Pages

.

.

Tuesday, January 31, 2017

ஹக்கீமை இகழும் தவம்


(இப்றாஹீம் மன்சூர்: கிண்ணியா)

நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் நாம் செய்கின்ற சில விடயங்கள் எமது மனங்களில் புதைந்து கிடக்கின்ற உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திவிடும்.அந்த வகையில் மாகாண சபை உறுப்பினர் தவத்தின் பஷீர் மீதான குற்றச் சாட்டில் ஹக்கீம் குற்றவாளி தான் என்பதை ஏற்றுக்கொள்கிறார்.

அவர் இன்று “எப்போது பிழைத்திருப்பார் ரவூப் ஹக்கீம்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருந்தார்.பிழைத்திருப்பார் என்பது இறந்த காலம்.அப்படியானால் ஹக்கீம் பிழைக்கவில்லை.இத் தலைப்பில் ஒரு விடயம் தெளிவாகிறது.ஹக்கீம் பஷீரின் ஆட்டத்தில் அகப்பட்டுக்கொண்டார் என்பதாகும்.

அவர் தனது கட்டுரையில் ஹக்கீம் பஷீர் நினைத்த படி நடந்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டார் என கூறுகிறார்.அப்படியானால் பஷீரிடம் ஹக்கீமின் பிடி உள்ளது என்பது தானே பொருள்.

சகோதரர் தவம் அவர்களே!
பஷீர் தான் குற்றவாளி என அவரே ஒப்புக்கொண்ட பின்பும் அவர் குற்றவாளியென நீங்கள் நிரூபிக்க வருவது சிரிப்பாக இருக்கின்றது.
பஷீரின் எச்சரிக்கை

மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சிலரின் இரகசிய ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக கூறி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவ் எச்சரிக்கையை பலரும் பல விதத்தில் நோக்கினாலும் ஒரு மனிதனின் மானத்தில் விளையாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.அதற்காக இப்படியானவர் சமூகத்தை தலைமை தாங்குவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

அவர் தன்னிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருப்பின் அதனை ஒரு போதும் பொது மக்களிடம் வெளிப்படுத்தக் கூடாது.அதனை ஒரு பொருத்தமான இடத்தில் சமர்ப்பித்து தீர்வை பெற முயல வேண்டும்.இதில் சில பெண்களின் வாழ்வும் சீரழிந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தூண்டி விட்டு புதினம் பார்க்காது அனைவரும் சேர்ந்து ஒரு தகுந்த வழி முறையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

மு.காவின் தவிசாளர் பஷீரின் கேள்விகளுக்கு அவரின் பிழைகளை சுட்டிக்காட்டுவது பொருத்தமற்றது.அவரே தான் பிழைகள் செய்துள்ளேன் என்பதை ஏற்றுக்கொல்கின்றாரே!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Monday, January 30, 2017

உண்மைகள் வெல்வதுமில்லை தோற்பதுமில்லை அவை நிரூபிக்கப்படுகின்றன
------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்!

கடந்த ஞாயிறு அன்று நான் கலந்து கொண்ட "அதிர்வு " நிகழ்ச்சியில் என்னால் கூறப்பட்ட ஒரு துளி உண்மையின் வரலாற்றைக் கூடத் தெரியாதவர்களும், வேண்டுமென்றே என்னை ஏச ஆசைப்படுபவர்களும், எலி வால் பிடிக்கும் கோமாளிகளும், பழைய- புதிய "மரம் கொத்திகளும் " உடனடியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முகப்புத்தகத்தில் பதிவதை நிறுத்தி தங்கள் முகங்களைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் உங்கள் முகங்களில் அடுப்பங்கரைச் சீலைத் துண்டுகளைப்போர்த்திக் கொண்டு மூக்கைப் பொத்தியபடி ஊர்களை விட்டு ஓடி ஒளிய வேண்டி வரும் என்பதையும் மன வருத்தமின்றி கூறி வைக்கிறேன்.

எப்போது இந்த மக்கள் விரோத சக்திகளை "கட்சிக்குப் பாதுகாப்பான" தருணம் ஒன்றில் மக்கள் முன் அம்பலப் படுத்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினேனோ அன்று தொட்டு சேர்க்கப்பட்ட பட்டவர்தனமான ஆவணங்கள் என்னிடம் உண்டு. இஸ்லாமிய மார்க்கத்துக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும், தனித்துவக் கட்சிக்கும், தத்தமது குடும்பத்துக்கும் இவர்களால் இழைக்கப்பட்ட துரோகங்களை மக்களுக்கு நிரூபிப்பதற்கு முன் இன்ஷா அல்லாஹ். சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும், விஷேடமாக 'மக்கா, மதீனா ஆகிய றசூலில்லாஹி (ஸல்)  அவர்களின் பாதங்கள் பட்ட புனித மண்ணில் இருந்தும் "பத்வா"க்கள் பெறப்படும், இதன் பின் சம்மந்தப்பட்டவர்களின் மனைவிகளுக்கு முதலில் நிரூபிக்கப்படும்.இறுதியாக மக்கள் நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

கட்சியைக் காப்பாற்றுவதற்காக 2004 ஆம் ஆண்டு அன்றைய "இன்டர் கொன்டினன்டல்' நட்சத்திர ஹோட்டலுக்குள் விசேட பாதுகாப்பு போடப்பட்டிருப்பதையும், கரணம் தப்பினால் மரணம்தான் என்பதையும் பொருட்படுத்தாது நுழைந்து அறையைத் திறந்து ஏ.சி. கூட்டுக்குள் வீடியோ கமராவைப் பொருத்தி படம் எடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்வித்த ஒருவனால் வேறு ஆதாரங்களைத் திரட்டுவதில் என்ன சிரமம் இருந்திருக்கப் போகின்றது?

சிங்கப்பூர், கொழும்பு, பாசிக்குடா நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் யுனிட்டி ப்ளாசா, லேக் ட்றைவ் அபார்ட்மன்ற்ஸ் ஆகியவற்றின் Master key களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். விசேடமாக காவலர்களும், சாரதியும் தூங்கிய பின் சாமங்களில் தனது காரை வி.ஐ.பியிடம் கொடுத்து யாருக்கும் தெரியாமல்  பெரியவரே சென்று "கொண்டுவர" உதவிய பாசிக்குடா ஹோட்டல் முகாமையாளருக்கும், புதிய தகவல்களை ஆதாரப்படுத்த உதவிய பம்பலப்பிட்டி "பேர்ள் கிறேன்ட்" ஹோட்டலுக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

நான் நாறவும், மக்கள் முன் தூய்மையாக நடிப்போரை நாறடிக்கவும் தயார். நான், இந்தப் பாதையில் மரணிக்கவும் தயார். நான் மரணித்தாலும்,எனது கொள்கைக் குன்றுகளான நண்பர்கள்  அறுவரின் வங்கி லொக்கர்களில் பாதுகாப்பாக இருக்கும் இதே ஆவணங்கள் மக்களுக்கு வழிகாட்டும்.

இது எவ்வளவு பெரிய பதவிகளில் இருப்பவராயினும் அந்நபர்களைக் கணக்கெடுக்காமல் "கட்சியைக் காப்பாற்றுகிற காலம் இது" என்பதைத் கூலிக்கு துள்ளுகிறவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
செயலாளர் நாயகத்துக்குரிய அதிகாரத்தைக் கண்ணைப் பொத்திப் பறித்த அன்று கட்சி கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டது, தாறுஸ்ஸலாம் மர்மங்கள் புத்தகத்தை வாசிக்கும் போது கட்சிச் சொத்துக்கள் 'அபேஸ்' பண்ணப்பட்டது புரிகிறது, புத்தியுள்ளவர்களுக்கு கட்சிக் கொள்கைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிகிறது. இவ்வாறான கடைசி சந்தர்ப்பத்திலாவது புறப்பட முடியாது சோம்பிக் கிடந்தால் என்னாவது? அஷ்ரஃப் சேர் சொல்லித் தந்ததால் எங்கே தொடங்கினோம் எனத் தெரிந்த நமக்கு எங்கே போய்ச் சேர்வோம் என தெரியாத பயணத்தில் எதனைக் காணப் போகிறோம்? நரகத்துக்கான பாதை காட்டப்படுகிறது நண்பர்களே!

வரலாறு தெரியாதவர்களை மீண்டும் எச்சரிக்கிறேன்!
கற்றுக்கொள்ள விரும்புபவர்களையும், தெரிந்திருந்து மறந்தவர்களையும் படிக்கவும்-மீள் நினைவுபடுத்தவும் அழைக்கிறேன்!

மத்தியிலும், பிராந்தியத்திலும் அதிகாரத்திலிருப்போர் தங்களின் கடந்தகால தவறுகளைப் பகிரங்கமாக ஒத்துக்கோண்ட பின்னர் மக்களின் அமானிதமான பதவிகளைத் தொடருமாறு ஆலோசனை கூறுகிறேன். அனைத்தும் அறிந்த அல்லாஹ் போதுமானவன்.

கடந்த 16 வருடங்களும் அரசியலிலும், அரசியலுக்காகவும் நான் செய்த பிழைகள், மற்றும் மற்றவர் செய்த குற்றங்களுக்கு நான் வழங்கிய ஒத்துழைப்புகள் ஆகிய அனைத்துக்குமாக பொது மக்களிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கோருகிறேன்.
நான் இழைத்த பிழைகளுக்கான, இன்னும் மற்றவர் இழைத்த குற்றங்கள் சுத்த ஹறாம் என்று தெரிந்துகொண்டு சுய நினைவுடன் வழங்கிய ஒத்துழைப்புகள் ஆகியவற்றுக்கான பத்வாவினை உலகளாவிய பல பத்வா அமைப்புகளிடம் கேட்டிருக்கிறேன், இன்ஷா அல்லாஹ் கிடைத்தவுடன்  அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவிடமும், ஏனைய தஃவா அமைப்புகளிடமும் காண்பித்து இவர்களின் முடிவையும் பெற்ற பின் ஊடகங்கள் ஊடாகப் பகிரங்கப்படுத்தி அந்த தீர்ப்பின்படி நடந்து கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்.

நான் வைத்திருக்கும் ஆவணங்களின் உண்மைத் தன்மையை விஞ்ஞான பூர்வமாகப் பரீட்சித்து தராதரப் பத்திரத்தைப் பெறுவதற்கு ஆவணங்களை இவ்வாரம் இரு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப உத்தேசித்துள்ளேன். இதுவும் கிடைத்ததும் அப்பளுக்கற்ற உண்மைகளோடு மீண்டும் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ் பூமியில் எனது ஜீவிதம் இருந்தால்!
1979 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையான 38 வருட கால எனது ஜீவிதம் அல்லாஹ் போனஸாக எனக்குப் போட்ட பிச்சையாகும்.

இதனை எனது உயிலுக்கு எழுதப்பட்ட முன்னுரையாகக் கொள்க.


பஷீரின் அதிர்வு

நேற்று 2017-01-29ம் திகதி வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு  தாவூத் கலந்து கொண்டிருந்தார்.இந் நிகழ்வில் அவர் மு.காவின் இரகசியங்கள் பலவற்றை கூறிச் சென்றிருந்தார்.அவைகள் பற்றி கதைப்பது இக் கட்டுரையின் நோக்கமல்ல.

அண்மைக் காலமாக அமைச்சர் ஹக்கீம் ஹசனலி,பஷீர் சேகுதாவூத் ஆகிய இருவர் மூலம் பலத்த சவாலை எதிர்கொண்டுள்ளார்.இவர்களின் சவாலை எதிர்கொள்ள அமைச்சர் ஹக்கீமிற்குள்ள மிக இலகுவான வழி இவர்கள் இருவரையும் கட்சியை விட்டும் நீக்குவதாகும்.

இதற்கு அமைச்சர் ஹக்கீமிற்கு தகுந்த காரணமொன்று வேண்டும்.ஹசனலியை பொறுத்தமட்டில் அப்படியான பிடியை கொடுக்காமல் செயற்பட்டு வருகிறார்.பஷீர் செகுதாவூதை பொறுத்தமட்டில் அவர் அப்படியான பிடியை கொடுத்துவிடுவாரா என்ற அச்சம் எழுகிறது.

எதிர்வரும் பேராளர் மாநாட்டில் அமைச்சர் ஹக்கீமிற்கு சவாலை ஏற்படுத்தும் முகமான சில ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.இவைகளை தலைமை தாங்கி நடாத்த பஷீர் சேகுதாவூத் அக் கட்சியில் இருக்க வேண்டும்.அல்லாது போனால் ஹக்கீமிற்கு எதிரான செயற்பாடுகள் மிக இலகுவாகவே பிசி பிசித்துவிடும்.

இதற்கு முன்பு மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அமைச்சர் ஹக்கீமை நோக்கி பல வினாக்களை விடுத்திருந்தாலும் நேற்றைய நிகழ்வில் கதைத்தது போன்று கடுமையான கதைத்திருக்கவில்லை.இது அமைச்சர் ஹக்கீம் போன்றவர்கள் நிந்தவூரில் வைத்து அவரை மிகக் கடுமையாக பேசியது காரணமாக இருக்கலாம்.இவர்கள் கடுமையாக கதைத்ததற்கு தாருஸ்ஸலாம் மறக்கப்பட்ட மர்மமே பிரதான காரணமாகும்.

கடந்த நிகழ்விலே பஷீர் சேகுதாவூத் ஒரு கவர்ச்சி வழிமுறையை கையாண்டிருந்தார்.அரசியலில் ஒருவர் இன்னுமொருவர் மீது குற்றச் சாட்டை முன் வைக்கும் போது தான் தூய்மையானவர் போன்று காட்டிக்கொள்வது இயல்பு.ஆனால்,பஷீர் எனக்கும் ஒரு கோடி தந்தார்கள் என்று பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டமை “நானும் அப்படித் தான் அவர்களும் அப்படித் தான்”என்பதை துல்லியமாக்குகிறது.பஷீர் பிரதிநிதித்துவ அரசியலை தலாக் சொல்லிவிட்டதால் இதன் பாதிப்பு அமைச்சர் ஹக்கீமிற்கே!

மு.கா ஜனாதிபதி தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய மற்றும் இதர பல காரணங்களுக்காக தேசிய கட்சிகளிடமிருந்து பணம் வாங்குவதில்  தவறில்லை.இறுதிவரை மஹிந்தவை பற்றிப்பிடித்திருந்த மு.காவின் தவிசாளருக்கு ஏன் வழங்கப்பட்டது என்று சிந்தித்தாலே அப் பணமானது அவர்கள் வயிற்றை நிரப்ப வழங்கப்பட்டது என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.குறைந்தது கட்சியை வளர்க்க அப் பணத்தை பயன்படுத்தியிருக்கலாம்.இப்படி பணத்திற்கு ஆதரவளிப்போரை யாராவது பிற்பட்ட காலப்பகுதியில் மதிப்பார்களா? இவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு சமூகம் சார்ந்த விடயங்கள் பற்றி அரசின் உயர்மட்டத்தவர்களிடம் செல்வார்கள்?

எது என்ன தான் இருந்தாலும் குர்ஆன் ஹதீதை யாப்பாக கொண்டதொரு கட்சி இந்த நிலைமைக்கு சென்றிருப்பது முழு முஸ்லிம்களுக்கும் கேவலமாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.



பஷீர் பாடும் பாட்டு கேட்கிறதா..?

இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் மு.கா உறுதியான தடம் பதித்ததொரு கட்சியாகும்.தற்போது இக் கட்சியினுள் தோன்றியுள்ள உட்கட்சி பூசல்களின் காரணமாக இக் கட்சி பல கூறுகளாக பிளவுறும் நிலைக்கு சென்றுள்ளது.ஒரு கட்சிக்கு தேசியப் பட்டியல் கிடைத்துவிட்டால் அதனைப் பறித்துண்ண பட்சிகள் பல படை எடுக்கும்.இதில் முட்டி மோதி மூக்குடையும் பட்சிகள் இந்த பழம் புளிக்கும் என்ற பாணியில் விலகிச் சென்றாலும் தேசிய பட்டியலை தனக்கு வழங்காத கட்சியின் தலைமைக்கு எதிராக வசைபாடுவது வழக்கம்.

1989ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரை பாராளுமன்ற அரியாசனத்தில் கம்பீரமாக உட்கார்ந்து வரும் பஷீர் சேகுதாவூத் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எவராலும் சிறிதேனும் கவனத்திற் கொள்ளப்படாது அரசியல் அநாதையாக்கப்பட்டிருந்தார்.ஒரு தடவை ஈரோஸ் அமைப்பிடமிருந்தும் மூன்று தடவைகள் மு.காவின் தேசியப்பட்டியலையும் சுவைத்த பஷீர் சேகுதாவூத் 2010ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மாத்திரமே வெற்றிவாகை சூடி பாராளுமன்றம் சென்றிருந்தார்.முஸ்லிம் காங்கிரஸ் மூன்று தடவைகள் பஷீர் சேகுதாவூதிற்கு தேசியப்பட்டியல் வழங்கியதாக கூறினாலும் 2001-2008 வரையே மு.காவின் தேசியப்பட்டியலை அவர் அலங்கரித்தார்.மூன்று தடவைகள் தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக கூறும் போது அது பெரும் காலமாக தோற்றம் தருகின்றது.

பஷீர் சேகுதாவூத் 2015ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வானத்திலிருந்து வந்தாவது பாராளுமன்றம் செல்வேன் என பகிரங்கமாக கூறியிருந்தார்.இவர் கடந்த தேர்தலில் மு.காவில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்லவே அதிகம் விரும்பினார்.அத் தேர்தலில் மு.காவின் வேட்பாளர் பட்டியலில் அவருக்கு ஆசனம் வழங்கப்படவில்லை.கடந்த பாராளுமன்ற தேர்தலில் மு.கா மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தது.முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையே கைப்பற்றக் கூடிய நிலையிருந்தது.நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் கணிசமான வாக்குகளை பெறுமெனவும் நம்பப்பட்டது.இதில் கல்குடாவில் அமீர் அலியும் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவும் பலமிக்கவர்களாக திகழ்ந்ததால் மு.காவின் பிரதான இலக்காக ஏறாவூர் இருந்தது.இந்த நிலையில் ஏறாவூரைச் சேர்ந்த பிரபலங்களான பஷீர் சேகுதாவூத்,அலி ஷாகிர் மௌலானா ஆகிய இருவரையும் களமிறக்கும் போது விருப்பு வாக்குகள் பிரிந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர் அதி கூடிய வாக்குகளைப் பெற வாய்ப்பிருந்தது.இதன் காரணமாக மு.கா தனது வெற்றியை கருத்திற் கொண்டு இவர்கள் இருவரில் ஒருவரை களமிறக்குவது தான் சிறந்தது.

பஷீர் சேகுதாவூத் 2012ம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்,கடந்த வட மாகாண சபைத் தேர்தலில்,கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மு.காவை மஹிந்தவின் காலடிக்கு கொண்டு சேர்க்க அதிகம் பிரயத்தனம் செய்தார்.2012ம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.கா தனது முடிவிற்கு வராததன் காரணமாக தான் வகித்த பிரதி அமைச்சர் பதவியை யாருக்கும் தெரியாமல் இராஜினமா செய்திருந்தார்.குறித்த பிரதி அமைச்சர் பதவியானது மு.காவிற்கு சொந்தமானதால் அதனை தான் நினைத்த போது இராஜினாமா செய்து தூக்கி வீசும் அதிகாரம் பஷீர் சேகுதாவூதிற்கில்லை.இதன் பிற்பாடு யாருக்கும் தெரியாமல் அமைச்சரை அந்தஸ்துள்ள அமைச்சை அமைச்சர் ஹக்கீம் இலங்கையில் இல்லாத சந்தர்ப்பத்தில் பெற்றிருந்தார்.ஒரு கட்சியை சேர்ந்தவர் அமைச்சை அல்லது பிரதி அமைச்சை பெறுவதென்றால் அது கட்சியில் அனுசரணையில் இடம்பெற வேண்டும்.இந்த நடைமுறையை பஷீர் சேகுதாவூத் பின்பற்றாமை மு.கா கட்சியை காட்டிக் கொடுத்ததற்கு ஈடாகும்.எப்போதும் அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் தான் அமைச்சரை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்க வேண்டும் என்றால் இவ்வாறான பிரச்சினைகளும் எழத் தான் செய்யும்.இருந்தாலும் அதற்காக வேலிபாய்வதை ஏற்க முடியாது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மு.கா மைத்திரியை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது இறுதிவரை மஹிந்தவிற்கு விசுவாசமாகவே இருந்ததோடு வாக்களிப்பிளிருந்தும் தவிர்ந்திருந்தார்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜ பக்ஸ வெற்றி பெற்றிருந்தால் பஷீர் சேகு தாவூத் கோடிகளுக்குள் படுத்துறங்கிருருப்பார்.இங்கு நான் கூற வரும் விடயம் பஷீர் சேகுதாவூதை மு.காவிற்கு மாபெரும் துரோகமிழைத்தவராக நோக்கலாம் என்பதாகும்.

மேலே நான் குறிப்பிட்ட மு.காவிற்கு துரோகமிழைத்த அனைத்து விடயங்களிலும் பஷீர் சேகுதாவூத் மஹிந்த என்ற இரு நாமங்களும் ஒன்றிணைந்து வருகிறது.பஷீர் சேகு தாவூத் அரசியல் அநாதையாக்கப்பட்டமைக்கு அவர் கடைப்பிடித்த மஹிந்த சார்புக்கொள்கை பிரதானமானது என்பதை அறிந்துகொள்ளலாம்.பஷீர் சேகுதாவூத் மாத்திரம் தைரியமாக எழுந்து நின்று இவ்விடயங்களை கையாண்டதால் அது பகிரங்க துரோகமாக வெளியில் தெரிகிறது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பஷீருடன் சேர்ந்து கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமதும் வாக்களிப்பிற்குச் செல்லவில்லை.மு.காவின் தலைவர் கூட இறுதிவரை மஹிந்தவை ஆதரிக்கும் போக்கில் காணப்பட்டதாக அறிய முடிந்தது.தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் வரை மு.காவால் மைத்திரியை ஆதரவளிக்கும் முடிவு எடுக்க முடியாமல் இருந்ததென்றால் மு.காவின் உயர் பீடத்தில் மஹிந்தவிற்கு இருந்த செல்வாக்கை அறிந்துகொள்ளலாம்.எனவே,அமைச்சர் பஷீரை தூர வீசியமைக்கு மஹிந்த சார்பு கதையெல்லாம் காரணமல்ல.

இருந்த போதிலும் இவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பஷீர் சேகுதாவூத் மு.காவிற்கு எதிராக செயற்பட்டது போன்று ஏனையவர்கள் செயற்படவில்லை.இந்தப் போக்கும் கர்வமும் நீடித்தால் அது அமைச்சர் ஹக்கீமிற்கு பெரும் சவாலாக அமைவதோடு தலைமைத்துவத்திற்கும் உலை வைத்து விடலாம்.அதிலும் குறிப்பாக கடந்த ஜானாதிபதி தேர்தலில் மு.காவை மஹிந்தவை ஆதரிக்கச் செய்ய பஷீர் தலைமையிலான அணியொன்று செயற்பட்டிருந்தது.மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் மஹிந்த ராஜபக்ஸ பஷீர் சேகுதாவூதை பலப்படுத்தி மு.காவைச் சேர்ந்த பலரிற்கு அமைச்சு,பிரதி அமைச்சு மற்றும் முதலமைச்சுக்களை வீசி எறிந்து தன் பக்கம் ஈர்த்து தனிக் கட்சியை அமைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பஷீர் சேகுதாவூத் கடைப்பிடித்த போக்கு அவரின் தனிப்பட்ட செல்வாக்கை மிகவும் பாதித்திருந்தது.இந்த சந்தர்ப்பத்தில் பஷீர் சேகுதாவூதை அடக்காமல் அவருக்கு அரசியலில் உயிர் அளித்தால் அதற்கு பிறகு அவரை அடக்குவது அவ்வளவு இலகுவானதல்ல.தான் எது செய்தாலும் அமைச்சர் ஹக்கீம் குனிந்து செல்கிறாரென தலை மீதும் ஏறிவிடுவார்.அரசியல் நிலைமைகள் எவ்வாறு மாறுமென்பதை ஒரு போதும் ஊகிக்க முடியாது.ஏறாவூரில் மு.கா மிகவும் பலமுற்றிருப்பதால் இவரை இச் சந்தர்ப்பத்தில் அடக்க முனையும் போது ஏதேனும் சவால்கள் ஏற்பட்டால் அதனை அமைச்சர் ஹக்கீமால் எதிர்கொள்ளவும்  முடியும்.பஷீர் சேகுதாவூதிற்கு இத்தனை அவமானம் புடை சூழ்ந்து கேலி செய்கின்ற போது அவரால் அமைச்சர் ஹக்கீமிற்கு ஊடக அழுத்தத்தை வழங்க முடிந்ததே தவிர தனது மக்கள் செல்வாக்கை நிரூபித்து அமைச்சர் ஹக்கீமை வீழ்த்த முடியவில்லை.பஷீர் சேகுதாவூத் மஹிந்தவிடம் அமைச்சை பெற முயன்றது போன்று சேவைகளையும் பெற்றிருந்தால் இவரை மக்கள் தலை மீது தூக்கி வைத்து கொண்டாடிருப்பார்கள்.

நெடுங்காலமாகவே அமைச்சர் ஹக்கீமின் தனிப்பட்ட இரகசியங்கள் பஷீர் சேகுதாவூதின் மடியில் புதைந்து கிடப்பதான கதைகளும் மக்களிடையே காணப்படுகின்றன.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இவர் வானத்திலிருந்து வந்தாவது பாராளுமன்றம் செல்வேன் எனக் கூறிய வார்த்தைகள் அமைச்சர் ஹக்கீமின் தன் மானத்திற்கு அதிகம் சவாலை ஏற்படுத்திருந்தது.மிகவும் தைரியமிக்க இக் கூற்றானது பஷீர் சேகுதாவூதிடம் அமைச்சர் ஹக்கீமின் தனிப்பட்ட இரகசியங்கள் ஏதாவது புதைந்து கிடைக்குமா என்ற கருத்தை மேலும் வலுவாக்கியது.இந்த நிலையில் இவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆசனம்,தேசியப்பட்டியல் வழங்கினால் அமைச்சர் ஹக்கீமின் இயலாமையை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடும்.தற்போது அமைச்சர் ஹக்கீம் பற்றிய தனிப்பட்ட இரகசியங்கள் எதுவும் தன்னிடமில்லை என பஷீர் சேகு தாவூத் கூறியுள்ளமை குறிப்பிடத்தகது.

ஏறாவூரில் அலி ஷாகிர் மௌலானா,முதலமைச்சர் நஸீர் அஹமத் என மு.காவிடம் மூன்று சம இடத்தில் வைத்து மதிக்கத்தக்க பிரபலங்கள் உள்ளன.இதில் நஸீர் அஹமத் முதலமைச்சராக இருப்பதால் பாராளுமன்றத் தேர்தலில் அவருடையை பக்கமிருந்தான பிரச்சினைகள் குறைவு.ஏனைய இருவரில் ஒருவருக்கே பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை மு.காவால் வழங்க முடியும்.இதில் மேலுள்ள பல பிரச்சினைகளில் பஷீர் சேகுதாவூத் சம்பந்தப்பட்டிருப்பதால் மு.காவின் வளர்ச்சி நலனை கருத்திற் கொண்டு அலி ஷாகிர் மௌலானாவை போட்டி இட வைப்பது பொருத்தமானது.என்னதான் இருந்தாலும் பஷீர் சேகுதாவூத் மு.காவின் ஆரம்ப காலப் போராளி.அலி ஷாகிர் மௌலான நேற்று மு.காவிற்குள் வந்தவர்.அலி ஷாகிர் மௌலானா,நஸீர் அஹமத் ஆகியோர் மு.காவிற்கு எதிராக நின்ற போது இவர்களை எதிர்த்து வரிந்து கட்டுக்கொண்டு நின்ற பஷீர் சேகுதாவூத் தற்போது ஆவர்களினால் பின்தள்ளப்பட்டமை சற்று சிந்திக்கத்தக்கதும் கூட.கல்குடாவில் அமீர் அலி,காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்,ஏறாவூரில் அலி ஷாகிர் மௌலானா மற்றும் நஸீர் அஹமத் ஆகியோர் மு.காவிற்கு எதிராக நின்ற போது பஷீர் சேகுதாவூத் சிறிது சளைத்திருந்தாலும் மு.காவை மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டும் துடைத்தெறிந்திருப்பார்கள்.

ஏறாவூரில் ஒரு முதலமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர் என மு.காவின் பலம் கொண்ட அரசியல் பிரதிநிதிகள் உள்ள போது பஷீர் செகுதாவூதிற்கு தேசியப்பட்டியலை வழங்குவது மு.காவின் வளர்ச்சியிலும் எதிர் தாக்கத்தை செலுத்திவிடும்.கல்குடா போன்றவற்றில் தேசியப்பட்டியல் வாக்குறுதி இருப்பதால் மேலும் பிரச்சனைகளை பெரிதாக்கிவிடும்.இப்படி பல காரணிகள் சேர்ந்து ஒட்டு மொத்தமாக பஷீர் சேகுதாவூதின் அரசியல் அடித்தளத்தை இருந்த இடம் தெரியாது அழித்துவிட்டது.இதற்குப் பிறகு பஷீர் சேகுதாவூத் அரசியல் அதிகாரங்களை பெறுவதற்கான சாதகத் தன்மை குறைவு.கடந்த தேர்தலில் அமைச்சர் ஹக்கீம் நினைத்திருந்தால் பஷீரிற்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியிருக்க முடியும்.அமைச்சர் ஹக்கீம் தகுந்த நேரம் காத்திருந்து ஆப்பைச் சொருகி பஷீரின் அரசியலை குழி தோண்டி புதைத்துவிட்டார்.தனக்கு ஒரு கண் போனாலும் பறவாயில்லை தன் எதிரிக்கு இரு கண்களும் போக வேண்டுமென பஷீர் தன்னை வீழ்த்திய ஹக்கீமிற்குகெதிராக யுத்தமொன்றை பிரகடனம் செய்துள்ளார்.தனது போராட்டம் பதவிக்கானதல்ல என்பதை நிரூபிக்க பிரதிநிதித்துவ அரசியலில் இருந்தும் விலகியுள்ளார்.

பஷீர் செகுதாவூத் அமைச்சர் ஹக்கீமுடன் மிகவும் நெருக்கமானவர்.அமைச்சர் ஹக்கீம் மு.காவை பொறுப்பேற்று அவரையே செயலாளராக நியமித்திருந்தார்.அதன் போதெழுந்த எதிர்ப்புகளை தாங்க முடியாமல் அமைச்சர் ஹக்கீம் அவரை தவிசாளராக்கியது வரலாறு.2008ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மு.காவை வெற்றியடையச் செய்ய அமைச்சர் ஹக்கீமுடன் இணைந்து பஷீரும் தேர்தலில் களமிறங்கினார்.இப்படி அமைச்சர் ஹக்கீமுடன் இணைந்து பல விடயங்களில் செயற்பட்டுள்ளார்.அமைச்சர் ஹக்கீமின் பலம்,பலவீனங்களை பஷீர் நன்கே அறிவார்.இதன் காரணமாக அமைச்சர் ஹக்கீம் பஷீரை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல.

பல முறை மு.காவின் பேராளர் மாநாட்டில் இவர் தவிசாளர் பதவியிலிருந்து அகற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.இருந்தாலும் எதிர்வரும் பேராளர் மாநாட்டில் இவரை தவிசாளரை விட்டும் நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.இவர் கட்சியின் தவிசாளர் என்ற பலமிக்க பதவியை தன்னகத்தே கொண்டுள்ள போதும் கட்சித் தலைவருக்கும்,கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுக்கு ஒரு சாதாரண பொது மகன் போன்று காலத்திற்கு காலம் ஏதாவதொன்றை எழுதிக்கொண்டிருக்கின்றார்.ஒரு கட்சிக்குள் பல பிரச்சினைகள் காணப்படும்.அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லல் கட்சியை பலவீனப்படுத்தும்.தற்போதையை பஷீர் சேகுதாவூதின் செயற்பாடு கட்சியை பலவீனப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.இருப்பினும் அவருடைய வினாக்கள் நியாயமற்றவையென யாராலும் தூக்கி வீசப்படுபவை அல்ல.இவர் இவ்வாறான கேள்விகளை முன் வைக்கும் போது மு,காவின் உயர் பீட உறுப்பினர் என்ற வகையில் அக் கேள்விகள் சிலரிடையே மிகைத்த பெறுமானத்தை பெறுகின்ற போதும் அவரது கடந்த கால செயற்பாடுகள் காரணமாக சிலரிடம் குறைவான மதிப்பெண்களையும் பெறுகிறது.

ஒரு கட்சித் தலைவர் அல்லது கட்சி பிழையான பாதையில் பயணிக்கும் போது அதனை எதிர்கொள்ள சில படிகள் உள்ளன.முதலில் கட்சிக்குள்ளிருந்து மிருதுவாகப் போராட வேண்டும்.அதற்கு இயலாத போது கடிமான போக்குடன் போராட வேண்டும்.அதற்கும் இயலாத போது பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.அதற்கும் இயலாத போது மாற்றுக்கட்சிகளுடன் இணைந்து கட்சியை அழிக்க அல்லது மீட்க போராட வேண்டும்.தற்போது பஷீர் சேகுதாவூத் மூன்றாவது படியில் நிற்கின்றார்.பஷீர் சேகுதாவூத் கட்சிக்குள்ளிருந்து போராடும் முதலிரண்டு போராட்டப் படிகளையும்  முன்னெடுக்காமை அவரது போராட்ட தன்மையை பலவீனப்படுத்துகிறது.குறிப்பாக கட்சிக்குள்ளிருந்து போராடும் வலிமையை பஷீர் சேகுதாவூத் இழந்தமை முதற் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமைக்கான காரணமாகவுமிருக்கலாம்.

பஷீர் சேகுதாவூத் அமைச்சர் ஹக்கீமிற்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளார்.அவற்றில் கரையோர மாவட்டத்தை மைத்திரியிடமிருந்து பெறுமாறு,அமைச்சர் ஹக்கீம் நகர அபிவிருத்தி அமைச்சராக இருப்பதால் தம்புள்ளை பள்ளிவாயல் பிரச்சினையை தீர்க்க கோரி,தேசிய மாநாட்டை சில கொள்கைகளால் அலங்கரிக்கக் கோரி,ஹசனலியின் பதவி குறைப்பின் போது இடம்பெற்ற சில முறைகேடுகள்,தாறுஸ்ஸலாம் உரிமை பற்றிய கடிதங்களை முக்கியமானதாக குறிப்பிடலாம்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பஷீர் சேகுதாவூத் மஹிந்தவை ஆதரித்ததால் தனது போக்கை மக்களுக்கு நியாயப்படுத்த வேண்டிய ஒரு தேவை உள்ளது.கரையோர மாவட்டத்தை அவ்வளவு இலகுவாக மு.காவால் பெற்றுக்கொடுக்க முடியாது.இவர் கூறியது போன்று மு.கா கரையோர மாவட்டக் கதையை தூக்கிப் பிடித்து மைத்திரியிடம் சென்றிருந்தால் மூக்குடைபட்டு வந்திருப்பார்கள்.இதன் போது மஹிந்தவும் மைத்திரியும் ஒன்று என்ற தோற்றப்பாடை எழுப்பி தன்னை மக்களிடையே மிக இலகுவாக நியாயப்படுத்தியிருப்பார்.இருப்பினும் கரையோர மாவட்டக் கோரிக்கை மு.காவின் பல நாள் கோரிக்கைகளில் ஒன்று.இதனை மு.காவை பெறச் செய்வதற்கான அழுத்தமாகவும் நோக்கலாம்.

தம்புள்ளை பள்ளிவாயல் பிரச்சினையுடன் தொடர்புடைய அமைச்சை ஹக்கீம் வைத்திரிந்ததால் அதனை தீர்க்கக் கோருவது நியாயமானது.இந்த வினாவை அவர் அளுத்கமை பிரச்சினையின் போது நீதி அமைச்சராக இருந்த ஹக்கீமை நோக்கி விடுக்காமையின் மர்மம் யாவரும் அறிந்ததே.இன்று குறித்த அமைச்சை வைத்திருப்பதால் அதனை செய்யும் நிலை இலங்கையில்லை.இவ்வாறான வினாக்கள் ஹக்கீமை நோக்கி எழுப்பப்படும் போது அது மக்களிடையே ஹக்கீமை இகழ்வதற்கான பிடியாக மாறும்.இது அவருடைய இயலாமையை தெளிவாக புடைபோட்டுக் காட்டும்.தேசிய மாநாடு என்பது கொள்கைகளால அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.இதன் போது இவ்வாறான வினாக்களை விடுப்பது தன்னை உயர்ந்த அறிவாளியாகவும் சமூக அக்கறை கொண்டவராகவும் மக்களிடையே எடுத்துக் காட்டும்.இதில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை பிரகடனம் செய்யுங்கள் என்றால் பஷீரின் அறிக்கை  சாய்ந்தமருது மக்களிடையே அதிகம் தாக்கத்தை செலுத்தும்.பலரை தன் பக்கம் ஈர்க்கவும் வழி சமைக்கும்.

அமைச்சர் ஹக்கீமால் ஹசனலியின் பதவி குறைப்பு விடயத்தில் சில முறைகேடான வேலைகள் நடைபெற்றுள்ளதான கதைகள் ஊசலாடின.என்னதான் கதைகள் எழுந்தாலும் அங்கு இருந்த ஒருவர் அது பற்றி வெளிப்படையாக கூறும் போது அக் கருத்து மிகவும் கனத்த பெறுமானத்தை பெறும்.அமைச்சர் ஹக்கீம் இதனை கடிதமாக வரைந்து கையொப்பம் சேகரித்ததை கண்டித்து இரு மௌலவிமார்களை கட்சியை விட்டும் நீக்கி அவர்களை அவமானப்படுத்தியிருந்தார்.இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் உண்மையை அறிய வேண்டிய தேவை உள்ளது.அந்த வேளையில் அங்கு நடந்த சிலவற்றைக் குறிப்பிட்டு பஷீர்சேகுதாவூத் அமைச்சர் ஹக்கீமிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.பஷீர் சேகுதாவூத் என்ன நோக்கத்திற்காக கடிதம் எழுதியிருந்தாலும் அதன் உண்மைகளை மக்கள் அறிய அங்கிருந்த ஒருவர் பகிரங்கமாக வெளிப்படுத்துவது பொருத்தமானது.அந்தக் கடிதத்திற்கு இற்றை வரை மு.காவின் தலைவரிடமிருந்தோ அல்லது உயர்பீட உறுப்பினர்களிடமிருந்தோ மறுப்பில்லை.இதனை தவிசாளர் என்ற வகையில் பார்க்காது போனாலும் அவ்விடத்தில் இருந்த ஒருவர் என்ற அடிப்படையில் உண்மையை மக்களுக்கு விளக்கும் செயற்பாட்டை பஷீர் செய்திருந்தார்.

தற்போது பஷீர் சேகுதாவூத் தாருஸ்ஸலாம் பற்றி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.தாருஸ்ஸலாம் பற்றி பஷீர் மாத்திரம் கேட்கவில்லை.உயர்பீட உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.தாருஸ்ஸலாம் சம்பந்தமாக வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் அது தனது சொத்தென உரிமை கொண்டாடிய வரலாறுகளும் உள்ளன.தாருஸ்ஸலாம் மக்கள் சொத்து.அது பற்றி மக்கள் எந்த நேரமும் கேள்வி எழுப்பலாம்.அக் கேள்விகளுக்கு அமைச்சர் ஹக்கீம் மு.காவின் தலைவர் என்ற வகையில் பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது.அண்மையில் சிரேஷ்ட ஊடகவியாளர் மீரா இஸ்ஸதீன் கூட கேள்வி எழுப்பியிருந்தார்.பஷீர் செகுதாவூதை தங்களது தவிசாளராக பார்க்காது ஒரு சாதாரண பொது மகானாக நினைத்தாவது இதற்கு அமைச்சர் ஹக்கீம் பதிலளிக்க வேண்டும்.பஷீர் பகிரங்கமாக மீடியாவில் கேள்வி கேட்டால் அதற்கு அமைச்சர் ஹக்கீமின் மடியில் கனமில்லை என்றால் அவரும் பகிரங்கமாக மீடியாவில் பதில் கொடுத்து பஷீரை மூக்குடைக்கலாம் அல்லவா.உயர் கூட்டத்திற்கு பின்னால் ஒழிக்க வேண்டிய அவசியமில்லை.

கடந்த உயர் பீடக் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் தாருஸ்ஸலாம் பற்றி விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பில் பலர் கேள்வி எழுப்பியும் இவ்வளவு நாளும் இது பற்றி எதுவும் கதைக்காத அமைச்சர் ஹக்கீம் திடீரென தாருஸ்ஸலாம் பற்றி வாய் திறக்கின்றார் என்றால் அது பஷீரின் கேள்விகளில் எழுந்த அழுத்தம் என்பதை அறிய முடிகிறது.சிலர் பஷீரின் கடிதங்களை அமைச்சர் ஹக்கீம் வாசியாது கிழித்து வீசியதாக கூறுகின்றனர்.பஷீர் அமைச்சர் ஹக்கீமிற்கு வழங்கிய கடிதத்தை வாசியாது போனாலும் விடயம் அமைச்சர் ஹக்கீமை சென்றடைந்துள்ளது.அமைச்சர் ஹக்கீம் தாருஸ்ஸலாம் பற்றி விளக்கமளிக்கின்ற போது நிச்சயம் பஷீர் கேள்வி எழுப்புவார்.அந்தக் கேள்விகளுக்கு அமைச்சர் ஹக்கீம் விடையளிக்க மறுத்தால் இது தொடர்பில் பஷீரின் பக்கம் ஆதரவுப் படை திரளாது போனாலும் அமைச்சர் ஹக்கீமை எதிர்க்கும் அணி உருவாக வாய்ப்புள்ளது.இதனால் அமைச்சர் ஹக்கீம் இவ்விடயத்தை மிக சாணக்கியமாக கையாள முனைந்திருப்பார் என்பது யாவரும் அறிந்ததே.

அமைச்சர் ஹக்கீம் தாருஸ்ஸலாம் பற்றி கதைத்து முடிந்தவுடன்,பஷீர் எழுந்து கேள்வி கேட்க முற்பட்டுள்ளார்.பஷீர் எந்தக் கேள்வியும் கேட்காது சிலரால் தடுக்கப்பட்டுள்ளார்.இதனைப் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள மு.காவின் உயர்பீட உறுப்பினர் றியால் அதனை வன்மையாக கண்டித்துள்ளார்.றியாலின் இக் கூற்றானது தடுத்தவர்கள் மீது பிழை என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியலின் மீது குறி வைத்துள்ள றியால் இதனை கூறுகிறார் என்றால் அவர் இதனை எந்தளவு அநாகரிகமான செயலாக நினைத்திருப்பார்.பஷீரின் கேள்விக்கு பதிலளித்துவிட்டு மறு கேள்வி கேட்க முடியாதென்றால் பஷீரின் அக் கேள்விக்கு அமைச்சர் ஹக்கீம் பதிலளித்திருக்க வேண்டிய அவசியமில்லை.

அமைச்சர் ஹக்கீம் பேச அனுமதியுங்கள் எனக் கூறியும் அதனை கேட்காது உயர் பீட உறுப்பினர்கள் பஷீரை தடுத்து நிறுத்தினார்களாம்.இங்கு ஒரு விடயத்தை விளங்கலாம்.அமைச்சர் ஹக்கீம் கூட பஷீர் இவ்விடத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளவரென கூறியுள்ளார்.தலைவர் அனுமதித்தும் தொண்டர்கள் எதிர்க்கின்றாகள் என்றால் கட்சித் தலைவரான அமைச்சர் ஹக்கீமிற்கு மரியாதை இல்லையா? சில வேளை இது அமைச்சர் ஹக்கீமால் திட்டமிடப்பட்ட ஒன்றாகவுமிருக்கலாம்.அமைச்சர் ஹக்கீம் தான் திட்டமிடவில்லை என்பதை நிரூபிக்க அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் போதுமாகும்.அமைச்சர் ஹக்கீம் சொல்வதை கிளிப்பிள்ளை போல் கேட்டுச் செல்ல வேண்டும் என்ற சர்வதிகாரம் தான் மு.காவின் தற்போதைய கொள்கையோ தெரியவில்லை.பஷீர் சேகுதாவூத் சமூகத்திற்கெதிராகவும்,மு.காவிற்கெதிராகவும் நடந்த போதெல்லாம்  கொதித்து எழாத மு.காவின் உயர் பீடம் மு.காவில் உள்ள சிலரது முகத் திரைகளை கிழித்தெறியும் கேள்விகளைக் கேட்டவுடன் கொதித்தெழுவது அதில் உள்ளவர்கள் எவ்வாறானவர்கள்  என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.கடந்த மு.காவின் உயர் பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் பற்றி அமைச்சர் ஹக்கீம் பூரணமாக விளக்கிவிட்டார் என்றால் அதனை பஷீர் சேகுதாவூதின் கேள்விகளோடு சம்பந்தப்படுத்தி ஒருவராவது பகிரங்கமாக வெளியிடுங்கள் பார்க்கலாம்.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 01-09-2016ம் திகதி வியாழக் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Sunday, January 29, 2017

ஹக்கீமிற்கு  பஷீர் மோனியா

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் ஹக்கீம் ஒரு சிறு நேரம் மாத்திரமே மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் தவிர்ந்து வேறு விடயங்கள் பற்றி  பேசியிருப்பார்.முதலமைச்சர் நஸீர் ஹாபிசும் தனதுரையின் பெரும் பகுதியை பஷீர் தொடர்பில் கதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இவர்கள் இப்படி பஷீர் மோனியா நோய் பிடித்து அலைவதன் காரணமென்ன?

அவர் வெளியிடட்டதாக கருதப்படும் தாருஸ்ஸலாம் மறைக்கக்கப்ட்ட மர்மங்கள் எனும் புத்தகத்தை மையப்படுத்தியே இவர்கள் பஷீரை ஏசி பேசிக்கொண்டனர்.இந்த விடயத்திற்கே இவர்கள் இப்படி ஆடிப் போனால் அவர் இன்னும் ஏதாவது சொன்னால்?

அக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் பற்றிய புத்தகமான பிழையான தரவுகளை உள்ளடக்கியது என நிறுவ அமைச்சர் ஹக்கீம் தாருஸ்ஸலாம் பற்றி மு.காவின் உயர்பீடத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அதன் போது பஷீர் ஒன்றும் பேச முடியாத நிலைக்கு வந்து அவரைக் காப்பாற்ற உயர்பீடத்தை நிறுத்தியதாகவும் கூறியிருந்தார்.இது நடந்ததை முற்றாக மாற்றி அமைச்சர் ஹக்கீம் கூறிய கதையாகும்.

அவ் உயர் பீடக் கூட்டத்தில் நடந்தது என்ன?

பஷீர் சேகுதாவூத் அமைச்சர் ஹக்கீமிற்கு தாருஸ்ஸலாம் பற்றி கடிதம் எழுதியிருந்தார்.இவரது வினாவை மையமாக கொண்டு அமைச்சர் ஹக்கீம் அதற்கு 2016.08.23ம் திகதி இடம்பெற்ற உயர் பீட கூட்டத்தில் பதில் அளித்தார்.இதன் போது பஷீர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய போது சிலர் அவரை கேள்வி கேட்க முடியாதவாறு வேறு விடயங்களை கூறி தடுத்தனர்.இதன் போது பஷீர் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் அவரை பேச விடுங்கள் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பில் பஷீரை தடுத்தமை பிழையென்ற வகையில் உயர்பீட உறுப்பினர் றியால் அறிக்கையொன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தான் நடந்தது.இதில் பஷீர்,தாருஸ்ஸலாம் பற்றிய ஹக்கீமின் விடையால் வாயடைத்துப் போகவில்லை என்பதை மக்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.உயர்பீடக் கூட்டத்தை தனது ஏற்ற வகையில் கையாள்வதில் சாணக்கியத் தலைவர் மிகவும்  தேர்ச்சிமிக்கவர்.ஹக்கீம் நடந்ததை மாற்றி வேறு வியாக்கியானம் கற்பிக்கின்றார்.இதுவே இவ்விடயத்தில் அவரது இயலாமையை கூறுகிறது.


Saturday, January 28, 2017

யார்   முனாபிக்???
***************

நிந்தவூரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சிக்குள் இருக்கும் முனாபிக்களுக்கு தகுந்த பாடம் புகட்ட உள்ளதாக நசீர் அகமட் அவரது பாட்னர் றவூப் ஹக்கிம் ஆகியோர் மனவேதனையில் அடிக்கடி பேசினார்கள் இவர்களின் பேச்சை கேட்ட மக்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர்

  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சின்னத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து கட்சியின் சொத்தை அபகரித்து கட்சியை அழிக்க முதலில் முனாபிக் தனமாக செயல்பட்டவர் என்றால் நசீர் அகமட் என்பதை மூத்த போராளிகள்  இன்னும் மறக்க வில்லை அது போல் தனது பங்காளி றவூப் ஹக்கிம் இன்று பதவிக்காக தேசியப்பட்டியல் பதவி என்று மக்களை ஏமாற்றி முனாபிக் தனமாக தற்போது அரசியல் செய்வது இந்த நசீர் அகமட் அவர்களுக்கு புரிந்தும் புரியாதது போல் சந்தர்பத்துக்கு ஏற்றவாறுவேஷம் போட்டு  பேசுவது வேடிக்கையாகும்

இன்று மற்றவர்களை முனாபிக் என்று கூறும் நசீர் அகமட் .றவூப் ஹக்கிம் ஆகியோர் முனாபிக் தனமாக கட்சியின் சொத்தை அபகரித்துள்ளதாக ஆதாரத்துடன் புத்தகமே வெளிவந்துள்ளது அதன் விபரம் இன்றைய (29/01/2017) சிங்கள பத்திரிகையான லங்கா தீப பத்திரிகையில் வந்துள்ளது இதற்கு என்ன சொல்வது
கட்சி சொத்து என்பது மக்கள் சொத்து அதை அபகரிப்பது ஹறாம் இது தெரியாதவர்கள் முஸ்லிம் என்ற சொல் அடங்கிய கட்சியில் இருப்பதே கேவலம் மற்றும் அல்ல முஸ்லிம் சமுதாயத்துக்கு அவமானம் என முனாபிக் பட்டத்தை மடியில் வைத்துக் கொண்டு மற்றவர்களை முனாபிக் என்று கூறுபவர்கள் உலகில் இருக்கும் காலம் வந்து விட்டது இது உலக அழிவுக்கு ஒரு ஆதாரம் என்று தான் கூற  வேண்டும்

இறால் தலைக்குள் அசிங்கத்தை வைத்துக்குக் கொண்டு நான் சுத்தாமானவன் என்று கூறுவது போல் இருக்கிறது நசீர் அகமட் அவர்கள் அடிக்கடி முனாபிக் என்று மற்றவர்களை நிந்தவூர் மேடையில் கூறியது

பஷிர் சேகுதாவூத் கட்சியை மஹிந்த குடும்பத்துக்கு அடகு வைத்ததாக கூறுகின்றனர் இவர்களின் கௌரவம் காத்த மாவீரன் பஷிர் என்பதை மறந்து தம்பட்டம் அடிக்கின்றனர் ஆனால் இன்று இரவு அதிர்வில் அதிரப் போகும் உண்மைகள்

பஷிர் இல்லை என்றால் சிலர் தற்கொலை புரிந்து பல வருடமாகி இருக்கும்

இன்று முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும் முனாபிக் என்றால் அது நசீர் அகமட் றவூப் ஹக்கிம் இருவரும் தான் என்பது மக்களுக்கு தெரியும் இதற்கான ஆதாரங்கள் மூத்த போராளிகளிடம் உள்ளது




ஏன் ஹரீஸ் புறக்கணிக்கப்பட்டார்?

(இப்றாஹீம் மன்சூர்)

இன்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதி அமைச்சர்  ஹரீசுக்கு முறையான அழைப்பிதல் வழங்கப்படவில்லை.அது போன்று அவர் இன்று நடாத்திய நிகழ்விற்கு மு.காவின் முக்கிய பிரமுகர்கள் செல்லவில்லை.இந்த நிகழ்வின் மீதான புறக்கணிப்பு எதற்கு?

என்ன தான் குறை கூறினாலும் கல்முனையை சேர்ந்த காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிப்பதில் அவர் காட்டிய அக்கறையும் அண்மைக் காலமாக சமூக விடயங்களில் அவர் காட்டிக்கொண்டிருக்கும்  அக்கறையும் ஹரீசை ஹீரோவாக மாற்றிக்கொண்டிருக்கின்றது.சிலரது வாய்களில் மு.காவின் அடுத்த தலைவர் இவர் தான் என்ற பேச்சுக்களும் வருவதை அவதானிக்க முடிகிறது.கிழக்கு மாகாணத்தில் சிறந்த தலைமைத்துவம்மிக்கவர் யார் உள்ளார் என்ற வினாவிற்கு இவரது செயற்பாடுகள் பதில் வழங்குகின்றன.இப்படியான நிலையில் இவரை இன்னும் இன்னும் ஹீரோவாக மாற்றுவது நல்லதல்ல.

இந் நிகழ்விற்கு அமைச்சர் ஹக்கீம் சென்றிருந்தால் அந் நிகழ்வு பாரிய பேசு பொருளான நிகழ்வாக மாறியிருக்கும்.இது ஹரீஸ் மீதான மதிப்பெண்ணை இன்னும் அதிகரித்திருக்கும்.அது மாத்திரமல்ல மீனவர்கள் தான் மு.காவிற்கு கண் மூடித் தனமாக ஆதரவளிப்பவர்கள்.இவர்கள் மு.காவின் ஆதரவாளர்களாக இருக்காது ஹரீசின் தனிப்பட்ட ஆதரவாளர்களாக மாறுவது எதிர்காலத்தில் அமைச்சர் ஹக்கீமால் பிரதி அமைச்சர் ஹரீஸை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.அவரது புறக்கணிப்பு இதற்காகவே எப்பதே பலரது ஊகமாகும்.


இன்றைய நஸீர் ஹாபிசின் உரை எவ்வாறு அமைந்திருந்தது?

(அபு ரஷாத்)

இன்று நிந்தவூரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிசின் உரை வழமைக்கு மாற்றமாக மு.கா தலைமைக்கு அதிகம் மதிப்பளித்ததை அவதானிக்க முடிந்தது.எனது இந்த அவதான இடைவெளி மிக குறுகிய காலத்திற்குள்  என்பது தான் குறிப்பிடத்தக்கது.

சில மாதங்கள் முன்பு சாய்ந்தமருதில் இடம்பெற்ற கூட்டமொன்றில் (கூக்கிரல் இடப்பட்ட பிரச்சாரக் கூட்டம்) கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் பேசிய போது அவர் அமைச்சர் ஹக்கீமின் நாமத்திற்கு உயர்ந்த கௌரவம் கொடுத்து பேசியதாக  அவதானிக்க முடியவில்லை.அமைச்சர் ஹக்கீம் இல்லாவிட்டாலும் இந்த கட்சி இருக்கும் என அவர் அக் கூட்டத்தில் கூறியமை குறிப்பிடத்தக்கது.

இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் அமைச்சர் ஹக்கீமை புகழ்வதையே தனதுரையின் பிரதான பங்காக அமைத்திருந்தார்.இப்படி புகழ்ந்துவிட்டு பஷீர் சேகுதாவூதின் (இப் பெயரை நேரடியாக உச்சரிக்காமல் மறைமுகமாகவே கூறியிருந்தார்) மீது அமைச்சர் ஹக்கீம் எதிர்வரும் பேராளர் மாநாட்டில் கடும் எடுக்க வேண்டும் என்ற பாணியில் அமைத்திருந்தார்.பேராளர் மாநாட்டில் நிர்வாகிகளை தெரிவு செய்வதில் ஹக்கீம் நேரடியாக எதுவும் செய்ய முடியாது என்பது நஸீர் ஹாபிசிற்கு தெரியாதா? இவர் தனது குறித்த வேண்டுகோளை மு.காவின் உயர் பீட உறுப்பினர்களை நோக்கி விடுத்திருந்தால் அது பொருத்தமானதாக அமைந்திருக்கும்.

ஏன் இந்த மாற்றம்? இவ்வளவு நாளும் கொதிக்காத இவர் தற்போது ஏன் அதிகம் கொதிக்கின்றார்? இந்த வினாக்களுக்கான விடைகளை தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தக வெளியீட்டுடன் சம்பந்தப்படுத்திப் பார்த்தால் பெற்றுக்கொள்ளலாம்.


நஷீர் ஹாபிஸ் பஷில் ராஜபக்ஸ பற்றி கதைப்பது ஏளனமானது

(இப்றாஹீம் மன்சூர்)

இன்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வில் நஷீர் ஹாபிஸ் பஷீர் செகுதாவூதை மறைமுகமாக சுட்டிக் காட்டி அவர் பஷில் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக செயட்பட்டவராக மக்களிடையே காட்டியதை அவதானிக்க முடிந்தது.

இதனை கேட்டுக்கொண்டிருந்த எனக்கு “கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓடும்” என்ற ஏளனம் தான் வந்தது.நஷீர் ஹாபிஸ் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் இருந்தார்.இதன் பொருளை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இவர் மஹிந்த ராஜபக்ஸ அணியினருடன் ஒட்டி உறவாடியவர்.

இப்படியானவர் பஷீர் செகுதாவூதை ராஜபக்ஸவினருடன் தொடர்பு படுத்தி விமர்சிக்க  எந்த அருகதையுமற்றவர்.


பிரதி அமைச்சர் தனது கட்சி பிரதி அமைச்சரை இழிவு படுத்தினாரா?

இன்று நிந்தவூரில் மு.காவின் ஏற்பாட்டில் மிகப் பிரமாண்டமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந் நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் செல்லவில்லை.இது தொடர்பில் ஆராய்ந்த போது

“இந் நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் தகுந்த விதத்தில் அழைக்கப்படவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.அது மாத்திரமல்ல மாகாண சுகாதார அமைச்சர் நஸீரின் பெயரிற்கு அடுத்தே பிரதி அமைச்சர் ஹரீசின் பெயர் அழைப்பிதழில் போடப்பட்டுள்ளது.”

இதன் காரணமாகவே அவர் செல்லவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.protocol இன்  படி மாகாண அமைச்சு பிரதி அமைச்சுக்கு கீழே உள்ளது.மேலும்,ஹரீஸ் கட்சியின் பிரதித் தலைவர்களிலும் ஒருவர்.அவரை அழைப்பதானால் அதற்கு தகுந்த விதத்தில் அழைத்திருக்க வேண்டும்.

குறித்த அழைப்பிதழில் ஹரீசின் பெயரை போடுவதற்கு அவரிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை.அனுமதி தேவையில்லை என்று உரிமை எடுத்து செயற்படுவதாக இருந்தால் அவரின் பெயரிற்கு தகுந்த மரியாதை வழங்கப்பட வேண்டுமல்லவா?

இன்று பிரதி அமைச்சர் ஹரீஸ் மீனவர்களுக்கு கடற்தொழில் உபகரணங்களை வழங்கி வைத்திருந்தார்.அந் நிகழ்விற்கு மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் நினைத்திருந்தால் நேரமொதிக்கி சமூகமளித்திருக்க முடியும்.இன்று அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்ட நிகழ்வுகளை விட இது முக்கியமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

மு.காவினுள் பிளவுகள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான பிளவுகளும் தேவை தானா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.



Friday, January 27, 2017

அட்டாளைச்சேனை மக்களுக்கு ஹசனலி தான் பிரச்சினையா?

(abu rashath)

அட்டாளைச்சேனை மக்கள் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படப் போகிறதென அறிந்தால் மாத்திரமே சாரணை வரிந்து கட்டுகிறார்கள்.தேசியப்பட்டியலானது சல்மானிடமுள்ள ஒவ்வொரு  நாளும் அட்டாளைச்சேனைக்கு உரித்தான தேசியப்பட்டியலின் வாழ்  நாள் குறைந்து கொண்டே வருகிறது.

ஏன் இதனை அட்டாளைச்சேனை மக்கள் அறிந்து கொள்ளாமல் உள்ளனர்.தமிழக ஜல்லிக்கட்டுப் புரட்சிக்கு தமிழகமே ஆடிப்போனது போல மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்து அட்டாளைச்சேனை பள்ளிவாயல் களத்திற்கு வந்தால் ஹக்கீம் ஆடிப் போய் விடுவார்.

இப்போது ஹசனலி மீது கொண்ட அச்சமும் பறந்துவிட்டது.இன்னுமேன் கால தாமதம்.குட்டக் குட்ட குனிபவன் முட்டாள் என்பதை அட்டாளைச்சேனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.உணர்ந்து கொள்வதோடு அதனை உணர்த்தவும் வேண்டும்.

இங்கு ஆணித்தரமான உண்மையை கூறிட விரும்புகிறேன்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை பலமாக ஆதரித்த ஊர் அட்டாளைச்சேனையாகும்.அங்கு எந்த வேட்பாளரும் இல்லாத நிலையில் அவர்கள் ஆதரித்திருந்தார்கள்.அவர்களின் வாக்கு இல்லையென்றால் மு.கா அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை ஒரு போதும் பெற்றிருக்காது.

அவர்களது ஊரில் போடப்பட்ட மயில் வேட்பாளரை அவர்கள் சிறிது ஆதரித்திருந்தாலும் மயில் அம்பாறையில் தோகை விரித்தாடிருக்கும்.மு.காவின் இராச்சியமே சரிந்திருக்கும்.மு.காவை பலப்படுத்திய அட்டாளைச்சேனைக்கு ஹக்கீமின் கைம்மாறு இது தானா?


மரணித்தவருக்கு துரோகம் செய்வதை பார்த்துக்கொண்டிருக்கலாமா?

(அபு ரஷாத்)

இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு நேரிய வழியை தனதுயிரை இழந்து காட்டிய மர்ஹூம் அஷ்ரபை இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிடுவார்களாக இருந்தால் அவர்களைப் போன்ற துரோகிகள் யாருமில்லை என்று தான் கூற வேண்டும்.

தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் பெயரிலே வெளியிடப்பட்ட நூலில் மறைந்த மாமனிதர் அஷ்ரபும் அவருடைய குடும்பமும் பாதிக்கப்பட்ட விடயம் தெட்டத் தெளிவாக நிரூபணமாகியுள்ளது.அது பற்றி வெளியிடப்பட்ட குற்றச் சாட்டுக்களுக்கு அதன் சொந்தக்காரர்கள் சிறிதும் வாய் திறக்கவில்லை.

சிந்தித்து பாருங்கள்.!
இது பற்றி யார் கேள்வி எழுப்புவது? எமக்காகத் தானே அவர் உயிர் துறந்தார்.அது பற்றி கேட்பது எம் மீது கடமையல்லவா? இவ்விடயமாக ஒருவராவது ஏதாவது செய்துள்ளோமா? எம்மை விட துரோகிகள் இந்த சமூகத்தில் யார் இருக்க முடியும்.

இந்த துரோகங்களை பார்த்து கேள்வி கேட்க முடியாதென்றால் இந்த சமூகத்தை நம்பி ஒரு சமூகப் பற்றாளன் தைரியமாக எப்படி கால் வைக்க முடியும்? எங்கே அஷ்ரபோடு தைரியமாக நடைசென்ற புரட்சியாளர்கள்? இவர்களுக்கு நாம் புகட்டும் பாடம் எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.


Wednesday, January 25, 2017

தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்களுக்கு பதில் அளிக்கப்பட வேண்டுமா? 

அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி என்ற இனம் தெரியாத குழுவினரால்  “தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” எனும் புத்தகமானது வெளியிடப்பட்டிருந்தது.இப் புத்தகத்தில் கிழக்கு முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் பிரதான குற்றவாளியாகவும் அமைச்சர் ஹக்கீம்,முன்னாள் கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர்,பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் ஆகியோர் இக் குற்றத்திற்கு துணை போனவர்கள் என்ற வகையிலும் அமையப்பெற்றிருந்தது.

இப் புத்தகத்தை வாசிக்கின்ற போது அதில் கூறப்பட்ட ஒவ்வொரு விடயங்களுக்குமான ஆதாரங்கள் பக்காவாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.இருந்தாலும் இப் புத்தகமானது ஒரு குழுவின் பெயரை போட்டு வெளியிடப்பட்டிருந்தாலும் அவர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது.அவ்வாறானால் அமைச்சர் ஹக்கீம் யாருக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற வினா எழலாம்.அவரும் அநோமோதய புத்தகம் வெளியிட்டு பதில் அளிக்க வேண்டுமா என்று கேட்டால் அதற்கு அவருக்கு அவசியமில்லை என்று ஒரு வார்த்தையிலேயே மிக இலகுவாக கூறி விடலாம்.

இதில் உள்ள ஒவ்வொரு விடயத்திற்குமான ஆதாரங்கள் மிகத் தெளிவாக உள்ளதன் காரணமாக இவ்விடயத்தில்  அனைவரும் கவனத்தை செலுத்த வேண்டும்.இக் கட்டடத்தை கட்டியதில் பொது மக்களின் பணம் உள்ளது.இதன் காரணமாக இது தொடர்பில் கேள்வி கேட்டும் உரிமை யாவருக்கும் உண்டு.அதனை கொள்ளையிட்டுச் செல்ல எக் காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.இதனை ஒருவர் வெளியிட்டிருந்தால் அவருக்கு மாத்திரமே உரியவர்கள் பதில் அளிக்க கடமைப்பட்டிருப்பார்கள்.இப் புத்தகத்தின் மூலம் அனைவரும் கேள்வி கேட்கப் போகிறார்கள்.இப்போது அனைவருக்கும் பதில் வழங்க வேண்டும்.

தாருஸ்ஸலாம் பற்றிய மர்மங்கள் இப் புத்தகத்தால் மாத்திரம் மக்களிடையே கேள்விக்குட்படவில்லை.இப் புத்தகம் வெளிவருவதற்கு முன்பும் பலரும் கேள்வி எழுப்பியது தான்.அண்மையில் மு.காவின் தவிசாளரான பஷீர் சேகுதாவூதும் இது பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.அவர் கேட்பதற்கு முன்பும் பலரும் கேட்டிருந்தனர்.அதாவது முகவரி தெரிந்த  நபர்கள் கேட்ட போதும் உரியவர்களால் பதில் வழங்கப்படவில்லை.அப்படி வழங்கப்பட்டிருந்தால் இக் கத்தரிக்காய் ஏன் முற்றி சந்தைக்கு வந்திரிக்கப் போகிறது?

தற்போது இவ்விடயமானது சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துள்ளதால் இவ் விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளித்து முற்றுப் புள்ளி வைப்பது சிறந்தது.இவர்கள் எங்கு சென்றாலும் யாரைச் சந்தித்தாலும்  இக் கேள்விகள் அவர்களை வாழ் நாள் பூராக தொடரும்.இக் கரும் புள்ளி அவர்களை சந்ததி சந்ததியாக தொடரும்.மடியில் கனமில்லையென்றால் பயமெதற்கு?

இப் புத்தகம்  தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.இருந்தாலும் அவைகள் உறுதியாக நம்பும் ஊடகங்கள் அல்ல.இப் புத்தகமானது இன்று முஸ்லிம் சமூகத்திலுள்ள மிகப் பெரும் புள்ளிகளை இழிவுபடுத்தி இருப்பதால் இது தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும்.இதற்கான காத்திரமான நடவடிக்கைகளில் மு.காவினர் இறங்கவும் வேண்டும்.

அவ்வாறான ஒரு நிலை வந்தால் இவ்விடயங்கள் தொடர்பான உண்மை தன்மை மிக அழகாக சந்தைக்கு வரும்.இதனை வெளியிட்டவர்கள் யார் என்று மிகச் சாதாரணமாகவே ஊகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிவதால் அவர்களை கண்டு பிடிப்பது அவ்வளவு பெரிய விடயமுமல்ல.இப் புத்தகத்தில் வாய் பேச்சு ரீதியான சில விடயங்களை அவதானிக்க முடிகிறது.இதனை எவ்வாறு நிரூபிக்கப் போகிறார்கள் என்பது சந்தேகமாக இருந்தாலும் இதனை எழுதியவர்கள் சட்ட ரீதியான பிரச்சினைகளையும் கவனத்திற் கொண்டே செய்திருப்பார்கள்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Tuesday, January 24, 2017

“சல்மானே தேசியப்பட்டியலுக்கு தகுதியானவர்” போராளிகளை வைத்து கூறும் ஹக்கீம்

(இப்றாஹீம் மன்சூர்)

சல்மானிடமுள்ள தேசியப்பட்டியல் அதற்கு சொந்தமானவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கருத்து எழும் போதெல்லாம்  சல்மானும் தேசியப்பட்டியலுக்கு தகுதியானவர் என்ற விடயத்தை தூக்கி விடுவார்கள்.

நேற்று சல்மான் தொடர்பில் மறைந்த மு.காவின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப் கூறிய காணொளி வெளிவந்திருந்தது.இதனை இன்று அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களால் மாத்திரமே வெளியிட முடியும்.இதே வகையில் அமைச்சர் ஹக்கீமும் நியாயப்படுத்தியதை சில இடங்களில் அவதானிக்க முடிந்தது.

இவற்றையெல்லாம் தொடர்பு படுத்து பார்க்கின்ற போது இக் காணொளி வெளியீட்டின் பின்னால் ஹக்கீமின் திருவிளையாடல் இருக்குமென்பதை இலகுவாக அறியலாம்.

அஷ்ரபின் கருத்தியல் தொடர்பான விடயங்களை ஒரு விடயத்தை உறுதி செய்ய தூக்கலாமே ஒழிய ஒரு தனி மனிதனை பற்றி அவர் புகழ்ந்ததை பெரும் ஆதாரமாக கொள்ள முடியாது.சில வேளை அஷ்ரபின் குறித்த மனிதன் மீதான மட்டிடல் தவறாக இருக்கலாம்.கருத்தியலிலும் நூறு வீதம் சரியாக இருக்கும் என்று கொள்வதே மடமை.

அண்மைக் காலமாக சல்மான் தொடர்பான விடயங்களை நாம் பார்க்கின்ற போது அவர் பெரும் தியாகி போன்று தோன்றவில்லை.ஹசனலியின் செயலாளர் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதாக பலரும் பதறிக்கொண்டிருந்த போது அப்படி எதுவும் நடைபெறவில்லையென்ற பெரும் பொய்யை உரைத்தவரே இந்த சல்மான்.உயர் பீடக் கூட்டத்தில் யாப்பை வாசித்தவர் இந்த சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு அதிகாரம் குறைக்கப்பட்டமை தெரியாமல் இருந்திருக்குமா? இவர் ஹக்கீமை திருப்தி செய்ய சென்றதை நான் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

தாருஸ்ஸலாம் கொள்ளை விவகாரம் தொடர்பாக வெளிவந்திருந்த புத்தகத்திலும் இவரது பெயர் வெளிவந்திருந்தது.இன்று வரை அவரால் அதற்கு மறுப்புக் கூற முடியாத நிலையே உள்ளது.இவரின் தற்கால விடயங்களை கவனமா நோக்குகின்ற போது அவர் பெருந் தியாகி போன்று தோன்றவில்லை.

இவர் தற்போது ஹக்கீமின் நெருங்கியவர் என்பதில் யாருக்கும் அணுவளவும் சந்தேகம் இருக்காது.அவருக்கு வாக்காளத்து வாங்கும் முகமாக அவர் செயற்படுவதையும் யாராலும் மறுக்க முடியாது.

அவர் பற்றிய தனிப்பட்ட விடயங்களை விடுத்து அவர் பற்றி இந் நேரத்தில் போராளிகளை வைத்து சில முக்கிய புள்ளிகள் புகழ் பாடுவதன் நோக்கமென்ன? அவரிடம் அப்படியே தேசியப்பட்டியல் இருக்கட்டும் என அவர்கள் விரும்புகின்றனரா? அப்படியானால் மூஞ்சை போராளிகளின் பின்னால் ஒழித்து வெளிப்படுத்தாமல் நேரடியாக கூறலாமே!

அனைத்தையும் விடுத்து உடனடியாக தேசியப்பட்டியல் உரிய நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.உரிய நபர்கள் தங்களது தேசியப்பட்டியல் இன்னுமொருவர் கையில் இருப்பதை வேடிக்கை பார்க்காது பறித்தெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.


கதிகலங்கி தூக்கத்தைவிட்டு எழுந்து தாறுஸ்ஸலாமின் மர்மங்கள் உண்மையென ஏற்றுக்கொண்ட மஞ்சள் பை போராளிக்குஞ்சு!!!!!...


(முஹம்மட் தமீம்)

அனைவரும் அறிந்தவிடயம் சில நாட்களுக்கு முன்பு தாறுஸ்ஸலாம் மீட்பு பணிக்குழுவினரால் தாறுஸ்ஸலாம் மர்மம் என்னும் புத்தகம் பல ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து இதில் அடங்கயுள்ள விடயங்கள், ஆதாரங்கள் பிழை பொய்யானவை என்று ஆதாரத்துடன் நிறூபிக்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், சட்டவல்லுனர்கள்,உயர்பீட உறுப்பினர்கள்,போராளிகள்,மஞ்சள் பை முகவர்கள் போன்றோர் யாரும் முன்வரவில்லை. ஆனால் சிலர் தன்னைஅறியாமல் உண்மை என்று ஏற்று பதிவிட்டுள்ளனர். உதாரணம் பழில் BA (ஆதாரம் கீழே)

இந்த சமயத்தில் பலரிடத்திலும் ஒரு சந்தேகம் வெளிப்பட்டுள்து ஏன் இந்த முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினரால் தாறுஸலாமின் மர்மப் புத்தகத்தை பொய்யன நிறூபிக்க முடியாமல் ஒழித்துக் கொள்கிறார்கள்??  அப்படியானால் நாம் ஏற்றுக் கொண்டது போல்  புத்தகத்தில் கூறப்பட்டது உண்மை என்று கட்சியின் உயர் மட்டக்குளுவும் ஏற்றுக் கொண்டுவிட்டதா என்ற சந்தேகம் கட்சியின் போரளிகளிடத்திலும் எழுந்துள்ளது...

இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் தாறுஸ்ஸலாம் மர்மத்தில் கூறப்பட்டவைக்கு முன்நடந்த விடயம் என்ற கருப்பொருளில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அக் கட்டுரையில் தாறுஸ்ஸலாத்தையும் அதன் அருகில் உள்ள காணியையும் ஹாபிஸ் நசீர் அபகரித்ததையும் இதற்கு சட்டமுதுமானி நிசாம் காரியப்பர் உதவியதும் இதனை அறிந்த சாணக்கியத் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் நிசாம் காரியப்பர் கதறி அழுததும் இதன் பின்பு கட்சிச் சொத்தை தான் அபகரிக்க சாணக்கியம் மேற் கொண்ட யுக்திகள், இவைகள் நிகழ காரணம் நிசாம் காரியப்பர் என்ற தொனிப் பொருளில் வெளியானது.

இச் சந்தர்பத்தில் ஒரு உண்மை தெளிவடைகின்றது ....
தாறுஸலாமின் மர்மம் எனும் புத்தகத்தில் கூறப்பட்டுள்து கட்சியின் சொத்தை சாணக்கியத் தலைவர் தான் அபகரிக்க ஹாபிஸ் நஸீருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதும் சல்மானுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கி தன் பெயருக்கு சொத்துக்களை மாற்றுவதற்கு..,
தற்பொழுது வெளியாகியுள்ள கட்டுரையில் ஹாபிஸ் நஸீர் சொத்துக்களை அபகரித்தார் இதற்கு உதவியவர் நிசாம் காறியப்பர் என்று கூறி சாணக்கியத் தலைவரை சற்று நல்லவர் போல் விமர்சித்து இறுதியில் சொத்தை தான் அபகரிப்பதற்கு முயற்சிக்கும் சாணக்கியம் ...

இவ்விரண்டிலும் இருந்து தெளிவாகும் உண்மை என்னவென்றால் கட்சியின் சொத்துக்களை அபகரித்தவர்கள் சாணக்கியத் தலைவர்,முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்,இதற்கு உதவியவர் நிசாம் காரியப்பர்,சாட்சி சல்மான் என்பவர்களுமே இறுதியில் ஹாபிஸ் நஸீரிடமுள்ள சொத்தை தான் அபகரிப்பதற்கு சாணக்கியத் தலைவர் ஹாபிஸ் நஸீருக்கு முதலமைச்சர் பதவி வாழங்கியதும்!!!!!!!!!
 சல்மானுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுபப்புரிமை வழங்கியதும்!!!!!!!!!!
நிசாம் காரியப்பருக்கு சிராஸ்மீராசாஹிப்பிடம் இருந்த மாநகர முதல்வர் பதவியை 2 வருடத்தில் பறித்துக் கொடுத்ததும்!!!!!!!!!
.... கட்சியின் சொத்தை தான் அபகரிப்பதற்கு என்றும் தாறுஸ்ஸலாம் மர்மம் எனும் புத்தகம் உண்மை என்றும்தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.

இதனை அறிவதற்கு போராளிகளுக்கு காலம் எடுக்கும் ,, இதனை அறிந்த மஞ்சள் பைபொய்முகவர் ஒருவர் தனது அன்றாட செலவையும் சோற்றுக்கான செலவையும் போக்க ஹக்கீமுக்கு பொய் எழுதி பிளைப்பை நடாத்தும் பொய்முகவர் முதல் முறையாக தாறுஸ்ஸலாத்தின் மர்மம் என்ற புத்தகத்திற்கு பிறகு நேற்று வெளியான கட்டுரைத்தொகுப்பைshare செய்துள்ளார். (ஆதாரம் கீழே) அவருக்கு தெரியாது கட்டுரை மூலம் சாணக்கியத் தலைவர் சொத்தை அபகரித்தது நன்றாக தெளிவடைகின்றது என்பது ...... அவர் share செய்த காரணம் கட்டுரையில் சாணக்கியத் தலைவர் நல்லவர் போலும் சொத்தை அபகரித்தவர் ஹாபிஸ் நஸீர் இதற்கு உதவியவர் நிஸாம் காரியப்பர் என்று உள்ளது சாணக்கியம் நல்லவர் என்று காட்டினால் மஞ்சள்பை கிடைக்கும் என்ற நோக்கத்தில் .....

ஆனால் முகவர் சாணக்கியத்தலைவரை நல்லவராக காட்ட முயன்று  நிசாம் காரியப்பரையும் ஹாபிஸ் நஸீரையும் தாறுஸ்ஸலாத்தை அபகரிக்க முயன்றவர்கள் என்ற கட்டுரையை share செய்ததன் மூலம் தாறுஸ்ஸலாம் களவாடப்பட்டது உண்மை என்று  share பன்னுகிறீர்கள் தோழர் மஞ்சள் பை முகவரே.....உங்கள் உதவிக்கு நன்றி

இன்ஸா அல்லாஹ் பூரண உண்மை வெளியானது சற்று காத்திருங்கள் அனைத்தும் வெளியாகும்,.



அம்பாறையில் மொத்த விற்பனை நிலையம்
 அமைச்சர் றிசாத் முயற்சி

நாட்டில் மொத்த மரக்கறி விற்பனை நிலையமாக தம்புள்ளை சந்தை பிரபல்யமாக இருப்பதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர் அதில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பல சிரமத்தை எதிர்நோக்குவதோடு நூகர்வோர்  அதிக விலை கொடுத்து மரக்கறிகளை கொள்வனவு செய்கின்றனர் இந்த நிலையை மாற்றி மக்களின் நலனுக்காகவும் வர்த்தகர்களின் நலனுக்காகவும் பல திட்டங்களை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்கள் மேற்கொள்ள ஆலோசித்து வருகிறார்

அதாவது வடக்கு தெற்கு கிழக்கு  போன்ற  மாகாணங்களில் தம்புள்ளை சந்தை போன்று மொத்த மரக்கறி விற்பனை நிலயங்களை உருவாக்க வேண்டும் என்பதே அமைச்சரின் சிந்தனையாகும் அதில் முதல் கட்டமாக மரக்கறி உற்பத்தியில் பின் தங்கிய மாவட்டமான அம்பாறையில் முதலில் மொத்த விற்பனை நிலையத்தை அமைப்பதால் அந்த மாவட்ட மக்கள் பல நன்மைகளை அடைவார்கள்

அம்பாறை மாவட்டத்தில்  மொத்த மரக்கறி விற்பனை நிலையம்  இருந்தால் மொனறாகல பிபில பதுளை பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் மரக்கறி உற்பத்தி செய்பவர்கள் தங்களுடைய  மரக்கறிகளை  அம்பாறை மாவட்டத்தில் விற்பனை செய்ய இலகுவாக இருக்கும் அதனால் மேற்குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து மரக்கறிகள் அம்பாறை மாவட்ட மொத்த விற்பனை நிலையத்துக்கு வரும் அதனால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட வியாபாரிகள் சிரமின்றி பொருள்களை கொள்வனவு செய்து நூகர்வோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் இதனால் மக்களின் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றம் அடையும் என்பதில் சந்தேகமில்லை

ஆனால் இப்படி மக்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் அபிவிருத்தி திட்டங்களை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் அவர்கள் செய்வதால் தங்களுடைய அரசியல் வாழ்க்கை முடிந்து விடும் எனற அச்சத்தால்  சில வங்குரோத்து அரசியல்வாதிகள் நிர்வாக அரசியல் அதிகாரத்தை கையில்  வைத்துக் கொண்டு  தடை ஏற்படுத்திவருவதையிட்டு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

அம்பாறை மாவட்ட சம்மாதுறையில் பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் முகமாக அமைச்சர் றிசாத் அவர்கள் தொழில் பேட்டை ஒன்றை அமைக்க முயற்சி செய்தார் அது எண்னெய் திறலும் போது சட்டி உடைந்த கதை போல் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது இது ஒரு கவலைக்குரிய விடயமாகும் ஆனால் இந்த தொழில் பேட்டையை  அமைத்து இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அமைச்ச றிசாத் அவர்கள் மிகவும் திவிரமாக முயற்சி செய்து வருகிறார் அதற்கு மக்கள் ஆதரவும் அதிகமாக இருக்கிறது அதனால் எந்த தடைகள் வந்தாலும் சொல்வதை செய்வார் சத்திய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் என்பது மக்கள் தெரியும்

அம்பாறை மாவட்டத்தில் அரசியல் அதிகாரம் இல்லை என்றாலும் தன்னை நம்பி நிற்கும் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றி அம்பாறை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை செய்ய வேண்டும் என்பதே அமைச்சர் றிசாத் அவர்களின் இலட்சியமாக உள்ளது அதை இன்ஷா அல்லாஹ் அவர் நிறைவேற்றுவார் என்பதில் மக்கள் நம்பிக்கை கொண்டு  அமைச்சர் றிசாத் அவர்களை சமுதாயத்தின் சத்திய தேசிய தலைவராக அம்பாறை மாவட்ட மக்கள் ஏற்றுக் கொண்டு தனது முழு ஆதரவை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் மயிலுக்கு  அதிக ஆதரவு வழங்கியும் ஒரு ஆசனம் சதிகார கும்பலால் பறி போய் விட்டது அதற்கு 1600 பேர் செய்த தவறு என்று பேசப்பட்டது அந்த தவறினால் அரசியல் அதிகாரம் இல்லாததால் சத்திய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத்  அம்பாறையில் மேற்கொள்ள இருக்கும் அபிவிருத்திக்கு தடைகள் வருவதை இன்று சிந்தித்து கவலையடையும் மக்கள் செய்த தவறை மீண்டும் செய்யாமல் எதிர்வரும் தேர்தல்களில்அம்பாறை மாவட்டத்தில் குடியிருக்கும்  பொம்மைகளை தூக்கி வீசி விட்டு  அமைச்சர் றிசாத் அவர்களின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அம்பாறையில் மயிலுக்கு அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும் என உறுதியுடன்  தீர்மானித்து உள்ளனர் இதனால் சத்திய தேசிய தலைவர் அமைச்சர்  றிசாத் அவர்களின் நற் சிந்தனையால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகள்  ஏற்படும் மொத்த மரக்கறி  விற்பனை நிலையமும் உருவாகும் இதனால் மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் இதற்கு அம்பாறை மாவட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தை மக்கள் விரும்பும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டும் அப்போதுதான் எமது சமுதாயம் பாதுகாக்கபட்டு நிலையான அபிவிருத்தியையும் அடைய முடியும்

அன்று ஒரு காலத்தில் மரங்கள் நிறைந்த காட்டு பிரதேசமாக இருந்த அம்பாறை மாவட்டம் இன்று மரங்கள் அழிந்து மயில்கள் நிறைந்த சோலையாக  காட்சி அளிக்கிறது அதனால் தாயின் தாலாட்டை மறந்து மயிலின் இசையில் குழந்தைகள் நித்திரை கொள்ளும் நிலையை தந்த தலைவனுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்து சத்திய தேசிய தலைவரை அடிக்கடி அம்பாறை மாவட்டத்துக்கு வரும்படி கோரிக்கை வைக்கின்றனர் அதனால் சத்திய தேசிய தலைவர் மிக விரைவில் அம்பாறை மாவட்டத்துக்கான நீன்ட நாள் விஜயம் ஒன்றை  மேற்கொண்டு மக்கள் ஆதரவுடன் மக்கள் நலன் சார்ந்த பாரிய அபிவிருத்திகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார் அல்லாஹ் உதவி செய்யட்டும் அவரின் சேவைகள் தொடர்வதற்கு

ஜெமீல் அகமட்
கொள்கை பரப்ச் செயலாளர்
அ.இ.ம.கா.பொத்துவில் தொகுதி


சல்மான் தேசியப்பட்டியலுக்கு தகுதியானவரா?

பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் தேசியப்பட்டியலுக்கு பொருத்தமற்றவர் என்ற கருப்பொருளில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன்.அமைச்சர் ஹக்கீம் சல்மானை தற்காலிக பாராளுமன்ற உறுப்பினராகவே நியமித்தேன் எனக் கூறியமையே அதற்கான பிரதான காரணமாகும்.தற்காலிகமாக நியமிப்பவர் நம்பிக்கைக்குரியவரையே தவிர தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானவரல்ல.இதன் மூலம் அமைச்சர் ஹக்கீம் இம் முறை சல்மான் தேசியப்பட்டியல் வழங்க பொருத்தமற்றவர் என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.சல்மான் பொருத்தமானவராக இருந்தால் இந் நேரம் ஹக்கீமிற்கு மடி வெடித்திருக்கும்.

2016-12-18ம் திகதி அதிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஹக்கீமிடம் அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் வாக்குறுதி பற்றி கேட்கப்பட்ட போது அவர் சில மாவட்டங்கள்  அரசியல் அதிகாரம் அற்று கிடப்பதால் அம் மாவட்டங்களுக்கே தேசியப்பட்டியல் வழங்குவது பொருத்தமானது என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.சல்மான் கண்டியை சேர்ந்தவர்.அங்கு தான்  அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.அமைச்சர் ஹக்கீமின் கூற்றின் படி சல்மான் இம் முறை தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானவரா?

இன்று தேசியப்பட்டியல் வழங்கப்பட்டவராக இருந்தாலும் சரி,வழங்க சிந்திப்பவராக இருந்தாலும் சரி அவர்கள் கட்சியின் மூத்தவர் என்ற அடிப்படையில் சிந்திக்கப்படவில்லை.யாருக்கு தேசியப்பட்டியலை வழங்கினால் கட்சியை மீள கட்டியெழுப்பலாம் என்ற வகையிலேயே சிந்திக்கப்படுகிறது.இருந்தாலும் அமைச்சர் ஹக்கீம் வாக்குறுதியும் அதில் தாக்கம் செலுத்துவதை மறுக்க முடியாது.அமைச்சர் ஹக்கீம் சல்மானுக்கும் தேசியப்பட்டியல் வாக்குறுதி வழங்கியுள்ளதாக அவர் கூறினாலும் அவரை இம் முறை தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானவர் பட்டியலினுள் நோக்கலாம்.

இந்த வகையில் தான் அவரை பொருத்தமற்றவராக கூறியிருந்தேனே ஒழிய அவர் கட்சிக்கு செய்த தியாகங்களை அடிப்படையாக கொண்டல்ல.இதனை புரிந்து கொள்வதொன்றும் பெரிய விடயமல்ல.இருந்தாலும் எனது கட்டுரைக்கு சல்மான் செய்த தியாகங்களை கூறி அவர் தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானவர் தான் என்போரை நான் தவறாக கூற முடியாது.அது சல்மான் மீதான வினாவை விடுப்போருக்கு அடிக்க அமைச்சர் ஹக்கீம் கொடுத்த கம்பு.

அமைச்சர் ஹக்கீம் பகிரங்க நிகழ்வுகளில் இது பற்றிய கேள்விக்கு அவரை தேசியப்படியலுக்கு பொருத்தமற்றவராக கூற முடியாதென  சல்மானின் புகழ் பாடித் திரிந்துள்ளார்.அவர் புகழ்பாடுவதை வைத்து நோக்கும் போது அவரிடமிருந்து அவ்வளவு இலகுவில் அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியலை கழற்றி எடுக்க மாட்டார் என்பது தான் தெளிவாகிறது.சல்மான் தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானரவாக இருந்தால் அவர் தற்காலிக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எனக் கூறி அமைச்சர் ஹக்கீம் வழங்க வேண்டிய அவசியமில்லை.நேரடியாக இவர் தான் பொருத்தமானவர் எனக் கூறி வழங்கலாமே! இதுவெல்லாம் அமைச்சர் ஹக்கீம் சாணக்கிய ஏமாற்றல்கள்.இதனையெல்லாம் புரிந்து கொள்ள முடியாமல் மக்கள் இருப்பது தான் கவலைக்குரிய விடயமாகும்.

சல்மான்  செய்த தியாகங்களில் அமைச்சர் ஹக்கீம் பிரதானமாக கூறுவது அவர் வெளிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில்  ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கு ஏற்பட்ட சவாலின் போது ஹக்கீமின் தலையை இவரே காப்பாற்றியிருந்தார் என்பதாகும்.இதன் போது பஷீர் சேகு தாவூத்,புத்தளம் பாயிஸ் போன்றோரின் பங்களிப்பும் அவ்வளவு இலகுவானதல்ல.இவ்வாறு பார்த்து தேசியப்பட்டியல் வழங்குவதானால் ஆயிரம் பேருக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும்.இது ஹக்கீமின் தனிப்பட்ட விடயம் என்பதால் அதற்கு தேசியப்பட்டியல் ஒரு போதும் ஈடாகாது.அதற்கு அவரூடான பதவிகளே பொருத்தமானதாகும்.

இது பற்றி நான் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்த ஒருவர் நான் மஞ்சள் கவர் வாங்கி எழுதியதாக கூறியுள்ளார்.அதனை எழுதியவர் அண்மைக் காலமாக அவர் கூறிய மஞ்சள் வர்ணத்தில் டீ.சேர்ட் போட்டு மு.காவின் சுற்றுலாக்களில் சுக போகம் அனுபவித்து வருகிறார்.அவர் போராளியாக மாறியதே கேவலமான வரலாறு.நாகரீகமான விமர்சனத்தை எதிர்பார்த்தவனாகவும் கீழ் தரமான விமர்சனத்திற்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் இத்தோடு  இதனை நிறைவு செய்கிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும்

(அபு ரஷாத்)

அமைச்சர் ஹக்கீம் தனது  தேசியப்பட்டியல் பொக்கிசத்தை சல்மானின் பெட்டகத்தில் வைத்து பாதுகாத்தார்.அது இன்னமும் உரியவரின் கைகளுக்கு சென்றடையவில்லை.அதனை இன்னும் தனது பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

சில நாட்களாக சல்மான் மீதும் வசை மாரிகள் பொழிந்த வண்ணமே உள்ளன.சல்மான் மீதான வசை மாரிக்கு மு.காவின் எதிரிகள் தான் காரணம் என பலரும் கருதலாம்.

இல்லை..இல்லை.. இது ஹக்கீமின் திருவிளையாடலாக ஏன் இருக்கக் கூடாது? ஊடகங்களை ஏற்றி விட்டு சிலதை சாதிப்பதும் சாணக்கிய (சாணக்கியத்தின்) விளையாட்டுத் தான்.

அமைச்சர் ஹக்கீமைப் பொறுத்தமட்டில் இக் காலத்தில் தேசியப்பட்டியலை  வழங்குவது ஆபத்தானது.அதனால் இதன் மீதான குற்றச் சாட்டை சல்மான் மீது போட்டுவிட்டால் ஹசனலி என்ன சொல்ல முடியும்? அட்டாளைச்சேனை மக்களால் தான் என்ன செய்ய முடியும்? ஒன்றும் சொல்ல முடியாதே!

சில வேளை அமைச்சர் ஹக்கீம்,தான் இவ்வாறு செய்யும் போது வேறு சவால்களும் வந்துவிடலாம் என்பதால் இதற்கான  எதிரொலிகள் எவ்வாறு அமையும் என்பதற்கான வெள்ளோட்டமாகவும் இதனை நோக்கலாம்.இவ்வாறான நகர்வுகளை பா.உ சல்மான் கவனத்திற் கொண்டு இது வரை தான் பாதுக்காத்து வந்த மரியாதையை பாதுகாத்துக்கொள்வது சிறந்தது.சல்மானின் பெயர் தாருஸ்ஸலாம் விவகாரத்தில் நாற்றம் எடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சல்மான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதை விட வேறு வழி இல்லை.

அட்டாளைச்சேனை மக்கள் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதை தடை செய்வதற்கு மாத்திரம்  துள்ளிக் குதிக்காமால் சல்மானிடமுள்ள தேசியப்பட்டியலை முதலில் எடுத்துக்கொள்ள போராட்டம் செய்ய வேண்டும்.


அட்டாளைச்சேனை ஹசனலி முரண்பாடே ஹக்கீமின் முதலீடு

(இப்றாஹீம் மன்சூர் : கிண்ணியா)

பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஹக்கீம் செய்விக்க வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகி வருகிறது.இங்கு அனைவரும் ஒரு விடயத்தை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியலை இத்தனை காலமும் வழங்காது இழுத்தடிப்புச் செய்ய அட்டாளைச்சேனை ஹசனலி முரண்பாடே பிரதான காரணமாக முன் வைக்கப்படுகிறது.இவர்கள் இருவரும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தால் அமைச்சர் ஹக்கீம் எதுவித சாட்டும் சொல்ல முடியாத நிலைக்கு வந்துவிடுவார்.இப் பிரச்சனைகளை இழுத்தடிப்புச் செய்வதற்கான அவருடைய முதலீடும் இது தான்.

இருவரில் யாருக்கு வழங்குவது என்பதில் பிரச்சினை இருந்தாலும் முதலில் இரு குழுவினரும் இணைந்து காலம் தாழ்த்தாது சல்மானின் தேசியப்பட்டியல் ஆளுகையை முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதானால் அது யாருக்கு வழங்குவது என்பதில் முரண்பாடு காணப்பட்டாலும் அட்டாளைச்சேனைக்கே தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பதில் அட்டாளைச்சேனை மக்கள் எப்படி ஒரு முடிவிற்கு வந்தார்களோ அதே நிலைப்பாட்டை சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற விடயத்திலும் எடுக்க வேண்டும்.

இதன் பிறகும் அவர் சாட்டுப் போக்கு சொல்லுவாராக இருந்தால்,தனது நெருங்கிய நண்பன் மீது கொண்ட பாசத்தினால் அவர் தேசியப்பட்டியல் வழங்கினாரா? அல்லது உண்மையில் நிர்ப்பந்தத்தினால் தான் தேசியப்பட்டியல் வழங்கினாரா? என்ற அவரது உண்மை முகத்தை அறிந்து கொள்ளலாம்.


Monday, January 23, 2017

எம்.பியாக இருக்க சல்மான் அருவருப்புப்பட வேண்டும்

அமைச்சர் ஹக்கீம் தனது நெருங்கிய சகாவான சல்மானிற்கு தற்காலிகமாகவே தேசியப்பட்டியலை வழங்கியிருந்தார்.அத் தேசியப்பட்டியலானது யாருக்கு சொந்தமானது என்பதில் பிரச்சினை இருந்தாலும் அதற்கு சல்மான் பொருத்தமற்றவர் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம்.

இது என்னுடையை தேசியப்பட்டியலென பலரும் உரிமையோடு அத் தேசியப்பட்டியலை அமைச்சர் ஹக்கீமிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.இவ்வாறான நிலையில் சல்மான் எம்.பியாக இருக்க அருவருப்புப்பட வேண்டும்.இன்னுமொருவரிற்கு சொந்தமானதை சல்மான் எவ்வாறு வைத்திருக்க முடியும்?

அண்மைக் காலாமாக தற்காலிக பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன.இதையெல்லாம் பார்த்த அவருக்கு அப் பதவியில் நீடிக்க அருவருப்பாக தெரியவில்லையா?

அது மாத்திரமல்ல இவர் ஒரு இடத்தில் கூட தான் பாராளுமன்ற உறுப்பினர் எனக் கூறி தலை நிமிர்ந்து செயற்பட முடியாத நிலை உள்ளது.அவர் யாரிடமாவது அவ்வாறு கூறுவாராக இருந்தால், “நீ டம்மி,பேசாமல் அங்கிட்டு போய் விளையாடென” சிறு பிள்ளையும் கூறும்.இப்படியான பதவியில் அவர் நீடிக்க அவருக்கு அருவருப்பாக தெரியவில்லையா?

இத் தேசியப்பட்டியலை வைத்துக் கொண்டு அமைச்சர் ஹக்கீம் மக்களை ஏமாற்றி திரிகிறார்.அதனை சல்மான் இராஜினாமா செய்து கொடுத்தால் அமைச்சர் ஹக்கீம் உரிய நபருக்கு கொடுக்க நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவார்.இந் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாது,இது தான் சாட்டென அதில் குந்தியிருக்க சல்மானுக்கு அருவருப்பாக தெரியவில்லையா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஜல்லிக்கட்டு தடை

முரட்டுத் தனமாக துள்ளியோடும் காளையை அடக்கி அதன் கொம்பில்/கழுத்தில்  கட்டப்பட்டிருக்கும் பரிசுப் பொருளை எடுத்துக்கொள்ளும் விளையாட்டே ஜல்லிக்கட்டு விளையாட்டாகும்.ஒரு காளையை பல இளைஞ்சர்கள் சேர்ந்தும் அடக்குவார்கள்.ஜல்லிக்கட்டு பல வடிவங்களில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இது தமிழர்களின் மரபு வழி பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகும்.இதே பாணியில் அமைந்த காளை அடக்கும் போட்டிகள் ஸ்பெயின்,மெக்சிகோ,கனடா,அமேரிக்கா,கோஸ்டாரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.இவைகள் தமிழ் நாட்டில் இடம்பெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டை விட மிகவும் ஆபத்தானதும் காளைகள் அதிக துன்புறுத்தலுக்கு உட்படுபனவுமாகும்.தற்போது மிருக வதைக்கு எதிரான அமைப்புக்களிடமிருந்த இந் நாடுகளில் இடம்பெறும் ஜல்லிக்கட்டுக்கெதிரான கோசங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.பல இடங்களில் தடை செய்யப்பட்டுமுள்ளன.இருந்தாலும் மேற்குறித்த வளர்ந்த நாடுகளில் இவ்விளையாட்டுக்கள் இருக்கின்றமை என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் பாரம்பரியத்தை அவ்வளவு இலகுவில் யாராலும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

*ஜல்லிக்கட்டு தடை மீதான பார்வை*

இந்திய விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1960ன் படி சில விலங்குகளை கூட்டில் அடைத்தல்,பொது இடங்களில் வைத்து வித்தை காட்டல் அதனை துன்புறுத்தல் என்பன குற்றமாக்கப்பட்டது.2011ம் ஆண்டு இந்த பட்டியலினுள் காளை இனமும் உள் வாங்கப்பட்டது. இச் சட்டமே இன்று ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பாக இருக்கின்ற பிரதான சட்டமாகும்.இச் சட்டம் தவறானதென யாராலும் கூற முடியாது.அவ்வாறு யாராவது கூறுவார்களாக இருந்தால் அவர்கள் மிருகங்கள் துன்புறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்வதாக பொருள் வழங்கும்.1998ம் ஆண்டு தொடக்கம் இதற்கு எதிரான கோசங்கள் தோற்றம்பெற்றுள்ளதை சில விடயங்களை ஆராய்வதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.இது தொடர்பில் 2008ம் ஆண்டே முதன் முதலில் வழக்குகள் பதிவாகின.இதன் போது தமிழ் நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்கு முறைச் சட்டம் 2009 கொண்டுவரப்பட்டது.இதன் பின்னர் பல தடவைகள் ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டுமென கோரப்பட்ட போதும் தமிழக அரசின் சில உத்தரவாதங்களையும் வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதி மன்றம் அதற்கு நிபந்தனைகளோடு அனுமதியளித்திருந்தது.இந் நிபந்தனைகளை பேணி பாதுக்காப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தியிருந்தால் நிலைமை இந்தளவு மோசமான இடத்திற்கு சென்றிருக்காது என்பது தமிழக அரசின் மீதுள்ள கடும் குற்றச் சாட்டாகும்.உச்ச நீதிமன்றம் வழங்கிய நிபந்தனைகள் ஜல்லிக்கட்டை குறைக்கும் வகையிலும் அங்கு விளையாடும் மனிதர்களினதும் மிருகங்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.2013ம் ஆண்டு பெட்டா (PETA) அமைப்பானது தமிழகத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பதிவு செய்து நீதி மன்றத்தில் ஒப்படைத்து அங்கு இடம்பெற்ற சட்ட மீறல்களை தெளிவாக்கியது.இதன் பிரகாரம் 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது.கடந்த இரு வருடங்களாக அதனை நீக்கக் கோரும் கோசங்கள் எழுந்திருந்தாலும் இம் முறை தமிழகம் முழுவதும் பலம் பொருத்திய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.தமிழகத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள்,திரைப்பட நடிகர்கள் உட்பட அனைவரும் இதற்கு தங்களது ஆதரவை வழங்கிவருகின்றனர்.குறிப்பாக தமிழகத்தில் வாழ்கின்ற கமல் காசன் போன்ற கடவுள் நம்பிகையற்றவற்றவர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதனை ஆதரிப்பவர்கள் இது தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறை சாற்றும் ஒன்றாக சித்தரிக்கின்றனர்.இதனை எதிர்க்கின்றவர்கள் இது மிருக வதை என வாதிடுகின்றனர்.

*விளையாட்டுக்கள் எவ்வாறு அமைதல் வேண்டும்?*

விளையாட்டுக்கள் பல வகைப்படும்.ஒரு மனிதன் மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திரத்தோடு விளையாடலாம்,இரு உயிரினங்கள் விளையாடலாம்.எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி,யார் விளையாடினாலும் சரி,விளையாடும் இரண்டுக்கும் இடையில் எப்போதும் வெற்றி,தோல்விக்கான நிபந்தனைகளில் ஒரு உடன்பாடு காணப்பட வேண்டும்.அதே போன்று விளையாட்டில் வாழ்தல் அல்லது சாதல் என்ற நிலை இருக்க கூடாது.அது மிருகமாக இருந்தாலும் சரி மனிதனாக இருந்தாலும் சரி.விளையாட்டின் மூலம் எந்தவொரு உயிரினமும் பாதிப்பிற்குள்ளாகக்  கூடாது.அப்போது தான் அதனை ஒரு விளையாட்டாக கொள்ளலாம்.ஒரு மனிதன் இயந்திரத்தோடு விளையாடுகின்ற போது அங்கு ஏற்கனவே  வரையப்பட்ட (progamming) நிபந்தனைகள் காணப்படும்.அங்கு யாரும் எந்த வகையிலும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.இதன் காரணமாக அவ் விளையாட்டின் போது “இந்த இயந்திரத்தை போட்டு இவன் இந்த பாடு படுத்துகிறானே” என யாரும் குற்றம் சுமத்துவது அறிவுடமையாகாது.இரு உயிரினங்கள் விளையாடும் போது அங்கு சில வேளை ஒரு உயிரினம் பாதிக்கப்படலாம்.அதில் மனிதன் தவிர்ந்து இரு உயிரினங்கள்  விளையாடுகின்ற போது குறித்த இருவருக்குமிடையில் ஒரு உடன்பாடு தோன்ற சிறிதும் வாய்ப்பில்லை.உதாரணமாக சேவல் சண்டையை குறிப்பிடலாம்.அந்த சண்டையில் தான் என்ன செய்தால் வெற்றி பெறுவோம் என்பது குறித்து இரு சேவல்களும் அறிந்திருக்க சிறிதும் வாய்ப்பில்லை.இருந்தாலும் மனிதன் இரு சேவல்களையும் பிடித்து சண்டை போட மூட்டி விடுவான்.இரு உயிரினங்களுக்கும் இடையில் சண்டை மூட்டி விடுவதை யாராலும் ஏற்க முடியுமா? இரு உயிரினங்கள் சண்டை போடும் போது அதனை பிரித்து விடுவதே மனித இயல்பு.இதனையும் காலாச்சாரம்,பாரம்பரியம் என்போரும் உள்ளனர்.இதன் போது மனிதன் மிருகத் தனமான வேலையை செய்து கொண்டிருப்பதை சாதாரணமாக சிந்தித்தாலும் ஏற்க முடியும்.அவ் விளையாட்டில் சேவலின் காலில் கூர்மையான கத்தி கட்டப்படுவதால் அதில் விளையாடும் சேவல்கள் இறப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.குறைந்தது இரு சேவல்களும் காயத்திற்குள்ளாகும்.ஒரு உயிரினம் அநியாயமாக கொல்லப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது.ஒரு உயிரின் உயிரை பறிக்கும் உரிமை மனிதனுக்கில்லை.காயத்திற்குள்ளாதலும் மிருக வதை தானே! இவ்விளையாட்டில் வாழ்தல் சாதல் நிலை உள்ளது.அவ்வாறிருக்க எவ்வாறு அதனை ஒரு விளையாட்டாக கொள்ள முடியும்? விளையாட்டென கூறி வினையில் முடிவதையெல்லாம்  ஒரு போதும் விளையாட்டாக கொள்ள முடியாது.

இது போன்றே மனிதன்-மனிதன் விளையாடும் ரெஸ்லின் போன்ற சில கொடூர விளையாட்டுக்களும் உள்ளன.அண்மையில் வெளிவந்த “பூலோகம்” என்ற தென்னிந்திய திரைப்படம் பல விடயங்களை கூறிச் சென்றாலும் “குத்துச் சண்டை” விளையாட்டிலுள்ள பாதகங்களை அழகிய முறையில் விளக்கிச் சென்றது.விளையாட்டுக்காக உயிரில் விளையாடுவது பிழையென இத் திரைப்படத்தை பார்த்தவர்கள் ஏற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.இருந்தாலும் இன்று குத்துச் சண்டை விளையாட்டுக்கள் அந்தளவு பாரதூரமாக இடம்பெறுவதில்லை.மேலும்,மனிதன்-மிருகங்கள் விளையாடும் விளையாட்டுக்கள் சிலவும் உள்ளன.மிருக காட்சி சாலை மற்றும் இதர சில இடங்களுக்கு  சென்றால் அங்கு மனிதன் சில மிருகங்களை வைத்து விளையாட்டு காட்டுவதை அவதானிக்கலாம்.அவ் விலங்குகள் சிறந்த முறையில் குறித்த வளர்ப்பாளரின் சைகைக்கு இயங்க அதன் பசியை மூலதனமாக்கியிருப்பார்கள்.இதுவெல்லாம் மனிதன்-மிருகங்கள் விளையாட்டின் போது இடம்பெறும் மிருக வதைகளாகும்.இந்த வகையில் தான் ஜல்லிக்கட்டு விளையாட்டும் உள்ளடங்கும்.

*ஜல்லிக்கட்டு தடை சரியா? பிழையா?*

ஜல்லிக்கட்டு சரியா பிழையா என்ற வாதத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஒரு உதாரணத்தை வைத்து சில தெளிவுகளை பெறுவது எமது வாதத்தை விளங்க இலகுவாக்குமென நம்புகிறேன்.எமது தலைப்பானது (ஜல்லிக்கட்டு) சண்டை பாணியை கொண்ட விளையாட்டாதலால் தற்காப்பு விளையாட்டை உதாரணமாக கொள்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.இரு மனிதர்கள் தற்காப்பு கலையை பயிலும் போது அதில் திறமை சாலி யார் என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு சண்டை ஏற்பாடு செய்யப்படும்.இங்கு பல விடயங்கள் உள்ளன.குறித்த இருவரும் தாங்கள் ஏன் சண்டை பிடிக்கின்றோம் என்பதில் தெளிவாக இருப்பர்.என்ன செய்கின்ற போது வெற்றி பெறலாம் என்பது பற்றிய வரையறைகள் இருவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும்.இவ்வாறு விளையாடும் போது ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அது தன்னை தாக்கியவர் மீது பிழையாகாது எனவும் அவர் அறிந்திருப்பார்.இயன்றவரை பாதுக்காப்பு நடவடிக்கைகள் இருக்கும்.

ஒரு மனிதன் ஒரு விலங்கோடு விளையாடுகின்ற போது அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட சிறிதும் வாய்ப்பில்லை.மனிதனுக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்ற விடயத்தில் தெளிவு இருந்தாலும் குறித்த விலங்கிற்கு எந்த வித தெளிவும் இருக்க வாய்ப்பில்லை.விளையாட்டு விதி பற்றி குறித்த விலங்கு அறியாமல் எப்படி இது விளையாட்டாகும்.இந் நிலையில் குறித்த விலங்கு ஏதேனும் பாதிப்புக்குள்ளாகுமாக இருந்தால் விளையாட்டாளர்கள் இருவருக்குமிடையில் எந்த வித உடன்பாடும் இல்லாததன் காரணமாக அதன் முழுப் பொறுப்பையும் குறித்த மனிதனும் அதனை ஏற்பாடு செய்த ஏற்பாட்டார்களுமே ஏற்க வேண்டும்.ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களின் போது காளை இறக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.ஒரு மனிதனின் வீரத்தை காட்ட வேண்டுமாக இருந்தால் அதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.மலையை உடைக்கலாமே? இன்னும் பல பயன்தரக் கூடிய வழிகளும் உள்ளன.இன்று தமிழகத்தில்  பல விவசாயிகள் காட்டு யானைகள் போன்றவற்றின் தாக்குதலால் அடிக்கடி மரணம் சம்பவிப்பதை நாம் அறிந்தே வருகிறோம்.அவர்களின் விவசாய நிலங்களையும் அவைகள் அழித்து செல்கின்றன.தனது வீரத்தை காட்ட விரும்புவோர் அங்கு சென்று இந்த அடக்கினால் அது சமூகத்திற்கு பயனுள்ள வீரமாக  இருக்குமே! யானை அடக்கி வீரத்தை காட்டுவதும் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது வீரத்தை வெளிக்காட்ட ஒரு விலங்கை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயமாகும்? இதனை  விலங்குகளின் பக்கமிருந்து சற்று சிந்தித்து பாருங்கள்.நான்கு விலங்குகள் தங்களது வீரத்தை வெளிக்காட்ட ஒரு பலமிக்க மனிதனை எந்த வித பாதிப்புமில்லாமல் உருட்டி விளையாடுகிறதென்று வைத்துக்கொள்வோம்.இதனை யாராவது ஏற்றுக்கொள்வார்களா?  இதனை எவ்வாறு மனிதன் ஏற்றுக்கொள்ள மாட்டானோ அது போன்றே விலங்குகளை மனிதன் தனது வீரத்தை வெளிப்படுத்த பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.உலகமும் அதிலுள்ள அனைத்தும் மனிதனுக்காக படைக்கப்பட்டவைகள்.விலங்குகளும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டவையாகும்.இருந்தாலும் இறைவன் உலகில் ஒவ்வொரு விலங்குகளையும்  பலவாறான தேவைகளுக்காக படைத்துள்ளான்.பண்டைய காலத்து மனிதன் பொதி சுமக்க,உளவு தொழில்,பயணம் செய்ய  மற்றும் பாரம் தூக்க போன்ற தேவைகளுக்காக பயன்படுத்தினான்.இன்றும் மனிதன் உணவுக்காக சில விலங்குகளை  பயன்படுத்துகிறான்.மேற்குறித்தவைகளில் ஏதோ ஒரு பயன்பாடு இருப்பதன் காரணமாக இவைகளை தவறாக குறிப்பிட முடியாது.இருப்பினும் தற்போது அவ் வேலைகளை செய்ய இயந்திரங்கள் உள்ளமையால் விலங்குகளை கடிமான வேலைக்குட்படுத்த வேண்டிய அவசியமில்லை.அதனை தவிர்ந்து கொள்வது சிறந்தது.குறித்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகளை பிடித்து அதனை வீழ்த்துவதனால் அது சிரமத்திற்கு உட்படுகின்றதே தவிர அதனால் எந்த பயனும் இருப்பதாக அறிய முடியவில்லை.சிலர் இப்படியான விளையாட்டுக்களை தொடர்வதன் மூலம் காளைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.இதனை தவறான வாதமாகும்.சில காளைகளை கொடுமைப்படுத்தியே அந்த இனம் பாதுகாக்கப்படுமாக இருந்தால் அதனை விட அவ்வினம் அழிவது தவறில்லை.குறித்த இனத்தை பாதுக்காக்க வேண்டுமாக இருந்தால் மாடுகளினூடான பெறக் கூடிய பால்,இறைச்சு போன்ற தேவைகளை மக்களிடையே அதிகரிக்கும் போது அவ்வினத்தை மக்கள் கவனம் எடுத்து வளர்ப்பார்கள்.மாடுகள் இனமும் இலகுவாக பாதுக்கக்கப்படும்.

இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தப்படும் காளைகள் உறுதியானவை என்பதை நிரூபிப்பதன் மூலம் அவைகளை இதற்கு பயன்படுத்தவது பிழையல்ல என்ற விதத்தில் கருத்து தெரிவிக்கின்றனர்.உறுதியான காளையை அடக்கினால் அது வதையாகாதா? உறுதி என்பதை ஒன்றினது உடற்கட்டமைப்பை வைத்து ஒரு போதும் கூற முடியாது.உறுதி உளக் கட்டமைப்பிலேயே பிரதானமாக தங்கியிருக்கும்.ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தப்படும் காளைகள் எதிர்த்து தாக்குவதை விட விரண்டோடுவதையே காணக்கிடைக்கின்றது.விரண்டோடுவது பயத்தின் காரணமாக ஏற்படுவதாகும்.இதனை அடக்குவது கோழைகளின் செயலாகும்.பழந்தமிழ் இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டானது “கொல்லேறு தழுவுதல்” எனவும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.கொல்லும் காளைகள் எம்மை நோக்கியே வரும்.நாம் அதனை விரட்டி ஓடி பிடிக்க வேண்டிய அவசியமில்லை.இதனை வைத்து நோக்கும் போது அந் நேரத்தில் சீறி ஓடும் காளைகளை பிடித்து வீழ்த்தியது இன்று ஒரு மரபாக தொடர்ந்திருக்கலாம்.

ஒவ்வொரு முறையும்  ஜல்லிக்கட்டு நடைபெறும் போதும் மனித உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றமையையும் காளைகள் இறக்கின்றமையும் யாராலும் மறுதலிக்க முடியாத உண்மையாகும்.மனித உயிர்கள் மிகவும் பெறுமதி மிக்கவை.அவற்றை தங்களது வீரத்தை வெளிப்படுத்த இழப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.மனித உயிர் மாத்திரமல்ல காளையின் உயிரும் பெறுமதியானவை தான்.இதனை நடாத்த வேண்டும் எனக் கோருகின்றவர்கள் சில நாடுகளில் காளையை வைத்து நடைபெறும் விளையாட்டுக்களை பிரதான ஆதாரமாக கொள்கின்றனர்.ஒரு பிழையை பலர் செய்வதால் அது ஒரு போதும் சரியாகப்போவதில்லை.இது தமிழ் இனம் சார்ந்த வீர விளையாட்டாகவும் நோக்க முடியாது.தமிழ் இனத்தை சார்ந்த அனைவரும் இதனை தங்களது வீர விளையாட்டாக கொள்வதுமில்லை.இதிலும் சாதி ரீதியான சில விடயங்கள் இருப்பதாகவும் அறிய முடிகிறது.ஜல்லிக்கட்டு விளையாட்டானது தமிழகத்தின் குறிப்பிட சில பகுதிகளிலேயே இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.தற்போதைய போராட்டங்கள் இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் போன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

*ஜல்லிக்கட்டிற்கான தீர்வு*

தற்போது இந்திய மத்திய அரசுக்கு எதிராக தமிழ் நாட்டில் பலவாறான போராட்டங்கள் இடம்பெறுகின்றன.இவர்களது போராட்டமானது உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்பதால் தீர்ப்பை எதுவும் செய்ய முடியாது.இருந்தாலும் மத்திய அரசு அவசர சட்டமொன்றை நிறைவேற்றுவதன் மூலம் இதனை தீர்த்து வைக்கலாம்.இந்திய விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1960ன் விலங்குகள் பட்டியலினுள்  2011ம் ஆண்டு உள் வாங்கப்பட்ட காளை இனம் நீக்கப்பட வேண்டும்.அவ்வாறு காளை இனம் நீக்கப்படுமாக இருந்தால் காளைகளை வேறு யாராவது வேறு ஏதேனும் விதத்தில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினாலும் சட்ட ரீதியாக தண்டிக்க முடியாத நிலை ஏற்படும்.இப் பட்டியலினுள் இருந்து காளை இனத்தை நீக்க கோருவது ஜல்லிக்கட்டு காளை இனத்தை துன்புறுத்தும் ஒன்றே என்பதை அவர்களே ஏற்றுக்கொண்டது போன்றாகிவிடும்.காளை இனம் குறித்த பட்டியலினுள் உள்ள வரை ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை.தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றுவதன் மூலம் இதனை தீர்க்கலாம் என்ற கதைகள் வெளிவருகின்றன.ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் என்பவர் இதனை மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தே மாற்ற வேண்டுமென்ற கருத்தை கூறியுள்ளார்.ஒரு மாநில அரசு மத்திய அரசுடன் பொதுச் சட்டம் ஒன்றில் முரண்பட முடியாது.இருந்தாலும் ஜல்லிக்கட்டு என்பது தமிழக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாதாக கருதப்படுவதால் அது தொடர்பான சட்டமியற்றும் அதிகாரங்களை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்குவது பொருத்தாமானது.தற்போது 1960ன் மிருக வதைச் சட்டம் மாநில திருத்தம் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.இது இந்திய அரசியலமைப்பின் படி சரியான நகர்வா என்பதை இன்னும் சில நாட்களில் தான் அறிந்து கொள்ள முடியும்.இருப்பினும் இது ஆறு மாதத்திற்கே செல்லுபடியாகும் என்பதால் இதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.மீண்டும் இது போன்ற ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது அவ்வளவு இலகுவானதல்ல என்பதால் ஆர்ப்பாட்டக் காரர்கள் இதன் போதே இதனை சாதித்து கொள்வது சாதூரியமானது.இதன் நிரந்தர தீர்விற்கு இந்திய விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1960 மாற்றப்பட வேண்டும்.இதற்கு இந்திய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.இது தொடர்பில் அங்கு விவாதிக்கபட வேண்டும்.அது அவ்வளவு இலகுவான விடயமல்ல.இப் பலமிக்க ஆர்ப்பாட்டம் தொடர்ந்தால் இந்திய நாடாளுமன்றம் தமிழக மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அடிபணிந்தேயாக வேண்டும்.ஆனால்,அதற்கு இன்னும் நீண்ட நாள் போராட்டங்கள் தேவைப்படும்.அந்தளவு போராட்டத்திற்கு தமிழக மக்கள் நிண்டு பிடிப்பார்களா என்பதை காத்திருந்தே அறிய வேண்டும்.

*ஆர்ப்பாட்டாங்களும் விளைவுகளும்*

ஒரு சிறிய விடயமென்றாலும் பஸ்ஸை உடைத்தல்,தீ வைத்து எரித்தல் என்ற பாணிக்கு பழக்கப்பட்ட தமிழக மக்கள் இவ்விடயத்தில் மிக அழகிய விதத்தில் போராட்டம் செய்வதை அவதானிக்க முடிகிறது.இவ் வழி முறை இவ்வார்ப்பாட்டத்தில் மாத்திரமல்லாது அனைத்து விடயங்களிலும் தொடர வேண்டும்.இருந்தாலும் சில மாணவர்கள் தீக்குளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டமை கண்டிக்கத்தக்கது.இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சிலருடைய கோசங்களை அவதானிக்கும் போது தமிழக தனி நாட்டுக்கோசம் எழுமா? என்ற சந்தேகம் தோன்றுகிறது.இந்தியாவின் மிகப் பெரும் பலமே அதன் நில விஸ்தீரணம் தான்.இப்படியான ஒரு நிலை தோன்றுமாக இருந்தால் இந்தியாவின் பலம் அழிந்துவிடும்.அதற்கு அவ்வளவு இலகுவில்  தமிழக மக்கள் துணை போய்விடமாட்டார்கள்.இந்த ஒற்றுமை ஏனைய காவிரி நீர் போன்ற பிரச்சினைகளிலும் ஈடுபட வேண்டும்.தமிழக மக்களின் இவ் ஆர்ப்பாட்டமானது அவர்களது வெற்றியளித்துள்ளதன் காரணமாக எதிர்காலத்திலும் இது போன்ற பலமிக்க ஆர்ப்பாட்டங்களை தமிழகத்தில் காணக்கிடைக்கும்.இது தமிழக மக்களின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்கூறிய ஒரு சந்தர்ப்பமாகவும் நோக்கலாம்.இது உலகிற்கு ஒரு வரலாற்று முன் மாதிரியும் கூட.

ஜெயலலிதாவின் இறப்பினால் அ.தி.மு.க கட்சி பல கூறுகளாக பிளவுபட்டு நிற்கின்றது.இந் நிலையில் தமிழகத்தில் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெறுவது அ.தி.மு.க  அரசை பலத்த சவாலுக்குட்படுத்தும்.சசிகலாவிற்கும் தீபாவிற்குமிடையிலான அதிகார மோதலில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் அ.தி.மு.காவிற்கு இதனை கவனிக்க நேரமில்லாமல் இருக்கலாம்.எது எப்படி இருந்தாலும் ஜெயலலிதாவின் இறப்பின் பின்னர் அ.தி.மு.க எதிர்கொள்ளும் பலமிக்க முதற் சவாலாகவும் இதனை குறிப்பிடலாம்.ஜெயலலிதா உயிரோடு இருந்த இரண்டு வருடங்களும் எழாத போராட்டம் இம் முறை மாத்திரம் எழுந்துள்ளதை வைத்து நோக்கும் போது ஜெயலலிதா எவ்வாறு தமிழக மக்களின் உணர்வுகளை அடக்கி வைத்திருந்தார் என்பது ஆச்சரியமிக்க விடயம் என்பதில் ஐயமில்லை.தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர் மன நிலையை கொண்டிருந்தாலும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த போதும் இறுதியிலேயே அவர் வாய் திறந்ததை அவதானிக்க முடிந்தது.அவர் ஒரு முதல்வராக இருந்தாலும் அவர் பெயரளவில் முதல்வராக இருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம்.தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.கா ஸ்டாலின் அறிக்கைவிட்டுக்கொண்டே உள்ளார்.இது தி.மு.கவினருக்கு சாதகாமாக அமைந்துள்ளது.அவர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.இந் நிலையில்  இது தொடர்பில் சசிகலா,தீபா ஆகியோர் மௌன விரதம் கடைப்பிடிப்பதன் நோக்கமென்ன? இதனையே அடிப்படையாக கொண்டு தங்களது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கலாமே! தற்போது மத்திய அரசை ஆண்டு கொண்டிருக்கும் ப.ஜ.கவிற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவையில்லை என்பதால் மத்திய அரசு தமிழக அரசை சற்று வேறு கண் கொண்டு பார்க்கலாம்.தற்போது ப.ஜ.கவின் ஆட்சி வீழ்ச்சியை நோக்கி பயணித்து கொண்டிருப்பதால் இந் நேரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவது மிகக் கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 23-01-2017ம் திகதி திங்கள்  கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 78வது கட்டுரையாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Sunday, January 22, 2017

தாருஸ்ஸலாம் நீடிக்கும் மர்மமும்!! சமாளிப்பு பதில்களும் .

தலைவர் ஹக்கீம் 29.01.2015 இல் கம்பனிப் பணிப்பாளராக நியமனம் பெறுகிறார். சரியாக ஒரு வாரத்தின் பின் 06.02.2015 இல் ஹாபிஸ் நசீர் தலைவரின் ஆசீர்வாதத்தோடு முதலமைச்சர் நியமனம் பெறுகிறார். இங்கே பண்டமாற்று வியாபாரம் நடைபெற்றுள்ளதா' ? என்ற சந்தேகத்தை நூல் விதைக்கின்றது.

-ஏ.பீர் முகம்மது-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஹக்கீம் ஹசனலி ஆகியோருக்கிடையிலான முரண்பாடு இணக்கத்திற்கு வந்தும் வராமலும் உள்ளநிலையில் 'தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' என்ற தலைப்பிலான ஒரு நூல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

நீண்டகால வரலாற்றைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கே மாடிகளைக் கொண்ட தலைமைக் கட்டிடம் தலைநகர் கொழும்பில் இல்லாதிருந்தவேளையில் தலைவர் அஷ்ரப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பொதுமக்களினதும் தனவந்தர்களினதும் ஒத்துழைப்போடு இல 53இவொக்ஷால் லேன்இ கொழும்பு -2 இல் ஏழு தட்டுகளைக் கொண்ட ஸ்ரீ.ல.மு.காவின் தலைமையகத்தைக் கட்டித் திறந்து வைத்தார்.

தாருஸ்ஸலாம் (சாந்தி இல்லம் ) என்ற இத்தலைமையகத்தின் உரிமைஇ பரிபாலனம் இ வருமானம் என்பது தொடர்பில் இப்போது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னரான பதினாறு வருட காலத்தில் தாருஸ்ஸலாம்பற்றி பல கேள்விகள் அடிக்கடி கேட்கப்பட்டே வந்துள்ளன. எனினும் திருப்;தியான பதில் வழங்கப்பட்டதாக அறிய முடியவில்லை.

இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது 'தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' என்ற தலைப்பில் நூல் வெளிவந்து கட்சிப் போராளிகளையும் ஆதரவாளர்களையும் முக்கிய உறுப்பினர்களையும் ஏன் முஸ்லிம் சமூகத்தையே உசுப்பிவிட்டுள்ளது. இந்த நூலை 'தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'பூமியில் இருந்து மறைந்தாலும் நம் இதயத்தில் இருந்து வாழும் நமது தலைவர் தந்த நமது தாருஸ்ஸலாம் நமக்கே உரியது. தாறுமாறாய் மாறாட்டம் செய்யும் எந்த எஜமானருக்குமானது அல்ல' என்ற கோசத்தோடு வெளிவந்துள்ள இந்நூல் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள்  சமூகப் பிரமுகர்கள்  முக்கியஸ்தர்கள் எனப் பலருக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தபால்மூலமும் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பத்திரிகைகளும் இணையங்களும் சமூக வலைத்தளங்களும் இந்நூல்பற்றிய செய்திகளை வெளியிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி வருகின்றன.

கட்சியை செழுமைப்படுத்தி வளர்க்கும் நோக்கத்தில் தலைவர் அஷ்ரப் லோட்டஸ் என்னும் நம்பிக்கை நிதியத்தை உருவாக்கினார். தாருஸ்ஸலாம் அமைந்துள்ள கட்டடமும் காணியும் இ அதனை அண்டியுள்ள இன்னுமொரு காணித்துண்டு இ தலைவர் வாழ்ந்த கல்முனை அம்மன் கோவிலடி வீடு இ ஒலுவில் வீடும் சுற்றியுள்ள காணியும் இ ஆலிமுட கண்டம் மற்றும் சில இடங்களிலுள்ள பதினொரு ஏக்கர் நெற்காணி இ ஆறு பிரபல கம்பனிகளில் உள்ள 8000 இற்கு மேற்பட்ட பங்குகள் என்பன இந்நிதியத்தின் சொத்துக்களாக உள்வாங்கப்பட்டிருந்தன. அஷ்ரப் உட்பட 14 பேர் கொண்ட பணிப்பாளர் சபையொன்றும் நியமிக்கப்பட்டது.

மேலும் தலைவர் அஷ்ரப் இ ஸ்ரான்லி ஜெயராஜ்இ வசந்த டீ தேவகெதர ஆகிய மூவரையும் ஸ்தாபகப் பணிப்பாளர்களாகக் கொண்டு 15.11.1988 இல் யூனிட்டி பில்டேஸ் தனியார் கம்பனி உருவாக்கப்பட்டிருந்தது. தாருஸ்ஸலாம் மற்றும் சொத்துக்களின் பராமரிப்புஇ வருமான சேகரிப்புஇ அதன் முகாமைத்துவம் என்பவற்றை இக்கம்பனியே கவனித்து வந்தது. தலைவரின் மறைவின் பின்னர் இக்கம்பனி ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

தாருஸ்ஸலாம்  லோட்டஸ் நம்பிக்கை நிதியம்யூ னிட்டி பில்டேஸ் தனியார் கம்பனி என்பன தொடர்பில் ஏதோவொரு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்று முன்னெடுக்கப்படுகின்றது என்று கட்சியின் முக்கியஸ்தர்களும் உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் சந்தேகம் கொண்டிருந்தாலும் வெளிப்படையாகக் கேள்விகளை எழுப்ப எவரும் முன்வரவில்லை. பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற பிரச்சினை இருந்தது.

இந்த நிலையில்தான் கட்சியின் பிரதி தவிசாளரும் ஹக்கீம் சார்பு உயர்பீட உறுப்பினருமான நயிமுல்லா தலைமையில் 12 உயர்பீட உறுப்பினர்கள் கையொப்பமிட்டு செயலாளர் நாயகத்துக்கு 15.10.2015 இல் கடிதம் எழுதி தாருஸ்ஸலாம்பற்றி விளக்கம் கேட்டனர். கையொப்பமிட்டவர்களில் மூன்றுபேர் தலைவரின் நம்பிக்கைக்குரியவர்கள் என்பதுடன் அவர்களில் ஒருவர் தலைவரின் உறவினரும் ஆவார்.

கடிதத்தைப் பெற்றுக் கொண்ட செயலாளர் நாயகம் ஹசனலி இதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று உண்மையைப் போட்டு உடைத்தார். அனைத்தும் தலைவருக்கே தெரியும் என்றும் கூறினார். உயர்பீட உறுப்பினர்களின் சந்தேகம் மேலும் வலுத்தது.

நிலைமை பாரதூரமாகிப் போகாமல் இருப்பதற்காக உச்சபீடக் கூட்டத்தில் தலைவர் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் ஆகியோரால் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தலைவரோடு முரண்பாட்டில் இருந்த கட்சியின் தவிசாளர் பசீர் சேகு தாவூத் உயர்பீடக் கூட்ட விளக்கம் தனக்குத் திருப்தி தரவில்லையென்று கூறி தாருஸ்ஸலாம் பற்றிய பன்னிரெண்டு கேள்விகளை உள்ளடக்கி 03.06.2016 இல் தலைவருக்குக் கடிதமொன்றை எழுதினார். தனது கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால் மக்கள் முன் விடயத்தைக் கொண்டு செல்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். பதில் கிடைக்காததால் ஒருமாத காலத்தின் பின்னர் பத்திரிகைகளின் ஊடாக தவிசாளர் விடயத்தை வெளியே கொண்டு வந்தார்.

இதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது 'தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' என்ற பெயரில் நூல் வெளிவந்துள்ளது. ஹக்கீம்இ எம்.எச்.எம். சல்மான்இ ஹாபிஸ் நசீர் ஆகியோர்மீது நூலின் உள்ளடக்கம் விரல் நீட்டுவதாகவே தோன்றுகின்றது.

'தலைவர் ஹக்கீம் 29.01.2015 இல் கம்பனிப் பணிப்பாளராக நியமனம் பெறுகிறார். சரியாக ஒரு வாரத்தின் பின் 06.02.2015 இல் ஹாபிஸ் நசீர் தலைவரின் ஆசீர்வாதத்தோடு முதலமைச்சர் நியமனம் பெறுகிறார். இங்கே பண்டமாற்று வியாபாரம் நடைபெற்றுள்ளதா' ? என்ற சந்தேகத்தை நூல் விதைக்கின்றது.

'தாருஸ்ஸலாம் கட்டிடத்தை தலைவரும் முதலமைச்சரும் கபளீகரம் செய்வதாகக் கதைகட்டி விடுகிறார்கள். இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை புத்தகமாக வெளியிட்டவர்களும் இந்தக் கட்சிக்குள்தான் இருக்கிறார்கள்' என்று புத்தளத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமையும் இதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளன என்று முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தெரிவித்துள்மையும் இந்நூல்பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. எனினும் இந்நூலை வெளியிட்டவர் யார் என்று நூலில் குறிப்பெதுவும் இல்லை.

தாருஸ்ஸலாம் பிரச்சினை இப்போது மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளது. மர்மங்கள் துலங்குமா? தொடருமா ? என்பதுதான் எல்லோர் மனத்திலும் எழும் கேள்வியாகும்.

நூல் வெளிவந்த பின்னர் நூலுக்கு எதிராகக் கருத்துக்கூற வந்த சிலரின் பதில்கள் மேலும் சந்தேகத்தை அதிகரிப்பதாகவே உள்ளன.

இந்த நூலின் பின்னணியில் பசீர் சேகு தாவூத் உள்ளார் என்றும் கட்சிக்குத் தெரியாமல் அமைச்சர் பதவி பெற்ற இவருக்கு தாருஸ்ஸலாம்பற்றிக் கேள்வி கேட்க அருகதை இல்லை என்றும் கூறுகின்றார்கள். நூலில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இதுவா பதில்?

கட்சிக்குத் தெரியாமல் அமைச்சர் பதவி பெற்றார் என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டால்கூட இவருக்கு தாருஸ்ஸலாம்பற்றிக் கேள்வி கேட்க அருகதை இல்லை என்று யார் சொன்னது? இவருக்கு இனி கேள்வி கேட்கும் எந்த உரிமையும் கிடையாது என்று எந்த உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்?

திருமதி பேரியல் அஷ்ரப் 2000 - 2001 வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்தார். தலைவரின் மரணத்தின் பின்னர் தலைமைப்பதவி தானாகவே அவரிடம் வந்து சேரும் என்பது நம்பிக்கை நிதியத்தில் சொல்லப்பட்ட விதி. இது தெரிந்துதான் அவரைக் கட்சியில் இருந்து துரத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோ என்று பொதுமகன் ஒருவனின் மனதில் கேள்வி எழுவது நியாயம்தானே ?

பேரியல் அஷ்ரப் இல்லையென்றால் நம்பிக்கை நிதியத்தின் தலைமைப்பதவி அமான் அஷ்ரபிற்கு வந்து சேரும் என்பது நிதியத்தின் விதிமுறையாகும். தலைவர் மரணித்து பதினேழு வருடங்கள் கடந்து விட்டன. இத்தனை வருடத்தில் ஒரு நாளாவது அமான் அஷ்ரப் தானாகவே கட்சியில் சேரவேண்டுமென்று யோசிக்கவில்லையா ? அல்லது அவர் கட்சியில் சேர்வதை யாராவது தடுத்தார்களா ? என்ற கேள்விகளை ஒருபுறம் வைத்துவிட்டு கட்சிக்குள் இருந்து இத்தனை வசதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவராவது அவரைக் கட்சிக்குள் உள்வாங்குவோம் என்று முயற்சிக்காமல் விட்டது ஏன் ? எத்தனையோ தடவைகள் முயற்சித்தபோதிலும் அமான் அஷ்ரப் கட்சியின் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டேன் என்று சொல்லி விட்டார் என்று எங்களை ஏமாற்ற வெளிக்கிடாதீர்கள் என்று கட்சிப் போராளி சொன்னால் உங்களின் பதில் என்ன? இந்தக் கேள்வியை பசீர் சேகு தாவூத்திடம் போய் கேளுங்கள் என்பதுதான் பதிலாகி விடுமோ ?

பெருமளவு ஆவணங்களின் புகைப்படப் பிரதிகள் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் பொய் சொல்லுமா ? இவைபற்றி என்ன சொல்லப் போகின்றார்கள்.?

இப்படி மர்மம் நிறைந்த பல விடயங்களுக்குப் பதில் சொல்லாமல் தப்பிக் கொள்ள அவர்களுக்கு எவ்வளவோ வழிகள் இருக்கும்.

நீதிமன்றத்தில் இந்நூல்பற்றியோ இந்நூலுடன் தொடர்புபட்டவர்கள் என்று கருதப்படுபர்களுக்கெதிராகவோ வழக்கொன்றைத் தாக்கல் செய்வதன்மூலம் இந்நூல்பற்றிய கதையாடல் தொடராமல் இருக்க ஏதாவது வழி கண்டுபிடிப்பார்களா ? அல்லது 'பொதுமக்களே நம்பி விடாதீர்கள் இவைகளெல்லாம் போலியான குற்றச்சாட்டுகள் அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம்' என்று மக்களை நம்ப வைக்க முயற்சிப்பார்களா?

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கின்றது.

தோணியில் கால் வைத்து ஏறத் தெரிந்தவனுக்கு ஏணியில் கால் வைத்து இறங்கத் தெரியாமலா போகும்?