வன்னி மக்கள் அரசனை நம்பி புரிசனை இழப்பார்களா?
(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)
நாளை அமைச்சர் ஹக்கீம் வன்னிக்கு விஜயம் செய்யவுள்ளார்.இவர் என்ன செய்துவிட்டு அங்கு செல்கிறார் என சிந்திக்க வேண்டியது அங்குள்ள ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.இதனை பெரும் தூரம் சென்று சிந்திக்காமல் மிக எளிமையாக சில விடயங்களைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்.
வன்னி மக்கள் சுத்தமான குடிநீரை பெறுவதற்கு மிகவும் கஸ்டப்படுவது யாவரும் அறிந்ததே.இதனை நிவர்த்திக்கும் அமைச்சு அமைச்சர் ஹக்கீமிடம் தான் உள்ளது.அவர் என்ன செய்துள்ளார்.அவரை விட இத் தேவையை நிவர்ப்பிப்பதில் அமைச்சர் றிஷாத் ஈடுபாடு காட்டி சாதித்திருப்பது யாருமே மறுக்க முடியாத உண்மை.
இன்று அமைச்சர் றிஷாதிற்கு எதிராக இனவாதிகளின் தாக்குதல் எதற்காக? சிந்தித்து பாருங்கள்.எத்தனை விவாதம்? எத்தனை ஏச்சு பேச்சு? அமைச்சர் ஹக்கீம் கூட வில்பத்து பிரச்சினை இனவாத பின்னணி என்பதை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இவ் விடயத்தில் மூக்கை நுழைத்ததற்காக தனது தனிப்பட்ட மற்றும் குடும்பத்தை இழுத்ததெல்லாம் எத்தனை அவமானங்கள்? இதெல்லாம் எதற்காக? வன்னி மக்களின் விடிவிற்காக.அமைச்சர் ஹக்கீமைப் போன்று அமைச்சர் றிஷாதும் மௌனம் காத்தால் இன்று இனவாதிகள் வன்னியை சுருட்டி அந்த மக்களை வீதியில் விட்டிருப்பார்கள்.இதனை அந்த உணரத் தவறினால் அவர்களைப் போன்ற கை சேதவாளர்கள் யாருமே இல்லை.
இப்போது வன்னி ஒளியேற்ற வருகிறாராம் அமைச்சர் ஹக்கீம்.ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன்.வன்னிக்கு ஒளி அமைச்சர் றிஷாத் தான்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மக்கள் அமைச்சர் ஹக்கீமுக்கு தகுந்த பாடம் புகட்டி இருந்தார்கள்.நாளை இடம்பெறவுள்ள வன்னியின் ஒளிக்கும் பாடம் புகட்டுவார்கள் என நம்புகிறேன்.அல்லாது போனால் அவர்களை துரோகிகள் யாருமே உலகில் இருக்க மாட்டார்கள்.நாளை மு.காவிற்கு புகட்டப்படும் பாடம் அமைச்சர் றிஷாதின் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக அமைய வேண்டும்.
.

Saturday, February 4, 2017
Home »
srilankan news
»
Related Posts:
ஹக்கீமிற்கு பஷீர் மோனியா (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் ஹக்கீம் ஒரு சிறு நேரம் மாத்திரமே மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் தவிர்ந்து வேறு விடயங்கள் பற்றி பேச… Read More
தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஜல்லிக்கட்டு தடை முரட்டுத் தனமாக துள்ளியோடும் காளையை அடக்கி அதன் கொம்பில்/கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் பரிசுப் பொருளை எடுத்துக்கொள்ளும் விளையாட்டே ஜல்லிக்கட்டு விளையாட்டாகும்.ஒரு காளையை பல … Read More
பஷீரின் எச்சரிக்கை மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சிலரின் இரகசிய ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக கூறி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவ் எச்சரிக்கையை பலரும் பல விதத்தில் நோக்கினாலும் ஒரு மனிதனின் மானத்தில் விளையாடுவது ஏ… Read More
கதிகலங்கி தூக்கத்தைவிட்டு எழுந்து தாறுஸ்ஸலாமின் மர்மங்கள் உண்மையென ஏற்றுக்கொண்ட மஞ்சள் பை போராளிக்குஞ்சு!!!!!... (முஹம்மட் தமீம்) அனைவரும் அறிந்தவிடயம் சில நாட்களுக்கு முன்பு தாறுஸ்ஸலாம் மீட்பு பணிக்குழுவினரால் தாறுஸ்ஸலா… Read More
அட்டாளைச்சேனை மக்களுக்கு ஹசனலி தான் பிரச்சினையா? (abu rashath) அட்டாளைச்சேனை மக்கள் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படப் போகிறதென அறிந்தால் மாத்திரமே சாரணை வரிந்து கட்டுகிறார்கள்.தேசியப்பட்டியலானது சல்மானிடமுள்ள ஒவ்வொரு &n… Read More
0 comments:
Post a Comment