Pages

.

.

Wednesday, February 15, 2017

அமைச்சர் ஹக்கீம் அல்லாஹ்வை முன்னிறுத்தி ஏமாற்றியது கண்டிக்கத்தக்கது

தற்போது நான் அ.இ.ம.காவின் ஆதரவாளில் ஒருவன் தான்.இதற்கு முன்பு மு.காவுடனே எனது அரசியல் பயணத்தை செய்திருந்தேன்.அமைச்சர் ஹக்கீம் மீது கொண்ட அதிருப்தியினாலேயே அதிலிருந்து வெளியேறி இன்று மக்களுக்காக உண்மையான அரசியல் செய்து கொண்டிருக்கும் அ.இ.ம.காவுடன் திருப்திகரமாக அரசியல் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன்.என்னைப் போன்றே இன்று மு.காவை எதிர்க்கின்ற பலர் அமைச்சர் ஹக்கீம் மீது கொண்ட அதிருப்தியினாலேயே எதிர்க்கின்றார்களே ஒழிய மு.கா என்ற அஷ்ரப் உருவாக்கிய கட்சி மீது யாருக்கும் வெறுப்பில்லை.இன்று கூட யாராவது மு.காவிற்கு ஏசினால் அக் கட்சி மீது கொண்ட பற்று என் உள்ளத்தை காயப்படுத்துகிறது என்ற விடயத்தை முதலில் கூறியவானாய் விடயத்திற்கும் நுழையலாம் என நினைக்கின்றேன்.

முன்னாள் மு.காவின் செயலாளர் நாயகம் ஹசனலி இன்று நேற்று அரசியல் வாழ்விற்கு வந்தவரல்ல.இன்று வரை மு.காவில் கொள்கை ரீதியான அரசியல் செய்து கொண்டிருப்பவராக அவரையே பலரும் கூறுகின்றனர்.இன்று அவரை அமைச்சர் ஹக்கீம் ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளார்.சில நாட்கள் முன்பு ஹசனலி சில சட்ட ரீதியான விடயங்களை வைத்து தேர்தல் ஆணையாளரினூடாக அமைச்சர் ஹக்கீமிற்கு எதிரான காயை நகர்த்திய போது அதில் அகப்பட்டுக் கொண்ட அமைச்சர் ஹக்கீம் ஹசனலியிடம் தேசியப்பட்டியல் மற்றும் பூரண அதிகாரமிக்க செயலாளர் பதவி ஆகிய இரண்டையும் தருவதாக வாக்குறுதியளித்து அப் பொறியில் இருந்து தப்பித்துக் கொண்டார்.

ஹக்கீம் சொல்லும் சொல்லை காப்பாற்றுபவர் அல்ல என்பது ஹசனலிக்கு மாத்திரமல்ல ஊரிற்கே தெரியும்.அவரே பல இடத்தில் ஹக்கீமின் ஏமாற்றுகைக்குள் அகப்பட்டுள்ளார்.இந் நிலையில் “நீங்கள் எப்படி அமைச்சர் ஹக்கீமின் வார்த்தைகளை நம்பினீர்கள்?” என பலரும் ஹசனலியிடம் கேட்டுள்ளனர்.இதற்கு ஹசனலி இரண்டு ரகஅத் சுன்னத் தொழுதுவிட்டு வந்தே என்னிடம் வாக்குறுதியளித்தார்.அதனாலேயே நம்பினேன் என்று பலரிடமும் கூறி வருகிறார்.ஒரு முஸ்லிம் இதனை நம்புவான் தானே? இதனை செய்துவிட்டு மாறு செய்கின்றவரை என்ன சொல்வது? இங்கு ஹசனலி நல்லவரா? கெட்டவரா? என்பதற்கெல்லாம் அப்பால் அல்லாஹ்வை முன்னிறுத்தி செய்த விடயத்தை அமைச்சர் சிறிதும் கணக்கெடுக்காது செயற்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கது.அமைச்சர் ஹக்கீம் செயலாளரை தானே முன்னின்று தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.இதற்கான கூலியை அவர் விரைவில் பெற்றுக்கொள்வார்.

இதற்கான கூலியை அல்லாஹ் வழங்குவான் என்று நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.குர்ஆன்,ஹதீதை யாப்பாக கொண்ட கட்சிக்கு அல்லாஹ்வை முன்னிறுத்தி ஏமாற்றுபவர் எவ்வாறு தலைமை வகிக்க தகுதியானவராக கூற முடியும்.இவ்விடயம் இன்று பலரது வாய்களிலும் உச்சரிக்கப்படுகின்ற போதும் சில மு.காவின் ஆதரவாளர்கள் அதனை பெரிதும் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை.இப்படியானவர்கள் அல்லாஹ்வை விட எங்களுக்கு அமைச்சர் ஹக்கீமே முதன்மையானவர் என்ற தங்களது எண்ணத்தை வெளிப்படுத்துகின்றனர் (அல்லாஹ் இப்படியான எண்ணங்களிலிருந்து எங்கள் அனைவரையும் பாதுகாப்பானாக).

மு.காவின் தீவிர ஆதரவாளர்களே!

நாம் எமது உயிரிலும் மேலாக அல்லாஹ்வை நேசிப்பவர்கள் அல்லவா?

நீங்கள் அடுத்தவர் விடயத்தில் தான் அமைச்சர் ஹக்கீமிடம் கேள்வி கேட்காது மௌனமாக இருக்கின்றீர்கள் அல்லாஹ்வின் விடயத்திலும் அப்படி இருந்தால் எப்படி? நாம் முஸ்லிம்களல்லவா?

வாக்குறுதியளித்து ஏமாற்றுவது அமைச்சர் ஹக்கீமிற்கொன்றும் புதிதல்ல.தேசியப்பட்டியல் வாக்குறுதிகளை எடுத்து பார்த்தாலே அதனை சாதாரணமாக விளங்கிக்கொள்ளலாம்.பேரியல் அஷ்ரப்,அமைச்சர் ஹக்கீம் ஆகியோர் இணைத் தலைமைத்துவமாக இருந்த போது அதனை விட்டுத் தாருங்கள் உங்களுக்கு செயலாளர் பதவியை தருகின்றேன் என்ற கனவான் வாக்குறுதியை அமைச்சர்  ஹக்கீம் அன்னை பேரியல் அஷ்ரபிற்கு வழங்கியிருந்தார்.பின்னர் அதனை மீறி இருந்தார்.அமைச்சர் ஹக்கீமிற்கு ஏமாற்றுவதொன்றும் புதிதல்ல.

அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ் (சாய்ந்தமருது)


0 comments:

Post a Comment