Pages

.

.

Thursday, March 16, 2017

டெங்குவில் மு.காவின் பொடு போக்கு

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

அமைச்சர் ஹக்கீம் வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் வெம்பிக் கொண்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என பாட்டு பாடிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அந்தளவு அவரை சோதனைகள் சூழ்ந்து கேலி செய்து கொண்டிருக்கின்றன.

கடந்த சில மாதங்கள் முன்பு அமைச்சர் ஹக்கீம் கட்டார் பயணமான போது இலங்கையில் இனவாத ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதால் அவர் பயணத்தை இரத்து செய்திருக்க வேண்டுமென பெரும் எதிர்ப்பை பெற்றார்.இம்முறை சவூதி பயணமான போது கிண்ணியாவில் டெங்கு அபாயம் மிகவும் அதிர்கரித்துள்ளது.இவ்விடயத்திலும் முஸ்லிம் மக்களின் பலத்த விமர்சனங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் ஆளாகியுள்ளார்.கூடவே கிண்ணியாவைச் சேர்ந்த தனது பாராளுமன்ற உறுப்பினரையும் அழைத்து சென்றுள்ளமை இன்னும் அவர் மீதான விமர்சனத்தை அதிரிகரித்துள்ளது.குறைந்தது பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு விட்டுச் சென்றிருக்கலாம்.கிண்ணியாவில் மீதமுள்ள ஓரிரு வாக்குகளும் இதனூடாக மு.காவின் கைகளை விட்டு நழுவிச் செல்கிறது.

இவர்கள் தான் இல்லை என்றால் இந்த டெங்கு தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் அரசியல் அதிகாரமிக்க சுகாதார பிரதி அமைச்சை வைத்துள்ள பைசால் காசிமும் வெளிநாடு சென்றுள்ளார்.இந் நேரத்தில் அவர் கட்டாயம் நாட்டில் இருந்திருக்க வேண்டும்.தான் நாட்டில் இருந்தால் அடிக்கடி கிண்ணியா செல்ல வேண்டி வரும்.தன்னை டெங்கு பீடித்து விடும் என்ற அச்சத்தில் வெளிநாடு பறந்திருந்தாலும் பறந்திருக்கலாம்.எமது கிண்ணியா முஸ்லிம் சமூகத்தின் மரண ஓலங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் இந் நேரத்தில் இவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாக்கள் அவசியம் தானா? இந் நேரத்தில் களத்தில் நிற்காமல் அப்படி என்ன முக்கியமான வேலை? சமூகத்திற்கு அரசியல் செய்வதற்காகத் தான் இவர்களா வந்தார்களா? என்ற வினாவிற்கான விடையை இதனூடாக சமூகம் அறிந்து கொள்ளலாம்.

டெங்கு சுகாதார அமைச்சுடன் தொடர்புடையதால் தனது அமைச்சினூடாக பிரதி அமைச்சர் பைசால் காசீம் நிதிகளை அள்ளி இறைத்திருக்கலாம்.இவர் இது வரை ஒரு மில்லியன் ரூபாயே பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்திற்கு வழங்கியுள்ளார்.வேறு எந்த நிதிகளும் இதுவரை ஒதுக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.மாகாண சபையின் அதிகாரம் மு.காவிடம் உள்ளதால் அதனூடாகவும் நிதிகளை எடுத்திருக்கலாம்.இன்று மு.காவிடம் மத்திய சுகாதார பிரதி அமைச்சு,மாகாண பிரதி அமைச்சு உள்ளதோடு மத்திய அமைச்சு,பிரதி அமைச்சு,முதலமைச்சர் என அரசியல் அதிகாரங்கள் குவிந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இவ்விடயத்தில் மு.கா உளச் சுத்தியுடன் செயற்பட்டிருந்தால் பல்வேறு வழிகளில் நிதிகளை அள்ளி இறைத்திருக்கலாம்.

இன்று விஜயம் செய்த அமைச்சர் றிஷாத் அவசர தேவைக்காக 7.9 மில்லியனை ஒதுக்கியுள்ளார்.இவ்விரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள் மலைக்குள் மடுவிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை மிக இலகுவில் அறிந்து கொள்ளலாம்.இது மாத்திரமல்ல ஒரு சுகாதார அமைச்சர் இதனை தீர்ப்பதற்கான எந்தெந்த முயற்சிகள் செய்வாரோ அத்தனையையும் அமைச்சர் றிஷாத் இன்று செய்ததை அவதானிக்க முடிந்தது.அதாவது இங்கு அமைச்சர் றிஷாத் சுகாதார அமைச்சராக மாறியுள்ளார்.மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சேவை செய்பவரே உண்மையான தலைவர்.இதனூடாக அமைச்சர் றிஷாத் தனது தலமைத்துவ பண்பை வெளிப்படுத்தி நிற்கின்றார்.



0 comments:

Post a Comment