Pages

.

.

Wednesday, February 15, 2017

கல்முனை ஸாஹிரா கல்லூரி விவகாரம்
--------------------------------------------------------------
லங்கா அசோக் லேலண்ட் கம்பனியின் தலைவர் டாக்டர் சிராஸ் மீராசாஹிபினால் கல்முனை ஸாஹிறா கல்லூரிக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த பஸ் வண்டியை பெற்றுக் கொள்வதில் கல்லூரி அதிபர், பழைய மாணவர் சங்கம் (கல்முனை), பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகிய மூன்று தரப்பினரும் இணக்கத்தை தெரிவிக்காமை அல்லது கால தாமதப்படுத்தப்பட்டமை (அக்கறை காட்டாமல்) காரணமாக அந்த பஸ்ஸை மல்ஹருஸம்ஸ் வித்தியாலயத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மேற்குறித்த மூன்று தரப்பினரையும் சந்தித்த சில நலன் விரும்பிகள், பாடசாலைக்கு பஸ் ஒன்றைப் பெற்றுத் தர தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்கான இணக்கக் கடிதங்களை வழங்குமாறும் கேடடுள்ளனர். இருப்பினும் கல்லூரி அதிபர், பழைய மாணவர் சங்கம் (கல்முனை), பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகிய மூன்று தரப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை காட்டாமை காரணமாக, அந்த பஸ்ஸை சாய்ந்தமருது மல்ஹருஸம்ஸ் வித்தியாலத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியதீன் கல்முனை ஸாஹிராவுக்கு 3 கோடி ரூபா செலவில் மாடிக் கட்டடத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கு முன்வந்திருந்த நிலையில் அதுவும்  நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன.

இந்த விவகாரங்களின் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் உள்ளனவா அல்லது வேறேதுமா என்று தெரியவில்லை.

-ஏ.எச்..சித்தீக் காரியப்பர்




0 comments:

Post a Comment