Pages

.

.

Sunday, March 26, 2017


வடபுல முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் விளையாடும் மாற்றுக்கட்சி பிரதிநிதிகள்; இனியாவது சிந்திப்பார்களா?

ஒலுவில் அஸ்ஹர்.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் சுயலாபங்களை மட்டுமே தங்கள் குறிக்கோள்களாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஹுனைஸ் பாரூக், மஸ்தான், புத்தளம் பாயிஸ், அஸ்மின், நியாஸ் ஆகிய மக்களின் பிரதிநிதிகள் என்று வார்த்தைகளில் மட்டுமே பேசுகின்ற இவர்களால் வில்பத்து விடயத்தில் பகிரங்கமாக குரல் கொடுக்க முடியாமல் போனது ஏன்?

இந்த வடபுல சமூகத்தின் உரிமைகளில் இவர்கள் இன்றும் விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அந்த சமூகத்தின் பூர்வீக நிலங்கள், வில்பத்துக்கு சொந்தமான பிரதேசங்களாக இன்று வர்த்தமானியில் பிரகடனம் செய்வதற்கு துணை நின்றவர்கள் இந்த மாற்றுக்கட்சி சுயநலவாதிகளே! என்பதில் ஐயமில்லை.

அதோடு நின்று விடாமல் "வில்பத்து காட்டை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்" என்றும்

"தேர்தல் ஒன்றுக்கான அறிகுறியாக வில்பத்து பிரச்சினை" என்றும்

"அமைச்சர் றிஷாத் வில்பத்து பிரச்சினையை தேர்தலுக்காக தூக்கி பிடிக்கின்றார்." என்றும்
 
தலைப்புகளிட்டு முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் சிலர் ஆக்கங்களை எழுதி அமைச்சர் றிஷாத்தின் மனதை மட்டுமல்ல ஒட்டுமொத்த வடபுல முஸ்லிம் சமூகத்தின் மனங்களையும் புண்படுத்திய ஆதாரங்கள் எல்லோரிடமும் இருக்கின்றன.

எத்தனை தடவை தேசிய தலைவர், அமைச்சர் றிஷாத் பதியுதீன் இந்த வில்பத்து விடயம் தொடர்பாக உங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதற்காக குரல் கொடுங்கள் என்று மண்டியிட்டார். ஆனால் நீங்கள் இது றிஷாத்தின் தனிப்பட்ட பிரச்சினை என ஒதுங்கிக் கொண்டீர்கள். ஊமையர்களாக வாய்மூடி இருந்தீர்கள்.

இனவாதிகள் படையெடுத்து வில்பத்துக்கு சென்ற போது களத்துக்கு சென்று பதில் கொடுத்தீர்களா? அல்லது ஊடகங்களிலாவது ஒரு வார்த்தை பேசினீர்களா? இல்லவே இல்லை.

"ஹிரு"எனும் இனவாதிகளின் தொலைக்காட்சி அமைச்சர் றிஷாத்தை இனவாதி ஆனந்த சாகரவுடன் விவாதத்துக்கு வருமாறு அழைத்தது.

தனக்கு சிங்கள மொழியிலே பரிச்சயம் இல்லை என்றாலும் அந்த இனவாதியுடன் சமூகத்தின் விடுதலைக்குரலாக வில்பத்துவை விளக்கி விவாதித்தார்.

அந்த தேரரிடமும் றிஷாத் அமைச்சரைப்பற்றி அபாண்டங்களை சொல்லிக்கொடுத்து, வில்பத்து உங்கள் வனப்பிரதேசம் என வாதிடுங்கள் என்று  உசுப்பேத்திக்கொடுத்து, கடைசியாக இறை வேதம் அல்குர்ஆனையும் காபிரின் கையில் கொடுத்து இதில் அவரை சத்தியம் செய்ய சொல்லுங்கள் என்று சண்டாளன் வேலை பார்த்தவர்களும் நீங்கள்தான். நாங்கள் அறியாமலில்லை.

இனியும் நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள்?

இவைகள் அமைச்சர் றிஷாத்தின் தனிப்பட்ட பிரச்சினைகள் என்று சொல்லி வடபுல முஸ்லிம்களின் மிஞ்சியுள்ள நிலங்களையும், உரிமைகளையும் விட்டுக் கொடுக்கப் போகின்றீர்களா?

எனவே தனது அதிகமான கால நேரங்களை அன்றிலிருந்து இன்று வரை வடபுல முஸ்லிம் சமூகத்தின் மீள் குடியேற்றம், அபிவிருத்தி, அபிலாசைகளுக்காக அர்ப்பணித்து போராடிக் கொண்டிருக்கும் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன் அவர்களின் கரத்தை பலப்படுத்துங்கள்.

அரசியல் கட்சி கொள்கைகளுக்கு அப்பால் சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு இணைந்து செயற்படுங்கள்.
ஒன்றுபட்டு குரல் கொடுங்கள்!

இனியாவது அமைச்சர் றிஷாத்தின் உண்மையான சமூக போராட்டங்களை, யதார்த்தங்களை விளங்கி, ஓரணியில் நின்று போராடுவோம் வாருங்கள்!





0 comments:

Post a Comment