடுமையாகப் பாடுபடுபவர் யார்? வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கு வெளிநாட்டில் தனவந்தர்களைத் தேடுவதும் அதற்கு உதவுவதும் யார்? முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது அந்த இடத்திற்கு நேரடியாக விரைந்து செல்பவர் யார்? ரமழான் மாதங்களில் ஏழைகளுக்கு உதவுவது யார்? தொழுகைக்கான பள்ளிகளுக்கு உதவுவது யார்? பாராளுமன்றத்தில் அச்சமில்லாமல் விடயத்தை நேரடியாக எடுத்து வைத்து பேசுபவர் யார்? எனபதை எமது இளைஞர்கள் காண்கிறார்கள். இப்படியாக உதவும் மனிதனாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களை இளைஞர்கள் காண்கிறார்கள். அவருக்கு ஆதரவாக அதிகம் அதிகம் எழுதுகிறார்கள்.
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் தற்போது தெரிவித்துக் கொண்டிருப்பது தங்களின் நெடு நாளைய ஆசை ஒன்று நிறைவேறாத நிலையில் சுயநலத்தின் வெளிப்பாடாகத்தான் தங்களின் முகநூலில் பதிவுகளை இடுவதும் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் என்பது மக்களுக்கு நன்கு புரியும்.
சக்தியில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சியில் மக்கள் செல்வாக்கில்லாத உங்களைப் போன்றவர்களை அழைத்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக வசைபாட வைக்கிறார் என்பது மக்களுக்கு புரியாமலில்லை. நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறீர்கள் என்றாலே மக்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக, மக்கள் செல்வாக்குள்ள மர்ஹும் அஷ்ரப் அவர்களோடு இருந்து மக்களின் நல்ல அபிப்பிராயத்தைப் பெறாத நீங்கள் தற்போது மக்களோடு மக்களாக இருந்து செயல்படும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களோடு உங்களால் ஒரு போதும் மானிடத் தன்மையுடன் செயலாற்ற முடியாது என்பதுதான் உண்மை. அதுதான் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கட்சியிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களைப் பிரித்துள்ளான் என நம்புகின்றோம்.
விடயம் உள்ளவன் அதிகம் பேசமாட்டான் ஆனால், நீங்கள் அதிகம் அதிமாகப் பேசுகின்றீர்கள். மக்கள் உங்களைப்பற்றிப் புரிந்து விட்டார்கள். ஆனால், நீங்கள்தான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை.

அல்ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்
சாய்ந்தமருது


Wednesday, June 28, 2017

அமைச்சர் ஹக்கீமுக்கு நல்லாட்சியில் நீதி நிலை நாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். எனக்கில்லை.. உங்களுக்கு உள்ளதா?

அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் இவ்வரசாங்கத்தின் நீதியின் மீது அவருக்கு நம்பிக்கையுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது பெருநாள் வாழ்த்து செய்தியில்

“ இவ்வாறான சூழ்நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் போலல்லாது, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நீதியும், நியாயமும் நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பில் அல்லாஹ்வின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் இந் நாட்டு முஸ்லிம்களாகிய நாங்கள் இக்கட்டான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்” என குறிப்பிட்டிருந்தார்.

மிக அண்மையில் ஞானசார தேரர் நீதி மன்றம் சென்று அவருக்கு பிணை வழங்கிய விடயமானது இவ்வாட்சியின் நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையை பூரணமாக இல்லாமளாக்கியுள்ளது. இல்லை.. இல்லை.. அதில் நீதித் துறையானது நீதியைத் தான் நிலை நாட்டியுள்ளதென அமைச்சர் ஹக்கீமால் கூற முடியுமா?

பிணை வழங்க வேண்டுமென்றே செயற்பட்ட நீதித் துறை மீது நீதியை நிலை நாட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக, எவ்வாறு அமைச்சர் ஹக்கீமால் கூற முடியும்?

குறித்த வாழ்த்து செய்தியில் முஸ்லிம்கள் இக்கட்டான சூழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவராகவே ஏற்றுக்கொள்கிறார். கடந்த ஆட்சி காலத்தை போலல்லாது இவ்வாட்சியானது  நீதியை நிலை நாட்டும் என்ற நம்பிக்கை இருந்தால் ஏன் இந்த இக்கட்டான சூழ் நிலை? ஏன் இந்த முன்னுக்கு பின் முரணான கருத்து?

இந்த வாழ்த்து செய்தியில் கடந்த அரசாங்கத்தை போலல்லாது இவ்வாட்சியின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என்ற எதிர்ப்பார்ப்பை அமைச்சர் ஹக்கீமுக்கு வழங்கிய ஒரு விடயத்தையாவது கூற முடியுமா? அமைச்சர் றிஷாத் இவ்வரசை படு மோசமாக விமர்சிக்கின்றார். அப்படி இருந்தும் அது போதாதென்று அவர் மீது சில சொல் அம்புகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு சொல் அம்புகளை வீசுபவர்களின் கண்களுக்கு இது புலப்படத்தான் மர்மம் என்ன?

இந்த விடயமானது அமைச்சர் ஹக்கீம் இவ்வாட்சியாளர்களின் கால்களில் விழுந்து கிடக்கின்றார் என்ற விடயத்தை தெளிவாக்குகின்றது. இவைகளை கண்டும் எமது முஸ்லிம் சமூகம் அமைச்சர் ஹக்கீமின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளவில்லையென்றால் அவர்களை போன்ற ஏமாளிகள் யாருமே இருக்க முடியாது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Tuesday, June 27, 2017

அமைச்சர் றிஷாதின் பாராளுமன்ற குரல் கொடுப்புக்களும் அரசுக்கு எதிரான பேச்சுக்களும் சாதாரணமானவையா?

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்களை மட்டம் தட்டும் வகையில் தனது பதிவொன்றை பதிவேற்றியுள்ளதை அவதானிக்க முடிந்தது. அப் பதிவின் ஆரம்பத்தில் நோன்பு காலம் என்பதால் அரசியல் பதிவுகளை தவிர்க்க முயற்சித்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான தாக்கம் அவரது கட்டுப்பாட்டையும் மீற வைத்துள்ளதாக கூறி தனது பதிவை ஆரம்பம் செய்கிறார்.
 

நோன்பு காலத்தில் அரசியல் கதைக்க கூடாது என்ற எந்த கட்டுப்பாடுகளும் இஸ்லாத்தில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அரசியல் இஸ்லாத்தின் ஒரு பகுதியாகும். ஏனைய மார்க்கங்களை விட இஸ்லாத்துக்குள்ள சிறப்பு எந்த விடயமாக இருந்தாலும் உளத் தூய்மையோடு செயல்பட்டால்  அதனூடாக  நன்மையை பெற்றுக்கொள்ள முடியும். உளத் தூய்மை அற்ற செயற்பாடுகளே பாவத்தின் பால் வழி காட்டும். வை.எல்.எஸ் ஹமீத் குறித்த தனது கருத்தின் ஊடாக அவருக்கு இஸ்லாம் பற்றிய போதிய புரிதல் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லது நோன்பு காலத்தில் மனச் சாட்சிக்கு விரோதமான செயற்பாடுகளை செய்து பாவம் சம்பாதிக்க கூடாது என்ற நோக்கம் இருக்க வேண்டும். இவ்விரண்டில் அவர் எதனை ஏற்றுக்கொண்டாலும் அது அவருக்கு இழிவையே கொண்டு சேர்க்கும்.

அவர் முன் வைத்துள்ள குற்றச் சாட்டுக்களை பகுதி பகுதியாக பிரித்து எனது விமர்சனத்தை முன் வைக்கலாம்  என நினைக்கின்றேன். அவரது குற்றச் சாட்டில் எங்கும் அமைச்சர் ரிஷாத்தின் பெயர் குறிப்பிடப்படாதிருப்பினும் இப் பதிவு அவரை நோக்கியது என்பதை சிறு பிள்ளையும் அறியும் என்பதால் அமைச்சர் றிஷாதை நேரடியாக அவர் குறிப்பிட்டார் என கருதி எனது அவரது வினாக்களை அமைச்சர் றிஷாதை நோக்கியதாக அமைத்துள்ளேன். ஒரு நிகழ்வில் ஒரு அமைச்சர் இப்படி பேசினார் என அவரது பெயரை மறைத்து விமர்சனம் செய்வதானால் அவரது குறித்த கருத்து மாத்திரமே விமர்சிக்கப்படல் வேண்டும். அவர் பற்றிய வேறு விடயங்களை விமர்சிப்பதானால் அவர் பெயர் வெளியிடப்பாடல் வேண்டும். ஏனெனில், குறித்த பதிவை அரசியல் தொடர்புடையவர்கள், இவர் தான் என அடையாளம் கண்டு கொண்டாலும் அரசியலுடன் மிகவும் நெருங்கிய தொடர்பற்றவர்கள் யாரை விமர்சிக்கின்றார் என அறிய மாட்டார்கள். வை.எல்.எஸ் ஹமீத் குறித்த விடயத்தையும் கவனத்தில் எடுப்பது சிறப்பாக இருக்கும்.

குற்றச் சாட்டு – 01

அரசின் பங்காளியாக இருக்கின்ற அமைச்சர் றிஷாத் ஏன் ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக கடுமையாக அரசை சாட வேண்டும்?

பதில்:

பதில் வழங்க முன்பு வை.எல்.எஸ் ஹமீத் இங்கு பயன்படுத்தியுள்ள வார்த்தை பிரயோகம் மிகவும் கவனம் செலுத்தக் கூடியது. இங்கு அமைச்சர் றிஷாத் கடுமையாக அரசை  சாடுவதாக  வை.எல்.எஸ் ஹமீத் குறிப்பிடுகிறார். கடுமையாக எனும் வார்த்தை பிரயோகமானது அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்கள் வை.எல்.எஸ் ஹமீதினதும்  உள்ளத்தை தொட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது. அல்லாது போனால் அரசை சாடிப் பேசியுள்ளார் என சாதாரண ஒரு விடயமாக அவர் கூறியிருக்கலாம். அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்கள் முஸ்லிம் மக்களிடையே மிகவும் பலமான பேசு பொருளாகவும் அவரது செல்வாக்கை உயர்த்தும் ஒன்றாகவும்  மாறியுள்ளதால் அந்த செல்வாக்கை தனது இவ்வினவினூடாக உடைக்க முயல்கிறார் என்ற விடயமே இதனூடாக தெளிவாகிறது.

இப்போது விடயத்துக்குள் நுழைவோம். இன்றைய சூழ் நிலையில் தற்போதைய அரசுக்கு முஸ்லிம்களின் வாக்குகளே பிரதானமானதாகும். அமைச்சர் றிஷாத் இவ்வாறு பேசும் போது முஸ்லிம்களின் எதிர்ப்பலைகள் இவ்வரசின் மீது அதிகரிக்க தொடங்கும். மிக விரைவில் தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அமைச்சர் றிஷாதின் இவ்வாறான பேச்சுக்கள் அரசின்  தொடர்ச்சியான இருப்புக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். அமைச்சர் றிஷாத் இவ்வாட்சியாளர்களால் புறக்கணிக்கப்படுவார். இன்றைய நிலையில் அமைச்சர் றிஷாத் தேசிய கட்சிகளுடன் இணைந்து கொண்டு செல்வதே அவரது வளர்ச்சிப் படிகளுக்கு உகந்தது. அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாதே அமைச்சர் றிஷாத் பேசிக்கொண்டிருக்கின்றார். அமைச்சர் றிஷாத் இவ்வரசை சாடிப் பேசுவதன் மூலம் ஏற்படக் கூடிய விளைவுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

அமைச்சர் றிஷாத் அரசின் பங்காளியாக இருந்து கொண்டு இதனை  கூறலாமா என்ற பகுதியானது ஆழமான சிந்திக்க வேண்டிய ஒரு பகுதியாகும். எப்படியானாலும் அரிசானால் சரி. அரசியல் பல வகைப்படும். உடன்பாட்டு அரசியல்,முரண்பாட்டு அரசியல், ஒப்பந்த அரசியல் என அவற்றை பிரிக்கலாம். இதில் இன்று அமைச்சர் றிஷாத் கடைப்பிடித்து கொண்டிருப்பது முரண்பாட்டு அரசியல் பாணியாகும் (வை.எல்.எஸ் ஹமீத் , அமைச்சர் றிஷாத் அரசை கடுமையாக சாடுகிறார் என கூறுவதன் மூலம் இதனை  ). இந்த முரண்பாட்டு அரசியல் பாணியை எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்போரே அதிகம் செய்வர். ஆனால்,அது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தே செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆளும் கட்சியிலும் இருந்தும் செய்யலாம். ஆளும் கட்சிக்குள் அவர்களது பதவிகளில் இருந்து கொண்டு முரண்பாட்டு அரசியல் பாணியை கடைப்பிடிக்க அலாதித் துணிவு வேண்டும். அது பலருக்கு இருப்பதில்லை.

அமைச்சர் றிஷாத் மாத்திரம் எதிர்க்கட்சியில் அமர்வதால் எதனையும் அவரால் சாதிக்க முடியாது. அவர் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசை விமர்சிப்பார். எதிர்க்கட்சி என்றாலே அரசை விமர்சிப்பது அதன் பண்பு. ஆளும் கட்சியில் இருந்து கொண்டு ஒருவர் அரசி விமர்சிப்பாராக இருந்தால் அவர் எதிர்க்கட்சியில் இருந்து என்ன செய்வாரோ அதனையும் செய்கிறார் அதன் பலா பலன்களையும் அனுபவிக்கின்றார். மேலும், ஆளும் கட்சியில் இருந்தவாறு ஆளும் கட்சியை விமர்சிக்கும் போது அவ் விமர்சனம் உண்மை வடிவம் பெறும். இப்பகுதியை இன்னும் நீளமாக அழுத்தலாம் இருந்தாலும் இத்தோடு நிறுத்துகிறேன்.

எனது வினா?

அளுத்கமை கலவரம் இடம்பெற்ற போது வை.எல்.எஸ் ஹமீத், அமைச்சர் றிஷாதுடனேயே இருந்தார். அப்போது வை.எல்.எஸ் ஹமீத், அமைச்சர் றிஷாத் இவ்வரசை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஒரு அறிக்கையாவது விட்டாரா என்பதாகும்.

குற்றச் சாட்டு – 02

பொது மக்களும் அரசுக்குத் தான் ஏசுகிறார்கள். இவர்களும் பொது மக்களிடம் வந்து அரசுக்கு ஏசுவதானால் எதற்கு பொது மக்கள் இவர்களை தெரிவு செய்தார்கள்?

பதில்

அமைச்சர் றிஷாத் பொது மக்களிடம் மாத்திரம் இவ்வரசை விமர்சிக்கவில்லை. பாராளுமன்றத்துக்குள் பொது பல சேனாவின் செயலாளரை கைது செய்ததை நாடகம் என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார். ஒரு பொது மகன் கதைக்கும் விடயங்கள் இவ்வரசின் ஆட்சியாளர்களை சென்றடைவதில்லை.  அதே நேரம் மக்கள் அங்கீகாரம் பெற்ற ஒரு அரசியல் வாதி கதைக்கும் போது அது மிக விரைவாக இவ்வாட்சியாலர்களை சென்றடையும். அதுவே சாதாரண பொது மகன் அரசுக்கு ஏசுவதற்கும் ஒரு மக்கள் அங்கீகாரம் பெற்ற அரசியல் வாதி மக்களிடம் வந்து அரசை விமர்சிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடாகும்.

இவ்வரசை இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து அமைத்திருப்பதால் அமைச்சர் றிஷாத் வெறும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. அதே நேரம் பொது மக்களிடம் சென்று அரசை விமர்சிக்கும் போது பொது மக்கள் அரசின் மீது தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டுவர். இன்றைய ஆட்சியாளர்களின் வெற்றிக்கு முஸ்லிம்களின் வாக்கே பிரதானமானதாகும். இதன் காரணமாக அமைச்சர் றிஷாத் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதை  இவ்வாறான பிரச்சாரமே இப் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதில் அதிகம் தாக்கம் செலுத்தும்.

குற்றச் சாற்று – 03

22 இலட்சம் முஸ்லிம்களையும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கும் அமைச்சர் றிஷாத் இப்போது அரசாங்கத்தில் இல்லையா? அவரது முட்டில் அரசாங்கம் தங்கியிருக்கவில்லையா? அடுத்த தேர்தலில் அவருக்கு அனைவரும் வாக்களித்து முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வோமா?

பதில்

இங்கு தான் வை.எல்.எஸ் ஹமீத் தனது புரிதலின் பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறார். அமைச்சர் றிஷாத் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைக்கின்றாரே தவிர தனது தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைக்கவில்லை. இதனை வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு நினைத்தால் அது அவருடைய தவறாகும்.

அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் ஒன்றுபடுமாறு அழைத்தே வருகிறார். அமைச்சர் ஹக்கீமையும் அழைத்து அது பாரிய பேசு பொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் விடயமானது அவர் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபடுமாறு அழைத்த  இந்த அழைப்பு முஸ்லிம்களுக்கான பொதுவான அழைப்பாகவே பார்க்க வேண்டும் என்பதை கூறிச் செல்கிறது.

தற்போதைய அரசானது இரு பெரும் தேசிய கட்சிகள் இணைத்து ஆட்சியமைத்துள்ளது. 19ம் அரசியல் அமைப்பு சீர் திருத்தம் மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை உட்பட பல விடயங்கள் இவ்வரசு கொண்டுள்ள பாராளுமன்ற பலத்தின் சான்றாகும். அமைச்சர் றிஷாதின் கட்சியில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதனை வைத்துக் கொண்டு அவரால் எதுவுமே செய்ய முடியாது. இல்லை.. இல்லை.. அவரால் இவ் எண்ணிகையை வைத்துக் கொண்டு ஆட்சியை அசைக்க முடியும் என்றால் அது எவ்வாறேன வை.எல்.எஸ் ஹமீத் சற்று தெளிவு படுத்த வேண்டும்.

அமைச்சர் றிஷாத் கூறியது போன்று அனைவரும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இணைந்தால் இவ்வரசை ஓரளவு அசைத்து பார்க்கலாம் என்பதே உண்மையாகும்.  இன்று அமைச்சர் றிஷாத் மாத்திரமல்ல இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசியல் வாதிகளையும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுவதையே விரும்புகின்றனர். இல்லையென வை.எல்.எஸ் ஹமீத் மறுப்பாரா? அதனைத் தானே அமைச்சர் றிஷாதும் கூறினார்? இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் பிரிந்து நிற்பதும் இன்று முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியாமைக்கான பிரதான காரணமாகும்.

குற்றச் சாட்டு – 04

இன்று பெரும்பான்மையில்லாமல் முஸ்லிம்களின் முட்டில் தங்கியிருக்கின்ற அரசு இவர்களை கால் தூசிக்கும் கணக்கெடுக்க தயாராக இல்லை.

பதில்

இவ்வரசு தனது பெரும்பான்மை பலத்தை மிக அதிகமாக நிரூபித்தே வருகிறது. அதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை எனலாம். தற்போதைய அரசுக்கு முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்காமல் போனால் பெரும்பான்மை கிடைக்காது என்பதை வை.எல்.எஸ் ஹமீத் புள்ளி விபரங்களோடு வெளிப்படுத்துவாரா?

இங்கு வை.எல்.எஸ் ஹமீத் தனது பதிலை அமைச்சர் றிஷாதின் கட்சியின் கீழ் உள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றே  நிறுவ வேண்டும். ஏனெனில், அவர் அமைச்சர் றிஷாத் அனைவரையும் ஒன்றுபடுமாறு அழைத்ததையும் விமர்சித்துவிட்டாரல்லவா?

குற்றச் சாட்டு – 05

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார் ,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தது முடிவெடுக்க வேண்டும் என்று அவருக்கு இருந்த உணர்வு கூட அமைச்சர் றிஷாதுக்கில்லையா?

பதில்

அமைச்சர் றிஷாத் கூறியது போன்று அனைவரும் ஒன்றிணைந்தால் தானே அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க முடியும். அனைவரும் ஒன்றிணையாமல் முடிவெடுக்க முடியுமா?  பா.உ உறுப்பினர் மரைக்கார் அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதை விட அமைச்சர் றிஷாத் அரசை விமர்சிப்பதே கணமிக்கது. பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார் அவ்வாறு கூறியதால் இது வரை எதுவும் நடந்த பாடில்லை. அதனை அனைவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் அது  சாத்தியமற்ற விடயம் என்பது யாவரும் அறிந்ததே. இங்கு பா.உ மரைக்கார் அனைவரையும் ஒன்று கூட்டி முடிவெடுக்க தேவையில்லை. அவரது முடிவை அனைவருக்கும் முன் மாதிரி ஆக்கலாமே?

அமைச்சர் றிஷாத் அரசை கடுமையாக விமர்சிக்கும் போது அது மக்களின் மன மாற்றத்துக்கு  காரணமாக அமையும். ஏனைய அரசியல் வாதிகளுக்கு அழுத்தம் ஏற்படும். மரைக்காரின் இவ்வாறான வாய் பேச்சை விட அது கனமானது என்பதில் மறு கருத்தில்லை. இருப்பினும் மரைக்காரின் அப் பேச்சானது அரசின் மீதான வெறுப்பை வெளிக்காட்டுவதால் அவரை பாராட்டாமலும் இருக்க முடியாது. அணியும் கண்ணாடியில் தான் விமர்சனப் பாதை அமைந்திருக்கும்.

அமைச்சர் றிஷாத் இதனையாவது செய்கிறார். ஏனைய அரசியல் வாதிகள் இன்னும் அரசுக்கு கூஜா தூக்கும் வேலையை தானே செய்கிறார்கள். அது ஏன் வை.எல்.எஸ் ஹமீதின் கண்களுக்கு தெரியவில்லை. இவ்வாறான குரல் கொடுப்புக்களை யார் செய்வார்கள் என இலங்கை மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அது இவ்வாறான பேச்சுக்களால் மழுங்கடிக்கப்பட்டு விடும்.

உங்கள் வினாக்களுக்கு பதிலை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இருந்தாலும் அதிக வேலை காரணமாக “நல்லது செய்வதை பாராட்டுங்கள். அதனை மழுங்கடிக்கச் செய்ய வேண்டாம்”  என்ற கோரிக்கையோடு நிறைவு செய்கிறேன்.

துறையூர் ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை