Pages

.

.

Friday, March 31, 2017

வாழிடம் பறி போகும் நிலையில் மு.காவின் கூத்து

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் செயலால் வடக்கில் வாழ்கின்ற மக்கள் நிம்மதியை தொலைத்து கண்ணீரோடு இருக்கின்றனர்.இச் செயல் வடக்கை மாத்திரம் அதிர வைக்கவில்லை ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களையும் அதிர வைத்துள்ளது.இருப்பினும் மு.கா அதில் கரிசனை கொண்டு செயற்படுவாக அவதானிக்க முடியவில்லை.

இந் நேரத்தில் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற மு.காவின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய கட்சியை கல்முனை மாபெரும் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தற்போது மு.கா மீது அதிகமான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருப்பதால் இவ்வாறான பொதுக் கூட்டங்களை நடாத்தி கட்சி தொடர்பான விளக்கங்களை வழங்குவது மு.காவினருக்கு அவசியமானது.இருந்தாலும் இந் நேரத்தில் அது பொருத்தமானதல்ல.

இக் கூட்டத்தை நடாத்துவதன் மூலம் மு.கா வளர்ச்சியடையுமே தவிர சமூகம் எந்த பயனையும் அடையப் போவதில்லை.தாங்கள் செய்த அபிவிருத்திகளை கையளிப்பதென்றாலும் (இவர்களின் அபிவிருத்தியின் இலட்சணங்களை தனிக் கட்டுரையில் பார்ப்போம்),அதனை இன்றும் செய்யலாம்.நாளையும் செய்யலாம்.அடுத்த மாதமும் செய்யலாம்.ஆனால்,ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு வெளியானால் அதனை இல்லாமலாக்குவது அவ்வளவு இலகுவானதல்ல.இதற்கான போராட்டத்தை இச் சந்தர்ப்பத்தில் தான் மேற்கொள்ள முடியும்.

இன்று நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள பலரும் தயாராகி இருந்தனர்.இன்று ஜும்மா தொழுகையை தொடர்ந்து சாய்ந்தமருதுவில் குறித்த வர்த்தமானி மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கும் முகமாக டெலிகிராப் மூலம் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இன்று அமைச்சர் றிஷாதின் வேண்டுகோளின் பெயரில் ஜனாதிபதி செயலகத்தில் வர்த்தமானி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று அதில் சாதகமானா முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.நேற்றும் இது தொடர்பிலான விடயங்களிலேயே அவர் கவனம் செலுத்தி கொண்டிருந்தார்.

இலங்கை முஸ்லிம்களின் பெரும் பான்மை ஆதரவை கொண்ட கட்சி என பீத்தி திரியும் மு.கா அதனை விடுத்து கல்முனையில் கூட்டம் நடாத்துவது பொருத்தமானதல்ல.தற்போது மு.காவிற்கு எதிர்ப்புகள் அதிகமாக இருப்பதால் இது போன்ற கூட்டங்களை நடாத்த வாரக் கணக்கில் திட்டமிட வேண்டும்.தங்களது நேரங்களை தற்போது இதற்கு செலவிடுவது பொருத்தமானதல்ல.இந் நேரத்தில் இக் கூட்டத்தை வன்னியில் நடாத்தி இருந்தாலும் சிறப்பாக இருந்திருக்கும்.குறைந்தது இக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாதையும்,பஷீரையும் கழுவுவதை விடுத்து (யாருமே ஏற்கும் மனோ நிலையில் இல்லை) வர்த்தமானி தொடர்பில் கதைக்கின்றார்களா என்றாவது பார்ப்போம்.இவற்றிலிருந்து இலங்கை முஸ்லிம்களின் உண்மையான தலைவன் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதனைப் பற்று அமைச்சர் ஹக்கீம் கதைத்து ஜனாதிபதியினதும் தனக்கு வாக்களிக்கும் பேருன மக்களின் ஆதரவையும் இழந்து கொள்ள மாட்டார்.இருந்தாலும் அமைச்சர் ஹக்கீம் இது தொடர்பில் காத்திரமாக கதைக்காது போனாலும் வேறு நபார்களை வைத்து இதனை கையாள சிந்தித்ததாகவும் தெரியவில்லை.இம் முறை வன்னி மக்கள் மு.காவை வெட்டுப் புள்ளியை கூட நெருங்க முடியாதளவு வாக்களிக்காததால் அதற்கான பழி வாங்கலாகவும் இருக்கலாம்.


0 comments:

Post a Comment