Pages

.

.

Tuesday, February 7, 2017

அரசியலாகும் சைட்டமிற்கு எதிரான போராட்டங்கள்


சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.தனியார் கல்லூரி தரமிக்கதாக காணப்படாது என்ற எண்ணப்பாடு இலங்கை மக்களிடையே இருப்பது என்னவோ உண்மை தான்.இது பிழையானதாகும்.இன்று இலங்கையில் அரச பல்கலைக் கழகங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்குகின்றமை இதற்கான காரணமாக இருக்கலாம்.இன்று அதிகமான நாடுகளில் தரமிக்க தனியார் பல்கலைக் கழகங்கள் காணப்படுகின்றன.

இத் தனியார் கல்லூரியில் தரமற்ற பாடவிதானங்கள் உள்ளடக்கப்பட்டு தகுதியற்றவர்களுக்கு வைத்திய சான்றிதழ் வழங்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக போராடலாம்.தற்போது போராட்டம் செய்பவர்களிடம் அப்படியான பேச்சுக்களை காண முடியவில்லை.

இன்று சைட்டமிற்கு எதிராக போராட்டம் செய்பவர்கள்,ஏ.எல் படித்து பெறுபேறுகளின் அடிப்படையில் வைத்திய பீடத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் மாத்திரமே வைத்திய துறைக்கு தகுதியானவர்கள் போன்று கருதியே ஆர்ப்பாட்டம் செய்வதாக உணர முடிகிறது.இலங்கை அரசினால் ஒரு குறித்த தொகையினரையே பல்கலைக் கழகங்களுக்கு உள் வாங்கி பயிற்சி அளிக்க முடியும்.அவர்கள் தான் இவ்வாறு பயிற்சி அளிக்கப்படுபவர்களே தவிர ஏனையவர்கள் தகுதியற்றவர்களுமல்ல என்பதை குறித்த ஆர்ப்பாட்டக் காரர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இது பிழையாக இருக்குமாக இருந்தால் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் கற்பது பிழை தானே! அதற்கு எதிராக ஏன் இத்தனை காலமும் போராடவில்லை? அவ்வாறு வருபவர்கள் இலங்கை வந்து பரீட்சை ஒன்றிற்கு தோற்றி சித்தியடைய வேண்டும் என கூற வரலாம்.இலங்கை அரசு சைட்டம் தனியார் கல்லூரிக்கு அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளதால் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி ஒரு வைத்தியருக்கு போதுமானதாக உள்ளதாக கருதி அவ்வாறான பரீட்சைகள் அவசியமற்றதாக கருதியிருக்கலாம் என்ற நியாயமும் அதில் பொதிந்துள்ளது.

தனியார் மருத்துவ கல்லூரி இருப்பது பிழை என்றால் தனியார் ஏனைய துறைகள் சார் கல்லூரிகள் இருப்பதும் தவறு தானே? அதற்கு எதிராக ஏன் யாருமே போராடவில்லை.இன்று இலங்கையில் பொறியியல் கல்வி தனியார் கல்லூரிகளில் மலிவு விலையில் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இன்று பணம் இருந்தால் சகல அனுமதிகளுடனும் ஏ.எல்.தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பொறியியலாளராக வருவதற்கு முன்பு பொறியியலாளர் ஆவதற்குரிய வழிகள் காணப்படுகின்றன.இங்கு நான் கூற வரும் விடயம் தனியார் மருத்துவ கல்லூரி இருப்பது தவறென்றால் தனியார் ஏனைய துறைகள் சார் கல்லூரிகள் இருப்பதும் தவறாகும்.

அரச கல்லூரியை விட தனியார் கல்லூரிகள் மூலம் பல இலாபங்கள் உள்ளன.குறுகிய காலத்தினுள் தரமிக்க கல்வியை பெறலாம்.இலங்கையை சேர்ந்தவர்கள் வெளி நாடுகளுக்கு சென்று இலங்கை பணத்தை வழங்குவதை இலங்கைக்குள் முடக்கலாம்.ஏ.எல் பரீட்சையில் அரச பல்கலை கழகங்களுக்கு தெரிவு செய்யப்படாதவர்கள் வைத்தியராவதற்குரிய  தகுதியற்றவர்கள் என்ற நிலை மாற்றப்படும்.வைத்திய தேவை நிவர்த்திக்கப்படும்.அந்த நிறுத்தம் இந்த நிறுத்தம் போன்ற கதைகள் இல்லாமல் ஆக்கப்படும்.சுகாதாரத் துறை சாதாரண பிரஜைக்கும் இலகுவில் சாதாரண செலவில் சென்றடையும்.இப்படி அதன் நன்மைகளை அடிக்கிக் கொண்டே செல்லலாம்.இருந்தாலும் *தனியார் கல்லூரிகளில் உருவாக்கப்படும் வைத்தியர்களின் தரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.*

இவைகளை வைத்து நோக்கினால் சைட்டமிற்கு எதிரான இவர்கள் போராட்டம் தவறானது என்பதை விளங்கி கொள்ளலாம்.இதனை ஜே.வி.பி,மஹிந்த அணியனர் தனது அரசியலுக்கு நன்றாக பயன்படுத்த முனைவதை தற்போது அவதானிக்க முடிகிறது.பல்கலைக் கழக விடயம் ஒன்று என்றால் அங்கு ஜே.வி.பி தலையை கொடுப்பது புதிதல்ல.குறித்த பல்கலைக்கழகத்திற்கு மஹிந்த ராஜபச்கவின் காலத்திலேயே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.அப்படி இருக்கையில் அவர் மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பது அரசியல் இலாபம் கொண்டதென சாதாரணமாகவே கூறலாம்.

இவர்கள் ஆர்ப்பாட்டம் மிக நீண்ட காலமாக சிறிதும் சளைக்காமல் இடம்பெறுவதாலும் இதற்கு எதிரான எதுவும் செய்ய முடியாத திரிசங்கு நிலையில் அரசாங்கம் இருப்பதாலும் இதனை வைத்து அரசியல் இலாபம் தேடிக்கொள்ளலாம்.இப்படியான திருசங்கு நிலையைத் தான் மஹிந்த அணியினர் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.இந்த அரசு எத்தனை சவால்களைத் தான் எதிர்கொண்டுள்ளது?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

0 comments:

Post a Comment