Pages

.

.

Thursday, December 1, 2016

சமுதாயத்துக்காக துணிந்து அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,,....

அன்று முஸ்லிம் சமுதாயம் அரசியல் அனாதைகளாக இருந்ததை உணர்ந்த மறைந்த தலைவர் அஸ்ரப் தனது சமுகத்தின் விடிவுக்காக முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியை ஆரம்பித்து குறுகிய கால அரசியல் வாழ்க்கையில் மக்கள் மறக்காத சேவையை செய்தார்

தலைவர் அஸ்ரப் அவர்கள்  மறைவுக்கு பின் அவர் விட்டு சென்ற பணியை தொடர ஒரு தலைமைத்துவம் தேவைப்பட்ட போது சிரிப்பால் மயக்கும் சட்டத்தரனியான றவூப் ஹக்கிம்  நானாவின் நப்சியின் விருப்பத்திற்கு தலைசாய்த்து சாய்ந்தமருது மண்ணில் வைத்து சமுதாயத்துக்காக குரல் கொடுப்பார் ஹக்கிம் என்ற முழு நம்பிக்கையில் அம்பாறை மாவட்ட மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக  ஹக்கிம் அவர்களை  பிரகடனப்படுத்தினாகள் சமுதாயமும் அன்று ஏற்றுக் கொண்டது

காலம் 16 வருடம் வருடம் உருண்டு ஒடியது மக்கள் நம்பிய சாணக்கியம்  சமுதாயத்துக்கு செய்தது ஏதுவுமில்லை செய்ததாக சாணக்கியம் சொல்லவும் ஏதுவுமில்லை என்பதை உணர்ந்த சமுதாயம் இன்று சாணக்கியத்தை உலகில் பேச முடியாமல் ஆதரவாளர்கள் கூக் குரல்யிடும் நிலை வந்துள்ளது இதற்கு என்ன காரணம் என்று தேடினால் மறைந்த தலைவர் அஸ்ரப் தனது குறுகிய காலத்தில் முஸ்லிம்களுக்கு பல கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கினார்( அஸ்ரப் நகர், மிலாத்நகர், சம்பூநகர் ) ஏழை மக்களுக்கு வீடு கட்ட உதவினார் வாழ்வாதார உதவிகள் செய்தார் பாராளுமன்றத்தில் தனது மக்களுக்காக அடிக்கடி குரல் கொடுத்து நாட்டு மக்கள் முஸ்லிம்களை கௌரவாப்படுத்தும் நிலையை உருவாக்கினார் இப்படி தனது சமுகத்துக்காக பெரும் சேவை செய்தார் அவற்றையெல்லாம் மறக்காமல் இன்றும்  மக்கள் அஸ்ரப் என்னும் மாமனிதனை மறக்காமல் நினைவு கூறுகின்றனர்

ஆனால் இந்த சாணக்கியம் 16 வருடமாக தலைமை பதவியேற்று செய்தது என்ன என்று பார்த்தால் தனக்கு தலைமை பதவியை தந்து நப்சியீன் ஆசையை நிறைவேற்றிய மக்களுக்கு செய்தது துரோகம் தான்

#அதாவது

 அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை உருவாக்கியது

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் தருவதாக எழும்பில்லா நாக்கால் மக்கள் முன் சத்தியம் செய்து விட்டு சத்தியத்தை மறந்து விட்டார்

அம்பாரை மாவட்டத்தில் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர்களான ஹசன் அலி அதாவுல்லாஹ் போன்ற உறுப்பினர்களை ஓரங்கட்டியது

கிழக்கு மாகாண ஆளுனராக S P மஜீது அல்லது A R M மன்சூர் இருவரில் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி விருப்பத்தோடு இருந்த போது அம்பாரையில் தன்னை விட கெடுதலான அரசியல் செல்வாக்குடன் எவரும் வரக் கூடாது என்ற நயவஞ்சக செயலால் தடுத்து நிறுத்தியது

கடந்த மாகாண சபை .ஜனாதிபதி தேர்தல்களில்  சமுதாயத்தை படுகுழி தள்ள முயற்சி செய்தார் இறுதியில் ஹசன் அலியின் முயற்சியால் அவை தடுக்கப்பட்டு சாணக்கியத்தின் அரசியல் வியாபரம் நஸ்டத்தில் முடிந்தது அதன் பிரதிபலிப்பு தான் என்று கட்சியின் செயலாளர் ஹசன் அலி  அனுபவிக்கிறார்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக இருந்த கட்சி தற்போது அஸ்ரப் அவர்களின் கொள்கைக்கு எதிராக மாற்றம் அடைந்து ஹக்கிம் காங்கிரஸ் கட்சியாக தற்போது மாறியுள்ளது

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் காணி இருப்பிடம் தொழில் வாய்ப்பு கல்வி என்பவற்றில் இருக்கின்ற பிரச்சினைகள் இது வரை தீர்க்கப்படவில்லை இது பற்றி மக்கள் சாணக்கியத்திடமும் அவரது சகாபாக்களிடமும் பல ஆண்டு சொல்லியும் பலனில்லை அதனால் தற்போது அஸ்ரப் நகர் வீட்டு பிரச்சினை சம்மந்தமாக ஒரு ஏழை பெண் தாக்கல் செய்த வழக்கு  கொழும்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது

மானிக்கமடுவில் சிலையை வைத்த விடயத்தில் சிலை வைத்தால் என்ன மதம் மாறுவதா ?என்று கேட்டார் அத்தோடு ஒரு வாரத்தால் பிரச்சினைக்கு முடிவு என்றார் இன்று ஒரு வாரம் நான்கு வாரமாகி விட்டது இன்னும் முடிவு இல்லை

அம்பாறையில் ஒரு நில அதிர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஊரிலும் நிலத்தை தோன்றி அடிக்கல் வைக்கிறார் இது வரை எந்த கல்லும் முளைக்க வில்லை கடைசியில் கல் வெடித்து நில அதிர்வு தான் ஏற்படும் இதை தடுக்க மக்கள் இனி #கல்லு #பொல்லு என்று  சாணக்கியம் வந்தால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்

இப்படி சாணக்கியம் 16 வருடமாக இந்த அம்பாறை மாவட்ட மக்களை பொய் சொல்லி அரசியல்வாதிகள் படித்த புத்திஜிவிகளை ஏமாற்றி வருவதை மக்கள் அறிந்து கொண்டு இந்த தலைமை சாணக்கியத்துக்கு எதிராக போராட அம்பாறை மாவட்ட மக்கள் தூனிந்து விட்டனர் அதன் ஆரம்பம் கடந்த மாதம் சாய்ந்தமருதில் நடைபெற்ற ஹக்கிம் காங்கிரஸ் கூட்டத்தில் கூக் குரல் சத்தம் அல்லாஹ்வுடைய வேலை தலைமை பதவி எடுத்த மண்ணில் தலைமை பதவிக்கு ஆப்பு வந்து விட்டது

இந்த அம்பாரை மாவட்ட மக்களுக்கு சாணக்கிய தலைவர் தொடர்ந்து செய்து வரும் நயவஞ்சக துரோகத்தை சில வங்குரோத்து அரசியல்வாதிகள் பணம் பதவிக்கு ஆசைப்பட்டு மறைத்து வருகின்றனர் இவர்கள் வேஷம் எல்லாம் இனி மக்களிடையே செல்லுபடியாகாது

முஸ்லிம் காங்கிரஸ் என்ற #முஸ்லிம் இனவாத சொல்லை வைத்து மக்களை ஏமாற்றும் கூட்டத்தை விரட்ட அம்பாரை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் அதாவுல்லாவை நாடி இருந்தனர் ஆனால் அவரின் குதிரைக்கு ஆஸ்மா நோய் அதனால் வேகமாக ஓட  முடியாமல் போய் விட்டது அதன் பின் 16 வருடமாக சிந்தித்து மறைந்த தலைவரின் வெற்றிடத்தை நிரப்ப தகுதியான ஒரு தலைவனை அம்பாரை மாவட்ட மக்கள் தேடி அலைந்து கண்டெடுத்த தங்க தலைவன்  தான் அமைச்சர் றிசாத் பதியூதின்




கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்க மக்கள் அழைப்பு விடுத்த போதும் தனது தலைவர் அஸ்ரப் அவர்களின் காலடிபட்ட மண்ணில் கவலையுடன் வாழும் சமுதாயத்தை காப்பாற்ற அமைச்சர் றிசாத் சிரித்த முகத்தோடு  துனிவுடன் வந்தார் அவரை அம்பாரை  மக்கள் இன்ப முகத்தோடு வரவேற்று சத்திய தேசிய தலைவராக பிரகடனம் செய்து  சந்தோஷம் கொண்டாடினார்கள்

இது வரை காலமும் அம்பாரையில் உள்ள கட்சி தலைவர் குதிரை வீரனுக்கு வழங்காத ஆதரவை மயிலுக்கு (33000) வாக்கு அளித்து சிறப்பித்தனர் ஆனால் சதிகார கும்பலின் சதியால் ஒரு ஆசனம் பெற முடியாமல் போய் விட்டது ஆனால் எதிர்வரும் தேர்தலில் மயில் இரு ஆசனத்தை கொத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை

உலக மக்கள் விரும்பும் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாரை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்றாலும் சத்திய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அம்பாரை மாவட்டத்துக்கு வருகை தந்த பின் பல அபிவிருத்தி வேலைகள் நடக்கின்றன நீண்ட கால பிரச்சினைகள்  (ஒலுவில் பொத்துவில்) தீர்க்கபட்டு வருன்கின்றன அமைச்சர் றிசாத் அடிக்கடி அம்பாறை மாவட்டத்துக்கு வந்து மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை நேரில் மக்களிடம் கேட்டு அறிந்து கொள்கிறார் மற்றும் ஒரு சிறப்பு அல்லாஹ்வின் வீடுகளை அழகுபடுத்துகிறார்

மறைந்த தலைவரின் கொள்கையில் சமூதாய அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு பெருகி வரும்  மக்கள் ஆதரவை கண் முன்னால் கண்டு வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கு நித்திரையும் இல்லை இவர்கள் இன்று தனது கூலிப்படைகள் மூலம் முகநூல்க இனையதளங்களில் பொய் வதந்திகளை மக்களிடையே  பரப்பி வருகின்றனர் இவர்கள் பணத்துக்கு எழுதுகின்றவர்களுக்கு சொந்த பெயர் போட்டோ இல்லாத கோழைகளாகவே அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக எழுதுகின்றனர் என்றால் இவர்கள் தேர்தல் காலங்களில் மயிலுக்கு வாக்கு போடும் சிறப்பு படையினர் என்பது நிச்சயம் எதிரிகளை வரவேற்க மக்கள் காங்கிரஸ் என்றும் திறந்த மணதுடன் இருக்கிறது என்பதை கூறிக்கொள்கிறேன்

அடுத்து முஸ்லிம் தலைமையை உறுதி செய்யும் மக்கள் அம்பாறை மாவட்ட மக்கள் அவர்கள் தற்போது அமைச்சர் றிசாத் அவர்களை சத்திய  தேசிய தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர்

இதை சகித்துக் கொள்ள முடியாத ஹக்கிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மானிக்கமடு சிலை விடயத்தில் அமைச்சர்  றிசாத் தொடர்பு SLTJ செயலாளர் றாசிக் அவர்களை கைது செய்ய வைத்து பினை வழங்க கூடாது என்று சட்டத்தரனிகளை அனுப்புகிறார் அமைச்சர் றிசாத் என்று கூறி வருகின்றனர் இவர்கள் யார் இவர்கள் நோக்கம் என்ன  என்பது மக்களுக்கு தெரியும்

அமைச்சர் றிசாத் அவர்கள் சமுதாயத்தை ஏமாற்றி பித்னாக்களை உருவாக்கி மக்களுக்கு பொய் வாக்குறுதி கொடுத்து போலி வேஷம் போட்டு அரசியல் செய்பவர் இல்லை

தனது இளம் வயதில் பல இன்னல்களை சந்தித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்த சமுதாய அரசியல்வாதியான அமைச்சர் றிசாத் தனது சமுதாயத்தை காட்டிக் கொடுத்துகூட்டிக் கொடுத்து  விலை பேசும் அரசியல்வாதி இல்லை என்பது மக்களுக்கு தெரியும் அதனால்தான் இன்று மக்கள் விரும்பும் தலைவனாக அல்லாஹ் விரும்புகிறான்

கடந்த அமைச்சரவை கூட்டம் ஒன்றில் SLTJ செயலாளர் றாசீக் அவர்களுக்கு எதிராக பேசியவர் தான் இந்த சாணக்கிய தலைவர் ஹக்கீம் என்பது நாட்டு மக்கள் அறிந்து மௌனமாக இருக்கின்றனர் அதன் பலனை ஹக்கிம் எதிர்வரும் தேர்தலில் அனுபவிப்பார்

எனவே எவர் இனி என்ன சொன்னாலும் மக்கள் மனதிலிருக்கும் சத்திய தேசிய தலைவர் றிஷாட் அவர்களை மக்களிமிருந்து பிரிக்க முடியாது அது போல் அவரின் அரசியலில் வீழ்ச்சி ஏற்படுத்த நினைப்பவர்கள் நித்திரையின்றி அலைய அல்லாஹ் வைத்து விடுவார்

ஆகவே அமைச்சர் றிசாத் அவர்களின் தலைமையின் கீழ் நாம் அனைவருக்கும் ஒன்றினைந்து செயல்படுவதே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது

ஜெமீல் அகமட்

பொத்துவில் தொகுதி கொள்கைபரப்பு செயலாளர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

0 comments:

Post a Comment