Pages

.

.

Sunday, February 26, 2017

அமைச்சர் றிஷாதின் சேவைகளை அம்பலத்திற்கு கொண்டு வரும் பணியில் முஸ்லிம் காங்கிரஸினர்

(இப்றாஹீம் மன்சூர்)

பாக்கிஸ்தான் பல்கலைக் கழகம் ஒன்றினால் அமைச்சர் றிஷாதின் வேண்டுகோளுக்கு ஏற்ப வழங்கப்பட்ட மருத்துவ படிப்பிற்கான புலமைப் பரிசில் அமைச்சர் றிஷாதின் மகளுக்கும் அமைச்சர் றிஷாதின் வட மாகாணத்திற்கான இணைப்புச் செயலாளருமான முனவ்வர் என்பவரது மகளுக்கும் வழங்கப்பட்ட விடயம் பலத்த பேசு பொருளாகவுள்ளது.இந்த புலமை பரிசில் இவ் வருடம் மாத்திரம் அமைச்சர் ரிஷாதினால் வழங்கப்படவில்லை.பல வருடங்களாக வழங்கப்பட்டே வருகிறது.இதனை யாருமே அறிந்திருக்கவில்லை.இம் முறை மு.காவினர் இதனை பெரிதாக தூக்கிப் பிடித்ததால் இவ் விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.சீரிய முறையில் சிந்திக்கும் ஒருவன் இதனை அமைச்சர் றிஷாத் தனது புகழ்ச்சிக்காக பயன்படுத்தாது சமூக உணர்வோடு செய்து வருகிறார் என்பதை அறிந்து கொள்வான்.இதனை புகழ்ச்சிக்காக பயன்படுத்த சிந்தித்திருந்தால் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருப்பாரல்லவா? ஒரு புலமை பரிசிலின் பெறுமதி ஒரு கோடி ரூபாய்.இது வரை அண்ணளவாக ஐம்பத்து ஐந்து புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அமைச்சர் றிஷாத் மறைத்ததில் ஒரு விடயமுள்ளது.இது பாகிஸ்தான் புலமை பரிசில் என்பதால் இது பகிரங்கமாகும் போது இனவாத அமைப்புக்களிடமிருந்து எதிர்ப்புக்கள் தோன்றலாம்.இதனை தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு படுத்தி பேச வாய்ப்புள்ளது.மு.காவினரின் இச் செயற்பாட்டினால் எதிர்காலத்தில் இவ்வாறு புலமை பரிசில் அனுப்புவதில் சிரமம் ஏற்படலாம்.பேரின மாணவர்களும் அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழலாம்.மு.காவினரின் இச் செயற்பாடு வைக்கோல் பட்டறையில் உள்ள நாயின் செயற்பாடு போன்று செய்வதுமில்லை செய்வோரை விடுவதுமில்லை என்ற வகையில் அமைந்துள்ளது.

இம் முறை அமைச்சர் றிஷாதின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த பல்கலைக் கழகத்திலிருந்து மொத்தமாக 21 புலமை பரிசில் கிடைத்துள்ளது.இப் பல்கலைக் கழகம் பெண்கள் மாத்திரம் கல்வி பயிலும் ஒரு பல்கலைக் கழகமாகும்.அமைச்சர் றிஷாத் தனது மகளை பெண்கள் மாத்திரம் கல்வி பயிலும் தரமிக்க பல்கலைக் கழகம் ஒன்றில் சேர்க்க விரும்பியதால் குறித்த தொகை மாணவர்களோடு மேலதிகமாக 22வதாக தனது மகளின் பெயரை இட்டு அமைச்சரின் மகள் என குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.குறித்த பல்கலை கழகம் 22 பேருக்கும் புலமை பரிசிலை வழங்கியுள்ளது.அமைச்சர் றிஷாத் தனது மகளின் பெயரை இணைக்காமல் விட்டிருந்தால் 21 பெயர் பட்டிலைத் தான் வழங்கியிருப்பார்.அமைச்சரின் மகள் என்பது மறைக்கப்பட்டு அப் பல்கலைக் கழகம் அமைச்சர் றிஷாதின் மகளுக்கு புலமை பரிசில் வழங்கவில்லை என்பதுவே இங்கு சிந்திக்கத்தக்கது.இதனை இன்னுமொரு வகையில் கூறப்போனால் அமைச்சர் றிஷாத் மீது கொண்ட நல்லெண்ணத்தால் அப் பல்கலைக் கழகம் அமைச்சர் றிஷாதின் மகளுக்கு வழங்கிய புலமைப் பரிசிலாகவும் இதனை கூறலாம்.இருந்த போதிலும் அவரது மகள் இறுதித் தருவாயில் தனது புலமை பரிசிலை ஒரு ஏழை மாணவிக்கு விட்டுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்ககது.இது இவ் விமர்சனங்கள் எழுவதற்கு முன்பே நடைபெற்ற விடயமாகும்.

அமைச்சர் றிஷாதின் வட மாகாண இணைப்பாளர் முனவ்வர் என்பவர் கோடீஸ்வரல்ல.அவர் ஒரு அரசாங்க ஊழியர்.அவருக்கு தனது மகளை பணம் செலுத்தி வைத்தியராக்குவது கடினமான ஒரு விடயம்.தாங்கள் பாடு பட்டு வளர்த்த ஒரு கட்சியினால் ஒரு நன்மை ஏற்படும் போது அதனை அவர் சுவைப்பதில் என்ன தவறுள்ளது.இவ்வாறான சந்தர்ப்பங்களில் தனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் றிஷாத் முன்னுருமை வழங்குவதில் தவறில்லை.மு.காவினருக்கு இப்படியான புலமை பரிசில் வேண்டுமென்றால் அமைச்சர் ஹக்கீமை பெற்று வர அழுத்தம் வழங்குங்கள்.அதை விட்டு விட்டு அமைச்சர் றிஷாதை இகழ் வேண்டாம்.இவரது மகளுக்கு வழங்கப்பட்டதன் மூலம் அமைச்சர் றிஷாத் தனக்கு கிடைத்த புலமை பரிசிலை ஏனைய சில அரசியல் வாதிகள் போன்று விற்பனை செய்யாது தனது ஆதரவாளர்களுக்கு வழங்கியுள்ளமையை அறிந்து கொள்ளலாம்.

இதன் பிறகு இன்னுமொரு பல்கலை கழகத்திடமிருந்து 5 அரை புலமை பரிசில் கிடைத்துள்ளது.அதில் உள்ள மாணவி ஒருவருக்கு அரசி வாசி பணம் செலுத்துமளவு பணம் இல்லாமையாலேயே தனது மகளை விட்டுக்கொடுக்கச் செய்து முழு புலமை பரிசிலுக்கு உள் வாங்கப்பட்டிருந்தார்.உதவி செய்யாது போனாலும் பரவாயில்லை.உபத்திரம் செய்ய வேண்டாம்.

எமது சமூகத்தில் கல்வி நிலையை உயர்த்த பாடு பட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாதை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.இத் தியாகத்தில் பங்கு கொண்ட அவரது குடும்பத்தையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ளட்டும்.


0 comments:

Post a Comment