Pages

.

.

Saturday, February 4, 2017

மு.காவின் யாப்பின் அடிப்படையிலான பேராளர் மாநாடு

மு.காவின் 27வது பேராளர் மாநாடு எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந் நேரத்தில் இது பற்றி அலசுதல் பொருத்தமானதும் கூட.மு.வானது ஒவ்வொரு வருடமும் ஒரு பேராளர் மாநாட்டை நடாத்த வேண்டும்.இந்த பேராளர் மாநாட்டில் உள்ள முக்கியத்துவம் ஒரு பேராளர் மாநாட்டில் தான் மு.காவின் யாப்பை மாற்ற முடியும்.இங்கு தற்போதைய சூழ் நிலைகளில் மிக முக்கியமானதொரு வினா எழலாம்.மு.காவின் யாப்பின் அடிப்படையில் ஹசனலிக்கு செயலாளர் அதிகாரங்கள் வழங்க முடியுமா என்பதாகும்.தற்போது இருக்கின்ற யாப்பின் அடிப்படையில் எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ள பேராளர் மாநாட்டில் வைத்து யாப்பை மாற்ற முடியாது என்பதே தெளிவான உண்மை.

மு.கா யாப்பின் 7.1.e ஆனது *“யாப்பு மாற்றங்கள் ஏதாவது புதிதாக வருடாந்த கட்டாய உயர்பீட கூட்டத்திலும் பின்னர் பேராளர் மாநாட்டிலும் அங்கீகாரத்துக்காக சமர்பிப்பதாக இருப்பின் அவை ஒரு மாத காலத்துக்கு முன்னர் நடைபெறும் சாதாரண உயர்பீட கூட்டத்தில் முன்கூட்டியே யாப்பு விவகார பணிப்பாளரிடம் சமர்பிக்கப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். யாப்பு விவகார பணிப்பாளர் பின்னர் முறையான கலந்துரையாடல்களின் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட மாற்றங்களை வருடாந்த கட்டாய உயர்பீட கூட்டத்திலும் பின்னர் பேராளர் மாநாட்டிலும் சமர்பிப்பார்.”*  எனக் கூறுகிறது.
7.1.f வருடாந்த கட்டாய உயர்பீட கூட்டத்திலும் பின்னர் பேராளர் மாநாட்டிலும்  இடம்பெறவேண்டிய நிகழ்சிகள் பற்றிய அனைத்து விடயங்களும் ஒரு மாத காலத்துக்கு முன்னர் நடைபெறும் சாதாரண உயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு பின்னர் மஷூரா சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின்னர் நிகழ்ச்சி நிரல்களாக அழைப்பிதழ்கலில்  உள்ளடக்கப்பட்டு பங்குபற்றும் உறுப்பினர்களுக்கு  இரு வாரங்களுக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பப்படவேண்டும்.

இதில் குறிப்பிடப்படும் கட்டாய உயர்பீடக் கூட்டம் என்பது வருடாந்த பேராளர் மாநாட்டிற்கு முநந்திய உயர்பீடத்தின் இறுதிக் கூட்டமாகும்.அதாவது யாப்பு மாற்றம் நிகழ்வதானால் ஒரு மாதத்திற்கு முன்பு இடம்பெறும் உயர் பீடக் கூட்டத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.அதாவது 2017-01-02ம் திகதி இடம்பெற்ற உயர்பீடக் கூட்டத்தில் இவ் யாப்பு மாற்றம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலேயே எதிர்வரும் எதிர்வரும் 12ம் இடம்பெறும் பேராளர் மாநாட்டில் அது மாற்றத்திற்கு உட்படும்.இன்று மு.கா யாப்பின் பிரகாரம் செயல்படும் கட்சியல்ல.இந்த நடைமுறை கடந்த யாப்பு மாற்றத்தின் போது கடைப்படிக்கப்பட வில்லை.இருந்தாலும் இதனை ஒருவர் சட்ட ரீதியாக நீதிமன்றத்தை அணுகினால் இதனை மாற்ற முடியாது என்ற தீர்ப்பே கிடைக்கும்.ஹசனலிக்கு முன்னர் போன்ற பூரண அதிகாரமிக்க செயலாளர் பதவி கிடைப்பதற்கான சாத்தியக்கூறு மிக அரிதாகும்.அப்படி அவருக்கு கிடைக்க வேண்டுமாக இருந்தால் குறித்த பேராளர் மாநாடு காலம் தாழ்த்தப்பட்டு நடாத்தப்பட்டு இந் நடைமுறை பிட்பற்றப்படுவதட்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இதனை செய்வதற்கான கால ஏற்பாடுகள் மு.காவின் யாப்பிலும் உள்ளது.இரண்டு பேராளர் மாநாடுகளுக்கிடையிலான இடைவேளிக்காலம் 14 நாட்களுக்கு மேல் இருக்க கூடாதென மு.கா யாப்பின் 7.1.g குறிப்பிடுகிறது.கடந்த மு.காவின் பேராளர் மாநாடு 2015-11.07ம் திகதி இடம்பெற்றது.அப்படி பார்க்கப்போனால் 2016-01-07ம் திகதியுடன் இப் பாகம் செல்லுபடியற்றதாகிறது.7.1.k இன் பிரகாரம் தவிர்க்க முடியாத சூழ் நிலையில் இன்னும் ஆறு மாதங்கள் அதிகரிக்கலாம்.இதனை பிற்போடும் அதிகாரம் *7.1.k* இன் பிரகாரம் உயர்பீடத்திற்கே உள்ளது.தற்போது அவசரமாக உயர்பீடத்தை கூட்டி இதற்கான அனுமதி பெறப்பட வேண்டும்.அல்லது அமைச்சர் ஹக்கீம் மஷூரா சபையின் அனுமதியுடன் தனது விசேட அதிகாரத்தை பாவிக்க வேண்டும்.அதாவது இதனை நீடிக்க வேண்டுமாக இருந்தால் அதனை அமைச்சர் ஹக்கீமே செய்ய முடியும்.இவற்றையெல்லாம் வைத்து பார்க்கின்ற போது இம் முறை ஹசனலிக்கு பூரண அதிகாரமுடைய செயலாளர் பதவி வழங்கப்படாது என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

ஒரு மாதத்திற்கு முன்னர் யாப்பு மாற்றமானது உயர்பீடத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது நடைமுறையில் சிந்திக்கின்ற போதும் சிறந்த நடைமுறையாகும்.கட்டாய உயர்பீடக் கூட்டமானது பேராளர் மாநாடு நடாத்த தீர்மானித்த நாளிக்கு மிக நெருங்கிய காலப்பகுதியில் இடம்பெறுவதே வழமை.கடந்த கட்டாய உயர் பீடக் கூட்டமானது பேராளர் மாநாட்டிற்கு முந்திய நாள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.பேராளர் மாநாட்டிற்கு மிக நெருங்கிய காலப்பகுதியில் யாப்பு மாற்றப்பட்டு சமர்ப்பிக்கப்ப்படுமாக இருந்தால் அது பற்றி ஆரோக்கியமான விவாதம் செய்ய முடியாது.யாப்பு என்பது மூடிய அறைக்குள் முடிக்கும் விவகாரமுமல்ல.கடந்த முறை இந் நடை முறை பின்பற்றப்பட்டிருந்தால் செயலாளர் பதவி விவகாரத்தில் மு.கா இத்தனை சவால்களை எதிர்கொண்டிருக்காது.மு.காவின் யாப்பில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படாமையே இது போன்ற பிரச்சினைகள் தோன்ற காரணமாகும்.

 கட்சியின் செயலாளர்

இப் பாகமே கடந்த பேராளர் மாநாட்டை தொடர்ந்து  மிகவும் சர்ச்சைக்குரிய பாகமாக மாறி இருந்தது.உயர்பீட செயலாளராக நியமிக்கப்பட்டவர் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டதாக ஹசனலி அணியினர் கூறியிருந்தனர்.தற்போது ஹசனலி தேர்தல் ஆணையாளரிடம் சென்று தனது முறைப்பாட்டை மீளப் பெற்றுள்ளார்.இந்த பாகத்தை பொறுத்தமட்டில் ஹசனலியை குறி வைத்து ஹக்கீமால் இயற்றப்பட்ட பாகமாகும்.பெயர் ரீதியாக பார்க்கின்ற போது செயலாளர் நாயகம் என்ற பதவியே கௌரவத்திற்குரியது போன்று விளங்கும்.இருந்தாலும் இதன் அதிகாரங்கள் அனைத்தும் கட்சியின் செயலாளர் என்ற பகுதிக்குள் சென்றுவிட்டது.கட்சியின் செயலாளரும் உயர்பீட செயலாளரும் எனும் போது  அப் பெயரானது செயலாளர் நாயகம் என்ற பதவியை விட மதிப்பு குறைவானது போன்று இருந்தாலும் அதுவே பலமிக்கதாகும்.செயலாளர் என்பது  ஒரு கட்சியின் மிக முக்கிய பதவியாகும்.

8.9.c ஆனது *“கட்சியின் செயலாளர் நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து ஒரு வருட காலத்திற்கு செயற்படுவதற்காக தலைவரினால் நியமிக்கப்படுவார்”* என கூறுகிறது.கட்சி என்பது ஒரு இலட்சியத்தை அடைவதற்கு பலர் ஒன்றிணைந்து செய்கின்ற ஒன்றாகும்.மிக முக்கியமான பதவியான இப் பதவியை தலைவர் தெரிவு செய்வார் என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.இவரை நியமித்தல் நீக்குதல் அனைத்து அதிகாரங்களை தலைவர் தன்னகத்தே வைத்துள்ளார்.ஒரு கட்சியின் செயலாளர் தலைவரின் ஜால்ராவாக செயல்படுவது ஒரு கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல.இப் பதவியை பார்க்கின்ற போது இவர் கட்சித் தலைவரின் உதவியாளர் போன்றே செயற்படுவார் என்பதை அறிந்து கொள்ளலாம்.இம் முக்கிய பதவியை வகிப்பவருக்கு நேரடியாக மாதாந்த சம்பளம் வழங்கப்படுகின்றமை இப் பதவியை இழிவுபடுத்துவது போன்றாகும்.வேறு எந்த பதவிக்கும் சம்பளம் வழங்கும் நடைமுறையில்லை.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 comments:

Post a Comment