ஹக்கீம் மிகவும் இழி நிலைக்கு சென்றுவிட்டார்
(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)
மு.காவின் ஏற்பாட்டில் வன்னியில் இடம்பெற்ற வன்னியின் ஒளி நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப்பகுதியில் தன்னை மு.காவுடன் இணைந்து தேர்தல் கேட்க அமைச்சர் ஹக்கீம் அழைத்ததாக கூறியிருந்தார்.
இது சிலருக்கு சாதாரணமாக தோன்றலாம்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அவ்வளவு பலம் பொருந்தியவரல்ல.அவரை அமைச்சர் ஹக்கீம் அழைப்பதென்பது அமைச்சர் ஹக்கீம் தன்னிடத்தில் இருந்து இறங்கிவிட்டதை அழகாக கூறுகிறது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக்கை அமைச்சர் ஹக்கீம் அழைத்திருந்தாலும் தலைமைத்துவத்தின் மானம் காக்க அதனை மறைத்து கதைக்க வேண்டியது அவரது கடமையாகும்.
அதில் உரையாற்றிய ஹுனைஸ் பாறூக் சில உண்மைகளை கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் தன்னுடன் இருந்தவர்களும் இப்போது அமைச்சர் றிஷாத்துடன் இருப்பவர்களுடனும் கேட்டால் தெரியும் எனக் கூறுகிறார்.அதாவது இவரோடு கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் இருந்தவர்கள் கூட இன்று அமைச்சர் றிஷாத்துடன் இணைந்துவிட்டார்கள்.அப்படியானால் இவர்களுடன் இருப்பவர்கள் யார்? யாருமில்லை.அது தான் அவர் மு.காவுடன் வந்து இணைந்துள்ளார்.
.

Wednesday, February 8, 2017
Home »
srilankan news
»
Related Posts:
ஹக்கீமிற்கு பஷீர் மோனியா (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் ஹக்கீம் ஒரு சிறு நேரம் மாத்திரமே மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் தவிர்ந்து வேறு விடயங்கள் பற்றி பேச… Read More
யார் முனாபிக்??? *************** நிந்தவூரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சிக்குள் இருக்கும் முனாபிக்களுக்கு தகுந்த பாடம் புகட்ட உள்ளதாக நசீர் அகமட் அவரது பாட்னர் றவூப் ஹக்கிம் ஆகியோர் மனவேதனையில் அடிக்கடி பேசினார்கள் இவர்… Read More
தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்களுக்கு பதில் அளிக்கப்பட வேண்டுமா? அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி என்ற இனம் தெரியாத குழுவினரால் “தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” எனும் புத்தகமானது வெளியிடப்பட்டிருந்தது.இப… Read More
Parliament Road closed due to protest The Parliament Road was temporarily closed from Polduwa Junction and Jayanthipura Junction due to a protest staged by the Joint Opposition, police said. … Read More
வை.எல்.எஸ் ஹமீதுடன் ஒரு சில நிமிடங்கள் கதைக்க விரும்புகிறேன் (இப்றாஹிம் மன்சூர்) நான் நீங்கள் அமைச்சர் றிஷாத் பற்றி எழுதிய,கூறிய ஒவ்வொரு விடயத்திற்குமே பதில் அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன்.தேவையில்லாமல் உங்களை இழுத்து விமர்… Read More
0 comments:
Post a Comment