Pages

.

.

Friday, December 2, 2016

கண்டியாப்பால் கதிகலங்கி நிற்கும் றவூப் ****************  ##ஹக்கீம் **************

கண்டியில் நடைபெற்ற பேராளர் மாகாநாட்டில் பெளத்து வரை கட்சியின் தலைவனாக இருக்க வேண்டும் என்று யாப்பில் செய்த மாற்றம் இன்று கட்சியை அழிவுபாதைக்கு கொண்டு வந்துள்ளது

பேராளர் மாநாட்டில் தனது திருகுதாளத்துக்கு மேளம் அடிக்கும் கூலிப்படைகளின் ஆதரவுடன்  கட்சியின்  பாதுகாவலன் ஹசன் அலி அவர்களின் செயலாளர் பதவியில் மாற்றம் செய்தார் அது
பல மரங்களை கொத்திய மரங்கொத்தி இறுதியில்  வாழைமரத்தை கொத்தி மாட்டிக்கொண்ட கதை போல் மாட்டிக்கொண்டு முழிக்கின்றார் ஹக்கீம்

ஹக்கிமை தலைவனாக ஏற்றுக் கொண்ட குற்றத்துக்காக ஹசன் அலி 16 வாருடமாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து கட்சியை பிளவுபடுத்தாமல் தலைவன் திருந்துவான் என்று பொறுமையுடன் அரசியல் செய்த ஒரு சிறந்த மனிதரை கட்சியிலிருந்து ஓரங்கட்ட செய்த சதியை அல்லாஹ்வும் ஏற்றுக் கொள்ளமாட்டான் அதுமட்டுல்ல முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இடையில் வந்தவர்கள் சமுதாயத்தை விலை பேசி பணம் பதவிகள் பெற்று சொகுசா வாழ தடையாக இருக்கும்  சமுதாயம் கட்சி என்பன பாதுகாக்க வேண்டும் என்று விரும்பும் ஹசன் அலியை   கட்சியை விட்டு ஓரங்கட்ட வேண்டும் என்று நினைத்தார்கள் அது இன்று தலைகீழாக நிலமையை மாற்றியுள்ளது அல்லாஹ் பெரியவன்

கண்டி பேராளர் மாகாநாட்டில் எடுத்த முடிவை மாற்றி தனக்கு சாதகமாக உயர்பிட உறுப்பினர்களும் தெரியாமல் தேர்தல் ஆனையாளருக்கு திருட்டுத்தனமாக கடிதம் அனுப்பியதால் இந்த நிலை வந்துள்ளது

அதனால் எதிர்வரும் 15/12/2016 ம் திகதிக்கு முன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் யார் ஹசன் அலியா ? மனசூர் A காதரா ?என்பதை ஹக்கிம் தேர்தல் ஆனையாளருக்கு அறிவிக்க வேண்டும் தவறும் பட்சத்தில் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மூடக்கப்படும் அம்பாறை மாவட்ட மக்கள் உருவாக்கிய கட்சி கண்டி தலைமையால் இன்று அவமானம் அடைவதால்  மக்கள் தலைமையில் மாற்றம் ஏற்பட முயற்சி செய்ய வேண்டும்

தற்போது எழுந்துள்ள பிரச்சினையை  இரு வாரத்துக்குள் முடிவு செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் சாணக்கியம் மாட்டிக் கொண்டு இருப்பதால் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர ஹசன் அலியின் உதவியை நாடி நிற்கிறது அதற்காக ஹசன் அலிக்கு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவி தேசியப்பட்டியல் கெபனட் அமைச்சு என்பன கொடுக்க விரும்புவதாக அறிய முடிகிறது

 அஸ்ரப் அவர்களின் கொள்கையில் கட்சி வழி நடத்தப்பட வேண்டும்

 தனி மனிதனை நம்பி சமுதாயம் ஏமாற்றம் அடைந்த காலத்தை ஓழித்துக்கட்ட தலைமையின் அதிகாரம் குறைக்கப்பட்டு இனைத்தலைமை உருவாக்க வேண்டும்

மசூரா அடிப்படையில் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும்

தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனைக்கு வழங்க வேண்டும்

தனது அதிகாரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும் போன்ற நடைமுறையை ஹசன் அலி நிலை நிறுத்த விரும்புவதாக அறிய முடிகிறது

அத்தோடு பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு இடையில் வந்தவர்கள் கட்சியை அழிக்க இடம் அளிக்காமல் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து கட்சியில் இருப்பேன் என்று உறுதியுடன் இருக்கும் ஹசன் அலி வாழை மரம் அல்ல வைரமரம் என்பதை மரங்கொத்தி இப்போது தான் உணர்ந்துள்ளது  இதனால் ஹசன் அலியின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை சாணக்கியருக்கு ஏற்பட்டுள்ளது

உயர்பிட உறுப்பினர்களுக்கு தெரியாமல் தேர்தல் ஆனையாளருக்கு திருட்டு தனமாக கடிதம் எழுதிய ஒரு கட்சி தலைவர் என்றால் இலங்கை அரசியல் வரலாற்றில் அது  றவூப் ஹக்கீம் என்று தான் கூற வேண்டும் அதை கிண்னஸ் புத்தகத்தில் கூட எழுத வேண்டும்

இப்படி உயர் பதவியுடையவரை இன்னும் இந்த சமுதாய கட்சி தலைவராக இருப்பது கட்சிக்கு அவமானம் எனவே இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஹக்கீமை கட்சியிலிருந்து ஓரங்கட்ட உயர்பிட உறுப்பினர்கள் முயற்சி செய்ய வேண்டும்

ஜெமீல் அகமட்

0 comments:

Post a Comment