Pages

.

.

Saturday, March 25, 2017

ஹக்கீம் எனும் நீரோ மன்னன்!



அளுத்கம பற்றி எரிகிறது. முஸ்லிம்கள் சிங்கள இனவாதிகளின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு அல்லல்படுகிறார்கள். முஸ்லிம்களது உயிர், உடமைகளனைத்தும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. தம் இனத்தை பாதுகாக்க கூடிய அரசியல் தலைமைகள் எங்கே போனார்கள் என மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் எவ்வித பிரக்ஞையுமற்று உட்கார்ந்திருக்கிறார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமைகள் அளுத்கமையிற்கு செல்வோம் என தலைவரை அழைக்கின்றனர். தலைவரோ இப்போது செல்லக் கூடாது. நாளைக்கு செல்வோம் என வந்தவர்களை திருப்பி அனுப்புகின்றார். அடுத்த நாள் அளுத்கமவிற்கு விரைகின்றனர் முஸ்லிம் காங்கிரஸ் . தலைமை வழக்கமான நீலிக்கண்ணீர் வடிக்கின்றார். கவலை தோய்ந்த முகத்தோடு நிலைமைகளை கேட்டறிகிறார். இவரது போலி வரவை அறிந்து கொண்ட அங்கிரந்த முஸ்லிம் இளைஞர்களில் ஒருவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை வார்த்தைகளால் திட்டுகிறார். அத்தனை திட்டுக்களும் 'ஏருமை மாட்டின் மேலே பெய்த மழையைப் போல் ஆகிவிடுகிறது.'

 தனது வரவைப் பதிவு செய்து கொண்ட திருப்தியில் கொழும்புக்கு விரைகின்றனர். அங்கே சென்ற உண்மை உணர்வுள்ள முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தலைமை அவசரமாக முடிவெடுக்கப் போகிறது. மஹிந்த அரசிலிருந்து வெளியேறப்போகிறது என எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். தலைவர் என்ன சொல்லப் போகிறார் என ஏக்கத்தோடும், கவலையோடும் காத்திருக்கிறார்கள். தலைவர் பேசுகிறார். ' அப்பாடா வரப்போர  எலக்சன்ல மக்களுக்கிட்ட எதப்பேசுற எங்கிற கவலையோட இருந்தேன். அல்லாதான் இந்த அளுத்கம விஸயத்த கொண்டு வந்தான். எப்படியோ இந்த எலக்சன்லயும் ஜெயிச்சசிடலாம். ஹிஹ்ஹீ... ' எனப் பேசி முடிக்கிறார்.

தலைவரிடமிருந்து வரப்போகும் வார்த்தைகள் சமூகத்தின் உரிமைக்குரரலாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு இருந்த போராளிகளுக்கு, தலைவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் சாக்கடையாய் நாற்றமெடுத்தது பலத்த ஏமாற்றத்தையே தந்தது. இருந்தாலும் தலைமையை எதிர்க்கும் திராணியற்ற தொண்டர்கள் தலைவரோடு சேர்த்து கோரஸாக நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார்கள். வரப்போகும் தேர்தல் வெற்றி குறித்து மகிழ்வுறுகிறார்கள். தலைவனின் அயோக்கியத்தனத்துக்கு சாணக்கியம் எனப் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

எரியும் குடிசையில் பீடி பற்ற வைத்துக் குடிக்கும் அரக்கனுக்கு ஒப்பான ரஊப் ஹக்கீமின் செயலை எந்தவிதத்திலும் நியாயம் காண முடியாது. அளுத்கம சம்பவம் நடைபெற்று 1000 நாட்களாகியும் அந்த மக்களுக்கு எவ்வித உதவியும் இன்று வரையில் வழங்கப்படவில்லை. குறித்த சம்பவத்திற்கு காரணமான எவரும் இன்றளவில் தண்டிக்கப்படவில்லை. ரோம் தேசம் எரிந்து கொண்டிருந்தது நீரோ மன்னன் பிடல் வாசித்துக்கொண்ட வரலாற்று உதாரணத்துக் கொப்பவே அளுத்கம எரிந்த போது ' எலக்சனுக்கு மேடையில் பேசி வாக்கு வாங்க நல்ல செய்தி கிடைத்துவிட்டது' என  இன்புற்ற ரஊப் ஹக்கீம் இனை எதிர்கால வரலாறு பேசும். ஆனால் அதைக் கூட அடிமட்ட முட்டாள் போராளிகள் மறைத்து விட முயற்சிப்பதற்கு ஏவப்படுவார்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவனால். ஏனைனில் முஸலிம் காங்கிரஸின் போராளிகளுக்கு தேவையான எலும்புத் துண்டுகள் ரஊப் ஹக்கீமிடம்தான் உண்டு.

இன்றளவில் அறியாமை இருளில் மூழ்கிஇருக்கும் பாமரர்கள் அடர்த்தியாய் வாழும் இலங்கையின் பிரதேசம் கிழக்கு மாகாணமே!

#முஹம்மது_வன்னியனார்

0 comments:

Post a Comment