Pages

.

.

Sunday, December 11, 2016

வ‌ச‌ந்த‌ம் தொலைக்காட்சியின் அதிர்வு நிக‌ழ்வில் க‌ட்சியின் செய‌லாள‌ர் தொட‌ர்பில் வை எல் எஸ் செய்த‌ வ‌ழ‌க்கு சம்ப‌ந்த‌மான‌ அ இ ம‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் கூறிய‌ க‌ருத்தை வை எல் எஸ் ம‌றுத்து வ‌ட்ச‌ப்பில் ப‌திவிட்டுள்ளார். அதாவ‌து புதிய‌ செய‌லாள‌ர் நிய‌ம‌ன‌த்தை நீதிம‌ன்ற‌ம் ஏற்றுக்கொண்ட‌தாயின் ஏன் இன்ன‌மும் வ‌ழ‌க்கு உள்ள‌து என‌ கேட்டுள்ளார்.

இந்த‌ வ‌ழ‌க்கில் நானும் ஒரு பிர‌திவாதி என்ற‌ வ‌கையிலும் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கில் நீதி ம‌ன்ற‌த்தில் ஆஜ‌ரான‌வ‌ன் என்ற‌ வ‌கையிலும் சில‌ உண்மைக‌ளை சொல்வ‌து என் மீது க‌ட‌மையாக‌ பார்க்கிறேன். இத‌னை எழுதும் ப‌டி அமைச்ச‌ரோ வேறு எவ‌ருமோ என்னை ப‌ணிக்க‌வில்லை என்ப‌தையும் இறைவ‌ன் மேல் ஆணையாக‌ சொல்கிறேன்.

மேற்ப‌டி வ‌ழ‌க்கு வை எல் எஸ் சால் தொட‌ர‌ப்ப‌ட்ட‌ போது புதிய‌ செய‌லாளராக‌ சுபைதீன் ஹாஜி இய‌ங்குவ‌தை த‌டை செய்யும்ப‌டி கோரியே வ‌ழ‌க்கு தொட‌ர‌ப்ப‌ட்ட‌து.

இம்மாதிரியான‌ விட‌ய‌ங்க‌ளில் புதிய‌ ஒருவ‌ரை த‌டை செய்யும்படி ப‌ழைய‌வ‌ர் கேட்டால் புதிய‌வ‌ரை த‌டை செய்யும் ப‌டி இடைக்கால‌ த‌டை உத்த‌ர‌வை வ‌ழ‌ங்குவ‌தே  நீதி ம‌ன்றின் வ‌ழ‌மை. உதார‌ண‌மாக‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் செய‌லாள‌ராக‌ ஹிஸ்புல்லாஹ் சில‌ரால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ போது ஹ‌க்கீம் த‌ர‌ப்பின‌ர் அத‌ற்கெதிராக‌ வ‌ழ‌க்கு தாக்க‌ல் செய்த‌ போது நீதி ம‌ன்ற‌ம் ஹிஸ்புல்லா செய‌லாள‌ராக‌ இய‌ங்குவ‌த‌ற்கான‌ த‌டை உத்த‌ர‌வை பிற‌ப்பித்த‌து.

இதே போல் வை எல் எஸ் ப‌க்க‌ம் நியாய‌ம் இருந்திருந்தால் அவ‌ர‌து ம‌ணுவை நீதி ம‌ன்ற‌ம் ஏற்று சுபைதீன் ஹாஜியாருக்கு இடைக்கால‌ த‌டையாவ‌து வ‌ழ‌ங்கியிருக்கும். ஆனால் நீதிம‌ன்ற‌ம் உட‌ன‌டியாக‌ தீர்ப்பை வ‌ழ‌ங்காது மீண்டும் விசாரித்த‌ பின்பே இறுதி தீர்ப்பை வ‌ழ‌ங்கும். இத‌னை ச‌ட்ட‌த்த‌ர‌ணியான‌ ச‌கோத‌ர‌ர் வை எல் எஸ் புரிந்து கொள்ளாமை க‌வ‌லை த‌ருகிற‌து.

இந்த‌ வ‌கையில் வை எல் எஸ்சின் கோரிக்கையை அதாவ‌து புதிய‌ செய‌லாள‌ர் இய‌ங்குவ‌தை த‌டை செய்ய‌ வேண்டும் என்ற‌ கோரிக்கையை நீதி ம‌ன்ற‌ம் ஏற்று த‌டையோ இடைக்கால‌ த‌டையையேனும் வ‌ழ‌ங்க‌ ம‌றுத்த‌த‌ன் மூல‌ம் அவ‌ரின் கோரிக்கையை நீதிம‌ன்ற‌ம் ம‌றுத்த‌த‌ன் மூல‌ம் அமைச்ச‌ர் ரிசாத் த‌ர‌ப்புக்கு வெற்றி கிடைத்த‌து.  ஆனாலும் வாதி த‌ம‌து நியாய‌த்தை மேலும் நிரூபிக்க‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ழ‌ங்குவ‌து நீதி ம‌ன்ற‌த்தின் க‌ட‌மை என்ப‌தால் வ‌ழ‌க்கு தொட‌ர்கிற‌து.

ஆக‌ எத‌ற்காக‌ வ‌ழ‌க்கு தொட‌ர‌ப்ப‌ட்ட‌தோ அது விட‌ய‌த்தில் வை எல் எஸ்சின் கோரிக்கை நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌துட‌ன் புதிய‌ செய‌லாள‌ருக்கு த‌டை விதிப்ப‌தை நீதி ம‌ன்ற‌ம் ஏற்க‌வில்லை என்ப‌த‌ன் மூல‌ம் இது விட‌ய‌த்தில் யாருக்கு வெற்றி என்ப‌தை மிக‌ இல‌குவாக‌ புரிய‌லாம்.

-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்
உல‌மா க‌ட்சி,
க‌லை க‌லாசார‌ ப‌ணிப்பாள‌ர்.
அ. இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ்

0 comments:

Post a Comment