Pages

.

.

Thursday, June 29, 2017

அமைச்சர் ஹக்கீம் நல்லாட்சியிடம் நீதியை எதிர்பார்க்குமளவு, நல்லாட்சி என்ன செய்துள்ளது?

அமைச்சர் ஹக்கீம் பெருநாள் வாழ்த்து செய்தியிலும் தற்போதைய அரசை புகழ்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இகழ்ந்தும் அரசியல் செய்ய வேண்டிய வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் சத்தார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

தற்போதைய அரசானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது பலவாறான குற்றச் சாட்டுக்களை முன் வைத்தே வந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தையும் தற்போதைய காலத்தையும் அவர்கள் குற்றம் சுமத்திய விடயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது குற்றச் சாட்டுக்கள் அதிகரித்துள்ளதே தவிர ஒன்றேனும் குறையவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தை விடவும் முஸ்லிம் சமூகம் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதுவரை எங்குமே நீதி நிலைநாட்டப்பட்டதாகவும் அறிய முடியவில்லை. நீதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் முஸ்லிம்கள் மீதான செயற்பாடுகளை மிகச் சிறிய சம்பவங்களாக கூறியுள்ளனர்.

நான்கு பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடிய ஞானசார தேரர் மிக இலகுவாக நீதி மன்றம் சென்று பிணை எடுத்து சென்றுள்ளார். இந்த பிணை எடுப்பதற்கு நீதித் தாயின் கண்கள் எவ்வாறெல்லாம் கட்டப்பட வேண்டுமோ அத்தனை வழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான அரசானது நீதியை நிலை நாட்டும் என எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ஹக்கீம் கூறியிருப்பதானது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றாகும்.

அமைச்சர் ஹக்கீமுக்கு இவ்வாட்சி நீதியை நிலை நாட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அந்த எதிர்பார்ப்பை வழங்கிய ஒரு விடயத்தையாவது அமைச்சர் ஹக்கீம் முன் வைப்பாரா? எங்களால்  இவ்வாட்சி நீதியை நிலை நாட்டாது என்பதற்கு பல ஆயிரம் ஆதாரங்களை எடுத்துரைக்க முடியும்.

அமைச்சர் ஹக்கீம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை இகழ்ந்தும் தற்போதைய அரசை புகழ்ந்திருப்பதானது, முஸ்லிம் மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தொடர்ந்தும் வில்லனாக காட்டி இவ்வரசை பாதுகாக்க முனைவதை எடுத்து காட்டுகிறது. இதனை பார்க்கின்ற போது தற்போதைய அரசை காப்பாற்ற அமைச்சர் ஹக்கீமுக்கு ஏதேனும் கொந்தராத்து வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமே எழுகிறது.


வை.எல்.எஸ் ஹமீதின் பதில் கட்டுரை – 01 மீதான விமர்சனம்

குற்றச் சாட்டு – 01

எல்லா அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ ஒரு ஊடக குழு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக பெருந்தொகையான இலட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

பதில்

ஒரு அமைச்சருக்கு அரசாங்கத்தால் ஒரு ஊடக குழு வழங்கப்படும். அவர்கள் நேரம், காலம் பார்த்தே வேலை செய்வார்கள். இன்னும் சொல்லப்போனால் வீடியோவும், புகைப்படம் எடுப்பதையுமே அவர்களது தொழிலாக கருதுவர். அவர்களை வைத்துக்கொண்டு ஒரு அமைச்சின் ஊடகப் பிரிவு செயலாற்ற முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை.  இது அமைச்சர் றிஷாத் மாத்திரம் செய்கின்ற வேலையுமல்ல. தற்போது அமைச்சர் றிஷாத் ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் அரசு வழங்கும் ஊடக செயற்பாட்டாளர்களுக்கு மேலதிகமான ஊடக செயற்பாட்டாளர்களின் தேவை உள்ளமை மறுதலிக்க முடியாத உண்மை. இச் சிறு விடயத்தை கூட புரிந்து கொள்ள முடியாமல் வை.எல்.எஸ் ஹமீத் விமர்சித்திருப்பதானது அவரது சிறு பிள்ளைத் தனமான பேச்சை காட்டுக்கிறது.

இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் றிஷாதுக்கு சார்பாக பேசுவோர் அனைவரையும் அவர் பணம் கொடுத்தே பேச வைக்கின்றார் என்ற விடயம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இன்று சமூக வலைத்தளங்களில் அமைச்சர் றிஷாதுக்கு சார்பாக பேசுவோருக்கு எல்லாம் பணம் வழங்குவதானால் மாதமொன்றுக்கு கோடிக்கணக்கில் பணம் தேவை. அது ஒரு அமைச்சருக்கு சாத்தியமற்ற விடயம். வை.எல்.எஸ் ஹமீத் தனது இக் கூற்றினூடாக தனக்கு மிகப் பெரும் எதிர்ப்புக்களை மக்கள் சமூக வலைத்தளங்களில் ஊடாக வழங்கியதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார். இதனை எதிர்ப்பாக வெளிக்காட்டினால் தனது மரியாதை போய் விடும் என்பதால் அவர்களை கூலியாட்களாக சித்தரித்து மக்களை வேறு பக்கம் திசை திருப்ப முயல்கிறார்.

அமைச்சர் றிஷாதுக்கென்று ஒரு கட்சி உள்ளது. அவரோடு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அமைச்சர் றிஷாத் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அமைச்சராக இருப்பதால் பலருக்கு சேவையாற்றி இருப்பார். இவைகளின்  காரணமாக அவரை யாராவது இகழ்ந்தால் அவரை நோக்கி சொல் அம்புகள் வருவது தவிர்க்க முடியாத விடயமாகும். அச் சொல் அம்புகளை எதிர்கொள்ளுமளவு வா.எல்.எஸ் ஹமீதுக்கு மக்கள் ஆதரவு இருந்தால் அவைகள் பெரிதாக தெரியாது. தற்போது வை.எல்.எஸ் ஹமீதை மக்கள் ஆதரிக்காததன் காரணமாக வை.எல்.எஸ் ஹமீதை நோக்கி வரும் அம்புகள் வை.எல்.எஸ் நேரடியாக தாக்குவதால் இவ்வாறான சிந்தனைகள் எழுவது தவிர்க்க முடியாததும் கூட. “அதனால் தான் இப்படியோ” என சிந்திப்பது  தான் மனித சிந்தனையும் கூட.

அமைச்சர் றிஷாத் சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்களுக்கு எல்லாம் பணம் வழங்குகின்றார் என்றால் அதனை வை.எல்.எஸ் ஹமீத் ஆதாரங்களோடு நிரூபிப்பாரா? பெருந்தொகை பணம் என்றால் அது எவ்வளவு? யாருக்கு? வை.எல்.எஸ் ஹமீதுக்கு தெரிந்தால் ஏன் இத்தனை தயக்கம்? இத்தனை காலமும் அமைச்சர் றிஷாதின் கோட்டைக்குள் உறங்கியவருக்கு இது ஒன்றும் பெரிய விடயமுமல்ல. அவ்வாறு எதனையும் நிரூபணம் செய்யாது தண்ணீரில் எழுதி விளையாடுவதன் மர்மம் என்ன?

குற்றச் சாட்டு – 02

அமைச்சர் றிஷாத் அணியினர் தான் தேசியப்பட்டியல் கிடைக்காமையால் தான் இவ்வாறு கூவித் திரிவதாக எவ்வாறு கூற முடியும்?

பதில்

வை.எல்.எஸ் ஹமீதுக்கும் அமைச்சர் றிஷாதுக்கும் இடையில் உள்ள பிரச்சினை தேசியப்பட்டியல் பிரச்சினை என்பதில் எவ்வித சிறு சந்தேகமுமில்லை. இதனை பல விடயங்களை கொண்டு நிறுவல்களை அமைக்கலாம். இன்று  வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதை விமர்சித்து கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும் இன்று நேற்று நடந்தவையல்ல. அவர் கட்சியில் இருக்கும் போது நடந்தவைகளே. அக் காலத்தில் இது தொடர்பில் அவர் எங்கும் பேசியதாக இல்லை. இன்னும் சொல்லப் போனால் இன்று ரங்காவுடன் இணைந்து அமைச்சர் றிஷாதை விமர்சித்து கொண்டிருக்கும் வை.எல்.எஸ் ஹமீத் அன்று ரங்கா ஏன் அமைச்சர் றிஷாதை விமர்சிக்கின்றார் என்பதற்கு நியாயம் கற்பித்தவர். இவ்வாறானவர் திடீர் என அமைச்சர் றிஷாதை விமர்சித்தால் அதன் நோக்கம் வேறு எதுவாக இருக்க முடியும்.

அமைச்சர் றிஷாத் வை.எல்.எஸ் ஹமீத் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மிக நிதானமான கருத்தையே கூறி வந்தார். இல்லை.. இல்லை..  அவர் என்னை இப்படியெல்லாம் கடுமையாக விமர்சித்தார் என வை.எல்.எஸ் ஹமீதால் ஒன்றையேனும் காட்ட முடியாது. வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் மீது முன் வைப்பதெல்லாம் போலி முகநூல்களில் வெளியாகிய செய்திகளைத் தான். போலி முகநூல் செய்திகள் ஆயிரம் வரும். அதற்கெல்லாம் அமைச்சர் றிஷாதை குற்றம் சுமத்த முடியுமா? வை.எல்.எஸ் குற்றம் சுமத்தும் குறித்த முக நூல் பதிவுகள் கூட இவர்கள் இருவருக்குமிடையில் பிரச்சினைகள் தோன்றிய ஆரம்ப காலத்தில் தான் பதவிடப்பட்டிருந்தன. அதன் பிறகு அமைச்சர் றிஷாத் அணியினர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதை இகழ்ந்த போதே தாக்க தொடங்கினர். இன்றைய பதிவில் வை.எல்.எஸ் ஹமீத் நாகரீகம் பற்றி பதிவிட்டிருந்தார். யாரோ விமர்சித்தமைக்காக அமைச்சர் றிஷாதின் தனிப்பட்ட விடயங்களை கூட விமர்சித்த வை.எல்.எஸ் ஹமீத் நாகரீகம் பற்றிப் பேச எந்த தகுதியுமற்றவர். எனவே, இன்று இவர்களுக்கு இடையிலான பிரச்சினையில் அநாகரிகமாக நடந்து கொண்டவர் வை.எல்.எஸ் ஹமீத் தான்.

குற்றச் சாட்டு - 03

முசலி மக்களின் காணி மீட்புக்கு அமைச்சர் றிஷாத் என்ன செய்தார்?

பதில்

இலங்கை நாடே உண்மைகளை அறியும் வண்ணம் பகிரங்க விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்டு விளங்கப்படுத்தினார். இது ஜனாதிபதியையும் சென்றடைந்திருக்கும் பிரதமரையும் சென்றடைந்திருக்கும்.இதுவே இதற்கு போதுமான பதிலாக கருதுகிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு..
மக்கள் உங்களைப்பற்றிப் புரிந்து விட்டார்கள். ஆனால், நீங்கள்தான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் இருக்கும் போது உல்லாசமாக வாழ்ந்து அனுபவித்த பரிதாபத்திற்குரிய சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு இன்று இருப்புக் கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதையே அவரின் கற்பனையான எழுத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றது.
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் தனது எழுத்தில் அரசியல் பற்றி பேசுகின்றார், மார்க்கம்பற்றி பேசுகின்றார். ஏன் நீதி, நியாயம் என்றெல்லாம் தற்போது பேசத் தொடங்கியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தல் நடந்து தேசியப்பட்டியல் நியமனம் வழங்கும் வரை சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் சரியாகவே இருந்தது.
தேசியப்பட்டியல் நியமனத்திற்குப் பிறகு அமைச்சரின் செயல்பாடுகளை வித்தியாசமாகப் சகோதரர் வை எல் எஸ் ஹமீட் பார்ப்பதை மனிதனாகப் படைக்கப்பட்ட ஆறு அறிவுடைய சகலருக்கும் புரியாமல் இருக்க முடியாது.
மர்ஹும் அஷ்ரப் காலத்தில் அன்னாருக்கு செயலாளராக இருந்து செயல்பட்ட போது இந்த  சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் ஒரு வித்தியாசமான மனிதராகத்தான் செயல்பட்டார் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த விடயம்.
இவர் சாய்ந்தமருதை சேர்ந்த ஒருவரை மனைவியாகக் கொண்டிருந்த போதும் பொதுவாகச் சிந்திக்காமல் சாய்ந்தமருது மக்களுக்கு விரோதமாக சாய்ந்தமருதின் எல்லையை மாற்றி அமைப்பதற்கு பாடுபட்டு துரோகம் செய்ததை சாய்ந்தமருது மக்கள் எளிதில் மறந்துவிடப்போவதில்லை.
இப்படிப்பட்டவர் தேசியப்பட்டியலில் எம்.பியாக நியமனம் செய்யப்பட்டிருப்பின் என்ன நடந்திருக்கும் என்பதை சாய்ந்தமருது மக்கள் சிந்தித்துப் பார்க்கிறார்கள். உண்மையில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நல்ல ஒரு முடிவுதான் தேசியப் பட்டியல் இவருக்கு வழங்கப்படாமையாகும் என அச்சந்தர்ப்பத்தில் மக்கள் பேசிக்கொண்டதை மறக்கமுடியாது.
பதவிகள் இருக்கும்போது ஒரு நிலை பதவிகள் இல்லாத போது வேறு ஒரு நிலை என்ற நிலையில் வாழ்ந்து செயலாற்றும் ஒரு வித்தியாசமான மனிதராகத்தான். சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் செயல்பட்டவர்.
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் கூறுவது போல் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு ஆதரவாக முகநூலில் எழுதுபவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் என நினைப்பது எவ்வளவு கீழ்த்தரமான நினைப்பாகும்.
இன்று இளைஞர்கள் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இவர்களில் மக்களுக்காக கடுமையாகப் பாடுபடுபவர் யார்? வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கு வெளிநாட்டில் தனவந்தர்களைத் தேடுவதும் அதற்கு உதவுவதும் யார்? முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது அந்த இடத்திற்கு நேரடியாக விரைந்து செல்பவர் யார்? ரமழான் மாதங்களில் ஏழைகளுக்கு உதவுவது யார்? தொழுகைக்கான பள்ளிகளுக்கு உதவுவது யார்? பாராளுமன்றத்தில் அச்சமில்லாமல் விடயத்தை நேரடியாக எடுத்து வைத்து பேசுபவர் யார்? எனபதை எமது இளைஞர்கள் காண்கிறார்கள். இப்படியாக உதவும் மனிதனாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களை இளைஞர்கள் காண்கிறார்கள். அவருக்கு ஆதரவாக அதிகம் அதிகம் எழுதுகிறார்கள்.
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் தற்போது தெரிவித்துக் கொண்டிருப்பது தங்களின் நெடு நாளைய ஆசை ஒன்று நிறைவேறாத நிலையில் சுயநலத்தின் வெளிப்பாடாகத்தான் தங்களின் முகநூலில் பதிவுகளை இடுவதும் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் என்பது மக்களுக்கு நன்கு புரியும்.
சக்தியில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சியில் மக்கள் செல்வாக்கில்லாத உங்களைப் போன்றவர்களை அழைத்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக வசைபாட வைக்கிறார் என்பது மக்களுக்கு புரியாமலில்லை. நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறீர்கள் என்றாலே மக்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக, மக்கள் செல்வாக்குள்ள மர்ஹும் அஷ்ரப் அவர்களோடு இருந்து மக்களின் நல்ல அபிப்பிராயத்தைப் பெறாத நீங்கள் தற்போது மக்களோடு மக்களாக இருந்து செயல்படும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களோடு உங்களால் ஒரு போதும் மானிடத் தன்மையுடன் செயலாற்ற முடியாது என்பதுதான் உண்மை. அதுதான் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கட்சியிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களைப் பிரித்துள்ளான் என நம்புகின்றோம்.
விடயம் உள்ளவன் அதிகம் பேசமாட்டான் ஆனால், நீங்கள் அதிகம் அதிமாகப் பேசுகின்றீர்கள். மக்கள் உங்களைப்பற்றிப் புரிந்து விட்டார்கள். ஆனால், நீங்கள்தான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை.

அல்ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்
சாய்ந்தமருது


Wednesday, June 28, 2017

அமைச்சர் ஹக்கீமுக்கு நல்லாட்சியில் நீதி நிலை நாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். எனக்கில்லை.. உங்களுக்கு உள்ளதா?

அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் இவ்வரசாங்கத்தின் நீதியின் மீது அவருக்கு நம்பிக்கையுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது பெருநாள் வாழ்த்து செய்தியில்

“ இவ்வாறான சூழ்நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் போலல்லாது, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நீதியும், நியாயமும் நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பில் அல்லாஹ்வின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் இந் நாட்டு முஸ்லிம்களாகிய நாங்கள் இக்கட்டான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்” என குறிப்பிட்டிருந்தார்.

மிக அண்மையில் ஞானசார தேரர் நீதி மன்றம் சென்று அவருக்கு பிணை வழங்கிய விடயமானது இவ்வாட்சியின் நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையை பூரணமாக இல்லாமளாக்கியுள்ளது. இல்லை.. இல்லை.. அதில் நீதித் துறையானது நீதியைத் தான் நிலை நாட்டியுள்ளதென அமைச்சர் ஹக்கீமால் கூற முடியுமா?

பிணை வழங்க வேண்டுமென்றே செயற்பட்ட நீதித் துறை மீது நீதியை நிலை நாட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக, எவ்வாறு அமைச்சர் ஹக்கீமால் கூற முடியும்?

குறித்த வாழ்த்து செய்தியில் முஸ்லிம்கள் இக்கட்டான சூழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவராகவே ஏற்றுக்கொள்கிறார். கடந்த ஆட்சி காலத்தை போலல்லாது இவ்வாட்சியானது  நீதியை நிலை நாட்டும் என்ற நம்பிக்கை இருந்தால் ஏன் இந்த இக்கட்டான சூழ் நிலை? ஏன் இந்த முன்னுக்கு பின் முரணான கருத்து?

இந்த வாழ்த்து செய்தியில் கடந்த அரசாங்கத்தை போலல்லாது இவ்வாட்சியின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என்ற எதிர்ப்பார்ப்பை அமைச்சர் ஹக்கீமுக்கு வழங்கிய ஒரு விடயத்தையாவது கூற முடியுமா? அமைச்சர் றிஷாத் இவ்வரசை படு மோசமாக விமர்சிக்கின்றார். அப்படி இருந்தும் அது போதாதென்று அவர் மீது சில சொல் அம்புகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு சொல் அம்புகளை வீசுபவர்களின் கண்களுக்கு இது புலப்படத்தான் மர்மம் என்ன?

இந்த விடயமானது அமைச்சர் ஹக்கீம் இவ்வாட்சியாளர்களின் கால்களில் விழுந்து கிடக்கின்றார் என்ற விடயத்தை தெளிவாக்குகின்றது. இவைகளை கண்டும் எமது முஸ்லிம் சமூகம் அமைச்சர் ஹக்கீமின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளவில்லையென்றால் அவர்களை போன்ற ஏமாளிகள் யாருமே இருக்க முடியாது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Tuesday, June 27, 2017

அமைச்சர் றிஷாதின் பாராளுமன்ற குரல் கொடுப்புக்களும் அரசுக்கு எதிரான பேச்சுக்களும் சாதாரணமானவையா?

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்களை மட்டம் தட்டும் வகையில் தனது பதிவொன்றை பதிவேற்றியுள்ளதை அவதானிக்க முடிந்தது. அப் பதிவின் ஆரம்பத்தில் நோன்பு காலம் என்பதால் அரசியல் பதிவுகளை தவிர்க்க முயற்சித்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான தாக்கம் அவரது கட்டுப்பாட்டையும் மீற வைத்துள்ளதாக கூறி தனது பதிவை ஆரம்பம் செய்கிறார்.
 

நோன்பு காலத்தில் அரசியல் கதைக்க கூடாது என்ற எந்த கட்டுப்பாடுகளும் இஸ்லாத்தில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அரசியல் இஸ்லாத்தின் ஒரு பகுதியாகும். ஏனைய மார்க்கங்களை விட இஸ்லாத்துக்குள்ள சிறப்பு எந்த விடயமாக இருந்தாலும் உளத் தூய்மையோடு செயல்பட்டால்  அதனூடாக  நன்மையை பெற்றுக்கொள்ள முடியும். உளத் தூய்மை அற்ற செயற்பாடுகளே பாவத்தின் பால் வழி காட்டும். வை.எல்.எஸ் ஹமீத் குறித்த தனது கருத்தின் ஊடாக அவருக்கு இஸ்லாம் பற்றிய போதிய புரிதல் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லது நோன்பு காலத்தில் மனச் சாட்சிக்கு விரோதமான செயற்பாடுகளை செய்து பாவம் சம்பாதிக்க கூடாது என்ற நோக்கம் இருக்க வேண்டும். இவ்விரண்டில் அவர் எதனை ஏற்றுக்கொண்டாலும் அது அவருக்கு இழிவையே கொண்டு சேர்க்கும்.

அவர் முன் வைத்துள்ள குற்றச் சாட்டுக்களை பகுதி பகுதியாக பிரித்து எனது விமர்சனத்தை முன் வைக்கலாம்  என நினைக்கின்றேன். அவரது குற்றச் சாட்டில் எங்கும் அமைச்சர் ரிஷாத்தின் பெயர் குறிப்பிடப்படாதிருப்பினும் இப் பதிவு அவரை நோக்கியது என்பதை சிறு பிள்ளையும் அறியும் என்பதால் அமைச்சர் றிஷாதை நேரடியாக அவர் குறிப்பிட்டார் என கருதி எனது அவரது வினாக்களை அமைச்சர் றிஷாதை நோக்கியதாக அமைத்துள்ளேன். ஒரு நிகழ்வில் ஒரு அமைச்சர் இப்படி பேசினார் என அவரது பெயரை மறைத்து விமர்சனம் செய்வதானால் அவரது குறித்த கருத்து மாத்திரமே விமர்சிக்கப்படல் வேண்டும். அவர் பற்றிய வேறு விடயங்களை விமர்சிப்பதானால் அவர் பெயர் வெளியிடப்பாடல் வேண்டும். ஏனெனில், குறித்த பதிவை அரசியல் தொடர்புடையவர்கள், இவர் தான் என அடையாளம் கண்டு கொண்டாலும் அரசியலுடன் மிகவும் நெருங்கிய தொடர்பற்றவர்கள் யாரை விமர்சிக்கின்றார் என அறிய மாட்டார்கள். வை.எல்.எஸ் ஹமீத் குறித்த விடயத்தையும் கவனத்தில் எடுப்பது சிறப்பாக இருக்கும்.

குற்றச் சாட்டு – 01

அரசின் பங்காளியாக இருக்கின்ற அமைச்சர் றிஷாத் ஏன் ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக கடுமையாக அரசை சாட வேண்டும்?

பதில்:

பதில் வழங்க முன்பு வை.எல்.எஸ் ஹமீத் இங்கு பயன்படுத்தியுள்ள வார்த்தை பிரயோகம் மிகவும் கவனம் செலுத்தக் கூடியது. இங்கு அமைச்சர் றிஷாத் கடுமையாக அரசை  சாடுவதாக  வை.எல்.எஸ் ஹமீத் குறிப்பிடுகிறார். கடுமையாக எனும் வார்த்தை பிரயோகமானது அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்கள் வை.எல்.எஸ் ஹமீதினதும்  உள்ளத்தை தொட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது. அல்லாது போனால் அரசை சாடிப் பேசியுள்ளார் என சாதாரண ஒரு விடயமாக அவர் கூறியிருக்கலாம். அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்கள் முஸ்லிம் மக்களிடையே மிகவும் பலமான பேசு பொருளாகவும் அவரது செல்வாக்கை உயர்த்தும் ஒன்றாகவும்  மாறியுள்ளதால் அந்த செல்வாக்கை தனது இவ்வினவினூடாக உடைக்க முயல்கிறார் என்ற விடயமே இதனூடாக தெளிவாகிறது.

இப்போது விடயத்துக்குள் நுழைவோம். இன்றைய சூழ் நிலையில் தற்போதைய அரசுக்கு முஸ்லிம்களின் வாக்குகளே பிரதானமானதாகும். அமைச்சர் றிஷாத் இவ்வாறு பேசும் போது முஸ்லிம்களின் எதிர்ப்பலைகள் இவ்வரசின் மீது அதிகரிக்க தொடங்கும். மிக விரைவில் தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அமைச்சர் றிஷாதின் இவ்வாறான பேச்சுக்கள் அரசின்  தொடர்ச்சியான இருப்புக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். அமைச்சர் றிஷாத் இவ்வாட்சியாளர்களால் புறக்கணிக்கப்படுவார். இன்றைய நிலையில் அமைச்சர் றிஷாத் தேசிய கட்சிகளுடன் இணைந்து கொண்டு செல்வதே அவரது வளர்ச்சிப் படிகளுக்கு உகந்தது. அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாதே அமைச்சர் றிஷாத் பேசிக்கொண்டிருக்கின்றார். அமைச்சர் றிஷாத் இவ்வரசை சாடிப் பேசுவதன் மூலம் ஏற்படக் கூடிய விளைவுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

அமைச்சர் றிஷாத் அரசின் பங்காளியாக இருந்து கொண்டு இதனை  கூறலாமா என்ற பகுதியானது ஆழமான சிந்திக்க வேண்டிய ஒரு பகுதியாகும். எப்படியானாலும் அரிசானால் சரி. அரசியல் பல வகைப்படும். உடன்பாட்டு அரசியல்,முரண்பாட்டு அரசியல், ஒப்பந்த அரசியல் என அவற்றை பிரிக்கலாம். இதில் இன்று அமைச்சர் றிஷாத் கடைப்பிடித்து கொண்டிருப்பது முரண்பாட்டு அரசியல் பாணியாகும் (வை.எல்.எஸ் ஹமீத் , அமைச்சர் றிஷாத் அரசை கடுமையாக சாடுகிறார் என கூறுவதன் மூலம் இதனை  ). இந்த முரண்பாட்டு அரசியல் பாணியை எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்போரே அதிகம் செய்வர். ஆனால்,அது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தே செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆளும் கட்சியிலும் இருந்தும் செய்யலாம். ஆளும் கட்சிக்குள் அவர்களது பதவிகளில் இருந்து கொண்டு முரண்பாட்டு அரசியல் பாணியை கடைப்பிடிக்க அலாதித் துணிவு வேண்டும். அது பலருக்கு இருப்பதில்லை.

அமைச்சர் றிஷாத் மாத்திரம் எதிர்க்கட்சியில் அமர்வதால் எதனையும் அவரால் சாதிக்க முடியாது. அவர் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசை விமர்சிப்பார். எதிர்க்கட்சி என்றாலே அரசை விமர்சிப்பது அதன் பண்பு. ஆளும் கட்சியில் இருந்து கொண்டு ஒருவர் அரசி விமர்சிப்பாராக இருந்தால் அவர் எதிர்க்கட்சியில் இருந்து என்ன செய்வாரோ அதனையும் செய்கிறார் அதன் பலா பலன்களையும் அனுபவிக்கின்றார். மேலும், ஆளும் கட்சியில் இருந்தவாறு ஆளும் கட்சியை விமர்சிக்கும் போது அவ் விமர்சனம் உண்மை வடிவம் பெறும். இப்பகுதியை இன்னும் நீளமாக அழுத்தலாம் இருந்தாலும் இத்தோடு நிறுத்துகிறேன்.

எனது வினா?

அளுத்கமை கலவரம் இடம்பெற்ற போது வை.எல்.எஸ் ஹமீத், அமைச்சர் றிஷாதுடனேயே இருந்தார். அப்போது வை.எல்.எஸ் ஹமீத், அமைச்சர் றிஷாத் இவ்வரசை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஒரு அறிக்கையாவது விட்டாரா என்பதாகும்.

குற்றச் சாட்டு – 02

பொது மக்களும் அரசுக்குத் தான் ஏசுகிறார்கள். இவர்களும் பொது மக்களிடம் வந்து அரசுக்கு ஏசுவதானால் எதற்கு பொது மக்கள் இவர்களை தெரிவு செய்தார்கள்?

பதில்

அமைச்சர் றிஷாத் பொது மக்களிடம் மாத்திரம் இவ்வரசை விமர்சிக்கவில்லை. பாராளுமன்றத்துக்குள் பொது பல சேனாவின் செயலாளரை கைது செய்ததை நாடகம் என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார். ஒரு பொது மகன் கதைக்கும் விடயங்கள் இவ்வரசின் ஆட்சியாளர்களை சென்றடைவதில்லை.  அதே நேரம் மக்கள் அங்கீகாரம் பெற்ற ஒரு அரசியல் வாதி கதைக்கும் போது அது மிக விரைவாக இவ்வாட்சியாலர்களை சென்றடையும். அதுவே சாதாரண பொது மகன் அரசுக்கு ஏசுவதற்கும் ஒரு மக்கள் அங்கீகாரம் பெற்ற அரசியல் வாதி மக்களிடம் வந்து அரசை விமர்சிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடாகும்.

இவ்வரசை இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து அமைத்திருப்பதால் அமைச்சர் றிஷாத் வெறும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. அதே நேரம் பொது மக்களிடம் சென்று அரசை விமர்சிக்கும் போது பொது மக்கள் அரசின் மீது தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டுவர். இன்றைய ஆட்சியாளர்களின் வெற்றிக்கு முஸ்லிம்களின் வாக்கே பிரதானமானதாகும். இதன் காரணமாக அமைச்சர் றிஷாத் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதை  இவ்வாறான பிரச்சாரமே இப் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதில் அதிகம் தாக்கம் செலுத்தும்.

குற்றச் சாற்று – 03

22 இலட்சம் முஸ்லிம்களையும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கும் அமைச்சர் றிஷாத் இப்போது அரசாங்கத்தில் இல்லையா? அவரது முட்டில் அரசாங்கம் தங்கியிருக்கவில்லையா? அடுத்த தேர்தலில் அவருக்கு அனைவரும் வாக்களித்து முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வோமா?

பதில்

இங்கு தான் வை.எல்.எஸ் ஹமீத் தனது புரிதலின் பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறார். அமைச்சர் றிஷாத் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைக்கின்றாரே தவிர தனது தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைக்கவில்லை. இதனை வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு நினைத்தால் அது அவருடைய தவறாகும்.

அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் ஒன்றுபடுமாறு அழைத்தே வருகிறார். அமைச்சர் ஹக்கீமையும் அழைத்து அது பாரிய பேசு பொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் விடயமானது அவர் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபடுமாறு அழைத்த  இந்த அழைப்பு முஸ்லிம்களுக்கான பொதுவான அழைப்பாகவே பார்க்க வேண்டும் என்பதை கூறிச் செல்கிறது.

தற்போதைய அரசானது இரு பெரும் தேசிய கட்சிகள் இணைத்து ஆட்சியமைத்துள்ளது. 19ம் அரசியல் அமைப்பு சீர் திருத்தம் மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை உட்பட பல விடயங்கள் இவ்வரசு கொண்டுள்ள பாராளுமன்ற பலத்தின் சான்றாகும். அமைச்சர் றிஷாதின் கட்சியில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதனை வைத்துக் கொண்டு அவரால் எதுவுமே செய்ய முடியாது. இல்லை.. இல்லை.. அவரால் இவ் எண்ணிகையை வைத்துக் கொண்டு ஆட்சியை அசைக்க முடியும் என்றால் அது எவ்வாறேன வை.எல்.எஸ் ஹமீத் சற்று தெளிவு படுத்த வேண்டும்.

அமைச்சர் றிஷாத் கூறியது போன்று அனைவரும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இணைந்தால் இவ்வரசை ஓரளவு அசைத்து பார்க்கலாம் என்பதே உண்மையாகும்.  இன்று அமைச்சர் றிஷாத் மாத்திரமல்ல இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசியல் வாதிகளையும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுவதையே விரும்புகின்றனர். இல்லையென வை.எல்.எஸ் ஹமீத் மறுப்பாரா? அதனைத் தானே அமைச்சர் றிஷாதும் கூறினார்? இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் பிரிந்து நிற்பதும் இன்று முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியாமைக்கான பிரதான காரணமாகும்.

குற்றச் சாட்டு – 04

இன்று பெரும்பான்மையில்லாமல் முஸ்லிம்களின் முட்டில் தங்கியிருக்கின்ற அரசு இவர்களை கால் தூசிக்கும் கணக்கெடுக்க தயாராக இல்லை.

பதில்

இவ்வரசு தனது பெரும்பான்மை பலத்தை மிக அதிகமாக நிரூபித்தே வருகிறது. அதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை எனலாம். தற்போதைய அரசுக்கு முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்காமல் போனால் பெரும்பான்மை கிடைக்காது என்பதை வை.எல்.எஸ் ஹமீத் புள்ளி விபரங்களோடு வெளிப்படுத்துவாரா?

இங்கு வை.எல்.எஸ் ஹமீத் தனது பதிலை அமைச்சர் றிஷாதின் கட்சியின் கீழ் உள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றே  நிறுவ வேண்டும். ஏனெனில், அவர் அமைச்சர் றிஷாத் அனைவரையும் ஒன்றுபடுமாறு அழைத்ததையும் விமர்சித்துவிட்டாரல்லவா?

குற்றச் சாட்டு – 05

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார் ,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தது முடிவெடுக்க வேண்டும் என்று அவருக்கு இருந்த உணர்வு கூட அமைச்சர் றிஷாதுக்கில்லையா?

பதில்

அமைச்சர் றிஷாத் கூறியது போன்று அனைவரும் ஒன்றிணைந்தால் தானே அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க முடியும். அனைவரும் ஒன்றிணையாமல் முடிவெடுக்க முடியுமா?  பா.உ உறுப்பினர் மரைக்கார் அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதை விட அமைச்சர் றிஷாத் அரசை விமர்சிப்பதே கணமிக்கது. பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார் அவ்வாறு கூறியதால் இது வரை எதுவும் நடந்த பாடில்லை. அதனை அனைவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் அது  சாத்தியமற்ற விடயம் என்பது யாவரும் அறிந்ததே. இங்கு பா.உ மரைக்கார் அனைவரையும் ஒன்று கூட்டி முடிவெடுக்க தேவையில்லை. அவரது முடிவை அனைவருக்கும் முன் மாதிரி ஆக்கலாமே?

அமைச்சர் றிஷாத் அரசை கடுமையாக விமர்சிக்கும் போது அது மக்களின் மன மாற்றத்துக்கு  காரணமாக அமையும். ஏனைய அரசியல் வாதிகளுக்கு அழுத்தம் ஏற்படும். மரைக்காரின் இவ்வாறான வாய் பேச்சை விட அது கனமானது என்பதில் மறு கருத்தில்லை. இருப்பினும் மரைக்காரின் அப் பேச்சானது அரசின் மீதான வெறுப்பை வெளிக்காட்டுவதால் அவரை பாராட்டாமலும் இருக்க முடியாது. அணியும் கண்ணாடியில் தான் விமர்சனப் பாதை அமைந்திருக்கும்.

அமைச்சர் றிஷாத் இதனையாவது செய்கிறார். ஏனைய அரசியல் வாதிகள் இன்னும் அரசுக்கு கூஜா தூக்கும் வேலையை தானே செய்கிறார்கள். அது ஏன் வை.எல்.எஸ் ஹமீதின் கண்களுக்கு தெரியவில்லை. இவ்வாறான குரல் கொடுப்புக்களை யார் செய்வார்கள் என இலங்கை மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அது இவ்வாறான பேச்சுக்களால் மழுங்கடிக்கப்பட்டு விடும்.

உங்கள் வினாக்களுக்கு பதிலை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இருந்தாலும் அதிக வேலை காரணமாக “நல்லது செய்வதை பாராட்டுங்கள். அதனை மழுங்கடிக்கச் செய்ய வேண்டாம்”  என்ற கோரிக்கையோடு நிறைவு செய்கிறேன்.

துறையூர் ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை

Thursday, June 15, 2017

பொய்யர் காங்கிரஸினால் நாளை நக்குன்னிகளுக்கா இப்தார் நிகழ்வு ...? 

அகிலம் எல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனுக்கு பயந்தவனாய்  எனது உணர்வுகளை இறைவனுக்கு சாட்டி  எனது பேனா முனையை நான்வைத்த நோன்பாடு சுளற்றுகின்றேன்.

பொய்யும் ஏமாற்றுதல் எத்தனை காலம் நிலைக்கும் .....?

காலாகாலமாக பொய்யர் காங்கிரஸினால் ஏமாறுகின்ற  கிழக்கில் உள்ள பொய்யர் காங்கிரஸை ஆதரிக்கின்ற மக்கள் அனைவரும் நாளைய இப்தாரை புறக்கணிப்பது மாத்திரமல்லாமல் கறுப்புக்கொடி ஏந்தி இப்தாருக்கு வருகின்ற பொய்யனை விரட்டி அடிக்கவும் வேண்டும்.

முனாபிக்கிக்கு அடயாளம் காட்டுங்கள் என்றால் நான் கூறும் அடயாளம் பொய்யர் காங்கிரஸின் தலைவனைத்தான் கூறுவேன். அந்த அளவுக்கு கிழக்கானை மடயனாக வைத்துக்கொண்டு கிழக்கானுக்கு தேர்தல் காலங்களில் கள்ள வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுகின்ற பொய்யர் காங்கிரஸின் தலைவனை நம்பி நம்பி மக்கள் ஏமாறுவதைவிட தங்கத்தலைவன் பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களினுடைய அடியொட்டி நடக்கின்ற தங்கமகன் தேசியத் தலைவர் றிஸாட் பதியுதீனை ஆதரிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல்

இறக்காம மாணிக்கமடு சிலை

நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம்

கல்முனை நகர அபிவிருத்தி

சாய்ந்தமருது பிரதேச சபை

மாவடிப்பள்ளி ஜும்மா பள்ளிவாயல்

என்று ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் வழங்கிய வாக்குறுதிகளை இன்னும் ஏறெடுத்தும் பார்க்காமல் ஒவ்வொரு ஊர்களிலும் பித்னாவையும் பொய்யையும் கூறி கூறி மக்களை மடயானாக நினைத்துக்கொண்டு ஏமாற்றி வாக்குப்பிச்சை எடுத்து தானும் தனது குடும்பமும் சுகபோகம் அனுபவிக்கின்ற பொய்யர் காங்கிரஸின் தலைவனை இன்னும் நம்புவதற்கு கிழக்கான் மடயனா என்ற கேள்வி அனைத்து இடங்களிலும் பரவலாக பேசப்படுகின்றது ஒருபுறமிருக்க பாராளுமன்ற ஆசனம் ஒன்றுமே இல்லாமல் கிழக்கிலே சேவை செய்கின்ற தங்கமகன் முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவன் றிஸாட் பதியுதீனை ஆதரிக்க வேண்டும் என்றும் பரவலாக ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற சுலைமானும், தாஹிரும் , இத்ரீசும், ஆயிஸாவும் பேசுகின்றாள்.

நோன்பு வைத்தவன் அதைத்திறப்பதா முஸ்லிம்களின் பிரட்சினை...?

நீ உன் நாவால் சொன்ன அத்தனை பொய்களையும் மக்கள் மண்றின் முன் போய் மண்ணிப்புக்கேட்டு இந்த றமழான் மாதத்தில் பிரயச்சித்தம் தேடு. இன்னும் இன்னும் உண்பின்னால் ஏமாறுகின்ற மடயனாக கிழக்கானை நினைக்காதே....!

ஈச்சம்பழமும் ஒருமுடர் தன்னீரும் கிழக்கானுக்கு போதும் என்று நினைக்காதே....!

அல்லது அடுத்த தேர்தலுக்கு முன் போய் பொய்கள் 2 சொல்லிவிட்டுப் போனால் போதும் என்று நினைக்காதே ....!

இனி அடுத்த முஸ்லிம்களின் ஆனந்த சங்கரி நீதான் என்பதையும் மறவாதே இறைவன் உன்னை புறந்தள்ளும் நாள் வெகுதூரமில்லை.

₹ புறக்கணிப்போம் ₹ புறம்தள்ளுவோம் ₹ பொய்யர் காங்கிரஸை விரட்டி அடிப்போம் ₹



எஸ். எம். இஹ்ஸான் மாவடிப்பள்ளி

Tuesday, June 13, 2017

பதவிகளை கருத்தில் கொள்ளாது முஸ்லிம்களின் பிரச்சனைகளை சர்வதேசம் கொண்டு செல்லும் றிஷாத்

(ஹபீல் எம்.சுஹைர்)

இன்று அமைச்சர் றிஷாதின் உத்தியோக முக நூல் பக்கத்தில் ஒரு செய்தி பதிவிடப்பட்டிருந்தது

“இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் றிஷாத், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்செனிடம் விளக்கமளித்திருந்தார் ”  என்பதே அச் செய்தியாகும்.

இலங்கை அரசு சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்கி இருக்கின்ற நிலையில் இலங்கை முஸ்லிம் தலைவர்கள் இவ்வாறான முன்னெடுப்புக்களை செய்வது இலங்கை நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இருந்தாலும் இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கி கொண்டிருக்கும் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இதனை செய்யும் முஸ்லிம் அரச தலைவர் இலங்கை ஆட்சியாளர்களின் வெறுப்பை சம்பாதிப்பார் என்பதிலும் ஐயமில்லை. தற்போது அமைச்சர் றிஷாத் இவ்வரசின் அமைச்சுப் பதவியில் இருந்து கொண்டு இவ்வாறான செயற்பாடுகள் தனது பதவிகளுக்கு ஆப்பாக அமைந்து விடும் என நன்கு அறிந்திருந்தும் தைரியமாக முன்னெடுக்கும் அவரது சமூக பற்றை பாராட்டாமல் இருக்க முடியாது.

அமைச்சர் றிஷாத் பதவி பட்டங்களை முதன்மையாக கொண்டிருந்தால் இதனை அவர் பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாக பாதுகாத்திருக்க முடியும். இதன் மூலம் இவ்வாட்சியாளர்களுக்கு பயப்படும் கோழை நானல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பல பக்கங்களை கொண்ட அறிக்கையை 2014ம் ஆண்டு ஹசனலி கட்சி சார்பாக அந் நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக இருந்த  நவநீதம் பிள்ளையிடம் ஒப்படைத்திருந்தார்.  இந்த விடயம் இரகசியமாக இருக்கும் என்று நினைத்தே செய்தார். இது பகிரங்கமாக அதனை தான் வழங்கவில்லையென ஹசனலியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் மாட்டிவிட்டு நல்ல பெயர் வாங்கியிருந்தார்.

இதன் மூலம் நான் கூற வருகின்ற விடயமானது அமைச்சர் றிஷாத் இந்த விடயத்தை தனது முக நூல் பக்கத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் அன்று அமைச்சர் ஹக்கீம் அதனை செய்தது தானல்ல என மறுத்து நல்ல பெயர் வாங்கி தனது பதவிகளை பாதுக்காத்தது போன்று செய்ய முடியாது என்பதாகும். இவ்விடயமானது அமைச்சர் றிஷாத் பதவி பட்டங்களுக்கு ஆசைப்பட்டவரல்ல என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

இப்படி ஆட்சியாளர்களுக்கு அஞ்சாத ஒரு தலைவரே எமக்கும் தேவையாகும்.


Sunday, June 11, 2017

அம்பாறையில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த அமைச்சர் றிஷாத்

(ஹபீல் எம்.சுஹைர்)

அம்பாறை மாவட்டத்துக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாத் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம் அலை கடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. இதற்கு முன்பு அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது காணக்கிடைக்காத பல புதுமுக ஆதரவாளர்கள் இம் முறை கலந்து கொண்டமையே இதிலுள்ள விசேடமாகும்.

அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாதின் துணிவுமிக்க பேச்சுக்கள் பலரை கவர்ந்தமையே புதுமுக ஆதரவர்களின் பிரசன்னத்துக்கு காரணம் என அங்கு வருகை தந்திருந்த புது முக ஆதரவாளர்களிடம் பேசக் கிடைத்த போது அறிந்து கொள்ள முடிந்தது. இதன் பிறகு ஊமைத் தலைவர்களின் கட்சிகளை ஆதரிக்காமல் அஷ்ரப் பாணியில் மிக இளம் வயதில் துணிவுமிக்க அரசியல் பயணம் மேற்கொள்ளும் அமைச்சர் றிஷாத்துடன் அவர்கள் தொடர்ந்து பயணிக்க போவதாக உறுதி மொழி வழங்கினர்.

இவரது இரு நாள் விஜயங்களின் போது ஒன்று கூடிய மக்கள் எண்ணிக்கையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவானது பல மடங்கால் அதிகரித்துள்ளதை துல்லியமாக்கியுள்ளது. இதன் பிறகு மு.காவின் ஆதரவாளர்கள் யாருமே நிம்மதியாக தூக்க மாட்டார்கள் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.


Thursday, June 8, 2017

சவூதி நிறுவனம் இலவசமாக வழங்கிய நீர் இணைப்புக்கு இறக்காமம்  முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு பணம் பெற்றதா?

இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய பிரதேச மக்களுக்கான முழுமையான இலவச குடி நீர் இணைப்பை சவூதி அரேபியாவின் நிதாவுல் கைர் நிறுவனம் வழங்கியிருந்தது. இதற்கான நிதியானது அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவர் எஸ்.எச் ஆதம்பாவா மௌலவியினூடாக குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந் நிதி வழங்கலுக்கும் மு.காவுக்குமிடையில்  எந்த தொடர்புமில்லையுமென எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களினூடாக அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்பு செயலாளர் ரகுமத் மன்சூர்  கலந்து கொண்டிருந்தார். இது அரசியல் மயப்படுத்தப்பட்டமை இதிலுள்ள முதற் தவறாகும்.

குறித்த நிகழ்வுகளினூடாக  80 அளவிலானோர் இலவச குடிநீர் இணைப்பை பெற்றிருந்தனர். *இங்கு இலவச குடிநீர் வழங்கப்பட்ட  ஒவ்வொரு குடும்பத்தினரிடையே இருந்தும் தலா 1500 ரூபாய் பணமானது அறவிடப்பட்டுள்ளது.* குறித்த பணத்தை வழங்காவிட்டால் இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்படாது எனவும் அம் மக்களிடம் பகிரங்கமாகவே கூறப்பட்டுள்ளது. அந்த மக்கள் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதால் குறித்த பணத்தை மிகவும் சிரமப்பட்டே வழங்கியுள்ளனர். குறித்த மக்கள் அன்றாடம் உணவு உண்பதற்கே மிகவும் சிரமப்பட்டு வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*இது தான் இலவச குடிநீர் இணைப்பின் இலட்சணையா?* அன்று குறித்த பணத்தை முழுமையாக பயன்படுத்துமளவு செலவுகள் கூட இடம்பெறவில்லையென குறித்த மக்கள் கூறுவதை அவதானிக்க முடிகிறது. இக் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளராக அறிவிப்பு உட்பட அனைத்து விடயங்களுக்கும் மு,காவின் இறக்காம மத்திய குழுவின் நாமமே போடப்பட்டுள்ளது. யாரோ நீர் வழங்குகிறார்கள். மக்களின் பணம் வசூலிக்கப்பட்டு நிகழ்வு இடம்பெறுகிறது. பெயர் பெறுவது மு.காவினரா? இப் பெயர் பெரளுக்காவது  இந்த சிறு பணத்தை செலவிட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யுமளவாவது மு.காவிடம் பணம் இல்லையா?

வசூலிக்கப்பட்ட பணம் மீள வழங்கப்படுமா?



துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Tuesday, June 6, 2017

அமைச்சர் றிஷாதின் உயிரை பணயம் வைக்கும் துணிவுமிக்க பாராளுமன்ற பேச்சுக்கள்

அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் பேசுகின்ற பேச்சுக்களை அவதானிக்கும் போது அதில் எந்த விதமான ஒழிவு மறைவுகளுமின்றி  அரசை நேரடியாக தாக்கி பேசுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கொண்டு வந்த ஒத்தி வைப்பு பிரேரணையில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் குருநாகலில் வைத்து ஞானசார தேரரை கைது செய்வதற்கு பொலீசார் மேற்கொண்ட முயற்சிகள் நாடகம் என நேரடியாகவே கூறி இருந்தார். இன்று ஜெனீவா மனித உரிமைகள் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் ஞானசார தேரரை கைது செய்ய நான்கு போலிஸ் குழுக்களை நியமித்து அரசு பூச்சாண்டி காட்டுவதாக நேரடியாகவே கூறி இருந்தார்.

இந்த பேச்சுக்கள் பேசுவதற்கு அலாதித் துணிவு வேண்டும். இவ்வரசானது ஞானசார தேரரை கைது செய்ய மேற்கொள்ளும் முயற்சிகள் போலியானது என்பது வெளிப்படையாகவே விளங்குகிறது. இன்று ஆசாத் சாலி ஜனாதிபதி கூறினால் தாங்கள் ஞானசார தேரரை கைது செய்ய தயாராக இருப்பதாக பொலிசார் தன்னிடம் கூறியதாக கூறியுள்ளமை இதனை இன்னும் தெளிவாக்குகிறது. இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் யாருமே இப்படி காட்டமான உரையை ஆற்றி இருக்கவில்லை.இரு நாட்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹக்கீம் இனவாத முன்னெடுப்புக்கள் அரசை கவிழ்க்கவே என அரசுக்கு  சார்பான அறிக்கையையே விட்டிருந்தார்.

இப்படியான பேச்சுக்களை அமைச்சர் றிஷாத் தொடர்வாராக இருந்தால் ஆளும் அரசின் இரு தேசிய கட்சிகளின் அதிக எதிர்ப்பை பெறுவார். அமைச்சர் றிஷாத் இவ்வாறு பேசி ஆளும் ஆட்சியாளர்களின் அதிக எதிர்ப்பை மக்களுக்காக சம்பாதித்துள்ளார் என்பதே உண்மை. இன்று அவர் இனவாதிகளிடத்திலும் ஒரு வில்லனாகவே பார்க்கப் டுகிறார்.  குருநாகலில் வைத்து ஞானசார தேரரை கைது செய்ய நாடகம் அரங்கேறிய போது கூட ஞானசார தேரர் அமைச்சர் றிஷாதின் பெயரைக் கூறி தூற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இனவாத ஊடகங்களை எடுத்துக்கொண்டால் நாளாந்தம் அமைச்சர் றிஷாதை இகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பெரும்பான்மை இன மக்களிடத்தில் மாத்திரமல்ல. முஸ்லிம்களின் விடயத்தில் தமிழ் தலைவர்களிடத்திலும் துணிவுடன் பேச தவறவில்லை. இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தடையாக இருப்பதாகவும் நேரடியாக கூறி அவர்களையும் விமர்சித்திருந்தார். துணிவுடன் குரல் கொடுப்பதானது பலவாறான அச்சுறுத்தல்களை தானாக தேடிச் செல்வதற்கு சமனாகும். முஸ்லிம்களுக்காக அனைவருடன் கருத்தியல் முரண்பாடு கொண்டு துணிவுடன் குரல் கொடுத்தால் அமைச்சர் றிஷாதுக்கு அச்சுறுத்தல் வருகின்ற போது உதவப் போவது யார்?

அமைச்சர் றிஷாத் இவ்வாறு மக்களுக்காக பலருடன் முரண்பட்டு துணிவுடன் குரல் கொடுப்பதன் காரணமாக தனது உயிரை பணயம் வைத்துள்ளார் என்பதே உண்மையாகும். அன்று மறைந்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் எவ்வாறு மரணத்தை எதிர்பார்த்து கபன் சீலையோடு திரிந்தாரோ அதே நிலையில் தான் அமைச்சர் றிஷாதும் திரிகிறார். இதுவெல்லாம் எதற்காக? எமது முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட பற்றுக்கல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? அமைச்சர் றிஷாதின் துணிவுமிக்க பேச்சுக்களால் அவர் ஏந்தளவு முஸ்லிம்களின் எதிரிகளிடத்தில் எதிர்ப்பை சம்பாதிக்கின்றாரோ அதை விட அதிகமான ஆதரவை முஸ்லிம்கள் அவருக்கு வழங்க வேண்டும்.

அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்




அட்டாளைச்சேனை தேசியப்பட்டியலில் தவத்துக்கே அதிகம் அக்கறை

( ஹபீல் எம்.சுஹைர் )

அமைச்சர் ஹக்கீமின் பகிரங்கமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் இன்னும் கனவாகவே உள்ளது. அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதில் அமைச்சர் ஹக்கீமுக்கு எந்த விதமான சிறு பிரச்சினைகளும் இல்லாத போதும் ( தற்போது ஹசனலியின் தடையுமில்லை ) இன்னும் அதனை இழுத்தடிப்பு செய்தே வருகிறார்.

இந்த இழுத்தடிப்பின் பின்னால் அமைச்சர் ஹக்கீமுக்கும் சல்மானுக்கும் இடையில் உள்ள மறைமுக ஒப்பந்தம் இருப்பதான கதைகள் இருப்பதோடு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே மு.கா முதலமைச்சரை பெற்றுக்கொள்ளாது போனால் நஸீர் ஹாபிசுக்கு அதனை வழங்கி பாராளுமன்றம் அனுப்பி வைத்தல் போன்ற பல பல விடயங்கள் உள்ளன. இவற்றுக்கு பின்னாலேயே அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் வழங்கப்படும். பாவம் அட்டாளைச்சேனை மக்கள். பல காலமாக முஸ்லிம் காங்கிரசை ஆதரித்து வருகின்ற போதும் பலர் நுகர்ந்த எச்சியைத் தான் உண்ண வேண்டிய நிலைமை.

நான் சொல்லும் இந்த கதை முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த பலரும் அறிந்த கதையே. இருந்த போதிலும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பதில் தவம் குறியாகவே உள்ளார். அட்டாளைச்சேனை மக்கள் தேசியப்பட்டியல் கதையை மறைந்துள்ள நிலையில் தனது சார்பு ஊடகம் ஒன்றினூடாக இன்னும் சில நாட்களிலே அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்ளும் போது அட்டாளைச்சேனை முக்கியஸ்தர்கள் சிலர் அமைச்சர் ஹக்கீமிடம் தேசியப்பட்டியல் பற்றி கேட்கவுள்ளதாக கதைகளை பரப்பி அட்டாளைச்சேனை மக்களிடையே தேசியப்பட்டியல் உணர்வை தூண்டி விடும் வேலையை செய்கிறார். அமைச்சர் ஹக்கீமிடம் நல்ல பிள்ளையாக நடிப்பதில் வல்லவர். இதுவெல்லாம் அமைச்சர் ஹக்கீம் அறியாமல் இருக்குமளவு மடையனுமல்ல.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கிடைத்தால் அது மாகாண அமைச்சர் நசீருக்கு கிடைக்கும். அவரது மாகாண அமைச்சு தனக்கு கிடைக்கும். அதனூடாக விரைவான சேவைகளை செய்து எதிர்வரும் கிழக்கு மாகாண சபையில் தெரிவாவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிப்பதே  தவத்தின் சிந்தனையாகும். தவம் என்ன தான் தவம் இருந்தாலும் அந்த தவத்துக்கு அமைச்சர் ஹக்கீம் ஒரு போதும்  ஆட மாட்டார். தவத்தின் இந்த செயற்பாடு ஒரு வகையில் நோக்கும் போது சரியானதும் கூட. இருந்தாலும் அதனை வெளிப்படையாக கூற முடியாது தவிக்கின்றார்.


ஒரு சமூகத்தின் தலைவனது  நோன்பு நாள் ஒன்று...!

இது நோன்பு மாதம்...அதிகாலை மூன்று மணிக்கு ஸஹருக்கு எழுந்து, நோன்பு வைத்து, பஜ்ர் தொழுது முடித்துக் கொஞ்சம் தூங்கலாமென எண்ணித் தலையைச் சாய்த்தால், தொலைபேசி அலறுகிறது. ''முஸ்லிம் ஒருவரின் கடைக்குத் தீ வைத்து விட்டார்கள்...''

உடனே எழுந்து உடுத்தியிருந்த அதே சாரத்துடன் காரிலேறிக் குறிப்பிட்ட இடம் வந்து, கடைக்குச் சொந்தமானவரிடம் விபரங்கள் கேட்டு, போலீஸ் மா அதிபருக்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் நடந்த அநியாயத்தைப் பற்றி உறக்கப் பேசி நியாயம் கேட்டு, தக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி விட்டு வீட்டுக்குப் போனால், மண் சரிவால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரியிலிருந்து தகவல் வருகிறது. அவசர அவசரமாகக் குளித்து முடித்து, ஆடை மாற்றிக் கொழும்பிலிருந்து இரத்தினபுரி போய் அங்கு நிவாரணப் பணிகளைக் கவனித்துவிட்டு, அதிகாரிகளுக்குக் கட்டளை பிறப்பித்து மீண்டும் கொழும்புக்கு வந்து, அமைச்சுக்குப் போய் அலுவல்களைக் கவனித்து, லுஹர் தொழுது, பாராளுமன்றம் போய் அங்கே, நாட்டில் முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயங்கள் பற்றி யாருக்கும் அஞ்சாமல் நெஞ்சு நிமிர்த்தி , ''நான்கு போலீஸ் குழுக்களை அமைத்து இனவாதியைப் பிடிப்பதாகச் சொல்கிறீர்களே, இன்னும் அவரைப் பிடிக்காமலிருக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா...?'' என ஆக்ரோஷமாகக் குரலெழுப்பி, சீற்றத்துடன் சிங்கமாய்க் கர்ஜித்து வெளியே வந்து, அஸர் தொழுத பின்னர் தமிழ் பேசும்  மக்கள் விடயமாக அந்த வெளிநாட்டுத் தூதுவருடன்  உரையாடி முடிக்கையில்,  சில முக்கியஸ்தர்கள் வந்து 'தோப்பூரில் தொல்பொருள் என்று கூறி தமிழ்,முஸ்லிம்களின் காணிகளை துவேஷம் கொண்ட சிலர் அபகரிக்கப் பார்க்கிறார்கள்.' என்று சொல்ல, உடனடியாகவே அது சம்பந்தமாக உரிய திணைக்களங்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கி நோன்பு திறக்க வீடு வந்தால், வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏழைகளும் தேவையுடையோர் பலரும். அவர்களிடம் அன்பாகப் பேசி நோன்பு திறக்க வைத்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆவன செய்த பின்னர் மக்ரிப் தொழுது முடிக்க, மட்டக்களப்பில் ஒரு சமூக சேவகரின் மரணச் செய்தி வருகிறது. இன்னா லில்லாஹி என்று கூறி, அவசரமாகப் போகும் வழியில் இஷாவைத் தொழுது, அங்கு போய்த் தன்னால் முடிந்த உதவிகளை வழங்கி, ஜனாஸா நல்லடக்கத்திலும் கலந்துவிட்டு, வரும் வழியில் ஸஹர் செய்து வீடு வந்து சுப்ஹு தொழுது, கண்ணை மூடிக் கொஞ்ச நேரம் படுக்கலாமென்று பார்த்தால்....தொலைபேசி ஒலிக்கிறது!

எங்கள் தலைவரே... றிசாத் பதியுதீனே...

காமமும் தூக்கமும் விஸ்கியும் ஓய்வுமாகப்  பலர் தம்மையும்  தலைவர்களெனச் சொல்லிக் கொண்டு வாழும் இந்த உலகில், தனது வாழ்வையே இந்தச் சமூகத்துக்காக அர்ப்பணித்து வாழ்கின்ற உங்களுக்கான நற்கூலியை அந்த இறைவன் நிச்சயம் தருவான். இன்ஷா அல்லாஹ்...!





Monday, June 5, 2017

நுகேகொட பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட்! 

இன்று அதிகாலை நுகேகொட பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய கடை தீ வைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

உரிமையாளரின் சில முன்னேடுப்புகள் காரணமாக பல லச்ச ரூபா பெறுமதியான சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. எனவும் அறியமுடிகின்றது.

இதனை பார்வையிடுவதற்காக சற்றுமுன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பாதியுதீன் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட உரிமையாளரை சந்தித்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

(இனவாத சமூகத்திடமிருந்து உங்களையும், பாதுகாத்து கொள்ளுங்கள்)

அமைச்சருக்காக பிராத்திப்போம்







அமைச்சர் ஹக்கீம் சுவிஸ் லொக்கறை திறந்து காட்டுமாறு சவால் விடுவாரா?

( ஹபீல் எம்.சுஹைர் )

அமைச்சர் ஹக்கீம் பற்றிய சில முக்கிய இரகசிய ஆவணங்கள் மு.காவின் முன்னாள் தவிசாளரிடமிருப்பதான கதைகள் பல காலம் தொட்டு சென்றிகொண்டிருக்கின்ற போதும்  தற்போது முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் அவைகள் தன்னிடமிருப்பதாக ஒத்துக்கொண்டுள்ளார். அவ் ஆவணங்களை தான் மாத்திரம் வைத்திருக்கும் போது தனது மரணத்தோடு அது முடிவுக்கு வந்துவிடும் என்பதால் இன்னும் சிலரது வங்கி லொக்கரில் பாதுக்காக்கப்படுவதாக கூறி இருந்தார்.

தனது வங்கி லோக்கருக்கு முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆவணங்களை அனுப்பியதாக ஒருவர் பகிரங்கமாகவே கூறியுள்ளார். இருந்த போதிலும் அமைச்சர் ஹக்கீம் என்னவோ எல்லாம் பேசுகிறார். இவைகள் பற்றி சிறிதும் வாய் திறந்ததாக தெரியவில்லை.மடியிலே கணம் இல்லை என்றால் பயமெதற்கு ?

அமைச்சர் றிஷாதுக்கு வன்னியிலே பல ஏக்கர் காணிகள் உள்ளதாக யாராவது கூறினால் அல்லது வேறு ஏதாவது விமர்சனங்களை முன் வைத்தால் உடனே அவர், அவர்களை நோக்கி முடிந்தால் நிரூபியுங்கள் என சவால் விடுவார்.  அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அவரது சவால்கள உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏன் இந்த தைரியம் அமைச்சர் ஹக்கீமுக்கில்லை?

இவ்வாறு அவர் சவால் விட்டால் இதன் பிறகு அவர்கள் இது பற்றி கதைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். சமூக வலைத்தளங்கள் அவர் பற்றிச் சென்று கொண்டிருக்கும் எல்லையற்ற விமர்சனங்கள் ஒரு நொடியில் முடிந்து விடும். இப்படி இருந்தும் அமைச்சர் ஹக்கீம் இது பற்றி கதைக்காமல் தவிர்ப்பதன் மூலம் அவருக்கெதிராக முன் வைக்கப்படும் விமர்சனங்களின்  உண்மை தன்மையை உறுதி செய்கிறார் என்றே கூற வேண்டும்.