Pages

.

.

Friday, March 31, 2017

வாழிடம் பறி போகும் நிலையில் மு.காவின் கூத்து

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் செயலால் வடக்கில் வாழ்கின்ற மக்கள் நிம்மதியை தொலைத்து கண்ணீரோடு இருக்கின்றனர்.இச் செயல் வடக்கை மாத்திரம் அதிர வைக்கவில்லை ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களையும் அதிர வைத்துள்ளது.இருப்பினும் மு.கா அதில் கரிசனை கொண்டு செயற்படுவாக அவதானிக்க முடியவில்லை.

இந் நேரத்தில் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற மு.காவின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய கட்சியை கல்முனை மாபெரும் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தற்போது மு.கா மீது அதிகமான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருப்பதால் இவ்வாறான பொதுக் கூட்டங்களை நடாத்தி கட்சி தொடர்பான விளக்கங்களை வழங்குவது மு.காவினருக்கு அவசியமானது.இருந்தாலும் இந் நேரத்தில் அது பொருத்தமானதல்ல.

இக் கூட்டத்தை நடாத்துவதன் மூலம் மு.கா வளர்ச்சியடையுமே தவிர சமூகம் எந்த பயனையும் அடையப் போவதில்லை.தாங்கள் செய்த அபிவிருத்திகளை கையளிப்பதென்றாலும் (இவர்களின் அபிவிருத்தியின் இலட்சணங்களை தனிக் கட்டுரையில் பார்ப்போம்),அதனை இன்றும் செய்யலாம்.நாளையும் செய்யலாம்.அடுத்த மாதமும் செய்யலாம்.ஆனால்,ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு வெளியானால் அதனை இல்லாமலாக்குவது அவ்வளவு இலகுவானதல்ல.இதற்கான போராட்டத்தை இச் சந்தர்ப்பத்தில் தான் மேற்கொள்ள முடியும்.

இன்று நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள பலரும் தயாராகி இருந்தனர்.இன்று ஜும்மா தொழுகையை தொடர்ந்து சாய்ந்தமருதுவில் குறித்த வர்த்தமானி மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கும் முகமாக டெலிகிராப் மூலம் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இன்று அமைச்சர் றிஷாதின் வேண்டுகோளின் பெயரில் ஜனாதிபதி செயலகத்தில் வர்த்தமானி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று அதில் சாதகமானா முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.நேற்றும் இது தொடர்பிலான விடயங்களிலேயே அவர் கவனம் செலுத்தி கொண்டிருந்தார்.

இலங்கை முஸ்லிம்களின் பெரும் பான்மை ஆதரவை கொண்ட கட்சி என பீத்தி திரியும் மு.கா அதனை விடுத்து கல்முனையில் கூட்டம் நடாத்துவது பொருத்தமானதல்ல.தற்போது மு.காவிற்கு எதிர்ப்புகள் அதிகமாக இருப்பதால் இது போன்ற கூட்டங்களை நடாத்த வாரக் கணக்கில் திட்டமிட வேண்டும்.தங்களது நேரங்களை தற்போது இதற்கு செலவிடுவது பொருத்தமானதல்ல.இந் நேரத்தில் இக் கூட்டத்தை வன்னியில் நடாத்தி இருந்தாலும் சிறப்பாக இருந்திருக்கும்.குறைந்தது இக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாதையும்,பஷீரையும் கழுவுவதை விடுத்து (யாருமே ஏற்கும் மனோ நிலையில் இல்லை) வர்த்தமானி தொடர்பில் கதைக்கின்றார்களா என்றாவது பார்ப்போம்.இவற்றிலிருந்து இலங்கை முஸ்லிம்களின் உண்மையான தலைவன் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதனைப் பற்று அமைச்சர் ஹக்கீம் கதைத்து ஜனாதிபதியினதும் தனக்கு வாக்களிக்கும் பேருன மக்களின் ஆதரவையும் இழந்து கொள்ள மாட்டார்.இருந்தாலும் அமைச்சர் ஹக்கீம் இது தொடர்பில் காத்திரமாக கதைக்காது போனாலும் வேறு நபார்களை வைத்து இதனை கையாள சிந்தித்ததாகவும் தெரியவில்லை.இம் முறை வன்னி மக்கள் மு.காவை வெட்டுப் புள்ளியை கூட நெருங்க முடியாதளவு வாக்களிக்காததால் அதற்கான பழி வாங்கலாகவும் இருக்கலாம்.


Wednesday, March 29, 2017

அரசியலுக்காக முஸ்லிம்களை பேரின வாதிகளிடம் அடகு வைக்கும் மு.காவின் போராளிகள்..!

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)


நேற்று தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தக வெளியீடு தொடர்பில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.இவருடன்  பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்தீனும் சென்றிருந்தார்.இதனை மு.காவின் போராளிகள் அரசியலாக்கி சமூக வலைத் தளங்களில் பகிர்வதை அவதானிக்க முடிகிறது.

“பஷீருடன் சிராஸ் நூர்தீன் சென்றாராம்.சிராஸ் நூர்தீன் அமைச்சர் றிஷாதின் ஆதரவாளராம்.அமைச்சர் றிஷாதின் பின்னால் பஷீர் உள்ளாராம்.”இவர்கள் ஒரு வழக்கறிஞரின் பண்புகளை முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.அவர்கள் பணம் கொடுத்தால் யாருக்கும் ஆதரவாக பேசுவார்கள்.சிராஸ் நூர்தீன் என்பவர் அமைச்சர் றிஷாதுடன் உள்ளவர் என இவர்கள் எதை வைத்து கூறுகிறார்கள்.அமைச்சர் றிஷாதின் சட்ட ரீதியான விடயங்களை வழக்கறிஞர் ருஸ்தி ஹபீபே மேற்கொண்டு வருகிறார்.அமைச்சர் றிஷாத்துடன் அரசியல் தொடர்பான எந்த விடயங்களிலும்  சிராஸ் நூர்தீன் தொடர்புமில்லை.இப்படி இருக்கையில் இவரை அமைச்சர் றிஷாதுடன் தொடர்பு படுத்தி எந்த அடிப்படையில் கூற முடியும்.

இவர்கள் கூறுவதை உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.மாற்றியும் சிந்திக்க வேண்டுமல்லவா? இன்று இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பான பல முக்கியமான வழக்குகளில் தனது உயிரை பணயம் வைத்து போராடிக்கொண்டிருப்பவர் தான் வழக்கறிஞர் சிராஸ் நூர்தீன்.இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கின்றேன்.இவர் அமைச்சர் றிஷாதுடன் அரசியல் தொடர்பில் உள்ளவராக இருந்தால் சமூக ரீதியான வழக்குகளில் இவரின் பங்களிப்பில் அமைச்சர் றிஷாதுக்கும் பங்குண்டல்லவா? அப்படியாக இருந்தால் அமைச்சர் றிஷாத் சமூக ரீதியாக மக்களிடம் பிரபல்யம் தேடாது செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார் என்பதே இங்கு மிக முக்கியமான விடயம்.மு.கா போராளிகளின் இவ்வாறான செயல்கள் மூலம் அது வெளிக்கொணரப்படுகிறது.

இன்று சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் இலங்கை முஸ்லிம்களின் முக்கியமான பல வழக்குகளை எதிர்கொண்டு வருவதால்,இந் நேரத்தில் அவருக்கு அரசியல் சாயம் பூசுவது பேரின மக்களிடத்தில் வேறு செய்தியை கொண்டு சேர்த்து விடும்.அமைச்சர் றிஷாதுக்கு எதிராக பேரின வாதிகளை திருப்புவதில் சிலர் பகிரத பிரயத்தனம் அன்று தொடக்கம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.மு.காவின் போராளிகள் ஒரு விடயத்தை கூறும் போது அதில் உள்ள சாதக பாதங்களை அறிந்து கொள்வது மிக முக்கியமானது.வைக்கோல் பட்டறையில் உள்ள நாயைப் போல் உண்பதுமில்லை உண்ண விடுவதுமில்லை என்ற வகையில் செயற்பட வேண்டாம்.
ஏவல் நாய்களே மின்னலில் குரைக்கின்றன

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

கடந்த மின்னல் நிகழ்ச்சியில் அமைச்சர் றிஷாதிற்கு எதிரானவர்களை அழைத்து வந்த ரங்கா அவர்களோடு தானும் சேர்ந்து அமைச்சர் றிஷாதை கழுவி ஊத்தி இருந்தார்.இதில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு நோக்கங்கள் இருக்கலாம்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்காவிற்கும் அமைச்சர் றிஷாத்திற்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் இருப்பது யாவரும் அறிந்ததே! இன்னும் சொல்லப் போனால் ஒரு தடவை இவர்கள் இருவருக்குமிடையில் பிரச்சினை முற்றி கை கலப்பிலும் நிறைவுற்றது.நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாராம் ரங்கா (இது உண்மைச் சம்பவம்).இந்த அடி எத்தகையது? இதன் தாக்கம் என்ன? என்பதை வை.எல்.எஸ் ஹமீத் நன்கே அறிவார்.தான் அடி வாங்கியதை வெளியில் சொன்னால் கேவலம் என்பதால் அடிபட்ட பட்ட பாம்பு பழி தீர்க்க படம் எடுக்கின்றது.அவர்களோடு சேர்ந்து இன்னும் சிலரும் ஆடுகின்றனர்.

இவர்கள் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் ஆடுவது தெளிவானது.இதனை அறிய நாம் ஒரு விடயத்தை எடுத்து நோக்கலாம் என்று நினைக்கின்றேன்.அமைச்சர் ஹக்கீமின் வாழ்வில் இடம்பெற்ற தனிப்பட்ட விடயங்களில் ஒன்றான குமாரி விவகாரத்தை அமைச்சர் றிஷாத் சோடனை செய்தது போன்று மக்கள் மத்தியில் இவர்கள் காட்ட முனைந்ததை இந் நிகழ்வினூடாக அவதானிக்க முடிந்தது.தற்காலத்தில் அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவத்தை குமாரி குரே விவகாரம் அசைத்துக்கொண்டிருக்கின்றது.இது தொடர்பில் தெளிவான ஆதராங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போது இச் சம்பவத்தை எவ்வாறு சோடனை செய்யப்பட்ட சம்பவமாக கூற முடியும்.இச் சம்பவத்தை அமைச்சர் ஹக்கீம் உயர்பீடக் கூட்டத்தில் கூட ஏற்றுக்கொண்டிருந்தார்.செய்தவர் ஏற்றுக்கொண்டாலும் ரங்காவும் அவரது ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்ள மறுப்பதே இது என்ன மாதிரியான நிகழ்ச்சி நிரல் என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

அமைச்சர் றிஷாதுடன் வை.எல்.எஸ் ஹமீத் ஒட்டி உறவாடிய போது மின்னல் ரங்காவை மின்னலில் வைத்தே விளாசி தள்ளி இருந்தார்.இப்போது கட்டிப் பிரள்கின்றனர்.ரங்கா ஏன் அமைச்சர் றிஷாதிற்கு எதிராக கதைக்கின்றார் என்பதற்கு வை.எல்.எஸ் ஹமீத் அந் நிகழ்வில்  நன்றாகவே அதில் பதில் அளித்திருந்தார்.இவ்வாறு இருக்கையில் தற்போது இவருடன் கை கோர்த்து அமைச்சர் றிஷாதிற்கு எதிராக செயற்படுவது போன்று கேவலம் வேறு எதுவுமல்ல.எலும்பில்லா நாக்கு என்பதற்காக விரும்பிய திசையில் எல்லாம் மாற்றி கதைப்பது சிறந்ததா? அமைச்சர் றிஷாதிற்கு எதிராக செயற்படுகிறார் என்பதற்காக மாத்திரம் இவரை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை.ஒரு தடவை ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் ரங்காவை முஸ்லிம்களின் விரோதியாக பகிரங்கமாகவே விமர்சித்திருந்தது.ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைச்சர் றிஷாதின் அணியல்ல என்பதை அடித்துக் கூறலாம்.இவர்கள் ஏன் எதிர்த்தார்கள்? இன்று இவர்கள் போன்ற சுயநல வாதிகள் ரங்காவுடன் கை கோர்த்து செயற்படுவதன் காரணமாகவே இந் நிகழ்வு பிரபல்யமாகிறது.நாளை இந்த பிரபல்யம் முஸ்லிகளுக்கு எதிராக திரும்பும்.அப்போது இவர்களைப் போன்றவர்கள் தான் வகை கூற வேண்டும்.


Monday, March 27, 2017

வை.எல்.எஸ் ஹமீதிற்கு இப்றாஹீம் மன்சூரின் திறந்த மடல்

(இப்ஹிறாம் மன்சூர்:கிண்ணியா)

நேற்று இடம்பெற்ற ரங்காவின் மின்னல் நிகழ்ச்சியில் எனது பெயரை கூறி,என்னை நாட்டிற்கே அறிமுகம் செய்து வைத்தமைக்காக முதற் கண் இவ்விடத்தில் நன்றி கூறி,எனது உங்களுக்கான மடலை ஆரம்பம் செய்யலாம் என நினைக்கின்றேன்.நான் எப்போதும் உங்கள் கருத்தோடு மோத முற்பட்டேனே தவிர உங்கள் தனிப்பட்ட விடயங்களில் கை வைக்க விரும்பியதில்லை.இதன் காரணமாக என்னை நீங்கள் ஒரு பகிரங்க நிகழ்வில் விமர்சித்தமையை  எனது எழுத்திற்கான ஒரு அங்கீகாரமாக கருதுகிறேன் (பலர் உங்களுக்கு மறுப்பு அறிக்கைகள் எழுதுகின்ற போதும் என்னை மாத்திரம் கூறினீர்களே!).

நான் அமைச்சர் றிஷாத்தினால் பணம்,வீடு கொடுத்து அவரின் கருத்துக்களை எழுத்து வடிவில் கொண்டுவர இயக்கப்படும் ஒருவனாக கூறி இருந்தீர்கள்.இதனை நிரூபிப்பீர்களா? அமைச்சர் றிஷாதிடம் மீடியா அணியினர் உள்ளனர்.அவர் கூறுவதை அவர்கள் செவ்வெனே எழுதி கொடுக்கக் கூடியவர்கள் என்பது உங்களுக்கும் தெரியும்.அவர் ஏன் இன்னுமொருவரை வைத்து எழுத வேண்டும்? இப்றாஹிம் மன்சூர் ஆகிய நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன்.நான்,அமைச்சர் றிஷாத் என்னை எழுதுமாறு பணித்து  இப் பெயரில் எதனையும் எழுதவில்லை என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய தயாராக உள்ளேன்.அப்படி நான் செய்தால்,நீங்கள் உங்கள் அரசியலை நிறுத்துவதோடு அமைச்சர் மீது மீதான இட்டுக்கட்டலுக்கு மன்னிப்பு கோர வேண்டும்.நீங்கள் இதற்கு ஏற்றுக்கொண்டால் அடுத்த நிகழ்வுக்குள் நான் யார் என்பதை வெளிப்படுத்துவேன்.அடுத்த நிகழ்வுக்கும் நீங்க தானாமே வாறிங்க.

நான் எழுதுவது உங்களுக்கு பாதிப்பாக அமையுமாக இருந்தால்,அதனை எதிர்த்து நீங்கள் எழுதியிருக்கலாம்.அதைவிட்டு விட்டு ஆள் தேடி அலைவது உங்கள் இயலாமையை புடம் போட்டுக் காட்டுகிறது.அமைச்சர் றிஷாத் பேக் முக நூல்கள் மூலம் எழுதுவதாக கூறியிருந்தீர்கள்.இந்த குற்றச் சாட்டு இன்று நேற்று வந்ததல்ல.நீங்கள் அக் கட்சியின் செயலாளராக இருக்கும் போதே அவர் மீதிருந்த குற்றச் சாட்டாகும்.இதனை அனைவரும் (இதனை வாசிப்பவர்கள்) ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்.குறித்த நிகழ்ச்சியில் ரங்கா அவர்களை பார்த்து “இது உங்களுக்கு தெரியும் தானே! நீங்கள் இருக்கும் போது அவர் பேக் முக நூல் பாவித்தார் தானே!” அவர் செய்தார் என கூறுகின்றமை தெளிவாக்குகிறது.நீங்கள் குறித்த நிகழ்வில் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பிறகு அமைச்சர் றிஷாத்தின் பேக் முக நூலாட்டம் ஆரம்பித்ததாக கூறியிருந்தீர்கள்.இவை இரண்டையும் நோக்கும் போது அமைச்சர் றிஷாத் மீது கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு போலி முகநூல்களை வைத்து எழுதுகின்றார் என்ற குற்றச் சாட்டு பொய்யானது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.இது அமைச்சர் றிஷாத் மீது வைக்கப்பட்ட போலிக் குற்றச் சாட்டுத் தானே! (இவ்வாறு தான் ,அவர் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் போலியானதே என்பது வேறு விடயம்)

உண்மை என்ன? இவர் கட்சி மாறிய பிறகு சமூக வலைத் தளங்களில் வை.எல்.எஸ் ஹமீதிற்கான எதிர்ப்புக்கள் வலுவடைந்தன.இதனை பார்த்த வை.எல்.எஸ் ஹமீத்,அமைச்சர் றிஷாத் தனக்கு எதிராக ஆள் வைத்து செய்கிறாரோ என சிந்தித்து இந்த முடிவிற்கு வந்திருக்கலாம்.அவ்வாறில்லை என்றால் இவர் இவர் சம்பளம் கொடுத்து அமைச்சர் றிஷாதால் இயக்கப்படுகிறார் என அடித்து கூற வேண்டும்.அவ்வாறு அவரால் கூற முடியாது.நீங்கள் அக் கட்சியில் இருந்த போது அவரின் மதிப்பை அறியவில்லை.அதனால் அது பெரிதாக உங்களுக்கு தெரியவில்லை.தற்போது நீங்கள் எதிராக இருப்பதால் இந்த சிந்தனை தோன்றுவதில் தவறில்லை.இதனூடாக அமைச்சர் சமூக வலைத் தளங்களில் (வாக்களிக்கும் மக்கள் இவர்கள் தான்) அதிக நன் மதிப்பை பெற்றவர் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.இங்கு நான் நிறுவ வரும் இன்னுமொரு விடயம் “வை.எல்.எஸ் ஹமீத் பேக் முகநூலானது கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பிறகு வந்ததாக கூறுகிறார்.இக் குற்றச் சாட்டு அதற்கு முன்பே அவர் மீது இருந்தது”.இவ்விரண்டையும் வைத்து நோக்கினால் இது போலியான குற்றச் சாட்டென்பதை சாதாரணமாக அறிந்து கொள்ளலாம்.

அமைச்சர் றிஷாத் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமைச்சராக உள்ளார்.அவர் பலருக்கு உதவி செய்திருப்பார்.அவர்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள்.இம்முறை அவரின் கட்சி இலட்சக்கணக்கான வாக்கை பெற்றிருந்தது.அவர்கள் நீங்கள் ஏதாவது கூறினால் அவர்களது கட்சியையும்,தலைமையையும் பாதுக்காக்க கொதித்தெழுவார்கள்.இதனை தவறாக கூறுவது அறிவாளியின் பேச்சல்ல.இதன் காரணமாக அவர்களை பணத்திற்கு அடிமையானவர்களாக கூற முடியுமா? உங்கள் கண்களுக்கு அமைச்சர் ஹக்கீம் முக நூல் வசை பாடுபவர்களை நுவரெலியாவிற்கு சுற்றுலா அழைத்து சென்றமை கண்ணுக்கு தெரியவில்லையா? அவரின் முந்தானையை பிடித்துக் கொண்டு அவரின் பின்னால் எங்கும்  செல்வது உங்களுக்கு தெரியவில்லையா? பலரையும் ரிலீஸ் கொடுத்து எழுத வைப்பது தெரியவில்லையா? இது எப்படி தெரியும்.இவர்களுக்கு நீங்கள் தானாமே வழிகாட்டியாக செயற்படுகிறீர்களாம்? அப்படி எங்கும் அமைச்சர் றிஷாத் செய்ததற்கு ஆதாரமில்லை.எனது இப் பெயரிலேயே இரண்டு போலி முக நூல்கள் உள்ளன.இதனை எங்கு சொல்வது.நான் ஒரு விமர்சன ரீதியாகவே இதனை இயக்கி கொண்டிருக்கின்றேன்.அவர்கள் மிகவும் கீழ் தரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இறுதியாக சொல்கிறேன்,உங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.நீங்கள் அரசியல் செய்ய விரும்பினால் அமைச்சர் றிஷாதை இகழ்ந்து செய்யாமல் வேறு வழியில் செல்லுங்கள்.நீங்கள் நினைப்பவர் இப்றாஹீம் மன்சூர் அல்ல என்பதை மீண்டும் அழுத்தமாக கூறிக் கொள்கிறேன்.வை.எல்.எஸ் ஹமீத் என்னை எழுதாமல் தடுக்க நீர் எடுக்கும் முயற்சி என்னிடம் செல்லாது.இனித் தான்,நான் உங்களுக்கு எதிராக எழுதவே ஆரம்பிக்கப் போகிறேன்.


Sunday, March 26, 2017


வடபுல முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் விளையாடும் மாற்றுக்கட்சி பிரதிநிதிகள்; இனியாவது சிந்திப்பார்களா?

ஒலுவில் அஸ்ஹர்.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் சுயலாபங்களை மட்டுமே தங்கள் குறிக்கோள்களாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஹுனைஸ் பாரூக், மஸ்தான், புத்தளம் பாயிஸ், அஸ்மின், நியாஸ் ஆகிய மக்களின் பிரதிநிதிகள் என்று வார்த்தைகளில் மட்டுமே பேசுகின்ற இவர்களால் வில்பத்து விடயத்தில் பகிரங்கமாக குரல் கொடுக்க முடியாமல் போனது ஏன்?

இந்த வடபுல சமூகத்தின் உரிமைகளில் இவர்கள் இன்றும் விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அந்த சமூகத்தின் பூர்வீக நிலங்கள், வில்பத்துக்கு சொந்தமான பிரதேசங்களாக இன்று வர்த்தமானியில் பிரகடனம் செய்வதற்கு துணை நின்றவர்கள் இந்த மாற்றுக்கட்சி சுயநலவாதிகளே! என்பதில் ஐயமில்லை.

அதோடு நின்று விடாமல் "வில்பத்து காட்டை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்" என்றும்

"தேர்தல் ஒன்றுக்கான அறிகுறியாக வில்பத்து பிரச்சினை" என்றும்

"அமைச்சர் றிஷாத் வில்பத்து பிரச்சினையை தேர்தலுக்காக தூக்கி பிடிக்கின்றார்." என்றும்
 
தலைப்புகளிட்டு முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் சிலர் ஆக்கங்களை எழுதி அமைச்சர் றிஷாத்தின் மனதை மட்டுமல்ல ஒட்டுமொத்த வடபுல முஸ்லிம் சமூகத்தின் மனங்களையும் புண்படுத்திய ஆதாரங்கள் எல்லோரிடமும் இருக்கின்றன.

எத்தனை தடவை தேசிய தலைவர், அமைச்சர் றிஷாத் பதியுதீன் இந்த வில்பத்து விடயம் தொடர்பாக உங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதற்காக குரல் கொடுங்கள் என்று மண்டியிட்டார். ஆனால் நீங்கள் இது றிஷாத்தின் தனிப்பட்ட பிரச்சினை என ஒதுங்கிக் கொண்டீர்கள். ஊமையர்களாக வாய்மூடி இருந்தீர்கள்.

இனவாதிகள் படையெடுத்து வில்பத்துக்கு சென்ற போது களத்துக்கு சென்று பதில் கொடுத்தீர்களா? அல்லது ஊடகங்களிலாவது ஒரு வார்த்தை பேசினீர்களா? இல்லவே இல்லை.

"ஹிரு"எனும் இனவாதிகளின் தொலைக்காட்சி அமைச்சர் றிஷாத்தை இனவாதி ஆனந்த சாகரவுடன் விவாதத்துக்கு வருமாறு அழைத்தது.

தனக்கு சிங்கள மொழியிலே பரிச்சயம் இல்லை என்றாலும் அந்த இனவாதியுடன் சமூகத்தின் விடுதலைக்குரலாக வில்பத்துவை விளக்கி விவாதித்தார்.

அந்த தேரரிடமும் றிஷாத் அமைச்சரைப்பற்றி அபாண்டங்களை சொல்லிக்கொடுத்து, வில்பத்து உங்கள் வனப்பிரதேசம் என வாதிடுங்கள் என்று  உசுப்பேத்திக்கொடுத்து, கடைசியாக இறை வேதம் அல்குர்ஆனையும் காபிரின் கையில் கொடுத்து இதில் அவரை சத்தியம் செய்ய சொல்லுங்கள் என்று சண்டாளன் வேலை பார்த்தவர்களும் நீங்கள்தான். நாங்கள் அறியாமலில்லை.

இனியும் நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள்?

இவைகள் அமைச்சர் றிஷாத்தின் தனிப்பட்ட பிரச்சினைகள் என்று சொல்லி வடபுல முஸ்லிம்களின் மிஞ்சியுள்ள நிலங்களையும், உரிமைகளையும் விட்டுக் கொடுக்கப் போகின்றீர்களா?

எனவே தனது அதிகமான கால நேரங்களை அன்றிலிருந்து இன்று வரை வடபுல முஸ்லிம் சமூகத்தின் மீள் குடியேற்றம், அபிவிருத்தி, அபிலாசைகளுக்காக அர்ப்பணித்து போராடிக் கொண்டிருக்கும் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன் அவர்களின் கரத்தை பலப்படுத்துங்கள்.

அரசியல் கட்சி கொள்கைகளுக்கு அப்பால் சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு இணைந்து செயற்படுங்கள்.
ஒன்றுபட்டு குரல் கொடுங்கள்!

இனியாவது அமைச்சர் றிஷாத்தின் உண்மையான சமூக போராட்டங்களை, யதார்த்தங்களை விளங்கி, ஓரணியில் நின்று போராடுவோம் வாருங்கள்!





நள்ளிரவு 12 மணிவரை தாருஸ்ஸலாமில் நடந்தது என்ன?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கிழக்கான் அஹமட் மன்சில்

கடந்த புதன்கிழமை(2017.03.22)தாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்ரஸின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டு என்ன விடயம் சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது என அரசியல் அரங்குகளில் கேள்விக் குறியாகவே இருந்து.ஆனாலும் அதற்கான விடை கிடைக்கப் பெற்றுள்ளது.ஏன் கூட்டம் கூட்டப்பட்டது?எதற்காக கூட்டப்பட்டது?என்ன பேசப்பட்டது? போன்ற விடயங்களை இந்த கட்டுரையை முழுமையாக வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வழமை போன்று தாருஸ்ஸலாமில் அவசர கூட்டம் இடம்பெற இருப்பதாகவும் சில தீர்மானங்கள் மேற் கொள்ள இருப்பதாகவும் பாராளுமன்ற,மாகாணசபை மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் ஒன்று கூட வேண்டும் என்ற அலைபேசி அழைப்பிற்கமைய கொழும்பு வொக்ஸல் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கட்டிடத்தில் கடந்த புதன்கிழமை பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்று கூடி இருந்தனர்.பாராளுமன்ற,மாகாணசபை உறுப்பினர்களோடு வழமைக்கு மாறாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் பங்குபற்றி இருந்தார்.

அன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு அண்மைக்காலங்களாக மு.கா தலைவருக்கு எதிராக எழுந்திருக்கும் மது,மாது,பணப்பரிமாற்றல் சம்பந்தமாக ஊடகங்களுக்கு தலைவரை பற்றி எதிராக வரும் செய்திகளுக்கு மாற்றாக சாதகமான அறிக்கைகள் இட வேண்டும் என்பதாகும்.தலைவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் சம்பந்தமாக ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களையும்,அபிப்ராயங்களையும் முன்வைத்தார்கள்.

தலைவருக்கு எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அறிக்கை இட வேண்டும் என கூறப்பட்டதும் ஒரு சில மாகாணசபை மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் குற்றம் சுமத்தப்படுகின்ற விடயங்கள் உண்மையாக இருக்கும் போது மனச்சாட்சிக்கு எதிராக எவ்வாறு எதிர்ப்பு அறிக்கை இட முடியும் என தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர் அறிக்கை இட வேண்டும் என கூறியவரை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

அங்கு விஷேட உரையாற்றிய கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்,தலைவருக்கு எதிராக ஊடகங்களில் வரும் செய்திகள் சம்பந்தமாக  அனைத்து உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும்.தலைவரை பிழையாக சித்தரிக்கும் செய்திகளுக்கு சாதகமான கருத்தறிக்கையை ஒவ்வொரு உறுப்பினரும் தெரிவிக்க வேண்டும்.தலைவருக்கு எதிராக வரும் செய்திகளுக்கு எதிர்ப்பு அறிக்கை விடாத பட்சத்தில் பாராளுமன்ற,மாகாணசபை உறுப்பினர்களுக்கான மக்கள் அங்கீகாரம் எதிர்காலத்தில் கிடைக்காமல் போய்விடும்.எனவே அனைவரும் துரிதமாக,
 செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் உரையை கேட்ட சில முக்கியமான உறுப்பினர்கள் நீங்கள் முதலில் தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைக்கு எதிராக கருத்து தெரிவியுங்கள்,தலைவருக்கு எதிராக வரும் செய்திகளுக்கு எதிர்ப்பு எழுதுங்கள்.நீங்களே வாய்மூடி மெளனியாக இருக்கின்றீர்.தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டு உண்மை என்பதனாலா நீங்கள் மெளனியாகி விட்டீர் என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அன்றைய தினம் இவற்றிக்கு மேலதிகமாக முன்னாள் செயலாளர் ஹசனலி மற்றும் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் மு.காவிற்கு எதிராக செயற்படும் விடயமும் எடுத்து ஆராயப்பட்டிருந்தது.இந்த விடயம் சம்பந்தமாக கருத்து தெரிவித்த மு.கா உறுப்பினர்கள் முன்னாள் தவிசாளரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனவும்,முன்னாள் செயலாளர் ஹசனலி உண்மையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கான நிவாரணத்தை விரைவில் வழங்க வேண்டும் எனவும் சபைக்கு ஒப்புவித்தனர்.ஹசனலிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறிய கருத்திற்கு ஒரு மாகாணசபை உறுப்பினர் மனம் நொந்ததாகவும்,ஹசனலி நிவாரணம் பெறும் அளவிற்கு சென்றுவிட்டாரா?இது அவருடைய கட்சி.இவர்கள் ஹசனலிக்கு நிவாரணம் வழங்கும் அளவு ஹசனலி ஒன்றும் குறைந்தவர் அல்ல என பக்கத்தில் இருந்த உயர்பீட உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

குறித்த கூட்டத்திற்கு சென்றிருந்த உயர்பீட உறுப்பினர் இது சம்பந்தமாக பேசும் போது பாராளுமன்ற,மாகாணசபை மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் பேச்சு வராத ஊமைகள் போல் இருந்து விட்டு வந்ததாகவும்,உண்மையாக இருக்கும் விடயங்களுக்கு எதிர்ப்பு எழுதுவது சிரமம் எனவும்,நள்ளிரவு 12 மணிவரை வைத்திருந்த இதற்குத்தானா?போன்ற வினாக்களை கேட்டுக் கொண்டு,எதிர்காலத்தில் இது சம்பந்தமாக யோசிப்போம் என கூறி விட்டு கலைந்து சென்றார்களாம்.


Saturday, March 25, 2017

ஹக்கீம் எனும் நீரோ மன்னன்!



அளுத்கம பற்றி எரிகிறது. முஸ்லிம்கள் சிங்கள இனவாதிகளின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு அல்லல்படுகிறார்கள். முஸ்லிம்களது உயிர், உடமைகளனைத்தும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. தம் இனத்தை பாதுகாக்க கூடிய அரசியல் தலைமைகள் எங்கே போனார்கள் என மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் எவ்வித பிரக்ஞையுமற்று உட்கார்ந்திருக்கிறார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமைகள் அளுத்கமையிற்கு செல்வோம் என தலைவரை அழைக்கின்றனர். தலைவரோ இப்போது செல்லக் கூடாது. நாளைக்கு செல்வோம் என வந்தவர்களை திருப்பி அனுப்புகின்றார். அடுத்த நாள் அளுத்கமவிற்கு விரைகின்றனர் முஸ்லிம் காங்கிரஸ் . தலைமை வழக்கமான நீலிக்கண்ணீர் வடிக்கின்றார். கவலை தோய்ந்த முகத்தோடு நிலைமைகளை கேட்டறிகிறார். இவரது போலி வரவை அறிந்து கொண்ட அங்கிரந்த முஸ்லிம் இளைஞர்களில் ஒருவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை வார்த்தைகளால் திட்டுகிறார். அத்தனை திட்டுக்களும் 'ஏருமை மாட்டின் மேலே பெய்த மழையைப் போல் ஆகிவிடுகிறது.'

 தனது வரவைப் பதிவு செய்து கொண்ட திருப்தியில் கொழும்புக்கு விரைகின்றனர். அங்கே சென்ற உண்மை உணர்வுள்ள முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தலைமை அவசரமாக முடிவெடுக்கப் போகிறது. மஹிந்த அரசிலிருந்து வெளியேறப்போகிறது என எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். தலைவர் என்ன சொல்லப் போகிறார் என ஏக்கத்தோடும், கவலையோடும் காத்திருக்கிறார்கள். தலைவர் பேசுகிறார். ' அப்பாடா வரப்போர  எலக்சன்ல மக்களுக்கிட்ட எதப்பேசுற எங்கிற கவலையோட இருந்தேன். அல்லாதான் இந்த அளுத்கம விஸயத்த கொண்டு வந்தான். எப்படியோ இந்த எலக்சன்லயும் ஜெயிச்சசிடலாம். ஹிஹ்ஹீ... ' எனப் பேசி முடிக்கிறார்.

தலைவரிடமிருந்து வரப்போகும் வார்த்தைகள் சமூகத்தின் உரிமைக்குரரலாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு இருந்த போராளிகளுக்கு, தலைவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் சாக்கடையாய் நாற்றமெடுத்தது பலத்த ஏமாற்றத்தையே தந்தது. இருந்தாலும் தலைமையை எதிர்க்கும் திராணியற்ற தொண்டர்கள் தலைவரோடு சேர்த்து கோரஸாக நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார்கள். வரப்போகும் தேர்தல் வெற்றி குறித்து மகிழ்வுறுகிறார்கள். தலைவனின் அயோக்கியத்தனத்துக்கு சாணக்கியம் எனப் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

எரியும் குடிசையில் பீடி பற்ற வைத்துக் குடிக்கும் அரக்கனுக்கு ஒப்பான ரஊப் ஹக்கீமின் செயலை எந்தவிதத்திலும் நியாயம் காண முடியாது. அளுத்கம சம்பவம் நடைபெற்று 1000 நாட்களாகியும் அந்த மக்களுக்கு எவ்வித உதவியும் இன்று வரையில் வழங்கப்படவில்லை. குறித்த சம்பவத்திற்கு காரணமான எவரும் இன்றளவில் தண்டிக்கப்படவில்லை. ரோம் தேசம் எரிந்து கொண்டிருந்தது நீரோ மன்னன் பிடல் வாசித்துக்கொண்ட வரலாற்று உதாரணத்துக் கொப்பவே அளுத்கம எரிந்த போது ' எலக்சனுக்கு மேடையில் பேசி வாக்கு வாங்க நல்ல செய்தி கிடைத்துவிட்டது' என  இன்புற்ற ரஊப் ஹக்கீம் இனை எதிர்கால வரலாறு பேசும். ஆனால் அதைக் கூட அடிமட்ட முட்டாள் போராளிகள் மறைத்து விட முயற்சிப்பதற்கு ஏவப்படுவார்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவனால். ஏனைனில் முஸலிம் காங்கிரஸின் போராளிகளுக்கு தேவையான எலும்புத் துண்டுகள் ரஊப் ஹக்கீமிடம்தான் உண்டு.

இன்றளவில் அறியாமை இருளில் மூழ்கிஇருக்கும் பாமரர்கள் அடர்த்தியாய் வாழும் இலங்கையின் பிரதேசம் கிழக்கு மாகாணமே!

#முஹம்மது_வன்னியனார்

Thursday, March 23, 2017

ஹக்கீமை விமர்சித்த பஷீருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை,மது அருந்தும் சபீக் ராஜாப்தீனுக்கு..??

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

அமைச்சர் ஹக்கீமை விமர்சித்தததன் அடிப்படையில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பசீர் சேதாவூத்திற்கு மு.காவினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே.இதன் போது அவர் முன் வைத்த குற்றச் சாட்டுக்கள் எதுவும் விசாரிக்கப்படவில்லை.அவர் தனது குற்றம் சாட்டை விசாரிக்குமாறு அறிக்கையும் விட்டுக்கொண்டிருக்கின்றார்.அவரை விசாரித்தால் புதருக்குள் ஒளிந்து கிடந்த நச்சுப் பாம்புகள் வெளியேறி மு.காவில் உள்ள பலரை தீண்டி விடலாம் என்பதால் இதன் மீது விசாரணை செய்ய மு.கா முன் வரவில்லை என்பதை அவர்கள் விசாரணைக்கு அஞ்சுகின்றமை தெரிவிக்கின்றது.

கடந்த சில நாட்களாக மு.காவின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் மது அருந்தும் தோரணையுடனான புகைப்படமொன்று உலா வருகிறது.இந்த புகைப்படத்தில் மதுபான போத்தல் இருந்தாலும் அவர் அருந்துவது குளிர் பானமே என்ற வாதம் சிலரிடமிருந்து முன் வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.இது எந்தளவு உண்மையானதென அவரை விசாரணைக்குட்படுத்தும் வரை யாருமே கூற முடியாது.குர்ஆன் ஹதீதை யாப்பாக கொண்ட கட்சியின் தேசிய அமைப்பாளர் குடிகாரர்களுடன் உலா வருவதொன்றும் பெருமையான விடயமல்ல.அது மு.காவின் போராளிகளுக்கு பெரியதொரு குற்றமாக தெரியவில்லை.அவர் அருந்துவது மதுவல்லாமல் இருந்தாலும் அது குற்றமே.இது அவர் தனது முகநூலில் பதிவிட்ட ஒரு புகைப்படம்.அவருக்கு மது அருந்துபவர்களுடன் கூடித் திரிவது ஒரு இழிவான செயலாக விளங்கவே இல்லை என்பது கவனத்திற் கொள்ளத்தக்க முக்கிய விடயமாகும்.

இது தொடர்பில் பரவலாக பேசப்படுகின்ற போதும் மு.காவின் உயர் மட்டம் இதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.அமைச்சர் ஹக்கீம் பற்றி ஏதாவது கதைத்திருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள்.அவர்களுக்கு இஸ்லாத்தை விட ஹக்கீம் என்பது பெரிதாக தெரிவதே மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.தயவு செய்து மு.காவினர் தங்களை ஒரு தரம் சுய விசாரணை செய்து கொள்ளுங்கள்.

இது தொடர்பில் ஒரு போதும்  மு.காவின் உயர்பீடத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது.மது அருந்துவதற்கெல்லாம்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போனால் கட்சியின் தலைமைத்துவம் கூட எஞ்சுமா என்பது கேள்விக்குறியே.இதனை விட பாரிய குற்றச் செயல்களை மு.காவின் தற்போதைய தலைவர் செய்துவிட்டு அதனை உயர்பீடக் கூட்டத்தில் வைத்து ஏற்றுக்கொண்டு அப்பாவி போன்று உலா வருகிறார்.குர்ஆன் ஹதீதை யாப்பாக கொண்ட கட்சியின் தலைவர் இவ்வாறு இருக்கும் போது அதன் தேசிய அமைப்பாளரை பள்ளிக்கு கல் வைப்பவராக எதிர்பார்க்க முடியாது.இதனையும் நியாயப்படுத்துபவர்கள் முஸ்லிம்களாக இருப்பார்களா என்பதுவே சந்தேகமாக இருக்கின்றது.

இவர்கள் என்னவாவது செய்து கொள்ளட்டும் புனிதமான குர்ஆன் ஹதீதை வைத்து ஏமாற்றுவதை முஸ்லிம்கள் கண்டிக்க வேண்டும்.இது இப்படி இருக்க அம்பாறை ஜம்மியத்துல் உலமா தலாக் சொன்ன ஹக்கீமையும் ஹசனலியையும் ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறார்களாம்.இது தொடர்பில் தனிக் கட்டுரை ஒன்றில் பார்ப்போம்.


ஏன்ஏன் நாம் அமைச்சர் றிஷாதின் கையில் கிழக்கு மாகாண சபையை ஒப்படைக்க கூடாது?

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

இன்று அமைச்சர் றிஷாத் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விசேட உலங்கு வானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து உள்ளூராட்சி மாகாண அமைச்சர் பைசர் முஸ்தபாவை கிண்ணியாவிற்கு அழைத்து சென்றிருந்தார்.இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிசும் அழைக்கப்பட்டிருந்தார்.இந் நிகழ்வில் கிண்ணியா சமூகம் மாத்திரமல்லாது ஒட்டு மொத்த கிழக்கு மாகாண  உள்ளூட்சி மன்றங்களும் பாரிய நிதியை மிக இலகுவாக பெற்றுக்கொண்டதோடு மேலும் பல நன்மைகளை இப் பயணத்தின் மூலம் திருகோணமலை மாவட்ட மக்கள் பெற்றுக்கொண்டனர்.இதில் நனைந்து கொள்ள முயற்சித்த கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்,இது தனது முயற்சியினால் செய்யப்பட்ட ஒன்று என்றது போன்று தனது முக நூலிலும் இதர பல தமிழ் இணையங்களுக்கும் செய்திகளை அனுப்பி வைத்துள்ளார்.இது ஊரான் வீட்டுக் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் கொடுத்த கதை போன்று அமைந்துள்ளது.

அவரது முகநூலில்
“தனது கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்த அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அமைச்சர் றிஷாத் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்குவதற்தாக தீர்மானம் எடுக்கப்பட்டது ”
என கூறியுள்ளார்.

பைசர் முஸ்தபா உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண  அமைச்சர் என்ற வகையில் அவருடன் இது தொடர்பில் பேசுவது அவசியமானது.அமைச்சர் றிஷாத் வர்த்தக அமைச்சர்.ஏன் அவருடன் இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என்ற வினாவை எழுப்பி சிந்தித்தாலே இதில் பொதிந்துள்ள உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.கிண்ணியாவில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ள நிலையில் இதில் மு.காவைச் சேர்ந்த கிழக்கு முதலமைச்சர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தார்.இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாவை சேர்ந்த பிரதி அமைச்சர் அமீர் அலி இதில் கலந்து கொண்டிருந்தார்.இது அமைச்சர் றிஷாதின் சேவை என்பது தெட்டத் தெளிவாவதால்  இது தொடர்பில் அதிகம் கதைக்க தேவையில்லை என கருதி இத் தோடு இவ்விடயத்தை நிறைவு செய்கிறேன்.

இது அமைச்சர் றிஷாதின் சேவை பாதையில் ஒன்று என்ற விடயத்தை நிறைவு செய்தாலும் இதில் கிழக்கு மக்கள் சிந்திக்கத் தக்க பல விடயங்கள் உள்ளன.கிண்ணியா வைத்தியசாலையானது கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள ஒரு வைத்தியசாலையாகும்.தற்போதைக்கு இதில் அதிகம் அமைச்சர் றிஷாத் தனது மூக்கை நுழைத்து சேவை செய்ய வேண்டுமாக இருந்தால் அதற்கு கிழக்கு முதலமைச்சரின் உதவி தேவை என்பது யாராலும் மறுக்க முடியாது.கிழக்கு முதலமைச்சர் மு.காவை சேர்ந்தவர்.இந் நேரத்தில் அமைச்சர் றிஷாத் முதலமைச்சருடன் உடன்பட்டு செல்லாது போனால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது.இந் நேரத்தில் அமைச்சர் றிஷாத் கட்சி பேதம் பார்க்க வில்லை.(இதனை முதலமைச்சர் தனது சுய அரசியலுக்கு பயன்படுத்த முயற்சித்ததாலயே நான் இதனை எழுத தூண்டப்பட்டேன் என்ற விடயத்தை இவ்விடத்தில் பதித்துக் கொள்ள விரும்புகிறேன்).இதனை தனது அரசியலுக்காக பயன்படுத்த முயற்சிக்கவில்லை.இது தான் அமைச்சர் றிஷாதின் பண்புகள்.

அமைச்சர் றிஷாத் என்ன தான் மு.காவையும் இதில் இணைத்து சேவை செய்தாலும் தனது கட்சியை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருந்தால் மிக இலகுவாக தனது சேவைகளை செய்து கொள்வார்.கிழக்கு மாகாண சபையின் 75வது அமர்வின் போது மு.காவின் மாகாண சபை உறுப்பினர் அன்வர் கிழக்கு சுகாதார அமைச்சர் டெங்கு விவகாரத்தில் சரியான விதத்தில் செயற்படவில்லை என கூறியிருந்தார்.இவர் குற்றம் சுமத்திய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மு.காவை சேர்ந்தவர்.இதனை இன்னுமொரு விதத்தில் சொல்வதானால் மு.காவின் கட்டுப் பாட்டில் உள்ள கிழக்கு மாகாண சபை டெங்கு நோய் விவகாரத்தில் முறையாக செயற்படவில்லை என்பதாகும்.இதனை செய்யக் கூடிய அரசியல் அதிகாரங்கள் மு.காவின் கையில் உள்ள போதும் மு.கா தகுந்த முறையில் முயற்சிக்கவில்லை என்பதாகும்.எறிபவன் கையில் கம்பில்லாமல் அமைச்சர் றிஷாத் தனது சேவைகளை கிழக்கு முதலமைச்சருடன் இணைந்து செய்கிறார்.மக்களுக்கான அரசியல் செய்ய நினைக்கும் அமைச்சர் றிஷாத் ஏன் இன்னுமொரு கட்சியை மக்களுக்கு சேவை செய்ய நாடிச் செல்ல வேண்டும்? ஏன் நாம் அமைச்சர் றிஷாதின் கையில் கிழக்கு மாகாண சபையை ஒப்படைக்க கூடாது?

கிழக்கு மக்களே!
நன்றாக சிந்தியுங்கள்.இன்னும் இன்னும் ஏமாந்து எம் நிலையை நாம் தாழ்த்திக்கொள்ள வேண்டுமா?

குறிப்பு : நான் எழுதும் கட்டுரைகளை அமைச்சர் றிஷாதிற்கு எதிராக எடிட் செய்து எனது பெயரில் வெளியிடப்படுவது தொடர்பில் அவதானமாக இருக்கவும். நாம் அமைச்சர் றிஷாதின் கையில் கிழக்கு மாகாண சபையை ஒப்படைக்க கூடாது?

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

இன்று அமைச்சர் றிஷாத் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விசேட உலங்கு வானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து உள்ளூராட்சி மாகாண அமைச்சர் பைசர் முஸ்தபாவை கிண்ணியாவிற்கு அழைத்து சென்றிருந்தார்.இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிசும் அழைக்கப்பட்டிருந்தார்.இந் நிகழ்வில் கிண்ணியா சமூகம் மாத்திரமல்லாது ஒட்டு மொத்த கிழக்கு மாகாண  உள்ளூட்சி மன்றங்களும் பாரிய நிதியை மிக இலகுவாக பெற்றுக்கொண்டதோடு மேலும் பல நன்மைகளை இப் பயணத்தின் மூலம் திருகோணமலை மாவட்ட மக்கள் பெற்றுக்கொண்டனர்.இதில் நனைந்து கொள்ள முயற்சித்த கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்,இது தனது முயற்சியினால் செய்யப்பட்ட ஒன்று என்றது போன்று தனது முக நூலிலும் இதர பல தமிழ் இணையங்களுக்கும் செய்திகளை அனுப்பி வைத்துள்ளார்.இது ஊரான் வீட்டுக் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் கொடுத்த கதை போன்று அமைந்துள்ளது.

அவரது முகநூலில்
“தனது கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்த அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அமைச்சர் றிஷாத் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்குவதற்தாக தீர்மானம் எடுக்கப்பட்டது ”
என கூறியுள்ளார்.

பைசர் முஸ்தபா உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண  அமைச்சர் என்ற வகையில் அவருடன் இது தொடர்பில் பேசுவது அவசியமானது.அமைச்சர் றிஷாத் வர்த்தக அமைச்சர்.ஏன் அவருடன் இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என்ற வினாவை எழுப்பி சிந்தித்தாலே இதில் பொதிந்துள்ள உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.கிண்ணியாவில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ள நிலையில் இதில் மு.காவைச் சேர்ந்த கிழக்கு முதலமைச்சர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தார்.இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாவை சேர்ந்த பிரதி அமைச்சர் அமீர் அலி இதில் கலந்து கொண்டிருந்தார்.இது அமைச்சர் றிஷாதின் சேவை என்பது தெட்டத் தெளிவாவதால்  இது தொடர்பில் அதிகம் கதைக்க தேவையில்லை என கருதி இத் தோடு இவ்விடயத்தை நிறைவு செய்கிறேன்.

இது அமைச்சர் றிஷாதின் சேவை பாதையில் ஒன்று என்ற விடயத்தை நிறைவு செய்தாலும் இதில் கிழக்கு மக்கள் சிந்திக்கத் தக்க பல விடயங்கள் உள்ளன.கிண்ணியா வைத்தியசாலையானது கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள ஒரு வைத்தியசாலையாகும்.தற்போதைக்கு இதில் அதிகம் அமைச்சர் றிஷாத் தனது மூக்கை நுழைத்து சேவை செய்ய வேண்டுமாக இருந்தால் அதற்கு கிழக்கு முதலமைச்சரின் உதவி தேவை என்பது யாராலும் மறுக்க முடியாது.கிழக்கு முதலமைச்சர் மு.காவை சேர்ந்தவர்.இந் நேரத்தில் அமைச்சர் றிஷாத் முதலமைச்சருடன் உடன்பட்டு செல்லாது போனால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது.இந் நேரத்தில் அமைச்சர் றிஷாத் கட்சி பேதம் பார்க்க வில்லை.(இதனை முதலமைச்சர் தனது சுய அரசியலுக்கு பயன்படுத்த முயற்சித்ததாலயே நான் இதனை எழுத தூண்டப்பட்டேன் என்ற விடயத்தை இவ்விடத்தில் பதித்துக் கொள்ள விரும்புகிறேன்).இதனை தனது அரசியலுக்காக பயன்படுத்த முயற்சிக்கவில்லை.இது தான் அமைச்சர் றிஷாதின் பண்புகள்.

அமைச்சர் றிஷாத் என்ன தான் மு.காவையும் இதில் இணைத்து சேவை செய்தாலும் தனது கட்சியை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருந்தால் மிக இலகுவாக தனது சேவைகளை செய்து கொள்வார்.கிழக்கு மாகாண சபையின் 75வது அமர்வின் போது மு.காவின் மாகாண சபை உறுப்பினர் அன்வர் கிழக்கு சுகாதார அமைச்சர் டெங்கு விவகாரத்தில் சரியான விதத்தில் செயற்படவில்லை என கூறியிருந்தார்.இவர் குற்றம் சுமத்திய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மு.காவை சேர்ந்தவர்.இதனை இன்னுமொரு விதத்தில் சொல்வதானால் மு.காவின் கட்டுப் பாட்டில் உள்ள கிழக்கு மாகாண சபை டெங்கு நோய் விவகாரத்தில் முறையாக செயற்படவில்லை என்பதாகும்.இதனை செய்யக் கூடிய அரசியல் அதிகாரங்கள் மு.காவின் கையில் உள்ள போதும் மு.கா தகுந்த முறையில் முயற்சிக்கவில்லை என்பதாகும்.எறிபவன் கையில் கம்பில்லாமல் அமைச்சர் றிஷாத் தனது சேவைகளை கிழக்கு முதலமைச்சருடன் இணைந்து செய்கிறார்.மக்களுக்கான அரசியல் செய்ய நினைக்கும் அமைச்சர் றிஷாத் ஏன் இன்னுமொரு கட்சியை மக்களுக்கு சேவை செய்ய நாடிச் செல்ல வேண்டும்? ஏன் நாம் அமைச்சர் றிஷாதின் கையில் கிழக்கு மாகாண சபையை ஒப்படைக்க கூடாது?

கிழக்கு மக்களே!
நன்றாக சிந்தியுங்கள்.இன்னும் இன்னும் ஏமாந்து எம் நிலையை நாம் தாழ்த்திக்கொள்ள வேண்டுமா?

குறிப்பு : நான் எழுதும் கட்டுரைகளை அமைச்சர் றிஷாதிற்கு எதிராக எடிட் செய்து எனது பெயரில் வெளியிடப்படுவது தொடர்பில் அவதானமாக இருக்கவும்.


கிண்ணியாவில் அமைச்சர் றிஷாதின் ஆளுமை

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

அமைச்சர் றிஷாத் வடக்கு மக்களின் மீள் குடியேற்ற விடயத்தில் கரிசனை கொண்டு அம் மக்களை மீள் குடியேற்றம் செய்து வருகிறார்.அம் மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்தும் வருகிறார்.அது போன்றே கிண்ணியாவில் அவரினால் உறுதியளிக்கப்பட்டவாறு குளிரூட்டப்பட்ட மருந்தக கெண்டைனர் ஒன்றையும் வழங்கியிருந்தார்.இது போன்று அவரது சேவைகளை அடிக்கிக் கொண்டே செல்லலாம்.இத்தனைக்கும் அமைச்சர் றிஷாத் மீள் குடியேற்ற அமைச்சரோ அல்லது நீர் வளங்கள் அமைச்சரோ அல்லது சுகாதார அமைச்சரோ அல்ல.அவர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சை வைத்திருப்பவர்.இப்படியான ஒரு தலமைத்துவத்தையே எமது சமூகம் எதிர்பார்த்து  தவம் கிடக்கிறது.மறைந்த தலைவர் அஷ்ரபிற்கு பிறகு பல விடயங்களில் தலைமைத்துவப் பண்பை அமைச்சர்  றிஷாதிடம் இருந்து அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியாவில் தீவிரமாக பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக  குளிரூட்டப்பட்ட மருந்தக கெண்டைனர் ஒன்றின் தேவை உணரப்பட்டது.இதனை சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மஹ்றூப் மற்றும் எம்.எஸ் தௌபீக் ஆகியோர் கொண்டு சென்ற போது அவர் பத்து நாட்களின் பின்பே இதனை தன்னால் கையளிக்க முடியும் என கூறியிருந்தார்.அது வரை காத்திருக்க முடியாத நிலை கிண்ணியாவில் இருந்தது.இதன் போது தீவிரமாக செயற்பட்ட அமைச்சர் றிஷாத் அத தேவையை வேறு வழியில் பூர்த்தி செய்து கொடுத்தார்.சுகாதார அமைச்சுடன் தொடர்பான சேவையை சுகாதார பிரதி அமைச்சர் கை விரித்தத நிலையில் அமைச்சர் றிஷாத் செய்து கொடுத்தமை தான் அவரது ஆளுமையை பறை சாட்டுகிறது.

இக் கெண்டைனர் அமைச்சர் ஹக்கீம் கிண்ணியாவிற்கு விஜயம் செய்த நாளில் (ஞாயிற்றுக்கிழமை) கிண்ணியா வைத்தியசாலைக்கு வந்துள்ளது.இது அமைச்சர் ஹக்கீமிற்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியிருந்தது.இதில் நனைந்து கொள்ள மு.கா குழுவினர் முயன்ற போது அங்கிருந்த  பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப் இவ்விடயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என கூறியுள்ளார்.இதன் போது “எல்லாவற்றையும் உங்கள் அமைச்சரை கொண்டு செய்யுங்கள்” என கூறியவாறு பிரதி அமைச்சர் பைசால் காசிம் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.அவ்விடத்தில் குழுமி இருந்த உண்மை அறிந்த மக்கள் அமைச்சர் ஹக்கீமை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்திருந்தனர்.இதன் போது பலர் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக “கூ” போட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.இக் கெண்டைனரை தாங்கள் தான்  கொண்டு வந்தோமென மு.கா அரசியல் வாதிகள் எவரும் உரிமை கோராத போதும் (அமைச்சர் றிஷாத் அணியினர் இது தங்களுடைய சேவையென பகிரங்கமான உரிமை கோரியுள்ளனர்) மு.காவின் ஆதரவாளர்கள் சில தங்கள் கட்சியின் மானத்தை காப்பாற்றிக்கொள்ள இத்தனை தங்களுடைய சேவைகள் போன்று காட்ட முற்படுவதை அவதானிக்க முடிகிறது.

இது தங்களது சேவையென மு.காவின் அடிமட்ட ஆதரவாளர்கள் சிலர் உரிமை கோரும் நிலைக்கு சென்றதால் நான் இக் கட்டுரையை எழுத  தூண்டப்பட்டாலும் இவ்விடயத்தை செய்து கொடுக்க கூடிய அரசியல் அதிகாரங்கள் அமைச்சர் றிஷாதை விட அமைச்சர் ஹக்கீமிற்கு அதிகமாக இருந்த போதும் அமைச்சர் றிஷாத் அதனை செய்து கொடுத்துள்ளார்.தற்போது மு.காவிடம் உள்ள அரசியல் அதிகாரங்களான கிழக்கு முதலமைச்சு,மாகாண சுகாதார அமைச்சு,மத்திய சுகாதார பிரதி அமைச்சு ஆகியவை அமைச்சர் றிஷாதின் கையில் இருந்தால் இந் நேரத்தில் அவர் கிண்ணியாவின் நிலையை தலை கீழாக புரட்டி போட்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.கிண்ணியா வைத்தியசாலையின் தேவைகளுக்காக அமைச்சர் றிஷாத் 7.9 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளார்.மு.காவினர் வெறும் ஒரு  மில்லியன் ரூபாய்களை மாத்திரம் ஒதுக்கியுள்ளமையை நான் இங்கு மேலதிகமாக சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.இன்னும் இன்னும் நாம் எம் மீது அடிமை சாசனங்களை எழுதிக் கொள்ளாது சிறந்த தலைமைத்துவப் பண்புள்ள அமைச்சர் றிஷாதின் பின் அணிதிரள்வது காலத்தின் தேவை எனலாம்.


Monday, March 20, 2017

கிண்ணியாவில் ஐம்பது இளைஞர்களை கூட்டியதை வைத்து பெருமைப்படும் நிலையில் ஹக்கீம் காங்கிரஸ்

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

கிண்ணியாவில் தீவிரமாக பரவும் டெங்கு நோயை கட்டுப் படுத்தும் முகமாக மு.காவின் தலைவரின் விசேட வேண்டுகோளின் பெயரில் இளைஞர் காங்கிரஸின் அணர்த்த நிவாரண குழு கிண்ணியாவிற்கு சென்றிருந்தது.இவர்கள் சென்றமை பாராட்டுக்குரிய விடயமாக இருந்தாலும் இதில் கலந்து கொண்ட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து மு.கா எந்தளவு வீழ்ச்சிக்கு சென்றுள்ளது என்பதை ஓரளவு மட்டிட்டுக்கொள்ளலாம்.அமைச்சர் ஹக்கீமின் உத்தியோக பூர்வ முக நூலில் இதில் ஐம்பது உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக கூறியிருந்தார்.இலங்கை பூராகவும் அழைப்பு விடுத்து வெறும் ஐம்பது பேரைத் தான் மு.காவால் ஒன்று கூட்ட முடிந்தமையானது மு.காவின் வீழ்ச்சி முகத்தை புடம் போட்டு காட்டுகிறது.கிண்ணியாவை சேர்ந்த ஐம்பது  இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தால் கூட அது போதுமான எண்ணிக்கையல்ல.இதில் நாடு பூராகவும் ஐம்பது ஐம்பது பேரைத் தான் ஒன்று கூட்ட முடிந்துள்ளமை மு.கா மக்களால் பூரமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

இதில் இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால் இதில் ஐம்பது பேர் கூட கலந்து கொள்ளவில்லை என்பதாகும்.இதில் 10-20 பேர் அளவிலானோரே கலந்து கொண்டுள்ளனர்.அதிலும் அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவில் பணியாற்றுபவர்களும் அதில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.இது தான் மு.காவின் சாதனையா? இதனை நீங்கள் நான் பதிவிட்டுள்ள புகைப் படங்களில் இருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.இப்படி கூட்டப்பட்ட இருபது பேர்களில் அதிகமானவர்கள் வெளி ஊர்களில் இருந்து வந்தவர்கள் தான்.இரண்டாவது நாள் இவர்களை பார்வையிட அமைச்சர் ஹக்கீம்,பிரதி அமைச்சர் பைசால் காசீம்,மாகாண அமைச்சர் நஸீர் சென்றும் வெறும் இருபது பேரே அவர்களுடன் இணைந்து புகைப்பட எடுத்திருந்தனர்.அமைச்சர் ஹக்கீம் வருகின்றார் என்றால் புதினம் பார்க்க பல்லாயிரக்கணக்கானோர் சென்ற காலம் போய் பத்து பேர் ஒன்று கூடும் காலம் வந்துள்ளது. இது இலங்கையில் மு.காவின் உண்மை முகத்தை மக்கள் நன்கு அறிந்து கொண்டதை துல்லியமாக்குகின்றது.இவ் எண்ணிக்கையான மக்களை ஒரு சிறிய உள்ளூர் அமைப்பினால் கூட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பெருமையாக அமைச்சர் ஹக்கீம் தனது முகநூலில் பதிவிடும் நிலைக்கு சென்றுள்ளமை தான் அவரது அரசியலின் வீழ்ச்சியை அடையாள படுத்தும் அளவு கோலாகும்.இவர்களின்




Thursday, March 16, 2017

டெங்குவில் மு.காவின் பொடு போக்கு

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

அமைச்சர் ஹக்கீம் வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் வெம்பிக் கொண்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என பாட்டு பாடிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அந்தளவு அவரை சோதனைகள் சூழ்ந்து கேலி செய்து கொண்டிருக்கின்றன.

கடந்த சில மாதங்கள் முன்பு அமைச்சர் ஹக்கீம் கட்டார் பயணமான போது இலங்கையில் இனவாத ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதால் அவர் பயணத்தை இரத்து செய்திருக்க வேண்டுமென பெரும் எதிர்ப்பை பெற்றார்.இம்முறை சவூதி பயணமான போது கிண்ணியாவில் டெங்கு அபாயம் மிகவும் அதிர்கரித்துள்ளது.இவ்விடயத்திலும் முஸ்லிம் மக்களின் பலத்த விமர்சனங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் ஆளாகியுள்ளார்.கூடவே கிண்ணியாவைச் சேர்ந்த தனது பாராளுமன்ற உறுப்பினரையும் அழைத்து சென்றுள்ளமை இன்னும் அவர் மீதான விமர்சனத்தை அதிரிகரித்துள்ளது.குறைந்தது பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு விட்டுச் சென்றிருக்கலாம்.கிண்ணியாவில் மீதமுள்ள ஓரிரு வாக்குகளும் இதனூடாக மு.காவின் கைகளை விட்டு நழுவிச் செல்கிறது.

இவர்கள் தான் இல்லை என்றால் இந்த டெங்கு தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் அரசியல் அதிகாரமிக்க சுகாதார பிரதி அமைச்சை வைத்துள்ள பைசால் காசிமும் வெளிநாடு சென்றுள்ளார்.இந் நேரத்தில் அவர் கட்டாயம் நாட்டில் இருந்திருக்க வேண்டும்.தான் நாட்டில் இருந்தால் அடிக்கடி கிண்ணியா செல்ல வேண்டி வரும்.தன்னை டெங்கு பீடித்து விடும் என்ற அச்சத்தில் வெளிநாடு பறந்திருந்தாலும் பறந்திருக்கலாம்.எமது கிண்ணியா முஸ்லிம் சமூகத்தின் மரண ஓலங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் இந் நேரத்தில் இவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாக்கள் அவசியம் தானா? இந் நேரத்தில் களத்தில் நிற்காமல் அப்படி என்ன முக்கியமான வேலை? சமூகத்திற்கு அரசியல் செய்வதற்காகத் தான் இவர்களா வந்தார்களா? என்ற வினாவிற்கான விடையை இதனூடாக சமூகம் அறிந்து கொள்ளலாம்.

டெங்கு சுகாதார அமைச்சுடன் தொடர்புடையதால் தனது அமைச்சினூடாக பிரதி அமைச்சர் பைசால் காசீம் நிதிகளை அள்ளி இறைத்திருக்கலாம்.இவர் இது வரை ஒரு மில்லியன் ரூபாயே பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்திற்கு வழங்கியுள்ளார்.வேறு எந்த நிதிகளும் இதுவரை ஒதுக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.மாகாண சபையின் அதிகாரம் மு.காவிடம் உள்ளதால் அதனூடாகவும் நிதிகளை எடுத்திருக்கலாம்.இன்று மு.காவிடம் மத்திய சுகாதார பிரதி அமைச்சு,மாகாண பிரதி அமைச்சு உள்ளதோடு மத்திய அமைச்சு,பிரதி அமைச்சு,முதலமைச்சர் என அரசியல் அதிகாரங்கள் குவிந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இவ்விடயத்தில் மு.கா உளச் சுத்தியுடன் செயற்பட்டிருந்தால் பல்வேறு வழிகளில் நிதிகளை அள்ளி இறைத்திருக்கலாம்.

இன்று விஜயம் செய்த அமைச்சர் றிஷாத் அவசர தேவைக்காக 7.9 மில்லியனை ஒதுக்கியுள்ளார்.இவ்விரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள் மலைக்குள் மடுவிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை மிக இலகுவில் அறிந்து கொள்ளலாம்.இது மாத்திரமல்ல ஒரு சுகாதார அமைச்சர் இதனை தீர்ப்பதற்கான எந்தெந்த முயற்சிகள் செய்வாரோ அத்தனையையும் அமைச்சர் றிஷாத் இன்று செய்ததை அவதானிக்க முடிந்தது.அதாவது இங்கு அமைச்சர் றிஷாத் சுகாதார அமைச்சராக மாறியுள்ளார்.மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சேவை செய்பவரே உண்மையான தலைவர்.இதனூடாக அமைச்சர் றிஷாத் தனது தலமைத்துவ பண்பை வெளிப்படுத்தி நிற்கின்றார்.



ஹக்கீம் காங்கிரஸின் ஏமாற்றுக்கு
நாம் இன்னும் ஏமாறும் சமூகமா?
(அஸாம் ஹாபிழ் - சாய்ந்தமருது)

மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியை எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமை சுய நிர்ணயம் மற்றும் நலன் கருதி தமிழ் ஈழ  விடுதலைப் புலியினரின் ஆயுதப் பலத்தோடு புத்தி பலத்தால் போராடி தமது சமூகத்திற்கான விடுதலையை பெற்றுக் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலே பல தியாகங்களை செய்து உருவாக்கினார்.
தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் மரணத்திற்குப் பின்னால் முஸ்லிம்களுக்கு என உருவாக்கப்பட்ட கட்சி தற்போது எங்கு சென்று கொண்டிருக்கின்றது?
ஹக்கீம் காங்கிரஸை கண்மூடித்தனமாக இன்னும் ஆதரிக்கும் கட்சிப் போராளிகளே தற்போது கட்சி செல்லும் பாதை சரியா? என்பதை சற்று சிந்தியுங்கள்!
ஒரு கட்சியையோ சமூகத்தையோ தலைமை தாங்கி நடாத்தக் கூடிய தலைவன் ஒருவன் இஹ்லாசானவனாகவும், நற்பண்புடையவனாகவும், உண்மையாளனாகவும், கட்சியின் போராளிகளை நேரான பாதையில் வழிநடாத்தக் கூடியவனாகவும், கட்சியை நேசிக்கின்ற தாய்மார்கள் போராளிகள் பெண்களை பாதுகாக்கின்றவனாகவும், கட்சியை சிறந்த முறையிலும் முன்மாதிரியாகவும் நடாத்தக் கூடியவனாகவும் இருத்தல் வேண்டும்.
ஆனால் மாமனிதரின் மறைவுக்குப் பின்னர் குர்ஆன் ஹதீஸின் பிரகாரம் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் தலைவன் ஹக்கீம் கட்சியை வழிநடாத்துவதற்கு முற்றிலும் தகுதியானவரா என்பதை சற்று சிந்தியுங்கள் சகோதரர்களே..!!!,

ஹக்கீம் காங்கிரஸுக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் போராளிகள் வாக்களித்து அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிநார்கள்.
இதன் மூலம் பெற்ற அமைச்சுப் பதவியை ஹக்கீம் பெற்றுக் கொண்டு 2 பிரதியமைச்சுப் பதவிகளை அம்பாறை மண்ணுக்கு வழங்கியது மாத்திரமின்றி பல விதமான வாக்குறுதிகளையும் இந்த மக்களுக்கு வழங்கி அங்குள்ள மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஏமாற்று அரசியல் வியாபாரி ஹக்கீமின் ஏமாற்று வித்தைகளும் பொய் வாக்குறுதிகளும் பல உள்ளன.
கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் என்ற ஒன்றை உருவாக்கி பல முறை பல கலந்துரையாடல்களை ஏற்படுத்தி கலைந்து மக்களிடத்தில் வாக்குறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ளது இதுவரைக்கும் எந்தவிதமான வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை
ஆனால் தற்போது சாணக்கியத்தால் சென்ற வாரம் கல்முனை புதிய நகர திட்டம் சம்பந்தமான போலியான கலந்துரையாடல் ஓன்றை நடாத்தி மக்களை ஏமாற்றுவதற்கு நாடகமாடியுள்ளார் இந்த ஹக்கீம்.
அது மாத்திரமின்றி கல்முனையில் இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அம்பாறைக்கு இடமாற்றம் பெற்றது. இதனை தடுக்க முடியாத இந்த சாணக்கியத்திற்கு, கல்முனையில் ஹக்கீம் காங்கிரசுக்கு பிரதியமைச்சரும் உண்டு அவரினாலும் தடுக்க முடியாது போய்விட்டது.  இது ஹக்கீமின் போலி நாடகமா?
மக்களிடம் இருந்து தப்புவதற்காக கல்முனையில் இடம் ஓன்றை தாருங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை அமைத்துத்தருகிறேன் என்று கூறினார். அதுவும் காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது சாணக்கியம் புறப்பட்டுச் சென்று விட்ட  பஸ்ஸுக்கு கைகாட்ட நினைக்கின்றார் இது போலி நாடகம் என்பது இந்த ஹக்கீம் காங்கிரஸ் போராளிகளுக்கு இன்னும் புரியவில்லையா???
இல்லை இவர்கள் மடையர்கள் என்று எண்ணி ஹக்கீம் ஏமாற்றுகிராரா????....
சிந்தியுங்கள் சகோதர்களே!!!!!

இது போன்று சம்மாந்துரை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் என்ற ஒன்றை செய்து தருவதாகபல முறை கலந்துரையாடி வாக்குறுதியளித்து ஒரு வருடம் கடந்து சென்றுவிட்டது ... சென்ற வாரம் சம்மாந்துறையிலும் சம்மாந்துறை புதிய நகர அபிவிருத்தித்திட்டம் சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி சம்மாந்துறை ஹக்கீம் காங்கிரஸ் போராளிகளையும் மக்களையும் மடையர்களாக்கியுள்ளார். ஒரு வருடம் கடந்தும் இதுவரைக்கும் எதுவிதமான வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை.
சம்மாந்துறை மண்ணில் 2000 பேருக்கு தொழில் வாய்பை ஏற்படுத்தக்கூடிய பாரிய கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைப்பதற்கு, வடகிழக்கின் விடிவெள்ளி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சருமான அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியில் அமைச்சரபையிலிருந்து 50 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்படவிருந்த சந்தர்ப்பத்தில் இதனை அறிந்த ஹக்கீம் இவ்வாறான அபிவிருத்தி நடந்தால் அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்ற முடியாது அவர்கள் நம்மை துரத்தி விடுவார்கள் என்ற எண்ணத்துடன் சம்மாந்துறையின் ஹக்கீம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரை தொடர்பு கொண்டு கைத்தொழில்பேட்டை அமைப்பை நிறுத்திவிடு என்று கூற இதனால் நமது மன்னுக்கு கிடைக்கவிருக்கும் அபிவிருத்தியும் 2000 தொழில் வாய்ப்புக்களையும் தட்டிவிட்டு உடனே இதனை நிறுத்தியுள்ளார்.
இத்திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட பணம் இதுவரைக்கும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. சம்மாந்துறையை சேர்ந்தவருக்கே நமது மண் அபிவிருத்தியடையக் கூடாது என்ற எண்ணம் இதுதான் நன்றிக்கடனா???
 சம்மாந்துறை மன் மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹும் அன்வர் இஸ்மாயீலின் பின்பு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எதிர் பார்த்து நின்றது சம்மாந்துறையை அபிவிருத்தி செய்யவே தவிர, அபிவிருத்தியை தடுப்பதற்கா???
கைத்தொழில் பேட்டையை தடுத்தவரைப் பற்றி சிந்தித்தீர்களா???? இப்படியான செயல்பாட்டையா சம்மாந்துறை மக்கள் எதிர் பார்த்தார்கள்????
சம்மாந்துறை பலநோக்குக் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் 30 இலட்சம் ரூபா பணம் அன்பளிப்பு செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பித்து சிறிது நாட்கள் செல்ல இதனையும் மன்சூரைக் கொண்டு தடுத்துள்ளார்கள் இந்த ஹக்கீம் காங்கிரஸினர்.
இதனால் சம்மாந்துறை மண் அடைந்த பலன் என்ன??, சம்மாந்துறை மக்களுக்கு  கிடைக்கவிருந்த அபிவிருத்தி தடைப்பட்டது,  2000 இளைஞர் யுவதிகளுக்கு கிடைக்கப்பெறவிருந்த தொழில் வாய்ப்பு தடைப்பட்டது
 இதனால் மன்சூருக்கும், ஹக்கீம் காங்கிரஸினருக்கும் கிடைத்த பலன் என்ன???
இதனால் சம்மாந்துறை மக்களுக்கு கிடைத்த அபிவிருத்தி என்ன??? சிந்தியுங்கள் என்  சகோதரர்களே!



ஹக்கீம் காங்கிரஸின் ஏமாற்றுக்கு நாம் இன்னும்
ஏமாறும் மடையர் சமூகமா!!???

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டே இருப்பான் என்பது பழமொழி.,,.........
ஹக்கீமை நம்பி சிலர் ஹக்கீம் காங்கிரஸ்  போராளிகளாக இருக்கும் வரை ஹக்கீம் உங்களை ஏமாற்றியே மடையர் பட்டம் கேட்க வைப்பார் என்பது நடுமொழி,,,

ஹக்கீமை விரட்ட மக்கள் துணிந்து விட்டார்கள் அது  சாய்ந்தமருதில் ஆரம்பித்து விட்டது கண்டி வரை முடிவு  மக்கள் விழித்து விட்டார்கள் என்பது புதுமொழி......
சகோதரர்களே சற்று சிந்தியுங்கள்!
 ஹக்கீம் இந்த மக்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பார் இவரின் ஒழிப்பு மறைப்பு லீலைகள் அனைத்தும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. விடயம் அறிந்த மக்கள் ஹக்கீமை வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.. வெகு விரைவில் துரத்தப்படுவார். ஏனைய ஹக்கீம் காங்கிரஸ் போராளிகளே நீங்களும் சிந்தியுங்கள்! விழிப்படையுங்கள்!!.,,,
முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியைப் பாதுகாக்க மக்களின் அபிலாசைகளை வெற்றியடையச் செய்ய ஹக்கீமின் பச்சோந்தித் தனத்தையும், குள்ளநரித்தனத்தையும், அவரது லீலைகளையும் அறிந்து கட்சியை அவரிடத்திலிருந்து பாதுகாக்க வெளிநடப்பு செய்தவர்கள்தான் இந்த ஹசனலி, அன்சில், தாஹிர், பசீர் ஆகியோர்களாகும்.....
அவர்களைப் போல் ஏன் மற்றவர்களால் ஹக்கீமை துரத்திவிட்டு ஹக்கீம் காங்கிரஸை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாமனிதர் உருவாக்கிய ஆலமர வீரூட்சத்தை பாதுகாக்க கைகோர்க்க முடியாது???????
 சகோதரர்களே நன்று சிந்தியுங்கள் காலம் கனிகிறது பச்சோந்திகளை விரட்டுங்கள்...
அல்லாஹுஅக்பர்,... அல்லாஹு அக்பர்,...அல்லாஹு அக்பர்...

அஸாம் ஹாபில்
சாய்ந்தமருது


Wednesday, March 15, 2017

12 மரணங்களின் பின் தான் ஹக்கீமிற்கு ஞானம் பிறந்ததா?

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)



கிண்ணியாவை உலுக்கி பார்க்கும் விடயமாக டெங்கு நோயானது மாறியுள்ளது.கள்ளன் சென்ற பின் நாய் குரைத்த கதையாக இப் பிரச்சினை இரு வாரங்களுக்கும் மேலாக சூடு பிடித்த நிலையில் உள்ள போதும் நேற்று செவ்வாய்க் கிழமை தான்,தனது உறுப்பினர்களை களத்தில் இறங்கி செயற்படுமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்புரை விடுத்துள்ளார்.இத்தனை நாளும் அமைச்சர் ஹக்கீம் கிண்ணியாவில் என்ன நடக்கின்றதென தெரியாமல் இருந்தாரா? 12 மரணங்களின் பின் தான் அமைச்சர் ஹக்கீமிற்கு ஞானம் பிறந்ததா?

களத்தில் இல்லாத ஒருவரை தான் களத்தில் இறங்கி செயற்படுங்கள் என பணிப்புரை விடுக்க முடியும்.தனது பணிப்புரை மூலம் அமைச்சர் ஹக்கீம் தனது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் இவ் விடயத்தில் களத்தில் இறங்கி செயற்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார்.இன்று மு.காவில் மத்திய சுகாதார பிரதி அமைச்சர்,மாகாண சுகாதார அமைச்சர்,முதலமைச்சர் ஆகியோர் உள்ளனர்.இந் நிலையில் இவர்கள் இத்தனை காலம் தாழ்த்தி இவ்விடயத்தில் கிண்ணியா விடயத்தில் இத்தனை பொடு போக்காக இருந்ததன் காரணம் என்ன? கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம் மக்கள் மு.காவை ஆதரிக்காததன் பழி வாங்கலோ?

சுகாதார அமைச்சுடன் நெருங்கிய தொடர்புடைய மு.கா இது தனது விடயமென முன்னின்று செயற்பட்டிருக்க வேண்டும்.அப்படி செயற்படாமை மிகவும் கண்டிக்கத்தக்கது.அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை சேவை மன்னனாக புகழ்வதில் அலாதிப் பிரியம் கொண்டவர்.தனது ஊரில் இப்படி ஒரு பிரச்சினை சென்று கொண்டிருக்க போது பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஒரு அறிக்கை கூட விடாமல் பொடு போக்காக செயற்படுகிறார்.இதனால் தான் என்னவோ இந்த மக்கள் இவரை இம் முறை பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திருந்தனர்.

தற்போது இவ்விடயத்தில் பலரதும் சுட்டிக் காட்டலுக்கு அமைவாக மத்திய அமைச்சு நேரடியாக களம் இறங்குகிறது.இதில் நனைந்து கொண்டு பெயர் எடுக்க மு.கா முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதனை நேரடியாக செய்யும் அரசியல் அதிகாரம் மு.காவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.ஒரு நோயை துளிர் விடும் போது கிள்ளி எறியாமல் மரமாகிய பிறகு வெட்டி எறிவது கடினமாகும்.

சிந்தியுங்கள் சகோதரர்களே!


Monday, March 13, 2017

ஹக்கீம் காங்கிரஸ்  சரிகிறது

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

நேற்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் எனும் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டிருந்தது.இப் புத்தக வெளியீட்டில் மு.காவின் பிரதி அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.இதற்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல இடங்களில் உள்ளவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதில் ஆரம்பத்தில் மிகச் சொற்பமானவர்களே வருகை தந்துள்ளனர்.இதனையடுத்து தொலை பேசி அழைப்புக்கள் ஏற்படுத்தி கூட்டத்திற்கு கட்டாயப்படுத்தி ஆட்களை கொண்டு வந்த சம்பவங்களும் இடம்பெற்றதான கதைகளும் உள்ளன.அப்போதும் சொல்லுமளவு மக்களை ஒன்று கூட்ட முடியவில்லை.

இப் புத்தக வெளியீட்டின் மீது மக்கள் இத்தனை கவனமின்றி இருந்துள்ளமையானது இவர்கள் இது போன்ற புத்தகத்தை வெளியிட்டு பூச்சாண்டு காட்டப் போகிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொண்டதை அறிந்து கொள்ளச் செய்கிறது.அதாவது தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் மக்களிடையே அதிகம் தாக்கம் செலுத்தியுள்ளது.சாய்ந்தமருது மு.காவின் .அசைக்க முடியாத அடித்தளமாக இருந்த இடம்.அங்கே மு.காவிற்கு இத்தனை சவால் என்றால் ஏனைய இடங்களை சொல்லத் தேவையில்லை.

அண்மையில் இவர்கள் சாய்ந்தமருதில் நடாத்திய பிரச்சார கூட்டத்தை  சாய்ந்தமருது மக்கள் கூச்சலிட்டு குழப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.அதே போன்று அன்சில் அணியினர் பாலமுனை மற்றும் நிந்தவூர் ஆகிய இடங்களில் நடாத்திய கூட்டங்களின் போது பல்வேறு எதிர்ப்புக்களையும் தாண்டி மக்கள் சாரை சாரையாக கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.இதுவெல்லாம் ஹக்கீம் காங்கிரஸ் மிக விரைவில் அழிந்து இலங்கை முஸ்லிம்களுக்கு விடிவு கிடைக்கும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

குறிப்பு: எனது பெயரில் வெளியிடப்படும் கட்டுரைகள் தொடர்பில் வாசகர்கள் அவதானமாக இருக்கவும்.


Sunday, March 12, 2017

Raazi Muhammadh Jaabir   

இல்லை.நான் நிறுத்துவதாக இல்லை
===================================

பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; (28:20)

எமது ஈரல் குலையில் தண்ணீர் இல்லை எழுதாதே என்கின்றனர் பெற்றோர்.

உனக்கு மனைவியும்,குழந்தைகளும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு ஏதாவது நடந்துவிடும் யோசித்து நட என்கிறார்கள் உறவினர்கள்.

மச்சான் உன்னை அமைதிப்படுத்த அவர்கள் எதுவும் செய்வார்கள் பார்த்து எழுதுடா என்கிறார்கள் சில நண்பர்கள்.

இவர் வாழ்வில் இழந்தவைகளை ஈடு செய்வதற்கும் பிரபலமாவதற்கும் எழுதுகிறார் என்கிறார்கள் சில ‘பால்ய நண்பர்கள்’.

இவரின் ஆக்கங்களை உங்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்காதீர்கள் எங்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது என்று இணையத்தளங்களை வினயமாக வேண்டுகிறார்கள் சில உயர் மட்ட உறுப்பினர்கள்.

அல்லாஹ் உங்கள் பணிக்காக உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றட்டும் என்கிறார்கள் சில நலன்விரும்பிகள்.

உனக்கு வேறு வேலையே இல்லையா?தனிப்பட்டவர்களின் மானத்தை பொதுத்தளத்தில் வாங்குகிறாயே தூ நாயே,நிறுத்து என்கிறார்கள் சில காங்கிறசின் அடிமட்ட அறிவாளிகள்.

இல்லை.நான் நிறுத்துவதாக இல்லை.இந்தப் பத்ரில் ஒன்று உங்கள் கூட்டத்தில் இருக்கும் அபூ லஹபும்,உத்பாவும்,ஷைபாவும் அழிய வேண்டும் அல்லது எங்கள் கூட்டத்தில் இருக்கும் அபூபக்கரும், உமரும்,அலியும் அழிய வேண்டும்.அது வரைக்கும் நான் நிறுத்துவதாக இல்லை.

என்னைப்பற்றி விசாரிக்கிறீர்கள்.எனது குடும்பம் எங்கே இருக்கிறது என்று விசாரிக்கிறீர்கள்.நான் எங்கே இருக்கிறேன் என்று விசாரிக்கிறீர்கள்.எனது குழந்தைகள் எங்கே என்று விசாரிக்கிறீர்கள்.எனது இறந்த காலங்களை அவிழ்த்துப் பார்க்கிறீர்கள். என்னைப் பற்றி ஏதாவது சிக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.என்றாலும் நான் நிறுத்துவதாக இல்லை.

அன்று முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கும்போது அதாவுல்லாஹ் மஹிந்தவை ஆதரித்து நின்றார் என்ற ஒரே காரணத்திற்காக நான் அதாவுல்லாவை எதிர்த்து நின்றேன்.நீங்கள் விழுந்தடித்துக் கொண்டு என்னை வாழ்த்தினீர்கள்.அதாவுல்லாஹ்விற்கு எதிராக நான் எழுதிய கவிதைகளை அச்சடித்து பள்ளிவாசல்களில் பகிர்ந்தீர்கள். அதாவுல்லாஹ்வின் ஆதரவாளர்கள் அன்று என்னை விமர்சித்தபோது நீங்கள் என்னைப் பாதுகாத்தீர்கள்.அவர்கள் எனது குடும்பத்தை விமர்சித்தபோது அதற்குப் பதிலளித்தீர்கள்.
இன்று நீங்கள் பூக்கள் போட்டுப் பூஜிக்கும் உங்கள் தலைவனுக்கு எதிராக நான் பேனையை உயர்த்தியதும் அன்று தட்டிக் கொடுத்த நீங்கள் இன்று தள்ளிவிடுகிறீர்கள்.பூக்கள் தூவி,பொன் கம்பளம் விரித்து வரவேற்ற நீங்கள் இன்று உங்கள் தலைவரை விமர்சிக்க ஆரம்பித்தவுடன் நான் போகும் வழியில் சேற்றைக் கரைத்துக் கொண்டு காத்திருக்கிறீர்கள்.அன்று என்னைக் காத்து நின்ற உங்கள் கேடயங்களை வளைத்து வில்லாக்கி என்னை விரட்டி வருகிறீர்கள்.நீங்கள் எத்தனை சந்தர்ப்பவாதிகள்.ஆனாலும் நாம் நிறுத்துவதாக இல்லை.

இன்னுமின்னும் உங்கள் தலைவனின் அனைத்து அரசியல் தவறுகளையும் நீங்கள் சகித்துக்கொண்டு போனால்,

நேற்று மாணிக்கமடுவின் மலையில் வைக்கப்பட்ட சிலை நாளை உங்கள் பள்ளியின் மிம்பரருகில் வந்து உட்காரும்.அது வரைக்கும் உறங்கிக் கொண்டிருங்கள்.ஆனால் நாம் நிறுத்துவதாக இல்லை.

நேற்று பர்தாவைக் கட்டிக்கொண்டு பரீட்சை எழுத முடியாத உங்கள் தங்கை நாளை பர்தாக் கட்டிக்கொண்டு பாதையில் போக முடியாமல் இருக்கும்.அதுவரைக்கும் சிரித்துக்கொண்டிருங்கள். நாம் நிறுத்துவதாக இல்லை.

நேற்றுப் பறிக்கப்பட்ட உங்கள் காணியை மீட்டெடுக்க முடியாமல் நாளை உங்கள் வயலில் விளைந்த நெல்லை நீங்களே விலைபேசி வாங்க வேண்டிய நிலை வரும்.அதுவரைக்கும் அமைதியாக அமர்ந்து கொண்டிருங்கள்.

கறையான்கள் அரித்த வளைகளைப் போல் உங்கள் அரசியல் உரிமைகள் அறுந்து விழும்.ஒரு கையில் உங்கள் தந்தையின் சடலத்தையும் மறு கையில் மண் வெட்டியையும் வைத்துகொண்டு ஆறரடி நிலம் தேடி அலைந்து திரிவீர்கள்.அதுவரைக்கும் ஆடிக்கொண்டிருங்கள்.

உங்களை விற்ற காசில் மலையில் ஒரு கோயில் கட்டி திறப்பு விழாவிற்கு ஹக்கீம் உங்களை அழைப்பார்.தீர்த்தத் தண்ணீரோடு தரிசித்துவிட்டு வரும் வரைக்கும் அடங்கிக் கிடங்கள்.ஆனால் நாம் நிறுத்துவதாக இல்லை.

இதற்கு யாராவது முடிவுகட்ட வேண்டும்.அது நானாக இருந்துவிட்டுப்போகிறேன்.நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள்.

அந்தக் கட்டிடத்தை நானே இடித்து விடுகிறேன்.அதன் இடிபாடுகளுக்குள் நான் இறந்தும் விடுகிறேன்.நீங்கள் நிம்மதியாக வெளியேறுங்கள். ஆனால் நான் நிறுத்துவதாக இல்லை.

அதிகம் என்ன செய்வீர்கள். ஆள் வைத்து தூக்குவீர்கள்.வீட்டை இடிப்பீர்கள்.பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவீர்கள். யாராவது பெண்ணோடு இணைத்துச் சொல்வீர்கள்.என் விரலை உடைத்து,நாக்கை அறுப்பீர்கள். அவ்வளவுதானே.மிஞ்சி மிஞ்சிப் போனால் கொலைதானே செய்வீர்கள்.கொன்று விட்டுப் போங்கள்.நான் நிறுத்துவதாக இல்லை.

எதிர்ப்புகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் ஏன் எதிர்ப்பவனை எதிர்க்கிறீர்கள்.ஏலுமென்றால் என்னோடு மோதாமல் என் கருத்துகளோடு மோதுங்கள் பார்ப்போம்.இதுவரைக்கு நான் உங்கள் தலைவரைப் பற்றி எழுதிய ஒன்று தவறென்று நிரூபியுங்கள் பார்க்கலாம்.உங்கள் தலைவரைப் பற்றி இட்டுக்கட்டிச் சொல்கிறேன் என்று ஒரு ஆதாரத்தைக் கொண்டு வந்து காட்டுங்கள் பார்க்கலாம்.அதற்கு முடியாது உங்களால்.

அதிகார வெறிகொண்ட நீங்கள் எனக்கு என்ன செய்வீர்கள் என்றும் தெரியும்.மீள முடியாத ஒற்றையடிப்பாதையில் நான் தனியே பயணிக்கிறேன் என்றும் எனக்குத்தெரியும். பரவாயில்லை.என்னை எரித்த வெளிச்சத்திலாவது உங்கள் குழந்தைகளின் இரவுகள் ஒளிரட்டும்.நான் நிறுத்துவதாக இல்லை.அநீதிகளை எதிர்த்துப் போராடிவிட்டு நிம்மதியாக இந்த உலகத்தில் வாழ்ந்த ஒருவரைச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயின் ஒரு வால் நுனியை மாத்திரம் காட்டியதற்கே அந்த ஓநாயின் ஒட்டுண்ணிகளுக்குத் தாங்கவில்லை  என்றால் எங்கள் நரம்பை உறுஞ்சும் அந்த ஓநாயின் ரத்த வாடை கொண்ட வேட்டைப் பல்லைக் காட்டினால் என்ன செய்வார்களோ? பொறுத்துப்பாருங்கள்.நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.

அன்று இப்னு தைமியா சொன்ன பதிலைத்தான் இன்று உங்களுக்குச் சொல்கிறேன்.

“எனது எதிரிகளால் எனக்கு என்ன செய்துவிட முடியும்.எனது சுவனமும் எனது தோட்டமும் என் நெஞ்சுக்குள்ளே இருக்கின்றன.நான் செல்லுமிடமெல்லாம் என்னை விட்டுப் பிரியாமல் அவை என்னுடன் கூடவே வருகின்றன.எனக்கு சிறைவாசம் என்பது இறைவனோடு நான் தனியே இருப்பதாகும்.நான் கொல்லப்படுவது ஷஹாததாகும்.எனது மண்ணிலிருந்து நான் விரட்டப்படுவது எனது ஆன்மீகப் பயணமாகும்.

ஓ அபூ ஜஹ்லின் குழந்தைகளே,

ஓ உத்பாவின் பேரர்களே,

ஓ ஷைபாவின் சிறுவர்களே,

நீங்கள் வாளோடும், வில்லோடும் எங்களிடம் வாருங்கள்.நாங்கள் வானங்களின் அரசனின் பெயரால் வருகிறோம்.

ஓ காங்கிறசின் கோலியாத்துகளே,

உங்களைக் கொல்வதற்கு தாவீதின் கற்கள் போதும்.

நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்.நாங்கள் உங்களை இனி விடுவதாய் இல்லை.


Wednesday, March 8, 2017

நிரந்தர பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தற்காலிகமானார்

எல்.எம் இர்பான் பொத்துவில் பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக கடந்த ஒரு வருடமாக கடமையாற்றியிருந்தார்.இங்கு கடமையாற்றிக்கொண்டு அவர் இரண்டு நாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தற்காலிக (acting) செயலாளராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.தற்போது அவர் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இறக்காமம் பிரதேச சபையின் நிரந்தர செயலாளராகவும் பொத்துவில் பிரதேச சபையின் இரண்டு நாள் தற்காலிக (acting) செயலாளராகவும் இடமாற்றப்பட்டுள்ளார்.

தற்போது பொத்துவிலுக்கு எந்தவிதமான அரசியல் அதிகாரங்களும் இல்லை.பொத்துவிலில் உள்ள ஒரே ஒரு சேவை வழங்கும் நிறுவனமாக பிரதேச சபையையே குறிப்பிடலாம்.அந்த பிரதேச சபையின் செயலாளரை தற்காலிகமாக்கியுள்ளமை அந்த மக்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடாகும்.இறக்காமம் பிரதேச சபை,பொத்துவில் பிரதேச சபை ஆகிய இரு பிரதேச சபைகளையும்  ஒப்பிடும் போது இறக்காமத்தை விட பொத்துவில் மும்மடங்கால் அதிகரித்த சனத்தொகை கொண்ட பிரதேச சபை என்பதையும் கவனத்திற்கொள்க.

இது தொடர்பில் பொத்துவில் முக்கியஸ்தர்கள்  பலரது கவனத்திற்கு கொண்டு சென்ற போது எந்த வித பலனும் கிட்டவில்லை என்பதை அறிய முடிகிறது.தற்போது பொத்துவில் மக்கள் காலா காலமாக ஆதரித்து வரும் மு.காவை சேர்ந்தவரே முதலமைச்சராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.பொத்துவில்,இறக்காமம் ஆகியவற்றிற்கு தனித் தனி பிரதேச செயலாளரை நியமித்தால் என்ன? அது என்ன ஐ.நா சபை சென்று சாதிக்கும் விடயமா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
2017.03.08


Saturday, March 4, 2017

ஜப்பார் அலி மீது ஹக்கீமிற்கு திடீரென வந்தது பாசமா? வேசமா?

அமைச்சர் ஹக்கீம் நிந்தவூரிலே ஹசனலியினால் தனக்கு கிளம்பியிருக்கும்  எதிர்ப்பை சமாளிக்க ஹசனலியின் சகோதரரான ஜப்பார் அலியை தனது ஆயுதமாக பயன்படுத்துவதை அவர் அறிகிறாரோ இல்லையோ நாம் சில விடயங்களை வைத்து அறிந்து கொள்ளலாம்.

நிந்தவூரிலே அமைச்சர் ஹக்கீம் விழா நடாத்துவதொன்றும் புதிதான விடயமல்ல.ஜப்பார் அலி என்பவர் நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளானுமல்ல.அவருக்கு இது வரை எந் நிகழ்வுகளில் முக்கிய கதா பாத்திரம் வழங்கப்பட்டதில்லை.எப்போதும் கூட்டங்களில் நாலோடு ஐந்தாகவே இருப்பார்.

ஆனால்,இன்று நிந்தவூரிலே நடாந்த நிந்தவூர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜப்பார் அலி தலைமையில் இடம்பெற்றுள்ளது.இதற்கு முன்பும் அவர் கட்சியில் இருந்தார் தானே! அவர் அஷ்ரப் காலத்து மூத்த போராளியும் கூட.ஏன் அவருக்கு தகுந்த மரியாதை வழங்கப்படவில்லை? நிந்தவூரில் பிரதி அமைச்சர் பைசால் காசிம்,மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் அரசியல் அதிகாரங்களோடு இருக்கும் போது ஜப்பார் அலி தலைமையில் இக் கூட்டத்தை நடாத்த காரணம் என்ன? ஜப்பார் அலியை  உருவேற்றினால் தானே ஆட வைக்கலாம்.

அமைச்சர் ஹக்கீம் சகோதர் இருவருக்குமிடையில் பிரச்சினையை மூட்டிவிட்டு தனது விடயத்தை சாதிக்க முனைகிறார்.இதனை ஜப்பார் அலி புரிந்து கொள்ள வேண்டும்.இங்கு சகோதர உணர்வை அமைச்சர் ஹக்கீம் அரசியலுக்கு பயன்படுத்த சிந்திக்கின்றார்.ஜப்பார் அலிக்கு நிந்தவூர் தவிசாளர் ஆசை அல்லது மாகாண சபை வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கலாம்.தனது சகோதரனுக்கு தேசியப்பட்டியல் வாக்குறுதி வழங்கி ஏமாற்றியது போன்று அவரும் ஏமாற்றப்படலாம்.இதில் பிளவு படப்போவது ஒரு குடும்பம்.தூய்மையான அரசியலுக்காக குடும்ப உறவுகளை இழக்கலாம்.இச் சாக்கடை அரசியலுக்காக குடும்ப உறவுகளை இழப்பதா? என்பதை ஜப்பார் அலி அவர்களே!ஒரு கனம் நிதானமாக சிந்தியுங்கள்.

அபு ரஷாத் (அக்கரைப்பற்று)


பிசு பிசுக்காமல் பரபரப்பான ஹசனலியின் எதிர்ப்பு

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்புவதொன்றும் புதிதல்ல.கிளம்பியவைகள் பல பிசு பிசுத்துப் போன வரலாறுகள் தான் அதிகமாகும்.அண்மையில் கூட கிழக்கின் எழுச்சி என்ற பிரதான கோசத்தில் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக போராட்டமொன்று வெடித்திருந்தது.காலப்போக்கில் அதன் வீரியம் குறைந்து விட்டது.இவர்களது வீரியம் குறைந்தமைக்கான பிரதான காரணமாக மக்கள் ஆதரவின்மையை குறிப்பிடலாம்.அவர்கள் நடாத்தும் கூட்டங்களுக்கு மக்கள் கவனமெடுத்து செல்லவில்லை.பார்வையாளர்கள் குறைந்தால் பேச்சாளர்களுக்கு உற்சாகம் குறைவது வழமை தானே!

அந்த நிலைமைகளை ஹசனலியின் எதிர்ப்பு கூட்டத்தில் அவதானிக்க முடியவில்லை.அங்கு கலந்து கொண்டவர்கள் உணர்ச்சி பூர்வமாக கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.அங்கு சனத் திரள் அதிகமாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.அதில் கலந்து கொண்டவர்கள் மயிலின் ஆதரவாளர்கள் என்ற எதிர் வாதம் முன் வைக்கப்பட்டுவதை அவதானிக்க முடிகிறது.அவர்கள் மயிலின் ஆதரவாளர்களாக இருக்கலாம் அல்லது குதிரையின் ஆதரவாளர்களாக இருக்கலாம் யாராக இருந்தாலும் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக இத்தனை மக்களை ஒன்று கூட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல.அமைச்சர் ஹக்கீம் அழிவு கண் முன்னே தெரிகிறது.அதிலும் நிந்தவூரில் அமைச்சர் ஹக்கீமின் சார்பில் ஒரு பிரதி அமைச்சர்,மாகாண சபை உறுப்பினர் உள்ளார்.இந் நிலையில் இத்தகைய சனத் திரள் பாரிய தொகை தான்.

இச் சனத் திரள் ஹக்கீமின் தலையில் இடியை போட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.அல்லாது போனால் இவர்கள் கூட்டம் நடாத்திய மறு நாளே நிந்தவூருக்கு விழா நடாத்த ஓடி வருவாரா? அதிகாரத்தை பயன்படுத்தி அக் கூட்டத்தை தடுக்க முனைவார்களா? இதற்கு அமைச்சர் ஹக்கீம் ஏன் அஞ்சுகிறார் என்ற விடயம் மிக முக்கியமானது.தற்போது அமைச்சர் ஹக்கீம் தவிர்ந்து முஸ்லிம் அரசியல் வாதிகள் பலர் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பை உருவாக்கவுள்ளதற்கான சாதக நிலை தோன்றியுள்ளது.இந் நேரத்தில் அதன் ஒரு பகுதியான இக் கூட்டத்திற்கே இத்தனை ஆதரவென்றால் அனைவரும் ஒன்றிணைந்தால் அமைச்சர் ஹக்கீம் ஆட்டம் கண்டுவிடுவார் என்பதை சாதாரணமாகவே அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு :எனது பெயரை பயன்படுத்தி நான் எழுதாத பல கட்டுரைகள் வெளியிடப்படுவதை அவதானிக்க முடிகிறது.இதனை நான் வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.